Aggregator
AI உள்ளிட்ட தொழில்நுட்பங்களின் மூலம் இலங்கையில் அனர்த்தங்களால் ஏற்படும் உயிராபத்துக்களை குறைக்கலாம் - அமெரிக்க தூதரகத்தின் பிரதித் தலைமை அதிகாரி ஜேன் ஹொவெல்
AI உள்ளிட்ட தொழில்நுட்பங்களின் மூலம் இலங்கையில் அனர்த்தங்களால் ஏற்படும் உயிராபத்துக்களை குறைக்கலாம் - அமெரிக்க தூதரகத்தின் பிரதித் தலைமை அதிகாரி ஜேன் ஹொவெல்
13 Dec, 2025 | 11:03 AM
![]()
(ஸ்டெப்னி கொட்பிறி)
AI உள்ளிட்ட தொழில்நுட்பங்களை பயன்படுத்தி, இலங்கையில் அனர்த்தங்களால் ஏற்படும் உயிர் ஆபத்துக்களை குறைக்க முடியும் என இலங்கையில் உள்ள அமெரிக்க தூதரகத்தின் பிரதித் தலைமை அதிகாரி ஜேன் ஹொவெல் தெரிவித்துள்ளார்.
Geo செயற்கை நுண்ணறிவு மற்றும் புவியியல் தகவல் முறைமை (Geographic Information System - GIS) ஆகிய தொழில்நுட்பங்களை பயன்படுத்தி உருவாக்கப்பட்ட “GeoAI for Disaster Resilience” எனும் தேசிய திட்டத்தை உத்தியோகபூர்வமாக அறிமுகப்படுத்தும் நிகழ்வு கொழும்பில் உள்ள தாஜ் சமுத்திரா ஹோட்டலில் வெள்ளிக்கிழமை (12) நடைபெற்றது.
இந்நிகழ்வில் கலந்துகொண்டு ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அமெரிக்க தூதரகத்தின் பிரதித் தலைமை அதிகாரி ஜேன் ஹொவெல் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
அமெரிக்க தூதரகத்தின் பிரதித் தலைமை அதிகாரி ஜேன் ஹொவெல் மேலும் தெரிவிக்கையில்,
Geo செயற்கை நுண்ணறிவு மற்றும் புவியியல் தகவல் முறைமை (Geographic Information System - GIS) ஆகிய தொழில்நுட்பங்களை பயன்படுத்தி “GeoAI for Disaster Resilience” எனும் தேசிய திட்டம் உருவாக்கப்பட்டது.
இலங்கை அனர்த்த இடர் முகாமைத்துவ நிபுணர்கள் (Association of Natural Disaster Risk Management Professionals) சங்கமானது, அமெரிக்க தூதரகத்தின் ஆதரவுடன் கொழும்பு பல்கலைக்கழகத்துடன் இணைந்து இந்த திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்த திட்டத்தின் மூலம் இலங்கையில் ஏற்படும் அனர்த்தங்களை முன்கூட்டியே கண்டறியவும், பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கவும், அவர்களை தயார்ப்படுத்தவும் முடியும். இதனால் இலங்கையில் எதிர்காலத்தில் ஏற்படும் அனர்த்தங்களின் போதான உயிர் ஆபத்துக்களை குறைக்க முடியும்.
இந்த திட்டமானது, இலங்கையின் தொழில்நுட்பம் சார்ந்த அனர்த்த தாங்கும் திறன் செயல்முறையை பிரதிபலிக்கிறது.
அண்மையில் இலங்கையில் ஏற்பட்ட அனர்த்தத்தினால் பலர் உயிரிழந்ததுடன், பல குடும்பங்கள் பாதிக்கப்பட்டன.
எனவே தொழில்நுட்பங்களின் உதவியுடன் இயற்கை அனர்த்தங்களை முன்கூட்டியே கண்டறிந்து உயிர்களை பாதுகாப்பதற்காக உருவாக்கப்பட்ட இந்த திட்டமானது சிறந்ததொரு முயற்சியாகும்.
இந்த திட்டமானது இலங்கையின் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு மிகவும் பங்களிப்பு வழங்குமென எதிர்பார்க்கப்படுகின்றது.
Geo செயற்கை நுண்ணறிவானது அனர்த்தங்களை முன்கூட்டியே கண்டறிவதற்காக பல நாடுகளில் பயன்படுத்தப்படுகிறது.
இலங்கையில் அனர்த்தங்களால் ஏற்படும் பாரிய சவால்களை முறிப்பதற்கு இந்த திட்டம் மிகவும் உதவும் என்று நாம் நம்புகிறோம்.
இந்த திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்துவதற்கு தேவையான அனைத்து உதவிகளையும் அமெரிக்க தூதரகம் வழங்கும் என இலங்கையில் உள்ள அமெரிக்க தூதரகத்தின் பிரதித் தலைமை அதிகாரி ஜேன் ஹொவெல் மேலும் தெரிவித்துள்ளார்.
இந்நிகழ்வில், இலங்கையில் உள்ள அமெரிக்க தூதரகத்தின் பிரதித் தலைமை அதிகாரி ஜேன் ஹொவெல், இலங்கை அனர்த்த இடர் முகாமைத்துவ நிபுணர்கள் சங்கத்தின் உறுப்பினர்கள், கொழும்புப் பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் பேராசிரியர் இந்திக மகேஷ் கருணாதிலக உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
“GeoAI for Disaster Resilience” எனும் தேசிய திட்டம்
சீரற்ற வானிலை, திட்டமிடப்படாத நகரமயமாக்கல், சுற்றுச்சூழல் சீரழிவு மற்றும் சமூக பொருளாதார பாதிப்புகள் காரணமாக இலங்கை பல அனர்த்தங்களுக்கு முகங்கொடுகிறது.
இலங்கையில், வெள்ளம், மண்சரிவு, சூறாவளி போன்ற இயற்கை அனர்த்தங்கள் அதிகரித்து வருவதால் பல உயிரிகள் சேதமடைகிறது மற்றும் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது.
இயற்கை அனர்த்தங்கள் தொடர்பில் எச்சரிக்கை விடுப்பதற்கு முறையான செயல்முறைகள் இல்லாத காரணத்தினால் மக்கள் மத்தியில் விழிப்புணர்வு இல்லை மற்றும் கால தாமதமான தகவல்களுடன் செயற்படுகின்றனர்.
இதனால், Geo செயற்கை நுண்ணறிவு மற்றும் புவியியல் தகவல் முறைமை (Geographic Information System - GIS) ஆகிய தொழில்நுட்பங்களை பயன்படுத்தி “GeoAI for Disaster Resilience” எனும் தேசிய திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.
Geo செயற்கை நுண்ணறிவு மூலம் வெள்ளம், மண்சரிவு மற்றும் வறட்சி போன்ற இயற்கை அனர்த்தங்களை துல்லியமாக கண்டறியந்து மதிப்பீடு செய்ய முடியும்.
புவியியல் தகவல் முறைமை (Geographic Information System - GIS) மூலம் வீதியில் ஏற்பட்டுள்ள பாதிப்புகள், வெள்ளத்தில் மூழ்கிய பகுதிகள், பாதுகாப்பற்ற பகுதிகள் மற்றும் அனர்த்தத்தினால் சேதமடைந்த பகுதிகளை வரைப்படமாக காட்சிப்படுத்த முடியும்.
எனவே, இந்த திட்டத்தின் மூலம் இலங்கையில் இயற்கை அனர்த்தங்களால் ஏற்படும் பாதிப்புகளை கட்டுப்படுத்த முடியும்.



யாசகம் பெற்ற பெண்ணை திருமணம் செய்த இளைஞர்..!
இந்திய சென்ற கால்பந்து வீரர் லியோனல் மெஸ்ஸியை பார்க்கவந்த ரசிகர்கள் மத்தியில் கலவரம்!
இந்திய சென்ற கால்பந்து வீரர் லியோனல் மெஸ்ஸியை பார்க்கவந்த ரசிகர்கள் மத்தியில் கலவரம்!
Carrom World Cup-ல் தங்கம் வென்ற கீர்த்தனா
தடைகளைத் தாண்டிய புத்தகங்கள்
மலையகத்துக்குள்ளேயே அவர்களின் வாழ்வியலை உறுதிபடுத்த வடக்கு, கிழக்கு, மலையகமாக ஒன்றுபடுவோம் - அருட்தந்தை சத்திவேல்
சித்தாந்த வினா விடை
இன்றைய மாவீரர் நினைவுகள் ..
யூடியூபர் சவுக்கு சங்கர் அதிரடி கைது
யூடியூபர் சவுக்கு சங்கர் அதிரடி கைது
13 Dec 2025, 11:15 AM

பிரபல யூடியூபர் சவுக்கு சங்கர் மற்றும் அவரது குழுவினரை ஆதம்பாக்கம் வீட்டில் வைத்து காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
சவுக்கு சங்கர் தனது சமூக வலைதளப் பக்கங்களில் அரசியல் கட்சிகள், அரசு அதிகாரிகளின் செயல்பாடுகள் குறித்து கடும் விமர்சனங்களை வெளியிட்டு வருகிறார். இந்நிலையில் இன்று (டிசம்பர் 13) பட தயாரிப்பாளரை மிரட்டியதாக பதிவு செய்யப்பட்டுள்ள வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. ஆதம்பாக்கத்தில் உள்ள அவரது வீட்டிற்கு இன்று காலை சென்ற போலீசார் அவரை வீட்டில் வைத்தே கைது செய்துள்ளனர்.
வழக்கு விபரம்
ரெட் அண்ட் ஃபாலோ என்ற திரைப்படம் குறித்து அவதூறு பரப்பும் வகையில் பேசியதாகவும் அந்தத் திரைப்படத்தின் தயாரிப்பாளர் புருஷோத்தமன், சவுக்கு சங்கர் அலுவலகத்திற்கு சென்று விசாரித்ததாகவும் கூறப்படுகிறது.
அப்போது அந்த வீடியோவை நீக்க 10 லட்சம் பணம் கேட்டதாகவும், இதைத்தொடர்ந்து ஏற்பட்ட பிரச்சனையில் சவுக்கு சங்கர் மற்றும் அவரது குழுவினர் தயாரிப்பாளர் புருஷோத்தமனை அடித்து அவர் கையில் வைத்திருந்த 2 லட்சம் ரூபாயை பறித்து விட்டதாகவும் எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது.
சவுக்கு சங்கர் விளக்கம்
இதுகுறித்து வீடியோ வெளியிட்டுள்ள சவுக்கு சங்கர், ” இந்த வழக்கு முழுக்க முழுக்க பொய் வழக்கு. இப்படி ஒரு சம்பவமே நடக்கவில்லை. நீங்கள் சொல்லும் புருஷோத்தமன் என்ற யாரும் அலுவலகத்திற்கு வரவில்லை. இதை எனது விளக்கமாக எடுத்துக் கொள்ளுங்கள் என்று நவம்பர் 1 ம் தேதி பதில் கடிதம் அனுப்பிவிட்டேன்.
இதுவரை எந்தவிதமான நடவடிக்கையும் காவல்துறை எடுக்கவில்லை. சென்னை மாநகர காவல் துறை ஆணையர் அருண், பினாமி மூலம் சொத்துகள் வாங்கி பல கோடி ரூபாய் முதலீடுகள் செய்துள்ள விவரங்களை நேற்று இரவு வெளியிட்டுள்ளதால் இன்று காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டி உள்ளார்.