Aggregator
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
உலகை அதிர வைத்த கோப்புகளை கொண்ட ஜெஃப்ரி எப்ஸ்டீன் யார்?
கருத்து படங்கள்
பொவந்தலாவ பொலிஸ் நிலையத்தில், இரு பொலிஸார் இடையில் கத்திக்குத்து.
விடுதலைப் புலிகள் மீதான தடை நீக்கம் தொடர்பான வழக்கை ஒத்திவைத்த சென்னை நீதிமன்றம்!

விடுதலைப் புலிகள் மீதான தடை நீக்கம் தொடர்பான வழக்கை ஒத்திவைத்த சென்னை நீதிமன்றம்!
இந்தியாவில் தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்கக் கோரி நீண்ட காலமாக தொடரப்பட்ட மனு மீதான விசாரணையை சென்னை மேல் நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.
நீதியரசர்கள் குழாம் முன்னிலையிலான விசாரணையின் போது மத்திய அரசின் சட்டத்தரணி மேலதிக அவகாசம் கோரியதை அடுத்து, 2026 வழக்கு பெப்ரவரி 16 வரை ஒத்திவைக்கப்பட்டது.
மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் (MDMK) பொதுச் செயலாளர் வைகோ இந்த மனுவினை தாக்கல் செய்துள்ளார்.
மத்திய அரசு 1991 ஆம் ஆண்டு விடுதலைப் புலிகள் அமைப்பைத் தடை செய்தது.
அதன் பின்னர் இந்தத் தடை அவ்வப்போது நீட்டிக்கப்பட்டு வருகிறது.
ஆரம்பத்தில் ஒவ்வொரு இரண்டு வருடங்களுக்கும் பின்னர் ஒவ்வொரு ஐந்து வருடங்களுக்கும் ஒரு முறை.
2012 ஆம் ஆண்டில், சட்டவிரோத நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டத்தின் (UAPA) கீழ் இந்த அமைப்பு மீண்டும் சட்டவிரோதமாக அறிவிக்கப்பட்டது.
இந்த உத்தரவை UAPA தீர்ப்பாயம் பின்னர் உறுதி செய்தது.
இந்த தீர்ப்பை எதிர்த்து, வைகோ 2013 ஆம் ஆண்டு சென்னை மேல் நீதிமன்றத்தை அணுகினார்.
இந்த வழக்கு இன்று நீதிபதிகள் அனிதா சுமந்த் மற்றும் நீதிபதி மும்மினேனி சுதீர் குமார் ஆகியோர் அடங்கிய நீதிபதிகள் குழாம் முன் விசாரணைக்கு வந்தது.
விசாரணையின் போது, மத்திய அரசு தரப்பில் ஆஜரான சட்டத்தரணி மனுவை ஒத்திவைக்கக் கோரினார்.
கோரிக்கையை ஏற்றுக்கொண்டு, விசாரணையை பெப்ரவரி 16 ஆம் திகதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.
நீதிமன்ற தீர்ப்பின் பின்னர் ஊடகவியலாளர்களிடம் உரையாற்றிய வைகோ பின்வருமாறு கூறினார்,
விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்கக் கோரி நான் தொடர்ந்த வழக்கு இன்று சென்னை மேல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
நானே நேரில் முன்னிலையாகி இந்தத் தடை ஏன் சட்ட விரோதமானது என்பதற்கான முதற்கட்ட வாதங்களை முன்வைத்தேன்.
மத்திய அரசு அவகாசம் கேட்டதால் வழக்கு பெப்ரவரி 16 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசின் முக்கியமான குற்றச்சாட்டு: “புலிகள் தமிழ்நாட்டையும் இணைத்து தமிழீழம் அமைக்க முயல்கிறார்கள்” என்பது.
இதை நான் முற்றிலுமாக மறுக்கிறேன்.
வட்டுக்கோட்டை தீர்மானத்திலோ, தலைவர் பிரபாகரனின் மாவீரர் நாள் உரைகளிலோ ஒருபோதும் தமிழ்நாட்டை இணைக்கும் நோக்கம் இருந்ததில்லை என்பதை ஆதாரங்களுடன் விளக்கினேன்.
தலைவர் பிரபாகரனின் பின்னால் இருக்கும் தமிழீழ வரைபடத்தில் கூட தமிழ்நாட்டின் ஒரு சிறு துளி இடம் கூட இருந்ததில்லை.
ஈழ மண்ணை மீட்பது மட்டுமே அவர்களின் நோக்கம்.
மத்திய அரசின் அடிப்படை வாதமே பொய்யானது எனும்போது, இந்தத் தடையின் மொத்த கட்டுமானமும் (The whole edifice of the ban) சரிந்து விழுகிறது.
ஆயுதப் போராட்டம் பற்றி கேள்வி எழுப்பப்பட்ட போது, 1948 ஐநா மனித உரிமைகள் பிரகடனத்தின் முகவுரையை மேற்கோள் காட்டினேன்.
ஒரு நாட்டில் அடக்குமுறையும் சர்வாதிகாரமும் நிலவும் போது, அதை எதிர்த்துப் புரட்சி செய்வது (Rebellion against tyranny) நியாயமானது என ஐநா-வே அங்கீகரிக்கிறது.
மாபெரும் தலைவர் நெல்சன் மண்டேலா அவர்கள் ரிவோனியா நீதிமன்றத்தில் சொன்னது போல—அரசாங்கம் ஆயுதங்களால் மக்களை ஒடுக்கும் போது, மக்கள் தற்காப்புக்காக ஆயுதம் ஏந்துவது தவிர்க்க முடியாதது.
ஈழத்தில் நடந்தது ஒரு திட்டமிட்ட இனப்படுகொலை (Genocide).
அதற்கான நீதியை வென்றெடுக்கும் வரை எனது சட்டப்போராட்டம் ஓயாது – என்றார்.
விடுதலைப் புலிகள் மீதான தடை நீக்கம் தொடர்பான வழக்கை ஒத்திவைத்த சென்னை நீதிமன்றம்!
உலகை அதிர வைத்த கோப்புகளை கொண்ட ஜெஃப்ரி எப்ஸ்டீன் யார்?
பாகிஸ்தானில் பள்ளிவாசல் ஒன்றில் குண்டுவெடிப்பு – 31 பேர் உயிரிழப்பு!
உலகை அதிர வைத்த கோப்புகளை கொண்ட ஜெஃப்ரி எப்ஸ்டீன் யார்?
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
நானுஓயாவில் பாடசாலை மாணவியை மிருகத்தனமாக தாக்கிய ஆசிரியர்
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
ஒபாமாவை குரங்காக சித்தரிக்கும் காணொளி.. பகிர்ந்து பின் நீக்கிய ட்ரம்ப்.
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
அவசரகால சட்டம் பேரிடர் நிவாரணத்திற்கல்ல, மக்கள் எதிர்ப்பை அடக்கவே – கஜேந்திரகுமார் பொன்னம்பலம்
அவசரகால சட்டம் பேரிடர் நிவாரணத்திற்கல்ல, மக்கள் எதிர்ப்பை அடக்கவே – கஜேந்திரகுமார் பொன்னம்பலம்
அவசரகால சட்டம் பேரிடர் நிவாரணத்திற்கல்ல, மக்கள் எதிர்ப்பை அடக்கவே – கஜேந்திரகுமார் பொன்னம்பலம்
Published By: Vishnu
07 Feb, 2026 | 05:53 AM
![]()
(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)
பேரிடர்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணமளிக்க அவசரகால சட்டம் அவசியமில்லை. ஆனால் இப்போது டித்வா காரணமாகவே அவசரகால சட்டம் தேவைப்படுகின்றது என்று கூறி எங்களை ஏமாற்ற முடியாது. நிச்சயமாக அரசியல் செயற்பாடுகளுக்கு மக்களிடையே வளரும் எதிர்ப்பை மறுப்பதற்கும் அதனை அடக்குவதற்கும் தேவைப்படும் அதிகாரமாகவே. இது பார்க்கப்படுகிறது. நாங்கள் இதற்கு எதிராகவே வாக்களிப்போம் என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (6) நடைபெற்ற பொதுமக்கள் பாதுகாப்புக் கட்டளைச் சட்டத்தின் அமுல்படுத்தப்பட்ட அவசரகால சட்டம் தொடர்பான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது,
அவசரகால சட்டம் தொடர்பான அரசாங்கத்தின் தீர்மானத்தை நாங்கள் எதிர்ப்பதுடன், இது தொடர்பில் வாக்கெடுப்பை கோருவோம். இதன்போது இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வாக்களிப்போம். நாங்கள் இதனை ஏன் எதிர்க்க வேண்டும் என்பதற்கு தமிழர்களின் வரலாற்றை எடுத்துப்பார்த்தால் புதிதாக பதிவு செய்யத் தேவைப்படாது.
இப்போது கூட தையிட்டியில் நாங்கள் போராடும் போது பொலிஸார் வழமைப் போன்று நடவடிக்கை எடுக்கின்றனர். அவசரகால சட்டம் பிரகடனப்படுத்தியுள்ள காலத்தில் இதனை காட்டி நடவடிக்கை எடுக்கின்றனர். பயங்கரவாத தடுப்புச் சட்டத்தை கொடூரமான சட்டம் இதனை நீக்கப் போகின்றோம் என்று கூறிக்கொண்டு இப்போது கிடைக்கும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் வடக்கு மற்றும் கிழக்கில் அரசியல் ரீதியில் அரசாங்கத்தை எதிர்க்கும் போது இதனை பயன்படுத்துகின்றனர். இதனை நாங்கள் கடுமையாக எதிர்க்கின்றோம்.
டித்வா புயல் சேதங்கள் தொடர்பான திட்டங்கள் சீர்குலைக்கப்படக்கூடாது என்பதற்காகவே அவசரகால சட்டத்தை நீடிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படுவதாக அரசாங்கம் கூறுகின்றது. ஆனால் இதற்கு முன்னரும் இது போன்ற அனர்த்தங்கள் நடந்துள்ளன. வடக்கு மற்றும் கிழக்கும் பாதிக்கப்பட்டுள்ளன.
பேரிடர்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு எதுவும் செய்யவில்லை. இதற்கு அவசரகால சட்டம் அவசியமில்லை. ஆனால் இப்போது டித்வா காரணமாகவே அவசரகால சட்டம் தேவைப்படுகின்றது என்று கூறி எங்களை பேய் காட்ட முடியாது. நிச்சயமாக அரசியல் செயற்பாடுகளுக்கு மக்களிடையே வளரும் எதிர்ப்பை மறுப்பதற்கும் அதனை அடக்குவதற்கும் உங்களுக்கு தேவைப்படும் அதிகாரமாகவே பார்க்கப்படுகின்றது.
இந்திய மீனவர்களின் ரோலர் படகுகள் எமது மீனவர்களின் சொத்துக்களை அழிப்பது தொடர்பில் ஒவ்வொரு மாதமும் கூறியுள்ளனர். அடிக்கடி இந்த பாராளுமன்றத்தில் இந்த விடயம் முன்வைக்கப்பட்டுள்ளது. ஆனால் இதுவரையில் இந்த அரசாங்கம் எவ்விதமான ஆக்கப்பூர்வமான நடவடிக்கையும் எடுக்கவில்லை. 2025ஆம் ஆண்டில் 15 ரோலர்களும், இந்த வருடத்தில் 6 ரோலர்களை மட்டுமே பிடித்துள்ளீர்கள். ஆனால் ஆயிரக்கணக்கான படகுகள் வந்து எமது மீனவர்களின் சொத்துக்களை அழிக்கின்றன.
கடந்தகால ஆட்சியாளர்களும் இவ்வாறே செயற்பட்டனர். 2013ஆம் ஆண்டில் இருந்து 500 இந்திய ரோலர் படகுகள் பிடிக்கப்பட்டுள்ளதுடன், 319 படகுகள் எவ்வித நிபந்தனைகளும் இன்றி விடுவிக்கப்பட்டுள்ளன. 30 வழக்குகள் மட்டுமே தாக்கல் செய்யப்பட்டுள்ளன. 2871 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன், 2779 பேர் எவ்வித நடவடிக்கையும் இன்றி விடுவிக்கப்பட்டுள்ளனர்.
இப்படியொரு நிலைமை இருக்கையில் அரசாங்கமும் ஏன் இப்படி நடந்துகொள்கிறது. இராஜதந்திரம், இந்தியாவை பகைக்கக்கூடாது என்று கூறுகின்றீர்கள். இதுபோன்று தெற்கில் நடந்தால் பார்த்துக்கொண்டு இருப்பீர்களா? வடக்கு, கிழக்கில் பெரும்பான்மையாக தமிழர்கள் இருப்பதாலேயே இவ்வாறு நடந்துகொள்கின்றீர்கள். படகுகளை பிடிக்க முடியாவிட்டால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நஷ்ட ஈடுகளை வழங்க முடியதா?
இதேவேளை திருகோணமலையில் கடந்த முதலாம் திகதி கோகன்ன ரஜமகா விகாரையின் காலமான விகாராதிபதியின் உடல் ஹேய்சர் விளையாட்டு மைதானத்தில் எரிக்கப்பட்டது. அந்த மைதானத்தை தமிழ் சிறுவர்களே அதிகமாக பயன்படுத்துகின்றனர். தமிழ் மக்களின் கலாச்சாரத்திற்கமைய எரிக்கப்பட்ட இடங்களில் மக்கள் கால் வைப்பதில்லை. ஆனால் தேரர் ஒருவர் அவ்விடத்தில் எரிக்கப்பட்டுள்ள நிலையில், அங்கு அவர்களால் விளையாட முடியாது.
இதேவேளை விடுதலைப் புலி போராளிகள் உடல்கள் புதைக்கப்பட்ட இடங்கள் இராணுவத்தினர் வசமுள்ளன. அவற்றின் மீது நடக்கின்றனர். அந்த இடங்களை மக்களிடம் மீள கையளிக்க வேண்டும். மக்களின் உணர்வுகள் மற்றும் உணர்வுபூர்வமான விடயங்களுக்கு மதிப்பளிக்க வேண்டும் என்றார்.