Aggregator
‘Rebuilding Sri Lanka’ நிதியத்திற்கு இலங்கை கிரிக்கெட் நன்கொடை
மன்னார் மற்றும் முள்ளிக்குளம் பிரதேசங்களில் 50 மெகாவாற்று காற்றாலை மின்சார நிலையங்களை நிறுவ அமைச்சரவை அனுமதி
மன்னார் மற்றும் முள்ளிக்குளம் பிரதேசங்களில் 50 மெகாவாற்று காற்றாலை மின்சார நிலையங்களை நிறுவ அமைச்சரவை அனுமதி
மன்னார் மற்றும் முள்ளிக்குளம் பிரதேசங்களில் 50 மெகாவாற்று காற்றாலை மின்சார நிலையங்களை நிறுவ அமைச்சரவை அனுமதி
11 Dec, 2025 | 05:27 PM
![]()
மன்னார், முள்ளிக்குளம் பிரதேசத்தில் தலா 50 மெகாவாற்று காற்றாலை மின்சார உற்பத்தி நிலையங்கள் 2 நிறுவுவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் அளித்துள்ளது.
2025.12.10 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் எட்டப்பட்ட அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாடு வியாழக்கிழமை ( 11 டிசம்பர் 2025) ஊடக அமைச்சில் இடம்பெற்றது.
இதன் போதே இந்த அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
2030 ஆண்டளவில் நாட்டுக்கான மின்சார வழங்கலின் 70மூ மீள்புதுப்பிக்கத்தக்க வலுசக்தி மூலங்களிலிருந்து பூர்த்தி செய்யும் குறிக்கோளை அடைவதற்கான அரசின் விரிவான திட்டத்துக்கமைய 20 ஆண்டு தொழிற்பாட்டு காலப்பகுதியில் நிர்மாணித்தல், உரித்தை கொண்டிருத்தல் மற்றும் அமுல்படுத்துதல் அடிப்படையில் 100 மெகாவாற்று காற்றாலை மின்னுற்பத்திப் பூங்கா (தலா 50 மெகாவாற்று கொண்ட 02 மின்னுற்பத்தி நிலையங்கள்) திட்டத்தை அமுல்படுத்துவதற்காக தனியார் துறையின் ஆர்வமுள்ள அபிவிருத்தியாளர்களிடமிருந்து முன்மொழிவுகளை கோருவதற்காக 2025-02-10 திகதி அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
அதற்கமைய, சர்வதேச போட்டி விலைமனுக் கோரல் முறைமையை பின்பற்றி மேற்குறித்த திட்டத்தை அமுல்படுத்துவதற்கான முன்மொழிவு கோரப்பட்டு, ஏழு பேர் (7) தமது திட்ட முன்மொழிவுகளைச் சமர்ப்பித்துள்ளார்கள்.
மேற்குறித்த முன்மொழிவுகளை மதிப்பீடு செய்த பின்னர், அமைச்சரவையால் நியமிக்கப்பட்ட பேச்சுவார்த்தை உடன்பாட்டு குழுவால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள விதந்துரைகளின் அடிப்படையில் Consortium of Vidullanka PLC & David Pieris Motor Company (Lanka) Limited kw;Wk; Wind Force PLC ஆகியவற்றுக்கு மேற்குறித்த இரண்டு (2) 50 மெகாவாற்று காற்றாலை மின்னுற்பத்தி வசதிகளை நிறுவுவதற்கான ஒப்பந்தத்தை வழங்குவதற்காக வலுசக்தி அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியது.
அமெரிக்க விசா பெற புதிய நிபந்தனை - 5 ஆண்டு சமூக வலைத்தள வரலாறு சரிபார்க்கப்படலாம்
அமெரிக்க விசா பெற புதிய நிபந்தனை - 5 ஆண்டு சமூக வலைத்தள வரலாறு சரிபார்க்கப்படலாம்
அமெரிக்க விசா பெற புதிய நிபந்தனை - 5 ஆண்டு சமூக வலைத்தள வரலாறு சரிபார்க்கப்படலாம்

பட மூலாதாரம்,Alex Wong/Getty Images
படக்குறிப்பு,டொனால்ட் டிரம்ப்
கட்டுரை தகவல்
ஜேம்ஸ் ஃபிட்ஸ்ஜெரால்ட்
11 டிசம்பர் 2025, 07:05 GMT
பிரிட்டன் உட்பட பல நாடுகளிலிருந்து வரும் சுற்றுலாப் பயணிகள், அமெரிக்காவில் நுழைவதற்கான நிபந்தனையாக அவர்களின் ஐந்து ஆண்டு சமூக ஊடக வரலாற்றை வழங்க வேண்டிய சூழல் உருவாகலாம் என்று அமெரிக்க அதிகாரிகள் வெளியிட்டுள்ள புதிய திட்டம் கூறுகிறது.
இந்த புதிய நிபந்தனை, விசா இல்லாமல் 90 நாட்களுக்கு அமெரிக்காவிற்குச் செல்லத் தகுதியுள்ள பல நாட்டு மக்களைப் பாதிக்கும்.
ஆனால் அவர்கள் பயண அங்கீகாரத்திற்கான மின்னணு அமைப்பு (Electronic System for Travel Authorization - ESTA) படிவத்தை நிரப்பியிருக்க வேண்டும்.
ஜனவரி மாதம் அமெரிக்க அதிபராகப் பதவியேற்றதில் இருந்து, டொனால்ட் டிரம்ப், தேசிய பாதுகாப்பைக் காரணமாகக் கூறி, அமெரிக்க எல்லைப் பகுதிகளை மேலும் கடுமையாக்க பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகிறார்.
இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள இந்தத் திட்டம், அங்கு வரக்கூடிய பயணிகளுக்கு ஒரு தடையாக அமையலாம் அல்லது அவர்களின் டிஜிட்டல் உரிமைகளைப் பாதிக்கலாம் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
இந்தத் திட்டம் அமெரிக்காவிற்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையில் கடும் வீழ்ச்சிக்கு வழிவகுக்குமா என்று கேட்கப்பட்டபோது, டிரம்ப் அதுகுறித்து கவலைப்படவில்லை என்று கூறினார்.
புதன்கிழமையன்று இந்த விவகாரம் தொடர்பாக அவர் பேசுகையில், "இல்லை. நாங்கள் மிகவும் சிறப்பாகச் செயல்படுகிறோம்"என்றார்.
மேலும், "நாங்கள் மக்கள் இங்கு பாதுகாப்பாக வர வேண்டும் என்றுதான் விரும்புகிறோம். நாங்கள் பாதுகாப்பை விரும்புகிறோம். பாதுகாப்பு ஏற்பாடுகளை விரும்புகிறோம்" என்றும், "தவறான நபர்கள் எங்களது நாட்டுக்குள் நுழைய அனுமதியில்லை என்பதை நாங்கள் உறுதி செய்ய விரும்புகிறோம்," என்றும் குறிப்பிட்டார்.
அமெரிக்கா அடுத்த ஆண்டு கனடா மற்றும் மெக்சிகோவுடன் இணைந்து ஆண்களுக்கான கால்பந்து உலகக் கோப்பையை நடத்துகிறது, மேலும் 2028-இல் லாஸ் ஏஞ்சலிஸில் ஒலிம்பிக் போட்டியை நடத்துகிறது. இதனால் அடுத்த ஆண்டு பெரும் எண்ணிக்கையிலான வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகள் வருவார்கள் என்று அமெரிக்கா எதிர்பார்க்கிறது.
உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை (DHS) மற்றும் அதன் அங்கமான சுங்கம் மற்றும் எல்லைப் பாதுகாப்பு முகமை (CBP) ஆகியவற்றால் தாக்கல் செய்யப்பட்ட இந்தத் திட்ட ஆவணம், அமெரிக்க அரசாங்கத்தின் அதிகாரப்பூர்வ இதழான ஃபெடரல் பதிவேட்டில் வெளியிடப்பட்டது.

பட மூலாதாரம்,Getty Images
படக்குறிப்பு,டிரம்ப் எல்லைக் கட்டுப்பாட்டை கடுமையாக்கியுள்ளார் (கோப்புப் படம்)
இந்த முன்மொழிவு, "ஈஎஸ்டிஏ (ESTA) விண்ணப்பதாரர்கள் கடந்த 5 ஆண்டுகளுக்கான தங்கள் சமூக ஊடக விவரங்களை வழங்க வேண்டும்" என்று கூறுகிறது. இருப்பினும், எந்தெந்த குறிப்பிட்ட தகவல்கள் தேவைப்படும் என்பது குறித்த கூடுதல் விவரங்களை அது வழங்கவில்லை.
தற்போதுள்ள ஈஎஸ்டிஏ படிவத்தை நிரப்புவதற்கு, பயணிகள் ஒப்பீட்டளவில் குறைவான தகவல்களையும், ஒருமுறை செலுத்த வேண்டிய கட்டணமாக 40 டாலர் (30 பவுண்டு) கட்டணத்தையும் செலுத்த வேண்டும்.
இது பிரிட்டன், அயர்லாந்து, பிரான்ஸ், ஆஸ்திரேலியா மற்றும் ஜப்பான் உட்பட சுமார் 40 நாடுகளின் குடிமக்களுக்குக் கிடைக்கிறது. மேலும், குறிப்பிட்ட அந்த நாடுகளின் குடிமக்கள், ஈஎஸ்டிஏ மூலம் விண்ணப்பித்து, இரண்டு வருடத்தில் பலமுறை அமெரிக்கா செல்லும் அனுமதியைப் பெற முடியும்.
சமூக ஊடகத் தகவல்களைச் சேகரிப்பதுடன், கடந்த ஐந்து மற்றும் பத்து ஆண்டுகளில் விண்ணப்பதாரர் பயன்படுத்திய தொலைபேசி எண்கள் மற்றும் மின்னஞ்சல் முகவரிகள், அவர்களின் குடும்ப உறுப்பினர்களைப் பற்றிய கூடுதல் தகவல்களையும் சேகரிக்க இந்தப் புதிய திட்டம் முன்மொழிகிறது.
"வெளிநாட்டு பயங்கரவாதிகள் மற்றும் பிற தேசிய பாதுகாப்பு மற்றும் பொதுப் பாதுகாப்பு அச்சுறுத்தல்களிலிருந்து அமெரிக்காவைப் பாதுகாத்தல்," என்ற தலைப்பில் ஜனவரி மாதம் டிரம்ப் பிறப்பித்த நிர்வாக உத்தரவை இந்த திட்டம் மேற்கோள் காட்டுகிறது.
சுற்றுலா பயணிகளுக்கான ஈஎஸ்டிஏ தரவு சேகரிப்பு தொடர்பான புதிய திட்டம், 60 நாட்களுக்கு பொதுமக்களின் கருத்துகளை வரவேற்கிறது.
இது குறித்து சிபிபி-ன் செய்தித் தொடர்பாளர் ஒரு அறிக்கையில், "அமெரிக்காவிற்கு வருபவர்களுக்கு இந்த விஷயத்தில் எதுவும் மாறவில்லை" என்றும்,
"இது ஒரு இறுதி விதி அல்ல, அமெரிக்க மக்களைப் பாதுகாப்பாக வைத்திருக்க புதிய கொள்கை வாய்ப்புகளைப் பற்றி ஒரு விவாதத்தைத் தொடங்க இது ஒரு முதல் படி மட்டுமே," என்றும் குறிப்பிட்டார்.
டிஜிட்டல் உரிமைகள் அமைப்பான எலெக்ட்ரானிக் ஃபிரான்டியர் பவுண்டேஷனைச் (Electronic Frontier Foundation) சேர்ந்த சோபியா கோப், இந்தத் திட்டத்தை விமர்சித்து, இது "சிவில் உரிமைகளுக்கு அதிகத் தீங்கு விளைவிக்கும்" என்று நியூயார்க் டைம்ஸிடம் தெரிவித்தார்.
இதற்கிடையில், குடியேற்றச் சட்ட நிறுவனமான ஃப்ராகோமன் (Fragomen), விண்ணப்பதாரர்கள் ஈஎஸ்டிஏ அனுமதிக்காக அதிக நேரம் காத்திருக்க வேண்டிய நிலை உருவாகக்கூடும் என்பதால், நடைமுறையில் சில தாக்கங்கள் இருக்கலாம் என்று குறிப்பிட்டுள்ளது.

பட மூலாதாரம்,Getty Images
படக்குறிப்பு,இந்தத் திட்டம் பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்தவர்களைப் பாதிக்கும்
டிரம்ப் நிர்வாகம் இதற்கு முன்னர், மாணவர் விசாக்களுக்கும், திறன்மிகு தொழிலாளர்களுக்கான ஹெச் -1பி விசாக்களுக்கும் விண்ணப்பிக்கும் வெளிநாட்டினரை பரிசோதிக்கும்போது அவர்களின் சமூக ஊடக கணக்குகளை ஆய்வு செய்யும் என்று அறிவித்தது.
விண்ணப்பதாரர்கள் மற்றும் அவர்களைச் சார்ந்திருப்பவர்களின் "ஆன்லைன் இருப்பு" (online presence) குறித்து மதிப்பாய்வு செய்யப்படும் என்றும், இந்தச் சோதனை நடைபெறுவதற்காக அனைத்து சமூக ஊடக சுயவிவரங்களின் தனியுரிமை அமைப்புகளும் "பொது" (public) நிலையில் வைக்கப்பட வேண்டும் என்றும் வெளியுறவுத் துறை கூறியது.
மெக்சிகோவில் உள்ள அமெரிக்கத் தூதரகம் மற்றும் துணைத் தூதரகத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்ட அறிவிப்பில், குறிப்பிட்ட விசா விண்ணப்பதாரர்கள் கடந்த ஐந்து ஆண்டுகளில் பயன்படுத்திய அனைத்து சமூக ஊடக தளங்களின் பயனர் பெயர்கள் அல்லது 'ஹேண்டில்களையும்' (usernames or handles) பட்டியலிட வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
சமூக ஊடகத் தகவல் ஏதாவது பட்டியலிடப்படாவிட்டால், அது தற்போதைய மற்றும் எதிர்கால விசாக்கள் மறுக்கப்படுவதற்கு வழிவகுக்கும் என்றும் அது எச்சரிக்கிறது.
மாணவர் விசா கொள்கை குறித்து ஒரு மூத்த வெளியுறவுத் துறை அதிகாரி கூறுகையில்: "தங்கள் அரசாங்கம் நமது நாட்டைப் பாதுகாப்பாக வைத்திருக்க அனைத்து முயற்சிகளையும் எடுக்கும் என்று அமெரிக்க குடிமக்கள் எதிர்பார்க்கிறார்கள், அதைத்தான் டிரம்ப் நிர்வாகம் ஒவ்வொரு நாளும் செய்து வருகிறது," என்றார்.
"குறிப்பிட்ட வெளிநாட்டுப் பயங்கரவாதிகள் மற்றும் தேசிய பாதுகாப்புக்கு எதிரான பிற அச்சுறுத்தல்களுக்கு உதவுபவர்கள் அல்லது ஆதரவளிப்பவர்கள், அல்லது சட்டவிரோதமான யூத எதிர்ப்பு துன்புறுத்தல் அல்லது வன்முறையைச் செய்பவர்களை" சோதனை செய்ய அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது.
அமெரிக்க நிர்வாகத்தின் எல்லைகளைக் கடுமையாக்கும் விரிவான முயற்சியின் ஒரு பகுதியாக, ஆப்ரிக்கா, மத்திய கிழக்கு மற்றும் கரீபியன் பகுதிகளில் உள்ள 19 நாடுகளைப் பாதிக்கும் தற்போதைய பயணத் தடை விரைவில் விரிவுபடுத்தப்படலாம் என்று அதிகாரிகள் சமீபத்தில் தெரிவித்தனர்.
இந்த நடவடிக்கை, வாஷிங்டன் டி.சி.யில் இரண்டு தேசிய காவல்படை உறுப்பினர்கள் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்ட சம்பவத்திற்குப் பின்னர் அறிவிக்கப்பட்டது. அதில் ஒரு ஆப்கான் நபர் குற்றம் சாட்டப்பட்டுள்ளார்.
டிரம்பின் பதவிக்காலத்தில் கொண்டுவரப்பட்ட பயணக் கொள்கை மாற்றங்கள், அமெரிக்கச் சுற்றுலா துறையில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன என நிபுணர்கள் முன்பு கூறியுள்ளனர்.
இந்த ஆண்டின் தொடக்கத்தில், உலகப் பயணம் மற்றும் சுற்றுலா கவுன்சில் (World Travel & Tourism Council), தான் ஆய்வு செய்த 184 நாடுகளில், 2025-ஆம் ஆண்டில் சர்வதேச சுற்றுலா வருவாயில் சரிவைக் காணக்கூடிய ஒரே நாடாக அமெரிக்கா இருக்கும் என்று தெரிவித்தது.
டிரம்பின் வரிகள் (tariffs) மீதான எதிர்ப்பின் ஒரு வடிவமாக, கனடாவைச் சேர்ந்த பலரும் அமெரிக்கப் பயணத்தைப் புறக்கணித்தது போன்ற நிர்வாகத்தின் பிற கொள்கைகளும், அமெரிக்காவின் சுற்றுலாவைப் பாதித்ததாகத் தெரிகிறது.
அக்டோபர் மாதம், அமெரிக்காவுக்கு வரும் கனடிய பயணிகளின் எண்ணிக்கை தொடர்ந்து 10-வது மாதமாக சரிவைக் கண்டதாகக் குறிப்பிடப்பட்டது.
முன்னதாக, கனடாவைச் சேர்ந்த மக்கள் அமெரிக்காவுக்கு வருகை தந்த சர்வதேசப் பயணிகளில் சுமார் நான்கில் ஒரு பங்கை கொண்டிருந்தனர். மேலும் அவர்கள் ஆண்டுக்கு 20 பில்லியன் டாலருக்கும் அதிகமாகச் செலவழித்துள்ளனர் என்று அமெரிக்கப் பயணச் சங்கம் (US Travel Association) தெரிவித்துள்ளது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
‘Rebuilding Sri Lanka’ நிதியத்திற்கு இலங்கை கிரிக்கெட் நன்கொடை
வடக்கு கிழக்கில் குடியேற மலையக உறவுகளை பாசத்துடன் அழைக்கின்றோம் – சுமந்திரன் அறிவிப்பு
யாழில் நிலவும் சீரற்ற கால நிலை - சென்னை விமானம் தரையிறங்காது மீண்டும் திரும்பியது
யாழில் நிலவும் சீரற்ற கால நிலை - சென்னை விமானம் தரையிறங்காது மீண்டும் திரும்பியது
யாழில் நிலவும் சீரற்ற கால நிலை - சென்னை விமானம் தரையிறங்காது மீண்டும் திரும்பியது
11 Dec, 2025 | 09:24 PM
![]()
யாழ்ப்பாணத்தில் நிலவும் சீரற்ற காலநிலையில் , சென்னையில் இருந்து வந்த விமானம் யாழ்ப்பாணத்தில் தரையிறங்க முடியாது மீண்டும் சென்னைக்கு திரும்பியுள்ளது .
யாழ்ப்பாணத்தில் நேற்றைய தினம் புதன்கிழமை முதல் சீரற்ற கால நிலை நிலவி வருகிறது. இந்நிலையில் சென்னையில் இருந்து யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தை நோக்கி புறப்பட்ட விமானம் யாழ்ப்பாணத்தை அண்மித்த நிலையில் வானில் நிலவிய கடுமையான மோக மூட்டத்தால் , சென்னைக்கு மீள திரும்பியதாக தெரிவிக்கப்படுகிறது.
அதேவேளை, கொழும்பில் இருந்து வடமாகாணத்திற்கான நிவாரண பொதிகளை ஏற்றி வரும் அமெரிக்க விமானம் இன்றைய தினம் வியாழக்கிழமையும் யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்து நிவாரண பொருட்களை கையளித்து சென்றமை குறிப்பிடத்தக்கது.
இலங்கை வந்துள்ள அமெரிக்க உயர் மட்ட பிரதிநிதி
முதுமலையில் சிக்கிய புலி வேட்டைத் திறனை இழந்துவிட்டதா? என்ன நடந்தது?
முதுமலையில் சிக்கிய புலி வேட்டைத் திறனை இழந்துவிட்டதா? என்ன நடந்தது?

பட மூலாதாரம்,Mudumalai Forest Department
2 மணி நேரங்களுக்கு முன்னர்
உதகை அருகேயுள்ள ஒரு கிராமத்தில் சுற்றித் திரிந்த டி37 என்ற ஆண் புலி நவம்பர் 24ஆம் தேதியன்று பழங்குடிப் பெண் ஒருவரைத் தாக்கியதாக தகவல் வெளியானது. இதைத் தொடர்ந்து தேடப்பட்டு வந்த அந்தப் புலி வனத்துறையினர் வைத்த கூண்டில் இன்று(டிசம்பர் 11) சிக்கியுள்ளது.
இதுகுறித்துப் பேசியுள்ள முதுமலை புலிகள் காப்பகத்தின் துணை கள இயக்குநர் எம்.ஜி. கணேசன், அது வேட்டைத் திறனை இழந்த வயதான புலி என்பதால், சென்னையிலுள்ள வண்டலூர் உயிரியல் பூங்காவுக்கு கொண்டு செல்லப்படுவதாகத் தெரிவித்தார்.
இந்தச் சம்பவத்தில் நடந்தது என்ன? புலியை வனத்துறை பிடித்தது எப்படி? வேட்டைத் திறனை இழந்த புலி என்றால் என்ன?
பழங்குடிப் பெண்ணை தாக்கிய புலி
நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்தில் அமைந்துள்ள மாவனல்லா கிராமத்தில் நவம்பர் 24ஆம் தேதியன்று தனது கால்நடைகளை மேய்த்துக் கொண்டிருந்த நாகியம்மாள் என்ற பழங்குடிப் பெண்ணை புலி தாக்கியது. இதனால் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார்.
இந்தச் சம்பவத்தின் தாக்கத்தால், உள்ளூர் பொது மக்கள் புலியைப் பிடித்து தங்களுக்கு பாதுகாப்பு வழங்குமாறு வலியுறுத்தினர்.
இதைத் தொடர்ந்து அந்தப் பகுதியில் வனத்துறையினர் "தானியங்கி கேமராக்களை பொருத்தி, நான்கு குழுக்களுடன்" தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு வந்தனர்.
இதன் மூலம், மாவனல்லா பகுதியில் ஒரு வயதான புலி சுற்றி வருவதையும், அது ஆண் புலி என்பதும் அடையாளம் காணப்பட்டது.
வனத்துறையின் அறிக்கைப்படி, பழங்குடியினப் பெண் உயிரிழந்த மறுநாளான நவம்பர் 25ஆம் தேதியன்று, தானியங்கி கேமராக்களை ஆய்வு செய்தபோது சம்பவம் நடந்த இடத்தில் டி37 எனப் பெயரிடப்பட்ட வயதான ஆண் புலி இருப்பது கண்டறியப்பட்டது.
Skip அதிகம் படிக்கப்பட்டது and continue reading
அதிகம் படிக்கப்பட்டது

ஹிட்லரின் வாரிசை பரிசோதித்த உளவியல் மருத்துவர் - அவருக்கு நேர்ந்த சோக முடிவு

அமெரிக்க விசா பெற புதிய நிபந்தனை - 5 ஆண்டு சமூக வலைத்தள வரலாறு சரிபார்க்கப்படலாம்

பாகிஸ்தானில் கூகுளில் அதிகம் தேடப்பட்ட கிரிக்கெட் வீரர் ஓர் இந்தியர் - யார் தெரியுமா?

'வில்லன்தான் ஆனால் ஹீரோ' - ரகுவரனின் மறக்க முடியாத 10 வில்லன் கதாபாத்திரங்கள்
End of அதிகம் படிக்கப்பட்டது

படக்குறிப்பு,கூண்டு வைத்துப் பிடிக்கப்பட்ட புலியைக் காட்டுமாறு மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்
கூண்டில் சிக்கிய புலி
இதைத் தொடர்ந்து டி37 புலியைப் பிடிக்க நான்கு வெவ்வேறு இடங்களில் கூண்டு வைக்கப்பட்டது.
"புலியின் நடமாட்டத்தை ரோந்துப் பணிகள், டிரோன் மூலமாகவும், 29 தானியங்கி கேமராக்கள் வாயிலாகவும்'' வனத்துறை கண்காணித்து வந்தது.
புலி கடந்த 24ஆம் தேதி பழங்குடிப் பெண்ணை தாக்கியது முதல் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வந்த கண்காணிப்புகளின் விளைவாக, "டிசம்பர் 11ஆம் தேதியன்று அதிகாலையில் செம்மநத்தம் சாலை பகுதிக்கு அருகில் வைக்கப்பட்டிருந்த கூண்டில் புலி சிக்கியதாக" தனது அறிக்கையில் முதுமலை புலிகள் காப்பகத்தின் துணை கள இயக்குநர் எம்.ஜி. கணேசன் தெரிவித்துள்ளார்.
மேலும், இந்த முயற்சியின்போது மயக்க மருந்து பயன்படுத்தப்படவில்லை எனவும் துணை இயக்குநர் கணேசன் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

படக்குறிப்பு,முதுமலை புலிகள் காப்பகத்தின் துணை கள இயக்குநர் எம்.ஜி. கணேசன்
புலியை பார்க்க விடுமாறு மக்கள் போராட்டம்
சுமார் ஒரு வாரத்திற்கும் மேலாக புலி குறித்த அச்சத்தில் இருந்து வந்த மாவனல்லா கிராமத்தைச் சேர்ந்த மக்கள், பிடிக்கப்பட்ட புலியைக் காணக் கூடியிருந்தனர். ஆனால், வனத்துறை புலி இருந்த பகுதிக்கு யாரையும் அனுமதிக்கவில்லை.
அதுமட்டுமின்றி, புலி சிக்கிய கூண்டு மூடப்பட்டு இருந்ததால், "அது பெண்ணைத் தாக்கிய புலி இல்லை" என்றும் பிடிக்கப்பட்ட புலியை பொது மக்களுக்குக் காட்ட வேண்டும் என்றும் கூறி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
அதோடு, வனத்துறை வைத்த கேமராவில் ஒன்றுக்கும் மேற்பட்ட புலிகள் பதிவாகி இருப்பதால், பிடிக்கப்பட்டது பழங்குடிப் பெண்ணை தாக்கிய புலிதானா என்று கேள்விகள் எழுப்பப்பட்டன.
ஆனால், செய்தியாளர்களிடம் பேசியபோது இதற்குப் பதிலளித்த துணை இயக்குநர் கணேசன், "கூண்டில் சிக்கிய புலி, பழங்குடிப் பெண் தாக்கப்பட்ட இடத்தில் வைக்கப்பட்ட தானியங்கி கேமராவில் பதிவான அதே புலிதான் என்பது உறுதி செய்யப்பட்டது" என்று தெரிவித்தார்.
மேலும், அது வயதான புலி என்பதால் வேட்டையாடும் திறனை இழந்துவிட்டதாகக் குறிப்பிட்ட அவர், "அதன் கோரை பற்கள், முன்னங்கால்கள், மூக்கு ஆகிய பகுதிகளில் காயங்கள் இருப்பதாகவும்" கூறியதோடு, "சுமார் 14 முதல் 15 வயது மதிக்கத்தக்க புலியாக அது இருக்கக்கூடும்" என்றும் தெரிவித்தார்.
அதோடு, "அது தனது வேட்டைத் திறனை இழந்துவிட்டதால், எளிதில் கிடைக்கக்கூடிய இரைகளான கால்நடைகளைக் குறிவைத்து வந்தது. அப்படிப்பட்ட ஒரு முயற்சியின்போதே பழங்குடிப் பெண்ணை தவறுதலாக புலி தாக்கியுள்ளது" எனவும் குறிப்பிட்டார்.

பட மூலாதாரம்,Mudumalai Forest Department
படக்குறிப்பு,பழங்குடிப் பெண்ணை தாக்கிய புலியின் உடலில் மூக்கு, முன்னங்கால் ஆகிய பகுதிகளில் காயங்கள் இருப்பதாக வனத்துறை தெரிவித்துள்ளது.
வயதான புலிக்கு காட்டில் நேரும் நிலை
புலிகள் பொதுவாக பன்னிரண்டு வயதை நெருங்கும்போது முதிர்ச்சி அடைவதன் விளைவுகளை அனுபவிக்கத் தொடங்குவதாகக் கூறுகிறார் ஆனைமலை புலிகள் காப்பகத்தில் காட்டுயிர் உயிரியலாளராக இருக்கும் பீட்டர் பிரேம் சக்கரவர்த்தி.
"ஒரு புலியால், வயதாகிவிட்டால் இரை உயிரினங்களை வேகமாகச் செயல்பட்டு துரத்திப் பிடிக்க முடியாது. இதன் காரணமாக, எளிதில் பிடிக்க ஏதுவான இரைகளாகப் பார்த்து வேட்டையாடத் தொடங்கும்.
நோய்வாய்ப்பட்ட விலங்கு, அடிபட்ட உயிரினங்கள் போன்றவற்றைக் குறிவைக்கலாம். அப்படியான வாய்ப்புகளும் கிடைக்காமல் போகும் சூழலில், அவை கால்நடைகள் அல்லது மனிதர்களை வேட்டையாடும் முயற்சியில் ஈடுபடக்கூடும்," என்று விவரித்தார்.
அவரது கூற்றுப்படி, தனது வாழ்வின் இறுதிக் கட்டத்தில் இருக்கும் அந்தப் புலியை அதன் வாழ்விடத்தில் இருந்து துரத்தும் செயல்களில் பிற இளம் புலிகள் ஈடுபடலாம். "அந்தச் சூழலில், காட்டின் வெளிப்பகுதிகளை நோக்கி அவை தள்ளப்படுகின்றன. அப்போது கால்நடைகள் போன்ற எளிதில் பிடிக்கவல்ல இரைகளை குறிவைக்கின்றன."
இந்தக் குறிப்பிட்ட டி37 புலியின் உடலில்கூட முன்னங்கால்கள், மூக்கு ஆகிய பகுதிகளில் காயங்கள் இருப்பதாக முதுமலை புலிகள் காப்பகத்தின் துணை இயக்குநர் கணேசன் செய்தியாளர்களிடம் பேசியபோது குறிப்பிட்டிருந்தார்.
அதற்கும் ஒருவேளை காட்டுயிர் உயிரியலாளர் பீட்டர் கூறுவதைப் போல் பிற புலிகளுடன் ஏற்பட்ட வாழ்விட மோதல் காரணமாக இருக்கக்கூடுமா என்ற கேள்வி எழுந்தது.
அதுகுறித்து விளக்கியபோது, "அதற்கான சாத்தியக்கூறுகள் மிக அதிகமாக இருப்பதாக" குறிப்பிட்ட பீட்டர், புலிகளிடையே நிகழும் அத்தகைய மோதல்களின் விளைவாகவே இப்படிப்பட்ட காயங்கள் ஏற்படும் எனவும் தெரிவித்தார்.
தற்போது பிடிக்கப்பட்டுள்ள டி37 புலி, முதிர்ச்சி காரணமாக அதன் வேட்டைத் திறனை இழந்துவிட்டதை கால்நடை மருத்துவர்கள் உறுதி செய்துள்ளனர்.
எனவே, "அதைக் காட்டில் விடுவிப்பது சாத்தியமில்லை என்று முடிவு செய்துள்ள வனத்துறை, சென்னையிலுள்ள வண்டலூர் உயிரியல் பூங்காவுக்கு அதைக் கொண்டு செல்லத் தீர்மானித்துள்ளது" என்று முதுமலை துணை இயக்குநர் கணேசன் தெரிவித்துள்ளார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு