Aggregator
உடுமலை சங்கர் கொலை: நீதிப் போராட்டத்தை திமுக அலட்சியப்படுத்துவதாக கௌசல்யா குற்றச்சாட்டு
19இன் கீழ் ஆசிய கிண்ண ஒருநாள் கிரிக்கெட் தொடர்
அனர்த்த நிவாரணங்களுக்காக 13 பில்லியன் ரூபாய் விடுவிப்பு
அனர்த்த நிவாரணங்களுக்காக 13 பில்லியன் ரூபாய் விடுவிப்பு
அனர்த்த நிவாரணங்களுக்காக 13 பில்லியன் ரூபாய் விடுவிப்பு
Dec 13, 2025 - 09:44 PM
அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணத்திற்காக இதுவரையில் மொத்தமாக 13 பில்லியன் ரூபாய் நிதி வழங்கப்பட்டுள்ளதாக நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் கலாநிதி ஹர்ஷன சூரியப்பெரும தெரிவித்தார்.
நிவாரண வேலைத்திட்டத்திற்கு உதவியாகக் கிடைத்த நிதியுதவி மற்றும் திறைசேரியிலிருந்து வழங்கப்பட்ட நிதி உள்ளிட்டதாகவே இந்த மொத்தத் தொகை நிவாரணங்களுக்காக வழங்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
இன்று (13) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே கலாநிதி ஹர்ஷன சூரியப்பெரும இதனைத் தெரிவித்தார்.
மக்களின் வாழ்க்கையை இயல்பு நிலைக்குக் கொண்டு வருவதற்கும், வர்த்தகர்கள் தமது வர்த்தக நடவடிக்கைகளை மீண்டும் ஆரம்பிப்பதற்கும் ஒத்துழைப்பு வழங்குவதற்காகவே இந்த நிதி பயன்படுத்தப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கும் வர்த்தக சமூகத்தினருக்கும் தேவையான உதவிகள், உபகரணங்கள் மற்றும் பண நன்கொடைகள் பலரிடம் இருந்தும் கிடைப்பதாகக் குறிப்பிட்ட செயலாளர், இந்த ஒத்துழைப்பை வழங்கும் அனைவருக்கும் தமது நன்றியையும் தெரிவித்தார்.
இந்த நிவாரண பொறிமுறை சிறப்பாகச் செயற்படுவதாகவும், அதன் காரணமாக பொதுமக்களுக்கும், பாதிக்கப்பட்ட பிரதேசங்களுக்கும் நிவாரணங்களை வெற்றிகரமாக வழங்க முடிந்துள்ளதாகவும் அவர் அங்கு வலியுறுத்தினார்.
அனர்த்த முகாமைத்துவ நடவடிக்கைகளை வெற்றிகரமாக முன்னெடுப்பதற்குத் தேவையான தொடர்பாடலைப் பேணுவதற்காக அமெரிக்காவின் ஸ்டார்லிங்க் நிறுவனம் 100 ஸ்டார்லிங்க் அலகுகளை நன்கொடையாக வழங்கியுள்ளதாகவும் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையில் நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் கலாநிதி ஹர்ஷன சூரியப்பெரும மேலும் குறிப்பிட்டார்.
19இன் கீழ் ஆசிய கிண்ண ஒருநாள் கிரிக்கெட் தொடர்
19இன் கீழ் ஆசிய கிண்ண ஒருநாள் கிரிக்கெட் தொடர்
வெற்றியுடன் தொடங்கிய இலங்கை இளையோர் அணி
Dec 13, 2025 - 07:56 PM
டுபாயில் இடம்பெற்று வரும் 19 வயதிற்கு உட்பட்ட ஆசிய இளையோர் கிண்ண ஒருநாள் கிரிக்கெட் தொடரின் இன்றைய நேபாளம் அணிக்கு எதிரான போட்டியில் இலங்கை அணி வெற்றி பெற்றுள்ளது.
போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை இளையோர் அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்தது.
இதன்படி முதலில் துடுப்பாடிய 28.5 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 82 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக் கொண்டது.
இலங்கை அணி சார்பில் பந்துவீச்சில் செத்மிக செனவிரட்ன 5 விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.
இந்நிலையில் 83 என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பாடிய இலங்கை இளையோர் அணி 14.5 ஓவர்களில் 2 விக்கெட்டுக்களை மாத்திரமே இழந்து போட்டியில் வெற்றிபெற்றது.
போட்டியின் சிறப்பாட்டக்காரராக செத்மிக செனவிரட்ன தெரிவானார்.
இதன்மூலம் 19 வயதிற்கு உட்பட்ட ஆசிய இளையோர் கிண்ண ஒருநாள் கிரிக்கெட் தொடரை இலங்கை இளையோர் அணி வெற்றியுடன் ஆரம்பித்துள்ளது.
அனர்த்தத்திற்கு உள்ளானவர்களுக்கு யாழ் சிறைச்சாலையின் நிவாரண உதவி
அனர்த்தத்திற்கு உள்ளானவர்களுக்கு யாழ் சிறைச்சாலையின் நிவாரண உதவி
அனர்த்தத்திற்கு உள்ளானவர்களுக்கு யாழ் சிறையின் நிவாரண உதவி
Dec 13, 2025 - 03:43 PM
டித்வா புயலினால் ஏற்பட்ட அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக யாழ்ப்பாணம் சிறைச்சாலை பல்வேறு நிவாரண உதவிகளை வழங்கியுள்ளது.
இந்த உதவி பொருட்கள் அடங்கிய பொதிகள் யாழ்ப்பாணம் மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபனிடம் இன்று (13) கையளிக்கப்பட்டன.
சிறைச்சாலை கைதிகள் தங்களது ஒரு நேர உணவுக்கான பொருட்களையும், சிறைச்சாலை உத்தியோகத்தர்களின் நிதியில் இருந்து கொள்வனவு செய்யப்பட்ட பொருட்களையும் உள்ளடக்கி 180 பொதிகள் இவ்வாறு வழங்கப்பட்டுள்ளன.
சிறைச்சாலை அத்தியட்சகர் சீ.இந்திரகுமார், பிரதான ஜெயிலர், ஏனைய ஜெயிலர்கள், புனர்வாழ்வு உத்தியோகத்தர்கள் ஆகியோர் இணைந்து இந்த உதவிகளை கையளித்தமை குறிப்பிடத்தக்கது.
-யாழ். நிருபர் பிரதீபன்-
அரச வரி வருமானம் 4000 பில்லியன் ரூபாய்
அரச வரி வருமானம் 4000 பில்லியன் ரூபாய்
அரச வரி வருமானம் 4000 பில்லியன் ரூபாய்
Dec 13, 2025 - 07:05 PM
2025 ஆம் ஆண்டின் முதல் 10 மாதங்களுக்குள் அரசாங்கத்தின் மொத்த வரி வருமானம் 4,033 பில்லியன் ரூபாய் என நிதி அமைச்சினால் வெளியிடப்பட்ட அண்மைய அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதில் உள்நாட்டு இறைவரித் திணைக்களம் ஊடாக 1,809 பில்லியன் ரூபாவும், இலங்கை சுங்கம் ஊடாக 1,970 பில்லியன் ரூபாவும், மதுவரித் திணைக்களம் ஊடாக 192 பில்லியன் ரூபாவும் வரி வருமானமாக ஈட்டப்பட்டுள்ளதுடன், ஏனைய வழிகளில் 62 பில்லியன் ரூபாவும் கிடைத்துள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
நிதி அமைச்சின் தகவல்களின் படி, 2025 ஆம் ஆண்டின் முதல் 10 மாதங்களில், வாகன இறக்குமதி மூலம் ஈட்டப்பட்ட வரி வருமானம் 302 பில்லியன் ரூபாவால் அதிகரித்துள்ளது.
2024 ஆம் ஆண்டின் முதல் 10 மாதங்களில் வாகன இறக்குமதி வரி வருமானம் 48 பில்லியன் ரூபாவாகப் பதிவாகியிருந்ததுடன், 2025 ஆம் ஆண்டில் 350 பில்லியன் ரூபா வரை அதிகரித்துள்ளது.
அரசாங்கத்தின் வரி வருமானத்திற்கு அதிகபட்ச பங்களிப்பு வற் (VAT) வரியின் ஊடாகக் கிடைத்துள்ளதுடன், அது 1,615 பில்லியன் ரூபாவாகும்.
இதற்கு மேலதிகமாக வருமான வரி மூலம் 1,167 பில்லியன் ரூபாவை 2025 ஜனவரி - ஒக்டோபர் காலப்பகுதிக்குள் பெற்றுக்கொள்ள அரசாங்கத்திற்கு முடிந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
19 வயதுக்குட்பட்ட வீரர்கள் விளையாடும் உலககிண்ண துடுப்பாட்ட போட்டியில் அவுஸ்திரேலியா அணியில் நிதேஷ் சாமுவேல் என்ற ஈழத்து வம்சாவளி தமிழர் தெரிவு செய்யப்பட்டுள்ளார்
மேற்கிந்தியத் தீவுகளை வீழ்த்தி 2025-27 டெஸ்ட் சம்பியன்ஷிப்பில் முதல் வெற்றியை பதிவு செய்தது நியூஸிலாந்து
மேற்கிந்தியத் தீவுகளை வீழ்த்தி 2025-27 டெஸ்ட் சம்பியன்ஷிப்பில் முதல் வெற்றியை பதிவு செய்தது நியூஸிலாந்து
மேற்கிந்தியத் தீவுகளை வீழ்த்தி 2025-27 டெஸ்ட் சம்பியன்ஷிப்பில் முதல் வெற்றியை பதிவு செய்தது நியூஸிலாந்து
12 Dec, 2025 | 02:05 PM
![]()
(நெவில் அன்தனி)
வெலிங்டன் பேசின் ரிசேர்வ் விளையாட்டரங்கில் இன்று வெள்ளிக்கிழமை (12) நிறைவடைந்த இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் ஜேக்கப் டபியின் துல்லியமான பந்துவீச்சின் உதவியுடன் மேற்கிந்தியத் தீவுகளை 9 விக்கெட்களால் மிக இலகுவாக நியூஸிலாந்து வெற்றிகொண்டது.

2025- 27 உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் சுழற்சியில் நியூஸிலாந்து ஈட்டிய முதலாவது வெற்றி இதுவாகும்.
இந்த வருடம் தனது 31ஆவது பிறந்த தினத்தைக் கொண்டாடிய பின்னர் நியூஸிலாந்தின் டெஸ்ட் அணியில் அறிமுகமான ஜேக்கப் டவி, இந்தத் தொடரில் இரண்டாவது தொடர்ச்சியான தடவையாக 5 விக்கெட் குவியலைப் பதிவுசெய்து மேற்கிந்தியத் தீவுகளை இரண்டாவது இன்னிங்ஸில் 128 ஓட்டங்களுக்கு சுருட்ட உதவினார்.
முதலாவது இன்னிங்ஸிலும் மேற்கிந்தியத் தீவுகளின் துடுப்பாட்டம் எதிர்பார்த்த அளவு சிறப்பாக இருக்கவில்லை.
கிறைஸ்ட்சேர்ச் ஹெக்லி ஓவல் விளையாட்டரங்கில் முதலாவது டெஸ்டின் இரண்டாவது இன்னிங்ஸில் மிகத் திறமையாகத் துடுப்பெடுத்தாடி 400 ஓட்டங்களுக்கு மேல் குவித்து அப் போட்டியை வெற்றிதோல்வியின்றி முடித்துக்கொண்ட மேற்கிந்தியத் தீவுகள், இரண்டாவது போட்டியில் இரண்டு இன்னிங்ஸ்களிலும் பிரகாசிக்கத் தவறி தோல்வியைத் தழுவியது.
கடந்த புதன்கிழமை ஆரம்பமான இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட மேற்கிந்தியத் தீவுகள் அதன் முதல் இன்னிங்ஸில் சகல விக்கெட்களையும் இழந்து 205 ஓட்டங்களை மாத்திரம் பெற்றது.

ப்ளயா டிக்னர், மைக்கல் ரே ஆகிய இருவரும் திறமையாகப் பந்துவீசி மேற்கிந்தியத் தீவுகளைக் கட்டுப்படுத்தினர்.
களத்தடுப்பின்போது உபாதைக்குள்ளான ப்ளயா டிக்னர் அதன் பின்னர் இந்தப் போட்டியில் பங்குபற்றவில்லை.
ஷாய் ஹோப், ஜோன் கெம்பல், ப்றண்டன் கிங் ஆகிய மூவரே 30 ஓட்டங்களுக்கு மேல் பெற்றனர்.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய நியூஸிலாந்து 9 விக்கெட்களை இழந்து 278 ஓட்டங்களைப் பெற்று தனது முதலாவது இன்னிங்ஸை நிறுத்திக்கொண்டது.


டெவன் கொன்வே, மிச்செல் ஹே ஆகிய இருவரும் அரைச் சதங்கள் குவித்து நியூஸிலாந்தின் மொத்த எண்ணிக்கைக்கு உரமூட்டினர்.
முதல் இன்னிங்ஸ் நிறைவில் 73 ஓட்டங்கள் வித்தியாசத்தில் பின்னிலையில் இருந்த மேற்கிந்தியத் தீவுகள், இரண்டாவது இன்னங்ஸில் ஜெக்கப் டபியின் துல்லியமான பந்துவீச்சில் சின்னாபின்னமாகி 128 ஓட்டங்களுக்கு சுருண்டனது.
மேற்கிந்தியத் தீவுகளின், இண்டாவது இன்னிங்ஸில் மூவர் மாத்திரமே 20 ஓட்டங்களுக்கு மேல் பெற்றனர்.
தொடர்ந்து 56 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு இரண்டாவது இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிய நியூஸிலாந்து ஒரு விக்கெட்டை இழந்து 58 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டியது.
எண்ணிக்கை சுருக்கம்
மேற்கிந்தியத் தீவுகள் 1ஆவது இன்: சகலரும் ஆட்டம் இழந்து 205 (ஷாய் ஹோப் 47, ஜோன் கெம்பல் 44, ப்றண்டன் கிங் 33, ரொஸ்டன் சேஸ் 29, ப்ளயா டிக்னர் 32 - 4 விக்., மைக்கல் ரே 66 - 3 விக்.)
நியூஸிலாந்து 1ஆவது இன்: 278 - 9 விக்;. டிக்ளயார்ட் (மிச்செல் ஹே 61, டெவன் கொன்வே 60, கேன் வில்லியம்சன் 37, அண்டர்சன் பிலிப் 70 - 3 விக்., கெமர் ரோச் 43 - 3 விக்.)
மேற்கிந்தியத் தீவுகள் 2ஆவது இன்: சகலரும் ஆட்டம் இழந்து 128 (கவெம் ஹொஜ் 35, ஜஸ்டின் க்றீவ்ஸ் 25, ப்றெண்டன் கிங் 22, ஜேக்கப் டவி 38 - 5 விக்., மைக்கல் ரே 45 - 3 விக்.)
நியூஸிலாந்து - வெற்றி இலக்கு 56 ஓட்டங்கள் - 2ஆவது இன்: 57 - 1 விக். (டெவன் கொன்வே 26 ஆ.இ., கேன் வில்லியம்சன் 16 ஆ.இ.)
ஆட்டநாயகன்: ஜேக்கப் டபி.
லண்டனில் சிறுமி துஷ்பிரயோக விவகாரம்: குற்றச்சாட்டுகளுக்கு மறுப்பு தெரிவித்த இலங்கை பிரஜை!
புதுடெல்லியில் காற்று மாசு தீவிரம்
இரசித்த.... புகைப்படங்கள்.
யாழ்ப்பாணத்தில் கடந்த சில நாட்களாக பெய்த மழை காரணமாக 2313 பேர் பாதிப்பு!
யாழ்ப்பாணத்தில் கடந்த சில நாட்களாக பெய்த மழை காரணமாக 2313 பேர் பாதிப்பு!
யாழ்ப்பாணத்தில் கடந்த சில நாட்களாக பெய்த மழை காரணமாக 2313 பேர் பாதிப்பு!
Published By: Digital Desk 1
13 Dec, 2025 | 11:23 AM
![]()
கடந்த சில நாட்களாக பெய்த பலத்த மழை மற்றும் கடும்காற்று காரணமாக யாழ்ப்பாணத்தில் 735 குடும்பங்களைச் சேர்ந்த 2313 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் பிரதிப் பணிப்பாளர் ரி.என்.சூரியராஜா தெரிவித்துள்ளார்.
அந்தவகையில், ஊர்காவற்துறை பிரதேச செயலாளர் பிரிவில் கடுமையான காற்று காரணமாக ஒரு குடும்பத்தை சேர்ந்த 5 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் வீடொன்றும் பகுதியளவில் சேதமடைந்துள்ளது.
காரைநகர் பிரதேச செயலாளர் பிரிவில் வெள்ள அனர்த்தத்தால் 472 குடும்பங்களைச் சேர்ந்த 1577 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் இரண்டு வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன.
கரவெட்டி பிரதேச செயலாளர் பிரிவில் வெள்ள அனர்த்தத்தால் 2 குடும்பங்களைச் சேர்ந்த ஆறுபேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், ஒரு வீடு பகுதியளவில் சேதமடைந்துள்ளது.
பருத்தித்துறை பிரதேச செயலாளர் பிரிவில் வெள்ள அனர்த்தத்தால் இரண்டு குடும்பங்களைச் சேர்ந்த 07 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
சண்டிலிப்பாய் பிரதேச செயலாளர் பிரிவில் வெள்ள அனர்த்தத்தால் 105 குடும்பங்களைச் சேர்ந்த 304 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் நான்கு வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன.
மருதங்கேணி பிரதேச செயலாளர் பிரிவில் வெள்ள அனர்த்தத்தால் 137 குடும்பங்களைச் சேர்ந்த 357 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் ஒரு வீடு பகுதியளவில் சேதமடைந்துள்ளது.
சாவகச்சேரி பிரதேச செயலாளர் பிரிவில் வெள்ள அனர்த்தத்தால் 7 குடும்பங்களைச் சேர்ந்த 20 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 4 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன.
உடுவில் பிரதேச செயலாளர் பிரிவில் வெள்ள அனர்த்தத்தால் 4 குடும்பங்களைச் சேர்ந்த 16 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
வேலணை பிரதேச செயலர் பிரிவில் சூறாவளியால் 5 குடும்பங்களைச் சேர்ந்த 11 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 5 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாக யாழ்ப்பாண மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் பிரதிப் பணிப்பாளர் ரி.என்.சூரியராஜா தெரிவித்துள்ளார்.