Aggregator
"மூன்று கவிதைகள் / 14"
"மூன்று கவிதைகள் / 14"
"மூன்று கவிதைகள் / 14"
'புகைப்படக் கவிதை'
தோற்றத்தில் பெரியவனே - தும்பிக்கை கொண்டவனே
ஆற்றலில் பலமானவனே - நம்பிக்கைத் தோழனே
மதம் பிடித்து - சிலவேளை அலைந்தாலும்
மதம் [சமயம்] உன்னிடம் - ஒருவேளையும் இல்லையே!
[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,
அத்தியடி, யாழ்ப்பாணம்]
-------------------------------------------
'மலைமுடியில் பனியழகு மனங்கவரும் இயற்கையழகு'
மலைமுடியில் பனியழகு - மனங்கவரும் இயற்கையழகு
மகளிர் வடிவத்தையும் - மகிமையிழக்கச் செய்து
மடவரலின் அன்னநடையையும் - மறைத்து விடுமே!
கொடுமுடியில் மஞ்சுபெய்ய - கொடிகளில் வெண்மைபடர
கொடிச்சியின் எழிலையும் - கொன்று மங்கலாக்கி
கொற்றவையின் கவினையும் - கொடுமையாய் மாற்றுமே!
[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,
அத்தியடி, யாழ்ப்பாணம்]
-------------------------------------------
'திசையறியாத மனிதர்கள்'
அநீதி பாகுபாடு இரண்டிலும் தவித்து
சோற்றுக்கும் வீட்டுக்கும் வழிகள் அற்ற
அகதிகளே திசையறியாத மனிதர்கள்
[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,
அத்தியடி, யாழ்ப்பாணம்]
துளி/DROP: 1939 ["மூன்று கவிதைகள் / 14"
https://www.facebook.com/groups/978753388866632/posts/32806741562307734/?
இத்தாலி – இலங்கை இடையில் சாரதி அனுமதிப்பத்திரங்களை பரஸ்பரம் அங்கீகரிப்பதற்கான ஒப்பந்தம் கைச்சாத்து!

இத்தாலி – இலங்கை இடையில் சாரதி அனுமதிப்பத்திரங்களை பரஸ்பரம் அங்கீகரிப்பதற்கான ஒப்பந்தம் கைச்சாத்து!
இத்தாலி மற்றும் இலங்கைக்கு இடையில் சாரதி அனுமதிப்பத்திரங்களை பரஸ்பரம் அங்கீகரிப்பதற்கான இருதரப்பு ஒப்பந்தம் நேற்று (12) இத்தாலியின் ரோம் நகரில் கையெழுத்திடப்பட்டு புதுப்பிக்கப்பட்டுள்ளதாக வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.
இலங்கை அரசாங்கம் சார்பில் இத்தாலிக்கான இலங்கைத் தூதுவர் சத்யா ரொட்ரிகோவும், இத்தாலி அரசாங்கம் சார்பில் வெளிவிவகார மற்றும் சர்வதேச ஒத்துழைப்பு தொடர்பான பிரதி அமைச்சரும் அரச செயலாளருமான மரியா திரிபோடியும் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.
கடந்த 2021 ஆம் ஆண்டில் இந்த ஒப்பந்தம் காலாவதியாகியிருந்த நிலையில், அது முதல் இரு நாடுகளின் மோட்டார் வாகனப் போக்குவரத்து அதிகாரிகளுக்கிடையில் ஒப்பந்தத்தைப் புதுப்பிப்பது குறித்து இடம்பெற்ற பேச்சுவார்த்தைகள் நிறைவுபெற்றதைத் தொடர்ந்து இக்கையெழுத்திடல் இடம்பெற்றுள்ளது.
இந்தச் சாரதி அனுமதிப்பத்திர ஒப்பந்தத்தின் மூலம், இரு நாடுகளிலும் நிரந்தர வதிவிடத்தைப் பெற்றுக்கொண்ட நபர்கள் தமது செல்லுபடியான சாரதி அனுமதிப்பத்திரத்தை மாற்றிக்கொள்ள வசதி அளிக்கப்படுகிறது.
இந்த ஒப்பந்தம் முதன்முறையாக 2011 ஆம் ஆண்டு இலங்கைக்கும் இத்தாலிக்கும் இடையில் கையெழுத்திடப்பட்டதோடு, 2021 இல் காலாவதியாவதற்கு முன்னதாக 2016 இல் புதுப்பிக்கப்பட்டிருந்தது.
இதற்கமைய ஒப்பந்தம் புதுப்பிக்கப்பட்டதன் மூலம், குறித்த நாடுகளில் வசிக்கும் பிரஜைகள் 6 வருட காலப்பகுதிக்குள் எழுத்துமூல மற்றும் செய்முறைப் பரீட்சைகளுக்குத் தோற்றாமல் தமது சாரதி அனுமதிப்பத்திரத்தை மாற்றிக்கொள்ளும் வாய்ப்புக் கிட்டுகிறது.
இந்த வசதியானது இத்தாலியில் வசிக்கும் மற்றும் பணிபுரியும் இலங்கையர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமையும்.
டிசம்பர், ஜனவரி மாதங்களில் மீண்டும் புயல் அபாயம் – அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவிப்பு!

டிசம்பர், ஜனவரி மாதங்களில் மீண்டும் புயல் அபாயம் – அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவிப்பு!
வடகிழக்கு பருவப்பெயர்ச்சி காற்று வலுவடைந்துள்ள நிலையில், டிசம்பர் மற்றும் ஜனவரி மாதங்களில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலங்கள், அலை வடிவக் குழப்பங்கள், தாழ்முக்கங்கள் அல்லது புயல்கள் உருவாகும் அபாயம் இருப்பதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்,
கடந்த 30 ஆண்டுகளில் வடகிழக்கு பருவப்பெயர்ச்சி செயற்பட்ட விதம் குறித்த தரவுகளை ஆய்வு செய்து சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையின் ஊடாக இந்தத் தகவல்கள் வெளியாகியுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.
இதன்படி, வட மாகாணத்தில் சாதாரண மழைவீழ்ச்சியை விட அதிக மழைவீழ்ச்சியை எதிர்பார்க்கலாம் எனவும், வடமத்திய, கிழக்கு, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் சாதாரண மழைவீழ்ச்சியை அண்மித்த மழை பெய்யக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேல் மற்றும் தென் மாகாணங்களில் சாதாரண மழைவீழ்ச்சியை விடக் குறைவான மழைவீழ்ச்சியே நிலவும் என அந்தத் தரவுகளின் அடிப்படையில் கணிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், டிசம்பர் மற்றும் ஜனவரி மாதங்களில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலங்கள் அல்லது புயல்கள் உருவாகும் பட்சத்தில், இந்த வானிலை முன்னறிவிப்புகளில் மாற்றங்கள் ஏற்படக்கூடும் என பணிப்பாளர் நாயகம் சுட்டிக்காட்டினார்.
இன்று முதல் அனர்த்தத்தில் காணாமல் போன 193 பேருக்கும் இறப்புப் பதிவுச் சான்றிதழ் வழங்கும் திட்டம் !

இன்று முதல் அனர்த்தத்தில் காணாமல் போன 193 பேருக்கும் இறப்புப் பதிவுச் சான்றிதழ் வழங்கும் திட்டம் !
நாட்டை உலுக்கிய “டித்வா” புயல் காரணமாக ஏற்பட்ட மண்சரிவு மற்றும் வெள்ளப்பெருக்கினால் காணாமல் போன 193 நபர்களின் இறப்புப் பதிவுச் சான்றிதழ்களை விநியோகிக்க பதிவாளர் நாயகம் திணைக்களம் தீர்மானித்துள்ளது.
கடந்த 2 ஆம் திகதி அரசாங்கத்தினால் வெளியிடப்பட்ட விசேட வர்த்தமானி அறிவித்தலுக்கு அமைய, அவசர அனர்த்த நிலைமை காரணமாக காணாமல் போன ஒருவரைப் பற்றி 2 வாரங்களுக்குப் பின்னரும் தகவல் கிடைக்கவில்லை என்றால், அவருக்கு அல்லது அவளுக்கு இறப்புப் பதிவுச் சான்றிதழ் வழங்கப்படும் என பதிவாளர் நாயகம் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதற்கமைய, இந்த அனர்த்த நிலைமை காரணமாக இதுவரை காணாமல் போயுள்ள 203 நபர்களுக்காக அரசாங்கத்தினால் வழங்கப்படும் நட்டஈட்டுப் பணத்தை விரைவில் பெற்றுக்கொள்ளும் நோக்கில், இந்தச் சான்றிதழ்களை வழங்க அந்தத் திணைக்களம் தீர்மானித்துள்ளது.
அதற்கான தேவையான சட்ட ஏற்பாடுகள் ஏற்கனவே நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாகவும், இந்த அனர்த்தம் காரணமாக நபர் ஒருவர், உறவினர் அல்லது நண்பர் காணாமல் போயுள்ளார் என்பதை உரிய பிரதேச கிராம உத்தியோகத்தர் உறுதிப்படுத்தினால், அந்த மாவட்ட பிரதிப் பதிவாளருக்கு இறப்புப் பதிவுச் சான்றிதழ்களை வழங்கும் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.
அனர்த்தத்துக்கு உள்ளாகி காணாமல் போன நபர் தொடர்பில் ஆட்சேபனைகள் எழவில்லை என்றால், பிரதேச செயலாளரினால் அங்கீகாரத்துக்காக அனுப்பப்படும் விண்ணப்பத்தை, பதிவாளர் நாயகத்தினால் அதிகாரம் அளிக்கப்பட்ட பிராந்திய பிரதி அல்லது உதவிப் பதிவாளர் நாயகம் அங்கீகரிப்பார்.
இதேவேளை, மத்திய மாகாண மக்களுக்காக இறப்புச் சான்றிதழ் விநியோகித்தல், காணாமல் போனவர்களின் இறப்புச் சான்றிதழ் விநியோகித்தல் உள்ளிட்ட சேவைகளை வழங்கும் விசேட நடமாடும் சேவையொன்று இன்றும் (13) மற்றும் நாளையும் (14) நடைபெறுகின்றன.
குறித்த சேவைகள் அனைத்தையும் அந்தச் சந்தர்ப்பத்திலேயே இலவசமாக வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மத்திய மாகாண பிரதிப் பதிவாளர் நாயகம் தரங்க சுபாஷினி தெரிவித்தார்.
சேதமடைந்த திருமண, பிறப்பு மற்றும் இறப்புச் சான்றிதழ்களின் பிரதிகளை வழங்குவதும் இந்த நடமாடும் சேவையின் ஊடாக முன்னெடுக்கப்படவுள்ளது.
அதற்கமைய இன்றையதினம் (13) நடமாடும் சேவையானது உடஹேன்தென்ன, இலக்கம் 1, தமிழ் மகா வித்தியாலயம், பரகல ஜனபதத்தில் காலை 9 மணி முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இதேவேளை, இது தொடர்பான மேலதிக விபரங்களுக்கு – 0812224470 எனும் இலக்கத்திற்கு அழைக்குமாறும்
நாளையதினம் (14) நடமாடும் சேவை தொலுவ பிரதேச செயலகத்தில் காலை 9 மணி முதல் மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் வொஷிங்டன் மாகாணத்தில் வரலாறு காணாத கனமழை : ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்டோர் வெளியேற்றம் !
அமெரிக்காவின் வொஷிங்டன் மாகாணத்தில் வரலாறு காணாத கனமழை : ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்டோர் வெளியேற்றம் !
அமெரிக்காவின் வொஷிங்டன் மாகாணத்தில் வரலாறு காணாத கனமழை : ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்டோர் வெளியேற்றம் !
13 Dec, 2025 | 11:23 AM
![]()
அமெரிக்காவின் வொஷிங்டன் மாகாணத்தின் வடமேற்குப் பகுதியில் பெய்த வரலாறு காணாத கனமழையால் கடும் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. ஸ்காஜிட் (Skagit) நதி கரைபுரண்டு ஓடியதன் காரணமாக, பல நகரங்கள் மற்றும் கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. வெள்ளம் காரணமாக ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட மக்களுக்கு வெளியேற்ற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ப்யூஜெட் சவுண்ட் அருகே அமைந்துள்ள பர்லிங்டன் (Burlington) நகரம் முழுவதும், சுமார் 9,200 பேர் வசிக்கும் பகுதியாகும். இந்த நகரத்தில் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாயம் காரணமாக வெள்ளிக்கிழமை (12) அதிகாலை அங்கிருந்து முழுமையாக வெளியேறுமாறு உத்தரவிடப்பட்டது.
மவுண்ட் வெர்னன் பகுதியில் ஸ்காஜிட் ஆற்றின் நீர்மட்டம் 38 அடி (11.6 மீட்டர்) உயரத்தை எட்டியதாகவும், இது இதுவரை பதிவான அதிகபட்ச நீர்மட்டம் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
வீட்டு மேற்கூரையில் சிக்கிய இருவர் ஹெலிக்கொப்டர் மூலம் மீட்பு
வொஷிங்டன் மாகாணத்தின் வடமேற்குப் பகுதியில் வீடுகளை வெள்ளம் சூழ்ந்ததால், வீதிகள் முழுவதும் வெள்ளக்காடாக மாறின. இந்த நிலையில், வீட்டு மேற்கூரையில் தஞ்சமடைந்த இருவர், அமெரிக்க தேசிய காவல் படையினரால் ஹெலிக்கொப்டர் மூலம் கயிறுகட்டி மீட்கப்பட்டனர். மீட்கப்பட்ட இருவரும் மேலதிக சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில், அமெரிக்க தேசிய காவல் படையினர் மற்றும் மீட்புக்குழுவினர் வீடு வீடாக சென்று மக்களை வெளியேற்றினர். சில இடங்களில், வெள்ள நீரில் சிக்கியவர்களை ரப்பர் படகுகள் மூலம் பாதுகாப்பாக மீட்டுள்ளனர்.
கடந்த ஒரு வாரமாக பெய்த கனமழைக்கு காரணமாக, கடலில் உருவாகும் ‘Atmospheric River’ எனப்படும் ஈரப்பதம் நிறைந்த வளிமண்டல ஓட்டங்கள் மேற்குப் பசிபிக் பகுதிக்குள் நுழைந்ததே காரணம் என வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
அமெரிக்க வானிலை கணிப்பு மையத்தின் தகவலின்படி, கடந்த 7 நாட்களில் 6 முதல் 60 அங்குலம் வரை மழை பதிவாகியுள்ளது. “ஒரு மாதத்தில் பெய்ய வேண்டிய மழை, ஒரே வாரத்தில் பெய்துள்ளது” என வானிலை நிபுணர் ரிச் ஒட்டோ தெரிவித்தார்.
ஸ்காஜிட் நதியின் கரையோர அணைகள் தற்போது நிலைத்து இருந்தாலும், கடும் அழுத்தம் காரணமாக அணை உடைப்பு அபாயம் தொடர்கிறது. இதனால், நதியின் கீழ்ப்பகுதிகளில் Flash Flood Watch அறிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், வொஷிங்டன் மாகாண ஆளுநர் பாப் பெர்குசன் மற்றும் செனட்டர் மரியா கான்ட்வெல் ஆகியோரின் கோரிக்கையை ஏற்று, வெள்ள பாதிப்பு பகுதிகளுக்கு அவசர நிலையை (Federal Emergency Declaration) அறிவித்துள்ளார்.
தற்காலிகமாக மழை குறைந்தாலும், ஞாயிற்றுக்கிழமை இரவு முதல் திங்கட்கிழமை வரை மீண்டும் புதிய Atmospheric River புயல் உருவாகக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனிடையே, வீதிகள், ரயில் பாதைகள், கனடாவை இணைக்கும் முக்கிய நெடுஞ்சாலைகள் உள்ளிட்ட பல போக்குவரத்து வழிகள் முடங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஐசிசி ஆடவர் ரி20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டித் தொடர்
காசாவில் ‘பைரன்’ புயல் தாக்கம் ; 14 பேர் பலி
காசாவில் ‘பைரன்’ புயல் தாக்கம் ; 14 பேர் பலி
காசாவில் ‘பைரன்’ புயல் தாக்கம் ; 14 பேர் பலி
13 Dec, 2025 | 09:47 AM
![]()
காசா பகுதியில் தாக்கிய ‘பைரன்’ புயலால் குறைந்தது 14 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த பகுதியில் கடும் காற்று, கனமழை மற்றும் முன்பு இஸ்ரேலிய தாக்குதலில் சேதமடைந்த கட்டிடங்கள் இடிந்து விழுந்ததால், குழந்தைகள் உட்பட பலர் உயிரிழந்தாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கடும் மழை மற்றும் வெள்ளம் காரணமாக அங்கு வாழும் மக்களின் வீடுகள் சேதமடைந்துள்ளதால் சுமார் 8.5 இலட்சம் பேர் இடம்பெயர்ந்துள்ளனர்.
பாதிக்கப்பட்ட மக்களுக்கு தங்குமிட வசதிகள் மற்றும் நிவாரணங்களை வழங்க அனுமதி வழங்க வேண்டும் என காசா நிர்வாகம் வலியுறுத்தியுள்ளது.
மழை மற்றும் குளிர் காரணமாக குழந்தைகள் உயிரிழப்பது அதிகரித்து வருவதாக அந்நாட்டு வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்த இஸ்ரேலிய குண்டுவீச்சு தாக்குதலில் பாதிக்கப்பட்ட மக்கள், தற்போது கடும் குளிர், வெள்ளம் போன்ற அனர்த்தங்களால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த 24 மணி நேரத்தில் மாத்திரம் 10-க்கும் மேற்பட்ட வீடுகள் இடிந்து விழுந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்நிலையில், காசாவுக்குள் அவசர உதவிப் பொருட்கள், தங்குமிட வசதிகள் மற்றும் குளிர்காலத்திற்கு தேவையான பொருட்களை வழங்க சர்வதேச சமூகம் தலையிட வேண்டும் என அதிகாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


யாழில். ஒரு இளைஞனின் மரணம் இரண்டு உயிர்களை காப்பாற்றியது
டிட்வா தந்த வலி!
டிட்வா தந்த வலி!
டிட்வா!துயர்.
****************
மண் சரிவு இது
மற்றவர்களுக்கு
ஒரு செய்தி.
நாளை விடிந்தால்
மகிழ்வான..
எத்தனை எண்ணங்கள்
எத்தனை கனவுகள்..
எத்தனை குழந்தைகளின்
மழலைப் பேச்சுக்கள்
வேலை, பாடசாலை.
திருமணங்கள்.காதல்.
கொ̀ண்டாட்டங்கள்.
அத்தனையும் ஒரு நொடியில்
உயிரோடு மண்ணுக்குள்
புதைக்கப்பட்டு விட்டதே!
இறைவா!
அப்பா,அம்மா,அண்ணன்,தம்பி
அக்கா,தங்கை நண்பர்களென
வெளியில் நின்று தேடும்
உறவுகளுக்குத் தான்
தெரியும்
மூடிய மலையைவிட
பெரியது.
இந்த இழப்புகளின்
வலியென்பது.
மண்சரிவு இது
மற்றவர்களுக்கு
ஒரு செய்தி.
துயருடன் -பசுவூர்க்கோபி.