Aggregator
பாம்புகள் இறந்து பல மணி நேரம் கழித்தும் மனிதரை 'கடிப்பது' எப்படி?
சிரிக்கலாம் வாங்க
திருமணம் - ஒரு மோசமான ஒப்பந்தம் ..
திருமணம் - ஒரு மோசமான ஒப்பந்தம் ..
திருமணம் - ஒரு மோசமான ஒப்பந்தம் ..
அன்புள்ள ஆண்களே..,
இது எல்லா ஆண்களுக்கும் அல்ல...
பெரும்பாலான ஆண்களுக்கானது...
நவீன திருமணம் உங்களுக்கு பயனளிக்காது.
திருமணம் என்பது பெரும்பாலும் ஆண்களுக்கு ஒரு மோசமான ஒப்பந்தம், பல திருமண கதைகள் பலருக்கு கொடூரமான யதார்த்தத்தை மட்டுமே எடுத்துக்காட்டுகின்றன.
ஒரு மனிதன் தனது முழு வாழ்க்கையையும் தியாகம் செய்வதில் செலவிடுகிறான் - நீண்ட நேரம் வேலை செய்தல், பள்ளிக் கட்டணத்தைச் செலுத்துதல் மற்றும் தனது குடும்பத்திற்கு வசதியான வாழ்க்கையை வழங்குதல். அவர் தனிப்பட்ட இன்பங்களைத் துறந்து, தனது கனவுகளைத் தள்ளி வைத்து, தனது குழந்தைகள் வெற்றி பெறுவதை உறுதி செய்வதற்காக தன்னிடம் உள்ள அனைத்தையும் கொட்டுகிறார். தன்னைச் சுற்றி அன்பு மற்றும் விசுவாசத்தின் கோட்டையைக் கட்டியுள்ளதாக நினைத்து ஓய்வு பெறுகிறார். ஆனால் உண்மை என்ன? அங்குதான் அவருக்கு அதிர்ச்சி காத்திருக்கிறது. அவர் தனியாக விடப்படுகிறார், அவர் எல்லாவற்றையும் தியாகம் செய்தவர்களால் ஒதுக்கி வைக்கப்படுகிறார்.
இதை உடைப்போம்:
1. அவருக்கு வயது 72, ஓய்வு பெற்றவர், தனியாக இருக்கிறார்.
அவருடைய அனைத்து ஆண்டுகால வேலை, மற்றும் வீடு கட்டுதல் ஆகியவை அவரது வயதான காலத்தில் அமைதிக்கு வழிவகுக்கும் என்று கருதப்பட்டது. அதற்கு பதிலாக, அவர் வெற்று அறைகளையும் தனிமையான இரவுகளையும் வெறித்து பார்த்துக் கொண்டிருக்கிறார்.
2. அவரது மனைவிக்கு வயது 62. தங்கள் குழந்தைகளுடன் வாழ்க்கையை செலவிடுகிறார்.
ஏன்? ஏனென்றால், சமூகம் பெண்களுக்குக் கணவர்களை விடக் குழந்தைகளை முதன்மைப்படுத்தக் கற்றுக்கொடுக்கிறது. அவர் எவ்வளவு நல்லவராக இருந்தார், எவ்வளவு தியாகம் செய்தார் என்பது முக்கியமல்ல - குழந்தைகள் வளர்ந்தவுடன், கணவர் பெரும்பாலும் மனைவியின் வாழ்க்கையில் ஒரு சிறிய அங்கமாக மட்டுமே மாறுகிறார்.
3. அவரது குழந்தைகள் அரிதாகவே அவரிடம் பேசுகிறார்கள்.
அவர்கள் வெளிநாட்டிலோ, வெளியூரிலோ தங்கள் வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார்கள், அங்கு அவர்களை அனுப்ப தனது முதுகெலும்பை உடைத்துக்கொண்ட மனிதனை மறந்துவிடுகிறார்கள். அவரது தியாகங்கள் இப்போது சாதாரணமாக எடுத்துக் கொள்ளப்படுகின்றன.
4. அவர் இப்போது மீண்டும் ஒரு பிரம்மச்சாரி - 72 வயதில்.
ஒரு குடும்பத்தைக் கட்டி பராமரித்த இந்த மனிதர், இப்போது தன்னைத்தானே கவனித்துக் கொள்ள வேண்டியிருக்கிறது. அவர் நோய்கள், தனிமை மற்றும் தன்னைத் தவிர மற்ற அனைவரிடமும் தனது பணத்தை, தனது உடல் பலத்தை கொடுத்ததை உணர்ந்து போராடுகிறார்.
திருமணத்தில் ஆண்களுக்கான கடுமையான யதார்த்தம்
உண்மை என்னவென்றால், ஆண்கள் பெரும்பாலும் குறுகிய வட்டத்தில் அடைபடுகிறார்கள். இந்த அமைப்பு உங்களிடமிருந்து பறித்து உங்களை காலியாக விடுவதற்கு மோசடி செய்யப்பட்டுள்ளது. பெண்களுக்கு பிரச்சனையில்லை. அவர்களின் குழந்தைகள், சமூகம் ஆகியவற்றிலிருந்து ஆதரவைப் பெறுகிறார்கள். ஆனால் ஒரு ஆண்? கொடுக்கும் திறன் இல்லாதபோது அவரது பயன்பாடு முடிகிறது.
சமூகம் உங்களை "ஒரு ஆணாக இருங்கள்", "உங்கள் குடும்பத்திற்காக தியாகம் செய்யுங்கள்" என்று சொல்கிறது, ஆனால் உங்களுக்காக யார் தியாகம் செய்கிறார்கள்? உங்கள் மகிழ்ச்சி, உங்கள் ஆரோக்கியம், உங்கள் மன அமைதியை யார் உறுதி செய்கிறார்கள்? யாரும் இல்லை. கொடுப்பவராக உங்கள் பங்கு முடிந்ததும், நேற்றைய செய்தித்தாளை போல நீங்கள் நிராகரிக்கப்படுகிறீர்கள்.
இதற்கு நீங்கள் என்ன செய்ய வேண்டும்?
1. முதலில் உங்களை நேசியுங்கள்:
காலியான கோப்பையிலிருந்து எதையும் ஊற்ற முடியாது. உங்கள் உடல்நலம், உங்கள் பொழுதுபோக்குகள் மற்றும் உங்கள் மகிழ்ச்சியில் முதலீடு செய்யுங்கள். ஒரு கணவன் அல்லது தந்தையாக இருப்பதை மட்டுமே சார்ந்து இல்லாத, உங்களுக்கான ஒரு நேரத்தையும், வாழ்க்கையையும் உருவாக்குங்கள்.
2. உங்கள் ஓய்வு நேரத்தைத் திட்டமிடுங்கள்:
நீங்கள் எப்படி வாழ்வீர்கள் என்பதைக் கண்டுபிடிக்க வயதாகும் வரை காத்திருக்காதீர்கள். செயலற்ற வருமான வழிகளை (PASSIVE INCOME) உருவாக்கத் தொடங்குங்கள், புத்திசாலித்தனமாக முதலீடு செய்யுங்கள், மேலும் உங்களை நம்பியிருக்கக்கூடிய எதிர்காலத்தைப் பாதுகாக்கவும்.
3. எல்லைகளை முன்கூட்டியே அமைக்கவும்:
உங்கள் முழு அடையாளத்தையும் மற்றவர்களுக்கு வழங்குவதில் நேரம் செலவிடாதீர்கள். நீங்கள் ஒரு மனிதன், ஒரு இயந்திரம் அல்ல என்பதை உங்கள் மனைவியும் குழந்தைகளும் புரிந்து கொள்ள வேண்டும்.
4. உங்கள் சொந்த சமூகத்தை உருவாக்குங்கள்:
வயதான காலத்தில் உங்கள் குடும்பத்தை மட்டுமே சார்ந்திருக்காதீர்கள். உங்கள் வீட்டிற்கு வெளியே உங்கள் வாழ்க்கைக்கு அர்த்தத்தைத் தரும் நட்புகள், பொழுதுபோக்குகள் மற்றும் நெட்வொர்க்குகளை வளர்த்துக் கொள்ளுங்கள்.
5. திருமணத்தைப் பற்றி யதார்த்தமாக இருங்கள்:
உங்கள் கண்களை அகலத் திறந்து வைத்து திருமணத்திற்குள் நுழையுங்கள். உங்கள் தியாகங்கள் அங்கீகரிக்க படாமல் போகலாம் என்பதை புரிந்து கொள்ளுங்கள். திருமணம் ஒரு சூதாட்டம், வாய்ப்புகள் அரிதாகவே உங்களுக்கு சாதகமாக இருக்கும். உணர்ச்சி ரீதியாகவும் நிதி ரீதியாகவும் உங்களைப் பாதுகாத்துக் கொள்ளுங்கள்.
இறுதி வரிகள்:
ஆண்களே, சமூகம் உங்களை வாழ்நாள் முழுவதும் அடிமைத்தனத்தில் தள்ள அனுமதிக்காதீர்கள். நீங்கள் ஒரு பணப்பையோ அல்லது வேலைக்கார குதிரையோ அல்ல. திருமணம், இன்றைய நிலையில், ஆண்களுக்கு, குறிப்பாக முதுமையில் சிறிய வெகுமதியை வழங்குகிறது. உங்கள் வாழ்க்கையை இப்போதே கட்டுப்படுத்திக் கொள்ளுங்கள். எதிர்காலத்திற்காகத் திட்டமிடுங்கள். உங்கள் குடும்பத்தை நேசியுங்கள், ஆனால் முதலில் உங்களை நேசிக்க மறக்காதீர்கள்.
வாழ்த்துக்கள் நண்பர்களே.
புரிந்தால் வாழ்க்கை உங்களுடையது..
https://www.facebook.com/share/p/16Dbh9bZth/
டிஸ்கி :
தமிழக வாழ்வியல் சூழலில் இருந்து இந்த பேஸ்புக் கட்டுரையாளர் பதிவிடுகிறார்.. வெளிநாட்டில் நிலவரம் என்ன ரெல் மீ ..கிளியர் லீ ..?
ஹெரோயினுடன் கைதான இளைஞனை விடுவிக்க லஞ்சம் பெற முயன்ற மதுவரி திணைக்கள உத்தியோகஸ்தர்கள் கைது
இங்கிலாந்து ஆக்ஸ்போர்டு, கேம்பிரிட்ஜ் பல்கலை.யில் ‘திராவிடர் இயக்க’ நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் ஸ்டாலின்!
ஹெரோயினுடன் கைதான இளைஞனை விடுவிக்க லஞ்சம் பெற முயன்ற மதுவரி திணைக்கள உத்தியோகஸ்தர்கள் கைது
'ரணிலை வீழ்த்திய புலிகள்' : சர்வதேச அளவில் செல்வாக்கு பெற்றவர் இலங்கை அரசியலில் தனிமரமான கதை
'ரணிலை வீழ்த்திய புலிகள்' : சர்வதேச அளவில் செல்வாக்கு பெற்றவர் இலங்கை அரசியலில் தனிமரமான கதை
பட மூலாதாரம், PMD SRI LANKA
படக்குறிப்பு, ரணில் விக்ரமசிங்க
கட்டுரை தகவல்
ரஞ்சன் அருண் பிரசாத்
பிபிசி தமிழுக்காக
28 ஆகஸ்ட் 2025
புதுப்பிக்கப்பட்டது 29 ஆகஸ்ட் 2025
இலங்கையின் மூத்த அரசியல்வாதியும், 6 தடவை பிரதமர் பதவியை வகித்தவரும், ஒரு தடவை ஜனாதிபதியாக பதவி வகித்தவருமான ரணில் விக்ரமசிங்க அவ்வப்போது சர்ச்சைகளை எதிர்நோக்கி வருவதை கடந்த பல பத்தாண்டுகளாகவே காணக்கூடியதாக இருந்தது.
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைத்துவத்தை தன்வசம் கொண்டுள்ள ரணில் விக்ரமசிங்க, கட்சியின் உள்ளக பிரச்னைகள் முதல் தேசிய அரசியலில் பிரச்னை வரை அவ்வப்போது பல்வேறு சவால்மிகுந்த பிரச்னைகளை எதிர்நோக்கி வந்துள்ளார்.
தனது கட்சியின் உள்ளக பிரச்னைகள், கூட்டணி கட்சிகளின் பிரச்னைகள் என சந்தித்து வந்த ரணில் விக்ரமசிங்க இன்று பதவியை இழந்து கட்சி அரசியலில் மாத்திரம் ஈடுபட்டு வந்த தருணத்தில் அரசாங்கத்தினால் கைது செய்யப்பட்டு புதிய வகையான பிரச்னையொன்றை எதிர்நோக்கியுள்ளார்.
வெளிநாட்டு பயணமொன்றின் ஊடாக அரச நிதியை தவறாக பயன்படுத்தியதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட ரணில் விக்ரமசிங்க நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நிலையில், அவருக்கு நேற்று முன்தினம் (26) நீதிமன்றம் பிணை வழங்கியிருந்தது.
50 லட்சம் ரூபாய் வீதமான 3 சரீர பிணைகளின் கீழ் ரணில் விக்ரமசிங்கவை விடுவிக்க கொழும்பு கோட்டை நீதவான் உத்தரவு பிறப்பித்திருந்தார்.
எனினும், விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த தருணத்தில் சுகயீனமுற்ற ரணில் விக்ரமசிங்க சிறைச்சாலை மருத்துவமனையிலிருந்து கொழும்பு தேசிய மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.
அவருக்கு பல்வேறு நோய்கள் காணப்படுகின்ற பின்னணியில், அவர் தொடர்ந்தும் சிகிச்சை மருத்துவமனையில் தங்கியிருந்து பெற வேண்டும் என கொழும்பு தேசிய மருத்துவமனையின் மருத்துவ குழாம் அறிவித்துள்ளது.
இந்த நிலையில், முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, தனது அரசியல் வாழ்க்கையில் எதிர்நோக்கிய சவால் மிகுந்த சர்ச்சைக்குரிய தருணங்கள் குறித்து இந்த கட்டுரை ஆராய்கின்றது.
ஐ.தே.க கட்சித் தலைவர் பதவியின் சர்ச்சை
பட மூலாதாரம், PMD SRI LANKA
படக்குறிப்பு, ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவராக 1994ம் ஆண்டு ரணில் விக்ரமசிங்க நியமிக்கப்பட்டார்.
இலங்கை சுதந்திரமடைவதற்கு முன்னதாகவே ஆரம்பிக்கப்பட்ட மிக முக்கியமான பழைமை வாய்ந்த கட்சியாக ஐக்கிய தேசியக் கட்சி காணப்படுகின்றது.
சுதந்திர இலங்கையின் முதலாவது அரசாங்கத்தை அமைத்த கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவராக 1994ம் ஆண்டு ரணில் விக்ரமசிங்க நியமிக்கப்பட்டார்.
அன்று முதல் இன்று வரை ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவராக ரணில் விக்ரமசிங்க பதவி வகித்து வருகின்றார்.
இந்த நிலையில், 1994-ஆம் ஆண்டு முதல் நடைபெற்ற பெரும்பாலான தேர்தல்களில் ரணில் விக்ரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சி தோல்வியை சந்தித்திருந்த பின்னணியில், கட்சிக்கு புதிய தலைவர் ஒருவர் நியமிக்கப்பட வேண்டும் என்ற கோஷம் 2010-ஆம் ஆண்டுக்கு பின்னரான காலத்தில் தொடர்ச்சியாக இருந்து வந்தது.
கட்சி தலைவர் பதவி சஜித் பிரேமதாஸவிற்கு வழங்கப்பட வேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சியின் ஒரு தரப்பினர் வலியுறுத்திய பின்னணியில், 2015-ஆம் ஆண்டுக்கு பின்னராக காலத்தில் அது வலுப்பெற ஆரம்பித்திருந்தது.
இந்த நிலையில், 2019-ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து பிரிந்த குழுவினர் புதிய ஜனநாயக முன்னணி சார்பில் சஜித் பிரேமதாஸவை ஜனாதிபதி வேட்பாளராக களமிறக்கியிருந்தனர்.
இந்த தேர்தலில் சஜித் பிரேமதாஸ பின்னடைவை சந்தித்த நிலையில், ஐக்கிய மக்கள் சக்தி என்ற பெயரில் ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து பிரிந்த குழுவினர் புதிய கட்சியொன்றை ஆரம்பித்திருந்தனர்.
ரணில் விக்ரமசிங்கவின் தலைமைத்துவம் மீதான நம்பிக்கை இழப்பே, ஐக்கிய மக்கள் சக்தி ஆரம்பிக்க பிரதானமான காரணமாக அமைந்திருந்தது.
ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் அந்த கட்சியுடன் கூட்டணி அமைத்திருந்த ஏனைய கட்சிகள் ரணில் விக்ரமசிங்கவிடமிருந்து வெளியேறி, சஜித் பிரேமதாஸவுடன் கைக்கோர்த்திருந்தனர்.
இந்தப் பின்னணியில், 2020-ஆம் ஆண்டுக்கு பின்னரான காலத்தில் ரணில் விக்ரமசிங்க தனிமையடைந்திருந்தார்.
2020-ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி ஒரு நாடாளுமன்ற ஆசனத்தைக் கூட பெற்றுக்கொள்ள முடியாத நிலைக்கு தள்ளப்பட்டது.
ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து பிரிந்த ஐக்கிய மக்கள் சக்தி பிரதான எதிர்க்கட்சியாக மாறியது.
எனினும், ஐக்கிய தேசியக் கட்சி தேர்தலில் பெற்றுக்கொண்ட முழுமையான வாக்குகளின் அடிப்படையில் தேசியப் பட்டியல் ஊடாக ஒரு ஆசனம் கிடைக்கப் பெற்றது.
இவ்வாறு கிடைக்கப் பெற்ற ஒரு ஆசனத்தின் ஊடாக புதிய நாடாளுமன்றம் அமைக்கப்பட்டு 6 மாதங்களின் பின்னர் ரணில் விக்ரமசிங்க நாடாளுமன்ற உறுப்பினராக தனியாக நாடாளுமன்றத்திற்குள் பிரவேசித்திருந்தார்.
பட மூலாதாரம், PMD SRI LANKA
படக்குறிப்பு, 2020-ஆம் ஆண்டுக்கு பின்னரான காலத்தில் ரணில் விக்ரமசிங்க தனிமையடைந்திருந்தார்.
இதையடுத்து, கொரோனா தாக்கத்தின் ஊடாக நாடு பாரிய பொருளாதார சிக்கலை எதிர்நோக்கியது.
தனிநபராக நாடாளுமன்றத்தில் தனது ஆதிக்கத்தை செலுத்திய அவர், பொருளாதார சிக்கல் காரணமாக எழுந்த போராட்டத்தினால் ஆட்சி பொறுப்பை ஏற்றுக்கொள்ளுமாறு எதிர்க்கட்சிகளுக்கு அப்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ அழைப்பு விடுத்தார்.
எனினும், பிரதான எதிர்க்கட்சிகளான சஜித் தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியும் அநுர குமார திஸாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி கூட்டணி ஆகியன ஆட்சி பொறுப்பை ஏற்றுக்கொள்ள மறுப்பு தெரிவித்த பின்னணியில், தனிநபராக நாடாளுமன்றத்திற்குள் பிரவேசித்த ரணில் விக்ரமசிங்க கோட்டாபய ராஜபக்ஸவின் அழைப்பை ஏற்று பிரதமராக பதவி பிரமாணம் செய்துகொண்டார்.
அதன் பின்னர் வலுப்பெற்ற போராட்டம் காரணமாக நாட்டை விட்டுத் தப்பிச் சென்ற கோட்டாபய ராஜபக்ஸ, தனது பதவியை ராஜினாமா செய்ததை அடுத்து, பதில் ஜனாதிபதியாக தெரிவான ரணில் விக்ரமசிங்க, அதனை தொடர்ந்து, நாடாளுமன்றத்தின் பெரும்பான்மை வாக்குகளின் ஊடாக புதிய ஜனாதிபதியாக பதவி பிரமாணம் செய்துகொண்டார்.
நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை இல்லாது ஒரு ஆசனத்தின் ஊடாக தனது அரசியலை செய்து, இறுதியில் ஜனாதிபதியாக பதவியேற்ற ஒரேயொருவர் ரணில் விக்ரமசிங்கவாக கருதப்படுகின்றார்.
அதன்பின்னர், பொருளாதார ரீதியில் வீழ்ச்சி கண்ட நாடு, ஒரு சில மாதங்களிலேயே வழமை நிலைக்கு திரும்பியது.
எனினும், 2024ம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்ரமசிங்க மீண்டும் தோல்வியை சந்தித்திருந்தார்.
பல முறை ஆட்சி பீடம் ஏறி, இறுதியில் ஒரு ஆசனத்தைக் கூட பெற்றுக்கொள்ள முடியாத நிலைக்கு தள்ளப்பட்ட பொறுப்பை அந்த கட்சியின் தலைவராக இருக்கும் ரணில் விக்ரமசிங்க ஏற்க வேண்டும் என பல தரப்பினர் கூறியிருந்தனர்.
எனினும், சவால்களை கடந்து, இறுதியில் தனிநபராக ஜனாதிபதியாக பதவி வகித்திருந்தார்.
சந்திரிக்கா கலைத்த அமைச்சரவை
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க
ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தலைமையிலான அரசாங்கத்தின் கீழ் 2001ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் அப்போதைய ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தலைமையிலான மக்கள் கூட்டணி தோல்வி அடைந்து, ஐக்கிய தேசியக் கட்சி 109 ஆசனங்களை பெற்று வெற்றி பெற்றது.
அதன் ஊடாக இலங்கையின் பிரதமராக ரணில் விக்ரமசிங்க பதவியேற்றுக்கொண்டார்.
நிறைவேற்று அதிகாரம் சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தலைமையிலான கட்சி வசமும், ஆட்சி அதிகாரம் பிரதமரான ரணில் விக்ரமசிங்க வசமும் காணப்பட்டது.
இதனால், ஆட்சியை உரிய முறையில் செய்வதில் பாரிய இழுப்பறி நிலைமை அந்த காலப் பகுதியில் காணப்பட்டது.
ரணில் விக்ரமசிங்க பிரதமராக பதவி வகித்த அந்த காலப் பகுதியில் தமிழீழ விடுதலைப் புலிகளுடன் சமாதான உடன்படிக்கையை ஏற்படுத்தி, நாட்டில் போர் நிறுத்தத்தை மேற்கொண்டிருந்தார்.
இவ்வாறான பின்னணியில், நிறைவேற்று அதிகார ஜனாதிபதிக்கு காணப்பட்ட அதிகாரத்திற்கு அமைய, ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சி பீடமேறி இரண்டு வருடங்களின் பின்னர் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அமைச்சரவையை கலைத்து நாடாளுமன்றத் தேர்தலுக்கு சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க அழைப்பு விடுத்திருந்தார்.
இந்த தேர்தலில் சந்திரிக்கா பண்டாரநாயக்க தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டணி 105 ஆசனங்களை பெற்று வெற்றி பெற்றதுடன், ஐக்கிய தேசியக் கட்சி 82 ஆசனங்களை மாத்திரமே பெற்றது.
இந்த நாடாளுமன்ற கலைப்பானது ஜனநாயக விரோத செயற்பாடு என எதிர்க்கட்சிகள் விமர்சித்திருந்தன. இதுவும் ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிராக நடத்தப்பட்ட ஒரு சதித்திட்டமாக அந்த காலப் பகுதியில் கருதப்பட்டது.
'ரணிலை வீழ்த்திய விடுதலைப் புலிகள்'
படக்குறிப்பு, தமிழீழ விடுதலைப் புலிகளின் விடுத்த அறிவிப்பே ரணில் விக்ரமசிங்கவின் தோல்விக்கான பிரதானமான காரணமாக அமைந்திருந்ததாக அ.நிக்சன் குறிப்பிடுகின்றார்.
இலங்கையின் ஐந்தாவது நிறைவேற்று அதிகார ஜனாதிபதியைத் தேர்வு செய்வதற்கான தேர்தல் 2005ஆம் ஆண்டு நடைபெற்றது.
இந்த தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பிரதமராக இருந்த மஹிந்த ராஜபக்ஸ வெற்றியீட்டியிருந்தார்.
மஹிந்த ராஜபக்ஸவை எதிர்த்து ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் ரணில் விக்ரமசிங்க போட்டியிட்டு தோல்வியை தழுவினார்.
மஹிந்த ராஜபக்ஸ 4,887,152 வாக்குகளை பெற்றிருந்ததுடன், ரணில் விக்ரமசிங்க 4,706,366 வாக்குகளை பெற்றுக் கொண்டார்.
மஹிந்த ராஜபக்ஸவிடம், ரணில் விக்ரமசிங்க வெறும் 180,786 வாக்குகள் வித்தியாசத்திலேயே தோல்வியை சந்தித்திருந்தார்.
2005ம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்ரமசிங்க தோல்வியை தழுவ பிரதானமான காரணமாக தமிழீழ விடுதலைப் புலிகளின் செயற்பாடே காரணம் என அரசியல் ஆய்வாளர்கள் கருதினர்.
ரணில் விக்ரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சி தமிழர் பிரச்னை தொடர்பில் சரியான தீர்வுகளை முன்வைக்க தவறிய பட்சத்திலேயே, விடுதலைப் புலிகள், 2005ம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்ரமசிங்கவை தோற்கடிக்க நடவடிக்கை எடுத்திருந்ததாக கூறப்படுகின்றது.
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் வாழும் தமிழர்களை, ரணில் விக்ரமசிங்கவுக்கு வாக்களிக்க வேண்டாம் என தமிழீழ விடுதலைப் புலிகள் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தனர்.
தமிழீழ விடுதலைப் புலிகளின் அறிவிப்பை ஏற்றுக்கொண்ட வடக்கு மற்றும் கிழக்கு மாகாண தமிழர்கள் ரணில் விக்ரமசிங்கவிற்கு வாக்களிப்பை பெரும்பாலும் தவிர்த்திருந்தனர்.
தமிழீழ விடுதலைப் புலிகளின் அறிவிப்பே ரணில் விக்ரமசிங்கவின் தோல்விக்கான பிரதானமான காரணமாக அமைந்திருந்ததாக மூத்த பத்திரிகையாளரும், அரசியல் ஆய்வாளருமான அ.நிக்சன் குறிப்பிடுகின்றார்.
''சுமார் ஒரு லட்சத்து 80 ஆயிரம் வாக்குகளினால் மாத்திரமே ரணில் விக்ரமசிங்க தோல்வியடைந்தார். வடக்கு மற்றும் கிழக்கு மாகாண மக்கள் வாக்களித்திருந்தால், குறைந்தது இரண்டரை லட்சத்திற்கும் அதிகமான வாக்குகளை ரணில் விக்ரமசிங்க பெற்றுக் கொண்டிருந்திருப்பார். நிச்சயமாக அவர் வென்றிருப்பார். அந்த மக்கள் வாக்களிக்கவில்லை. அதனாலேயே அவர் தோல்வி அடைந்தார். ரணில் விக்ரமசிங்க ஆட்சிக்கு வந்திருந்தாலும் போர் நடந்திருக்கும். கட்டாயம் போர் நடந்திருக்கும். ஆனால், மஹிந்த ராஜபக்ஸ மாதிரி மிக மோசமாக போர் நடந்திருக்காது. ரணில் விக்ரமசிங்க வந்திருந்தால் விடுதலைப் புலிகள் மீதான தடைகளும் சர்வதேச ரீதியாக அதிகரித்திருக்கும்.'' என மூத்த பத்திரிகையாளர் அ.நிக்சன் கூறுகின்றார்.
2018 அரசியலமைப்பு குழப்பம்
பட மூலாதாரம், PMD SRI LANKA
படக்குறிப்பு, 2015ம் ஆண்டு முதல் மீண்டும் பிரதமர் பதவியை வகித்த வந்த ரணில் விக்ரமசிங்கவை, மைத்திரிபால சிறிசேன மீண்டும் 2018ம் ஆண்டு அக்டோபர் மாதம் 26ம் தேதி பதவி நீக்கியிருந்தார்.
ராஜபக்ஸ குடும்பத்தின் ஆட்சியை முடிவுக்குக் கொண்டு வரும் நோக்கில் 2015ம் ஆண்டு, மஹிந்த ராஜபக்ஸவின் தரப்பிலிருந்த மைத்திரிபால சிறிசேனவை அங்கிருந்து பிரித்து, ரணில் விக்ரமசிங்க உள்ளிட்டோர் நல்லாட்சி என்ற பெயரிலான அரசாங்கத்தை ஸ்தாபித்திருந்தனர்.
2015ம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் பொது எதிரணியாக களமிறங்கிய மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாக தேர்வு செய்யப்பட்டதை அடுத்து, நாடாளுமன்றத் தேர்தல் நடத்தப்பட்டது.
இந்த தேர்தலில் ரணில் விக்ரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான கூட்டணி வெற்றி பெற்றதை அடுத்து, பிரதமராக ரணில் விக்ரமசிங்க நியமிக்கப்பட்டார்.
2015ம் ஆண்டு முதல் மீண்டும் பிரதமர் பதவியை வகித்து வந்த ரணில் விக்ரமசிங்கவை, மைத்திரிபால சிறிசேன மீண்டும் 2018ம் ஆண்டு அக்டோபர் மாதம் 26ம் தேதி பதவி நீக்கியிருந்தார்.
சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க 2004ம் ஆண்டு ரணில் விக்ரமசிங்கவை பதவி நீக்கத்தை போன்றதொரு சம்பவத்தையே, மைத்திரிபால சிறிசேன மீண்டும் ரணில் விக்ரமசிங்கவிற்கு நிகழ்த்தியிருந்தார்.
இவ்வாறு நிறைவேற்று அதிகாரத்தைக் கொண்டு பதவி விலக்கப்பட்ட ரணில் விக்ரமசிங்கவிற்கு பதிலாக, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ பிரதமராக மைத்திரிபால சிறிசேனவினால் நியமிக்கப்பட்டிருந்தார்.
இது இலங்கை அரசியல் வரலாற்றில் அரசியலமைப்பு குழப்ப நிலைமையை ஏற்படுத்தியிருந்தது.
இவ்வாறு ரணில் விக்ரமசிங்கவை பதவி விலக்கியமையானது, நாட்டில் பாரிய சர்ச்சையை தோற்றுவித்திருந்தது.
பிரதமரின் அதிகாரப்பூர்வ இல்லத்திலிருந்து ரணில் விக்ரமசிங்க வெளியேற மறுத்த நிலையில், மைத்திரிபால சிறிசேனவின் தீர்மானத்தை சவாலுக்கு உட்படுத்தி உயர் நீதிமன்றத்தை நாடியிருந்தார்.
சுமார் ஒன்றரை மாதங்களுக்கு மேல் நீடித்த இந்த சர்ச்சையை உயர் நீதிமன்றத்தின் தீர்மானத்தின் ஊடாக முடிவுக்குக் கொண்டு வரப்பட்டது.
ரணில் விக்ரமசிங்க பதவி நீக்கம் செய்யப்பட்டு, மஹிந்த ராஜபக்ஸ பிரதமராக நியமிக்கப்பட்டமையானது, சட்டவிரோதமான செயற்பாடு என உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருந்தது.
இதையடுத்து, ரணில் விக்ரமசிங்க மீண்டும் இலங்கையின் பிரதமராக நியமிக்கப்பட்டார்.
இந்த சர்ச்சையானது, இலங்கை அரசியலமைப்பு குழுப்பநிலையை ஏற்படுத்தியிருந்ததுடன், அது நாட்டின் அரசியலில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தது.
ரணில் விக்ரமசிங்க எதிர்கொண்ட மேலும் சில சர்ச்சைகள்
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தனது அரசியல் வாழ்க்கையில் பல சவால்களை எதிர்நோக்கி வருகின்றார்.
பட்டலந்தை சித்திரவதை முகாம் நடத்தியதாக கூறப்படும் சம்பவம், மத்திய வங்கியில் இடம்பெற்றதாக கூறப்படும் ஊழல் என சர்ச்சைகளை எதிர்நோக்கிய ரணில் விக்ரமசிங்க, தற்போது வெளிநாட்டு பயணத்தின் போது அரச நிதியை முறையற்ற விதத்தில் பயன்படுத்தியதாகவும் குற்றம் சுமத்தப்பட்டு விளக்கமறியலில் தற்போதைய ஆட்சியாளர்களினால் வைக்கப்பட்டிருந்தார்.
இந்த வழக்கு மீதான விசாரணைகள் தொடர்ந்தும் இடம்பெறுகின்ற நிலையில், நீதிமன்றம் அவரை பிணையில் விடுவித்துள்ளது.
எனினும், ரணில் விக்ரமசிங்க சுகயீனமுற்ற நிலையில், கொழும்பு தேசிய மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
ஹெரோயினுடன் கைதான இளைஞனை விடுவிக்க லஞ்சம் பெற முயன்ற மதுவரி திணைக்கள உத்தியோகஸ்தர்கள் கைது
பாதாள உலகக் குழுவைச் சேர்ந்த இலங்கையர்கள் இந்தோனேசியாவில் கைது!
செம்மணி மனித புதைகுழி விவகாரத்திற்கு சர்வதேச விசாரணைகள் தேவையில்லை – அரசாங்கம் அறிவிப்பு
கருணா, பிள்ளையான் அணியின் முக்கியஸ்தர் இனிய பாரதி என்றழைக்கப்படும் கே.புஷ்பகுமார் கைது
யாழ். செம்மணியில் 3 அடி ஆழத்தில் மனித எலும்புக்கூடு மீட்பு ; பாரிய புதைகுழியாக இருக்கலாமென அச்சம்
ஹெரோயினுடன் கைதான இளைஞனை விடுவிக்க லஞ்சம் பெற முயன்ற மதுவரி திணைக்கள உத்தியோகஸ்தர்கள் கைது
காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பாக நீதிமன்றம் கோரிய ஆவணத்தை கடற்படை வழங்கவில்லை!
காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பாக நீதிமன்றம் கோரிய ஆவணத்தை கடற்படை வழங்கவில்லை!
Published By: Digital Desk 3
31 Aug, 2025 | 10:55 AM
இறுதிக்கட்டப் போர் நிகழ்ந்த காலகட்டத்தில் காணாமலாக்கப்பட்டோரில் ஒரு தொகுதியினரை தடுத்து வைத்திருந்த கடற்படை அதிகாரிகள் குழுவொன்றுடன் தொடர்புடைய ஆவணத்தை வழங்குமாறு பிறப்பிக்கப்பட்ட உத்தரவுக்குக் கீழ்ப்படிவதற்கு கடற்படை தவறியுள்ளமை நீதிமன்றத்தின் முன் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.
திருகோணமலையின் பிரபல ‘கன்சைட்’ நிலக்கீழ் வதைமுகாமை கண்காணித்ததன் பின்னர் அங்கு செயற்படும் விசேட புலனாய்வுப் பிரிவு எனும் குழுவை கலைக்குமாறு கோரி அன்றைய கடற்படை புலனாய்வுப் பிரிவு பணிப்பாளராக பணியாற்றிய நிஷாந்த உலுகேதென்னவால் கடற்படைத் தளபதிக்கு அனுப்பப்பட்டதாகக் கூறப்படும் கடிதத்தின் பிரதியை கடற்படை தமக்கு வழங்கவில்லை என குற்றப்புலனாய்வு திணைக்களம் நீதிமன்றத்துக்கு அறிவித்துள்ளது.
காணாமலாக்கப்பட்ட ஒருவர் தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் கடற்படைத் தளபதி உள்ளிட்ட கடற்படை அதிகாரிகள் ஐவருக்கும் பொலிஸ் அதிகாரிகள் அறுவருக்கும் எதிரான வழக்கின் விசாரணையின்போது பொல்கஹவெல நீதவான் பிரசாந்த பெர்னான்டோ அக்கடிதத்தின் பிரதியொன்றை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்துக்கு வழங்குமாறு இரண்டாவது தடவையாகவும் கடற்படைக்கு உத்தரவு பிறப்பித்தார்.
நபரொருவரை காணாமலாக்கியமை தொடர்பான விசாரணைக்கு அமைவாக ஒரு மாதத்துக்கு முன் இரகசியப் பொலிசாரால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் தமித் நிஷாந்த சிரிசோம உலுகேதென்ன மீண்டும் ஓகஸ்ட் 27ஆம் திகதி நீதிமன்றத்தின் முன்னிலைப்படுத்தப்பட்ட சந்தர்ப்பத்தில் குற்றப்புலனாய்வுத் திணைக்களம் நீதிமன்றத்துக்கு இந்த விடயத்தை தெரிவித்தது.
குற்றப் புலனாய்வுத் திணைக்களம் முன்னாள் கடற்படைத் தளபதிக்கு எதிராக சாட்சியங்களை முன்வைக்கத் தவறியுள்ளமையால் அவரை இந்த வழக்கிலிருந்து விடுவிக்குமாறு அட்மிரல் உலுகேதென்ன சார்பாக நீதிமன்றத்தில் முன்னிலையான சட்டத்தரணி மகேஷ் கிரிஷாந்த நீதவானிடம் கோரிக்கை விடுத்த சந்தர்ப்பத்தில் பாதிக்கப்பட்டவர்கள் சார்பான சட்டத்தரணி அச்சலா செனவிரத்ன அதற்கு ஆட்சேபனை தெரிவித்தார்.
விசாரணைகள் நடைபெற்றுக் கொண்டிருப்பதனால் சந்தேகநபரை விடுதலை செய்வது பொருத்தமற்றது என சட்டத்தரணி மேலும் தெரிவித்தார்.
கேகாலையைச் சேர்ந்த சாந்த சமரவீர என்பவரை கடத்திக் கொண்டுபோய் திருகோணமலை 'கன்சைட்' கடற்படை வதைமுகாமில் தடுத்து வைத்து காணாமலாக்கியமை தொடர்பான குற்றச்சாட்டுகளுக்காக கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் கடற்படை தளபதி நிஷாந்த உலுகேதென்னவை செப்டம்பர் 10ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு பொல்கஹவெல நீதவான் பிரசாந்த பெர்னாண்டோ உத்தரவு பிறப்பித்தார்.
சாந்த சமரவீர தடுத்து வைக்கப்பட்டிருந்த கன்சைட் வதைமுகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்த இளைஞர்கள் உள்ளிட்ட பதினொரு பேரில் சிலரது பெற்றோர்களும் வழக்கு விசாரணை தினத்தன்று சட்டத்தரணி அச்சலா செனவிரத்னவுடன் பொல்கஹவெல நீதிமன்றத்துக்கு சமுகமளித்திருந்தனர்.
சாந்த சமரவீரவை கடத்தி திருகோணமலை 'கன்சைட்' கடற்படை வதைமுகாமில் தடுத்து வைத்து காணாமலாக்கியமை தொடர்பான விசாரணையை மேற்கொள்ளும் குற்றப்புலனாய்வுத் திணைக்களம் சார்பில் நீதிமன்றத்தின் முன்னிலையில் பொலிஸ் சார்ஜண்ட் 38640 பண்டார, பொலிஸ் சார்ஜண்ட் 37611 ராஜபக்ஷ மற்றும் பிரதான பொலிஸ் பரிசோதகர் இலங்கசிங்க ஆகியோர் நீதிமன்றில் தகவல்களை சமர்ப்பித்தனர்.
இலங்கை கடற்படையால் அறிவிக்கப்பட்டுள்ளமைக்கு அமைய 2009ஆம் ஆண்டில் போர் நிறைவுக்கு வந்ததன் பின்னர் அட்மிரல் உலுகேதென்ன மூன்று மாதத்திற்கும் மேற்பட்ட காலம் கடற்படை புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளராக கடமையாற்றினார்.
2010 ஒக்டோபர் முதலாம் திகதி கடற்படை புலனாய்வுப் பிரிவு பணிப்பாளராக நியமனம் பெற்றதன் பின்னர் அப்போதைய கடற்படைத் தளபதியான அட்மிரல் சோமதிலக திசாநாயகவிடமிருந்து பெற்ற எழுத்து மூல அனுமதிக்கு அமைவாக திருகோணமலை கன்சைட் முகாமை பார்வையிடுவதற்குச் சென்றதாக சிரிசோம உலுகேதென்ன அறிவித்ததாக குற்றப்புலனாய்வுத் திணைக்களம் ஜூலை 30 ஆம் திகதி பொல்கஹவெல நீதவான் நீதிமன்றத்திற்கு தெரிவித்திருந்தது.
அதன்போது அங்கு 40 - 60 நபர்களை தடுத்து வைத்திருந்ததாக உலுகேதென்ன குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திடம் தெரிவித்ததாக அத்திணைக்களம் கடந்த வழக்குத் தவணையின்போது நீதிமன்றத்துக்கு அறிவித்தது.
2010 ஜூலை 22 ஆம் திகதி பொலிஸாரால் கைது செய்யப்பட்டு சில நாட்களின் பின்னர் காணாமலாக்கப்பட்ட கனேராலலாகே சாந்த சமரவீர தடுத்து வைக்கப்பட்டிருந்ததாக வெளிப்படுத்தப்பட்டுள்ள கன்சைட் கடற்படை வதைமுகாம் அப்போது கடற்படை புலனாய்வுப் பிரிவின் தலைவராக இருந்த நிஷாந்த உலுகேதென்னவின் கீழ் செயற்பட்டு வந்ததன் காரணமாகவே இலங்கை கடற்படையின் 24 ஆவது கடற்படைத் தளபதியான அவரை குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினால் ஜூலை 28 ஆம் திகதி கைது செய்யப்பட்டார்.
திருகோணமலை நிலக்கீழ் கன்சைட் முகாம் தமது பொறுப்பில் இருந்தாலும் அங்கு விசேட புலனாய்வுப் பிரிவு என்ற பெயரில் அறியப்படும் ஓர் அலகு செயற்பட்டதாகவும் அது கடற்படை புலனாய்வுப் பிரிவால் செயற்படுத்தப்பட்ட அலகு அல்ல எனவும் நிஷாந்த உலுகேதென்ன தெரிவித்ததாக குற்றப்புலனாய்வுத் திணைக்களம் கடந்த வழக்குத் தவணையின் போது நீதிமன்றத்துக்கு சமர்ப்பித்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.
கடற்கரையின் உளவுப் பிரிவுடன் தொடர்பற்றது எனக் கூறப்படும் அந்த புலனாய்வுப் பிரிவுக்கு அப்போது கமாண்டர் டீ.கே.பி. தசநாயக்க கட்டளை வழங்கியதாகவும் கடற்படையின் உறுப்பினர்களான ரணசிங்க, பொடி குமார, லொகு குமார, ரத்நாயக்க, சந்தமாலி மற்றும் கௌசல்யா ஆகிய அறுவர் அவரின் கீழ் இருந்ததாகவும் அந்த விசேட புலனாய்வுப் பிரிவு தம்மால் கலைக்கப்பட்டதாகவும் அட்மிரல் உலுகேதென்ன குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திடம் வாக்குமூலம் வழங்கியுள்ளார்.
2008-09 காலப்பகுதியில் இளைஞர்கள் உள்ளிட்ட பதினொரு பேர் கடத்திக் கொண்டு போய் திருகோணமலை கன்சைட் வதைமுகாமில் தடுத்து வைத்திருந்தமை தொடர்பாக விசாரணை செய்யும் இரகசியப் பொலிஸ் அதிகாரிகளிடம் சுமார் ஓராண்டு காலம் கன்சைட் வதைமுகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்த கடற்படை புலனாய்வுப் பிரிவு உத்தியோகத்தரான பஸ்நாயக்க முதியன்சலாகே விஜயகாந்த் என்ற பொடிமல்லி என்பவர் சாந்த சமரவீர தன்னுடன் சிறை வைக்கப்பட்டிருந்ததாகக் கூறியிருந்தார்.
இப்பாகமுவ பிரதேசத்தைச் சேர்ந்த பிரகீத் நிசங்சல விதானாரச்சி என்பவரும் அவர்களுடன் இருந்ததாக பொலிஸார் மேலும் கண்டுபிடித்துள்ளனர்.
கேகாலை சாந்த சமரவீரவை கடத்தி திருகோணமலை 'கன்சைட்' கடற்படை வதை முகாமில் தடுத்துவைத்து காணாமலாக்கியமை தொடர்பான குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் கடற்படை தளபதி நிஷாந்த உலுகேதென்ன தொடர்பாக நடைபெற்ற கடந்த வழக்குத் தவணையில் பின்னர் அது தொடர்பாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்த ஒரு கூற்றினால் விசாரணை அதிகாரிகளுக்கும், பாதிக்கப்பட்டோருக்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக பாதிக்கப்பட்டோர் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி அச்சலா செனவிரத்ன உள்ளிட்ட சிலர் அண்மையில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முறைப்பாடு செய்திருந்தனர்.
அது தொடர்பிலும் தற்போது ஒரு விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களம் ஓகஸ்ட் 27 ஆம் திகதி பொல்கஹவெல நீதவான் நீதிமன்றத்துக்கு அறிவித்துள்ளது.
கோட்டாபய குற்றப் புலனாய்வுத் திணைக்களத்துக்கு அழைப்பு
டைனோசர்களை அழித்தொழித்த விண்கல் மோதல் - மீண்டும் பூமியில் நிகழுமா?
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, சித்தரிப்புப் படம்
கட்டுரை தகவல்
முனைவர் த.வி.வெங்கடேஸ்வரன்
முன்னாள் விஞ்ஞானி, விஞ்ஞான் பிரசார்
4 மணி நேரங்களுக்கு முன்னர்
கடந்த ஆண்டு பிப்ரவரி 24ஆம் தேதியன்று, குஜராத்தில் உள்ள கட்ச் பகுதியின் மேலே நாசாவின் செயற்கைக்கோளான லான்சாட் 8 பறந்தது. அப்போது அதில் திகைக்க வைக்கும் ஒரு காட்சி பதிவானது.
அங்கு 1.8 கி.மீ விட்டம், 6 மீட்டர் ஆழம் கொண்ட, கின்னம் போன்ற ஒரு பள்ளம் இருப்ப அந்த செயற்கைக்கோள் பதிவு செய்தது. கிட்டத்தட்ட துல்லியமான வட்ட வடிவில் இயற்கையான பள்ளம் உருவாகாது.
பின்னர் அது எப்படி ஏற்பட்டது என்பதை ஆராய்ந்தபோது, சுமார் 7000 ஆண்டுகளுக்கு முன்பாக அங்கு வந்து விழுந்த ஒரு விண்கல் ஏற்படுத்திய குழியே அந்தப் பள்ளம் என்பது தெரிய வந்தது.
இத்தகைய விண்கல் மோதல்கள் பூமியில் எவ்வளவு அதிகமாக நிகழ்கின்றன? அவற்றால் என்ன ஆபத்து? பூமியில் டைனோசர்களின் இருப்பை அழித்த அளவுக்குப் பேரழிவை ஏற்படுத்தவல்ல விண்கல் மோதல் மீண்டும் நிகழுமா?
ரஷ்யாவை நிலைகுலைய வைத்த விண்கல் வெடிப்பு
Play video, "பூமியில் மீண்டுமொரு பேரழிவை உண்டாக்கும் விண்கல் மோதல் நிகழ வாய்ப்புள்ளதா?", கால அளவு 7,57
07:57
காணொளிக் குறிப்பு,
கடந்த 2013ஆம் ஆண்டு ரஷ்யாவின் செல்யாபின்ஸ்க் பகுதியில் திடீரென வானத்தில் பிரகாசமான நெருப்புக் கோளம் தெரிந்தது.
அதை மக்கள் அனைவரும் வியப்பாகப் பார்த்துக்கொண்டிருந்த நேரத்தில், பூமியின் வளிமண்டலத்திற்குள் பறந்து வந்த அந்த நெருப்புக் கோளம் சுமார் 30கி.மீ உயரத்தில் வெடித்தது.
அந்த வெடிப்பினால் காற்று விரிவடைந்து, அதிர்வலைகள் உருவாகிப் பரவின. சுமார் பல கிலோமீட்டர் பரப்பளவில் 8,000 வீடுகள் மற்றும் அலுவலகங்களில் இருந்த கண்ணாடிகள் உடைந்து சிதறின, கட்டடங்கள் அதிர்ந்தன, கூரைகள் பிய்ந்து பறந்தன.
உயிர்ச் சேதம் ஏதும் ஏற்படவில்லை என்றாலும், 1,500 பேர் கடுமையாகக் காயமடைந்தனர். இதன் பின்னணியை ஆராய்ந்தபோது, சுமார் 9,000 டன் எடைகொண்ட, 20 மீட்டர் விட்டமுள்ள ஒரு விண்கல் பூமியை நோக்கி வந்துள்ளது.
சுமார் 100கி.மீ சுற்றளவில் இருந்தவர்களுக்கு இந்தக் காட்சி தெளிவாகத் தென்பட்டுள்ளது. அதில் சிலர் சூரியனைவிட அதிக பிரகாசத்தில் அது தெரிந்ததாக தெரிவித்தார்கள். அதன் பாதைக்கு அருகில் இருந்த சிலர், அது கடந்து சென்றபோது வெப்பமாக உணர்ந்ததாகக் கூறினார்கள்.
அந்தப் பகுதியில் பிறகு தேடிப் பார்த்தபோது, கோழிகுண்டு அளவிலான, வெடிப்பில் சிதறிய அந்த விண்கல்லின் சிறுசிறு துண்டுகள் கிடைத்தன.
பட மூலாதாரம், UGC
படக்குறிப்பு, ரஷ்யாவில் 2013ஆம் ஆண்டு 100 கி.மீ பரப்பளவுக்கு இந்த விண்கல் வெடிப்பு தெளிவாகத் தெரிந்தது
வியாழன், செவ்வாய் ஆகிய கோள்களுக்கு இடையே சுற்றிக்கொண்டிருந்த ஒரு விண்கல்தான் பாதை மாறி பூமியை நோக்கி வந்தது என்றும், அதுவே இந்தச் சம்பவத்திற்குக் காரணம் என்றும் விஞ்ஞானிகள் கண்டறிந்தனர்.
வியாழன் கோளின் ஈர்ப்புவிசையால் சிறிதளவு தள்ளப்பட்ட அந்தப் பெரிய விண்கல், பாதை விலகி பூமியை நோக்கிய திசையில் பயணிக்கத் தொடங்கியது பின்னர் கண்டுபிடிக்கப்பட்டது.
பூமியின் மேற்பரப்பில் இருந்து 30கி.மீ தொலைவில் இந்த விண்கல் வெடித்த நிகழ்வில், கிட்டத்தட்ட 400-500 கிலோ டன் டி.என்.டி வெடிபொருட்களுக்கு நிகரான ஆற்றல் இதிலிருந்து வெளிப்பட்டதாக விஞ்ஞானிகள் கணக்கிட்டனர்.
இதேபோல, 1908ஆம் ஆண்டில் சைபீரிய பகுதியில் உள்ள துங்குஸ்கா என்ற இடத்தில் ஒரு சம்பவம் நடந்ததாகக் கருதப்படுகிறது.
துங்குஸ்காவில் மோதிய விண்கல் 65 மீட்டர் விட்டம் கொண்டது. செல்யாபின்ஸ்க் பகுதியில் பாதிப்பை ஏற்படுத்திய விண்கல் 20 மீட்டர் விட்டமுள்ளது.
இவை, நியுயார்க் நகரின் 443 மீட்டர் உயரமுள்ள எம்பயர் ஸ்டேட் கட்டடம், பாரிஸில் உள்ள 324 மீட்டர் உயரமான ஐபில் டவர் ஆகியவற்றைவிடச் சிறிதாகத் தெரியலாம்.
ஆனால், கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது என்பதற்கு ஏற்ப, மிக அதிக அளவிலான ஆற்றலை வெளிப்படுத்தி, சேதங்களை விளைவித்தன.
படக்குறிப்பு, வியாழன், செவ்வாய் ஆகிய கோள்களுக்கு இடையே சுற்றி வந்த ஒரு விண்கல் பாதை மாறி பூமியை நோக்கி வந்ததே 2013 ரஷ்யா நிகழ்வுக்குக் காரணம்
டைனோசர்களின் பேரழிவுக்கு வித்திட்ட சம்பவம்
பூமியில் பல்வேறு காலகட்டங்களில் அவ்வப்போது இவ்வாறான விண்கற்கள் விழுந்து கொண்டுதான் இருக்கின்றன. அப்படித்தான் சுமார் 6.6 கோடி ஆண்டுகளுக்கு முன்பும் ஒரு சம்பவம் நடந்தது.
அப்போது, மெக்சிகோவின் கிழக்கு கடல் பகுதியில் 10-15கி.மீ விட்டம் கொண்ட ஒரு மிகப் பிரமாண்டமான விண்கல் பூமியில் மோதியது. அதன் தொடர்ச்சியாக ஏற்பட்ட பிரளயத்தில் அதுவரை கோலோச்சி வந்த டைனோசர்கள் முற்றிலுமாக அழிக்கப்பட்டன.
அவை மட்டுமல்ல, 25 கிலோவுக்கும் மேல் எடை இருக்கக்கூடிய நீர், நிலவாழ் பெரிய உயிரினங்கள் அனைத்துமே அழிக்கப்பட்டன. ஆனால், விண்கல் மோதலால் இதுபோன்ற பிரளயங்கள் நிகழ்வதற்கான வாய்ப்புகள் மிக மிக அரிது என்று விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
ஆரம்பத்தில் கூறிய குஜராத் பள்ளத்தைப் போல பூமியில் சுமார் 200 இடங்களில் விண்கல் விழுந்தமைக்கான வடு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இவற்றை ஆராய்ந்து, பூமியில் விண்கல் விழுவதற்கான வாய்ப்புகள் எந்த அளவுக்கு உள்ளன என்பதைக் கண்டறிந்துள்ளார்கள்.
பல தருணங்களில் வானத்தில் எரிகல் நிகழ்வுகளைக் கண்டிருப்போம். அதாவது வானில் நிறைய ஒளிக்கீற்றுகள் தென்படுவதைப் பார்த்திருப்போம். அவை எரிகல் பூமியில் விழும் நிகழ்வின் விளைவு.
சின்னச் சின்ன அளவிலான எரிகற்கள் பூமியில் வந்து விழுவதையே எரிகல் நிகழ்வு என்று குறிப்பிடுகிறார்கள். இப்படியான எரிகற்கள் ஒரு நாளைக்குப் பல வந்து விழும். ஆனால், புவி வளிமண்டலத்தில் உள்ள காற்றின் மீது உராயும்போது அவை எரிந்துவிடுகின்றன.
எடுத்துக்காட்டாக, உங்கள் இரு கைகளையும் சேர்த்து நன்கு தேய்த்துப் பாருங்கள். கை சூடாவதை உணர்வீர்கள் அதுதான் உராய்வு. அதேபோல எரிகற்கள் காற்றுடன் உராய்கின்றன. அப்போது ஏற்படும் வெப்பம் அவற்றை எரித்து விடுகின்றன. அப்படி எரிவதுதான் ஒளிக்கீற்றாக வானில் தென்படுகிறது.
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, டைனோசர்களின் பேரழிவுக்கு வித்திட்ட அளவிலான விண்கல் சில கோடி ஆண்டுகளில் ஒருமுறை என மிக மிக அரிதாகவே நடப்பதாக விஞ்ஞானிகள் கணித்துள்ளனர்.
பூமியில் தினசரி விழும் விண்கற்கள்
ஒரு நாளைக்கு 44,000 கிலோ விண்கற்கள் பூமியில் வந்து விழுகின்றன. சின்னச் சின்ன மணல், கல் போன்ற எரிகற்கள் பூமியில் தினசரி வந்து விழுகின்றன.
ஆனால், 50 மீட்டர் விட்டம் கொண்ட ஒரு விண்கல் பூமியை நோக்கி வந்தாலும்கூட, அது வளிமண்டலத்திலேயே எரிந்து சாம்பலாகிவிடும். அதுதான் ரஷ்யாவிலும் நடந்தது.
ஒருவேளை சுமார் 75மீட்டர் விட்டமுள்ள ஒரு விண்கல் பூமியில் மோதினால், அதனால் ஒரு சிறிய நகரை தரைமட்டமாக்க முடியும். ஆனால், இதுபோன்ற சம்பவங்கள் ஆயிரம் ஆண்டுகளுக்கு ஒருமுறையே நிகழக்கூடும்.
அதேநேரம், நூறு முதல் ஆயிரம் மெகாடன் ஆற்றலை வெளிப்படுத்தவல்ல சுமார் 160 மீட்டருக்கும் அதிகமான விட்டத்தைக் கொண்ட ஒரு விண்கல் பூமியில் மோதினால், சென்னை, டெல்லி போன்ற மெட்ரோ நகரங்களே தரைமட்டமாகிவிடும்.
இருப்பினும் கணிப்புகளின்படி, இத்தகைய சம்பவங்கள் ஐந்தாயிரம் ஆண்டுகளுக்கு ஒருமுறையே நடக்க வாய்ப்புள்ளது.
பூமியில் விழுந்தால் ஒரு மாவட்டத்தையே அழித்துவிடும் அளவிலான, சுமார் ஆயிரம் முதல் பத்தாயிரம் மெகாடன் ஆற்றலை வெளிப்படுத்த வேண்டுமெனில், ஒரு விண்கல் 350 மீட்டருக்கும் மேல் பெரிதாக இருக்க வேண்டும். அப்படிப்பட்ட ஒரு நிகழ்வு நடப்பதற்கான வாய்ப்பு 15,000 ஆண்டுகளுக்கு ஒருமுறைதான் என்று கணிப்புகள் கூறுகின்றன.
பூமியின் அரணாகச் செயல்படும் நிலா
இதுபோன்ற விஷயங்களில் பூமியின் பாதுகாப்பு அரணாக நிலா செயல்படுகிறது. பூமிக்கு வரும் அடிகளைத் தாங்கிக் கொள்வதன் மூலம் பெரும் பகுதி விண்கல் மோதல்கள் நிகழாமல் அது தடுக்கிறது.
பூமியின் பக்கமாக வரக்கூடிய விண்கற்களைத் தன் பக்கம் ஈர்த்து, அந்த அடிகளைத் தானே தாங்கிக் கொள்கிறது. அதனால்தான் நிலவில் விண்கல் மோதல்களால் உருவான கின்னக் குழிகள் இருக்கின்றன.
புவியில் இருந்து பார்த்தால் தெரியாத நிலாவின் மறுபக்கத்தில் பார்த்தால் பிரமாண்டமான கின்னக் குழிகள் இருக்கின்றன. அவையெல்லாம் பூமியில் மோதிவிடாமல் நிலா பாதுகாத்து நிற்கிறது.
இந்தக் காரணத்தால், டைனோசர்களையே அழித்த 10-15கி.மீ விட்டம் கொண்ட பிரமாண்ட விண்கல் பூமியின் மீது மோதுவதற்கான வாய்ப்புகள் சில கோடி ஆண்டுகளுக்கு ஒருமுறைதான்.
ஆனாலும், அப்படிப்பட்ட ஓர் ஆபத்து வர வாய்ப்புள்ளதா என்பதை முன்னமே தெரிந்துகொண்டு, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமென்ற நோக்கத்துடன் விஞ்ஞானிகள் உள்ளனர்.
அதற்காக, பூமிக்கு அருகிலுள்ள விண்கற்கள் அனைத்தும், எந்தத் திசையில் நகர்கின்றன, பூமியில் மோத வாய்ப்புள்ளதா என்பனவற்றைத் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு