Aggregator

ஐசிசி ஆடவர் ரி20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டித் தொடர்

1 week 6 days ago
உலகக் கிண்ண அறிமுக அணி இத்தாலியை இலகுவாக வெற்றிகொண்டது ஸ்கொட்லாந்து; இத்தாலி அணியில் இலங்கை வம்சாவளி கிரிஷான் 09 Feb, 2026 | 05:02 PM (நெவில் அன்தனி) கொல்கத்தா ஈடன் கார்ட்ன்ஸ் விளையாட்டரங்கில் இன்று திங்கட்கிழமை (09) நடைபெற்ற ஐசிசி ஆடவர் ரி20 உலகக் கிண்ண சி குழு போட்டியில் இத்தாலியை எதிர்த்தாடிய ஸ்கொட்லாந்து 73 ஓட்டங்களால் மிக இலகுவாக வெற்றிபெற்றது. தமது அணியின் பாதுகாப்புக்கு உத்தரவாதம் இல்லை எனத் தெரிவித்து பங்களாதேஷ் அணியை இந்த உலகக் கிண்ணத்திலிருந்து பங்களாதேஷ் கிரிக்கெட் சபை விலக்கிக்கொண்டதை அடுத்து அவ்வணிக்கு பதிலாக ஐசிசியினால் சி குழுவில் ஸ்கொட்லாந்து இணைத்துக்கொள்ளப்பட்டது. எட்டு மாதங்களுக்கு முன்னர் நடைபெற்ற ஐரோப்பிய பிராந்திய உலகக் கிண்ண தகுதிகாண் சுற்றில் இத்தாலியிடம் 12 ஓட்டங்களால் தோல்வி அடைந்த ஸ்கொட்லாந்து, இன்றைய போட்டியில் பதிலடி கொடுத்து அந்தத் தோல்வியை நிவர்த்திசெய்துகொண்டது. ஜோர்ஜ் மன்சே, மைக்கல் ஜோன்ஸ், ப்றண்டன் மெக்முலென் ஆகியோரின் அபார துடுப்பாட்டங்களும் மைக்கல் லீஸ்க் பதிவுசெய்த 4 விக்கெட் குவியலும் ஸ்கொட்லாந்தின் இலகுவான வெற்றிக்கு வழிவகுத்தன. இதேவேளை, இன்றைய போட்டியின் ஆரம்பத்தில் இத்தாலி அணித் தலைவர் வெய்ன் மெட்சன் களத்தடுப்பில் ஈடுபட்டிருந்தபோது இடது தோற்பட்டையில் கடும் உபாதை ஏற்பட்டதால் அவர் ஓய்வு பெற நேரிட்டது. இது இத்தாலி அணிக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. இப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட ஸ்கொட்லாந்து 20 ஓவர்களில் 4 விக்கெட்களை மாத்திரம் இழந்து 207 ஓட்டங்களைக் குவித்தது. இதன் மூலம் இந்த வருட ரி20 உலகக் கிண்ணப் போட்டியில் 200 ஓட்டங்களைக் கடந்த முதலாவது அணி என்ற சாதனையை ஸ்கொட்லாந்து படைத்தது. ஜோர்ஜ் மன்சே, மைக்கல் ஜோன்ஸ் ஆகிய இருவரும் 83 பந்துகளில் 126 ஓட்டங்களைப் பகிர்ந்து பலமான ஆரம்பத்தை இட்டுக்கொடுத்தனர். அவர்கள் இருவரும் 10 ஓட்டங்கள் இடைவெளியில் ஆட்டம் இழந்தனர். அதிரடியாகத் துடுப்பெடுத்தாடிய ஜோர்ஜ் மன்சே 54 பந்துகளில் 13 பவுண்டறிகள், 2 சிக்ஸ்களுடன் 84 ஓட்டங்களைக் குவித்தார். அவர் ஆட்டம் இழந்த சொற்ப நேரத்தில் மைக்கல் ஜொன்ஸ் 37 ஓட்டங்களுடன் வெளியேறினார். அதனைத் தொடர்ந்து ப்றெண்டன் மெக்முலென், அணித் தலைவர் ரிச்சி பெறிங்டன் ஆகிய இருவரும் 3ஆவது விக்கெட்டில் 48 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியை மேலும் பலபபடுத்தினர். ப்றெண்டன் மெக்முலென் 18 பந்துகளில் 4 சிக்ஸ்கள் உட்பட 41 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காதிருந்தார். ரிச்சி பெறிங்டன் 15 ஓட்டங்களைப் பெற்றார். மைக்கல் லீஸ்க் 5 பந்துகளில் 2 பவுண்டறிகள், 2 சிக்ஸ்கள் உட்பட 22 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காதிருந்தார். 208 ஓட்டங்கள் என்ற கடினமான வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இத்தாலி 16.4 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 134 ஓட்டங்களைப் பெற்றது. ஆரம்ப வீரர் ஜஸ்டின் மொஸ்கா (0) ஆட்டம் இழந்த பின்னர் நான்கு துடுப்பாட்ட வீரர்கள் இரட்டை இலக்க எண்ணிக்கைகளைப் பெற்றனர். ஆனால் மற்றையவர்கள் எல்லோரும் ஒற்றை இலக்க எண்ணிக்கைகளுடன் களம் விட்டகன்றார். அன்தனி மொஸ்கா (13), ஜோன் - ஜோன் ட்ரவோ மட்ஸ் (22) ஆகிய இருவரும் 2ஆவது விக்கெட்டில் 32 ஓட்டங்களைப் பகிர்ந்து 8 ஓட்டங்கள் வித்தியாசத்தில் ஆட்டம் இழந்தனர். (40 - 3 விக்.) தொடர்ந்து ஹெரி மனென்டி (37), பென் மனென்டி (52) ஆகிய இருவரும் 4ஆவது விக்கெட்டில் 73 ஓட்டங்களைப் பகிர்ந்து அணிக்கு தெம்பூட்டினர். அவர்கள் இருவரும் ஆட்டம் இழந்ததும் எஞ்சிய 5 விக்கெட்கள் 4 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்ந்தன. இந்தப் போட்டியில் இத்தாலி சார்பாக இலங்கை வம்சாவளி வீரரான கிரிஷான் ப்ரியன்த பெர்னாண்டோ கலுகமகே விளையாடியமை விசேட அம்சமாகும். அவர் ஆட்டம் இழக்காமல் 3 ஓட்டங்களைப் பெற்றதுடன் பந்துவீச்சில் விக்கெட் எதனையும் வீழ்த்தவில்லை. பந்துவீச்சில் மைக்கல் லீஸ்க் 17 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களையும் மார்க் வொட் 24 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர். https://www.virakesari.lk/article/238239

ஜப்பான் பொதுத்தேர்தல்: சானே தகாய்ச்சி தலைமையிலான கூட்டணி அமோக வெற்றி!

1 week 6 days ago
ஜப்பானின் முதல் பெண் பிரதமராக தெரிவான தகாய்ச்சிக்கு ட்ரம்ப் வாழ்த்து 09 Feb, 2026 | 12:22 PM “ஜப்பானில் நடந்த இந்த தேர்தல் ஜப்பானின் வருங்காலத்துக்கு மிக முக்கியமான ஒன்று. தகாய்ச்சி ஏற்கெனவே வலிமையான, சக்தி படைத்தவர், அறிவாற்றல் கொண்ட தலைவர் என்பதை நிரூபித்திருக்கிறார்” என ஜப்பான் பொதுத் தேர்தலில் வெற்றிபெற்று, பிரதமராகத் தெரிவுசெய்யப்பட்டுள்ள சானே தகாய்ச்சிக்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் வாழ்த்து தெரிவித்துள்ளார். நாட்டை உண்மையாக நேசிப்பவர் தகாய்ச்சி என்றும் கூறிய ட்ரம்ப், எதிர்வரும் மார்ச் மாதம் 19ஆம் திகதி வெள்ளை மாளிகையில் தகாய்ச்சியை வரவேற்க தான் காத்திருப்பதாகவும் கூறியுள்ளார். ஜப்பான் நாட்டில் நேற்று (8) நடத்தப்பட்ட பொதுத்தேர்தலில் ஆளும் விடுதலை ஜனநாயக கட்சி (Liberal Democrat Party) 316 இடங்களைப் பெற்று, அக்கட்சியின் சார்பில் போட்டியிட்ட சானே தகைச்சி (Sanae Takaichi), அதிக வாக்குகளைப் பெற்று, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் ஜப்பான் பெண் பிரதமர் என்ற சிறப்பை அடைந்திருக்கிறார். இந்நிலையில், தகாய்ச்சிக்கு பாராட்டு தெரிவித்திருக்கும் ட்ரம்ப், அண்மையில் ஜப்பானுக்கு பயணம் மேற்கொண்டபோது, அங்கு தகாய்ச்சியின் நிர்வாகத் திறமையையும் தலைமைப் பண்பையும் கண்டு ட்ரம்ப் பாராட்டியிருந்தார். https://www.virakesari.lk/article/238205

வானிலை: முன்கூட்டிய அபாய எச்சரிக்கைகளை அடிப்படையாகக் கொண்ட நிலைபேறான மீட்புத் திட்டம் அவசியம் – பாதுகாப்பு பிரதி அமைச்சர்

1 week 6 days ago
தித்வா சூறாவளி பாதிப்புகள்: முன்கூட்டிய அபாய எச்சரிக்கைகளை அடிப்படையாகக் கொண்ட நிலைபேறான மீட்புத் திட்டம் அவசியம் – பாதுகாப்பு பிரதி அமைச்சர் 09 Feb, 2026 | 09:40 AM (நமது நிருபர்) தித்வா சூறாவளியால் ஏற்பட்ட பாதிப்புகளைச் சீர்செய்து, நாட்டை மீண்டும் கட்டியெழுப்பும் ஜனாதிபதி பணிக்குழுவின் திட்டங்களுக்கு அமைவாக, நாட்டிற்கு அபாயம் குறித்த முன்கூட்டிய தகவல்களை அடிப்படையாகக் கொண்ட, நிலைபேறான மீட்புத் திட்டத்தை உருவாக்க அனைத்து நிறுவனங்களும் ஒருங்கிணைந்து செயற்பட வேண்டியது அவசியம் பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர (ஓய்வு) தெரிவித்தார். அனர்த்தத்திற்கு பிந்தைய தேவைகள் மதிப்பீடு தொடர்பான விசேட கலந்துரையாடல் வெள்ளிக்கிழமை (06) அன்று பாதுகாப்பு அமைச்சில் நடைபெற்றது. இதில் சர்வதேச அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அரச உயர் அதிகாரிகள் மத்தியில் உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். மேலும் இக்கூட்டத்தில் சேதங்கள் மற்றும் இழப்புகளின் ஆரம்ப மதிப்பீடுகள், மீட்புத் தேவைகளுக்கான நிதி கணக்கீடு மற்றும் சர்வதேச அபிவிருத்திப் பங்காளிகள் வழங்கவுள்ள ஆதரவின் தன்மை குறித்து விரிவாக ஆராயப்பட்டது. பாதுகாப்புச் செயலாளர், அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பணிப்பாளர் நாயகம் ஆகியோருடன் இலங்கைக்கான ஐக்கிய நாடுகள் குடியிருப்பு ஒருங்கிணைப்பாளர், ஐரோப்பிய ஒன்றியம், உலக வங்கி, ஆசிய அபிவிருத்தி வங்கி, ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி திட்டம் ஆகியவற்றின் பிரதிநிதிகளும் அமைச்சுகளின் சிரேஷ்ட அதிகாரிகளும் இக்கலந்துரையாடலில் பங்கேற்றிருந்தனர். இந்தக் கூட்டத்தில் உரையாற்றிய பிரதி அமைச்சர், ஜனாதிபதி பணிக்குழுவின் கீழ் இயங்கும் எட்டு உபகுழுக்களில் 'அனர்த்தத்திற்கு பிந்தைய தேவைகள் மதிப்பீட்டுக் குழுவே' முதன்மையானது. இந்தக் குழுவின் தலைமையின் கீழ் ஏனைய குழுக்கள் மேற்பார்வை செய்யப்படுவதுடன், 'மீளக் கட்டியெழுப்பும் இலங்கை' திட்டத்தின் இலக்குகளை அடைவதற்கு இந்த மதிப்பீடு மிக முக்கியமானது. தித்வா புயலால் ஏற்பட்ட உட்கட்டமைப்புச் சேதங்கள், பொருளாதார இழப்புகள் மற்றும் சமூகத் தாக்கங்கள் ஆகியவற்றை நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுவுக்குள் உரிய அதிகாரிகள் முறையாகப் பகுப்பாய்வு செய்வது அவசியம். அவசர நிவாரணப் பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில், தற்போது நீண்டகால மறுசீரமைப்பு மற்றும் மீளமைப்புக்கான கட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. நாட்டிற்கு அபாயம் குறித்த முன்கூட்டிய தகவல்களை அடிப்படையாகக் கொண்ட, நிலைபேறான மீட்புத் திட்டத்தை உருவாக்க அனைத்து நிறுவனங்களும் ஒருங்கிணைந்து செயற்பட வேண்டியது அவசியம் என்றார். https://www.virakesari.lk/article/238185

வானிலை: முன்கூட்டிய அபாய எச்சரிக்கைகளை அடிப்படையாகக் கொண்ட நிலைபேறான மீட்புத் திட்டம் அவசியம் – பாதுகாப்பு பிரதி அமைச்சர்

1 week 6 days ago

தித்வா சூறாவளி பாதிப்புகள்: முன்கூட்டிய அபாய எச்சரிக்கைகளை அடிப்படையாகக் கொண்ட நிலைபேறான மீட்புத் திட்டம் அவசியம் – பாதுகாப்பு பிரதி அமைச்சர்

09 Feb, 2026 | 09:40 AM

image

(நமது நிருபர்)

தித்வா சூறாவளியால் ஏற்பட்ட பாதிப்புகளைச் சீர்செய்து, நாட்டை மீண்டும் கட்டியெழுப்பும் ஜனாதிபதி பணிக்குழுவின் திட்டங்களுக்கு அமைவாக, நாட்டிற்கு அபாயம் குறித்த முன்கூட்டிய தகவல்களை அடிப்படையாகக் கொண்ட, நிலைபேறான மீட்புத் திட்டத்தை உருவாக்க அனைத்து நிறுவனங்களும் ஒருங்கிணைந்து செயற்பட வேண்டியது அவசியம் பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர (ஓய்வு) தெரிவித்தார்.

அனர்த்தத்திற்கு பிந்தைய தேவைகள் மதிப்பீடு தொடர்பான விசேட கலந்துரையாடல் வெள்ளிக்கிழமை (06) அன்று பாதுகாப்பு அமைச்சில் நடைபெற்றது. இதில் சர்வதேச அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அரச உயர் அதிகாரிகள் மத்தியில் உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். மேலும் இக்கூட்டத்தில் சேதங்கள் மற்றும் இழப்புகளின் ஆரம்ப மதிப்பீடுகள், மீட்புத் தேவைகளுக்கான நிதி கணக்கீடு மற்றும் சர்வதேச அபிவிருத்திப் பங்காளிகள் வழங்கவுள்ள ஆதரவின் தன்மை குறித்து விரிவாக ஆராயப்பட்டது.

பாதுகாப்புச் செயலாளர், அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பணிப்பாளர் நாயகம் ஆகியோருடன் இலங்கைக்கான ஐக்கிய நாடுகள் குடியிருப்பு ஒருங்கிணைப்பாளர், ஐரோப்பிய ஒன்றியம், உலக வங்கி, ஆசிய அபிவிருத்தி வங்கி, ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி திட்டம் ஆகியவற்றின் பிரதிநிதிகளும் அமைச்சுகளின் சிரேஷ்ட அதிகாரிகளும் இக்கலந்துரையாடலில் பங்கேற்றிருந்தனர்.

இந்தக் கூட்டத்தில் உரையாற்றிய பிரதி அமைச்சர்,

ஜனாதிபதி பணிக்குழுவின் கீழ் இயங்கும் எட்டு உபகுழுக்களில் 'அனர்த்தத்திற்கு பிந்தைய தேவைகள் மதிப்பீட்டுக் குழுவே' முதன்மையானது.

இந்தக் குழுவின் தலைமையின் கீழ் ஏனைய குழுக்கள் மேற்பார்வை செய்யப்படுவதுடன், 'மீளக் கட்டியெழுப்பும் இலங்கை' திட்டத்தின் இலக்குகளை அடைவதற்கு இந்த மதிப்பீடு மிக முக்கியமானது.

தித்வா புயலால் ஏற்பட்ட உட்கட்டமைப்புச் சேதங்கள், பொருளாதார இழப்புகள் மற்றும் சமூகத் தாக்கங்கள் ஆகியவற்றை நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுவுக்குள் உரிய அதிகாரிகள் முறையாகப் பகுப்பாய்வு செய்வது அவசியம்.

அவசர நிவாரணப் பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில், தற்போது நீண்டகால மறுசீரமைப்பு மற்றும் மீளமைப்புக்கான கட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

நாட்டிற்கு அபாயம் குறித்த முன்கூட்டிய தகவல்களை அடிப்படையாகக் கொண்ட, நிலைபேறான மீட்புத் திட்டத்தை உருவாக்க அனைத்து நிறுவனங்களும் ஒருங்கிணைந்து செயற்பட வேண்டியது அவசியம் என்றார்.

https://www.virakesari.lk/article/238185

இலங்கை மேல் நீதிமன்றங்களில் சுமார் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிறுவர் துஷ்பிரயோக வழக்குகள் பதிவு!

1 week 6 days ago
இலங்கை மேல் நீதிமன்றங்களில் சுமார் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிறுவர் துஷ்பிரயோக வழக்குகள் பதிவு! 09 Feb, 2026 | 09:11 AM நாடளாவிய ரீதியில் உள்ள மேல் நீதிமன்றங்களில் சுமார் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிறுவர் துஷ்பிரயோக வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ள தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது. 1998 ஆம் ஆண்டின் 28 ஆம் இலக்க சட்டத்தின் கீழ் இந்த வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அதன்படி, நாடளாவிய ரீதியில் உள்ள மேல் நீதிமன்றங்களில் 4,289 சிறுவர் துஷ்பிரயோக வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ள தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது. இந்த வழக்குகளில் 1,683 வழக்குகள் ஜனவரியில் விசாரணைக்காக மீண்டும் அழைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அவற்றில், சிறுவர் பாலியல் துஷ்பிரயோகங்கள், சிறுவர் மீதான வன்முறைகள், பலாத்காரங்கள் உள்ளிட்ட பல்வேறு குற்றச் செயல்கள் அடங்குவதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது. https://www.virakesari.lk/article/238182

இலங்கை மேல் நீதிமன்றங்களில் சுமார் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிறுவர் துஷ்பிரயோக வழக்குகள் பதிவு!

1 week 6 days ago

இலங்கை மேல் நீதிமன்றங்களில் சுமார் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிறுவர் துஷ்பிரயோக வழக்குகள் பதிவு!

09 Feb, 2026 | 09:11 AM

image

நாடளாவிய ரீதியில் உள்ள மேல் நீதிமன்றங்களில் சுமார் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிறுவர் துஷ்பிரயோக வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ள தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது.

1998 ஆம் ஆண்டின் 28 ஆம் இலக்க சட்டத்தின் கீழ் இந்த வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அதன்படி, நாடளாவிய ரீதியில் உள்ள மேல் நீதிமன்றங்களில் 4,289 சிறுவர் துஷ்பிரயோக வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ள தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது.

இந்த வழக்குகளில் 1,683 வழக்குகள் ஜனவரியில் விசாரணைக்காக மீண்டும் அழைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அவற்றில், சிறுவர் பாலியல் துஷ்பிரயோகங்கள், சிறுவர் மீதான வன்முறைகள், பலாத்காரங்கள் உள்ளிட்ட பல்வேறு குற்றச் செயல்கள் அடங்குவதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது.

https://www.virakesari.lk/article/238182

உலகை அதிர வைத்த கோப்புகளை கொண்ட ஜெஃப்ரி எப்ஸ்டீன் யார்?

1 week 6 days ago
கிளிண்டன் முதல் மஸ்க் வரை: எப்ஸ்டீன் ஆவணங்களில் உள்ள செல்வாக்கு மிக்க நபர்கள் யார்? பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,இடமிருந்து வலமாக : ஈலோன் மஸ்க், பில் கேட்ஸ், சாரா பெர்குசன் மற்றும் எஹுட் பராக் கட்டுரை தகவல் பிராண்டன் ட்ரெனான் 8 பிப்ரவரி 2026 புதுப்பிக்கப்பட்டது 2 நிமிடங்களுக்கு முன்னர் மறைந்த பாலியல் குற்றவாளி ஜெப்ரி எப்ஸ்டீனுடன் தொடர்புடையதாக கூறப்படும் உலகின் செல்வாக்கு மிக்க மற்றும் பணக்காரர்களின் பட்டியல் தற்போது நீண்டுள்ளது. நிதியாளரான ஜெப்ரி எப்ஸ்டீன் குறித்த விசாரணையிலிருந்து, அமெரிக்க அரசாங்கம் மில்லியன் கணக்கான புதிய கோப்புகளை வெளியிட்டதைத் தொடர்ந்து இந்த விபரங்கள் தெரியவந்துள்ளன. இந்த ஆவணங்களில் ஒருவரின் பெயர் இடம்பெற்றிருப்பது, அவர் தவறான செயலில் ஈடுபட்டிருப்பார் என்பதைக் குறிக்கவில்லை. முன்பு வெளியிடப்பட்ட ஆவணங்களில் இடம்பெற்ற பலரும் எப்ஸ்டீனுடன் தொடர்புடைய எந்த தவறான செயல்களிலும் ஈடுபடவில்லை என மறுத்துள்ளனர். சமீபத்தில் வெளியிடப்பட்டுள்ள கோப்பில் குறிப்பிடப்பட்டுள்ள சில நபர்களின் பட்டியல் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது. ஈலோன் மஸ்க் இந்த ஆவணங்களில், எப்ஸ்டீன் ஏற்பாடு செய்ததாகக் கருதப்படும் பயணத் திட்டங்கள் குறித்து, அவருக்கும் தொழில்நுட்ப பில்லியனர் ஈலோன் மஸ்க்கிற்கும் இடையே பரிமாறப்பட்ட மின்னஞ்சல்கள் இடம்பெற்றுள்ளன. இருப்பினும், தான் எப்ஸ்டீனின் தனியார் தீவுக்கு ஒருபோதும் சென்றதில்லை என்று மஸ்க் கூறியுள்ளார். நவம்பர் 2012-இல் அனுப்பப்பட்ட ஒரு மின்னஞ்சலில் மஸ்க், "உங்களது தீவில் எந்த பகல்/இரவில் கொண்டாட்டமான பார்ட்டி நடக்கும்?" என்று எழுதியுள்ளார். அதே ஆண்டின் டிசம்பர் மாதத்தில் அனுப்பப்பட்ட மற்றொரு மின்னஞ்சலில், "செயின்ட் பார்ட்ஸ் அல்லது வேறு எங்காவது பார்ட்டிகளில் கலந்துகொண்டு உற்சாகமாக இருக்க விரும்புகிறேன்" என்று எழுதியுள்ள அவர், "அமைதியான தீவு அனுபவம்" தனக்கு வேண்டியதற்கு முற்றிலும் எதிர்மாறானது என்றும் குறிப்பிட்டுள்ளார். பதில்: இதற்கு பதிலளிக்கும் விதமாக ஜனவரி மாதம் எக்ஸ் தளத்தில் பதிவிட்ட மஸ்க், இந்த மின்னஞ்சல்கள் தனது "பெயரைக் கெடுக்க" பயன்படுத்தப்படலாம் எனக் கூறினார். ஆனால், "எப்ஸ்டீனுடன் இணைந்து கடுமையான குற்றங்களைச் செய்தவர்கள்" தண்டிக்கப்படுவதில் தான் அதிக அக்கறை காட்டுவதாக அவர் தெரிவித்தார். பில் கேட்ஸ் 18 ஜூலை 2013 தேதியிட்ட இரண்டு மின்னஞ்சல்கள் எப்ஸ்டீனால் எழுதப்பட்டது போல் உள்ளன. ஆனால் அவை உண்மையானவையா அல்லது மைக்ரோசாப்ட் இணை நிறுவனர் பில் கேட்ஸிற்கு அனுப்பப்பட்டதா என்பது தெளிவாகத் தெரியவில்லை. அதில் ஒரு மின்னஞ்சல், பில் மற்றும் மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளையிலிருந்து விலகும் கடிதம் போல எழுதப்பட்டுள்ளது. "ரஷ்ய பெண்களுடன் உடலுறவு கொள்வதால் ஏற்படும் விளைவுகளைச் சமாளிக்க", கேட்ஸிற்குத் தேவையான மருந்துகளைத் திரட்ட வேண்டியிருந்ததாக அதில் கூறப்பட்டுள்ளது. என்பிஆர்-க்கு அளித்த பேட்டியில், அவரது முன்னாள் மனைவி மெலிண்டா, வெளியான இந்த ஆவணங்கள் தங்கள் திருமண வாழ்க்கையில் ஏற்பட்ட சிரமங்களை நினைவூட்டியதாக கூறினார். "என்னால், என் சொந்த சோகத்தை ஒதுக்கி வைத்து, அந்த இளம் பெண்களை பார்த்து, கடவுளே, அவர்களுக்கு இப்படியெல்லாம் எப்படி நடந்தது என்று கேட்க முடிகிறது," என அவர் தெரிவித்தார். மேலும், "குறைந்தபட்சம் என்னைப் பொறுத்தவரை, நான் வாழ்க்கையில் முன்னேறிச் சென்றுவிட்டேன். இப்போது பெண்களாக வளர்ந்திருக்கும் அவர்களுக்கு ஏதேனும் நீதி கிடைக்கும் என்று நம்புகிறேன்," என்றும் அவர் தெரிவித்தார். பதில்: கேட்ஸின் செய்தித் தொடர்பாளர் பிபிசியிடம் கூறுகையில்,"ஏற்கனவே நிரூபிக்கப்பட்டுள்ள, அதிருப்தி அடைந்த, உண்மையற்ற ஒருவரின் இந்தக் கூற்றுகள் முற்றிலும் அபத்தமானவை மற்றும் முற்றிலும் தவறானவை"என்றார். டொனால்ட் டிரம்ப் புதிதாக வெளியிடப்பட்ட கோப்புகளில் அமெரிக்க அதிபரின் பெயர் நூற்றுக்கணக்கான முறை குறிப்பிடப்பட்டுள்ளது. அதில், எஃப்.பி.ஐ கடந்த ஆண்டு தயாரித்த பட்டியலும் உள்ளது. அந்த பட்டியலில், தேசிய அச்சுறுத்தல் செயல்பாட்டு மையத் தகவல் வரிசைக்கு, டிரம்ப் மீது அழைப்பாளர்கள் கூறிய குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இவற்றில் பல, அந்த முகமையால் பெறப்பட்ட சரிபார்க்கப்படாத தகவல்களின் அடிப்படையில் அமைந்தவை என்றும், ஆதாரங்கள் ஏதுமின்றி கூறப்பட்டவை என்றும் தெரிகிறது. டிரம்ப், எப்ஸ்டீன் மற்றும் பிற முக்கிய நபர்களுக்கு எதிரான ஏராளமான பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டுகள் இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ளன. பதில்: எப்ஸ்டீன் விவகாரத்தில் தான் எந்தத் தவறும் செய்யவில்லை என்று டிரம்ப் தொடர்ந்து மறுத்து வருகிறார். எப்ஸ்டீனுடனான தொடர்பை பல தசாப்தங்களுக்கு முன்பே துண்டித்துவிட்டதாக அவர் கூறுகிறார். மேலும், எப்ஸ்டீனால் பாதிக்கப்பட்டவர்கள் யாரும் டிரம்ப் மீது எந்தக் குற்றச்சாட்டையும் சுமத்தவில்லை. ஆண்ட்ரூ மவுண்ட்பேட்டன்-வின்ட்சர் சமீபத்தில் வெளியிடப்பட்டுள்ள எப்ஸ்டீன் கோப்புகளில், தரையில் படுத்திருக்கும் ஒரு பெண்ணின் மேல் ஆண்ட்ரூ மவுண்ட்பேட்டன்-கைகளையும், முழங்கால்களையும் ஊன்றி வின்ட்சர் இருப்பது போன்ற புகைப்படங்களும் இடம்பெற்றுள்ளன. இரண்டு படங்களில், முன்னாள் இளவரசர் அடையாளம் தெரியாத மற்றும் முழுமையாக ஆடை அணிந்திருக்கும் அந்தப் பெண்ணின் வயிற்றுப் பகுதியைத் தொடுவது போல் காணப்படுகிறார். மற்றொரு படம் அவர் கேமராவை நேரடியாக உற்று நோக்குவதைக் காட்டுகிறது. இந்தப் புகைப்படங்களுக்கான எந்தப் பின்னணித் தகவலும் வழங்கப்படவில்லை. இவை எப்போது, எங்கே எடுக்கப்பட்டன என்பதும் தெளிவாகத் தெரியவில்லை. பதில்: பிபிசி நியூஸ் இது குறித்து கருத்து அறிய மவுண்ட்பேட்டன்-வின்ட்சரைத் தொடர்பு கொண்டுள்ளது. அவர் எந்தவொரு தவறான செயலிலும் ஈடுபடவில்லை என்று பலமுறை மறுத்துள்ளார். பட மூலாதாரம்,US Department of Justice படக்குறிப்பு,ஆண்ட்ரூ மவுண்ட்பேட்டன்-வின்ட்சர் எப்போதும் எந்த தவறும் செய்யவில்லை என்று மறுத்துள்ளார். ரிச்சர்ட் பிரான்சன் ரிச்சர்ட் பிரான்சனின் பெயர் இந்த கோப்புகளில் நூற்றுக்கணக்கான முறை இடம் பெற்றுள்ளது. 2013-ஆம் ஆண்டு நடந்த ஒரு உரையாடலில், பிரான்சன் அளித்த விருந்தோம்பல் மற்றும் மக்கள் தொடர்பு ஆலோசனைக்காக எப்ஸ்டீன் அவருக்கு நன்றி தெரிவிக்கிறார். அதற்குப் பதிலளித்த பிரான்சன், அவரைப் பார்த்தது "மிகவும் மகிழ்ச்சி" என்று கூறி, "நீங்கள் எப்போது இந்தப் பகுதிக்கு வந்தாலும் உங்களைச் சந்திக்க விரும்புகிறேன். உங்கள் பெண்கள் குழுவை அழைத்து வந்தால் போதும் " என்று குறிப்பிட்டுள்ளார். "ஹேரம்" என்ற சொல் எப்ஸ்டீன் குழுவில் இருந்த மூன்று வயது வந்த உறுப்பினர்களைக் குறிப்பதாக விர்ஜின் குரூப் விளக்கம் அளித்துள்ளது. பதில்: விர்ஜின் குரூப் பிபிசிக்கு அளித்த அறிக்கையில், எப்ஸ்டீனுடனான பிரான்சனின் தொடர்பு "பன்னிரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஒரு சில சந்தர்ப்பங்களில் மட்டுமே இருந்தது. மேலும் இது தொண்டு நிறுவன டென்னிஸ் போட்டி போன்ற குழு அல்லது தொழில்முறை சூழல்களுக்குள் மட்டுமே இருந்தது" என்று கூறியுள்ளது. மேலும், "எப்ஸ்டீன் ஒரு தொண்டு நன்கொடையை வழங்க முன்வந்தபோது, அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பு பிரான்சன் தங்கள் குழுவை முழுமையாக ஆய்வு செய்யச் சொன்னார். அந்த ஆய்வில் சில கடுமையான குற்றச்சாட்டுகள் வெளிப்பட்டன"என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல்,"ஆய்வில் கண்டறியப்பட்ட விஷயங்களின் விளைவாக, விர்ஜின் யுனைட் அந்த நன்கொடையைப் பெறவில்லை. மேலும் ரிச்சர்டும் ஜோனும் இனி எப்ஸ்டீனைச் சந்திக்கவோ பேசவோ வேண்டாம் என்று முடிவு செய்தனர். அவர்களுக்கு முழு விவரங்களும் தகவல்களும் தெரிந்திருந்தால், எவ்வித தொடர்பும் இருந்திருக்காது. எப்ஸ்டீனின் செயல்கள் அருவருப்பானவை என்று ரிச்சர்ட் நம்புகிறார் மற்றும் அவரால் பாதிக்கப்பட்ட பலருக்கு நீதி கிடைப்பதை ஆதரிக்கிறார்"என்று அந்த அறிக்கை கூறியுள்ளது. சாரா பெர்குசன் ஆண்ட்ரூ மவுண்ட்பேட்டன்-வின்சரின் முன்னாள் மனைவியும் பொதுவாக "ஃபெர்கி" என அழைக்கப்படுபவருமான சாரா ஃபெர்கசனின் பெயரும் பல மின்னஞ்சல்களில் இடம்பெற்றுள்ளதாகத் தெரிகிறது. இதில், எப்ஸ்டீன் வீட்டுக் காவலில் இருந்த காலகட்டத்தைச் சேர்ந்த மின்னஞ்சல்களும் உள்ளன. எப்ஸ்டீனுடையது என்று நம்பப்படும் ஒரு கணக்கிலிருந்து வந்த மின்னஞ்சலில், "இப்போது ஃபெர்கி, 'நான் ஒரு பீடோ( குழந்தைகளிடம் பாலியல் ரீதியாக அத்துமீறுபவர் ) அல்ல' எனச் சொல்ல முடியும் என்று நினைக்கிறேன்," என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஏப்ரல் 2009-இல் நடந்த மற்றொரு மின்னஞ்சல் பரிமாற்றத்தில், எப்ஸ்டீனை "ஒரு விரைவான தேநீர் சந்திப்பிற்கு" அழைக்கும் கோரிக்கை உள்ளது. அதில், "எனது அன்பிற்குரிய அற்புதமான மற்றும் சிறப்பான நண்பர் ஜெப்ரி. நீங்கள் ஒரு திறமைசாலி, உங்களை நினைத்து நான் பெருமைப்படுகிறேன்" என்ற வரிகள் இடம்பெற்றுள்ளன. பதில்: இந்த மின்னஞ்சல்கள் எந்தவொரு தவறான செயலையும் சுட்டிக்காட்டவில்லை. இது குறித்த விளக்கத்திற்காக பிபிசி பெர்குசனைத் தொடர்பு கொண்டுள்ளது. லார்ட் மண்டேல்சன் கோப்புகளில் வெளியிடப்பட்ட வங்கி அறிக்கைகளின்படி, லார்ட் மண்டேல்சன் மற்றும் அவரது துணைவராக அறியப்படும் ரினால்டோ அவிலா டா சில்வா ஆகியோருடன் தொடர்புடைய கணக்குகளுக்கு எப்ஸ்டீன் 75,000 டாலர் (55,000 யூரோ) செலுத்தியுள்ளார் என்று தெரிவிக்கப்படுகிறது. சந்தை தொடர்பான முக்கியத் தகவல்களை எப்ஸ்டீனுக்கு வழங்கியதாக கூறப்படும் குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து, லார்ட் மண்டேல்சன் மீது மெட்ரோபாலிட்டன் காவல்துறை குற்றவியல் விசாரணையை தொடங்கியுள்ளது. மைனர் பெண்ணை பாலியல் தொழிலுக்கு அழைத்த குற்றத்திற்காக 2009-இல் எப்ஸ்டீன் குற்றத்தை ஒப்புக்கொண்ட ஒரு வருடத்திற்குப் பிறகு, டா சில்வா "நீங்கள் எனக்கு உதவக்கூடிய ஏதாவது இருந்தால் செய்யுங்கள்" என்று கூறி ஒரு மின்னஞ்சல் அனுப்பியுள்ளார். அதற்கு எப்ஸ்டீன், "உங்கள் கடன் தொகையை உடனடியாக வங்கி மூலம் அனுப்புகிறேன்" என்று பதிலளித்துள்ளார். மற்றொரு மின்னஞ்சல் பரிமாற்றத்தில், மண்டேல்சன் தனது நியூயார்க் குடியிருப்புகளில் ஒன்றில் தங்குவதற்கு எப்ஸ்டீன் ஏற்பாடு செய்வது போல் தெரிகிறது. அதில் எப்ஸ்டீன், "உபசரிப்பதில் மகிழ்ச்சி, ஆனால் நான் அங்கு இல்லாதது வருத்தமளிக்கிறது" என்று எழுதியுள்ளார். பதில்: லார்ட் மண்டேல்சன் பிரபுக்கள் சபையிலிருந்து விலகுவதாகத் தெரிவித்துள்ளார். ஞாயிற்றுக்கிழமை அன்று, "எப்ஸ்டீனை அறிந்திருந்தது" குறித்தும், அவர் தண்டிக்கப்பட்ட பிறகும் அவருடனான தொடர்பைத் தொடர்ந்தது குறித்தும் மண்டேல்சன் மீண்டும் வருத்தம் தெரிவித்தார். அவர் பிபிசியிடம் கூறுகையில், "எப்ஸ்டீனின் குற்றங்களில் நான் ஒருபோதும் குற்றவாளியோ அல்லது உடந்தையோ இல்லை. மற்றவர்களைப் போலவே நானும் அவரது மரணத்திற்குப் பிறகே அவரைப் பற்றிய உண்மைகளைத் தெரிந்துகொண்டேன்" என்றார். ஆவணங்களை கசியவிட்டதாக எழுந்த குற்றச்சாட்டுகளுக்கு அவர் பதிலளிக்கவில்லை, ஆனால் அவர் தவறாக செயல்படவில்லை என்றும் தனிப்பட்ட ஆதாயத்திற்காகச் செயல்படவில்லை என்றும் அவர் கூறுகிறார் என்பதை பிபிசி புரிந்துகொள்கிறது. 2008 உலகளாவிய நிதி நெருக்கடியின் போது தேச நலன் கருதி எப்ஸ்டீனின் நிபுணத்துவத்தை தான் நாடியதாக அவர் கூறுகிறார். ஸ்டீவ் பானன் மறைந்த பாலியல் குற்றவாளிக்கும், டிரம்பின் முன்னாள் உயர்மட்ட ஆலோசகர்களில் ஒருவரான ஸ்டீவ் பானனுக்கும் இடையே பரிமாறப்பட்டதாகக் கருதப்படும் ஆயிரக்கணக்கான குறுஞ்செய்திகளும் இந்தக் கோப்புகளில் உள்ளன. இந்தக் குறுஞ்செய்திகளில் பெரும்பாலானவை 2018 மற்றும் 2019-ஆம் ஆண்டுகளில் அனுப்பப்பட்டுள்ளன. பானன் தனது வெள்ளை மாளிகை பதவியிலிருந்து விலகி, எப்ஸ்டீன் இறப்பதற்கு முன்பு அவரைப் பற்றிய ஒரு திரைப்படத்தைத் தயாரித்துக் கொண்டிருந்தபோது இவை அனுப்பப்பட்டதாக கூறப்படுகிறது. ஒரு குறுஞ்செய்தி உரையாடலில், எப்ஸ்டீனின் கடந்த காலக் குற்றங்கள் குறித்த பிம்பத்தை எப்படி மாற்றுவது என்று பானன் அவருடன் திட்டமிடுவது போல் தெரிகிறது. அதில், "முதலில் நாம் பொய்களை எதிர்க்க வேண்டும்" என்றும், "தொண்டு செய்பவர் என்ற உங்கள் பிம்பத்தை மீண்டும் கட்டமைக்க வேண்டும்" என்றும் அவர் பரிந்துரைத்துள்ளார். பதில்: எந்தவொரு தவறான செயலும் செய்ததாகக் குற்றம் சாட்டப்படாத பானன், இது குறித்து கருத்து தெரிவிக்குமாறு பிபிசி கேட்டதற்குப் பதிலளிக்கவில்லை. மிரோஸ்லாவ் லாஜ்சாக் அக்டோபர் 2018-இல், அப்போதைய ஸ்லோவாக்கியாவின் வெளியுறவு அமைச்சராக இருந்த மிரோஸ்லாவ் லாஜ்சாக் மற்றும் எப்ஸ்டீன் இடையே நடந்த குறுஞ்செய்தி பரிமாற்றம், பெண்கள் மற்றும் ராஜ்ஜீயம் குறித்து அவர்கள் உரையாடியதைக் காட்டுகிறது. பதிவுகளில் காண முடியாத ஒரு படத்தை எப்ஸ்டீன் அனுப்பிய பிறகு, லாஜ்சாக் அதற்குப் பதிலளிக்கையில், "இந்த விளையாட்டுகளுக்கு என்னை ஏன் அழைக்கக்கூடாது? நான் 'எம்ஐ' பெண்ணைத் தேர்ந்தெடுப்பேன்," என்று கூறியுள்ளார். அதற்கு எப்ஸ்டீன், "யார் தான் தேர்ந்தெடுக்க மாட்டார்கள். நீங்கள் அவர்கள் இருவரையும் அழைத்துக்கொள்ளலாம், நான் எதையும் சொந்தம் கொண்டாடுபவன் அல்ல. அவர்களின் சகோதரிகளையும் கூட," என்று பதிலளித்துள்ளார். பதில்: சமீபத்தில் எப்ஸ்டீன் தொடர்பான ஆவணங்கள் வெளியானதைத் தொடர்ந்து, லாஜ்சாக் ஸ்லோவாக்கியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் பதவியிலிருந்து ராஜினாமா செய்தார். அவர் எந்த தவறும் செய்ததாக குற்றம் சாட்டப்படவில்லை. ஹோவர்ட் லட்னிக் சமீபத்தில் வெளியிடப்பட்ட எப்ஸ்டீன் தொடர்பான கோப்புகளில் இடம்பெற்றுள்ள மின்னஞ்சல்களின் படி, கோடீஸ்வர தொழிலதிபரும் அமெரிக்க வர்த்தகத் துறை செயலாளருமான ஹோவர்ட் , தனது குடும்பத்துடன் ஜெஃப்ரி எப்ஸ்டீனின் லிட்டில் செயின்ட் ஜேம்ஸ் தீவுக்கு செல்லத் திட்டமிட்டிருந்தது தெரியவந்துள்ளது. டிசம்பர் 2012-இல் அனுப்பப்பட்ட ஒரு மின்னஞ்சலில், அந்தப் பயணத்திற்கு முந்தைய நாளில், லட்னிக்கின் மனைவி அலிசன் எப்ஸ்டீனின் உதவியாளருக்கு மின்னஞ்சல் எழுதியுள்ளார். அதில், "உங்களைச் சந்திக்க ஆவலுடன் காத்திருக்கிறோம்," மேலும், "நாங்கள் உங்களுடன் மதிய உணவில் கலந்துகொள்ள விரும்புகிறோம்"எனக் கூறப்பட்டுள்ளது. பதில்: அமெரிக்க வர்த்தகத் துறை பிபிசிக்கு அளித்த அறிக்கையில், "செயலாளர் லட்னிக், தனது மனைவி முன்னிலையில் மட்டுமே எப்ஸ்டீனுடன் குறைந்த தொடர்புகளை வைத்திருந்தார். அவர் மீது ஒருபோதும் தவறு செய்ததாக குற்றம் சாட்டப்படவில்லை" என்று தெரிவித்துள்ளது. லாரி சம்மர்ஸ் அமெரிக்க அதிபர் பில் கிளிண்டனின் முன்னாள் நிதித்துறை செயலாளரும், ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தின் முன்னாள் தலைவருமான லாரி சம்மர்ஸ் பெயரும் புதிதாக வெளியாகியுள்ள ஆவணங்களில் இடம்பெற்றுள்ளது. இதில் சம்மர்ஸ் மற்றும் எப்ஸ்டீன் இடையேயான சந்திப்புகள் மற்றும் இரவு உணவுகள் குறித்த குறிப்புகளும் உள்ளன. 2017-ஆம் ஆண்டின் மின்னஞ்சல்களில், சம்மர்ஸும் எப்ஸ்டீனும் டிரம்பின் முதல் பதவிக்காலத்தைப் பற்றி கேலி செய்தும் விமர்சித்தும் பேசியுள்ளனர். சம்மர்ஸிற்கு அனுப்பிய ஒரு மின்னஞ்சலில் டிரம்பைப் பற்றி எப்ஸ்டீன் கூறுகையில், "அவர் உண்மையில் எவ்வளவு முட்டாள் என்பதை உங்கள் உலகம் புரிந்து கொள்ளவில்லை," என்று குறிப்பிட்டுள்ளார். பதில்: நவம்பர் மாதம் வெளியான எப்ஸ்டீன் கோப்புகளின் தொகுப்பில் சம்மர்ஸ் பெயர் குறிப்பிடப்பட்ட பிறகு, "எப்ஸ்டீனுடன் தொடர்ந்து தொடர்புகொள்வது என்ற எனது தவறான முடிவிற்கு நான் முழு பொறுப்பேற்கிறேன்" என்று அவர் தெரிவித்தார். மேலும் ஓப்பன் ஏஐ ஆலோசனைக் குழு பதவி உட்பட பல பதவிகளிலிருந்து அவர் விலகினார். ஸ்டீவ் டிஷ் நியூயார்க் ஜெயண்ட்ஸ் அணியின் இணை உரிமையாளரான ஸ்டீவ் டிஷ், எப்ஸ்டீன் வீட்டில் தான் சந்தித்த ஒரு பெண்ணைப் பற்றி விசாரிப்பது புதிதாக வெளியிடப்பட்டுள்ள இந்த ஆவணங்களில் தெரியவந்துள்ளது. ஒரு மின்னஞ்சல் பரிமாற்றத்தில், அந்தப் பெண் ஒரு தொழில்ரீதியிலான பணியாளரா அல்லது " குடிமகளா" என்று டிஷ் கேட்டுள்ளார். மற்றொரு உரையாடலில், எப்ஸ்டீன் டிஷ்ஷிற்கு ஒரு "பரிசு" வைத்திருப்பதாகக் கூறி, அவருக்கு அறிமுகப்படுத்தப்போகும் ஒரு பெண்ணைப் பற்றி, "தாஹிடியன், பெரும்பாலும் பிரஞ்சு பேசுவார், கவர்ச்சியானவர்" என்று விவரித்துள்ளார். பதில்: சிஎன்என் செய்தி நிறுவனத்திற்கு அளித்த செய்தியில், எப்ஸ்டீனுக்கும் தனக்கும் "குறுகிய காலத் தொடர்பு இருந்தது" என்று டிஷ் கூறியுள்ளார். மேலும், "அவரது அழைப்புகள் எதையும் தான் ஏற்கவில்லை என்றும், அவரது தீவிற்கு ஒருபோதும் சென்றதில்லை" என்றும் அவர் தெரிவித்துள்ளார். பிரட் ராட்னர் அதிபரின் மனைவி மெலனியா டிரம்ப் குறித்த புதிய ஆவணப்படத்தின் இயக்குனர், ஒரு இளம் பெண்ணைத் தழுவியபடி இருக்கும் புகைப்படம் இந்தக் கோப்புகளில் இடம்பெற்றுள்ளது. 'ரஷ் ஹவர்' மற்றும் 'எக்ஸ்-மென்: தி லாஸ்ட் ஸ்டாண்ட்' ஆகிய திரைப்படங்களை இயக்கிய பிரட் ராட்னர், எப்ஸ்டீன் மற்றும் அடையாளம் மறைக்கப்பட்ட இரண்டு பெண்களுடன் ஒரு சோபாவில் அமர்ந்திருப்பதை அந்தப் படத்தில் காண முடிகிறது. பதில்: இந்த ஆவணங்களில் தவறான செயல்கள் ஏதும் நடந்ததாகக் குறிப்பிடப்படவில்லை. பிபிசி இது குறித்த கருத்துக்களைத் தெரிந்துகொள்ள ரட்னரின் பிரதிநிதியைத் தொடர்பு கொண்டுள்ளது. பட மூலாதாரம்,US Department of Justice படக்குறிப்பு,ஜெஃப்ரி எப்ஸ்டீன் மற்றும் இரண்டு பெண்களுடன் பிரெட் ராட்னர் வலதுபுறத்தில் காணப்படுகிறார். பீட்டர் அட்டியா முதுமைத் தடுப்பு தொடர்பான துறையில் சமூக வலைதள பிரபலம் மற்றும் சிபிஎஸ் நியூஸ் பங்களிப்பாளரான பீட்டர் , எப்ஸ்டீனுடன் நூற்றுக்கணக்கான மின்னஞ்சல்களைப் பரிமாறிக்கொண்டதை சமீபத்தில் வெளியிடப்பட்டுள்ள ஆவணங்கள் காட்டுகின்றன. இதில் தரம் குறைந்த கருத்துகளும் இடம்பெற்றுள்ளன. மின்னஞ்சல்களில், எப்ஸ்டீனுடனான தனது நட்பை பகிரங்கமாகப் பகிர்ந்து கொள்ளக்கூடிய ஒன்று என்று அவர் எழுதியுள்ளார். மேலும், எப்ஸ்டீனால் பாதிக்கப்பட்ட சிலரை அடையாளம் காட்டிய 2018-ஆம் ஆண்டின் மியாமி ஹெரால்டு கட்டுரை குறித்த விவாதமும் அதில் இடம்பெற்றுள்ளது. பெண்களின் உடல் அமைப்பு மற்றும் பாலியல் செயல்பாடுகள் குறித்து அவர் எப்ஸ்டீனுடன் நகைச்சுவையாக பேசுவது போன்ற குறிப்புகளும் மின்னஞ்சல்கள் மூலம் தெரியவந்துள்ளது. பதில்: பிப்ரவரி 2 அன்று எக்ஸ் தளத்தில் வெளியிட்ட அறிக்கையில், தான் "எந்தவொரு குற்றச் செயலிலும் ஈடுபடவில்லை" என்று அட்டியா மறுத்துள்ளார். மேலும், "நான் ஒருபோதும் அவரது விமானத்திலோ, அவரது தீவிலோ இருந்ததில்லை, எந்தவொரு பாலியல் பார்ட்டிகளிலும் கலந்து கொண்டதில்லை" என்றும் அவர் தெரிவித்துள்ளார். கேசி வாசர்மேன் 2028 லாஸ் ஏஞ்சலிஸ் ஒலிம்பிக் போட்டியின் தலைவர், சிறையில் உள்ள எப்ஸ்டீனின் கூட்டாளியான கிஸ்லேன் மேக்ஸ்வெல்லுக்கு ஆபாசமாக மின்னஞ்சல்களை அனுப்பியுள்ளார். 2003-இல் மேக்ஸ்வெல்லுக்கு அனுப்பப்பட்ட கேசி வாசர்மேனின் குறுஞ்செய்திகளில், "நான் எப்போதும் உன்னைப் பற்றியே நினைக்கிறேன்... உன்னை இறுக்கமான தோலால் செய்யப்பட்ட உடையில் பார்க்க நான் என்ன செய்ய வேண்டும்?" என்று அவர் கேட்டுள்ளார். எப்ஸ்டீனால் பாலியல் ரீதியாகத் துன்புறுத்தப்படுவதற்கு, இளம் பெண்களைத் திரட்டியதற்காகவும் கடத்தியதற்காகவும் மேக்ஸ்வெல் தற்போது 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை அனுபவித்து வருகிறார். பதில்: வாசர்மேன் ஒரு அறிக்கையில் இவ்வாறு கூறியுள்ளார். "இருபது ஆண்டுகளுக்கு முன்பு, கிஸ்லேன் மேக்ஸ்வெல் செய்த கொடூரமான குற்றங்கள் வெளிச்சத்திற்கு வருவதற்கு நீண்ட காலத்திற்கு முன்பே அவருடன் நான் தொடர்பு கொண்டிருந்ததற்காக ஆழமாக வருந்துகிறேன்." செர்ஜி பிரின் கூகுள் நிறுவனத்தின் இணை நிறுவனரும், உலகின் மிகப் பெரிய பணக்காரர்களில் ஒருவருமான செர்ஜி பிரின், எப்ஸ்டீனின் தனியார் தீவிற்குச் சென்றதுடன், நியூயார்க் நகரில் உள்ள எப்ஸ்டீனின் இல்லத்தில் இரவு உணவருந்தவும் திட்டமிட்டிருந்ததாக வெள்ளிக்கிழமையன்று வெளியிடப்பட்ட ஆவணங்கள் கூறுகின்றன. அவர் கிஸ்லேன் மேக்ஸ்வெல்லுடனும் தொடர்பு கொண்டிருந்தார். ஏப்ரல் 2003-இல் மேக்ஸ்வெல் பிரின்னிற்கு எழுதிய கடிதத்தில், "ஜெப்ரியின் இல்லத்தில் நடக்கும் இரவு உணவுகள் எப்போதும் மகிழ்ச்சியாகவும், சாதாரணமாகவும், நிதானமாகவும் இருக்கும்" என்றும், "உங்களைச் சந்திக்க ஆவலுடன் காத்திருக்கிறேன்" என்றும் குறிப்பிட்டுள்ளார். பதில்: பிபிசி இது குறித்த கருத்துக்களை அறிந்துகொள்ள கூகுள் நிறுவனத்தைத் தொடர்பு கொண்டுள்ளது. இந்த மின்னஞ்சல்களில் எந்தவொரு தவறான செயலும் நடந்ததாகக் குறிப்பிடப்படவில்லை. எஹுத் பராக் முன்னாள் இஸ்ரேலிய பிரதமர் எஹுத் பராக் குறித்து புதிதாக வெளியிடப்பட்ட எப்ஸ்டீன் தொடர்பான ஆவணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. 2008-ஆம் ஆண்டு புளோரிடாவில் பாலியல் குற்றங்களுக்காக எப்ஸ்டீன் தண்டிக்கப்பட்ட பிறகும், அவர்கள் இருவரும் பல சந்தர்ப்பங்களில் தொடர்பு கொண்டிருந்ததை இந்த ஆவணங்கள் காட்டுகின்றன. 2017-ஆம் ஆண்டில் நியூயார்க் நகரிலுள்ள எப்ஸ்டீனின் இல்லத்தில் தங்குவதற்கு பராக் திட்டமிட்டிருந்ததை ஒரு உரையாடல் காட்டுகிறது. பதில்: எப்ஸ்டீனுடன் தனக்கு வழக்கமான தொடர்புகள் இருந்ததை பராக் ஒப்புக்கொண்டார். ஆனால் முறையற்ற நடத்தைகள் அல்லது பார்ட்டிகளை தான் ஒருபோதும் பார்த்ததுமில்லை, அதில் பங்கேற்றதுமில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார். நோம் சாம்ஸ்கி புகழ்பெற்ற மொழியியலாளர் நோம் சோம்ஸ்கியின் பெயர் இரண்டு முறை வெளியிடப்பட்ட எப்ஸ்டீன் கோப்புகளிலும் இடம்பெற்றுள்ளது. எப்ஸ்டீன் மீதான பாலியல் கடத்தல் குற்றச்சாட்டுகள் குறித்த ஊடகச் செய்திகள் தொடர்பாக சோம்ஸ்கி அவருக்கு ஆலோசனை வழங்கியதாகச் சமீபத்திய ஆவணங்கள் தெரிவிக்கின்றன. பிப்ரவரி 2019-இல் பரிமாறப்பட்ட மின்னஞ்சல்களில், தான் "தன்னை தற்காத்துக் கொள்ள வேண்டுமா" அல்லது "புறக்கணிக்க வேண்டுமா" என்று எப்ஸ்டீன் சோம்ஸ்கியிடம் கேட்டுள்ளார். அதற்கு பதிலாக சோம்ஸ்கியிடமிருந்து வந்ததாகக் கருதப்படக்கூடிய ஒரு மின்னஞ்சலில், எப்ஸ்டீன் "மிக மோசமான முறையில் நடத்தப்பட்டுள்ளார்" என்றும், "பெண்கள் துஷ்பிரயோகம் குறித்து உருவாகியுள்ள பீதி " ஆகியவை குறித்து வருத்தம் தெரிவிக்கப்பட்டுள்ளது. "இதைச் சொல்வது வேதனையாக இருக்கிறது, ஆனால் இதை அலட்சியப்படுத்துவதே முன்னேறிச் செல்வதற்கான சிறந்த வழி என்று நான் நினைக்கிறேன்," என்று அந்த மின்னஞ்சலில் கூறப்பட்டுள்ளது. பதில்: கோப்புகளில் சோம்ஸ்கியின் பெயர் இடம்பெற்றிருப்பது எந்த தவறான செயலும் நடந்ததாகக் குறிக்கவில்லை. இதுகுறித்து கருத்து பெற, அவரது மனைவியும் அவரது செய்தித் தொடர்பாளருமான வலேரியாவை பிபிசி தொடர்பு கொண்டுள்ளது. பிராட் கார்ப் புகழ்பெற்ற சட்ட நிறுவனமான பால் வெயிஸின் தலைவர் பிராட் கார்ப், அவருக்கும் எப்ஸ்டீனுக்கும் இடையே நடந்த மின்னஞ்சல் பரிமாற்றங்கள் சமீபத்திய கோப்புகளில் வெளியானதைத் தொடர்ந்து தனது பதவியிலிருந்து விலகினார். அந்த மின்னஞ்சல் பரிமாற்றங்களில் ஒன்றில், பாலியல் கடத்தல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக எப்ஸ்டீன் முன்பே செய்துகொண்ட குற்ற ஒப்புதல் ஒப்பந்தம் குறித்து கார்ப் விவாதித்ததாக கூறப்படுகிறது. எப்ஸ்டீன் கைது செய்யப்படுவதற்கு நான்கு மாதங்களுக்கு முன்பு, மார்ச் 2019-இல் அனுப்பப்பட்ட மின்னஞ்சலில், பிராட் கார்ப் என்ற பெயரில் உள்ள ஒருவர், "வரைவு மனு மிகச் சிறந்த நிலையில் உள்ளது" என்று கூறியுள்ளார். ப்ளூம்பெர்க் வெளியிட்ட தகவலின்படி, இந்த விவாதம், 2008 ஆம் ஆண்டு வழக்கறிஞர்களுடன் எப்ஸ்டீன் செய்துகொண்ட குற்றஒப்புதல் ஒப்பந்தத்தை பாதுகாப்பதற்கான அவரது முயற்சிகளுடன் தொடர்புடையதாகும். அந்த ஒப்பந்தத்தின் மூலம், ஆயுள் தண்டனை வரை எதிர்கொள்ள வேண்டிய ஃபெடரல் குற்றச்சாட்டுகளிலிருந்து அவர் தப்பித்திருந்தார். இருப்பினும், அந்த மின்னஞ்சல்கள் உண்மையில் அந்த ஒப்பந்தத்துடன் நேரடியாக தொடர்புடையவை என்பதை நிரூபிக்கும் எந்த ஆதாரமும் இல்லை. பதில்: புதன்கிழமை நிறுவனத்தின் அறிக்கையில் தனது ராஜினாமாவை அறிவித்த கார்ப், "சமீபத்திய செய்திகள் கவனச்சிதறலை உருவாக்கியுள்ளன, மேலும் என் மீது விழுந்துள்ள இந்த கவனம் நிறுவனத்தின் நலனுக்கு உகந்தது அல்ல" என்று கூறினார். அந்த அறிக்கை எப்ஸ்டீன் கோப்புகளைப் பற்றிக் குறிப்பிடவில்லை, மேலும் கார்ப் அதன் பிறகு எந்தக் கருத்தும் தெரிவிக்கவில்லை. இது குறித்து கூடுதல் விளக்கத்திற்காக பிபிசி பால் வெயிஸ் நிறுவனத்தைத் தொடர்பு கொண்டுள்ளது. பில் கிளிண்டன் டிசம்பர் மாதம் நீதித்துறை வெளியிட்ட எப்ஸ்டீன் ஆவணங்களின் முதல் தொகுப்பில், முன்னாள் அமெரிக்க அதிபர் பில் கிளிண்டனின் பல படங்கள் இடம்பெற்றிருந்தன. அதில் அவர் ஒரு நீச்சல் குளத்தில் நீந்துவது போன்ற ஒரு படமும், மற்றொரு படத்தில் 'ஹாட் டப்' என்று கருதப்படும் இடத்தில் கைகளை தலைக்கு பின்னால் வைத்துக் கொண்டு படுத்திருப்பது போன்ற படமும் அடங்கும். எப்ஸ்டீன் முதன்முதலில் கைது செய்யப்படுவதற்கு முன்பு, 1990-கள் மற்றும் 2000-களின் முற்பகுதியில் எப்ஸ்டீனுடன் கிளிண்டன் பலமுறை புகைப்படம் எடுக்கப்பட்டுள்ளார். பதில்: கிளிண்டனின் செய்தித் தொடர்பாளர் ஏஞ்சல் உரெனா, டிசம்பர் மாதம் சமூக ஊடகங்களில் கூறுகையில், நீதித்துறை வெளியிட்ட புகைப்படங்கள் பல தசாப்தங்கள் பழமையானவை என்றார். "அவர்கள் விரும்பும் அளவிற்கு 20 ஆண்டுகளுக்கு மேலான தெளிவற்ற பழைய புகைப்படங்களை வெளியிடலாம், ஆனால் இது பில் கிளிண்டனைப் பற்றியது அல்ல. ஒருபோதும் இருந்ததும் இல்லை, இருக்கப்போவதும் இல்லை," என்று அவர் கூறினார். மேலும், "இங்கு இரண்டு வகை மனிதர்கள் உள்ளனர். முதல் குழுவினர் எப்ஸ்டீனைப் பற்றி எதுவும் தெரியாமல், அவரது குற்றங்கள் வெளிச்சத்திற்கு வரும் முன்பே அவரோடனான தொடர்பைத் துண்டித்தவர்கள். இரண்டாவது குழுவினர் அவரது குற்றங்களுக்குப் பிறகும் தொடர்பைத் தொடர்ந்தவர்கள். நாங்கள் முதல் குழுவில் இருக்கிறோம்," என்றும் அவர் கூறினார். சமூக வலைதளப் பதிவொன்றில் கிளிண்டன், தனக்குத் தெரிந்த அனைத்தையும் நாடாளுமன்றத்திடம் தெரிவித்துவிட்டதாகக் குறிப்பிட்டிருந்தார். "எப்ஸ்டீன் கோப்புகளை முழுமையாக வெளியிட வேண்டும் என்று நான் கூறியுள்ளேன். எனக்குத் தெரிந்தவற்றை ஒரு சத்தியப் பிரமாண வாக்குமூலமாக அளித்துள்ளேன். மேலும் இந்த வாரத்தில் தான், குழுவின் முன் நேரில் ஆஜராக ஒப்புக்கொண்டுள்ளேன்," என்று அவர் கூறினார். கிளிண்டன் இந்த மாத இறுதியில் பிரதிநிதிகள் சபையின் மேற்பார்வைக் குழு முன் சாட்சியமளிக்க உள்ளார், மேலும் அந்த விசாரணை வெளிப்படையாக நடக்க வேண்டும் என்றும் அவர் கோரியுள்ளார். தீபக் சோப்ரா 2008 ஆம் ஆண்டு சிறுமிகளிடம் பாலியல் தொடர்பு கொண்டதாக குற்றம் சாட்டப்பட்டு தண்டனை பெற்ற பின்னர், ஜெஃப்ரி எப்ஸ்டீன் மற்றும் எழுத்தாளர் தீபக் சோப்ரா இடையே பல ஆண்டுகளுக்குப் பிறகும் தொடர்புகள் இருந்ததாக இந்த கோப்புகள் வெளிப்படுத்துகின்றன. பிப்ரவரி 2017-இல் அனுப்பப்பட்ட ஒரு மின்னஞ்சலில், சோப்ரா தன்னோடும் பெயர் குறிப்பிடப்படாத ஒரு குழுவோடும் இஸ்ரேலுக்கு வருமாறு எப்ஸ்டீனை அழைக்கிறார். "எங்களுடன் இஸ்ரேலுக்கு வாருங்கள்," என்று சோப்ரா கூறுகிறார். "சுவாரஸ்யமான மனிதர்களுடன் நிதானமாகவும் மகிழ்ச்சியாகவும் இருங்கள். நீங்கள் விரும்பினால் போலிப் பெயரைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள். உங்கள் பெண்களை அழைத்து வாருங்கள். நீங்கள் எங்களுடன் இருப்பது வேடிக்கையாக இருக்கும். உங்களுக்கு அன்புடன் எழுதிக்கொள்கிறேன்"என்கிறது ஒரு செய்தி. ஒரு மாதம் கழித்து நடந்த மற்றொரு உரையாடலில், இருவரும் கடவுள் மற்றும் மனித உடலின் செல்கள் பற்றிப் பேசியுள்ளார்கள். அப்போது சோப்ரா, "செல்கள் மனிதர்களால் உருவாக்கப்பட்டவை. அப்படி எதுவும் இல்லை. பிரபஞ்சம் மனிதர்களால் உருவாக்கப்பட்டது, அப்படி எதுவும் இல்லை. அழகான பெண்கள் சத்தம் எழுப்பும்போது விழிப்புடன் இருக்கிறார்கள்," என்று கூறியுள்ளார். அந்த விவாதத்தின் தொடர்ச்சியாக சோப்ரா மேலும் கூறுகையில், "கடவுள் என்பது ஒரு கற்பனை. அழகான பெண்கள் தான் உண்மையானவர்கள்," என்கிறார். மாற்று மருத்துவ ஆதரவாளரான சோப்ராவிடம் எப்ஸ்டீன், "எனக்காக ஒரு அழகான இஸ்ரேலியப் பெண்ணைக் கண்டுபிடித்தீர்களா?" என்றும் கேட்கிறார். பதில்: இந்த மின்னஞ்சல்கள் வெளியானதிலிருந்து, சோப்ரா இணையத்தில் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார். அதில் அவர் "இந்த வழக்கில் பாதிக்கப்பட்டவர்களின் துயரத்தைக் கண்டு ஆழ்ந்த வருத்தம் அடைவதாக" கூறியுள்ளார். மேலும் "எந்தவொரு குற்றவியல் அல்லது சுரண்டல் நடத்தையிலும்" தனக்குத் தொடர்பில்லை என்று மறுத்துள்ளார். "நான் குறைவாக தொடர்பு கொண்டிருந்தேன், மேலும் அவை அத்துமீறல் நடவடிக்கைகள் தொடர்பானவை அல்ல. கடந்த கால மின்னஞ்சல் பரிமாற்றங்கள் சில தற்போது வெளிவந்துள்ளன, அவை மோசமான தொனியில் இருந்தன. அதற்காக நான் வருந்துகிறேன், அக்காலகட்டத்தில் பொதுவாகத் தெரிந்த விஷயங்களின் அடிப்படையில் அவை இன்று எப்படிப் பார்க்கப்படும் என்பதை நான் புரிந்து கொள்கிறேன். பொறுப்புணர்வு, தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களைப் பாதுகாக்கும் முயற்சிகளை ஆதரிப்பதில் எனது கவனம் தொடர்கிறது," என்று கூறியுள்ளார். எப்ஸ்டீனுடன் கொண்டிருந்த தொடர்புகளில், ஏதேனும் தவறான செயல்கள் குறித்து அவர் அறிந்திருந்தாரா என்பதை பிபிசி, சோப்ராவிடம் கேட்டுள்ளது. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c8j3jknlynpo

"அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English

1 week 6 days ago
"அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English / பகுதி Part: 99D பகுதி: 99 D [99 இன் தமிழ் விரிவாக்கம் தொடர்கிறது] திரு. பிள்ளை சரியாகக் குறிப்பிடுவது போல, கிறிஸ்தவ சகாப்தத்திற்கு முந்தைய மற்றும் அடுத்தடுத்த நூற்றாண்டுகளில் இலங்கையின் வடக்குப் பகுதி நாகர்களின் நிலமாக இருந்தது. இடைக்கால காலத்திற்குப் பிறகு, உக்குரே சிங்கம் ஒரு ராஜ்யத்தை நிறுவியபோது யாழ்ப்பாணத்தில் ஒரு தமிழ் இராச்சியம் தொடங்கியது எனலாம் [As Mr. Pillai rightly observes, the northern part of Ceylon was the land of the Nagas in the centuries preceding and succeeding the Christian era. After a period of interregnum a Tamil Kingdom started in Jaffna when Ukkure Singham established a kingdom] யாழ்ப்பாண அரசைப் பற்றிய அரிய தகவல் ஒன்றை 8ஆம் நூற்றாண்டு அரபுப் பயணி அல் மசுடி / மாசுடி [கி பி 896–956] என்பவர் தன் பயணக் குறிப்பில் எமக்கு தருகிறார். இவர் யாழ்ப்பாண துறைமுகத்தை கி பி 912 இல் அடைந்து, அங்கு தாம் கண்டதை விபரிக்கிறார். [Al-Masudi, the great Mohammedan traveler, reached the Port of Jaffna in 912 A D] அவர் அங்கு ஒரு சைவ [இந்து] அரசனின் இறுதி சடங்கு ஒன்று பார்த்ததாகவும், அங்கு அரசனின் இறந்த உடல் உயரம் குறைந்த ஒரு தேர் மீது வைக்கப்பட்டு, அது வீதியால் இழுக்கப் பட்டது. அப்பொழுது ஒரு பெண் தரையை பெருக்கி, இறந்த ராஜாவின் தலை முடிக்கு தூசி வீசி எறிந்தாள், அத்துடன் அங்கு கூடி இருந்தவர்கள் வாழ்க்கையின் பயனற்ற தன்மையை உணர்ச்சி பொங்கக் கூக்குரலிட்டதுடன், கடவுளை வணங்கி புகழ்ந்து பாடினார்கள் என்றும், உடல் இறுதி சடங்கில் சிதையில் வைக்கும் முன்பு, உடல் முழுவதும் சந்தனம் பூசி, அரசனின் உடல் நாலு பகுதிகளாக வாளால் வெட்டப்பட்டது என்றும் பதிவு செய்து உள்ளார். [Masudi states that the King was placed on a low chariot and while it was being drawn, a woman swept the ground and threw dust on the hair of the dead king, exclaiming the futility of life and extolling the worship of God. Before the body was put on the funeral pyre, it was smeared with sandalwood and cut into four pieces with a sword]. இறந்தவர்களுக்காக வருந்தி பாடும் பாடலே ஒப்பாரி ஆகும். மன அமைதிக்காகவும், ஆறுதலுக்காகவும் ஒருவருடைய உள்ளத்தில் எழுகின்ற துன்ப உணர்வை வெளிக்காட்ட ஒப்பாரி பாடப்படுகிறது எனலாம். இறந்தவர்களின் வரலாறு பற்றித் தெரியாதவர்கள் அப்பாடல் மூலம் வரலாற்றினை அறியவும் இது உதவுகிறது. இந்த ஒப்பாரிப்பாடலை, “கையறு நிலை“ என்று சங்க இலக்கியங்கள் கூறுவதையும் காணலாம். உதாரணமாக, “ வெற்றி வேந்தன் விண்ணகம் அடைந்தபின் கற்றோர் உரைப்பது கையறு நிலையே “ என சிற்றிலக்கியமான [சிறு பிரபந்தம்], பன்னிரு பாட்டியல் கூறுகிறது. அப்படி யாழ்ப்பாண அரசன் ஒருவன் விண்ணகம் அடைந்த நிகழ்வையே இங்கு அல் மசுடி விவரிப்பதை காண்கிறோம். போரில் வாளால் இறக்காத குற்றத்தை (இழிவை) அவர்களிடத்தினின்று நீக்க வேண்டி, நான்கு வேதங்களையும் நன்கு கற்றறிந்து அறத்தை விரும்பும் பார்ப்பனர், செம்மையான, விரும்பத்தக்க பசுமை நிறமுள்ள புல்லை (தருப்பையைப்) பரப்பி, அதில் அவர்களின் உடலைக் கிடத்தி, “தமது ஆண்மையில் பற்றுடன் போரில் மாய்ந்த வீரக்கழலணிந்த வீரர்கள் செல்லும் இடத்திற்கு செல்க” என வாளால் பிளந்து அடக்கம் செய்யப்படும் என புறநானுறு 93, மிக விரிவாக தமிழரின், குறிப்பாக தமிழ் மன்னர்களின் அன்றைய பண்பாட்டை எடுத்து கூறுகிறது. "அவர் தீது மருங்கு அறுமார், அறம் புரி கொள்கை நான்மறை முதல்வர் திறம் புரி பசும் புல் பரப்பினர் கிடப்பி, “மறம் கந்து ஆக நல் அமர் வீழ்ந்த நீள் கழல் மறவர் செல்வுழிச் செல்க” என வாள் போழ்ந்து அடக்கலும் உய்ந்தனர் மாதோ," [புறநானுறு 93] இதைத் தான் அல் மசுடி கண்டார் என்பதை நாம் இலகுவாக ஊகிக்கலாம், மற்றது அவர் தலைமுடிக்கு தூசி வீசி எறிந்தனர் என்பது கட்டாயம் திருநீறை குறித்து இருக்கலாம்?அப்படியே, கூக்குரலிட்டனர் என்பது ஒப்பாரிப்பாட்டாக இருக்கலாம் ? அது இன்னும் தொடரும் தமிழர் பண்பாடாகும். எனவே இது கட்டாயம் ஒரு தமிழ் சைவ அரசன் என்பது மிகவும் தெளிவாகிறது. அத்துடன் எட்டாம் நூற்றாண்டிலும் யாழ்ப்பாணத்தில் தமிழர் ஆட்சி நடந்தது என்பது வரலாற்று சான்றாக இங்கு சாட்சிகளுடன் பதியப் பட்டுள்ளது என்பது குறிப்பிடத் தக்கது. நன்றி Thanks [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] [Kandiah Thillaivinayagalingam, Athiady, Jaffna] பகுதி / Part: 100 தொடரும் / Will follow துளி/DROP: 2026 ["அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English / பகுதி Part: 99D https://www.facebook.com/groups/978753388866632/posts/33724620357186512/?

யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026

1 week 6 days ago
குறைந்த‌ ர‌ன்ஸ் அடிக்க‌ வாய்ப்பில்லை 135தாண்டுவின‌ம்.............. குஜ‌ராத் மைதான‌ம் ம‌ட்டைய‌டி வீர‌ர்க‌ளுக்கு சாத‌க‌மான‌ மைதான‌ம்.............. ஜ‌பிஎல் பின‌ல் கூட‌ உந்த‌ மைதான‌த்தில் தானே ந‌ட‌த்துகிற‌வை.........................

சிறு கதை - 197 / எல்லாளன் & விஹாரமஹாதேவி (இரு ஆசிரியர்களின் காதல் கதை)

1 week 6 days ago
சிறு கதை - 197 / எல்லாளன் & விஹாரமஹாதேவி (இரு ஆசிரியர்களின் காதல் கதை) திருகோணமலையில் உள்ள அந்த தமிழ் பாடசாலை, வெளியில் பார்க்கும் போது சாதாரண பள்ளிக்கூடமாகத் தோன்றினாலும், உள்ளே அது ஒரு சிறிய பாராளுமன்றம் போல இயங்கியது. சட்டங்களுக்குப் பதிலாக சுற்றறிக்கைகள்; வாக்காளர்களுக்குப் பதிலாக மேற்பார்வையாளர்கள் [இன்ஸ்பெக்டர்கள்]; பாடப் புத்தகங்களை விட உண்மையான அரசியலை, வரலாற்றை நன்கு புரிந்து கொண்ட மாணவர்கள். அங்கு இளம் பட்டதாரி எல்லாளன் கணிதமும் இயற்பியலும் கற்பித்தான். அரசாங்கங்கள் மக்களுக்குக் கீழ்ப்படிந்ததை விட, எண்கள் அவனுக்குக் கீழ்ப்படிந்தன. அதே பாடசாலையில், இளம் பட்டதாரி விஹாரமஹாதேவி தமிழ் மாணவர்களுக்கு சிங்களம் கற்பித்தாள். மொழி ஆயுதமல்ல — ஆனால் அரசும் அதன் கூட்டாளிகளும் அதை ஆயுதமாக்குகிறார்கள் என்று அவள் நம்பினாள். உடைந்த மின்விசிறிகளின் கீழ், குளிர்ந்த தேநீருடன், அவர்கள் முதன்முறையாக ஆசிரியர் அறையில் சந்தித்தனர். “நீங்க வவுனியாவைச் சேர்ந்தவரா?” என்று அவள் கேட்டாள். “ஆம். வடக்கின் எல்லைப் பகுதி,” என்று எல்லாளன் பதிலளித்தான். அவள் சிரித்தாள். “நானும் அப்படித்தான். மதவாச்சி. உங்கள் எல்லை முடிய, எங்கள் எல்லை தொடங்குது. ஒரே மண்—வேறு பலகைகள்.” இருவரும் தமிழும் சிங்களமும் சரளமாகப் பேசியதுடன், கடினமான போர் காலங்களில் வளர்ந்த அவர்கள், உயிர்வாழும் முக்கியமான பாடங்களையும் கற்றுக்கொண்டனர். அதில் முக்கியமாக, எப்போது தப்பிப்பது பாதுகாப்பானது, எப்போது பேசாமல் இருப்பது புத்திசாலித்தனம் மற்றும் எப்போது மௌனமாக இருப்பது ஆபத்தை விளைவிக்கும் என்பதை அவர்கள் இருவரும் நன்றாக அறிந்திருந்தனர். ஏனென்றால் மௌனம் தவறாகப் புரிந்து கொள்ளப்படலாம், தண்டிக்கப்படலாம் அல்லது அவர்களுக்கு எதிராகப் பயன்படுத்தப்படலாம். சுருக்கமாகச் சொன்னால், மொழி, பேச்சு மற்றும் மௌனம் அவர்களின் வாழ்க்கையில் ஒருபோதும் நடுநிலையானவை அல்ல என்பதை அவர்கள் கற்றுக் கொண்டனர். ஒரு மதியம், பாடசாலைக்கு வந்த ஒரு கல்வி அதிகாரி அங்கு கூடியிருந்த ஆசிரியர்களிடம் கேட்டார், “இங்கே தேசிய நல்லிணக்கம் எப்படி இருக்கிறது?” எல்லாளன் பணிவுடன் பதிலளித்தான்: “ஐயா, இயற்பியலில், சமநிலை நிலைத்தன்மையை உருவாக்குகிறது. சமூகத்தில், நடுநிலையான நீதி தான் அதைச் செய்கிறது. அது எல்லா இடமும் பரவி இருந்தால்?” அதிகாரி உடனே ஏதோ ஒன்றைத், தனது குறிப்பு புத்தகத்தில் எழுதினார். ஆனால் அது யாருக்கும் என்னவென்று தெரியாது. அவர் சென்ற பிறகு, விகாரமஹாதேவி அவனின் காதில் கிசுகிசுத்தார், “நீங்கள் அதிகமாக உண்மையைப் பேசி விட்டீர்கள்.” எல்லாளன் சிரித்தான். “நான் அதை ஒரு சூத்திரமாகக் குறைத்துத் தான் கூறினேன். ஆனால் மிக வலிமையுடன்.” அவர்கள் அடிக்கடி வரலாறும் இன்றைய அரசியலும் பற்றிய உண்மைகளை, பகிடிகள் கலந்து ஒருவருக்கு ஒருவர் தங்கள் தங்கள் கருத்துக்களையும் பகிர்ந்தனர். ஒரு மாலை, பள்ளிக்குப் பிறகு, அவர்கள் நடந்து தங்கள் தங்கள் விடுதிக்கு போகும் போது, ஒரு தேநீர் கடையில் கொஞ்சம் ஓய்வு எடுத்தார்கள். அப்பொழுது அவள் சொன்னாள்: “மகாவம்சம் எல்லாளனையும் துட்டுகமுனுவையும் எதிரிகளாக்கியது”. “ஆனால் நிஜ வாழ்க்கையில், எல்லாளனும் விஹாரமஹாதேவியும் தேநீர் பகிர்ந்து கொள்கிறார்கள் இங்கே” என்றான் எல்லாளன். அவள் சிரித்தாள். “ஏனென்றால் நாங்கள் குழந்தைகளுக்குக் கற்பிக்கிறோம். நாளாகமங்களை அல்லது புராணங்களை அல்ல.” ஆமாம், பல இலங்கை வரலாற்று புராணப் புத்தகங்கள் பெரும்பாலும் பிளவுகளை உருவாக்கி மக்களைப் போட்டியாளர்களாக மாற்றுகின்றன, உண்மையான இலங்கை வரலாற்றை, உறுதியான சாட்சிகளுடன் அலசுவதில்லை என்று அவன் சுட்டிக்காட்டினான். ஒரு ஞாயிற்றுக் கிழமை மாலை, பாடசாலை விடுமுறை என்பதால், கடற்கரையில் அவர்கள் பொழுதுபோக்காக நடக்கும் போது, கைத்தொலைபேசியில் செய்தியும் கேட்டுக்கொண்டும் இருந்தார்கள். அப்பொழுது ஒரு அமைச்சரின் உரை வானொலியில் ஒலித்தது: “பண்டைய காலங்களில் பியங்குதீபத்தில் [பியங்குதீபம் / Piyahgudipa], இன்றைய புங்குடுதீவில், சிங்கள பௌத்தர்கள் வாழ்ந்தனர்.” எல்லாலன் புருவத்தை உயர்த்தினான். "ஆர்வமாக இருக்கிறது," என்று அவன் அமைதியாகச் சொன்னான். "அப்போது சிங்கள மொழியே இன்னும் உருவாகவில்லை. ஏன் என்றால் இது கூறப்பட்டது கி மு இரண்டாம் நூற்றாண்டு துட்டுகெமுனு (Dutugemunu) புராணக் கதையில் " விஹாரமஹாதேவி தனது கையில் இருந்த குளிர் பணத்தை பருகியபடி, “அப்படியானால் மக்கள் இன்னும் பிறக்காத ஒரு மொழியைப் பேசினார்களா?” அவர்கள் யாரையும் கேலி செய்யாமல் மெதுவாக சிரித்தனர். அவர்களின் சிரிப்பு அனுபவத்தாலும் களைப்பாலும் வந்தது— பல வருடங்களாக ஒரே தவறான பதிலை மீண்டும் மீண்டும் திருத்த வேண்டிய ஆசிரியர்களைப் போல.” அந்த வேளை, எல்லாளன் சிறு விளக்கம் கொடுத்தான். "எல்லாளன் தமிழன் மற்றும் சிவனை வழிபாடுபவன் என்று மகாவம்சத்தில் குறிப்பிடப்பட்டு இருந்தாலும், துட்டகைமுனு பேசிய மொழியோ அல்லது அவன் ஒரு சிங்களவன் என்றோ எங்கும் கூறப்படவில்லை. ஆனால் புத்தரை வழிபடுப்பன் என்று மட்டுமே கூறப்பட்டுள்ளது. மேலும் தமிழன் என்ற சொல் பலதடவை அங்கு இருந்தாலும், சிங்கள மொழி, சிங்களவன் என்ற இனம் எங்கும் அதில் கூறப்படவில்லை. இது கி.மு. 2ஆம் நூற்றாண்டு கதையாகும். கி.பி 300–700 க்கு இடையில் தான் சிங்களம் பிராகிருதத்திலிருந்து படிப்படியாக வளர்ந்தது. கி.மு 2 ஆம் நூற்றாண்டில், அது ஒரு தனித்துவமான மொழியாக உலகில் எங்கும் இருக்கவில்லை." என்றான். ஒரு முறை உணவு இடைவேளையில் எல்லாளன் சொன்னான்: “மகாசேனா கோகன்ன ஆலயம் [அநேகமாக கிழக்கு கரையோரம் அமைந்த சிவன் கோவில் கோணேஸ்வரமாக இருக்கலாம்?] போன்ற சிவாலயங்களை அழித்து, அவற்றின் இடத்தில், விகாரைகள் கட்டினான்.” விஹாரமஹாதேவி பெருமூச்சு விட்டாள். “முன்பு ஆலயக் கற்கள் உடைக்கப்பட்டன. இப்போது காணி ஆவணங்கள் உடைக்கப் படுகின்றன.” “முறை மாறியது,” என்றான் எல்லாளன், “ஆனால் பசி மாறவில்லை.” ஆனைக்கோட்டை முத்திரை, திசமகாராமை தமிழ் பிராமிச் சாசனம், திசமகாராமை தமிழ் பிராமி நாணயம் மற்றும் இவை போன்றவற்றில் தமிழ் மொழிச் சொற்கள் காணப்படுகின்றன என்றும், கி.மு. முதல் மூன்று நூற்றாண்டுகளில் இலங்கையில் தமிழ் ஒரு பேச்சுமொழியாக விளங்கியமைக்கு ஆதாரமாய் பிராமிச் சாசனங்கள் அமைகின்றன எனவும் பேராசிரியர் சி. பத்மநாதன் தமது இலங்கைத் தமிழ்ச் சாசனங்கள் எனும் நூலில் குறிப்பிட்டுள்ளதை அவன் சுட்டிக்காட்டினான். உடனே அவள்: "தீபவம்சம் (கி.பி 4 ஆம் நூற்றாண்டு) மற்றும் மகாவம்சம் (கி.பி 5 ஆம் நூற்றாண்டு) ஆகியவை அவற்றின் ஆரம்ப காலத்தில் "சிங்களம்" என்பதை வெளிப்படையாகக் குறிப்பிடவில்லை. "சிங்களம்" (தீவு அல்லது மக்களைக் குறிக்கும்) என்ற சொல் சூளவம்சம் அல்லது சூலவம்சத்தில் (Chulavamsa கி.பி 13 ஆம் நூற்றாண்டு) மட்டுமே முதல் முதல் காணப்படுகிறது" என்றாள். அதாவது அதற்கு முதல் அப்படி ஒரு மொழியைப் பற்றி எங்கும் கூறப்படவில்லை, கல்வெட்டுகளும் சிங்களத்தில் இல்லை. இந்த புராணங்கள் எழுதப்பட்டது பாளி மொழியில் மட்டுமே, மற்றும் கல்வெட்டுக்கள் தமிழிலும் மற்றும் கலப்பு மொழியில் மட்டுமே, அந்த கலப்பு மொழியைத்தான் இன்று ஆரம்ப கால சிங்களம் என்கிறார்கள்!! “புத்தர் பற்றின்மையைக் கற்றுக் கொடுத்தார்,” எல்லாலன் கூறினான். “ஆம்,” அவள் பதிலளித்தாள், “ஆனால் பல இலங்கைத் துறவிகள் மற்றும் தலைமைக் குழுவில், முழுமையாகச் சிங்களவர்களைக் கொண்ட தொல்பொருள் திணைக்களம் இப்போது நில உரிமையைக் கற்பிக்கிறார்கள்.” அதைத் தொடர்ந்து அவர்களின் பேச்சில் நிலப் பிரச்சினைகள் எழுந்தன. “நிலம் கட்டம் கட்டமாக விடுவிக்கப்படும் என்று அவர்கள் [அரசு, அரச பிரதிநிதிகள்] கூறுகிறார்கள்,” என்று அவள் கூறினாள். “ஆம்,” எல்லாலன் பதிலளித்தான், “முதல் கட்டம் — வாக்குறுதி. இரண்டாம் கட்டம் — தாமதம். மூன்றாம் கட்டம் — மறதி,” அவள் அவனை தீவிரமாகப் பார்த்தாள். “நீ மிகவும் கூர்மையாக நகைச்சுவை செய்கிறாய்.” “கூர்மையான நகைச்சுவைகள் நீண்ட காலம் நீடிக்கும்,” என்று அவன் கூறினான். ஒரு மாலை, மின்தடை. மெழுகுவர்த்தி வெளிச்சம் ஆசிரியர் அறையை நிரப்பியது. “இந்த இருட்டு பழகியது போல இருக்கு,” என்று அவள் கூறினாள். எல்லாலன் மெதுவாக பதிலளித்தான், “இது இருள் அல்ல. மின்சாரம் ஓய்வெடுக்கிறது — இந்த நாட்டின் நீதி போல.” என்றான் எல்லாளன். பயம், அரசியல் மற்றும் பிரிவுகள் நிறைந்த உலகில் காதல் உண்மையிலேயே பாதுகாப்பாக இருக்க முடியுமா என்ற ஐயப்பாட்டில், அவள் மெதுவாக: “அப்படின்னா காதல்?” என்று கேட்டாள் “காதல் ஓய்வெடுக்கவில்லை. ஆனால் அது மெதுவாகவும் எச்சரிக்கையாகவும் நகர்கிறது, ஏனென்றால் சுற்றியுள்ள உலகம் நிச்சயமற்றது என்பதால் ” என்றான் அவன். மாணவர்கள் அவர்களை கவனிக்கத் தொடங்கினர். ஒரு நாள் “ஐயா, நீங்கள் இருவரும் திருமணமானவர்களா?” என்று ஒரு மாணவன் கேட்டான். “இல்லை,” என்று எல்லாளன் கூறினான். “ஆம்,” என்று விகாரமஹாதேவி கூறி, ஆனால் நகைச்சுவையாக: நாங்கள் இருவரும் கற்பித்தல் என்ற ஒரே பாடத்திட்டத்தில் திருமணம் செய்தவர்கள் ” என்றாள். அவர்கள் ஒருபோதும் காதலிப்பதாக வெளிப்படையாகச் சொல்லவில்லை. ஆனால், அதை அவர்கள் கடைப்பிடித்தனர் - பொதுவான மௌனத்தில் - நகைச்சுவைகளை மொழிபெயர்ப்பதில் - ஒருவரின் உச்சரிப்பை மெதுவாகச் சரிசெய்வதில். அவர்கள் ஆழமாக ஒன்றைப் புரிந்துகொண்டார்கள்: உண்மையான மோதல் சிங்கள மக்களுக்கும் தமிழ் மக்களுக்கும் இடையில் இல்லை. உண்மையான பிரச்சனை சாதாரண மக்களுக்கு எதிராக அரச, இராணுவ மற்றும் சமய அதிகாரம் மட்டுமே. பிளவுபட்ட சமூகத்தில், அன்பைத் தேர்ந்தெடுப்பதே ஒரு துணிச்சலான செயலாக அவர்களுக்கு இருந்தது. உண்மையான காதல் — மொழி, வரலாறு மற்றும் பயத்தை கடந்து செல்லும் காதல் என்பதை அவர்கள் நாளடைவில் உணர்ந்தனர். அவர்கள் - எல்லாளனும் விஹாரமஹாதேவியும் - வரலாற்றில் இடம் பெறவில்லை. அவர்கள் பெயர்கள் எந்த நாளாகமங்களிலும் இல்லை. ஆனால் அவர்கள் கற்பித்த மாணவர்களின் நினைவுகளில் இருக்கிறார்கள். வரலாறு அதிகாரத்தைப் பதிவு செய்கிறது. நாளாகமங்கள் வெற்றியைப் பாடுகின்றன. ஆனால் மனிதநேயத்தை அவை அரிதாகவே நினைவில் வைத்துக் கொள்கின்றன. அவர்கள் — ஒரே பள்ளிக்கூடத்தில் இரு மொழிகளுக்கிடையே பாலமாக நின்றவர்கள். பயமும் அரசியலும் நிரம்பிய காலத்தில் மௌனத்திற்கும் வார்த்தைக்கும் அர்த்தம் கற்றுக் கொண்டவர்கள். ஒரே தேநீரில் இரண்டு மொழிகள், ஒரே மௌனத்தில் இரண்டு வரலாறுகள், ஒரே சிரிப்பில் ஆயிரம் கேள்விகள். அவர்கள் கையில் போர்க் கொடிகள் இல்லை, பாடப்புத்தகங்கள் மட்டுமே. அதிகாரம் பிரிக்க முயன்றதை அறிவு இணைத்தது, பயம் கட்டிய சுவர்களை நகைச்சுவை உடைத்தது. அந்த பள்ளிக்கூடத்தில் பாடத்திட்டம் மட்டும் கற்பிக்கப்படவில்லை— ஒரு நாட்டுக்கான மாற்றுப் பாடமும் அமைதியாக எழுதப்பட்டது. நன்றி [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] துளி/DROP: 2025 [சிறு கதை - 197 / எல்லாளன் & விஹாரமஹாதேவி (இரு ஆசிரியர்களின் காதல் கதை) https://www.facebook.com/groups/978753388866632/posts/33724462253868989/?

யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026

1 week 6 days ago
கனடாக்காரர் என்ன செய்யப் போகினம். கூடிய ஓட்டத்தை குடுத்தாச்சு. குறைந்த ஓட்டங்களை அடிப்பினமோ. தென்னாபிரிக்கா வேகப் பந்தில் தாக்குப்பிடிப்பினமா.

இலங்கைத் தேயிலைக்கு சர்வதேச சந்தையில் நெருக்கடி

1 week 6 days ago

images-1-2.jpg?resize=275%2C183&ssl=1

இலங்கைத் தேயிலைக்கு சர்வதேச சந்தையில் நெருக்கடி.

டிட்வா சூறாவளியினால் ஏற்பட்ட அழிவுகள் காரணமாக, இலங்கை தனது தேயிலைக்கான சர்வதேச சந்தைகளை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக கொழும்பு தேயிலை வர்த்தகர்கள் சங்கத்தின் தலைவர் லுஷாந்த டி சில்வா எச்சரித்துள்ளார்.

சூறாவளி காரணமாக சுமார் ஒரு மில்லியன் கிலோகிராம் தேயிலை உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. இது உலகளாவிய தேயிலைத் தேவையை ஈடுசெய்வதில் சிக்கல்களைத் தோற்றுவித்துள்ளது.
இலங்கையின் விநியோகம் குறையும் பட்சத்தில், சர்வதேச கொள்வனவாளர்கள் ஏனைய நாடுகளை (இந்தியா, கென்யா போன்றவை) நாடும் அபாயம் உள்ளது.

கடந்த 15-20 ஆண்டுகளில் பாகிஸ்தான், எகிப்து மற்றும் பிரித்தானியா ஆகிய நாடுகளுக்கான பிரதான ஏற்றுமதியாளராக இலங்கை இருந்தபோதிலும், தற்போது அந்த சந்தைகளை ஓரளவு இழந்துள்ளதாக சுட்டிக்காட்டினார்.

சவால்கள் நிலவினாலும், இலங்கை தொடர்ந்தும் 140-க்கும் மேற்பட்ட நாடுகளுக்குத் தேயிலையை ஏற்றுமதி செய்து வருகின்றது.
இவற்றில் ரஷ்யா, ஈராக் மற்றும் ஐக்கிய அரபு இராச்சியம் ஆகிய நாடுகள் தொடர்ந்தும் முன்னணியில் உள்ளன.

2024 ஆம் ஆண்டில் 245.7 மில்லியன் கிலோவாக இருந்த ஏற்றுமதிஇ 2025 இல் 257.44 மில்லியன் கிலோவாக (11.65 மில்லியன் கிலோ உயர்வு) அதிகரித்துள்ளது.

சீன சந்தை இலங்கைக்கு ஒரு மிகப்பெரிய வாய்ப்பாக உருவெடுத்து வருவதாக லுஷாந்த டி சில்வா தெரிவித்தார்.
சீனா ஒரு மிகப்பெரிய சந்தை. அங்குள்ள 1.4 பில்லியன் மக்களில் வெறும் 5 வீத பங்கினை நாம் பெற்றுக்கொண்டாலும், அது இலங்கைத் தேயிலைத் துறைக்கு ஒரு மிகப்பெரிய வெற்றியாக அமையும் என அவர் விளக்கினார்.

https://athavannews.com/2026/1463915

யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026

1 week 6 days ago
தென் ஆபிரிக்கா க‌ன‌ட‌வுக்கு ந‌ல்லா சாத்த‌ போகுது ஸ்கொட்லாந் அடிச்ச‌ ர‌ன்ஸ்ச‌ தென் ஆபிரிக்கா அணி முந்தி விடும் குஜ‌ராத் மைதான‌ம் ம‌ட்டைய‌டி வீர‌ர்க‌ளுக்கு சாத‌க‌மான‌ மைதான‌ம்.........................

“தமிழ்த் தேசியவாத அரசியலில் அணுகுமுறை மாற்றங்கள் வேண்டும்”(சுமந்திரன் நேர்காணல்)

1 week 6 days ago
இதுகூட என்னைக் கண்டிக்கவேண்டும் என்று சிலர் இங்கே வெளிப்படையாக கருத்துப் பகிர்ந்ததனால் ஏற்பட்டது. ஏனென்றால், என்னை யாராவது கண்டித்துவிடுவார்கள் என்கிற காரணத்திற்காகப் பயந்துபோய் எழுதாமல் நான் இருக்கப்போவதில்லை. எனது கருத்து தெனாவட்டாக வந்திருப்பின் அதற்காக வருந்துகிறேன், எனது நோக்கம் அதுவல்ல. நல்லது. ஆனால் என்னை நீங்கள் உங்களின் இதற்கு முந்தைய பதிவில் மேற்கோள் காட்டி எழுதியிருக்க வேண்டாமோ என்று தோன்றுகின்றது. நான் அன்று எழுதியது எவரினதும் அனுதாபத்தினை எதிர்பார்த்து அல்ல. மாறாக புலம்பெயர்ந்த நாட்டிலும் சிங்களவர்கள் தமது இனக்குரோதத்தினை தமது பிள்ளைகளுக்கு ஊட்டி வளர்க்கிறார்கள் என்று குறிப்பிடவே. ஆனாலும் என்ன, அன்றைய நாட்களில் ரஸ்ஸிய உக்ரேன் திரியில் ஏற்பட்ட பிணக்கினால் நான் இதனைக் கற்பனையில் புனைந்து எழுதியதாக உங்களின் "நண்பர்" கப்டன் கூறியதும் நினைவிலிருக்கிறது.

“தமிழ்த் தேசியவாத அரசியலில் அணுகுமுறை மாற்றங்கள் வேண்டும்”(சுமந்திரன் நேர்காணல்)

1 week 6 days ago
எனக்கு அவர் ஒரு முஸ்லீம் என்று தெரியாது. அண்மையில் இக்களத்தில் அவரை ஒருவர் நானா என்று விளித்தபோது அதனை உண்மையென்று நம்பியே எழுதினேன். தமிழ்த் தேசியத்திற்கெதிராக (இப்படிக் கூறுவதால் புலிகளை எதிர்க்கிறார் என்றல்ல அர்த்தம், ஏனெறால் ஒருகாலத்தில் நீங்களும் புலிகளை முற்றாக எதிர்த்தவர், ஆனால் தேசியத்தை நேசிப்பவர்) தந்தை செல்வா காலத்து தமிழரசுக் கட்சிமுதற்கொண்டு புலிகள் வரை கடுமையாக விமர்சன‌ங்களை முன்வைத்து வந்தவர். சிறிமா பண்டாரநாயக்காவைப் புகழ்ந்து எழுதியவர். ஆகவேதான், இவரை ஒருவர் "நானா" என்று அழைத்தபோது, இவரது தமிழ்த்தேசியத்திற்கெதிரான விஷக் கருத்துக்களைப் அடிப்படையாக வைத்து, இவர் ஒரு முஸ்லீமாக இருக்கலாம் என்று முடிவிற்கு வந்தேன். உண்மையில் இவர் எவ்வினத்தவர் என்பது எனக்குத் தெரியாது. இவரிடமிருந்து நான் விலகியே இருந்தபோதிலும் பலமுறை எனது திரிகளில் மிகவும் தீவிரமாக என்னை விமர்சித்து, பொய்களையும் புரட்டுக்களையும் எழுதுவதாக கருத்தெழுதி வருபவர் (இன்றுகூட அவரது கருத்தொன்றில் என்னைப்பற்றி, பெயர் குறிப்பிடாது எழுதப்பட்டிருக்கிறது), தமிழர்கள், தமிழ்த் தேசிய நீக்கம் செய்யப்படவேண்டும் என்றும், இலங்கையராக அடையாளப்படுத்தப்படவேண்டும் என்றும் எனக்கான பதிவுகளில் எழுதிவருபவர். பலமுறை இவருக்கான பதில்களை நான் தவிர்த்து வந்தபோதிலும், தவிர்க்கமுடியாமல் சிலவேளைகளில், இவரை மேற்கோள் காட்டாது எனது பதிலைக் கருத்தாக பதிந்திருக்கிறேன். என்னைத் தனிப்பட்ட ரீதியில் இந்த மனிதர் தாக்கி எழுதுவது உங்களுக்குத் தெரிந்திருக்க நியாயமில்லை. சிலவேளை புலிகளுக்கு ஆதரவானவன் என்று முத்திரை குத்தப்பட்ட என்மேல் வைக்கப்படும் எந்த விமர்சனமும் உங்களைப்பொறுத்தவரை கடந்துசெல்லப்படவேண்டியவையாக இருந்திருக்கலாம். ஆனால், இந்த மனிதருக்கும் எனக்கும் இடையில் நீண்டநாள் பகையொன்று இருக்கிறது. அதனை நீங்கள் பார்க்கத்தவறிவிட்டு, நான் ஒரு இனவாதியாக , மதவாதியாக கருத்துக்களில் விசம் கட்டி எழுதுவதாக விமர்சிக்கிறீர்கள். உங்களுக்கும் இன்னொருவருக்கும் இடையே முன்னர் இக்களத்தில் நடைபெற்ற மிகவும் காரசாரமான கருத்து மோதல்களை நாம் அவதானித்திருக்கிறேன். அவர் இப்போது இங்கு இல்லையென்றாலும்கூட உங்களின் கருத்துக்களில் இருந்த கசப்புணர்வு வெளிப்படையானது. தனிப்பட்ட ரீதியில் நீங்கள் தாக்கப்படும்போது பதிலில் கோபம் இருப்பது இயல்பானது. நான் இப்போது செய்வதும் அதுவே. நான் விலகிச் செல்ல எத்தனிக்கும் ஒவ்வொரு தறுவாயிலும் விசமத்தனமாக‌ப் பிந்தொடர்ந்து, எனது கருத்துக்களை விமர்சித்து, தனிப்பட்ட ரீதியில் தாக்கும்போது தவிர்க்கமுடியாமல் நானும் கடுமையாக எழுதவேண்டியிருக்கிறது. ஒன்றில் அவர் என்னைத் தொடர்ந்து, தனிப்பட்ட ரீதியில் தாக்குவதை நிறுத்தவேண்டும், அல்லது நான் அவருக்குத் தனிப்பட்ட ரீதியில் பதிலளிக்க வேண்டி ஏற்படும். அவர் கேட்பது கேள்வியல்ல, மாறாக மற்றையவர்களின் கருத்துக்களுக்கெதிரான விசமத்தனமான விமர்சனங்களே என்பது உங்களுக்குத் தெரியும். ஆனால், அவர் தேசியத்திற்கும், புலிகளுக்கும் எதிராக எழுதுவதால், அவரது விமர்சனங்கள் உங்களுக்கு கேள்விகளாகத் தெரிகிறது. குதர்க்கத்தனமான, புலிகளையும், தேசியத்தையும் சீண்டும் விதமான கேலிகளை கைவிட்டு விட்டு, இயல்பாக தனது கேள்விகளை முன்வைக்கட்டும், நான் பதிலளிக்கிறேன். நான் புலிகளைக் கண்மூடித்தனமாக ஆதரிப்பவன் அல்ல. முன்னர் ஒருகாலத்தில் அப்படி இருந்தவந்தான், ஆனால் தெளிவு இருக்கிறது இப்போது. தவறைத் தவறென்று ஏற்றுக்கொள்ளும் பக்குவம் இருக்கிறது. ஆகவே சீண்டாமல் முன்வைக்கப்படும் எக்கருத்திற்கும் பதிலளிக்க காத்திருக்கிறேன். எனது உளவியலை, எனக்கும் இந்த மனிதருக்கும் இடையே இத்தளத்தில் பகிரப்பட்ட கருத்துக்களின் பின்னணியிலிருந்து பார்த்தால் புரிந்துகொள்வது உங்களுக்குக் கடிணமாக இருக்காது.