2 weeks ago
ஆப்கானிஸ்தான் விளையாடியதனை நான் பார்க்கவில்லை, குலாப்டினின் பேட்டியினை பார்த்தேன், ஆடுகளம் இரட்டைத்தன்மையாக உள்ளதாக கூறினார். வழமையாக சென்னை ஆடுகளம் (பிட்ச்) சிகப்பு மண்ணில் இருப்பதாக நினைவுள்ளது, இந்த போட்டிக்கு பயன்படுத்திய ஆடுகளம் கறுப்பு/சிகப்பு கலவை கொண்டதாக இருந்தது, ஆடுகளம் 170 - 175 ஓட்டங்கள் வெற்றிக்கான ஓட்டமாக இருக்கும் என கணித்திருந்தேன், ஆனால் ஆப்கானிஸ்தான் 182 ஓட்டங்களை பெற்றிருந்தது, அவர்களது பந்து வீச்சிற்கு இது ஒரு நிச்சயமான வெற்றி மாதிரியாகவே தோன்றியது. கறுப்பு மண் களிமண் ஈரலிப்பினை தன்னுள்ளே தக்கவைக்கும் சூரிய வெளிச்சத்திற்கு வேகமாக காயாது அதனால் வேகமாக ஆடுகளம் மாற்றம் ஏற்படாது, கறுப்பு மண்ணில் பந்து படும்போது பந்து வழுக்கிகொண்டு வரும் சிகப்பு மண் வேகமாக காயும் பந்து உயர்ந்து வரும் அதே போல திரும்பும். சூரிய வெளிச்சத்திற்கு மேல் மண் காயும் போது வேகப்பந்து வீச்சாளருக்கு பந்து சிப்பாகும் ஆனால் சீம் மூமென்ட் குறையும் அதோடு பந்தின் லெதர் சூரிய வெளிச்சத்தின் தாக்கத்தினால் வேகமாக பழசாகும் ரிவேர்ஸ் சுயிங் ஏற்படும். சுழல் பந்து வீச்சாளருக்கு மேலதிக கிறிப் கிடைப்பதால் பந்து திரும்பும் அதனால் முதலில் துடுப்பாடுவது என்ற ஆப்கானிஸ்தானின் முடிவு சரியானதாக இருக்கும் என கருதுகிறேன், அத்துடன் அவர்களது பந்து வீச்சு சிறப்பாக இருக்கும். இதனை ஒரு சர்ச்சையாகவே பார்க்கிறார்கள்.
2 weeks ago
தாயகத்தில் நாம் சிறுவர்களாக இருக்கையில் நம்பிய பாம்புக் கதைகளை நினைத்தால் இப்போது சிரிப்புத் தான் வருகிறது. கொம்பேறி மூக்கன் விசமில்லாத பாம்பு. கூகிள் தேடலில் இந்தப் பாம்பின் ஆங்கிலப் பெயர் Bronzeback tree snake என்று வருகிறது. எல்லா வகைப் பாம்புகளும் லாவகமாக மரங்களில் ஏறுவதில்லை. கொம்பேறி மூக்கன் மரங்களில் ஏறி மரங்களிலேயே வாழக் கூடிய ஒரு பாம்பு வகை. இதையொட்டி இட்டுக் கட்டிய கற்பனைக் கதை தான், "ஆளைக் கடித்து விட்டு மரத்தில் போய் ஏறிக் கொள்ளும் கொம்பேறி மூக்கன், கடித்த ஆள் இறந்து எரிக்கப் படும் புகை தெரியும் வரை மரத்தை விட்டு இறங்காது" என்ற கதை. (இதனால், "சும்மா எதையாவது எரித்து புகை கிளப்பினால், கொம்பேறி மூக்கன் இறங்கி வரும்" என்று சில ஊர்ப் பெரிசுகள் கதையை கௌதம் மேனன் பாணியில் நீட்டித்துச் சொல்லவும் கேட்டிருக்கிறேன்). கொம்பேறி மூக்கன் பற்றிய இன்னொரு அபாண்டமான பழி, இது "ஆண் சாரைப் பாம்பு" என்ற கதை. சாரைப் பாம்பும் கொம்பேறி மூக்கனும் வெவ்வேறு இனப் பாம்புகள். சாரை (Indian rat snake) மரங்களில் வேகமாக ஏற முடியாமல் தரையில் மாட்டிக் கொள்ளும் இன்னொரு விசமில்லாத பாம்பு. ஆனால், இரண்டுமே மிகவும் அச்சுறுத்தப் பட்டால் ஒரு சீறல் (hissing) ஒலியை எழுப்பக் கூடியவை, கடிக்கவும் செய்யும். ஆனால், விசப் பல் இல்லாமையால் சாதாரண காயம் ஏற்படும். உயிருக்கு ஆபத்துக்கள் இல்லை.
2 weeks ago
அறிவியல் உலகை ஆளும் ஈழத்துத் தமிழ் பெண் - அவுஸ்திரேலியாவில் கலாநிதி மேகலா பாலமுரளி சாதனை! ஈழ மண்ணிற்குப் பெருமை சேர்க்கும் வகையில், அவுஸ்திரேலியாவின் அறிவியல் மற்றும் ஆராய்ச்சித் துறையில் கலாநிதி மேகலா பாலமுரளி (Dr. Mehala Balamurali) அவர்கள் ஒரு மைல்கல் சாதனையைப் படைத்துள்ளார். சிட்னி பல்கலைக்கழகத்தின் ஆஸ்திரேலிய ரோபாட்டிக்ஸ் மையத்தில் சிரேஷ்ட ஆராய்ச்சி உறுப்பினராகப் பணியாற்றும் இவர், நவீன தொழில்நுட்ப உலகில் ஒரு முன்னோடியாகத் திகழ்கிறார். கலாநிதி மேகலாவின் ஆராய்ச்சிகள் இன்றைய காலத்திற்கு மிகவும் அவசியமான தரவு பகுப்பாய்வு மற்றும் அதன் அடிப்படையிலான முடிவெடுத்தல் ஆகியவற்றை மையமாகக் கொண்டுள்ளன. குறிப்பாக, சிக்கலான கணினி மாதிரிகள் மற்றும் செயற்கை நுண்ணறிவு நுட்பங்களைப் பயன்படுத்தி, தரவுகள் செறிந்த அமைப்புகளை எவ்வாறு திறம்பட நிர்வகிப்பது என்பதில் இவர் நிபுணத்துவம் பெற்றுள்ளார். இவரது கண்டுபிடிப்புகள் வெறும் ஆய்வகத்தோடு நின்றுவிடாமல் சுற்றுச்சூழல், சுகாதாரம் மற்றும் செயல்பாட்டுத் துறைகளில் நேரடித் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. 2013-ஆம் ஆண்டு முதல் சிட்னி பல்கலைக்கழகத்தில் பல்நோக்கு மற்றும் தொழில் சார்ந்த ஆராய்ச்சிகளில் இவர் முக்கிய பங்களிப்பை வழங்கி வருகிறார். இவரது ஆய்வுகள் உலகத் தரம் வாய்ந்த அறிவியல் இதழ்களில் அங்கீகரிக்கப்பட்டுள்ளன. மேகலாவின் கல்விப் பயணம் ஈழத்தின் பெருமைமிகு யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் இருந்து தொடங்கியது. அங்கு கணினி அறிவியலில் இளங்கலை பட்டத்தைப் பெற்ற அவர், பின்னர் அவுஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் பல்கலைக்கழகத்தில் கணக்கீட்டு மாதிரியாக்கத்தில் தனது முனைவர் பட்டத்தை நிறைவு செய்தார். தொடர்ந்து சிட்னி பல்கலைக்கழகத்தில் உயர் கல்விக்கான பட்டயத்தையும் பெற்றுள்ள இவர், தொழில்நுட்பத் துறையில் பெண்கள் கால்பதிப்பது அரிதாக இருந்த காலத்தில் தனது விடாமுயற்சியால் இந்த உயரத்தை எட்டியுள்ளார். இது ஈழத் தமிழ் சமூகத்திற்கும், உலகெங்கிலும் உள்ள பெண் சமூகத்திற்கும் ஒரு மிகப்பெரிய ஊக்கமளிக்கும் செய்தியாக அமைந்துள்ளது. அறிவியல் துறையில் ஈழத்து அடையாளத்தை உலக அரங்கில் நிலைநிறுத்தி வரும் கலாநிதி மேகலா பாலமுரளி அவர்களுக்குத் தமிழ் சமூகத்தின் சார்பில் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் குவிந்து வருகின்றன. இவரது சாதனைகள் வருங்காலத் தலைமுறை மாணவர்களுக்கு, குறிப்பாக பெண் ஆய்வாளர்களுக்கு ஒரு சிறந்த வழிகாட்டியாக அமையும் என்பதில் ஐயமில்லை. HR Tamil News
2 weeks ago

அறிவியல் உலகை ஆளும் ஈழத்துத் தமிழ் பெண் - அவுஸ்திரேலியாவில் கலாநிதி மேகலா பாலமுரளி சாதனை!
ஈழ மண்ணிற்குப் பெருமை சேர்க்கும் வகையில், அவுஸ்திரேலியாவின் அறிவியல் மற்றும் ஆராய்ச்சித் துறையில் கலாநிதி மேகலா பாலமுரளி (Dr. Mehala Balamurali) அவர்கள் ஒரு மைல்கல் சாதனையைப் படைத்துள்ளார். சிட்னி பல்கலைக்கழகத்தின் ஆஸ்திரேலிய ரோபாட்டிக்ஸ் மையத்தில் சிரேஷ்ட ஆராய்ச்சி உறுப்பினராகப் பணியாற்றும் இவர், நவீன தொழில்நுட்ப உலகில் ஒரு முன்னோடியாகத் திகழ்கிறார்.
கலாநிதி மேகலாவின் ஆராய்ச்சிகள் இன்றைய காலத்திற்கு மிகவும் அவசியமான தரவு பகுப்பாய்வு மற்றும் அதன் அடிப்படையிலான முடிவெடுத்தல் ஆகியவற்றை மையமாகக் கொண்டுள்ளன. குறிப்பாக, சிக்கலான கணினி மாதிரிகள் மற்றும் செயற்கை நுண்ணறிவு நுட்பங்களைப் பயன்படுத்தி, தரவுகள் செறிந்த அமைப்புகளை எவ்வாறு திறம்பட நிர்வகிப்பது என்பதில் இவர் நிபுணத்துவம் பெற்றுள்ளார்.
இவரது கண்டுபிடிப்புகள் வெறும் ஆய்வகத்தோடு நின்றுவிடாமல் சுற்றுச்சூழல், சுகாதாரம் மற்றும் செயல்பாட்டுத் துறைகளில் நேரடித் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. 2013-ஆம் ஆண்டு முதல் சிட்னி பல்கலைக்கழகத்தில் பல்நோக்கு மற்றும் தொழில் சார்ந்த ஆராய்ச்சிகளில் இவர் முக்கிய பங்களிப்பை வழங்கி வருகிறார். இவரது ஆய்வுகள் உலகத் தரம் வாய்ந்த அறிவியல் இதழ்களில் அங்கீகரிக்கப்பட்டுள்ளன.
மேகலாவின் கல்விப் பயணம் ஈழத்தின் பெருமைமிகு யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் இருந்து தொடங்கியது. அங்கு கணினி அறிவியலில் இளங்கலை பட்டத்தைப் பெற்ற அவர், பின்னர் அவுஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் பல்கலைக்கழகத்தில் கணக்கீட்டு மாதிரியாக்கத்தில் தனது முனைவர் பட்டத்தை நிறைவு செய்தார்.
தொடர்ந்து சிட்னி பல்கலைக்கழகத்தில் உயர் கல்விக்கான பட்டயத்தையும் பெற்றுள்ள இவர், தொழில்நுட்பத் துறையில் பெண்கள் கால்பதிப்பது அரிதாக இருந்த காலத்தில் தனது விடாமுயற்சியால் இந்த உயரத்தை எட்டியுள்ளார். இது ஈழத் தமிழ் சமூகத்திற்கும், உலகெங்கிலும் உள்ள பெண் சமூகத்திற்கும் ஒரு மிகப்பெரிய ஊக்கமளிக்கும் செய்தியாக அமைந்துள்ளது.
அறிவியல் துறையில் ஈழத்து அடையாளத்தை உலக அரங்கில் நிலைநிறுத்தி வரும் கலாநிதி மேகலா பாலமுரளி அவர்களுக்குத் தமிழ் சமூகத்தின் சார்பில் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் குவிந்து வருகின்றன. இவரது சாதனைகள் வருங்காலத் தலைமுறை மாணவர்களுக்கு, குறிப்பாக பெண் ஆய்வாளர்களுக்கு ஒரு சிறந்த வழிகாட்டியாக அமையும் என்பதில் ஐயமில்லை.
HR Tamil News
2 weeks ago
கையடக்கத் தொலைபேசியால் வீடொன்றின் அறை தீக்கிரை Published By: Digital Desk 3 08 Feb, 2026 | 04:44 PM தம்புள்ளை பகுதியில் கையடக்கத் தொலைபேசியை மின்னேற்றிக்கொண்டிருந்த போது ஏற்பட்ட மின் கசிவு காரணமாக வீடொன்றின் அறை தீப்பிடித்து எரிந்ததில் பாரிய சேதங்கள் ஏற்பட்டுள்ளன. இந்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாது, இம்முறை கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றவுள்ள மாணவி ஒருவர், தனது அறையில் கையடக்கத் தொலைபேசியை சார்ஜ் செய்து விட்டு மாணவியும் அவரது தாயாரும் அயல் வீடு ஒன்றுக்குச் சென்றுள்ளனர். இரவு சுமார் 10 மணியளவில் வீடு திரும்பிய போது, வீடு தீப்பற்றி எரிவதை அவர்கள் அவதானித்துள்ளனர். உடனடியாக பொது மக்கள், தம்புள்ளை மாநகர சபையின் தீ அணைப்பு பிரிவினர் மற்றும் பொலிஸார் இணைந்து தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர். இத்தீ விபத்தில் மாணவியின் உடைமைகள், பாடசாலை உபகரணங்கள், பாடப்புத்தகங்கள் உள்ளிட்ட அனைத்தும் முற்றாகச் சேதமடைந்துள்ளன. சம்பவ நேரத்தில் வீட்டில் எவரும் இல்லாததால் உயிர்ச்சேதம் ஏதும் ஏற்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது. மேலும், வீட்டில் தீ பரவுவதற்கான வேறு எந்தவித தடயங்களும் காணப்படாத நிலையில், தொலைபேசி சார்ஜ் செய்யப்பட்டிருந்த மின் இணைப்புப் பகுதியில் இருந்து தீ ஏற்பட்டுப் பரவியதற்கான ஆதாரங்கள் கண்டறியப்பட்டுள்ளதாக வீட்டு உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர். https://www.virakesari.lk/article/238164
2 weeks ago
நேபாளத்தின் கடும் சவாலுக்கு மத்தியில் கடைசிப் பந்தில் 4 ஓட்டங்களால் பரபரப்பான வெற்றியை ஈட்டியது இங்கிலாந்து 08 Feb, 2026 | 07:56 PM (நெவில் அன்தனி) மும்பை வான்கேட் விளையாட்டரங்கில் இன்று ஞாயிற்றுக்கிழமை (08) நடைபெற்ற ஐசிசி ஆடவர் ரி20 உலகக் கிண்ண கிரிக்கெட் சி குழு முதல் சுற்று போட்டியில் நேபாளத்திடம் கடும் சவாலை எதிர்கொண்ட இங்கிலாந்து கடைசிப் பந்தில் 4 ஓட்டங்களால் பரபரப்பான வெற்றியை ஈட்டியது. இணை உறுப்பு நாடான நேபாளம் இந்தப் போட்டியில் ஓர் அனுபவம் மிக்க அணி போல் விளையாடி பூரண அந்தஸ்து பெற்ற நாடுகளுக்கு சவால் விடுக்க முடியும் என்பதை னது ஆட்டத் திறனால் நிரூபித்தது. இப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்த இங்கிலாந்து 20 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து 184 ஓட்டங்களைப் பெற்றது. அதிரடிக்கு பெயர் பெற்ற முன்வரிசை வீரர்களான பில் சோல்ட் (1), டொம் பென்டன் (2), ஜொஸ் பட்லர் (26) ஆகிய மூவரும் பிரகாசிக்கத் தவறினர். (57 - 3 விக்.) இந் நிலையில் ஜேக்கப் பெத்தெல், அணித் தலைவர் ஹெரி ப்றூக் ஆகிய இருவரும் ஆக்ரோஷமாக துடுப்பெடுத்தாடி 4ஆவது விக்கெட்டில் 71 ஓட்டங்களைப் பகிர்ந்து இங்கிலாந்து அணிக்கு உரமூட்டினர். ஜேக்கப் பெத்தெல் 35 பந்துகளில் 4 பவுண்டறிகள், 4 சிக்ஸ்களுடன் 55 ஓட்டங்களைப் பெற்று ஆட்டம் இழந்ததைத் தொடர்ந்து சாம் கரன் (2) ஓட்டங்களுடன் வெளியேறினார். மொத்த எண்ணிக்கை 157 ஓட்டங்களாக இருந்தபோது ஹெரி ப்றூக் களம் விட்டகன்றார். அவர் 32 பந்துகளில் 4 பவுண்டறிகள், 3 சிக்ஸ்களுடன் 53 ஓட்டங்களைப் பெற்றார். வில் ஜெக்ஸ் 18 பந்துகளில் ஒரு பவுண்டறி, 4 சிக்ஸ்கள் உட்பட ஆட்டம் இழக்காமல் 39 ஓட்டங்களைப் பெற்று மொத்த எண்ணிக்கையை 184 ஓட்டங்களாக உயர்த்தினார். பந்துவீச்சில் திப்பேந்த்ரா சிங் அய்ரீ 23 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் நந்தன் யாதவ் 25 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர். 185 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய நேபாளம் 20 ஓவர்களில் 6 விக்கெட்களை இழந்து 180 ஓட்டங்களைப் பெற்று தோல்வி அடைந்தது. மிகச் சிறப்பாக தனது இன்னிங்ஸை ஆரம்பித்த நேபாளம் 23 பந்துகளில் 37 ஓட்டங்களைப் பெற்றிருந்தபோது ஆரம்ப வீரர் ஆசிப் ஷெய்க் (7) ஆட்டம் இழந்தார். மொத்த எண்ணிக்கைக்கு மேலும் 5 ஓட்டங்கள் மாத்திரம் சேர்ந்தபோது குஷால் புர்த்தெல் 29 ஓட்டங்களுடன் வெளியேறினார். (42 - 2 விக்.) தொடர்ந்து அணித் தலைவர் ரோஹித் பௌடெல், சிரேஷ்ட வீரர் திப்பெந்த்ரா சிங் அய்ரீ ஆகிய இருவரும் 3ஆவது விக்கெட்டில் 82 ஓட்டங்களைப் பகிர்ந்து இங்கிலாந்துக்கு நெருக்கடியைக் கொடுத்தனர். திப்பேந்த்ரா சிங் அய்ரீ 29 பந்துகளில் 6 பவுண்டறிகள், ஒரு சிக்ஸுடன் 44 ஓட்டங்களைப் பெற்றார். அய்ரீயைத் தொடர்ந்து ரொஹித் பௌடெல் 39 ஓட்டங்களுடனும் ஆரிவ் ஷெய்க் 10 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழந்தனர். லோக்கேஷ் பாம் துணிச்சலுடன் துடுப்பெடுத்தாடி நேபாளத்தின் வெற்றிக்காக கடுமையாக போராடினார். ஆனால், கடைசி ஓவரை சாம் கரன் கட்டுப்பாட்டுடன் வீசி இங்கிலாந்தை வெற்றிபெறச் செய்தார். லோக்கேஷ் பாம் 18 பந்துகளில் ஒரு பவுண்டறி, 4 சிக்ஸ்கள் உட்பட 39 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காதிருந்தார். பந்துவீச்சில் லியாம் டோசன் 21 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களை வீழ்த்தினார். ஆட்டநாயகன்: வில் ஜெக்ஸ் https://www.virakesari.lk/article/238172
2 weeks ago
அமெரிக்காவுடன் மோதல் வெடித்தால் இரான் முன்னுள்ள 4 வாய்ப்புகள் பட மூலாதாரம்,Getty Images கட்டுரை தகவல் பர்னியன் சடேகி பிபிசி மானிட்டரிங் 7 மணி நேரங்களுக்கு முன்னர் அமெரிக்காவுடனான பதற்றத்தைக் கருத்தில் கொண்டு, இரானின் தலைமை தீவிர ராஜிய ரீதியான தனது முயற்சிகளை தீவிரப்படுத்தியுள்ளது. தாக்குதலுக்கு எதிராக டிரம்புக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் பிராந்திய சக்திகளை செயல்படுத்த இரான் தலைமை முயற்சிக்கிறது. இரான் மீதான அமெரிக்காவின் தாக்குதல் பிராந்திய போரை தூண்டக்கூடும் என இரான் கூறியுள்ளது. சௌதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஜோர்டான் ஆகியவை தங்களின் வான்வெளி மற்றும் நிலப்பரப்பை பயன்படுத்தி இரான் மீதான எந்தவொரு சாத்தியமான தாக்குதலுக்கும் அனுமதிக்க மாட்டோம் என ஏற்கெனவே தெளிவாக கூறியுள்ளன. இது, அமெரிக்காவுக்கான வாய்ப்புகளை கட்டுப்படுத்தியுள்ளது. அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் ராணுவ தளங்கள் மற்றும் வளங்களையும் இலக்கு வைப்போம் என இரான் எச்சரித்துள்ளது. இராக், பஹ்ரைன், கத்தார், ஐக்கிய அரபு அமீரகம், சௌதி அரேபியா, குவைத், ஜோர்டான் மற்றும் மத்திய கிழக்கில் உள்ள சிரியா ஆகிய நாடுகளில் சாத்தியமான தாக்குதல்கள் நடக்கக்கூடும். அமெரிக்காவுடனான முந்தைய மோதல்களுக்கு இரானின் எதிர்வினை அடையாள ரீதியானதாக மட்டுமே இருந்தது. 2025ஆம் ஆண்டு இரான்-இஸ்ரேல் போரின்போது அமெரிக்காவின் தாக்குதல்களை தொடர்ந்து இரான் முன்கூட்டியே எச்சரித்துவிட்டு கத்தாரின் அல் உதெய்ட் விமானப் படை தளம் மீது தாக்குதல் நடத்தியது. காசிம் சுலைமானி கொல்லப்பட்ட பின்னர், 2020 ஜனவரியில் இராக்கின் ஐன் அல்-அசாத் விமானப்படைத் தளத்தின் மீது தாக்குதல் நடத்துவதற்கு முன்பும் இரான் அமெரிக்காவை எச்சரித்திருந்தது. பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,ஜனவரி 14, 2026 அன்று டெஹ்ரானில் நடந்த போராட்டங்களின் போது கொல்லப்பட்ட பாதுகாப்புப் படையினரின் இறுதிச் சடங்கின் போது இரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி காமனெயி படங்களை ஏந்தியிருக்கும் இரானிய பெண்கள். எனினும், தற்போதைய சூழலில் அமெரிக்காவின் எந்தவொரு தாக்குதலையும் தன்னுடைய இருப்புக்கு ஏற்பட்டிருக்கும் அச்சுறுத்தலாக இரான் கருதலாம். இரானின் சமீபத்திய பதற்றமான சூழலின்போது டிரம்ப், "இரானில் புதிய தலைமையை" கண்டறிய வேண்டிய நேரம் என டிரம்ப் தெரிவித்திருந்தார். அங்கு புதிய போராட்டங்களைத் தூண்டி இஸ்லாமிய குடியரசு ஆட்சியை கவிழ்க்க ராணுவ வாய்ப்புகள் குறித்து அவர் யோசித்ததாகவும் தகவல் வெளியானது. பதற்றம் அதிகரித்த நிலையில், தங்கள் நாட்டின் மீதான எந்தவொரு தாக்குதலும் போர் நடவடிக்கையாக கருதப்படும் என இரான் எச்சரித்திருந்தது. இரானின் கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு கட்டமைப்பின் மீது அமெரிக்கா 'சர்ஜிக்கல் ஸ்டிரைக்' நடத்துவதைத் தடுக்க இரானின் முயற்சியாக இது பார்க்கப்படுகிறது. நாடு கடத்தப்பட்ட இரானின் எதிர்தரப்பு தலைவர் ரெஸா பஹ்லவி அத்தகைய தாக்குதலுக்கு அழைப்பு விடுத்திருப்பது, தற்போதைய சூழலில் அமைப்பை மேலும் பலவீனப்படுத்தி, இரானில் புதிய போராட்டங்களை தூண்டக்கூடும். 1. பாலிஸ்டிக் ஏவுகணைகளை ஏவுதல் பட மூலாதாரம்,Fatemeh Bahrami/Anadolu via Getty Images படக்குறிப்பு,இரானின் 'புனித பாதுகாப்பு வாரத்தின்' (Sacred Defense Week) ஒரு பகுதியாகவும், இரான்-இராக் போரின் 45வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் விதமாகவும், செப்டம்பர் 27, 2025 அன்று டெஹ்ரானின் பஹரிஸ்தான் சதுக்கத்தில் பாலிஸ்டிக் ஏவுகணைகள், வான் பாதுகாப்பு அமைப்புகள் மற்றும் ஆளில்லா வான்வழி வாகனங்கள் (ட்ரோன்கள்) காட்சிப்படுத்தப்பட்டன. அமெரிக்க வெளியுறவு செயலாளர் மார்கோ ரூபியோ கடந்த ஜனவரி 28ஆம் தேதி, 30,000 முதல் 40,000 வரையிலான அமெரிக்க துருப்புகள் மத்திய கிழக்கின் எட்டு அல்லது 9 தளங்களில் நிறுத்தப்பட்டுள்ளதாகவும் அவர்கள் அனைவரும் 'ஆயிரக்கணக்கான இரானிய யுஏவி (டிரோன்கள்) மற்றும் இரானிய குறுகிய தூர பாலிஸ்டிக் ஏவுகணைகளின் தாக்குதல் வரம்புக்குள்ளேயே நிறுத்தப்பட்டுள்ளதாக' கூறினார். இரானிடம் குறுகிய மற்றும் நடுத்தர தூரம் வரை சென்று இலக்குகளை தாக்கவல்ல சுமார் 2,000 பாலிஸ்டிக் ஏவுகணைகள் உள்ளதாக கருதப்படுகிறது. இஸ்ரேலுடனான போரின்போது, இரான் பல பாலிஸ்டிக் ஏவுகணைகளை ஏவியது. அவற்றில் சில ஏவுகணைகள் இஸ்ரேலின் மேம்பட்ட வான் பாதுகாப்பு அமைப்புக்குள் ஊடுருவதில் வெற்றி கண்டன. அந்தப் பிராந்தியத்தில் அமெரிக்கா ஏவுகணை தடுப்பு அமைப்புகளை வைத்துள்ளது, ஆனால் இஸ்ரேலை விட அமெரிக்கா இன்னும் பெரிய பகுதியை பாதுகாக்க வேண்டியிருக்கும். கடந்தாண்டு ஜூன் மாதத்திலிருந்து ரஷ்யா மற்றும் சீனா ஆகிய நாடுகளும் இரான் தன்னுடைய ராணுவ திறன்களை மேம்படுத்த உதவி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. 2. எதிர் தாக்குதல் கொள்கை பட மூலாதாரம்,Fadel Itani/NurPhoto via Getty Images படக்குறிப்பு,ஜனவரி 26, 2026 அன்று லெபனானின் பெய்ரூட்டில் நடந்த ஆர்ப்பாட்டத்தின் போது ஹெஸ்பொலா பொதுச் செயலாளர் ஷேக் நைம் காசெமின் உரையை மக்கள் கேட்கிறார்கள். டஹியே பகுதியில் ஹெஸ்பொலா மற்றும் இரானிய கொடிகள் மற்றும் இரானின் அதிஉயர் தலைவர் அயதுல்லா அலி காமனெயி சுவரொட்டிகளை ஏந்திய மக்கள் கூடியிருந்தனர். இரானின் பழைய ராணுவ தொழில்நுட்பம் அமெரிக்காவின் நவீன தொழில்நுட்பத்துடன் போட்டியிட முடியாது, எனவே இரான் தன்னுடைய பாரம்பரிய வியூகத்தை மாற்றலாம். வேகமான தாக்குதல் படகுகள் அல்லது டிரோன்களை ஒரே நேரத்தில் அனுப்பி எதிரி சென்சார்கள் மற்றும் வான் பாதுகாப்புகளை செயலிழக்க செய்ய முயற்சிக்கலாம். பெர்சிய வளைகுடாவில் தங்களின் வேக படகுகள் மற்றும் ஷாஹெத்-136 டிரோன்களை பயன்படுத்தி, யுக்ரேனிய போரில் ரஷ்யா பெரியளவில் பயன்படுத்தியது போன்ற ஒரு வியூகத்தை இரான் தழுவக்கூடும். பதற்றம் அதிகரித்துவரும் சூழலில், சில இரானிய ஊடகங்கள், குறிப்பாக புரட்சிகர காவல்படையுடன் தொடர்புடையதாக கூறப்படும் சில ஊடகங்கள், இந்த வியூகத்தை வலியுறுத்தி கூறுகின்றன. ஜனவரி 29ஆம் தேதி இரானிய ராணுவம் தங்களுக்கு 1,000 'ஸ்டிரேட்டஜிக் டிரோன்கள்' கிடைக்கப் பெற்றுள்ளதாக அறிவித்தது. 3. பிராந்திய கூட்டாளிகளை முடுக்கி விடுதல் பட மூலாதாரம்,Fadel Itani/NurPhoto via Getty Images படக்குறிப்பு,இரான் பல தசாப்தங்களாக ஹெஸ்பொலா உட்பட அதன் நட்பு ஆயுதக்குழுக்களுக்கு நிதியளித்து உதவி செய்துவருகிறது இரான் பல தசாப்தங்களாக தன்னுடைய கூட்டணி ஆயுதக்குழுக்களுக்கு (Axis of Resistance) நிதியளித்து ஆயுதங்களை வழங்கியுள்ளது. இதில், இராக்கில் உள்ள ஆயுதக்குழுக்கள், லெபனானில் ஹெஸ்பொலா மற்றும் ஏமனில் ஹூதிகள் போன்றவை அடங்கும். இரானிய நட்பு நாடுகளில் உள்ள இத்தகைய குழுக்களை குறிப்பிடத்தக்க அளவில் இஸ்ரேல் கடந்த இரண்டு ஆண்டுகளில் சேதப்படுத்தியுள்ளது. இதன்மூலம் இரான் தனது எல்லைக்கு அப்பால் செல்வாக்கை பயன்படுத்தும் திறனை இஸ்ரேல் குறைத்துள்ளது. இருப்பினும், இந்தக் குழுக்கள் கூட்டாக அமெரிக்க இலக்குகளைத் தாக்கினால் கடுமையான அச்சுறுத்தலை ஏற்படுத்தக்கூடும். இந்த குழுக்கள் 2025ஆம் ஆண்டு இரான் - இஸ்ரேல் போரில் நேரடியாக ஈடுபடவில்லை, ஆனால் அமெரிக்காவுடனான போர் இரானுக்கு அதன் இருப்புக்கான அச்சுறுத்தலாக மாறினால் இரான் மற்றும் அதன் நட்பு ஆயுதக்குழுக்களின் எதிர்வினைகள் மாறக்கூடும். இதுவரை, இரான் ஆதரவு பெற்ற பி.எம்.எஃப்(Popular Mobilization Forces - PMF) உடன் இணைந்த சில இராக்கிய குழுக்கள் இரானைப் பாதுகாப்பது பற்றிப் பேசியுள்ளன. அதேபோன்று, அல்-நுஜாபா இயக்கம் மற்றும் பத்ர் அமைப்பு (Badr) ஆகியவை இரானுக்கு தங்களின் ஆதரவை அறிவித்துள்ளன. ஹெஸ்பொலாவின் பொதுச் செயலாளர் ஷேக் நைம் காசெம் இரானுக்கான ஆதரவை தெரிவித்துள்ள நிலையில், அமெரிக்காவின் தாக்குதலுக்கு எதிராகவும் எச்சரித்துள்ளார். அமெரிக்கா தாக்குதல் நடத்தினால், தங்களின் குழு எப்போது, எப்படி தலையிடுவது என்பது குறித்து முடிவு செய்யும் என்றும் அவர் கூறியுள்ளார். அமெரிக்கா இரானை தாக்கினால், ஹூதிகள் செங்கடலில் அமெரிக்க கப்பல்கள் மீதான தாக்குதலை மீண்டும் தொடங்கலாம். ஜனவரி 26ஆம் தேதி, கப்பல் ஒன்று தீப்பிடித்து எரியும் வீடியோவை ஹூதிகள் வெளியிட்டிருந்தனர், அதில் "விரைவில்" (Soon) என எழுதப்பட்டிருந்தது. எனினும், 2025ஆம் ஆண்டு மே மாதம் அமெரிக்காவுடன் எட்டப்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தத்தை கடைபிடிக்க ஹூதிகள் விரும்பினால், இரானுக்கு ஆதரவளிக்க வேண்டாம் என அந்த அமைப்பு முடிவெடுக்கலாம். 4. ஹோர்முஸ் நீரிணையை மூடுதல் மேற்கு நாடுகளுடனான எந்தவொரு பெரும் பதற்றத்தின் போதும் இரான் தொடர்ந்து விடுக்கும் பழைய அச்சுறுத்தலே இது. வளைகுடாவின் இந்தக் குறுகிய பாதை வழியே உலகின் எண்ணெய் போக்குவரத்தில் ஐந்தில் ஒரு பங்கு நடக்கிறது. கடல் கண்ணிவெடிகள், குரூயிஸ் ஏவுகணைகள், கடலோர பாதுகாப்பு அமைப்புகள், அதிவேக படகுகள் ஆகியவை நீரிணையை மூடுவதற்கு பயன்படுத்தக்கூடும். இரானின் கடைசி புகலிடமாக இது இருக்கக்கூடும். ஏனெனில், இரானிடமிருந்து அதிகளவில் எண்ணெய் வாங்கிவரும் அதன் நட்பு நாடான சீனா மற்றும் இரானுக்கு தற்போது வரை ஆதரவு அளித்து வரும் வளைகுடா நாடுகளின் வர்த்தகத்தையும் இது பெருமளவில் பாதிக்கக்கூடும். அதனால்தான் சமீபத்திய அமெரிக்க-இரான் பதற்றங்களின் போது இரானின் சொல்லாடல்களில் இது முக்கியமாக இடம்பெறவில்லை. என்ன நடக்கலாம்? இரான் மற்றும் அமெரிக்கா இரு நாடுகளுமே ராஜ்ஜீய ரீதியிலான தீர்வுக்கு முன்னுரிமை அளித்தாலும், அவர்களின் நிலைப்பாடுகளில் உள்ள மிகப்பெரிய இடைவெளி காரணமாக இரு தரப்புக்கும் இடையே ஒரு ஒப்பந்தம் ஏற்படுவது எளிதானது அல்ல. டிரம்ப் நிர்வாகம் படைபலத்தைப் பயன்படுத்தினால், இரான் தனது நிலைப்பாட்டை தளர்த்திக் கொண்டு இஸ்லாமியக் குடியரசைக் காப்பாற்ற அமெரிக்காவுக்கு சில சலுகைகளை அறிவிக்கக் கூடும். மறுபுறம், மோதலின் போது இரான் அமெரிக்காவுக்கு அதிக சேதத்தை ஏற்படுத்தக்கூடும். அதனால் அது மீண்டும் பேச்சுவார்த்தைக்குத் திரும்பும் நிலை வரலாம். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cg7e98jy9jjo