Aggregator
தன்னறம்
13 ஐ நடைமுறைப்படுத்திக் காண்பிக்குமாறு சிங்கள தலைவர்களை வல்லரசுகள் வற்புறுத்துமா?
தாமதமாக வந்த விஜய் தான் காரணம்..
தாமதமாக வந்த விஜய் தான் காரணம்..
தாமதமாக வந்த விஜய் தான் காரணம்..
பேரிச்சம்பழம் நல்லதா?கெட்டதா?
தாமதமாக வந்த விஜய் தான் காரணம்..
தாமதமாக வந்த விஜய் தான் காரணம்..
யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025
Muslim Homeguard Attacks on Tamil Civilians in Sri Lanka
யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025
Books on Tamil Eelam Liberation Struggle aka Sri Lankan Civil War
தாமதமாக வந்த விஜய் தான் காரணம்..
யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025
தீபாவளி துளிகள்!
தீபாவளி துளிகள்!
தீபாவளித் துளிகள்!
************************
தீப ஒளியில் இருளகன்றது குடிசை எங்கும் வெளிச்சம்
அடுப்புக்குள் பூனை கிடப்பது தெரிந்தது.
தீபாவளி எப்போது வருமென காத்துக் கிடந்தார்கள் குழந்தைகள்
அடுத்த புது உடுப்புக்காக.
விற்கும் விலையை இருமடங்காக்கி பாதிவிலைக்கு
தருவதாக கொடுக்கிறார்கள் கடைக்காரர்கள்.
நரகாசூரனை அழித்த நாளென கொண்டாடுகிறார்கள்
உயிரோடே இருக்கிறான் போதைப்பொருள் அசுரனாக.
தீபாவளி கொண்டாட்டத்துக்காக பழய உடுப்புகளை
களட்டி வீசுகிறார்கள் பாவம் ஆடு மாடுகள்.
கோயில்களை விடவும் நிரம்பி வழிகிறது மக்கள் கூட்டம்
மதுக்கடை வாசல்களில்.
ஆலயங்களுக்கு எல்லா பூக்களும் எடுத்து செல்கிறார்கள்
ஆனால் செவ்வந்தியை தவிர்த்து.
பெற்றோலுக்கு பதிலாக மது ஊற்றி ஓடும் வாகனங்கள்
பயணிகள் எச்சரிக்கை.
தபால் காரர்களிடமிருந்து தீபாவளி காட்டுகளை
கைபேசிகள் பறித்தெடுத்துவிட்டன.
தீபாவளி இனிப்புகளும் பலகாரங்களும் இப்போது அம்மாக்கள்
செய்வதில்லை ஆயாக்கள் செய்கின்றார்கள் கடைகளில்.
அன்புடன் -பசுவூர்க்கோபி.
“எல்லோர் வாழ்விலும் இருள் அகன்று ஒளி பிறக்க இனிய நல் தீபாவளி நல் வாழ்த்துகள்”