Aggregator
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
“தமிழ்த் தேசியவாத அரசியலில் அணுகுமுறை மாற்றங்கள் வேண்டும்”(சுமந்திரன் நேர்காணல்)
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
எப்ஸ்டீன் தொடர்பு ஈழத்தமிழ் - கூல் முகங்களின் ஹொட் தொடர்புகள்!
கொஞ்சம் ரசிக்க
கிளிநொச்சியில் குளவி கொட்டு: 39 மாணவர்கள் பாதிப்பு
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
கிளிநொச்சியில் குளவி கொட்டு: 39 மாணவர்கள் பாதிப்பு
எப்ஸ்டீன் தொடர்பு ஈழத்தமிழ் - கூல் முகங்களின் ஹொட் தொடர்புகள்!
யாழ் சுழிபுரத்தில் கோடிகளில் பாடசாலை கட்டிக்கொடுத்த அமெரிக்க வைத்தியர் குடும்பம்
எமது சுழிபுரம் கிழக்கு கிராமத்தில் 55 மில்லியன் ரூபா பெறுமதியான புதிய மாடிக்கட்டிடம் அ.மி.த.க பாடசாலையில் திறக்கப்பட்டது.
கிரீஸ் கடற்பரப்பில் கப்பலுடன் மோதி அகதிகள் படகு விபத்து : 15 பேர் பலி!
கிரீஸ் கடற்பரப்பில் கப்பலுடன் மோதி அகதிகள் படகு விபத்து : 15 பேர் பலி!
06 Feb, 2026 | 11:11 AM
![]()
கிரீஸ் நாட்டின் சியோஸ் தீவுக்கு அருகே ஏஜியன் கடலில் இடம்பெற்ற விபத்தில், குறைந்தது 15 அகதிகள் உயிரிழந்துள்ளனர். அகதிகளை ஏற்றிச் சென்ற படகு ஒன்று, ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த கிரீஸ் கடலோர பாதுகாப்புப் படையின் கப்பலுடன் மோதியதன் காரணமாக இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சியோஸ் நீரிணையில் உள்ள வ்ரோந்தாதோஸ் (Vrontados) கடற்பரப்பில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. வெளிநாட்டு அகதிகளை ஏற்றிச் சென்ற படகு, கடலோர பாதுகாப்புப் படையின் எச்சரிக்கை ஒளி மற்றும் ஒலி சைகைகளை புறக்கணித்து, ஆபத்தான முறையில் பயணித்தபோது, திடீரென பாதுகாப்புப்படையின் கப்பலுடன் மோதியதாக கிரீஸ் கடலோர பாதுகாப்புத் துறை தெரிவித்துள்ளது.
மோதலின் பின்னர், அகதிகளை ஏற்றிச்சென்ற படகு கவிழ்ந்து கடலில் மூழ்கியதுடன், அதில் பயணித்த அனைவரும் கடலில் வீழ்ந்தனர். உடனடியாக தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டன.
இந்த சம்பவத்தில் 26 பேர் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர். அவர்களில் 11 குழந்தைகள், ஒரு கர்ப்பிணிப் பெண் மற்றும் இரண்டு கடலோர காவல் அதிகாரிகள் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
காயமடைந்தவர்கள் அனைவரும் சிகிச்சைக்காக சியோஸ் ஸ்கைலிட்சியோ (Skylitseio) மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டனர்.
வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், காயமடைந்த பெண்களில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இதுவரை 14 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக கிரீஸ் கடலோர பாதுகாப்புத் துறை தெரிவித்துள்ளது.
பின்னர் வைத்தியசாலையில் உயிரிழந்த பெண்ணுடன் பலியானோரின் எண்ணிக்கை 15ஆக உயர்ந்துள்ளது. பலியானவர்களில் 11 பேர் ஆண்கள், 4 பேர் பெண்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளது. சடலங்களின் உடற்கூறு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
உயிர்தப்பியவர்கள் கிரீஸ் ஊடகங்களுக்கு வழங்கிய தகவலின்படி, குறித்த அகதிகளில் பெரும்பாலானோர் ஆப்கானிஸ்தான் நாட்டைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
புங்குடுதீவில் வாள்களுடன் இரு இளைஞர்கள் கைது
புங்குடுதீவில் வாள்களுடன் இரு இளைஞர்கள் கைது
Feb 6, 2026 - 09:30 PM
வேலணை - புங்குடுதீவு, வல்லன் பகுதியில் அபாயகரமான வாள்களுடன் நடமாடிய இரு இளைஞர்கள் ஊர்காவற்றுறை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஊர்காவற்றுறை பொலிஸாருக்குக் கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில், புங்குடுதீவு வல்லன் பகுதியில் பொலிஸார் மேற்கொண்ட விசேட நடவடிக்கையின் போதே குறித்த இருவர் கைது செய்யப்பட்டனர்.
கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து இரண்டு வாள்கள், ஒரு அபாயகரமான கோடாலி உள்ளிட்ட ஏனைய சில பொருட்கள் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளன.
புங்குடுதீவுப் பகுதியில் அண்மைக்காலமாக வன்முறைக் கும்பல்களின் அச்சுறுத்தல் அதிகரித்து வருவதாகவும், இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படுவதாகவும் பல்வேறு தரப்பினராலும் சுட்டிக்காட்டப்பட்டு வந்தது.
இந்நிலையிலேயே பொலிஸார் இந்த அதிரடி நடவடிக்கையை முன்னெடுத்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களிடம் ஊர்காவற்றுறை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
விசாரணைகளின் பின்னர் அவர்களை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
-யாழ். நிருபர் பிரதீபன்-
வரலாற்றில் முதன் முறையாக பெண் பஸ் நடத்துனர்கள் நியமனம்
வரலாற்றில் முதன் முறையாக பெண் பஸ் நடத்துனர்கள் நியமனம்
Published By: Digital Desk 3
06 Feb, 2026 | 05:19 PM
![]()
வரலாற்றில் முதன்முறையாக இலங்கைப் போக்குவரத்து சபைக்குப் பெண்கள் நடத்துனர்களாகச் சேவையில் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளனர்.
இலங்கை போக்குவரத்து சபைக்குப் புதிதாகத் தெரிவு செய்யப்பட்ட 20 பெண் நடத்துனர்களுக்கு நியமனக் கடிதங்களை வழங்கும் நிகழ்வு இன்று வெள்ளிக்கிழமை (06) மாகும்புர பல்நோக்கு போக்குவரத்து மத்திய நிலையத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் வெகுஜன ஊடகத் துறை துணை அமைச்சர் கலாநிதி கௌசல்யா அரியரத்ன, பாராளுமன்ற உறுப்பினர் சமன்மலி குணசிங்க மற்றும் இலங்கை போக்குவரத்து சபைத் தலைவர் சஜீவ கனகரட்ண ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதன்போது நியமனம் பெற்ற பெண் நடத்துனர்களுக்காகப் புதிய சீருடை ஒன்றும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளமை விசேட அம்சமாகும்.
https://www.virakesari.lk/article/237980
அம்மணிகளே உங்களை நம்பித்தான் எதிர்கால இ.போ.ச இயங்கும் போல! பார்த்து கவனமாக வாகனத்தை செலுத்துங்கள்.
'விஜய்க்கு ரூ.1.5 கோடி அபராதம் விதித்தது செல்லத்தக்கது' - உயர் நீதிமன்றம் கூறியது என்ன?
'விஜய்க்கு ரூ.1.5 கோடி அபராதம் விதித்தது செல்லத்தக்கது' - உயர் நீதிமன்றம் கூறியது என்ன?

பட மூலாதாரம்,TVK
படக்குறிப்பு,கோப்புப் படம்
கட்டுரை தகவல்
பிபிசி தமிழ்
6 பிப்ரவரி 2026, 06:55 GMT
புதுப்பிக்கப்பட்டது 8 மணி நேரங்களுக்கு முன்னர்
வருமான வரித் துறையால் தனக்கு விதிக்கப்பட்ட ஒன்றரைக் கோடி ரூபாய் அபராதத்தை ரத்துசெய்ய வேண்டுமென தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் தாக்கல் செய்த மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், அவரது மனுவைத் தள்ளுபடி செய்துள்ளது. நிவாரணம் கோரி தீர்ப்பாயத்தை அணுகலாம் எனவும் கூறியுள்ளது.
நடிகரும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய், 2015 -16ஆம் நிதியாண்டில் தனக்குக் கிடைத்த கூடுதல் வருவாயான 15 கோடி ரூபாய் குறித்த விவரத்தை தானாக முன்வந்து தெரிவிக்காததாக வருமான வரித் துறை 2022ஆம் ஆண்டில் அவருக்கு 1.5 கோடி ரூபாய் அபராதம் விதித்தது.
குறிப்பிட்ட காலத்திற்குள் இந்த அபராதம் விதிக்கப்படவில்லையென்பதால் இதனை ரத்து செய்ய வேண்டும் எனக் கோரி விஜய் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரணை செய்த நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அமர்வு, குறிப்பிட்ட காலத்திற்குள் தான் அபராதம் விதிக்கப்பட்டிருக்கிறது என்று கூறி வழக்கைத் தள்ளுபடி செய்துள்ளது.
விஜய் தரப்பு விரும்பினால், காலக்கெடு குறித்த விவகாரத்தைத் தவிர்த்து வேறு விஷயங்களை முன்வைத்து மேல் முறையீட்டுத் தீர்ப்பாயத்தை அணுகலாம் என்றும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
வழக்கின் பின்னணி என்ன?

பட மூலாதாரம்,@actorvijay/X
படக்குறிப்பு,2015இல் விஜய் நடிப்பில் வெளியான புலி திரைப்படம்
2015ஆம் ஆண்டு செப்டம்பர் 30ஆம் தேதி விஜய்க்கு சொந்தமான இடங்களில் வருமான வரித் துறை சோதனைகளை நடத்தி சில ஆவணங்களைக் கைப்பற்றியது. அந்த ஆவணங்களின்படி, 2015ஆம் ஆண்டில் புலி திரைப்படத்தைத் தயாரித்த பி.டி. செல்வகுமாரும் ஷிபு என்பவரும் அந்தப் படத்திற்காக காசோலை மூலம் 16 கோடி ரூபாயும் ரொக்கமாக 4.93 கோடி ரூபாயும் அளித்திருந்தது தெரியவந்தது.
காசோலை மூலம் கொடுக்கப்பட்ட பணத்திற்கு வருமான வரி (TDS) செலுத்தப்பட்டிருந்தது. ஆனால், ரொக்கப் பணத்திற்குச் செலுத்தப்படவில்லை.
இது குறித்து விஜய்யிடம் கேட்டபோது 5 கோடி ரூபாய் ரொக்கமாகப் பெற்றுக் கொண்டதை ஒப்புக்கொண்ட அவர், அதற்கான வரியைச் செலுத்தவும் ஒப்புக்கொண்டார். மேலும் இந்த ஐந்து கோடி ரூபாய் உள்பட கணக்கில் வராமல் 15 கோடி ரூபாயை பெற்றதாகவும் அதற்கான வரியைச் செலுத்தவும் அவர் ஒப்புக்கொண்டார்.
இதனைத் தொடர்ந்து 2016ஆம் ஆண்டு ஜூலை 29ஆம் தேதி 2016 - 17ஆம் ஆண்டுக்கான வருமான வரிக் கணக்கைத் தாக்கல் செய்தார். அதில் அவரது வருவாய் 35.42 கோடி எனக் குறிப்பிடப்பட்டிருந்தது. ரசிகர் மன்றத்திற்குச் செய்த செலவாக சுமார் 64.71 லட்ச ரூபாயையும் சில சொத்துகளின் மதிப்பு குறைந்ததற்காக 17.81 லட்ச ரூபாயையும் வரி விலக்கிற்காகக் கோரியிருந்தார்.
ஆனால், வருமான வரித் துறை அதனை ஏற்கவில்லை. 38.25 கோடி ரூபாய்க்கு வரி செலுத்த வேண்டுமென்றும் சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருக்காவிட்டால், அவர் இந்தக் கூடுதல் வருவாயை கணக்கில் காட்டியிருக்க மாட்டார் என்றும் கூறியது. இதற்காக அவருக்கு வருமான வரி சட்டங்களின் கீழ் அபராதம் விதிக்கப்பட்டது. இந்த அபராதத்தை எதிர்த்தே விஜய் நீதிமன்றத்தை நாடியிருந்தார்.
வருமான வரித்துறை தரப்பு கூறியது என்ன?

பட மூலாதாரம்,Getty Images
இந்த வழக்கை நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி விசாரித்துவந்தார். இந்த வழக்கில் வருமான வரித்துறைக்காக வாதாடிய வழக்கறிஞர் வருமான வரிச் சட்டங்களின் படி, சரியான முறையிலேயே அபராதம் விதிக்கப்பட்டிருக்கிறது என்றும் அதனால் விஜய்யின் மனுவைத் தள்ளுபடி செய்ய வேண்டுமென்றும் அவர் வாதாடினார்.
மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், அபராதம் விதிப்பதற்கான நடைமுறைகள் 2019 ஜூன் 30ஆம் தேதிக்கு முன்பாகவே துவங்கியிருக்க வேண்டுமே தவிர 2022 ஜூன் 30 முன்பாக அல்ல என்று வாதாடினார்.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி, ஜனவரி 23ஆம் தேதி வழக்கின் விசாரணையை முடித்து, தீர்ப்புக்காக ஒத்திவைத்தார்.
அதைத் தொடர்ந்து, இன்று (பிப்ரவரி 6) விஜய்யின் மனுவைத் தள்ளுபடி செய்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு