2 weeks 4 days ago
கொக்குத்தொடுவாய் மனித புதைகுழிகளில் இருந்து மீட்கப்பட்ட பிற பொருட்கள் அடையாளம் காணப்பட்டனவா? 30 Aug, 2025 | 03:54 PM துப்பாக்கிச் சூடு அல்லது வெடிப்பு காயங்களால் உயிரிழந்த ஐம்பதுக்கும் மேற்பட்டோரின் எலும்புகள் அகழ்ந்து எடுக்கப்பட்ட பின்னர் நீதிமன்ற உத்தரவிற்கு அமைய மூடப்பட்ட, முல்லைத்தீவு கொக்குத்தொடுவாய் மனித புதைகுழியில் இருந்து மீட்கப்பட்ட பிற பொருட்களின் அடையாளத்தை வெளிப்படுத்த எவரும் முன்வரவில்லை என்பது தெரியவந்துள்ளது. இலங்கையின் ஆறாவது பெரிய மனித புதைகுழியான கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி தொடர்பான வழக்கு, முல்லைத்தீவு நீதவான் நீதிமன்ற நீதிபதி தர்மலிங்கம் பிரதீபன் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. மீட்கப்பட்ட பிற பொருட்களை அடையாளம் காண்பதற்கான பத்திரிகை விளம்பரத்தை காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகம் (OMP) வெளியிட்டு மூன்று வாரங்கள் ஆவதாக, வழக்கு விசாரணையின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட பாதிக்கப்பட்டவர்கள் சார்பில் முன்னிலையாகும் சட்டத்தரண வி. எஸ். நிரஞ்சன் தெரிவிக்கின்றார். எனினும், கொக்குத்தொடுவாய் மனித புதைகுழியில் இருந்து மீட்கப்பட்ட பிற பொருட்களின் அடையாளத்தை வெளிப்படுத்த எவரும் முன்வந்ததாக இதுவரை எந்த தகவலும் கிடைக்கவில்லை என சட்டத்தரணி மேலும் தெரிவிக்கின்றார். "நபர்களை அடையாளம் காணும் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. இந்த பத்திரிகை விளம்பரம் வெளியிடப்பட்டு மூன்று வாரங்கள் ஆகின்றன. இதற்கு கால அவகாசம் போதுமானதல்ல என்பதால் OMP அலுவலகம் இன்று நீதிமன்றத்தில் தொடர்புடைய அறிக்கையை சமர்ப்பிக்கவில்லை. இது தொடர்பாக எங்களுக்கும் எந்த தகவலும் கிடைக்கவில்லை." கொக்குத்தொடுவாய் மனித புதைகுழியில் இருந்து மீட்கப்பட்ட பிற பொருட்களின் அடையாளத்தை வெளிப்படுத்தக்கூடிய தகவல்கள் இருந்தால், அச்சமின்றி முன்வருமாறு அழைப்பு விடுத்த சட்டத்தரணி வி.எஸ். நிரஞ்சன், அவ்வாறு முன்வருபவர்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும் எனவும் வலியுறுத்தினார். ஓகஸ்ட் 3ஆம் திகதி OMP அலுவலகம் பத்திரிகையில் வெளியிட்ட விளம்பரம் சரியான முறையில் மக்களைச் சென்றடைந்திருக்கும் என்ற நம்பிக்கை உள்ளதா? என, ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த சட்டத்தரணி வி.எஸ். நிரஞ்சன், பத்திரிகை விளம்பரம் உடனடியாக மக்களைச் சென்றடையவில்லை என சுட்டிக்காட்டினார். "இது மக்களைச் சென்றடைந்ததா என்பதை மக்களிடம் கேட்டுதான் அறிய முடியும். ஏனெனில் பத்திரிகை விளம்பரங்கள் உடனடியாக மக்களைச் சென்றடைவதில்லை." தாம் பட்டியலிட்டுள்ள பிற பொருட்கள் பற்றிய தகவல் அறிந்தவர்கள், 2025 செப்டம்பர் 4 ஆம் திகதிக்கு முன்னர் நேரடியாக தமது பிரதான காரியாலயம் அல்லது பிராந்திய காரியாலயங்களுக்கு வருமாறு, காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகம் ஓகஸ்ட் 3, 2025 அன்று வெளியிட்ட பத்திரிகை விளம்பரத்தில் மக்களிடம் கோரிக்கை விடுத்திருந்தது. கொக்குத்தொடுவாய் மனித புதைகுழியில் இருந்து மீட்கப்பட்ட 30 மனித எலும்புகளுடன் தொடர்புடைய பிற பொருட்களின் பட்டியல் விளம்பரத்தில் வெளியிடப்பட்டது. கொக்குத்தொடுவாய் புதைகுழியில் இருந்து எடுக்கப்பட்ட சடலங்கள் 90களின் நடுப்பகுதியில் புதைக்கப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் உறுப்பினர்களுடையது என முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றில் 2024 மார்ச் மாதம் கையளித்த இடைக்கால அறிக்கையில் தொல்லியல் துறை பேராசிரியர் ராஜ் சோமதேவ குறிப்பிட்டிருந்தார். தடவியல் தொல்பொருள் பேராசிரியர் ராஜ் சோமதேவ தலைமையிலான குழு, மார்ச் 22, 2024 அன்று முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றத்தில் சமர்ப்பித்த அறிக்கையில், மனித புதைகுழியில் இருந்து மீட்கப்பட்ட உடல்கள் 1994 மற்றும் 1996 ஆண்டுகளுக்கு இடைப்பட்டவை எனவும், சடலங்கள் முறையாக புதைக்கப்படவில்லை எனவும் குறிப்பிடப்பட்டிருந்தது. பாதிக்கப்பட்டவர்கள் உயிரிழக்கும் முன்னர் துப்பாக்கிச் சண்டையை எதிர்கொண்டிருந்ததாகவும் அறிக்கையின் அனுமானம் வெளியிடப்பட்டிருந்தது. ஜூலை 15, 2024 அன்று அகழ்வு முடிவுக்கு கொண்டுவரப்பட்ட முல்லைத்தீவு கொக்குத்தொடுவாய் மனித புதைகுழியில் இருந்து மீட்கப்பட்ட 52 உடல்களில் ஒருவரைத் தவிர ஏனைய அனைவரும் துப்பாக்கிச் சூடு அல்லது வெடிப்பு காயங்களால் உயிரிழந்துள்ளதாக சட்ட வைத்திய அதிகாரி வைத்தியர் கனகசபாபதி வாசுதேவவின் தனது அறிக்கையில் அனுமானம் வெளியிட்டிருந்தார். 2023 ஆம் ஆண்டு ஜூன் மாத இறுதியில், கொக்குத்தொடுவாய் மகாவித்தியாலயத்திலிருந்து கொக்கிளாய் நோக்கி சுமார் 200 மீற்றர் தொலைவில், நீர் வழங்கல் திணைக்கள ஊழியர்கள் நீர் குழாய்களை அமைப்பதற்காக நிலத்தை தோண்டிக் கொண்டிருந்த போது, மனித உடல் பாகங்கள் மற்றும் ஆடைத் துண்டுகள் வெளிப்பட்டன. https://www.virakesari.lk/article/223783
2 weeks 4 days ago
"அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English / பகுதி Part: 24 A [This detailed Tamil article is based on the unfinished historical book 'History of Sri Lanka' by my late friend, Mr. Kandiah Easwaran, a civil engineer. The English summary below is his own version. / இந்த விரிவான தமிழ் கட்டுரை, எனது மறைந்த நண்பர், பொறியியலாளர் திரு. கந்தையா ஈஸ்வரன் எழுதிய முடிக்கப்படாத "இலங்கை வரலாறு" என்ற புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டது. கீழே உள்ள ஆங்கிலச் சுருக்கம் அவரது சொந்த பதிப்பாகும்.] பகுதி: 24 A / விஜயனின் பின் ஆட்சி செய்த மன்னர்களும் அது தொடர்பான விபரங்களும் / 'நாக[Naga]வில் முடிவடையும் பெயர் தமிழர்களைக் குறிக்குமா?' மகசுழியின் மகன் குடகன்ன தீசன் [Kutakanna Tissa, also known as Makalan Tissa] இருபத்திரண்டு ஆண்டுகள் அரசாண்டான். குடகன்ன திஸ்ஸ என்பது தமிழ்ப் பெயராகவும் இருக்கலாம்? அவர் மகாவம்சம் 34-30 படி அனுலாவைக் கொன்று ஆட்சியைக் கைப்பற்றினான். அவரது மகன் அபயன் (Abhaya / மகாவம்சத்தில் பட்டிகாபய / Bhatikabhaya) அவரது தந்தைக்கு பின் இருபத்தெட்டு ஆண்டுகள் ஆட்சி செய்தார். பிறகு, குடகன்ன தீசனின் மற்றொரு மகனான மகாதத்திக நாகன் [Mahadathika Naga] பன்னிரண்டு ஆண்டுகள் அரசாண்டான். தத்திக [Dathika] முன்பு கூறியது போல் ஒரு தமிழ் மன்னன். மகாதத்திக, என்பது பெரிய அல்லது உயர்ந்த தத்திக ஆகும். எனவே, மகாதத்திக ஒரு தமிழ்ப் பெயராக இருக்க வேண்டும். நாகசாமி, நாகராஜா, நாகபூசன்னி, நாகப்பட்டினம், நாகர்கோயில் போன்ற பல தமிழ் பெயர்களுக்கு நாக என்பது மிகவும் பொதுவான முன்னொட்டு என்பதையும் கவனிக்க. மகாதத்திக நாகனின் மகன் அமந்தகாமினி [Amandagamani] ஒன்பது ஆண்டுகள் ஒன்பது மாதங்கள் ஆட்சி செய்தான். தீபவம்சத்தின்படி அவரது முழுப்பெயர் அமந்தகாமினி அபயன் [Amandagamani Abhaya, also referred as Aḍagamunu]. தந்தை தமிழராக இருந்ததைப் போல அவரும் தமிழராக இருக்க வேண்டும்? அவருக்குப் பிறகு அவரது இளைய சகோதரர் கனிராஜனு திஸ்ஸன் [Kanirajanu Tissa] மூன்று ஆண்டுகள் ஆட்சி செய்தார். அவரும் வம்சாவளி தமிழராக இருக்க வேண்டும்? அமந்தகாமினியின் மகன் சூலபாயன் [Chulabhaya] அவனுக்கு ஒரு வருடம் கழித்து ஆட்சி செய்தான்; இவனும் தமிழனாக இருக்க வேண்டும்? தனது சகோதரர், மன்னர் அமந்தகாமினியைக் கொன்று அரியணை ஏறினார் என்பதால், மகாவம்சம் அரசன் கனிராஜனு திஸ்ஸாவை ஒரு தீய மன்னன் என்று குறிப்பிடுகிறது. அமந்தகாமினியின் மகள் சிவாலி அல்லது ரேவதி [Sivali, also known as Revati / சூலபாயனின் சகோதரியான சிவாலி], நான்கு மாதங்கள் ஆட்சி செய்தாள். அமந்தகாமினியின் சகோதரியின் மகன் இளநாகன் சிவாலியை ஆட்சியிலிருந்து அகற்றி ஆறு ஆண்டுகள் ஆட்சி செய்தான். இளநாக, அதாவது இளம் நாகம் என்பது தெளிவான தமிழ் பெயர். இளநாகனின் மகன் சந்தமுக சிவா [Candamukha Siva] எட்டு வருடமும் ஏழு மாதமும் ஆட்சி செய்தான். சந்தமுக சிவா என்பதும் தமிழ்ப் பெயராகும். அது மட்டும் அல்ல, சந்தமுக சிவாவின் வம்சாவளி தமிழர் ஆகும். தமிழில் ‘சந்திரமுகி’ [‘Chandramuki'] என்ற பெயரில் ஒரு படம் வந்தது. தமிழ் தேவி [Damila Devi] என்று அழைக்கப்படும் சந்தமுக சிவாவின் மனைவி, ஒரு பௌத்த நிறுவனமான அரமாவிற்கு தனது சொந்த வருமானத்தை வழங்கினார். பௌத்தத்தில், அரம (arama / आराम) என்றால் "துறவற வாழ்விடம்" என்று பொருள். அதாவது துறவிகள் வசிக்கும் மற்றும் அவர்களின் நம்பிக்கையை கடைப்பிடிக்கும் மற்றும் ஒன்றாக கூடும் இடம் என பொருள்படும். மன்னரும் ராணியும் சைவ சமயத்தைச் சேர்ந்தவர்களாகத் தோன்றினாலும் அவர்கள் புத்த அராமாக்கு நன்கொடை அளித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. மீண்டும், தீபவம்சம் பௌத்தத்திற்கு ஆதரவானது, ஆனால் தமிழர்களுக்கு எதிரானது அல்ல என்பதை நினைவில் கொள்ளுங்கள். மகாவம்சத்தில் அவரைப் பற்றிய ஒரு கதை உள்ளது, அதில் தமிழ் தொடர்பை ஊகிக்க முடியும். அடகெமுனுவுக்கும் (ஆமந்தகாபனி அபயன்) வசபாவுக்கும் / வசபனுக்கும் [Adagemunue and Vasabha] இடையில் இருந்த ஏழு அரசர்களைப் பற்றி இராசவலிய கூறுகிறது, என்றாலும் அவர்களின் ஆட்சிக்காலம் குறிப்பிடப்படவில்லை. கி.பி. எழுபதாம் ஆண்டில் வாழ்ந்த, பொதுவாக மூத்த பிளினி / பிளைனி (Pliny the Elder) என்று அழைக்கப்பட்ட, கையசு பிலினியசு செக்குண்டசு (Gaius Plinius Secundus, கிபி 23 / 24 – கிபி 79 ) என்ற மேனாட்டு வரலாற்றாசிரியன், இலங்கையைப் பற்றி சில சுவாரஸ்யமான தகவல்கள் தருகிறார். யாழ்ப்பாண தீபகற்ப அரசின் பண்டைய தலைநகர், நல்லூருக்கு நகர முன், தலைநகராகவும் பன்னாட்டு வர்த்தக மையமாகவும் விளங்கிய, சிலாபத்துறைக்கு அருகில் மன்னார் வளைகுடாவில் இலங்கையின் மேற்கு கடற்கரையில் அமைந்துள்ள, பண்டைய துறைமுக நகரமான குதிரைமலை (கிரேக்கம்: Hippuros) பகுதிக்கு அன்னிஸ் பிலோகேன்ஸ் [A freed man of Rome, Annius Plocanus by name] என்ற ரோம் நாட்டவர் வந்த பொழுது, அவரை அங்கு மக்கள் நல்ல வரவேற்பு அளித்து ஏற்றுக் கொண்டனர். அப்பொழுது, கி பி 50 இல், அங்கு இருந்த இலங்கை அரசனின் பெயர் சந்திரமுக சிவா [The king of Ceylon at that time (circa 50 a.d.) was Sandamukha Siva or Sandamuhune (“the moon-faced one”)] என பதியப்பட்டுள்ளது. சந்தமுகன் கி.பி. முதலாம் நூற்றாண்டில், கி.பி. 44 - 52 வரை [Sandamukha Siva /Chandramukhaseewa / Chandamukha / சந்தமுகன், 44 – 52 AD] அனுராதபுரத்தை ஆட்சி செய்து வந்தான். இவனது தந்தையான இளநாகனின் பின் இவன் ஆட்சிபீடம் ஏறினான் என மகாவம்சத்திலும் கூறப்பட்டு உள்ளது. அதன் பின் அரசன் ரோம் நாட்டிற்கு தூது குழு ஒன்றை அனுப்பினார். அவர்களின் தலைவரை 'ராசியா' என குறிப்பிடுகிறார் [the king despatched to the court of Claudius Caesar an embassy consisting of four persons, the chief of whom the historian Pliny describes as Rachia —“ Legatos qiiattuor misit principe corum Rachia"]. 'ராசியா' வை , ராஜா என்பதன் திரிபாக இருக்கலாம் என்று ஜேம்ஸ் எமர்சன் ரெனென்ற் அவர்களும் [Tennent seems to think that “ Rachia” is a Roman corruption of Rajah ], அது 'இரசையா' வாக இருக்கலாம் என்று "Twentieth Century Impressions Of Ceylon" by Arnold Wright யிலும் (perhaps Rasiah) குறிக்கப்பட்டுள்ளது, அதே நேரத்தில் சைமன் காசிச்செட்டி அதை ஆராச்சி [தலைவர்] என குறிப்பிடுகிறார். [“ Rachia ” is meant “ Arachchi ” (chieftain)] மேலும் அங்கு ஐநூறு நகரங்கள் இருந்தன எனவும், அதில் தலைமை நகரம் பலேசிமுண்டோ என குறிப்பிடுகிறார். [five hundred cities in their country, the chief of which was called “ Palaesimundo,”]. இது பழையநகர் [perhaps a corruption of Palayanakar.] என்னும் தமிழ் சொல்லின் திரிபாக இருக்கலாம் என்றும், அப்படியாயின் அதை பண்டைய துறைமுக நகரமான குதிரைமலையை உள்ளடக்கிய நகரமாக இருக்கலாம் என நாம் கருதலாம் என்று எண்ணுகிறேன்?. இதேவேளை, பண்டைய இந்திய நூலான கௌடில்யரின், கி.மு. 350-283 வருடத்தை சேர்ந்த அர்த்தசாஸ்திரம் [Kautilya's Arthaidstra] இலங்கையை, பெருங்கடலுக்கு அப்பால் உள்ள நிலம் அல்லது இதனின் மறுபுறம் ["of the other side of or beyond the ocean,"] என்ற கருத்தில் பரசமுத்திர [Parasamudra ] என்று அழைப்பதாகவும் அறிகிறேன். மேலும் பலேசிமுண்டோ என்பது, தமிழ் சொல் 'பழைய முந்தல்' என்பதன் திரிபு ஆகவும் இருக்கலாம்? [Also Palaisi moundou may be a corruption of palaya mundal [பழைய முந்தல்]], முந்தல் என்பதன் ஒரு பொருள் முனை [promontory - கடல் முனை] ஆகும். அது மட்டும் அல்ல இலங்கையின் மேற்கு கடற்கரையில் முந்தல் என அழைக்கப்படும் பல கடல் முனைகள் உள்ளன. மேலும் பிடோலேமி அல்லது தொலமி கூட அப்படி ஒரு கடல் முனையை, அதாவது இன்றைய கற்பிட்டி தீபகற்பகத்தை, அனரிஸ் முண்டோ [Anarismoundou] என குறிப்பிட்டுள்ளார். [There are several promontories on the west coast called by the Tamil name Mundal, and Ptolemy himself mentions one of the name of Anarismoundou, now called Kalpitiya Peninsula]. முதலில் பலேசிமுண்டோ தலைமை நகரத்தை குறித்தாலும், காலப்போக்கில் அது முழு தீவையும் குறிக்கப் பாவிக்கப் பட்டதாக அறிகிறோம். உதாரணமாக, பெரிப்ளுசு இலங்கையை பலேசிமுண்டோன் [Palaisimoundon] என்றே குறிப்பிடுகிறார்.[according to the Periplus, Ceylon was then known as Palaisimoundon] Part: 24 / The Kings who ruled after Vijaya and the related affairs / 'Is name ending in Naga indicate Tamils?' Kuttikannatissa, son of Mahachuli, reigned for twenty-two years. Kuttikannatissa could be a Tamil name too. He slew Anula as per the Mahavamsa 34-30. His son Abhaya (Bhatikaabhaya in the Mahavamsa) ruled twenty-eight years after his father. Then, Mahadathika Naga, another son of Kuttikannatissa reigned for twelve years. Dathika was a Tamil king as stated earlier. Mahadathika, big or great Dathika, must also be a Tamil name. Naga is very common prefix to many Tamil names, Nagasamy, Nagarajah, Nagapoosanny, Nagapattinam, Nagarkoil etc. Amandagamani, the son of Mahadathika Naga, reigned for nine years and nine months. His full name is Abhaya Amandagamani as per the Dipavamsa. He should also be a Tamil as his father was a Tamil. His younger brother, Kanirajanu ruled three years after him. He should also be a Tamil by descent. Amandagamani’s son, Culabhaya, ruled one year after him; must also be a Tamil. Amandagamani’s daughter Sivali, also known as Revati, another Tamil, ruled for four months. The son of Amandagamani’s sister, Illanaga, dethroned Sivali and ruled for six years. Illanaga, meaning young Naga, is clearly a Tamil name. Candamukha Siva is the son of Illnaga reigned eight years and seven months. Candamukha Siva is by descent a Tamil. Candamukha Siva is also a Tamil name. There was a Tamil movie with the title ‘Chandramuki”. Candamukha Siva’s wife, known as Damila Devi, bestowed her own revenue to an Arama, a Buddhist institution. The king and the queen seem to be of Saiva faith but they donated to Buddhist Arama. Again, the Dipavamsa is clearly pro Buddhist, but not anti-Tamil. There is a story about him in the Mahavamsa, and it could be inferred Tamil connection in it. The Rajavaliya speaks of seven kings between Adagemunue and Vasabha and the lengths of their reigns are not given. நன்றி Thanks [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] [Kandiah Thillaivinayagalingam, Athiady, Jaffna] பகுதி / Part: 24 B தொடரும் / Will Follow https://www.facebook.com/groups/978753388866632/permalink/31084754941173080/
2 weeks 4 days ago
30 Aug, 2025 | 11:29 AM மொரிடேனியா நாட்டின் ஹிஜிரட் நகர் அருகே கடல் பகுதியில் சென்றுகொண்டிருந்த புகலிடக்கோரிக்கையாளர்களின் படகு கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 49 பேர் உயிரிழந்துள்ள நிலையில, 100 பேர் காணாமல்போயுள்ளனர். பொருளாதாரம் மற்றும் வாழ்வாதாரத்தை தேடி ஆபிரிக்கா, எகிப்து, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், ஈராக், சிரியா உள்பட பல்வேறு நாடுகளை சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் புகலிடக்கோரிக்கையாளர்களாக கடல் மார்க்கமாக சட்டவிரோதமாக ஐரோப்பிய நாடுகளுக்குள் நுழையும் ஆபத்தான பயணத்தை மேற்கொள்கின்றனர். இந்த பயணத்தின் போது விபத்துகள் ஏற்பட்டு உயிரிழப்பு சம்பவங்களும் பதிவாகின்றன. இந்நிலையில், மேற்கு ஆபிரிக்காவில் அமைந்துள்ள காம்பியா, செனகல் நாடுகளை சேர்ந்த 150 க்கும் மேற்பட்டோர் ஐரோப்பிய நாடுகளுக்குள் சட்டவிரோதமாக நுழைய மத்திய தரைக்கடல் வழியாக படகில் பயணம் மேற்கொண்டுள்ளனர். மொரிடேனியா நாட்டின் ஹிஜிரட் நகர் அருகே கடல் பகுதியில் சென்றுகொண்டிருந்தபோது புகலிடக்கோரிக்கையாளர்கள் படகு கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. தகவலறிந்து விரைந்து சென்ற மொரிடேனியா கடற்படையினர் கடலில் விழுந்து உயிருக்கு போராடிய 17 பேரை மீட்டனர். ஆனாலும், இந்த விபத்தில் 49 பேர் உயிரிழந்தனர். மேலும், 100 பேர் மாயமாகினர். இதையடுத்து, மாயமானவர்களை தேடும் பணியில் மீட்ப்புக்குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர். https://www.virakesari.lk/article/223762
2 weeks 4 days ago
30 Aug, 2025 | 01:48 PM (எம்.மனோசித்ரா) ஜெனீவாவில் செப்டெம்பர் 8ஆம் திகதி ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் 60ஆவது அமர்வு ஆரம்பமாகவுள்ளது. இந்த அமர்வில், ஐ.நா. மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்கர் டுர்க் இலங்கை தொடர்பான தனது புதிய அறிக்கையை வெளியிட உள்ளார். இந்நிலையில் குறித்த அறிக்கைக்கு எதிர்ப்பினை வெளியிடும் ஆவணத்தில் பொது மக்களிடம் கையெழுத்து பெறப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னாள் அமைச்சரான ரியர் அத்மிரல் சரத் வீரசேகரவின் ஏற்பாட்டில் இதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன. உயர்ஸ்தானிகர் வோல்கர் சமர்ப்பிக்கவுள்ள அறிக்கையில் இலங்கையில் காணப்படும் மனித உரிமை நிலை, சட்ட நடைமுறைகள் மற்றும் அரசின் ஒத்துழைப்புகள் குறித்த மதிப்பீடு இடம்பெறவுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கையானது இலங்கை இராணுவத்தின் மீது போர்க்குற்றச்சாட்டுக்களை முன்வைத்து அவர்களை சர்வதேசத்திடம் காட்டிக் கொடுக்கும் செயற்பாடாகும் என சரத் வீரசேகர தெரிவித்துள்ளார். அந்த வகையிலேயே இதற்கு எதிர்ப்பினை வெளியிடும் நோக்கில் பொது மக்களிடம் கையெழுத்து சேகரிக்கவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு கையெழுத்து சேகரிக்கும் நடவடிக்கைகள் நேற்றுமுன்தினம் வெள்ளிக்கிழமை கொழும்பு 8இல் அமைந்துள்ள என்.எம்.பெரேரா நிலையத்தில் ஆரம்பிக்கப்பட்டது. பௌத்த மதகுமாரர், முன்னாள் இராணுவத்தினர் உள்ளிட்டோரின் பங்கேற்புடன் இந்நிகழ்வு இடம்பெற்றிருந்தது. அத்தோடு திங்கட்கிழமை கொழும்பு – புறக்கோட்டை, கண்டி, குருணாகல், களுத்துறை, சிலாபம், கம்பஹா, அம்பாந்தோட்டை, இரத்தினபுரி உள்ளிட்ட பிரதான நகரங்களில் பொது மக்களின் கையெழுத்து சேகரிக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த ஆவணத்தை கொழும்பிலுள்ள ஐ.நா. அலுவலகத்தில் கையளிக்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இம்முறை ஐ.நா. அமர்வில் வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலை வாய்ப்புக்கள் மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத் இலங்கை சார்பில் உரையாற்றவுள்ளார். அவர் தனது உரையில் நாட்டின் தற்போதைய அரசியல், ஜனநாயக மற்றும் மனித உரிமை நிலைப்பாடுகளை சர்வதேச சமூகத்திற்கு விளக்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேவேளை பிரித்தானியா மற்றும் கனடா இணைந்து, இலங்கை தொடர்பான புதிய தீர்மானம் ஒன்றை முன்வைக்கவும் திட்டமிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/223772
2 weeks 4 days ago
30 Aug, 2025 | 01:48 PM

(எம்.மனோசித்ரா)
ஜெனீவாவில் செப்டெம்பர் 8ஆம் திகதி ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் 60ஆவது அமர்வு ஆரம்பமாகவுள்ளது. இந்த அமர்வில், ஐ.நா. மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்கர் டுர்க் இலங்கை தொடர்பான தனது புதிய அறிக்கையை வெளியிட உள்ளார்.
இந்நிலையில் குறித்த அறிக்கைக்கு எதிர்ப்பினை வெளியிடும் ஆவணத்தில் பொது மக்களிடம் கையெழுத்து பெறப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னாள் அமைச்சரான ரியர் அத்மிரல் சரத் வீரசேகரவின் ஏற்பாட்டில் இதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன. உயர்ஸ்தானிகர் வோல்கர் சமர்ப்பிக்கவுள்ள அறிக்கையில் இலங்கையில் காணப்படும் மனித உரிமை நிலை, சட்ட நடைமுறைகள் மற்றும் அரசின் ஒத்துழைப்புகள் குறித்த மதிப்பீடு இடம்பெறவுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கையானது இலங்கை இராணுவத்தின் மீது போர்க்குற்றச்சாட்டுக்களை முன்வைத்து அவர்களை சர்வதேசத்திடம் காட்டிக் கொடுக்கும் செயற்பாடாகும் என சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.
அந்த வகையிலேயே இதற்கு எதிர்ப்பினை வெளியிடும் நோக்கில் பொது மக்களிடம் கையெழுத்து சேகரிக்கவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு கையெழுத்து சேகரிக்கும் நடவடிக்கைகள் நேற்றுமுன்தினம் வெள்ளிக்கிழமை கொழும்பு 8இல் அமைந்துள்ள என்.எம்.பெரேரா நிலையத்தில் ஆரம்பிக்கப்பட்டது. பௌத்த மதகுமாரர், முன்னாள் இராணுவத்தினர் உள்ளிட்டோரின் பங்கேற்புடன் இந்நிகழ்வு இடம்பெற்றிருந்தது.
அத்தோடு திங்கட்கிழமை கொழும்பு – புறக்கோட்டை, கண்டி, குருணாகல், களுத்துறை, சிலாபம், கம்பஹா, அம்பாந்தோட்டை, இரத்தினபுரி உள்ளிட்ட பிரதான நகரங்களில் பொது மக்களின் கையெழுத்து சேகரிக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த ஆவணத்தை கொழும்பிலுள்ள ஐ.நா. அலுவலகத்தில் கையளிக்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இம்முறை ஐ.நா. அமர்வில் வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலை வாய்ப்புக்கள் மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத் இலங்கை சார்பில் உரையாற்றவுள்ளார்.
அவர் தனது உரையில் நாட்டின் தற்போதைய அரசியல், ஜனநாயக மற்றும் மனித உரிமை நிலைப்பாடுகளை சர்வதேச சமூகத்திற்கு விளக்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேவேளை பிரித்தானியா மற்றும் கனடா இணைந்து, இலங்கை தொடர்பான புதிய தீர்மானம் ஒன்றை முன்வைக்கவும் திட்டமிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
https://www.virakesari.lk/article/223772