Aggregator

யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026

2 weeks 1 day ago
நாளை ஞாயிறு 08 பெப் பிரித்தானிய நேரப்படி மூன்று போட்டிகள் நடைபெறவுள்ளன. யாழ் கள போட்டியாளர்களின் கணிப்புகள் கீழே: 4) முதல் சுற்று குழு D:ஞாயிறு 08 பெப்: 5:30 AM, சென்னை, ஆப்கானிஸ்தான் எதிர் நியூஸிலாந்து AFG எதிர் NZ இருவர் மாத்திரம் ஆப்கானிஸ்தான் அணி வெல்வதாகவும் மற்றைய 21 பேர் நியூஸிலாந்து அணி வெல்வதாகவும் கணித்துள்ளனர். ஆப்கானிஸ்தான் வாதவூரான் ரசோதரன் இப்போட்டியில் போட்டியில் யாருக்கு முட்டை கிடைக்கும்? 5) முதல் சுற்று குழு C:ஞாயிறு 08 பெப்: 9:30 AM, வாங்கெடே, இங்கிலாந்து எதிர் நேபாளம் ENG எதிர் NEP 22 பேர் இங்கிலாந்து அணி வெல்லும் எனவும் ஒரே ஒருவர் மாத்திரம் நேபாளம் அணி வெல்லும் எனவும் கணித்துள்ளனர். நேபாளம் ரசோதரன் இந்தப் போட்டியில் @ரசோதரன் புள்ளிகள் எடுக்கும் யோகம் இருக்கின்றதா? 6) முதல் சுற்று குழு B:ஞாயிறு 08 பெப்: 1:30 PM, கொழும்பு (RPS), சிறிலங்கா எதிர் அயர்லாந்து SL எதிர் IRE 21 பேர் சிறிலங்கா அணி வெல்லும் எனவும் இருவர் மாத்திரம் அயர்லாந்து அணி வெல்லும் எனவும் கணித்துள்ளனர். அயர்லாந்து நிலாமதி நந்தன் இந்தப் போட்டியில் யாருக்குப் புள்ளிகள் கிடைக்கும்?

யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026

2 weeks 1 day ago
இந்த‌ பிஞ்சு முக‌த்தை எப்ப‌ ச‌ர்வ‌தேச‌ப் போட்டியில் பார்க்கிற‌து................இந்த‌ உல‌க‌ கோப்பையில் விளையாட‌ விட்டால் கூட‌ பெடிய‌ன் ப‌ட்டைய‌ கில‌ப்புவார்..................... அதிச‌ய‌ பிற‌வி.....................எதிர்கால‌ கிரிக்கேட்டின் க‌ட‌வுள்😍🙏......................................

யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026

2 weeks 1 day ago
பாப‌ரிட‌ம் க‌ப்ட‌ன் ப‌த‌வி கொடுக்க‌ப் ப‌ட்டு திரும்ப‌ ப‌றிக்க‌ப் ப‌ட்ட‌து.............பாப‌ர் ரென்ச‌ன் பாட்டி................க‌ப்ட‌னாய் செய‌ல் ப‌ட்ட‌ கால‌த்தில் ச‌க‌ வீர‌ர்க‌ள் சிறு பிழை விட்டாலும் கோவ‌ப் ப‌டுவார்..............வீர‌ர்க‌ளை வ‌ழி ந‌ட‌த்த‌ தெரியாத‌ க‌ப்ட‌ன்................... பாப‌ர‌ நான் ஒரு நாள் தொட‌ர் ம‌ற்றும் டெஸ்ட் தொட‌ருக்கு குறை சொல்ல‌ மாட்டேன்..................பாப‌ர் 20ஓவ‌ர் விளையாட்டுக்கு அவ‌ரின் விளையாட்டு போக்கை மாற்ற‌னும் இல்லையேன் அணிக்கு தான் பாதிப்பு இப்ப‌த்த‌ இள‌ம் பாக்கிஸ்தான் வீர‌ர்க‌ளில் பாப‌ர் தான் அதிக‌ செஞ்சேரி அடிச்ச‌ வீர‌ர்..................ம‌ற்ற‌வ‌ர்க‌ள் பாப‌ர் அள‌வுக்கு ர‌ன்ஸ் அடிக்க‌ வில்லை என‌க்கு பாப‌ர் மீது சிறு வெறுப்பு கூட‌ இல்லை..............பாப‌ர் 20ஓவ‌ர் விளையாட்டில் அதிர‌டி ஆட்ட‌த்தை கையில் எடுக்க‌னும்.................. ஆமைவேக‌ ஆட்ட‌ம் எதிர் அணிக்கு சாத‌க‌மாய் அமைந்து விடும்..............நான் என்ன‌ சொல்ல‌ வ‌ருகிறேன் என‌ இப்ப‌ உங்க‌ளுக்கும் செம்பாட்ட‌ன் அண்ணாக்கும் புரிந்து இருக்கும் என‌ ந‌ம்புகிறேன்😁.................

யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026

2 weeks 1 day ago
இது ஒரு நகைசுவைக்காக (விளையாட்டு திரி கலகலப்பிற்காக), டோனி = பாபர் பெண் = செம்பாட்டான் / வீரப்பையன் ஆண் = செம்பாட்டான் / வீரப்பையன் இந்த காணொளி ஒரு முன் தயாரிப்பிலான காணொளி போல உள்ளது, அவர்களும் நகைசுவைக்காகவே இதனை தயாரித்துள்ளார்கள்.🤣 விளையாட்டுத்திரியில் எந்த மனஸ்தாபமும் இல்லாமல் நகைசுவையாக கடந்து போவோம்.

யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026

2 weeks 1 day ago
பாபர் சிறந்த விளையாட்டு வீரர்தான், தெரியாத்தனமாக நான் தொடங்கினாலும் வீரப்பையன் தான் அதனை அடுத்த கட்டத்திற்கு எடுத்து சென்றவர் என்னை விடுங்கோ அவரை பிடியுங்கோ. பி பி எல் போட்டியில் பாபர் ஓட்டம் அடிக்க முடியாமல் தினறும் போது பந்தை நேராக அடித்து விட்டு ஆபத்தான ஓட்டம் எடுப்பார், அவருக்கு இணையாக விளையாடுபவரும் பந்து தனக்கு பின்னே போவதால் முறைப்படி பாபரின் அழைப்பு என்பதாலும் ஆபத்தான பக்கத்திற்கு வருவது பாபர் என்பதாலும் பந்தை பாராமல் ஓடுவார்கள், பந்தை பெறுபவர்கள் பாபரை விட்டு விட்டு பாதுகாப்பான பக்கத்திற்கு செல்லும் வீரரை இலக்கு வைப்பார்கள். இதனை போட்டி திட்டமிடலிலேயே செய்வார்கள் போலுள்ளது, இன்றைய போட்டியிலும் பஃர்கம்; பாபரின் ஆபத்தான ஓட்டத்திற்கு ஓடிய போது நெதர்லாந்து வீரர்கள் பாபரை விட்டு விட்டு பஃர்கத்தின இலக்கு வைத்தார்கள், தப்பிவிட்டார். பி பி எல் இல் விளையாடிதுடன் ஒப்பிடும் போது இன்றைய விளையாட்டில் முன்னேற்றம் தெரிகிறது போட்டி தொடரும் போது இவர் சிறப்பாக செயற்பட வாய்ப்புள்ளது, அத்துடன் இந்த ஆரம்ப போட்டிகளில் சிறிய அணியுடன் விளையாடுவது அவருக்கான கால அளவினை கொடுக்கும் என நினைக்கிறேன். ஆனாலும் அக்ரம் பாபரின் ஆட்டம் பற்றி குறிப்பிட்ட விடயம்: பாபர் மைதானத்திற்குள் வந்த போது 2 விக்கெட் மட்டும் இழந்த நிலையில் ஏறத்தாழ 10 ஓட்ட விகிதத்தில் இருந்த போதே கூறினார், பாபர் அடிக்க தொடங்க வேண்டும் இல்லாவிட்டால் தீடீரென 2 விக்கெட்டுக்கள் இழந்தால் எடுக்க வேண்டிய ஓட்ட விகிதம் 8 ஆகிவிடும் என கூறினார், அபோது பாகிஸ்தான் எடுக்க வேண்டிய ஓட்ட விகிதம் 6 களில் இருந்தது. பாபர் சிறந்த விளையாட்டு வீரர், நிச்சயமாக ஒரு வெற்றிக்கான வீரராக வெகு விரைவில் தயாராகிவிடுவார் என நம்புகிறேன்.

யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026

2 weeks 1 day ago
இன்றைய மூன்றாவது போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி சிறந்த தொடக்கத்துடன் ஆரம்பித்தாலும் நட்சத்திர வீரர்கள் தொடர்ச்சியாக விக்கெட்டுகளை இழந்ததனால் ஒரு கட்டத்தில் 6 விக்கெட் இழப்பிற்கு 77 ஓட்டங்களோடு இருந்தது. எனினும் சூர்யகுமார் யாதவின் ஆட்டமிழக்காமல் அதிரடியாக எடுத்த 84 ஓட்டங்களுடன் இறுதியில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 161 ஓட்டங்கள் எடுத்திருந்தது. பதிலுக்குத் துடுப்பாடிய ஐக்கிய அமெரிக்கா அணி தொடர்ச்சியாக விக்கெட்டுகள் சரிந்ததாலும் வேகமாகப் பின்தொடர முடியாததாலும் இறுதியில் 8 விக்கெட்டுகளை இழந்து 132 ஓட்டங்களை மாத்திரமே எடுக்கமுடிந்தது. முடிவு: இந்திய அணி 29 ஓட்டங்களால் வெற்றியீட்டியது அனைவரும் இந்திய அணி வெல்லும் எனக் கணித்தமையால் தலா இரு புள்ளிகள் கிடைக்கும்.

யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026

2 weeks 1 day ago
வெஸ்சின்டீஸ் எதிர் ஸ்கொட்லாந் விளையாட்டும் விறுவிறுப்பாய் போச்சு நான் நினைச்சேன் வெஸ்சின்டீஸ் அணி ஆப்பு வைக்க‌ போகின‌ம் என‌...............காட்டிக் விக்கேட் எடுத்த‌ கையோட‌ வெற்றிய‌ உறுதி செய்து விட்ட‌து வெஸ்சின்டீஸ் அணி..........................

நானுஓயாவில் பாடசாலை மாணவியை மிருகத்தனமாக தாக்கிய ஆசிரியர்

2 weeks 1 day ago
மாணவியை தாக்கிய ஆசிரியர் கைது - நானுஓயாவில் சம்பவம் 07 Feb, 2026 | 01:30 PM நானுஓயாவில் பாடசாலை மாணவியை தாக்கிய ஆசிரியர் பொலிஸாரால் வெள்ளிக்கிழமை (06) இரவு கைது செய்யப்பட்டுள்ளார். நுவரெலியா கல்வி வலயத்திற்குட்பட்ட நானுஓயா நகரில் இயங்கும் பாடசாலை ஒன்றில் மாணவி ஒருவரை ஆசிரியர் தாக்கியதில் பாதிப்படைந்த மாணவி வியாழக்கிழமை (05) நானுஓயா ஆரம்ப வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று மேலதிக சிகிச்சைக்காக நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்நிலையில், தாக்குதல் இடம்பெற்று இரண்டு நாட்களின் பின் நானுஓயா பொலிஸாரால் குறித்த ஆசிரியரை கைது செய்யப்பட்டுள்ளார். மேலதிக விசாரணைகளின் பின் குறித்த ஆசிரியரை இன்று சனிக்கிழமை (07) நுவரெலியா மாவட்ட நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மேலும் ஆசிரியர் தாக்கியதில் மாணவிக்கு அடிகாயங்கள் மற்றும் உட்காயங்கள் ஏற்பட்டு தானாகவே சிறுநீர் கசிவு ஏற்பட்டுள்ளது. தரம் 08 ஆம் வகுப்பில் கல்வி கற்கும் மாணவி ஒருவரே இவ்வாறு ஆசிரியரால் தாக்கப்பட்டுள்ளார். எனினும் வெள்ளிக்கிழமை குறித்த மாணவி பாடசாலைக்கு செல்ல வில்லை எனவும் தொடர்ந்து தலை வலி ,தலைச்சுற்று குமட்டல் போன்றவை அதிகமாக உள்ளதால் நுவரெலியா மாவட்ட பொது வைத்திய சாலையில் தங்கியிருந்து சிகிச்சை பெற்று வருவதாக பெற்றோர் தெரிவித்தனர். பாடசாலை முடிந்து வீடு திரும்பிய மாணவியிடம் பெற்றோர் விசாரித்த போது, நடந்தவற்றை கூறி தனது அடிகாயங்களையும் உட்காயங்களையும் காட்டியுள்ளார். தொடர்ந்து மாணவியை வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லவும் பொலிஸ் நிலையத்தில் மாணவி மூலம் முறைப்பாட்டை பதிவு செய்யவும் நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ளனர். குறித்த சம்பவம் குறித்து நானுஓயா பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர் . https://www.virakesari.lk/article/238074

யாழ்.போதனாவில் “நாள் சத்திர சிகிச்சை நிலையம்” ஆரம்பிப்பு!

2 weeks 1 day ago
யாழ். போதனாவில் "நாள் சத்திர சிகிச்சை நிலையம்" திறந்து வைப்பு 07 Feb, 2026 | 11:33 AM யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் "யாழ்ப்பாணம் - நாள் சத்திர சிகிச்சை நிலையம்" வெள்ளிக்கிழமை (06) திறந்து வைக்கப்பட்டுள்ளது. யாழ்.போதனா வைத்தியசாலை மற்றும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவபீடம் ஆகியவற்றின் கூட்டு முயற்சியில் இந்த யாழ்ப்பாணம் நாள் சத்திரசிகிச்சை நிலையம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவபீடம், போதனா வைத்தியசாலை மற்றும் சுகாதார அமைச்சு ஆகியவற்றுடன் இணைந்து சர்வதேச அமைப்புகளான IMHO, JMFOA மற்றும் புலம்பெயர் உறவுகளின் ஆதரவுடன் இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. ஆரம்ப விழாவில் சுகாதார அமைச்சின் பிரதிப் பணிப்பாளர் நாயகம், போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் த. சத்தியமூர்த்தி, மருத்துவபீடப் பீடாதிபதி பேராசிரியர் இ.சுரேந்திரகுமாரன் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர். பகல்நேர அறுவை சிகிச்சை (Day Surgery) என்பது ஒரு நோயாளி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, அறுவை சிகிச்சை செய்துகொண்டு, அதே நாளில் ( 24மணித்தியாலங்களுக்குள் ) வீடு திரும்புவதைக் குறிக்கும். இதனைத் தமிழில் "நாள் சத்திரசிகிச்சை" அல்லது "அன்றே வீடு திரும்பும் அறுவை சிகிச்சை முறை" என்று அழைப்பார்கள். இதனால் நோயாளிகளுக்கு தங்குமிடம் தேவையில்லை நோயாளி இரவு முழுவதும் மருத்துவமனையில் தங்கியிருக்க வேண்டிய அவசியம் இல்லை. நோயாளி தனது வீட்டிலேயே தங்கி ஓய்வெடுப்பதால் மனதளவில் விரைவாகக் குணமடைய முடிகிறது. மருத்துவமனையில் தங்கும் கட்டணங்கள் இல்லாததால் இது சிக்கனமான முறையாகும். பொதுவாக நுண்துளை அறுவை சிகிச்சை (Laparoscopy) போன்ற நவீன முறைகள் மூலம் இது செய்யப்படுகிறது. மருத்துவமனையில் நீண்ட நேரம் தங்கியிருக்காததால், பிற நோய்த்தொற்றுகள் ஏற்படும் வாய்ப்பு குறைகிறது. இது போன்ற நிலையங்கள் (JDSC போன்றவை) சிறிய மற்றும் நடுத்தர அளவிலான அறுவை சிகிச்சைகளை மிக வினைத்திறனாக மேற்கொள்ள உதவுகின்றன. இது வெறும் ஆரம்பம் மட்டுமே! எதிர்காலத்தில் மருத்துவ சுற்றுலா (Medical Tourism) மற்றும் விரிவான சிகிச்சை முறைகளை நோக்கி எமது வடக்கு மாகாணத்தின் சுகாதாரத் துறை அடுத்த கட்டத்திற்கு நகர்கிறது என வைத்தியசாலை நிர்வாகம் தெரிவித்துள்ளது. https://www.virakesari.lk/article/238059