Aggregator
வடக்கு மாகாணத்தில் தற்போது நிலவி வரும் மழையுடனான காலநிலை தொடர்வதற்குச் சாத்தியம்
வடக்கு மாகாணத்தில் தற்போது நிலவி வரும் மழையுடனான காலநிலை தொடர்வதற்குச் சாத்தியம்
Published By: Digital Desk 3
19 Oct, 2025 | 01:46 PM
![]()
வடக்கு மாகாணத்தில் தற்போது நிலவி வரும் மழையுடனான காலநிலை தொடர்வதற்குச் சாத்தியங்கள் காணப்படுகின்றன என யாழ்ப்பாணப் பல்கலைக்கழகப் புவியியல்துறையின் தலைவரும் வானிலை ஆய்வாளருமான நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில்,
"வடக்கு மாகாணத்தில் தற்போது நிலவி வரும் மழையுடனான காலநிலை தொடர்வதற்குச் சாத்தியங்கள் உள்ளன.
தற்போது குமரிக் கடலுக்கு அண்மித்ததாக நிலவுகின்ற காற்றுச் சுழற்சியின் விளைவாக நாட்டின் பல பகுதிகளுக்கும் தொடர்ச்சியான மழை கிடைத்து வருகின்றது.
அத்துடன் எதிர்வரும் 23ஆம் திகதி வங்காள விரிகுடாவில் புதிய தாழமுக்கம் ஒன்று உருவாகும் வாய்ப்புள்ளது.
தற்போதைய மாதிரிக் கணிப்புக்களின் அடிப்படையில் இந்த தாழமுக்கமானது ஒரு புயலாக வலுப்பெற்று அல்லது ஒரு வலுக்குறைந்த புயலாக மாற்றம்பெற்று இந்தியாவின் ஆந்திராவில் நெல்லூருக்கு அருகில் கரையைக் கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
இந்தத் தாழமுக்கத்தால் வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கு நேரடிப் பாதிப்புகள் எவையும் இல்லை. ஆனால், மழையுடனான காலநிலை தொடர்வதற்குச் சாத்தியங்கள் காணப்படுகின்றன.
தாழமுக்கம் காரணமாக எதிர்வரும் 23ஆம் திகதி வியாழக்கிழமை முதல் 28 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை வரை வடக்கு, கிழக்கு மற்றும் தென்கிழக்குக் கடற்பகுதிகள் கொந்தளிப்பான நிலையில் காணப்படும்.
ஆதலால், கடற்றொழிலாளர்கள் கடலுக்குச் செல்வதைத் தவிர்க்க வேண்டும்.
அத்துடன் நவம்பர் மாதத்தின் முதலாவது வாரத்திலும் தாழமுக்கம் ஏற்படுவதற்குச் சாத்தியங்கள் காணப்படுகின்றன" என்றுள்ளது.
பேரிச்சம்பழம் நல்லதா?கெட்டதா?
குவாண்டம் கணினி: கணக்கீட்டின் எதிர்கால புரட்சி!
யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025
தமிழ் மக்களுக்கு இந்தியா அளித்துள்ள உறுதிப்பாட்டை நிறைவேற்ற தவறியுள்ளது - கலாநிதி தயான் ஜயதிலக்க தெரிவிப்பு
தமிழ் மக்களுக்கு இந்தியா அளித்துள்ள உறுதிப்பாட்டை நிறைவேற்ற தவறியுள்ளது - கலாநிதி தயான் ஜயதிலக்க தெரிவிப்பு
Published By: Digital Desk 3 19 Oct, 2025 | 12:40 PM
![]()
ஆர்.ராம்
40ஆண்டுகளுக்கு முன்பு இந்தியா வடக்கு மற்றும் கிழக்கு தமிழ் மக்களுக்காகத் திறந்துவிட்ட மாகாண அரசியல் வெளியை இந்திரா காந்தியின் சிறப்புத் தூதர் ஜி.பி. பார்த்தசாரதியின் இளம் உதவியாளராக இருந்த தற்போதைய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி. சுப்ரமணியம் ஜெய்சங்கர் உள்ளிட்ட அரசாங்கம் ஆதரிக்கும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க நிர்வாகத்தால் முடக்கப்படுவது இந்திய இராஜதந்திரத்தின் முரணாகும் என்று கலாநிதி தயான் ஜயதிலக்க தெரிவித்துள்ளார்.
மாகாண சபைகளுக்கான தேர்தல் தொடர்ச்சியாக தாமதிக்கப்பட்டு வரும் நிலைமை தொடர்பில் கருத்து வெளியிடும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
இலங்கை தொடர்பான ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் தீர்மானம், அதன் முகப்புரையில் அரசியல் அதிகாரப் பரவலாக்கல் குறித்த தனது உறுதிப்பாடுகளை நிறைவேற்றுமாறு இலங்கை அரசாங்கத்திற்கு அழைப்பு விடுப்பதாக குறிப்பிட்டுள்ளது. அது நல்லிணக்கம் மற்றும் மக்கள் அனைவரும் மனித உரிமைகளை முழுமையாக அனுபவிப்பதற்கு வழிவகுக்கும் என்றும் மாகாண சபைத் தேர்தல்களை நடத்துவது உட்பட, உள்ளூர் நிர்வாகத்தை மதிக்குமாறு அரசாங்கத்தை ஊக்குவிப்பதாகவும் குறிப்பிட்டுள்ளது.
மாகாண சபைத்தேர்தல்களை நடத்தவும் அத்தேர்தல் தடைப்பட்டிருப்பதற்கு காரணமாக இருக்கும் சட்ட விடயத்தினை தீர்க்கவும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையிலான நிர்வாகம் உறுதியளித்துள்ளது.
தற்போதுகூட, தமிழரசுக்கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியனின் தனிநபர் தீர்மானத்தின் மூலம் சட்டச் சிக்கலுக்கான தீர்வினைக் காணமுடியும்.
அதுமட்டுமன்றி, மாகாண சபைத் தேர்தல்களை நடத்துவதால் ஆட்சியாளர்களுக்கு நெருக்கடிகள் ஏற்படுத்தலாம் என்ற அச்சம் காணப்படலாம். ஆனால் அரசியல் ரீதியாக மிகவும் விலையுயர்ந்ததாகவும், சர்வதேச ரீதியாக அழுத்தங்கள் ஏற்படுத்தக்;கூடிய போர்க்காலப் பொறுப்புக்கூறல் பிரச்சினைகளில் காணப்படுகின்ற நெருக்கடிகளை குறைப்பதற்கு அதுவழிவகுக்கும். உதாரணமாக கூறுவதாக இருந்தால் அயர்லாந்தின் வெற்றிகரமான தேர்தல் முன்னெடுப்புக்களால் வெள்ளிக்கிழமை ஒப்பந்தத்தில் பொறுப்புக்கூறல் அம்சம் எதுவும் இருக்கவில்லை என்பதை கவனத்தில் கொள்ள வேண்டியுள்ளது.
இதேவேளை, சிங்கள மொழி ஊடகவியலாளர் சம்பத் தேசப்பிரிய, பெலவத்தையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள ஜே.வி.பி. தலைவர்கள் 13ஆவது திருத்தம் மற்றும் மாகாண சபைகளை ஒழிப்பதற்காக ஒரு சர்வஜன வாக்கெடுப்பு நடத்துவதற்கான யோசனையைப் முன்னெடுப்பதாகவும் அதற்காகவே மாகாணங்களுக்கான தேர்தலைத் தவிர்ப்பதாகவும் தகவல் வெளியிட்டுள்ளார்.
அதேநேரம், வடக்கு மற்றும் கிழக்கில் இந்திய முதலீட்டாளர்களுக்கு வழங்கப்பட்ட பெரிய பொருளாதார வாய்ப்புக்களைப் பயன்படுத்தி, இந்தியாவின் எதிர்ப்புகளை, தவிர்க்கலாம் என்றும் அதன் ஊடாக மேற்கத்திய நாடுகளின் எதிர்ப்புகளையும் நடுநிலையாக்க முடியும் என்றும் ஜே.வி.பி. நம்பலாம்.
ஆனால் உண்மையில் ஆட்சியாளர்களுக்கு உடனடியாக மாகாண தேர்தல் நடத்துவவதானது, தாமதமாக நடப்பதை விடச்சிறந்ததாக இருந்தாலும், சர்வஜன வாக்கெடுப்பு மூலம் அக்கட்டமைப்பை ஒழிப்பதானது, தேசிய மக்கள் சக்திக்கு கணிமான செல்வாக்கு இழப்பையே ஏற்படுத்தும்.
40 ஆண்டுகளுக்கு முன்பு இந்தியா வடக்கு மற்றும் கிழக்கு தமிழ் மக்களுக்காக திறந்துவிட்ட மாகாண அரசியல் வெளி இந்திரா காந்தியின் சிறப்புத் தூதுவராக இருந்த ஜி.பி. பார்த்தசாரதியின் இளம் உதவியாளராக இருந்த தற்போதைய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி.சுப்ரமணியம் ஜெய்சங்கர் உட்பட இந்திய அரசாங்கம் ஆதரிக்கும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க நிர்வாகத்தால் மூடப்படுவது இந்திய இராஜதந்திரத்தின் முரணாகும்.
ஒருவேளை தமிழ் மக்களுக்கான அரை-சுயாட்சி அரசியல் வெளியான மாகாண சபை முறைமையானது, இந்தியா, மற்றும் அநுரகுமார அரசாங்கத்தின் கூட்டு இலாபங்களை அடைவதற்காகவும் மூலோபாயத் தடயத்திற்காகவும் பண்டமாற்று செய்யப்பட்டிருக்கலாம்.
ஆனால் சீனா எப்போதும் இலங்கைக்கு அளித்த உறுதிமொழிகளை நிறைவேற்றியே உள்ளது. ஆனால் இந்தியா வடக்கு மற்றும் கிழக்கு தமிழ் மக்களுக்கு அதிகாரப் பரவலாக்கல் குறித்த அளித்த உறுதிப்பாட்டை நட்புரீதியான, நன்றியுள்ள அரசாங்கம் ஆட்சியில் இருந்தபோதிலும், அதனை நிறைவேற்றுவதற்கு தவறவிட்டதாகத் தெரிகிறது.
ஆகவே, தமிழர்களின் நகர்வு டெல்லி மற்றும் கொழும்பை விடுத்து துணைப்பிராந்திய அல்லது அதற்கும் அப்பாலாகச் செல்லும் போது, அநுரகுமாரவால் உருவாக்கப்பட்ட இந்திய இராஜதந்திரத்தால் புறக்கணிக்கப்பட்ட அரசியல் வெற்றிடத்தின் அபாயங்கள் வெளிப்படையாகத் தெரியும், அச்சமயத்தில் அதனை மாற்றியமைப்பதற்கான நிலைமை மிகவும் தாமதமாகியதாகவே இருக்கும்.
மேலும், தற்போதைய நிலையில் மாகாண சபைகள் அரச நிலங்களைப் பயன்படுத்துவதைக் கட்டுப்படுத்தாவிட்டாலும், மாகாண சபைகளின் முடக்கம், திருகோணமலையில் இனக்குழுக்களை இடம்பெயரச்செய்வது, பொருளாதார வாழ்வாதாரங்கள் பாதிப்படைச்செய்வது, மன்னாரில் சுற்றுச்சூழலுக்கு ஏற்படுத்தப்படும் பாதிப்பு உள்ளிட்ட விடயங்;கள் குறித்து இன, மத போராட்டங்கள் மாகாண சபைகளில் விவாதத்திற்கு வரவில்லை என்பதைக் குறிக்கிறது.
மாகாண சபைகள் தொடர்ந்து 'காணாமல் போனதால்' ஏற்பட்ட வெற்றிடம், தீவு முழுவதும் சமூகங்களின் மீது வெளிநாட்டு மற்றும் உள்ளுர் கூட்டு நிறுவனங்கள் நடத்தும் கொள்ளையை தடுத்து நிறுத்துவதற்கான இயலாமையை ஏற்படுத்தியுள்ளது என்றார்.
யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025
புலர் அறக்கட்டளையின் செயற்பாடுகள் தொடர்பான காணொளிகள்
கொலைசெய்யப்பட்ட ஊடகவியலாளர் நிமலராஜனின் 25 வது ஆண்டு நினைவு தின நிகழ்வு இன்று!
குவாண்டம் கணினி: கணக்கீட்டின் எதிர்கால புரட்சி!
யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025
யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025
ஐசிசி ஆடவர் ரி20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டித் தொடர்
ஐசிசி ஆடவர் ரி20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டித் தொடர்
2026 ஆடவர் ரி20 உலகக் கிண்ணத்தில் விளையாட நேபாளம், ஓமான் தகுதி
16 Oct, 2025 | 08:10 PM
![]()
(நெவில் அன்தனி)
இந்தியாவிலும் இலங்கையிலும் அடுத்த வருடம் கூட்டாக நடத்தப்படவுள்ள ஐசிசி ஆடவர் ரி20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் பங்குபற்றுவதற்கு நேபாளம், ஓமான் ஆகிய நாடுகள் தகுதிபெற்றுள்ளன.
ஆசிய பிராந்தியத்திலிருந்து மூன்றாவது நாடாக ஐக்கிய அரபு இராச்சியம் தகுதிபெறுவதற்கான வாயிலை நெருங்கிக்கொண்டிருக்கிறது.
ஓமானின் அல் அமீரத்தில் நடைபெற்றுவரும் ஆசிய - கிழக்கு ஆசிய பசுபிக் பிராந்திய ரி20 உலகக் கிண்ண தகுதிகாணின் சுப்பர் 6 சுற்று நிறைவடைவதற்கு முன்னரே நேபாளமும் ஓமானும் ரி20 உலகக் கிண்ணத்தில் விளையாடுவதை உறுதிசெய்துகொண்டுள்ளன.
இந்த இரண்டு அணிகளும் சுப்பர் 6 சுற்றில் முதல் மூன்று இடங்களுக்குள் வருவது உறுதிசெய்யப்பட்டுள்ளதை அடுத்தே அவை ரி20 உலகக் கிண்ணத்தில் பங்குபற்ற தகுதிபெற்றுள்ளன.
இப் பிராந்தியத்திலிருந்து மேலும் ஒரு அணி ரி20 உலகக் கிண்ணத்தில் விளையாட தகுதிபெறும்.
அல் அமீரத்தில் இன்று நடைபெற்ற சமோஆ உடனான போட்டியில் அமோக வெற்றியீட்டிய ஐக்கிய அரபு இராச்சியம் சுப்பர் 6 சுற்று அணிகள் நிலையில் 3ஆம் இடத்தில் இருக்கிறது.
ஓமானும் நேபாளமும் முதலிடத்தில் இருப்பதுடன் அவற்றின் நிலைகளை நிகர ஓட்ட வேகம் வேறுபடுத்துகிறது.
ஐக்கிய அரபு இராச்சியம் தனது அடுத்த சுப்பர் 6 சுற்று போட்டியில் ஜப்பானை நாளை எதிர்த்தாடவுள்ளது.
சுப்பர் சிக்ஸ் சுற்றில் கத்தாரும் பங்குபற்றுகிறது.
இந்தியாவிலும் இலங்கையிலும் அடுத்த வருடம் நடைபெறவுள்ள ஐசிசி ஆடவர் ரி20 உலகக் கிண்ணப் போட்டியில் வரவேற்பு நாடுகளாக இந்தியா, இலங்கை ஆகிய நாடுகளும் 2024 உலகக் கிண்ணத்தில் வரவேற்பு நாடுகளை விட முதல் 7 இடங்களைப் பெற்ற ஆப்கானிஸ்தான், அவுஸ்திரேலியா, பங்களாதேஷ், இங்கிலாந்து, தென் ஆபிரிக்கா, ஐக்கிய அமெரிக்கா, மேற்கிந்தியத் தீவுகள் ஆகிய நாடுகளும் ஐசிசி ரி20 தரவரிசைப் பிரகாரம் அயர்லாந்து, நியூஸிலாந்து, பாகிஸ்தான் ஆகிய நாடுகளும் ஐசிசி ரி20 உலகக் கிண்ணம் - 2026இல் நேரடியாக விளையாட தகுதிபெற்றன.
தகுதிகாண் சுற்றுகள் மூலம் கனடா (அமெரிக்க வலயம்), இத்தாலி மற்றும் நெதர்லாந்து (ஐரோப்பிய வலயம்), நமிபியா மற்றும் ஸிம்பாப்வே (ஆபிரிக்க வலயம்), நேபாளம் மற்றும் ஓமான் (ஆசிய வலயம்) ஆகியன ரி20 உலகக் கிண்ணத்தில் விளையாட தகதிபெற்றுள்ளன.
கடைசி அணியாக ஐக்கிய அரபு இராச்சியம் தகுதிபெறும் என நம்பப்படுகிறது.

குவாண்டம் கணினி: கணக்கீட்டின் எதிர்கால புரட்சி!
குவாண்டம் கணினி: கணக்கீட்டின் எதிர்கால புரட்சி! தெரிஞ்சுக்கணும், புரிஞ்சுக்கணும்!

கலைமதி சிவகுரு
நம்மால் பயன்படுத்தப்படும் கணினிகள் பொதுவாக Bit அடிப்படையில் இயங்குகின்றன. ஒரு பிட் என்றால் 0 அல்லது 1 என்ற இரண்டு நிலைகளில் மட்டுமே இருக்கும். ஆனால், குவாண்டம் கணினி என்பது க்யூபிட் (Qubit) அடிப்படையில் செயல்படுகிறது. க்யூபிட் என்பது ஒரே நேரத்தில் 0வும் 1வும் இருக்க முடியும் (இதற்கு Superposition என்கிறார்கள்). மேலும், இரண்டு க்யூபிட்கள் இடையே வினோதமான Entanglement எனும் தொடர்பு இருக்கும். இதனால் அவை ஒரே நேரத்தில் பெரும் அளவிலான கணக்கீடுகளை செய்யும். இதுவே குவாண்டம் கணினியை, சாதாரண கணினியை விட ஆயிரம் மடங்கு சக்திவாய்ந்ததாக மாற்றுகிறது.
எப்படி செயல்படுகிறது?
Superposition – ஒரு க்யூபிட் ஒரே நேரத்தில் பல நிலைகளில் இருக்கும். இதனால் ஒரே நேரத்தில் பல கணக்கீடுகள் செய்ய இயலும்.
Entanglement – இரண்டு க்யூபிட்கள் இணைந்தவுடன், ஒன்று மாறினால் இன்னொன்றும் உடனே மாறும். இதனால் தகவல் பரிமாற்றம் வேகமாகும்.
Quantum Gates – பாரம்பரிய கணினிகளில் “Logic Gates” பயன்படுத்தப்படும். குவாண்டம் கணினிகளில் “Quantum Gates” பயன்படுத்தப்படுகிறது.
பயன்பாடுகள்
குவாண்டம் கணினியின் சக்தி எதிர்காலத்தில் பல துறைகளில் புரட்சியை ஏற்படுத்தும்:
1. ரசாயனம் & மருந்து கண்டுபிடிப்பு
மூலக்கூறு/புரதங்களின் துல்லியமான எரிசக்தி நிலைகள், வினை பாதைகள், பைண்டிங் ஆஃபினிட்டி ஆகியவற்றை கணிக்கல். செயல்படும் விதம் VQE (Variational Quantum Eigensolver), UCC, QPE (Quantum Phase Estimation) போன்ற அல்காரிதம்.
பலன்: புதிய மருந்துகளை உருவாக்கும் போது மூலக்கூறு அமைப்புகளை விரைவாக கணக்கிட உதவும். NISQ கால கட்டத்தில் ஹைப்ரிட் (Classical+Quantum) முறைகள் ஆராய்ச்சியில் பயன்படும்.
2. ஆப்டிமைசேஷன் (திட்டமிடல், லாஜிஸ்டிக்ஸ், சப்ளை-செயின்)
ரோட்டிங், அட்டவணை அமைப்பு, பவர்-கிரிட் லோடு பாலன்சிங், வானூர்தி/ரயில் ஸ்லாட் ஒதுக்கீடு. செயல்படும் விதம் QAOA (Quantum Approximate Optimization Algorithm), QUBO மேப்பிங், குவாண்டம் அந்நீலிங்.
பலன்: செலவு/நேரம் குறைப்பு, பெரிய தேடல்-வெளியில் நல்ல தீர்வு வேகமாக. பைலட்-புரூஃப்-ஆஃப்-கான்செப்ட்கள்; உற்பத்தி தர நிலைக்கு வர Error-correction தேவை.
3. குவாண்டம்-சிமுலேஷன் (பொருட்வியல், உயர் ஆற்றல், காலநிலை)
காந்தப் பொருட்கள், சூப்பர் கண்டக்டர்கள், திரவ இதிர்புரை (turbulence) போன்ற சிக்கலான அமைப்புகள். செயல்படும் விதம் குவாண்டம் சர்க்கூட் அடிப்படையிலான சிமுலேஷன், Trotterization/Analog simulation.
பலன்: புதிய பொருட்கள், அதிக திறன் கொண்ட எரிசக்தி சேமிப்பு. முன்னேற்றம் வேகமாக இருப்பினும் fault-tolerant கணினி கிடைத்தால் வலிமையான ஜம்ப்.
4. கோட்பாடு (Cryptography) – தற்போதைய கடவுச்சொல் முறைகளை உடைத்துவிடும் திறன் கொண்டது. அதேசமயம், புதிய பாதுகாப்பான குறியாக்க முறைகளுக்கும் வழி வகுக்கும்.
5. செயற்கை நுண்ணறிவு (AI) – மெஷின் லெர்னிங் மற்றும் தரவு பகுப்பாய்வை மிக வேகமாகச் செய்யும்.
6. விண்வெளி ஆராய்ச்சி – பெரிய அளவிலான சிக்கலான கணக்குகளை எளிதாகக் கணக்கிட உதவும்.
7. சுற்றுச்சூழல் – வானிலை முன்னறிவிப்பு, இயற்கை பேரிடர் கணிப்பு ஆகியவற்றில் துல்லியத்தைக் கூட்டும்.
சவால்கள்:
குவாண்டம் கணினி இன்னும் முழுமையாக பயன்பாட்டுக்கு வரவில்லை. சில சவால்கள் உள்ளன. க்யூபிட்களை நிலைத்திருக்கச் செய்வது கடினம் (Quantum Decoherence). இயங்க அதிக குளிர்ச்சியான சூழல் தேவைப்படுகிறது (பெரும் அளவிலான “super-cooling”). செலவுகள் மிக அதிகம்.
எதிர்காலம்:
இப்போது Google, IBM, Microsoft, Intel போன்ற பெரிய நிறுவனங்கள் குவாண்டம் கணினியை உருவாக்க ஆராய்ச்சி செய்து வருகின்றன. ஒரு நாள் குவாண்டம் கணினி முழுமையாக வந்துவிட்டால், கணக்கீட்டின் வேகம் கணித்துக்கூட முடியாத அளவுக்கு அதிகரிக்கும். பல பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் “புதிய யுகம்” தொடங்கும்.
குவாண்டம் கணினி: கணக்கீட்டின் எதிர்கால புரட்சி!
ஒரே ரத்த பரிசோதனை மூலம் 50 வகை புற்றுநோய்களை கண்டறியலாம் - புதிய ஆய்வில் தகவல்

பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, கோப்புப்படம்
கட்டுரை தகவல்
ஃபெர்குஸ் வால்ஷ்
ஆசிரியர், மருத்துவம்
9 மணி நேரங்களுக்கு முன்னர்
புற்றுநோயின் ஐம்பதிற்கும் மேற்பட்ட வகைகளை கண்டறிய உதவும் அற்புதமான ரத்தப் பரிசோதனை ஒன்று, நோயறிதலை விரைவுபடுத்த உதவும் என புதிய ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.
வட அமெரிக்காவில் நடத்தப்பட்ட சோதனை ஒன்றின் முடிவு, இந்தப் பரிசோதனையால் பல வகையிலான புற்றுநோய்களை அடையாளம் காண முடிந்தது என்பதைக் காட்டுகிறது. புற்றுநோய் ஏற்படலாம் என கணிக்கப்பட்டவர்களுக்கு முக்கால்வாசிப் பேருக்கு எந்தவிதமான ஸ்கிரீனிங்கும் இல்லை.
பாதிக்கும் மேற்பட்ட புற்றுநோய்கள் ஆரம்ப கட்டத்திலேயே கண்டறியப்பட்டன, அதாவது அவற்றுக்கான சிகிச்சை எளிதானவை மற்றும் குணப்படுத்தக்கூடியவை.
அமெரிக்காவின் கிரெயில் மருந்து நிறுவனம் கேலரி சோதனையை வடிவமைத்துள்ளது.

பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, கோப்புப்படம்
அமெரிக்கா மற்றும் கனடாவைச் சேர்ந்த 25,000 பேரிடம் ஒரு வருடத்திற்கும் மேலாக மேற்கொள்ளப்பட்ட இந்த சோதனையில், கிட்டத்தட்ட நூறில் ஒருவருக்கு புற்றுநோய் இருப்பதாக தெரியவந்தது. 62% பேருக்கு பின்னர் புற்றுநோய் உறுதி செய்யப்பட்டது.
இந்த சோதனை, புற்றுநோய் பரிசோதனைக்கான அணுகுமுறையை "அடிப்படையில் இருந்தே மாற்றக்கூடும்" என தரவுகள் தெரிவிப்பதாக ஓரேகான் ஹெல்த் & சயின்ஸ் பல்கலைக்கழகத்தின் கதிர்வீச்சு மருத்துவத்தின் இணைப் பேராசிரியரான முன்னணி ஆராய்ச்சியாளர் டாக்டர் நிமா நபவிசாதே கூறினார்.
பல வகையான புற்றுநோய்களை ஆரம்பத்திலேயே கண்டறிவது, முழுமையாக குணப்படுத்தவோ அல்லது சிகிச்சையளிப்பதற்கான வாய்ப்புகளை அதிகப்படுத்தவோ உதவும் என்று அவர் கூறுகிறார்.
இந்த பரிசோதனையில் எதிர்மறையான முடிவு வந்தவர்களில் 99%க்கும் அதிகமானவர்களுக்கு புற்றுநோய் இல்லை என்று இந்த சோதனை சரியாக கண்டறிந்தது.
மார்பகம், குடல் மற்றும் கர்ப்பப்பை வாய்ப் பரிசோதனையுடன் இந்த பரிசோதனையும் இணைந்தபோது, கண்டறியப்பட்ட புற்றுநோய் வகைகளின் எண்ணிக்கை ஏழு மடங்கு அதிகரித்தது.
அதிலும் கண்டறியப்பட்ட புற்றுநோய்களில் முக்கால்வாசி, கருப்பை, கல்லீரல், வயிறு, சிறுநீர்ப்பை மற்றும் கணையப் புற்றுநோய் போன்ற இதுவரை எந்தப் பரிசோதனை செயல் திட்டமும் இல்லாதவை என்பது குறிப்பிடத்தக்கது.
பரிசோதிக்கப்பட்டவர்களில் பத்தில் ஒன்பது பேருக்கு புற்றுநோயின் மூலத்தை இரத்தப் பரிசோதனை சரியாகக் கண்டறிந்தது.
இந்த முடிவுகள், புற்றுநோயை முன்கூட்டியே கண்டறிவதில் ரத்தப் பரிசோதனை முக்கிய பங்கு வகிக்கக்கூடும் என்பதைக் குறிக்கிறது.
ஆனால், புற்றுநோயால் ஏற்படும் இறப்புகளை இந்த ரத்தப் பரிசோதனை குறைக்கிறதா என்பதைக் காட்ட கூடுதல் சான்றுகள் தேவை என்று இந்த ஆராய்ச்சியில் ஈடுபடாத விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, கோப்புப்படம்
லண்டனில் உள்ள தி இன்ஸ்டிடியூட் ஆஃப் கேன்சர் ரிசர்ச் நிறுவனத்தின் மருத்துவப் புற்றுநோய் மரபியல் பேராசிரியர் கிளேர் டர்ன்புல்லின் கருத்துப்படி, "கேலரியின் ஆரம்ப கட்ட நோய் கண்டறிதல், இறப்பு தொடர்பான விஷயத்தில் நேர்மறையாக உதவுகிறதா என்பதை நிறுவ, இறப்பை இறுதிப் புள்ளியாகக் கொண்ட ஆய்வுகளின் தரவு அவசியம்."
140,000 NHS நோயாளிகளை உள்ளடக்கிய மூன்று ஆண்டு சோதனையின் முடிவுகள், இங்கிலாந்தில் அடுத்த ஆண்டு வெளியிடப்படும்.
சோதனையின் முடிவுகள் சாதகமாக அமைந்தால், மேலும் பத்து லட்சம் பேருக்கு சோதனைகளை விரிவுபடுத்துவதாக தேசிய சுகாதார சேவை (NHS) முன்பு கூறியிருந்தது.
கிரெயிலின் பயோஃபார்மாவின் தலைவர் சர் ஹர்பால் குமார் இதனை "பரிசீலனைக்குரிய சிறப்பான முடிவுகள்" என்று அழைத்தார்.
பிபிசி ரேடியோ 4-இன் டுடே நிகழ்ச்சியில் பேசிய ஹர்பால் குமார், "புற்றுநோயால் ஏற்படும் பெருமளவிலான இறப்புக்குக் காரணம், புற்றுநோய்களை மிகவும் தாமதமாகக் கண்டுபிடிப்பது தான்" என்றார்.
பல புற்றுநோய்கள் "ஏற்கனவே மிகவும் முற்றிய நிலையில்" இருக்கும் போது கண்டறியப்படுகின்றன. எனவே, "மிகவும் பயனுள்ள மற்றும் குணப்படுத்தக் கூடிய சிகிச்சைகளைப் பயன்படுத்த நமக்கு வாய்ப்பு கிடைக்கும்போது, முன்கூட்டியே கண்டறிதலுக்கு மாறுவதே இந்தத் திட்டத்தின் நோக்கம்" என்று விளக்கினார்.
"பிரிட்டன் தேசிய ஸ்கிரீனிங் கமிட்டி, ஆதாரங்களை மதிப்பாய்வு செய்வதிலும், இந்த சோதனைகளை தேசிய சுகாதார சேவை ஏற்றுக்கொள்ள வேண்டுமா என்பதை தீர்மானிப்பதிலும் முக்கிய பங்கு வகிக்கும்" என்று அவர் மேலும் கூறினார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
ஹமாஸ் தாக்குதலை வழிநடத்தியதாகக் கூறப்படும் நபர் அமெரிக்காவில் கைது
18 Oct, 2025 | 01:39 PM
![]()
இஸ்ரேல் மீது 2023 அக்டோபர் 7ஆம் திகதி ஹமாஸ் நடத்திய தாக்குதலுக்குத் தலைமை தாங்கியதாகக் கூறப்படும் மஹ்மூத் அமீன் யாகூப் அல்-முஹ்தாதி என்ற நபர் அமெரிக்காவில் சட்டவிரோதமாகத் தங்கியிருந்த குற்றச்சாட்டின் பேரில் அமெரிக்க விசாரணைக் குழுவால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இஸ்ரேல் மீதான ஹமாஸ் தாக்குதலின்போது, அமெரிக்கர்கள் மீதான கொலை மற்றும் கடத்தல் குறித்த விசாரணைகளுக்காக அலெக்ஸாண்ட்ரியா எம். தோமன் மேற்பார்வையில் விசாரணைக் குழு அமைக்கப்பட்டது.
ஒக்டோபர் 7 தாக்குதலின்போது ஹமாஸ் படையில் மஹ்மூத் இருந்ததாகக் கூறப்படுகிறது. இவர் அமெரிக்காவில் தங்கியிருப்பது விசாரணையின் போது தெரியவந்தது.
அமெரிக்க விசா விண்ணப்பத்தில், தான் எந்தவொரு பயங்கரவாத நடவடிக்கையிலும் ஈடுபடவில்லை என்றும், நிரந்தரக் குடியிருப்பாளர் என்றும் மஹ்மூத் பொய்கூறி விசா பெற்றுள்ளார். இதன் மூலம், அவர் விசா பெறுவதிலும் மோசடி செய்துள்ளார்.
விசா மோசடி மற்றும் வெளிநாட்டுப் பயங்கரவாத அமைப்புக்கு ஆதரவளிக்கச் சதித் திட்டம் தீட்டியதாக மஹ்மூத் கைது செய்யப்பட்டுள்ளார்.
மஹ்மூத் அமீன் யாகூப் அல்-முஹ்தாதி என்ற பெயரிலும், அதே வயதிலும் மற்றொரு நபர் இருப்பதாகவும், அவரும் கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.