Aggregator
புட்டு கேட்ட கணவனை போட்டு தள்ளிய மனைவி கத்தியுடன் சரண்
புட்டு கேட்ட கணவனை போட்டு தள்ளிய மனைவி கத்தியுடன் சரண்
தற்கொடைப்படையான கரும்புலிகள் இன் படிமங்கள் | LTTE's self-sacrifice force' Black Tigers images
குவேனியின் சாபம் இலங்கை ஆட்சியாளர்களைத் துரத்துகிறதா?
டிக்டொக் தொடர்பு முடிவில் 24 வயது பெண் பாலியல் பலாத்காரம்: 4 இளைஞர்கள் கைது
15 Dec, 2025 | 02:50 AM
![]()
சம்பூர் பொலிஸ் பிரிவிலுள்ள வீரமாநகர் பகுதியைச் சேர்ந்த 24 வயது பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட 4 இளைஞர்கள் ஈச்சிலம்பற்று பொலிஸாரால் ஞாயிற்றுக்கிழமை (14) கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட இளைஞர்கள் அனைவரும் ஈச்சிலம்பற்று பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இலங்கைத்துறை முகத்துவாரம் பகுதியைச் சேர்ந்தவர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பொலிஸாரின் ஆரம்ப விசாரணைகளின் படி, டிக்டொக் சமூக வலைத்தளத்தின் மூலம் இளைஞர் ஒருவர் குறித்த பெண்ணுடன் தொடர்பு ஏற்படுத்திக் கொண்டு நேரில் சந்தித்துள்ளார். இதன் பின்னர், குறித்த இடத்திற்கு அவரது நண்பர்கள் வருகை தந்ததுடன், குழுவாக பாலியல் பலாத்காரம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஈச்சிலம்பற்று பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
டிக்டொக் தொடர்பு முடிவில் 24 வயது பெண் பாலியல் பலாத்காரம்: 4 இளைஞர்கள் கைது | Virakesari.lk
மத்திய மலை நாட்டின் தமிழ் மொழி மூல தொழிற்பயிற்சி நிலையமான ஹட்டன் T.V.T.C தொழிற்பயிற்சி நிலையத்திற்கு 2026 ஆம் ஆண்டுக்கான புதிய பயிலுநர்களை அனுமதித்தல்
மத்திய மலை நாட்டின் தமிழ் மொழி மூல தொழிற்பயிற்சி நிலையமான ஹட்டன் T.V.T.C தொழிற்பயிற்சி நிலையத்திற்கு 2026 ஆம் ஆண்டுக்கான புதிய பயிலுநர்களை அனுமதித்தல்
15 Dec, 2025 | 04:42 PM
![]()
பெருந்தோட்டம் மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சின் கீழ் இயங்கும் ஹட்டன் தொண்டமான் தொழிற்பயிற்சி நிலையத்தின் (TVTC) 2026ம் ஆண்டுக்கான புதிய பயிலுநர்களுக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளது.
16 தொடக்கம் 25 வயதுக்குட்பட்ட பாடசாலை கல்வியினை நிறைவு செய்து இளைஞர், யுவதிகள் எதிர்வரும் டிசம்பர் 31ம் திகதிக்கு முன்பு விண்ணப்பிக்குமாறு பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் கேட்டுக் கொண்டுள்ளார்.


சீரற்ற வானிலையால் பாரிய வாழ்வாதாரப் பாதிப்பை எதிர்நோக்கும் முத்து ஐயன்கட்டுகுள நன்னீர் மீனவர்கள்
5 Dec, 2025 | 12:50 PM
![]()
அண்மைக்காலத்தில் ஏற்பட்ட சீரற்ற வானிலையினால் முல்லைத்தீவு - ஒட்டுசுட்டான் பிரதேசசெயலாளர் பிரிவிற்குட்பட்ட முத்துஐயன்கட்டுகுளம் நன்னீர் கிராமிய மீனவர் அமைப்பின் அங்கத்துவக்குடும்பங்களின் வாழ்வாதாரம் வெகுவாகப்பாதிக்கப்பட்டுள்ளதுடன், இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ள நன்னீர் மீன்பிடியாளர்களுக்கு இதுவரை இழப்பீடுகளோ நிவாரணங்களோ வழங்கப்படவில்லை என வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரனிடம் நன்னீர் கிராமிய மீனவர் அமைப்பினர் முறையிட்டுள்ளனர்.
இந்நிலையில் முத்து ஐயன்கட்டு குளம் நன்னீர் கிராமிய அமைப்பின் முறையீட்டையடுத்து, வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன், நன்னீர் மீன்பிடியாளர்களின் பாதிப்பு நிலமைகள் தொடர்பில் நேரில் சென்று ஆராய்ந்ததுடன், குறித்த நன்னீர் மீனவ அமைப்பினரிடமிருந்து கோரிக்கைக் கடிதங்களைப் பெற்றுக்கெண்டார். அத்தோடு மீனவர்களால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகள் தொடர்பில் தம்மால் கவனம் செலுத்தப்படுமெனவும் தெரிவித்தார்.
இவ்விடயம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
அண்மையில் நிலவிய சீரற்ற வானிலையினால் முத்துஐயன்கட்டு குளத்தின் கரையில் பாதுகாப்பாக கட்டிவைக்கப்பட்டிருந்த, முத்துஐயன்கட்டுக்குளம் நன்னீர் கிராமிய மீனவர் அமைப்பிற்குரிய 15 சிறிய படகுகள் நீரில் அடித்துச்செல்லப்பட்டுள்ளதாகவும், மீன்பிடி வலைகள் குளத்தில் அடித்துச்செல்லப்பட்டுள்ளதாகவும் இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரனின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டிருந்தது.
அதேவேளை முத்துஐயன்கட்டு குளத்தின் நீர்மட்டம் உயர்வடைந்ததையடுத்து வான்கதவுகள் தூக்கப்பட்டநிலையில், குளத்தில் விடப்பட்டிருந்த மீன்குஞ்சுகள் மற்றும் பெரிய மீன்கள் என்பன வான்கதவுகளினூடாக வெளியேறியுள்ளதாகவும் இதன்போது நன்னீர் மீனவ நாடாளுமன்ற உறுப்பினரது கவனத்திற்கு கொண்டுவந்திருந்தனர்.
குறிப்பாக முத்துஐயன்கட்டுக்குளத்தில் ஒரு வருடகாலமாக மீன்குஞ்சுகள் விடப்படாதநிலையில், குறித்த நன்னீர் கிராமிய மீனவர் அமைப்பின் பயனாளிகளிடமிருந்து பணத்தினை அறவிட்டு இந்த வருட ஆரம்பத்தில் மீன்குஞ்சுகள் குளத்தில் விடப்பட்டிருந்ததாக நன்னீர் மீன்பிடியாளர்களால் நாடாளுமன்ற உறுப்பினரிடம் சுட்டிக்காட்டப்பட்டது.
இவ்வாறு விடப்பட்ட மீன்குஞ்சுகள் வான் கதவுகளினூடாக வெளியேறியுள்ள நிலையில் நன்னீர் மீன்பிடியை வாழ்வாதாரமாக கொண்டிருக்கும் முத்துஐயன்கட்டு குளம் நன்னீர் கிராமிய மீனவர் அமைப்பில் அங்கத்துவம் பெறுகின்ற 101அங்கத்துவக் குடும்பங்களின் வாழ்வாதாரம் வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக மீனவர்களால் தெரிவிக்கப்பட்டதுடன், தற்போது ஒரு பயனாளி 1கிலோ தொடக்கம் 02கிலோ வரையிலான மீன்களையே பிடிக்கக்கூடிய நிலைகாணப்படுவதாகவும் நன்னீர் மீன்பிடியாளர்கள் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரனிடம் முறையிட்டனர்.
இவ்வாறாக படகுகள் மற்றும் வலைகள் உள்ளிட்ட மீன்பிடி உபகரணங்கள் குளத்தில் அடித்துச்செல்லப்பட்டுள்ளதுடன், குளத்தில் விடப்பட்ட மீன்குஞ்சுகளும் வான்கதவுகளினூடாக வெளியேறியுள்ளநிலையில் தமது அன்றாட வாழ்வாதாரம் வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக முத்துஐயன்கட்டுகுளம் நன்னீர் மீனவர்கள் இதன்போது நாடாளுமன்ற உறுப்பினரிடம் தெரிவித்ததுடன், இவ்வாறாக பாரிய வாழ்வாதாரப் பாதிப்பினை எதிர்நோக்கியுள்ள தமக்கு இதுவரை நிவாரணங்களையோ, இழப்பிடுகளையோ வழங்குவதற்கு உரியதரப்பினர் நடவடிக்கைகளை மேற்கொள்வில்லைஎனவும் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரனின் கவனத்திற்கு கொண்டுவந்தனர்.
அதேவேளை, ஒட்டுசுட்டானுக்கு செல்வதற்குரிய வீதியும் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளதால் தாம் பல்வேறு போக்குவரத்து நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்துவருவதாகவும் இதன்போது நடாளுமன்ற உறுப்பினரிடம் தெரிவித்தனர்.
இந்நிலையில், குறித்த மீனவ அமைப்பினரின் பிரச்சினைகளைச் செவிமடுத்த நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன், மீனவ அமைப்பினரிடமிருந்து கோரிக்கைக் கடிதங்களையும் பெற்றுக்கொண்டார்.
அதேவேளை, மீனவர்கள் எதிர்நோக்கும் வாழ்வாதார நெருக்கடி மற்றும் போக்குவரத்து நெருக்கடிகள் தொடர்பாக உரியதரப்பினரின் கவனத்திற்கு கொண்டுவந்து நெருகடிகளைத் தீர்ப்பது தொடர்பில் தம்மால் கவனஞ்செலுத்தப்படுமென நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரனால் இதன்போது தெரிவிக்கப்பட்டது.
சீரற்ற வானிலையால் பாரிய வாழ்வாதாரப் பாதிப்பை எதிர்நோக்கும் முத்து ஐயன்கட்டுகுள நன்னீர் மீனவர்கள் | Virakesari.lk
பாகிஸ்தானிலிருந்து 200 தொன் அனர்த்த நிவாரண பொருட்கள் கையளிப்பு!
பாகிஸ்தானிலிருந்து 200 தொன் அனர்த்த நிவாரண பொருட்கள் கையளிப்பு!
15 Dec, 2025 | 03:52 PM
![]()
பாகிஸ்தானிலிருந்து 200 தொன் அனர்த்த நிவாரண பொருட்கள் இலங்கை அரசாங்கத்திடம் இன்று திங்கட்கிழமை (15) கையளிக்கப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் உயர்ஸ்தானி காரியாலயம் தெரிவித்துள்ளது.
பாகிஸ்தான் பிரதமரின் விசேட பணிப்புரைகளைத் தொடர்ந்து, இலங்கைக்கு தொடர்ச்சியாக அனர்த்த நிவாரண பொருட்கள் மற்றும் சேவைகள் கையளிக்கப்பட்டு வருகிறது.
இதன் மூலம் இலங்கை மற்றும் பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளுக்கும் இடையிலான நீடித்த நட்புறவும் வலுவான இருதரப்பு உறவுகளும் மீண்டும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
அனர்த்த நிவாரண சேவைக்காக பாகிஸ்தான் தமது விமானப்படையின் C-130 விமானங்களை அனுப்பியிருந்தது.
மேலும், 'தித்வா' புயலின் போது, பாகிஸ்தான் கடற்படைக் கப்பல் ஒன்று, அதன் ஹெலிகொப்டருடன், இலங்கை ஆயுதப் படைகளுடன் நெருங்கி ஒருங்கிணைந்து மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளில் தீவிரமாகப் பங்கேற்றது.
அத்துடன், பாகிஸ்தான் பிரதமர், ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுடன் தொலைபேசியில் உரையாடி, உயிர் இழப்புகளுக்கு இரங்கல் தெரிவித்ததோடு, பாகிஸ்தானின் தொடர்ச்சியான ஆதரவுக்கான உறுதிப்பாட்டை மீளவும் வலியுறுத்தினார்.
பாகிஸ்தான் பிரதமரின் விசேட பணிப்புரையின் பேரில், பாகிஸ்தானின் மத்திய கடல்சார் விவகார அமைச்சர் முஹம்மது ஜுனைத் அன்வர் சௌத்ரி (Muhammad Junaid Anwar Chaudhry) இலங்கையின் மீட்பு முயற்சிகளுக்கு ஆதரவளிக்கும் உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்த கடந்த வாரம் இரண்டு நாள் விஜயம் மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.



பேரிடரை எதிர்கொண்டிருக்கும் தமிழ், முஸ்லிம், மலையகத் தமிழ் மக்களை மீண்டும் ஓரங்கட்டும் மொழிக் கொள்கையை உடனடியாகத் திருத்தியமையுங்கள் - ஜனாதிபதிக்கு அவசர கடிதம்
15 Dec, 2025 | 02:30 PM
![]()
பேரிடரை எதிர்கொண்டிருக்கும் தமிழ், முஸ்லிம், மலையகத் தமிழ் மக்களை மீண்டும் ஓரங்கட்டும் மொழிக் கொள்கையை உடனடியாகத் திருத்தியமையுங்கள் என வலியுறுத்தி ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்கு சம உரிமை இயக்கம் அவசர கடிதம் எழுதியுள்ளது.
சம உரிமை இயக்கத்தின் ஏற்பாட்டாளர் இந்திரானந்த டி சில்வாவின் கையொப்பத்துடனான குறித்த கடிதம் இன்று திங்கட்கிழமை (15) ஜனாதிபதி செயலத்தில் சம உரிமை இயக்கத்தினரால் கையளிக்கப்பட்டுள்ளது.
குறித்த கடிதத்தில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,
நாட்டின் மக்கள் தொகையில் 25 சத வீதமானோர் தமிழ் மொழியை தமது தாய் மொழியாகக் கொண்டிருப்பதோடு நாட்டின் அரசியலமைப்பில் சிங்களமும் தமிழும் அதிகாரப்பூர்வ மொழிகளாக அங்கீகரிக்கப்பட்டுள்ளன. ஆனால், 1956 ஆம் ஆண்டு எஸ்.டபிள்யூ.ஆர்.டி. பண்டாரநாயக்க அறிவித்த சிங்களத்தை மட்டும் அதிகாரப்பூர்வ மொழியாகக் கொண்ட கொள்கை இன்னும் யாதார்த்தமாக உள்ளது என்பது கவலைக்குரியதாக இருந்தாலும், நான் அதை உங்களுக்குச் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.
இது ஒரு ஜனநாயக விரோத அரச கரும மொழிக் கொள்கையாகும், இது தமிழ் மொழி பேசும் தமிழ், முஸ்லிம், மலையகத் தமிழ் மக்களை நாட்டிலில் மீண்டும் மீண்டும் ஒதுக்கி வைக்கிறது. இதற்கு சிறந்த எடுத்துக்காட்டுகளில் சில, நாடு முழுவதையும் பாதித்த அண்மைய பேரழிவுகளின் போது மொழிக் கொள்கை குறுகிய மனப்பான்மையோடு செயற்படுத்தப்பட்டமை ஆகும்.
01. பேரிடர் தொடர்பான அரச அறிவிப்புகளை சிங்கள மொழியில் மட்டும் வெளியிடுதல்
02. வளிமண்டலவியல் திணைக்களத்தின் வானிலை அறிக்கையின் அதிகாரப்பூர்வ வெளியீடு சிங்களத்தில் மட்டுமே இருக்கின்றமை
03. ஆபத்தான பகுதிகளிலிருந்து மக்களை வெளியேற்றுவது தொடர்பான அறிவிப்புகளும் சிங்களத்தில் மட்டுமே இருக்கின்றமை
04. அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் சம்பத் கொட்டுவேகொட, சிங்களத்தில் மட்டுமே அறிவிப்புகளை வெளியிடுகின்றமை
மாவட்டச் செயலாளர் முதல் கிராம அலுவலர் வரை மேற்கூறிய பல அறிவிப்புகளும் சிங்களத்தில் மட்டுமே அனுப்பப்படுகின்றன. அது மட்டுமல்ல, அண்மையில், ஜனாதிபதியாக, இந்த நாட்டின் தமிழ், முஸ்லிம், மலையகத் தமிழ் மக்களைத் தவிர்க்கும் வகையில், நீங்கள் நாட்டு மக்களுக்கு உரையாற்றினீர்கள். ஜனாதிபதி நாட்டு மக்களுக்கு உரையாற்றியபோது கூட தனது உரையை தமிழில் மொழிபெயர்க்காதது ஆச்சரியமாக இருக்கிறது.
ஜனாதிபதி அவர்களே, தொழில்நுட்பத்தின் பரவலான பயன்பாடு மற்றும் மொழிபெயர்ப்பில் கூட அதன் பயன்பாட்டின் எளிமை இருந்தபோதிலும், "சிங்களம் மட்டும்" என்ற அதிகாரப்பூர்வ மொழிக் கொள்கை இன்னும் நடைமுறையில் உள்ளதோடு மக்கள் தங்கள் தாய்மொழியில் அரசுடன் தொடர்பு கொள்ளும் மனித மற்றும் ஜனநாயக உரிமைகளை அது அப்பட்டமாக மீறுகிறது. 30 ஆண்டுகால இனவாதப் போரைச் சந்தித்த ஒரு நாட்டிலேயே இதுபோன்ற ஒரு அதிகாரப்பூர்வ மொழிக் கொள்கை நடைமுறைப்படுத்தப்படுகிறது என்பதை நாம் மறந்துவிடக் கூடாது.
இந்தத் தருணத்தில் கூட, பேரிடர்களுக்கான இழப்பீடு தொடர்பான சுற்றறிக்கை சிங்களத்தில் மட்டுமே வெளியிடப்பட்டுள்ளது. இந்த நாட்டின் தமிழ், முஸ்லிம், மலையகத் தமிழ் மக்கள் கூகிள் மூலம் அந்த அறிவிப்புகளை தமிழில் மொழிபெயர்க்க வேண்டியிருக்கிறது. ஆனால் அது சரியான செயன்முறை அல்ல என்பதைச் கூறத் தேவையில்லை.
இது மிகவும் துரதிர்ஷ்டவசமான சூழ்நிலை. நுவரெலியா மாவட்டத்தில் ஒரு சுற்றாடல் பாதுகாப்பு அலுவலகம் உள்ளது. யாராவது ஒரு கட்டடம் கட்ட விரும்பினால், அந்த அலுவலகத்தில் கிடைக்கும் விண்ணப்பப் படிவத்தை பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும். ஆனால் அந்தப் படிவம் சிங்களம் மற்றும் ஆங்கிலத்தில் மட்டுமே அச்சிடப்பட்டுள்ளது.
சிங்கள பௌத்த மக்களின் வாக்குகளால் தான் ஆட்சிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டதாக பகிரங்கமாகக் கூறிய கோத்தபய ராஜபக்சதான் இந்த நாட்டின் ஜனாதிபதி பதவியை இன்னும் வகித்து வருகிறார் என்றிருந்தால், நாம் இந்த நிலையக் கண்டு ஆச்சரியப்பட வேண்டியதில்லை. தேசிய மக்கள் சக்தியின் முந்தைய தேர்தல் விஞ்ஞாபனங்களில், சிங்களவர்கள், தமிழ், முஸ்லிம்கள், மலையகத் தமிழர் ஆகிய அனைத்து மக்களும் தங்களுக்கு விருப்பமான மொழியில் அரசோடு தொடர்புகொள்ளும் உரிமை வழங்கப்படும் என்று கூறப்பட்டிருந்தது.
ஆனால் இதுபோன்ற சம்பவங்கள் மூலம், இந்த நாட்டின் தமிழ், முஸ்லிம், மலையகத் தமிழ் மக்கள் ஓரங்கட்டப்படுகிறார்கள். எனவே, இந்த நிலையை உடனடியாக மாற்றவும், அரச அறிவிப்புகளிலிருந்து பல்வேறு திணைக்களங்களால் வெளியிடப்படும் ஒவ்வொரு அறிவிப்பு வரையும் தமிழில் மொழிபெயர்த்து வெளியிடவும், இந்த சமத்துவமற்ற நிலைமைகளை உடனடியாக மாற்றியமைக்கவும் சம உரிமை இயக்கம் உங்களை வலியுறுத்துகிறது என குறிப்பிடப்பட்டுள்ளது.
பேரிடரை எதிர்கொண்டிருக்கும் தமிழ், முஸ்லிம், மலையகத் தமிழ் மக்களை மீண்டும் ஓரங்கட்டும் மொழிக் கொள்கையை உடனடியாகத் திருத்தியமையுங்கள் - ஜனாதிபதிக்கு அவசர கடிதம் | Virakesari.lk
டித்வா சூறாவளி ; 22,000 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் தற்காலிக தங்குமிடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்
Published By: Digital Desk 3
15 Dec, 2025 | 04:53 PM
![]()
நாட்டில் டித்வா சூறாவளியால் ஏற்பட்ட பேரனர்த்தங்களில் சிக்கி 643 பேர் உயிரிழந்துள்ளதோடு, 183 பேர் காணாமல் போயுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
அதன்படி, கண்டியில் 237 பேரும், நுவரெலியாவில் 89 பேரும், பதுளையில் 88 பேரும், குருநாகலையில் 61 பேரும், புத்தளத்தில் 36 பேரும், கேகாலையில் 32 பேரும், மாத்தளையில் 29 பேரும், கம்பளையில் 17 பேரும், அநுராதபுரத்தில் 13 பேரும், கொழும்பில் 09 பேரும், அம்பாறையில் 08 பேரும், மொனராகலை, மட்டக்களப்பு மற்றும் மன்னாரில் தலா 4 பேரும், யாழ்ப்பாணம், பொலன்னறுவையில் தலா மூவரும், இரத்தினபுரியில் இருவரும், அம்பாந்தோட்டை மற்றும் காலியில் தலா ஒருவரும் உயிரிழந்துள்ளனர்.
அதேவேளை, 459,726 குடும்பங்களைச் சேர்ந்த 1,600,469 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில், 6,193 வீடுகள் பகுதியளவிலும், 95,456 வீடுகள் முற்றாகவும் சேதமடைந்துள்ளன.
நாடளாவிய ரீதியில் 762 தற்காலிக தங்குமிடங்களில் 22,522 குடும்பங்களைச் சேர்ந்த 70,055 பேர் தற்போது தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இந்த தற்காலிக தங்குமிடங்களில் பெரும்பாலானவை கண்டி மாவட்டத்தில் அமைந்துள்ளன. அங்கு 5,427 குடும்பங்களைச் சேர்ந்த 17,437 பேர் 222 தற்காலிக தங்குமிடங்களில் தங்கியுள்ளனர்.
நுவரெலியா மற்றும் பதுளை மாவட்டங்களிலும் அதிக எண்ணிக்கையிலான தற்காலிக தங்குமிடங்கள் அமைந்துள்ளன. நுவரெலியாவில் 206 தற்காலிக தங்குமிடங்களில் 6,487 குடும்பங்களைச் சேர்ந்த 19,750 பேரும், பதுளையில் 155 தற்காலிக தங்குமிடங்களில் 6,026 குடும்பங்களைச் சேர்ந்த 19,409 பேரும் தங்கியுள்ளனர்.
டித்வா சூறாவளி ; 22,000 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் தற்காலிக தங்குமிடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர் | Virakesari.lk
21 இலட்சத்துக்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை!
15 Dec, 2025 | 03:52 PM
![]()
2025 ஆம் ஆண்டின் ஜனவரி மாதம் முதலாம் திகதியில் இருந்து டிசம்பர் மாதம் 11 ஆம் திகதி வரையான காலப்பகுதிக்குள் 21 இலட்சத்து 73 ஆயிரத்து 616 சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
சீரற்ற வானிலை காரணமாக நாட்டில் ஏற்பட்ட பாரிய அனர்த்தத்தின் மத்தியிலும் சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தருவதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
இவ்வாண்டின் இதுவரையான காலப்பகுதிக்குள் அதிகளவான சுற்றுலாப் பயணிகள் இந்தியாவிலிருந்து வருகை தந்துள்ள நிலையில் அவர்களின் மொத்த எண்ணிக்கை 489,948 ஆகும்.
மேலும், ஜெர்மனியிலிருந்து 137,012 சுற்றுலாப் பயணிகளும், ரஷ்யாவிலிருந்து 166,626 சுற்றுலாப் பயணிகளும், ஐக்கிய இராச்சியத்திலிருந்து 196,958 சுற்றுலாப் பயணிகளும், அவுஸ்திரேலியாவிலிருந்து 98,318 சுற்றுலாப் பயணிகளும், சீனாவிலிருந்து 125,720 சுற்றுலாப் பயணிகளும், பிரான்ஸிலிருந்து 103,782 சுற்றுலாப் பயணிகளும் நாட்டுக்கு வருகை தந்துள்ளனர்
அத்துடன், டிசம்பர் மாதத்தின் முதல் 11 நாட்களில் 70,023 சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை மேலும் தெரிவித்துள்ளது
21 இலட்சத்துக்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை! | Virakesari.lk
யாழில் 6 மில்லியனுக்கும் அதிக மதிப்புள்ள கஞ்சா கைப்பற்றல்!
15 Dec, 2025 | 05:53 PM
![]()
யாழ்ப்பாணத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (14) இலங்கை கடற்படையினர் நடத்திய தேடுதல் நடவடிக்கையின் போது கஞ்சா தொகை கைப்பற்றப்பட்டுள்ளது.
இதன்போது கடற்கரையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த சுமார் 26 கிலோ 900 கிராம் கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது.
மேலும், கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட கஞ்சாவின் மொத்த மதிப்பு ஆறு மில்லியன் ரூபாய்க்கும் அதிகம் என கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை கைப்பற்றப்பட்ட கஞ்சா தொகை சட்ட நடவடிக்கைக்காக பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
யாழில் 6 மில்லியனுக்கும் அதிக மதிப்புள்ள கஞ்சா கைப்பற்றல்! | Virakesari.lk
வீதி நிலைவரங்களை அறிவிக்க புதிய பொதுத் தளம் - போக்குவரத்து அமைச்சு
வீதி நிலைவரங்களை அறிவிக்க புதிய பொதுத் தளம் - போக்குவரத்து அமைச்சு
15 Dec, 2025 | 02:45 PM
![]()
(எம்.மனோசித்ரா)
போக்குவரத்து அமைச்சு, வீதி அபிவிருத்தி அதிகார சபை மற்றும் அமைச்சின் டிஜிட்டல் பணிக்குழுவுடன் இணைந்து, இலங்கையிலுள்ள வீதிகள் தொடர்பான பிரச்சினைகளை மக்கள் அறிவிப்பதற்காக ஒரு புதிய இணையதளத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
வீதி மூடல்கள், சேதங்கள், விபத்துகள் மற்றும் பழுதுபார்க்கும் பணிகள் போன்ற வீதி நிலைவரங்கள் குறித்த நிகழ்நேரத் தகவல்கள் இல்லாததை நிவர்த்தி செய்வதற்காகவே இந்தத் தளம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது என போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.
இந்தத் தளத்தை https://road-lk.org என்ற இணைய முகவரியில் அணுகலாம். இலங்கையில் தற்போது பயன்படுத்தப்படும் வழிசெலுத்தல் (Navigation) செயலிகள் இவ்வாறான பிரச்சினைகள் குறித்து முறையான புதுப்பிப்புகளை வழங்குவதில்லை என்றும், பல நாடுகளில் இந்தக் குறைபாடு நிலவுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
அண்மையில் ஏற்பட்ட அனர்த்தங்களைத் தொடர்ந்து ஏற்பட்ட பரவலான வீதி சேதங்கள் மற்றும் மூடல்களுக்குப் பதிலளிக்கும் வகையில் இந்த முயற்சி உருவாக்கப்பட்டது என்றும், சாதாரண நிலைமைகளிலும் இது தொடர்ந்து பயனுள்ளதாக இருக்கும் என்றும் அமைச்சர் கூறினார்.
இந்த அமைப்பு பொதுமக்களின் பங்கேற்பை அடிப்படையாகக் கொண்டது. சேதமடைந்த வீதிகள், மூடல்கள் அல்லது விபத்துகளைக் காணும் வீதிப் பயனர்கள் https://road-lk.org/report என்ற இணையதளம் மூலம் புகார்களைச் சமர்ப்பிக்கலாம். புகார்களை சிங்களம், தமிழ் அல்லது ஆங்கிலத்தில் பதிவு செய்யலாம். மேலும் முடிந்தால் புகைப்படங்களைப் பதிவேற்றுமாறு பயனர்கள் ஊக்குவிக்கப்படுகிறார்கள்.
புகார் சமர்ப்பிக்கப்பட்டவுடன், வீதி அபிவிருத்தி அதிகாரசபை அதிகாரிகள் தகவல்களைச் சரிபார்த்து, அதன் பின்னரே பாதிக்கப்பட்ட இடத்தைத் தேசிய வீதி வரைபடத்தில் குறிப்பார்கள். இந்த அமைப்பை இற்றைப்படுத்தும் அதிகாரம் மாகாண வீதி அபிவிருத்தி அதிகார சபைகளுக்கும் நீட்டிக்கப்பட்டுள்ளது.
எதிர்காலத்தில், போக்குவரத்து பொலிஸ் அதிகாரிகள் மற்றும் பிரதேச செயலாளர்களுக்கும் வீதிப் பிரச்சினைகளை நேரடியாகக் குறிக்க அனுமதி வழங்கப்படலாம் என்றும் அவர் மேலும் தெரிவித்தார். தேசிய மற்றும் மாகாண வீதி வலையமைப்பிற்காக இந்த அமைப்பு முழுமையாக நிறுவப்பட்ட பின்னர், கிராமப்புற வீதிகளையும் இதில் இணைப்பதற்கான திட்டங்கள் உள்ளன.
இந்தத் தளம் தற்போது ஒரு முன்னோடித் திட்டமாக (Pilot Project) பல வாரங்களுக்கு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது, அதன் பின்னர் இது நிரந்தரமாக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தேசிய மற்றும் மாகாண வீதிகளில் உள்ள பிரச்சினைகளை இந்த முயற்சிக்கு ஆதரவளிக்க மக்கள் சுறுசுறுப்பாக அறிவிக்குமாறு அமைச்சர் அழைப்பு விடுத்துள்ளார்.