2 weeks 1 day ago
தவறான புரிதல் தவறான புரிதல் தம்பி நம் சுயநலத்திற்காக அவர்களை அழைக்கிறோமே தவிர...? அதற்காக மட்டுமே அவ்வுதாரணம்.
2 weeks 1 day ago
இல்லை ஐக்கிய அமெரிக்க நாட்டில் இருந்து அரிப்பு, சிலாவத்துறை, முந்தல் போன்ற பதங்கள் பாவிக்கப்பட்டதால், பாவிப்பவரின் முன்னைய யோக்கியதை என்ன எனபதை நினைவூட்டினேன். அதை மறுக்க திராணி இல்லைதானே? அதன் கீழ் தலைப்பை ஒட்டி கருத்தும் எழுதியுள்ளேன். வாசிப்பு மங்குகிறதோ?
2 weeks 1 day ago
@ரசோதரன் அண்ணை நீங்கள் குறிப்பிட்டுள்ள படி அவர்களுக்கான தீர்வு அவர்களுடைய நிலையான (sustainable) பொருளாதார முன்னேற்றத்துடன் கூடிய கெளரவமான சமூகப் பங்காளிகளாக வாழக்கூடிய தீர்வாக இருக்க வேண்டும். இதையே இயற்கைப் பேரிடர்களின் தாக்கம் குறைவாகவும் மற்றும் வாய்ப்புகள் அதிகமாகக் கிடைக்கக்கூடியதாகவும் வடக்கில் அவர்களைக் குடியிருத்த முடியும் என்றால் அது ஆங்கிலேயர் அவர்களைக் குடியிருத்தியது போல் அல்ல என்பது என் தாழ்மையான அபிப்பிராயம். ஆங்கிலேயர் செய்தது தமது பலனுக்காக, ஆனால் இது அவர்களுடைய நன்மைக்காகவும் பாதுகாப்பான எதிர்காலத்துக்காகவும். எடுத்ததெற்கெல்லாம் வெள்ளைக்காரன் நிறவெறி பிடித்தவன் என்று கூப்பாடு போடும் தமிழர்கள் தமது முதுகையும் கண்ணாடி கொண்டு பார்த்துக் கொஞ்சம் ஆதிக்க மனப்பான்மையிலிருந்து வெளிவர வேண்டும்.
2 weeks 1 day ago
பேசுறவனுக்கும் தெரியும் என்ன பேசுகிறோம் என்று கேட்பவனுக்கும் தெரியும் என்ன கிடக்கிறோம் என்று. அது புட்டினுக்கு மட்டும் தெரியாமல் இருக்கும் என்பதுதான் தற்போதைய உலக அரசியலை நகைப்புக்கிடமாக்கி உள்ளது. எதோ ஒன்றை எழுதி ஒரு 4-5 மாதம் சும்மா இருந்தார்கள் என்றால் தலைவர் ட்ரம்மிற்கு உக்ரைப்போரை நிறுத்திய செம்மல் என்று படடம் கிடைத்துவிடும் அதை தொடர்ந்து அந்த நோபல் பரிசையும் கொடுத்தால் ஐரோப்பியாவிற்கு வரி விலக்கும் வந்துவிடும். இவர்க்ளின் எந்த ஆடடத்திற்கும் கிரிமியாவை ரசியா ஒருபோதும் விட்டுக்கொடுக்க போவதில்லை. க்ரீமியாவை வைத்திருந்தாலே கடலை ரஸ்யா பூரண கண்காணிப்பில் வைத்திருக்கும் அதை ரஸ்யா விட்டுக்கொடுக்க போவதில்லை என்பது இவர்களுக்கும் தெரியும். ஆனால் இவர்கள் இலக்கு க்ரீமியாவை தட்டி பறிப்பதுதான் அங்குதான் முக்கிய பேச்சுக்கள் தொடங்கும். இப்போதே இவர்களின் இராணுவ முழு பலமும் அங்குதான் இருக்கிறது அது சின்ன பிள்ளைக்கே தெரியும் அதை வைத்து இனி ரஸ்யாவிற்கு பூச்சாண்டி காட்டிட முடியாது. இந்த இடைவெளியில் நாம் வெனிசுவேலாவை களவாடலாம். ஐக்கிய ராச்சியத்தில் இவ்வளவு கருத்து பஞ்சமா? தலைப்பு : நேட்டோவில் இணையும் முயற்சியை கைவிட தயாராக உள்ளோம் - உக்ரைன் ஜனாதிபதி
2 weeks 1 day ago
பிந்தி வந்த செய்திகள் அதிபர் ட்ரம்ப் 'பிளாட்டினம் பாதுகாப்பு உத்தரவாதம்' ஒன்றை உக்ரேனுக்கு வழங்கவுள்ளார் என்று சொல்கின்றன. இந்த திட்டத்தை அவர் அமெரிக்க காங்கிரஸின் முன் கொண்டு செல்லப் போகின்றார் என்றும் செய்தியில் இருக்கின்றது. ஆனால் இந்த உடன்படிக்கை முழுவதையும் ரஷ்ய அதிபர் புடின் முற்றாக நிராகரிக்கப் போகின்றார். அவர் எந்த உடன்படிக்கையையுமே நிராகரிப்பார், ஆனால் இது என்ன உடன்படிக்கை............ ரஷ்ய அதிபரைப் பார்த்தால் அமெரிக்காவுக்கும், ஐரோப்பாவுக்கும், உக்ரேனுக்கும் ஒரு கோமாளியாகத் தெரிகின்றாரா...................... மூன்று வருட சண்டைக்கு பலனாக ஒரு கொஞ்சமாவது ரஷ்யாவுக்கு விட்டுக் கொடுக்க வேண்டாமா.................
2 weeks 1 day ago
இதனால்தான் சொல்கிறேன் சிங்களவர் கூர்ப்பில் முன்னேறிய இனம். இதை சொன்னால் கூட விளங்கி கொள்ள முடியாது ஈழதமிழ் சுண்ணாம்பு குவளைகளால்.
2 weeks 1 day ago
Pedo க்களை ஆதரித்து யாழில் கருத்து எழுதும், பெட்டியில் ஏறும் வயதில், மகள் வயது நடிகைகள் மீது ஜொல்லு வழிக்கும், பீடோ ஆதரவு மாமாக்களிடம் அரிப்பு பற்றிய தகவல்கள் அபரிமிதமாக இருப்பது வியப்பல்ல. ஆனால் எமது விடுதலை போராட்டத்தையும், இதே போல் “இந்தியாவின் துண்டுதலால், புலிகள் “அரிப்பு” எடுத்து நடத்தினார்கள் என எழுதுவோரும் உளர். தேசிய இனங்களின் சுயநிர்ணயத்துக்கான “வேட்கை” சகல இனவழி தேசிய இனங்களுக்கும் ஒன்றே. எமக்கு வந்தால் விடுதலை வேட்கை, உக்ரேனியனுக்கு வந்தால் அரிப்பு என்பது வடிவேல் ஜோக்
2 weeks 1 day ago
இன்று யேர்மனி, பேர்லினில் நடைபெற்ற தலைவர்கள் சந்திப்பில் எடுக்கப்பட்ட முடிவுகள் வெளியாகியிருக்கின்றன. அதன் சுருக்கம், ஐரோப்பிய நாடுகள், அமெரிக்க ஆதரவுடன், உக்ரைனுக்காக ஐரோப்பிய தலைமையிலான ஒரு பன்னாட்டுப் படையை அமைக்க உறுதியளித்துள்ளன. இந்தப் படை உக்ரைன் இராணுவத்தை மீண்டும் வலுப்படுத்த, வான்வெளி மற்றும் கடல்களைப் பாதுகாக்க உதவும். எதிர்காலத்தில் உக்ரைன் இராணுவம் சுமார் 8 லட்சம் வீரர்களைக் கொண்டிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. மேலும், அமெரிக்கா தலைமையிலான போர்நிறுத்த கண்காணிப்பு அமைப்பு முன்மொழியப்பட்டுள்ளது. இது ரஷ்ய தாக்குதல்களுக்கு முன் எச்சரிக்கை வழங்கவும், போர்நிறுத்த மீறல்களை கண்டறியவும் பயன்படும். முடக்கப்பட்ட ரஷ்ய சொத்துகளை உக்ரைனுக்குப் பயன்படுத்தும் எண்ணத்தையும் ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது. போரைக் முடிக்க உக்ரைனுக்கு வலுவான பாதுகாப்பு உத்தரவாதங்களும், பொருளாதார மறுசீரமைப்புக்கான உதவியும் தேவை என்று அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் உக்ரைன் ஒருமித்த கருத்து தெரிவித்துள்ளன. ரஷ்யா அமைதிக்குத் தயாராகி, டிரம்பின் அமைதித் திட்டத்தையும் போர்நிறுத்தத்தையும் ஏற்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. இதற்காக ரஷ்யாவிற்கு மேலதிக அழுத்தம் கொடுக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது ஆனால், இந்தத் திட்டங்களை அமெரிக்கா முழுமையாக ஏற்றுக்கொள்ளுமா என்பதும், உக்ரைனில் வெளிநாட்டு படைகள் இருப்பதை ரஷ்யா ஏற்குமா என்பதும் இன்னும் தெளிவில்லை.
2 weeks 1 day ago
ஓடு பாதைக்கு எப்ப சார் கல்லு நாட்டுவீர்கள்.
2 weeks 1 day ago
வடகிழக்கில் நடந்தது ஒரு ஆயுதப் போராட்டம்... பல வருடங்கள் இது தொடர்ந்திருந்தாலும் என்றாவது ஒரு நாள் ஒரு முடிவுக்கு வரும்.. வந்தது!! ஆனால் மலையகத்தில் நடப்பது வாழ்நாள் போர் 200 ஆண்டு காலம் ஆகியும் முடிவு இல்லாத வாழ்க்கை போர். ஒரு இனத்தை இன்னொரு இனம் அழிக்கும் போர். 200 ஆண்டு காலம் என்பது எத்தனை தலைமுறைகள்? அங்கேயே அந்த மண்ணிலே பிறந்து, வளர்ந்து அங்கேயே உழைத்த மக்களுக்கு உரிமை கிடைக்காது என்பது எப்படிப்பட்ட கொடுமை. மாட்டுக்கு கொம்பு முளைக்கும் முன்பே நம்மை முட்டாமல் இருக்க, அது பிறந்ததும் சூட்டுக்கோளால் கொம்பு முளைக்கும் இடத்தில் தீச்சு விடுவதும் அடுத்தது பருவத்துக்கு வரும் முன்னால் காய் அடித்து ஆண்மை நீக்கி வேலையில் கட்டி வசக்கிவிட்டால் வாழ்நாள் பூராவும் அதே வேலை வாங்கலாம். உரிமையை அபகரிப்பதும் காய அடிப்பதும் ஒன்றுதான். அந்த மக்கள் தொகையை அதிகமாகாமல் தமிழினம் பெருகாமல் பார்த்துக் கொள்வதும் ஒன்றுதான். பிரித்தானிய காலனித்துவவாதிகளால் பிழைப்புக்காக தமிழ்நாட்டில் இருந்து இலங்கைக்கு வந்த நாள் முதல் இந்த நாள் வரை அவர்கள் அடைந்த வாழ்வியல் துயங்கள் அதற்கான காரணிகளான தேசிய புறக்கணிப்பு, அரசியல் புறக்கணிப்பு, குடியுரிமை பறிப்பு, நாடற்ற நிலை, நாடு கடத்தல், பதிவு குடியுரிமை, வசிப்பிட குடியுரிமை, திட்டமிட்ட கருத்தடை, கூடிசன குறைப்பு, நிலமற்ற நிலை, வீடற்ற நிலை, பொருளாதார ஒடுக்குமுறை, கல்வியொடுக்குமுறை, உள்ளூர் ஆட்சிக்குள் உள்வாங்காத ஒதுக்கு முறை, இம்மக்களின் வாழ்விடங்களை வணிக நிலம் ஆக்கி கம்பெனிக்காரர்களுக்கு நூறு ஆண்டு கால குத்தகைக்கு கொடுத்து விட்டமை, இம்மக்கள் வாழ்ந்த பல பெருந்தோட்டங்களை சுவைகரித்து சிங்கள மக்களுக்கு சிறு தோட்ட உடைமையாளர்களாக கொடுத்து விட்டமை, இதனால் வாழ்விடங்கள் இழந்து வசிப்பிட தொழிலாளர்களாக காலனித்துவவாதிகள் கட்டிப்போட்ட அதே 200 ஆண்டுகால வரிசை லயங்களில் வாழும் நிலை என பல்வேறு நெருக்கடிகளை இன்றும் அந்த மக்கள் எதிர்கொண்டு வாழ்ந்து வருகிறார்கள். இன்றும் இவர்கள் வாழும் நிலங்களை கிராமங்களாக கூட அங்கீகரிக்காமல், இம்மக்களை கிராம மக்களாக கூட ஏற்றுக் கொள்ளாமல், நாட்டு மக்கள் என்று தேசிய அந்தஸ்தை வழங்காமல் தோட்ட மக்கள் "வத்து கம்கரு" என்றே புறக்கணித்து வைத்திருக்கின்றமை என இத்தனை அரசியல் தேச வஞ்சனைகளுக்கும் முகம் கொடுத்து உரிமைக்குப் போராடாமல் மௌனித்து 200 ஆண்டுகளை வீணடித்துவிட்டு வந்தேறி குடிகளாக வருடங்களை எண்ணிக்கொண்டு வாழாமல் வாழ்ந்து கொண்டிருக்கும் மக்கள் கூட்டத்துக்கு ஈழ நிலத்தின் பூர்வீக மைந்தர்கள் என்ன செய்யலாம்; இவர்களது வஞ்சிக்கப்பட்ட வாழ்க்கையை எப்படி அனுகலாம்? ~ ஒப்பாரி கோச்சி புத்தகத்தை வாசித்து... என்னை பாதித்த வரிகளுடன் ...
2 weeks 1 day ago
நன்றி
2 weeks 1 day ago
விடுதலை போருக்கும் அடுத்தவன் அரிப்பு போருக்கும் வித்தியாசம் தெரியாதவர்கள் எதிரியாய் இருந்தாலும் கோத்தா சொன்னால் சொல்வதை பார்த்து அப்படியே பற்றிக்கொள்ள வேணுமாம். அடுத்தவன் சொன்னால் சொன்னவர்கள் கருத்தை விட்டுவிட்டு எங்கே சுச்சா போனார்கள் எப்போ போனார்கள் எங்கே போனார்கள் என்று என்று பிரிச்சு மேய்ந்து அக்குவேறு ஆணிவேறாக பார்க்கவேண்டும். அப்போதான் அது இனிக்கும்
2 weeks 1 day ago
வீட்டில் புட்டு அவிப்பதைத் தவிர மற்ற சமையல் எல்லாம் நான் தான்.🤫 இனி புட்டு அவிப்பதையும் பழகவேண்டியதுதான்.🤣
2 weeks 1 day ago
நீங்கள் இப்ப நியூயோர்க்கா? எப்படிச் சமாளிக்கிறீர்கள்😇?
2 weeks 1 day ago
ஊழல் மாடும் உள் ஊரில்தான் உழுகுது .......... அதுதான் வறுமை நீளுது
2 weeks 1 day ago
எல்லாவற்றையும் வாசிக்க நேரம் போதவில்லை இணைப்புக்கு நன்றி
2 weeks 1 day ago
👍 இதைத் தான் நானும் எழுத நினைத்தேன்: "நாங்கள்" 2002 இல் கூட்டுத் தலைமை பாலசிங்கத்தார் மூலமாக எச்சரிக்கை கொடுத்த பின்னரும் போராடியது வீரம்! அதையே முழுமையான சுதந்திர நாடாக 30 ஆண்டுகள் வரை இருந்த உக்ரைனின் ஒரு தலைவர் செய்தால் "கோமாளித் தனம்". இதைச் சொல்வோர் ஆமி சுடாத ஷொட் கண்ணோட ஜீப்பில் திரிந்த காலத்திலேயே ஐரோப்பாவுக்குப் பறந்த ஆட்கள். இன்னும் சிலர், உயிர் காக்க ரஷ்யாவூடாக தப்பி, அமெரிக்காவில் வந்து லேண்ட் ஆன ஆட்கள்! இன்னும் என்னவெல்லாம் கேட்க வேண்டுமெண்டு எங்களுக்குச் சபிச்சிருக்குதோ தெரியேல்ல🤔!
2 weeks 1 day ago
ஆள் நடமாடடம் இல்லாத வன்னி அக்கரையானில் கொரோன தொற்றை கட்டுக்குள் கொண்டுவந்த மதிப்பிற்கும் மரியாதைக்கும் உரிய மாண்புமிகு கோத்தபாய ஐயா அவர்களுக்கு அண்ணளவாக 8.5 மில்லியன் மக்கள் வாழும் நியூ யார்க் நகரில் இருந்து எனது வாழ்த்துக்களை நான் தெரிவித்து கொள்கிறேன்.
2 weeks 1 day ago
90 களில் 15 ஆயிரம் என்பது சாதாரண வக்கீல் கூலி தானே? ஓ.சியில் கூப்பன் அரிசி, மண்ணெண்ணை கிடைக்கலாம், வழக்குப் பேச வக்கீலும் ஓ.சியில் வேண்டுமென்றால் என்ன மன அமைப்பய்யா இது😂? உங்களுக்கு கண்ணதாசன் என்ற புலிகளுக்கு ஆட் சேர்த்தார் என்ற பெயரில் கைதான ஒரு அரசியல் கைதியை சுமந்திரன் ஆஜராகி விடுவித்த செய்தி தெரியாதா? 2010 இல் அரசியலுக்கு வருவதற்கு முதலே சுமந்திரன் சில அரசியல் கைதிகள் வழக்கில் ஆஜராகி இருக்கிறார்! நீங்கள் என்னவென்றால் தகவல் ஏதுமில்லாத வெறுமையில் இப்படி அளந்து விடுகிறீர்கள்?
2 weeks 1 day ago
அப்படி நாங்களே கேட்க தொடங்கினால்............ உலகத்தில் உங்களுக்கு என்ன மரியாதை? உங்களைப்போன்ற அறிவாளிகள் பிறந்த இனத்தின் பிறந்தோம் என்ற இன்பமே எங்களுக்கு அனுபவித்து முழுவதுமாக களிப்புற ஆயுள்காலம் போதவில்லை. இதில் வேண்டாத வேலைகள் எதற்கு நமக்கு? நீங்களே கேளுங்கள் ...... நீங்களே செல்லுங்கள் உங்கள் நிழலில் நாங்கள் நடந்து வருகிறோம்.