2 weeks ago
ஈழப்பிரியன் அண்ணா மட்டும் தான் இங்லாந் வெல்லும் என தெரிவு செய்து இருக்கிறார்😁............ மற்றவை எல்லாம் அவுஸ்ரேலியா வெல்லும் என தெரிவு செய்து இருக்கினம்.................................................
2 weeks ago
நாளைக்கு நல்ல மைச் அவுஸ்ரேலியா எதிர் இங்லாந்........................
2 weeks ago
இந்த விடயத்தில் எப்படி சம்பந்தப்பட்ட இருதரப்பும் தங்களில் பிரச்சினை இல்லை என நிறுவ முயற்சிப்பதாலேயே இது ஒரு தொடர்கதையாக தொடரும் நிலை உருவாகிறது. ஒரு தரப்பு தமது தரப்பு தவறினை ஒப்புக்கொண்ட பின்னரும்; அவர்கள் சார்ந்தவர்கள் அதனை நியாப்படுத்த முனைகின்றனர், மறு தரப்போ தம்மீது எந்த தப்புமில்லை என பூனை கண்ணை மூடிக்கொண்டு பாலைக்குடிப்பது போல முயற்சிக்கிறார்கள், பிரச்சினைக்கான தீர்வு காண்பதற்கு பிரச்சினைக்கான மூல காரணம் அறியப்பட வேண்டும் ,ஆனால் இங்கு அதனை வெளிக்கொணர சம்பந்தப்பட்ட தரப்புக்கள் விரும்பாத போது; இது போல பிரச்சினைகள் சமூகங்களிடையே மீண்டும் மீண்டும் எதிர்காலத்திலும் தோன்றும். ஒரு சிலரின் செயல்களை ஒரு சமூகத்தின் மீது சுமத்துவதனை என்னவென்று கூறலாம்?
2 weeks ago
போட்டியினை நடத்துபவர்கள் விதியினை உருவாக்குகிறார்கள், அவர்களது வசதிக்கேற்ப என கருதுகிறேன். நானும் உங்களை போலவேதான் எனக்கும் பெரிதாக ஒன்றும் தெரியாது இந்த விதிகள் பற்றி, அத்துடன் யார் இது பற்றிக்கவலைப்படுகிறார்கள்? பையன் விதிகளை பற்றி கேட்ட பின்புதான் விதிகளை பற்றியே சிந்திக்கும் நிலை உருவாகியது.
2 weeks ago
வினா 23) 150 ஓட்டங்களால் பாகிஸ்தான் அணியை தென்னாபிரிக்கா தோற்கடித்திருக்கிறது. 14 போட்டியாளர்கள் சரியாக பதில் அளித்திருக்கிறார்கள். 1) அகஸ்தியன் - 46 புள்ளிகள் 2) ரசோதரன் - 43 புள்ளிகள் 3) ஏராளன் - 41 புள்ளிகள் 4) ஆல்வாயன் - 41 புள்ளிகள் 5) வீரப்பையன் - 40 புள்ளிகள் 6) சுவி - 39 புள்ளிகள் 7) கிருபன் - 39 புள்ளிகள் 8) புலவர் - 39 புள்ளிகள் 9) நியூபலன்ஸ் - 39 புள்ளிகள் 10) செம்பாட்டன் - 37 புள்ளிகள் 11) ஈழப்பிரியன் - 37 புள்ளிகள் 12) வாதவூரான் - 35 புள்ளிகள் 13) கறுப்பி - 35 புள்ளிகள் 14) வசி - 33 புள்ளிகள் 15) வாத்தியார் - 29 புள்ளிகள் இதுவரை வினாக்கள் 1 - 23, 32(3/4), 41, 42 க்கு புள்ளிகள் வழங்கியுள்ளேன். (அதிக பட்ச புள்ளிகள் 50).
2 weeks ago
சொன்னாலும் வெட்கமடா சொல்லாவிட்டால் துக்கமடா படம் முத்துமண்டபம்
2 weeks ago
நாங்களும் அக்கா தங்கை அயலவர்களுக்கும் பொடிகார்டாக இருந்திருக்கோம்ல ........! பழைய நினைவுகளைக் கிளறுகின்றது . .......எனக்கென்னமோ சாண்டில்யனின் "கடல்புறா " "யவனராணி " என்றால் மிகவும் பிடிக்கும் . .....அலுக்காமல் வாசிக்கலாம் ..........! 😇
2 weeks ago
உண்மையை இடித்துரைத்ததிற்கு நன்றி ....இந்த செய்தி அவர்களால் இங்கு எறியப்பட்டதிற்கே ...இங்கு பதியப்படும் செய்திகளை நியாயப்படுத்த உதவ...நம்ம இனமோ ..அரிச்சந்திரன் கணக்கா ..வாய்மையே வெல்கின்றோம் ..நாங்கள் எப்படி நீதியாய் நடந்தாலும் ...அவர்கள் ..எங்களை அழிக்கும் ஆயுதமாகவே பாவிப்பார்கள்.. இல்லாத தங்கக்கதையும் ...தங்கம் மீளளிப்பு செய்ய்ப்போகினம் என்றவுடன் ..பாய்ந்து ஆராயினம் ...இதனை நாமெல்லோ உணரவேணும்
2 weeks ago
பிள்ளையள் ஒயில் கிழவனுக்கு கல் எறிய வேண்டாம்…பாவம்.😂 கள்ளனே மனிசியையும் கூட்டி கொண்டு நாட்டை விட்டே ஓடீட்டான் 😂. வீட்டையும் விக்க போட்டுட்டு. ஒயில் ஓல்ட் மான் எண்ணையை பூசிகொண்டு ஒரே அலப்பறை😂
2 weeks ago
மிக நியாயமான கேள்வி. அண்மைய அமைச்சரவை மாற்றம் மூவரை உள்வாங்கி உள்ளது. ஆனால் இன்னும் ஒரு வட மாகாண தமிழர் இல்லை. அனுரவுக்கு அவர்களின் குணமும் தெரியும் போல 😂
2 weeks ago
இல்லை என்பதே சுருக்கமான பதில். நீங்கள் கணக்கியல் கோணத்தில் மாட்டும் பார்ப்பது. நான் கணக்கியலையம் உள்ளடக்கி அனுபவம், பிரயோகம். அறிவு. risk profile, risk apatite Hedging / forwarding risk analysis, modelling, technical and fundamental analysis இவை வேறு துறைகளிலும் இருக்கிறது, கணக்கிய்யலில் மட்டும் என்று இல்லை. அனால், நான் hedge செய்வது குறிப்பிட்ட முயதற்சியில் செய்வது . இதன் விபரத்தை சொல்ல முடியாது, ஏனெனில் அது எனது தனிப்பட்ட முயற்சி மட்டும் இல்லாது, எனது முயற்சியின் அனாமதேய அம்சங்களையும் சொல்ல வேண்டும். நிதி சூழ்நிலையில் hedge பண்ணுவது, திட்டமிட்டு எடுத்து இருக்கும் திசைக்கு எதிராக சந்தையோ அல்லது இலையின் திசையோ மாறினால் இழப்பை ஈடு செய்யஅல்லது குறைக்க . forwarding ( அல்லது forward contract) ஒரு வழி. வேறு வழியும் இருக்கிறது. நிறுவனங்கள் பெரிய scale இல் custom-contract , வேறு வேறு (நிதி) கருவிகளை கலந்து பாவித்து செய்யும். முக்கியமாக, நான் சொல்லியது சூழ்நிலைக்கு சரி. அப்படி அவர்கள் எரிபொருள் மொத்தமாக வாங்கும் போது அல்லது விற்கும் பொது அவர்களின் ஓப்பந்த விலைக்கு எதிராக சந்தை அல்லது விலை திரும்பினால், இழப்பு வரும். அதை ஈடு செய்யுயும் நோக்கிலும் அவர்கள் ஆயில் trading செய்வது . எப்படியான contract ஐ பாவிப்பது எனது நிலைமையே (technical analysis ஐயும், fundamental analysis ஐயும், அனுபவத்தையும் கொண்டு ) தீர்மானிப்பது மற்றவற்றையும், இப்படி விளங்கப்படுத்த முடியும், அனால் நேரம் இல்லை. நான் சோழிய சூழ்நிலைக்கு கடன் கொடுக்கும் போது risk profile, appetite, tolerance, threats (assement) போன்ற பலவற்றை quantitative ஆகவும், qualitative ஆகவும் ஆய்ந்தே வங்கிகள் முடிவுகளை எடுப்பது. அதில் risk analysis ஒரு பகுதி ஆய்ந்த பின் modelling, குறித்த எதிர்பார்த்த நிகழ்வுகள் நடப்பதற்கன எகிர்வு கூறலுக்கு. risk மேனேஜ்மென்ட் இல் ஒரு பகுதி. இதை விட residual risk (analysis) க்கும் கருத்தில் எடுக்கப்படும் அதே போல நிறுவங்களும், 'முதலிடும்' (இங்கு பணம் மட்டும் அல்ல. உ.ம் தொழில் நுட்ப தேர்வு) போது செய்வது. முக்கியமாக நான் சொல்வது, கணக்கியலையும் உள்ளடக்கி. இதை தவறாக நான் பவிக்கவில்லை, வாங்கும் போது, விற்றபனை யாளருக்கு, வாங்குபவர் குறித்த நிபந்தகனைகளை விற்றுபவர் நிறைவேற்றினால், (வாங்குபவர் பணம் கொடுக்காவிட்டாலும்), விற்றுபவருக்கு பணம் கிடைக்கும் என்பது. (கிட்டத்தட்ட மோர்ட்கேஜ் போலவே தொழிற்பாடு, மோர்ட்ககே இல் பகுதி கடநனாக இருக்கும், இதில் அப்படி கடன் பெறுவது மிக அரிது ) அந்த letter of credit இ பெறுவதத்திற்கு ஒப்பந்தத்தின் 50% மற்றும் பல்வேறு கட்டணங்கள் தொகையையும் வாங்குபவர் வங்கிக்கு குறித்த account இல் வைப்பிட வேண்டும். இதில் அப்படி ஒன்றும் சிறப்பு இல்லை சிறப்பு, வங்கி நோகாமல், அதன் எந்த பணத்தையும் அசைக்காமல், கட்டணம் பெறுவது. ஏனெனில். ஆயில் இல் வாங்குபவர் பொதுவாக முழுமையாக கொடுப்பார், கடன் எடுப்பது மிக குறைவு. வேண்டும் என்றால், (வாங்குபவருக்கு மிகுதி 50% ) வங்கி கடனாக கொடுக்கும். அனால் , இது அரிது எண்ணெய் வாங்குதலில். ஏனெனில், எண்ணெய் margin / spread மிக இறுக்கம் கடன் எடுத்தால் இலாபத்தை தின்றுவிடும் credit rating - இதையும் தவறாக நான் பாவிக்கவில்லை, ஒரு நாட்டின் credit rating உள்ளக சட்டம் மற்றும் நீதித்துறை தொழிற்பாட்டில் தங்கி இருக்கிறது. வேறு காரணிகளும் இருக்கிறது. உள்ளக சட்டம் மற்றும் நீதித்துறை ஒரு முக்கிய கரணம் வரலாற்றில் US, credit default செய்யாத ஒரே ஒரு (நவீன தேச ) அரசு இதுவரையில் என்பதற்கு. (இதை இங்குள்ள அநேகமானோர் அறிவார்கள் எதை குறிக்கிறது என்று) மற்றவைகளையும் எதை குறிக்கிறது என்று சொன்னால் விளங்கும் மிகுதியை பின்பு, எனது அனுபவம், அறிவு, பிரயோகம் போன்றவரை சொல்கிறேன்.
2 weeks ago
இந்த விளக்கம் இங்கே பலமுறை கொடுக்கபட்டு விவாதிக்கபட்ட ஒன்றுதான். ஆனால் இங்கே சிலாகிப்பது வெளியேற்றியமைக்கான காரணம் பற்றி அல்ல. மாறாக தங்கத்தை பறித்து விட்டு அனுப்பினார்களா என்பதை பற்றியே. அதை பற்றி உங்கள் கருத்தை எழுதுங்கள் ஐயா. ஏன் என்றால் இது நடந்த அதே மாதம் சரியாக நான்கு ஆண்டுகளில் ரிவிரெச ஆமி யாழைப் பிடித்த போது தமிழர்களையும் “அவர்கள் பாதுகாப்பு கருதி” புலிகள் முதலில் வரணிக்கும், பின் வன்னிக்கும் இடம்பெயர பணித்தார்கள். ஆனால் யாழ் தமிழர்கள் ஆடு மாடு கோழி, வீட்டு கதவு ஈறாக எடுத்து செல்ல அனுமதிக்கப்பட்டார்கள். இரெண்டு வெளியேற்றத்துக்கும் வித்தியாசம் உள்ளதா? அப்படியாயின்… ஏன்? அனைவரிடமும் அல்ல. கொடுக்க கூடிய தமிழரிடம் மட்டுமே மண்மீட்பு நிதி சேகரிக்கப்பட்டது. கொஞ்சம் அதட்டி வாங்கினாலும், ரசீது தந்தார்கள். சுழற்சி முறையில் அதிஸ்டசாலிகளுக்கு புலி இலச்சினை போட்டு மீளவும் அளித்தார்கள். இது தமிழரிடம். முஸ்லீம்களிடம் சுபீகரித்தார்கள் எண்டால் - அது இரெண்டு பவுணுக்கு மேலே வருமே, அதுவும் ஏழை பணக்காரன் எல்லாரிடமும்? தலைவர் இருக்கு மட்டும், அதுவும் யாழில், வன்னியில் இதுக்கு வாய்ப்பே இல்லை. அதுவும் ஊரறிய முஸ்லிகளிடம் பணத்தை, பவுனை ஒரு போராளியோ, தளபதியோ வாங்கி தம் பையில் போட்டால் - அவர் கதையே ஓவர்.
2 weeks ago
சிறுகதை: சாந்தா அக்கா! - வ.ந.கிரிதரன் - - இக்கதையில் வரும் சாந்தா அக்கா போன்ற ஒருவர் என் வாழ்க்கையிலும் இருந்திருக்கின்றார். அவர் சில வருடங்களுக்கு முன்னர் மறைந்த செய்தியினை அறிந்தபோது எழுந்த உணர்வுகளின் விளைவே இச்சிறுகதை. - 'டேய் கேசவா, சாந்தா அக்கா செத்துப் போய்விட்டாவாம். தெரியுமா?' சின்னம்மா வாட்ஸ் அப்பில் செய்தி அனுப்பியிருந்தார். அவர் என் அம்மாவின் கடைசிச் சகோதரி. இன்னும் உயிருடனிருக்கும் சகோதரி. வயது எண்பதைத்தாண்டி விட்டது. பார்த்தால் ஐம்பதைத்தாண்டாத தோற்றம். மனுசி இன்னும் காலையில் ஒரு மணி நேரம் நடை , யோகா , மரக்கறிச் சாப்பாடு, நிறைய பழங்கள் என்று வாழும் மனுசி. 'என்ன சின்னம்மா, சாந்தா அக்கா செத்துப் போய் விட்டாவா? எப்ப சின்னம்மா?' "இன்றைக்குத்தான் விடிய ஜேர்மனியிலை போய்விட்டாவாம்." "என்ன அவ ஜேர்மனியிலையா இருந்தவா? இவ்வளவு நாளும் நான் நினைச்சுக்கொண்டிருக்கிறன் அவ ஊரிலைத்தான் இன்னும் இருக்கிறா என்று. அவ எப்ப ஜேர்மனிக்குப் போனவா சின்னமா?" "அட உனக்கு விசயமே தெரியாதா? அவ ஜேர்மனிக்கு எயிட்டியிலேயே போய் விட்டாவே" 'அப்படியா சின்னம்மா, எனக்கு உண்மையிலேயே அவ ஜேர்மனிக்குப் போன விசயம் தெரியாது." சாந்தா அக்கா பற்றிய நினைவுப் பறவைகள் சிறகு விரிக்கின்றன. சாந்தா அக்கா லலிதா அக்காவின் நெருங்கிய சிநேகிதி. லலிதா என் ஒன்று விட்ட அக்கா. அவவுடைய பதின்ம வயதுகளிலை அவவைச் சுற்றி எப்போதும் சிநேகிதிகள் பட்டாளமொன்று சூழந்திருக்கும். நானோ பால்யத்தின் இறுதிக்கட்டத்தில் நின்ற சமயம். அக்காவின் சிநேகிதிகள் பலரையும் அவரவர் வீட்டுக்குக் கொண்டு சேர்க்கும் 'பொடி கார்ட்' வேலை அதாவது பாதுகாவலன் வேலை என்னுடையதாகவிருக்கும். அவர்கள் சில வேளைகளில் நகரத்துத் திரையரங்குகளில் மாட்னி ஷோ பார்த்து வருவார்கள். லலிதா அக்காவுடன் அக்கா வீட்டுக்கு வந்து ஆடிப்பாடிச் செல்வார்கள். அவ்விதம் செல்கையில் மாறி மாறி ஓவ்வொருவரையும் அவரவர் வீட்டுக்குக் கொண்டு சேர்க்க வேண்டும். இவை தவிர யாழ் பொது நூலகத்துக்குச் சில சமயங்களில் லலிதா அக்காவும் சாந்தா அக்காவும் செல்வார்கள். அப்போதெல்லாம் என்னையும் துணைக்கு அழைத்துச் செல்வார்கள். நானோ விரைவாக நடையைக் கட்டுவேன். அவர்களால் என் வேகத்துக்கு ஈடு கொடுக்க முடியாது. மூச்சிரைக்க என் வேகத்தைப் பிடிப்பற்காக ஓட்டமும் நடையுமாக வருவார்கள். 'இவனோடை நடக்க ஏலாது. ஏன்டா இப்பிடி நடக்கிறாய். கொஞ்சம் ஸ்லோவாக நடடா' என்று லலிதா அக்கா அவ்வேளைகளில் கெஞ்சுவா. நானோ அவவின் கெஞ்சலைப் பொருட்படுத்தாமல் வேகத்தை இன்னும் சிறிது அதிகரித்து நடையைப் போடுவேன். அதைப்பார்த்து சாந்தா அக்கா இலேசாகச் சிரிப்பா. அவ அவ்விதம் இதழோரத்தில் சிரித்தபடி என்னைப் பார்க்கும் தோற்றம் இன்னும் பசுமையாக என் நெஞ்சிலை இருக்குது. இவர்களில் சாந்தா அக்கா என்னைப்பொறுத்தவரையில் தனித்துத் தெரிந்தா. அவவுக்கு நான் ஒரு புத்தகப் புழு என்பது நன்கு தெரியும். அவவும் ஒரு வகையில் புத்தகப்புழுதான். கூடவே கதை எழுதும் திறமையும் அவவிடமிருந்தது. இதனால் எனக்கு அவவை வீட்டுக்கொண்டு போறதென்றால் நல்ல விருப்பம். முக்கிய காரணம் அவவை வீட்டுக்குக் கொண்டு போற சமயங்களில் அவவிடமிருந்து ஏதாவது புத்தகமொன்றை வாசிப்பதற்குத் தருவா. அதற்காகவே அவவுக்குப் பாதுகாவலாகச் செல்வதை நான் எதிர்பார்த்து விரும்பிச் செய்தேன். சாந்தா அக்கா கல்கி, குமுதம், விகடன், கல்கண்டு, ராணி போன்ற சஞ்சிகைகளில் வெளியான தொடர்கதைகள் பலவற்றை அழகாக பைண்டு செய்து வைத்திருந்தா. ஒருமுறை அவவிடமிருந்து அரு.ராமநாதனின் 'குண்டு மல்லிகை' யை எடுத்து வந்து வாசித்தேன். குண்டு மல்லிகை என்றதும் எனக்கு எப்பொழுதும் சாந்தா அக்காவின்ற நினைவுதான் தோன்றும்.அவவும் ஒருவகையில் குண்டு மல்லிகைதான். சிறிது பருமனான, நடிகை குஷ்பு போன்ற உடல் வாகு. செந்தளிப்பான முகத்தில் இரு பெரிய அழகான வட்டக் கருவிழிகள். எப்பொழுதும் புன்னகை தவழும் வதனம். இருக்குமிடத்தைக் கலகலப்பாக்கிக்கொண்டிருக்கும் ஆளுமை. இதனால் லலிதா அக்காவுக்கும் அவ மேல் அதிகப் பிரியம் இருந்தது. சாந்தா அக்கா இலங்கைத் தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் தமிழ்ச் சேவைக்கு அடிக்கடி இசையும் , கதையும் எழுதி அனுப்பிக்கொண்டிருந்தா. அவவின்ற கதைகள் பல ஒலிபரப்பப்பட்டன. நானும் சிலவற்றைக் கேட்டிருக்கின்றன். அவவின்ற வயதுக்கேற்ற காதல் கதைகளே அவை. ஒரு சமயம் அக்கா அவவை வீட்டுக்குக் கொண்டு விடும்போதுதான் எழுதி வைத்திருந்ததை எடுத்து வாசிக்கத் தந்தா. என்ன அழகான கையெழுத்து! சாந்தா அக்காவின் கையெழுத்தும் அவவைப்போல் அழகானதுதானென்று அச்சமயம் எண்ணிக்கொண்டேன். அவ்விதம் அச்சமயத்தில் எண்ணிக்கொண்டதும் இன்னும் என் நெஞ்சில் இருப்ப்பதை இத்தருணத்தில் உணர்கின்றேன். சில சமயங்களில் இவ்விதம் அடிக்கடி சாந்தா அக்காவை அவவின்ற வீடு வரை கூட்டிச் செல்வது எனக்குச் சிரமமாகவிருக்கும். வேறு ஏதாவது எனக்குப் பிடித்த விடயங்களில் ஈடுபட்டிருக்கும் தருணமொன்றாக அந்நேரம் இருக்கும். அவ்விதமான சமயங்களில் அவவைக் கூட்டிச்செல்வதற்கு எனக்கு விருப்பமில்லாதிருக்கும். அவ்விதமான சமயங்களில் என் மனநிலையை மாற்றுவதற்குச் சாந்தா அக்கா ஒரு தந்திரம் செய்வா. அக்காலகட்டட்த்தில் நான் சாண்டியல்யனின் 'கடல் புறா' நாவலைத் தேடி அலைந்துகொண்டிருந்தேன். யாழ் நூலகத்தில் நாவலின் மூன்று பாகங்களுமிருந்தன. ஆனால் அதற்கான 'டிமாண்ட்' அதிகமாகவிருந்ததால் அதற்காகப் பதிவு செய்து வைத்திருப்பவர்களுக்கே முன்னுரிமை. நானும் பதிவு செய்திருந்தேன். இரண்டு வருடங்களாகியும் கிடைத்த பாடில்லை. இதனால் அது என் கைக்கெட்டாத தூரத்தில் இருந்ததால் அதன் மீதான வெறியும் எனக்கு அதிகமாகிக்கொண்டே சென்றது. அதன் முதலிரு அத்தியாயங்களைப் பழைய குமுதம் இதழ்களில் பார்த்ததிலிருந்து, அவற்றுக்கான ஓவியர் லதாவின் இளைய பல்லவனின் ஓவியங்களைப் பார்த்ததிலிருந்து வெறி இன்னும் அதிகமாகிக்கொண்டே சென்றது. நகரிலிருந்த புத்தகக்கடையொன்றின் 'ஷோகேசில்' மூன்று பாகங்களுமிருந்தன. ஆனால் அவற்றை வாங்கும் நிலையில் நானில்லை. அப்போது அத்தொகுதியின் விலை ரூபா 115. அது எனக்குப் பெரிய தொகையாகவிருந்தது. கடல்புறா மீதான எனது ஆர்வத்தைச் சாந்தா அக்கா அறிந்து வைத்திருந்தார். அதற்காக அவர் கூறுவார் 'கேசவா, வீடு மட்டும் வாறியா. கட்டாயம் உனக்கு என்ர மாமியிடமிருக்கும் கடல் புறாவை வாங்கித்தருவன்." "என்ன? உங்கள் மாமியிடம் கடல் புறா இருக்குதா?" "ஓமடா. சித்தங்கேணி மாமியிடம் இருக்குது. அவவிட்ட கடல்புறா மூன்றுபாகங்களும் குமுதத்திலை வந்தது இருக்கு. வடிவாக் கட்டி வைத்திருக்கிறா. வடிவான படங்களுடன் இருக்கு." என்பார். எனக்கோ கடல்புறாவை உடனடியாக வாசிக்க வேண்டும்போலிருக்கும், "கட்டாயம் அடுத்த கிழமை அவவிடமிருந்து எடுத்த வாறன்" என்பார். ஆனால் இறுதிவரை அவர் கடல் புறாவைச் சித்தங்கேணி மாமியிடமிருந்து எடுத்து வந்ததேயில்லை. என் ஆசையும் நிறைவேறினதேயில்லை. ஆனால் கடல் புறாவை காரணம் காட்டியே அவரை அவர் வீடு மட்டும் பல தடவைகள் கொண்டுபோய் விட்டிருப்பேன். இப்பொழுதும் சாந்தா அக்காவை நினைத்ததும் முதலில் நினைவுக்கு வருவது என் பால்ய பருவத்தில் சாந்தா அக்கா கடல் புறாவைக் காரணம் காட்டி என்னை ஏமாற்றியதுதான். அந்த சாந்தா அக்காதான் இப்போது போய்விட்டதாகச் சின்னம்மா கூறுகின்றா. நான் பால்ய பருவத்திலிருந்து பதின்ம வயதுக்குள் அடியெடுத்து வைக்கும்போது லலித அக்கா கனடா சென்று விட்டா. அவ கனடா சென்றதுமே அவவுடைய சிநேகிதிகளைக் காண்பதும் குறைந்து விட்டது. அவ்வப்போது சாந்தா அக்காவை வீதிகளில் காணும்போது சிரித்தபடியே 'இப்ப எப்படியடா இருக்கிறாய் கேசவா' என்பார். பதிலுக்கு நண்பர்களுடன் நகரிலில் 'சுழட்'டித் திரியும் நானும் 'நல்லாயிருக்கிறன் சாந்தா அக்கா" என்று கத்தியபடியே செல்வேன். இவ்விதமாகக் காலம் சென்று ஓடிக்கொண்டிருக்கையில் ஒரு நாள் வழியில் சாந்தா அக்காவை இன்னுமொரு நடிகரைப்போன்ற இளைஞர் ஒருவருடன் கண்டேன். என்னைக் கண்டதும் சாந்தா அக்கா "இங்கை வாடா கேசவா" என்றா. சைக்கிளில் சென்று கொண்டிருந்த நான் இறங்கி அவ அருகில் சென்றேன். "கேசவா, இவர் என்ர ஹஸ்பண்ட்" என்றவ தன் கணவர் பக்கம் திரும்பி "நான் சொல்லுவனே, எங்கட பொடி கார்ட் கேசவனென்று . அவன் இவன் தான். " என்றா. பதிலுக்கு ஒரு புன்னகையைத் தவள விட்டார் நடிகர். அதுதான் நான் சாந்தா அக்காவைக் கடைசியாகப் பார்த்தது. நாட்டின் நிலைமை கலவரம்,போர்ச்சூழலுக்குள் சென்று விட்டது. அவ பற்றிய நினைப்பே எனக்கு வருவதில்லை. போர் முடிவுக்கு வந்து ஆண்டுகள் பல சென்று விட்ட நிலையில் சாந்தா அக்கா பற்றிச் சின்னம்மா கூறியதும் ஆழ் மனக் குளத்தின் ஆழத்தில் புதையுண்டு கிடந்த சிந்தனை மீன்கள் மீண்டும் மீளுயிர்பெற்று எழுந்து வந்து நீச்சலடிக்கத்தொடங்கின. சாந்தா அக்கா பற்றிய நினைவுகள் எல்லாம் பசுமையாக மீண்டும் நினைவுக்கு வந்தன. பால்ய பருவத்து அழியாத கோலங்கள் எப்பொழுதும் இன்பம் தருபவை. சாந்த அக்கா பற்றிய நினைவுகளும் அத்தகையவைதாமே. "டாடி" என் சின்னவள் அழைத்தாள். பதிலுக்கு " என்னம்மா" என்றேன். "டாடி, டோண்ட் ஃபொர்கெட் டு பிக் மி அப் டு நைட்?" என்றாள். இன்றைக்கு என் சின்ன மகள் தன் சிநேகிதிகள் சிலருடன் , 'டொரோண்டோ'மாநகரின் 'டவுன் டவுனி'லுள்ள இத்தாலிய உணவகமொன்றுக்குச் செல்கிறாள். அவளைப் போய் பாதுகாப்பாக அழைத்து வரவேண்டும். அதைத்தான் அவள் நினைவூட்டுகின்றாள். எனக்குப் பால்ய பருவத்தில் சாந்தா அக்காவின் 'பொடி கார்ட்டா'கச் சென்று திரிந்தது நினைவுக்கு வந்தது. இலேசானதொரு புன்னகையும் முகத்தில் படர்ந்தது. எதற்காக அப்பா இப்படிப் புன்னகைக்கின்றார் என்பது தெரியாமல் சிறிது வியப்புடன் நோக்கினாள் என் இளைய மகள். girinav@gmail.com 22.10.2023 ஈழநாடு வாரமலர் (யாழ்ப்பாணம்) https://vngiritharan230.blogspot.com/2025/10/blog-post_37.html?fbclid=IwY2xjawNkrgxleHRuA2FlbQIxMABicmlkETFyNDAxNzc0bjN1aTZreTZDAR4nYgk-MaWmcqRSV0UGqKRJnarLhrBwLuweYhFzZsqJNR8KC_HZ1KEW-AZk6Q_aem_Ulbig9zfNlgHkWaVY7mZjA
2 weeks ago
சிறுகதை: சாந்தா அக்கா! - வ.ந.கிரிதரன் -

- இக்கதையில் வரும் சாந்தா அக்கா போன்ற ஒருவர் என் வாழ்க்கையிலும் இருந்திருக்கின்றார். அவர் சில வருடங்களுக்கு முன்னர் மறைந்த செய்தியினை அறிந்தபோது எழுந்த உணர்வுகளின் விளைவே இச்சிறுகதை. -
'டேய் கேசவா, சாந்தா அக்கா செத்துப் போய்விட்டாவாம். தெரியுமா?'
சின்னம்மா வாட்ஸ் அப்பில் செய்தி அனுப்பியிருந்தார். அவர் என் அம்மாவின் கடைசிச் சகோதரி. இன்னும் உயிருடனிருக்கும் சகோதரி. வயது எண்பதைத்தாண்டி விட்டது. பார்த்தால் ஐம்பதைத்தாண்டாத தோற்றம். மனுசி இன்னும் காலையில் ஒரு மணி நேரம் நடை , யோகா , மரக்கறிச் சாப்பாடு, நிறைய பழங்கள் என்று வாழும் மனுசி.
'என்ன சின்னம்மா, சாந்தா அக்கா செத்துப் போய் விட்டாவா? எப்ப சின்னம்மா?'
"இன்றைக்குத்தான் விடிய ஜேர்மனியிலை போய்விட்டாவாம்."
"என்ன அவ ஜேர்மனியிலையா இருந்தவா? இவ்வளவு நாளும் நான் நினைச்சுக்கொண்டிருக்கிறன் அவ ஊரிலைத்தான் இன்னும் இருக்கிறா என்று. அவ எப்ப ஜேர்மனிக்குப் போனவா சின்னமா?"
"அட உனக்கு விசயமே தெரியாதா? அவ ஜேர்மனிக்கு எயிட்டியிலேயே போய் விட்டாவே"
'அப்படியா சின்னம்மா, எனக்கு உண்மையிலேயே அவ ஜேர்மனிக்குப் போன விசயம் தெரியாது."
சாந்தா அக்கா பற்றிய நினைவுப் பறவைகள் சிறகு விரிக்கின்றன. சாந்தா அக்கா லலிதா அக்காவின் நெருங்கிய சிநேகிதி. லலிதா என் ஒன்று விட்ட அக்கா. அவவுடைய பதின்ம வயதுகளிலை அவவைச் சுற்றி எப்போதும் சிநேகிதிகள் பட்டாளமொன்று சூழந்திருக்கும். நானோ பால்யத்தின் இறுதிக்கட்டத்தில் நின்ற சமயம். அக்காவின் சிநேகிதிகள் பலரையும் அவரவர் வீட்டுக்குக் கொண்டு சேர்க்கும் 'பொடி கார்ட்' வேலை அதாவது பாதுகாவலன் வேலை என்னுடையதாகவிருக்கும். அவர்கள் சில வேளைகளில் நகரத்துத் திரையரங்குகளில் மாட்னி ஷோ பார்த்து வருவார்கள். லலிதா அக்காவுடன் அக்கா வீட்டுக்கு வந்து ஆடிப்பாடிச் செல்வார்கள். அவ்விதம் செல்கையில் மாறி மாறி ஓவ்வொருவரையும் அவரவர் வீட்டுக்குக் கொண்டு சேர்க்க வேண்டும். இவை தவிர யாழ் பொது நூலகத்துக்குச் சில சமயங்களில் லலிதா அக்காவும் சாந்தா அக்காவும் செல்வார்கள். அப்போதெல்லாம் என்னையும் துணைக்கு அழைத்துச் செல்வார்கள். நானோ விரைவாக நடையைக் கட்டுவேன். அவர்களால் என் வேகத்துக்கு ஈடு கொடுக்க முடியாது. மூச்சிரைக்க என் வேகத்தைப் பிடிப்பற்காக ஓட்டமும் நடையுமாக வருவார்கள். 'இவனோடை நடக்க ஏலாது. ஏன்டா இப்பிடி நடக்கிறாய். கொஞ்சம் ஸ்லோவாக நடடா' என்று லலிதா அக்கா அவ்வேளைகளில் கெஞ்சுவா. நானோ அவவின் கெஞ்சலைப் பொருட்படுத்தாமல் வேகத்தை இன்னும் சிறிது அதிகரித்து நடையைப் போடுவேன். அதைப்பார்த்து சாந்தா அக்கா இலேசாகச் சிரிப்பா. அவ அவ்விதம் இதழோரத்தில் சிரித்தபடி என்னைப் பார்க்கும் தோற்றம் இன்னும் பசுமையாக என் நெஞ்சிலை இருக்குது.
இவர்களில் சாந்தா அக்கா என்னைப்பொறுத்தவரையில் தனித்துத் தெரிந்தா. அவவுக்கு நான் ஒரு புத்தகப் புழு என்பது நன்கு தெரியும். அவவும் ஒரு வகையில் புத்தகப்புழுதான். கூடவே கதை எழுதும் திறமையும் அவவிடமிருந்தது. இதனால் எனக்கு அவவை வீட்டுக்கொண்டு போறதென்றால் நல்ல விருப்பம். முக்கிய காரணம் அவவை வீட்டுக்குக் கொண்டு போற சமயங்களில் அவவிடமிருந்து ஏதாவது புத்தகமொன்றை வாசிப்பதற்குத் தருவா. அதற்காகவே அவவுக்குப் பாதுகாவலாகச் செல்வதை நான் எதிர்பார்த்து விரும்பிச் செய்தேன்.
சாந்தா அக்கா கல்கி, குமுதம், விகடன், கல்கண்டு, ராணி போன்ற சஞ்சிகைகளில் வெளியான தொடர்கதைகள் பலவற்றை அழகாக பைண்டு செய்து வைத்திருந்தா. ஒருமுறை அவவிடமிருந்து அரு.ராமநாதனின் 'குண்டு மல்லிகை' யை எடுத்து வந்து வாசித்தேன். குண்டு மல்லிகை என்றதும் எனக்கு எப்பொழுதும் சாந்தா அக்காவின்ற நினைவுதான் தோன்றும்.அவவும் ஒருவகையில் குண்டு மல்லிகைதான். சிறிது பருமனான, நடிகை குஷ்பு போன்ற உடல் வாகு. செந்தளிப்பான முகத்தில் இரு பெரிய அழகான வட்டக் கருவிழிகள். எப்பொழுதும் புன்னகை தவழும் வதனம். இருக்குமிடத்தைக் கலகலப்பாக்கிக்கொண்டிருக்கும் ஆளுமை. இதனால் லலிதா அக்காவுக்கும் அவ மேல் அதிகப் பிரியம் இருந்தது.
சாந்தா அக்கா இலங்கைத் தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் தமிழ்ச் சேவைக்கு அடிக்கடி இசையும் , கதையும் எழுதி அனுப்பிக்கொண்டிருந்தா. அவவின்ற கதைகள் பல ஒலிபரப்பப்பட்டன. நானும் சிலவற்றைக் கேட்டிருக்கின்றன். அவவின்ற வயதுக்கேற்ற காதல் கதைகளே அவை.
ஒரு சமயம் அக்கா அவவை வீட்டுக்குக் கொண்டு விடும்போதுதான் எழுதி வைத்திருந்ததை எடுத்து வாசிக்கத் தந்தா. என்ன அழகான கையெழுத்து! சாந்தா அக்காவின் கையெழுத்தும் அவவைப்போல் அழகானதுதானென்று அச்சமயம் எண்ணிக்கொண்டேன். அவ்விதம் அச்சமயத்தில் எண்ணிக்கொண்டதும் இன்னும் என் நெஞ்சில் இருப்ப்பதை இத்தருணத்தில் உணர்கின்றேன்.
சில சமயங்களில் இவ்விதம் அடிக்கடி சாந்தா அக்காவை அவவின்ற வீடு வரை கூட்டிச் செல்வது எனக்குச் சிரமமாகவிருக்கும். வேறு ஏதாவது எனக்குப் பிடித்த விடயங்களில் ஈடுபட்டிருக்கும் தருணமொன்றாக அந்நேரம் இருக்கும். அவ்விதமான சமயங்களில் அவவைக் கூட்டிச்செல்வதற்கு எனக்கு விருப்பமில்லாதிருக்கும். அவ்விதமான சமயங்களில் என் மனநிலையை மாற்றுவதற்குச் சாந்தா அக்கா ஒரு தந்திரம் செய்வா. அக்காலகட்டட்த்தில் நான் சாண்டியல்யனின் 'கடல் புறா' நாவலைத் தேடி அலைந்துகொண்டிருந்தேன். யாழ் நூலகத்தில் நாவலின் மூன்று பாகங்களுமிருந்தன. ஆனால் அதற்கான 'டிமாண்ட்' அதிகமாகவிருந்ததால் அதற்காகப் பதிவு செய்து வைத்திருப்பவர்களுக்கே முன்னுரிமை. நானும் பதிவு செய்திருந்தேன். இரண்டு வருடங்களாகியும் கிடைத்த பாடில்லை. இதனால் அது என் கைக்கெட்டாத தூரத்தில் இருந்ததால் அதன் மீதான வெறியும் எனக்கு அதிகமாகிக்கொண்டே சென்றது. அதன் முதலிரு அத்தியாயங்களைப் பழைய குமுதம் இதழ்களில் பார்த்ததிலிருந்து, அவற்றுக்கான ஓவியர் லதாவின் இளைய பல்லவனின் ஓவியங்களைப் பார்த்ததிலிருந்து வெறி இன்னும் அதிகமாகிக்கொண்டே சென்றது. நகரிலிருந்த புத்தகக்கடையொன்றின் 'ஷோகேசில்' மூன்று பாகங்களுமிருந்தன. ஆனால் அவற்றை வாங்கும் நிலையில் நானில்லை. அப்போது அத்தொகுதியின் விலை ரூபா 115. அது எனக்குப் பெரிய தொகையாகவிருந்தது.
கடல்புறா மீதான எனது ஆர்வத்தைச் சாந்தா அக்கா அறிந்து வைத்திருந்தார். அதற்காக அவர் கூறுவார் 'கேசவா, வீடு மட்டும் வாறியா. கட்டாயம் உனக்கு என்ர மாமியிடமிருக்கும் கடல் புறாவை வாங்கித்தருவன்."
"என்ன? உங்கள் மாமியிடம் கடல் புறா இருக்குதா?"
"ஓமடா. சித்தங்கேணி மாமியிடம் இருக்குது. அவவிட்ட கடல்புறா மூன்றுபாகங்களும் குமுதத்திலை வந்தது இருக்கு. வடிவாக் கட்டி வைத்திருக்கிறா. வடிவான படங்களுடன் இருக்கு." என்பார்.
எனக்கோ கடல்புறாவை உடனடியாக வாசிக்க வேண்டும்போலிருக்கும்,
"கட்டாயம் அடுத்த கிழமை அவவிடமிருந்து எடுத்த வாறன்" என்பார். ஆனால் இறுதிவரை அவர் கடல் புறாவைச் சித்தங்கேணி மாமியிடமிருந்து எடுத்து வந்ததேயில்லை. என் ஆசையும் நிறைவேறினதேயில்லை. ஆனால் கடல் புறாவை காரணம் காட்டியே அவரை அவர் வீடு மட்டும் பல தடவைகள் கொண்டுபோய் விட்டிருப்பேன்.
இப்பொழுதும் சாந்தா அக்காவை நினைத்ததும் முதலில் நினைவுக்கு வருவது என் பால்ய பருவத்தில் சாந்தா அக்கா கடல் புறாவைக் காரணம் காட்டி என்னை ஏமாற்றியதுதான். அந்த சாந்தா அக்காதான் இப்போது போய்விட்டதாகச் சின்னம்மா கூறுகின்றா.
நான் பால்ய பருவத்திலிருந்து பதின்ம வயதுக்குள் அடியெடுத்து வைக்கும்போது லலித அக்கா கனடா சென்று விட்டா. அவ கனடா சென்றதுமே அவவுடைய சிநேகிதிகளைக் காண்பதும் குறைந்து விட்டது. அவ்வப்போது சாந்தா அக்காவை வீதிகளில் காணும்போது சிரித்தபடியே 'இப்ப எப்படியடா இருக்கிறாய் கேசவா' என்பார். பதிலுக்கு நண்பர்களுடன் நகரிலில் 'சுழட்'டித் திரியும் நானும் 'நல்லாயிருக்கிறன் சாந்தா அக்கா" என்று கத்தியபடியே செல்வேன். இவ்விதமாகக் காலம் சென்று ஓடிக்கொண்டிருக்கையில் ஒரு நாள் வழியில் சாந்தா அக்காவை இன்னுமொரு நடிகரைப்போன்ற இளைஞர் ஒருவருடன் கண்டேன்.
என்னைக் கண்டதும் சாந்தா அக்கா "இங்கை வாடா கேசவா" என்றா.
சைக்கிளில் சென்று கொண்டிருந்த நான் இறங்கி அவ அருகில் சென்றேன்.
"கேசவா, இவர் என்ர ஹஸ்பண்ட்" என்றவ தன் கணவர் பக்கம் திரும்பி "நான் சொல்லுவனே, எங்கட பொடி கார்ட் கேசவனென்று . அவன் இவன் தான். " என்றா.
பதிலுக்கு ஒரு புன்னகையைத் தவள விட்டார் நடிகர்.
அதுதான் நான் சாந்தா அக்காவைக் கடைசியாகப் பார்த்தது. நாட்டின் நிலைமை கலவரம்,போர்ச்சூழலுக்குள் சென்று விட்டது. அவ பற்றிய நினைப்பே எனக்கு வருவதில்லை. போர் முடிவுக்கு வந்து ஆண்டுகள் பல சென்று விட்ட நிலையில் சாந்தா அக்கா பற்றிச் சின்னம்மா கூறியதும் ஆழ் மனக் குளத்தின் ஆழத்தில் புதையுண்டு கிடந்த சிந்தனை மீன்கள் மீண்டும் மீளுயிர்பெற்று எழுந்து வந்து நீச்சலடிக்கத்தொடங்கின. சாந்தா அக்கா பற்றிய நினைவுகள் எல்லாம் பசுமையாக மீண்டும் நினைவுக்கு வந்தன. பால்ய பருவத்து அழியாத கோலங்கள் எப்பொழுதும் இன்பம் தருபவை. சாந்த அக்கா பற்றிய நினைவுகளும் அத்தகையவைதாமே.
"டாடி"
என் சின்னவள் அழைத்தாள்.
பதிலுக்கு " என்னம்மா" என்றேன்.
"டாடி, டோண்ட் ஃபொர்கெட் டு பிக் மி அப் டு நைட்?" என்றாள்.
இன்றைக்கு என் சின்ன மகள் தன் சிநேகிதிகள் சிலருடன் , 'டொரோண்டோ'மாநகரின் 'டவுன் டவுனி'லுள்ள இத்தாலிய உணவகமொன்றுக்குச் செல்கிறாள். அவளைப் போய் பாதுகாப்பாக அழைத்து வரவேண்டும். அதைத்தான் அவள் நினைவூட்டுகின்றாள்.
எனக்குப் பால்ய பருவத்தில் சாந்தா அக்காவின் 'பொடி கார்ட்டா'கச் சென்று திரிந்தது நினைவுக்கு வந்தது. இலேசானதொரு புன்னகையும் முகத்தில் படர்ந்தது. எதற்காக அப்பா இப்படிப் புன்னகைக்கின்றார் என்பது தெரியாமல் சிறிது வியப்புடன் நோக்கினாள் என் இளைய மகள்.
girinav@gmail.com
22.10.2023 ஈழநாடு வாரமலர் (யாழ்ப்பாணம்)

https://vngiritharan230.blogspot.com/2025/10/blog-post_37.html?fbclid=IwY2xjawNkrgxleHRuA2FlbQIxMABicmlkETFyNDAxNzc0bjN1aTZreTZDAR4nYgk-MaWmcqRSV0UGqKRJnarLhrBwLuweYhFzZsqJNR8KC_HZ1KEW-AZk6Q_aem_Ulbig9zfNlgHkWaVY7mZjA
2 weeks ago
ஐயா ஒரு ஆய்வு ஒரு ஆய்வு எங்கிறாரேயொழிய இறுதிவரை அது என்ன ஆய்வு என்று எவரால் எங்கு மேற்கொள்ளப்பட்ட ஆய்வு என்பதை சொல்லாமலே போய்க்கொண்டிருக்கிறார். வடக்கிலிருந்து முஸ்லீம்கள் அவர்களால் எடுத்து செல்லக்கூடிய மட்டுப்படுத்தப்பட்ட பொருட்களுடனும் கணிசமான பணத்துடனும் வெளியேற அனுமதிக்கப்பார்கள் என்பதே காலம் காலமாக சொல்லப்பட்டுவரும் கதை. இந்த 35 ஆண்டுகால முஸ்லீம்களின் யாழிலிருந்து வெளியேற்றம் எனும் வன்ம பரப்புரையில் தங்கத்திற்காகவே முஸ்லீம்கள் வெளியேற்றப்பட்டார்கள் என்ற கதை இதுவரை வெளியேறிய முஸ்லீம்களாலேயே சொல்லப்பட்டதில்லை, ஆனால் இப்போது சொல்ல ஆரம்பித்திருக்கிறார்கள். காலம் காலமாக வடக்கிலிருந்து 72 ஆயிரம் முஸ்லீம்கள் வெளியேற்றப்பட்டனர் என்று அவர்கள் வாயாலேயே அடிக்கடி சொல்லப்பட்டதுண்டு, இப்போது ஒரு லட்சமாகி நிற்கிறது, அந்த எக்ஸ்ட்ரா 28 ஆயிரமும் தங்கம் ஆய்வுபோல ஒரு ஆய்வா? உலகம் முழுவதும் குண்டு,கத்திகுத்து, வாகனமோதல், துப்பாக்கிச்சுடு என்று வகை வகையாக கொலை செய்யும் இந்த இனம் என்றாவது உண்மையை பேசியதுண்டா? தாமும் தவறு செய்தோம் என்று ஒத்துக்கொண்டதுண்டா? வேண்டுமென்றால் அடுத்த இனம்மீதும், நாட்டுக்காரன் மீதும் பழிபோடும். பழிபோடுதல் அவர்கள் மார்க்க கடமைகளிலொன்றா யாமறியோம். முஸ்லீம்களை வெளியேற்றியது தவறென்று புலிகளும் ஒத்துக்கொண்டனர் தமிழனும் ஒத்துக்கொண்டான், அதன் பின்பும் ஆறிய காயங்களை சுரண்டி சுரண்டி இனங்களுக்கிடையே தீமூட்டுகிறது இந்த இனம். போர் காலத்தில் வியாபாரம் அழிந்தது சொத்து அழிந்தது என்று கதறும் இனம், திருமலை மட்டக்களப்பு என தமிழர்களுக்கு மட்டும் இவர்களால் அந்த நிலமை ஏற்பட்டதில்லையென்று ஒரு ஆய்வு செய்து சொல்லுமா? முடிந்தவற்றை முடிந்தவையாக பார்த்து முறுகலின்றி வாழ முற்படுகிறது எம் இனம். இன்று புலிகள் இருந்தாலாவது ஆற்றாமையில் பேசுகிறார்கள் என்று ஒத்துக்கொள்ளலாம், ஆனால் யாருமே இல்லாத நிலையில் இன்றும் விஷம் கக்குகிறார்கள் என்றால் தமிழர்களை எதிரிகளாகவே எப்போதும் கருதவேண்டுமென்று அவர்களின் அடுத்த தலைமுறைக்கும் சொல்லி வளர்க்கிறார்கள் என்பதைதவிர அடுத்தொரு கருத்து கிடையாது. இன்று நல்லூர் திருவிழாவிலிருந்து முற்றவெளி உட்பட வடக்கின் அனைத்து பகுதிகளிலும் தமிழர்விழா காலங்களில் வியாபாரம் பணம் அள்ளல் என்று 90% முஸ்லீம்களாலேயே மேற்கொள்ளப்படுகின்றன, அந்த மண்ணும் மக்களும் அவர்களை வேறொருவராக பார்க்கவில்லை, ஆனால் அவர்கள் எங்களை காசு தேவையை தவிர்த்து விரும்ப தகாதவர்களாகவே பார்க்கிறார்கள் என்பதற்கு அப்பப்போ வரும் அவர்களின் அறிக்கைகளே சாட்சி. ஆனாலும் காசுக்கு மட்டுமே தமிழன் வேண்டும், மற்றும்படி கருநாகம்போல் எம்மை போட்டு தள்ளி சந்தர்ப்பம் பாத்து காத்துக்கொண்டிருக்கிறது இந்த சமூகம், அதன் வெளிப்பாடே எண்ணெய் ஊற்றி ஊற்றி வக்கிர புத்திகொண்டு வெறிகொண்டு நிற்கிறது. இவர்கள் குணம் அறிந்தே மாறி மாறி வரும் அரசுகளுக்கு தாளம் போட்டு அரச உயர்பதவிகளை பெற்று அதனை தமது மதமும் இனமும் வளர்க்க பயன்படுத்தும் இவர்களுக்கு எந்த அரச உச்ச பதவியும் தராமல் தூரத்தே வைத்திருக்கும் அநுர அரசை இதற்காக என்றாலும் பாராட்டலாம்.
2 weeks ago
இது சரிதான். ஆனால் இப்படி நடந்ததா (தங்க பறிப்பு) என்பதை தரவு பூர்வமாக நிறுவ முடியும்தானே?
2 weeks ago
நான் அறிந்தவரையில் ஈழ விடுதலைப் போராளிகளை அழிக்க அரசு பெரும் நடவடிக்கைகளை எடுத்திருந்தது. யாழில் இருந்த முசுலீம்கள் தாங்கள் வைத்திருந்த ஆயுதங்களோடு, இலங்கை அரசு வழங்கிய பெருவளவான ஆயுதங்களையும் அங்குள்ள பள்ளிவாசல் ஒன்றில் பதுக்கி வைத்திருந்ததை போராளிகளோடு இணைந்திருந்த சில முசுலீம்களே போராளிகளுக்கு அறியத்தந்ததாக அறிந்தேன். இந்த விடையத்தை அனைவரும் அறியும் நிலை ஏற்பட்டால் அங்குள்ள அப்பாவி முசுலீம்களோடு அந்த இனமே தாக்குதலுக்கு உள்ளாகி உயிரிழப்புகளும் பெருமளவு ஏற்பட்டிருக்கும். அதனைத் தவிர்க்கவே தலைவர் அவர்களை பாதுகாப்பாக வெளியேற்றப் பணித்தார். உண்மை தெரிந்தவர்களே என்னைப் பொய்யனாக்கி தங்களுக்கு சார்பாக எழுதுவார்கள்.
2 weeks ago
தகவல்களுக்கு நன்றி. எனக்கு ஒரு நண்பன் இருக்கிறான். மன்னார் பையன். எல்லாமும் நடந்து முடிந்த பின் கொழும்பில் பழக்கமானோம். நாம் புலிகளை போற்றி ஏற்றும் போதெல்லாம், அவனிடம் எந்த சலனமும் இருக்காது. தமிழ் மொழி மீது அதீத பற்றுடன் இருந்தான். இருபது வருடங்களின் பின் ஒருநாள் மிக சாதாரணமாக ஒரு நாள் சொன்னான் …… “நான் எங்கடா புத்தளம், என் சொந்த ஊர் மன்னார் - ஒரு நாள் இரவு கொட்டும் மழையில், உடுத்த உடுப்பையும் சொப்பிங் பாக்கில் சிலதையும் தவிர மிகுதி அனைத்தையும் பறிகொடுத்து விட்டு, ஒரு வள்ளத்தில் புத்தளம் வந்து இறங்கினோம். போக இடமில்லை. களைப்பு. அந்த கடற்கரை மணலிலே, கொட்டும் மழையில் படுத்து தூங்கினோம், இதுதான் எனக்கும் புத்தளத்துமுமான உறவு”… என்போன்றவர்களிடம் எல்லாம் அவனால் எப்படி சிரித்து பழக முடிகிறது என்பது இன்று வரை புரியவில்லை.
2 weeks ago
துரை @ஈழப்பிரியன் இளைப்பாறும் சொகுசு நிலையத்தில் கையை, காலை நீட்டி ஆறுதலாக சரியலாம். சொகுசு இருக்கை வசதி பொது இடத்தில் இல்லை. டுபாயில் கொஞ்சம் பரவாயில்லை. கீத்திரோவில் ஆஸ்பத்திரி இருக்கைகள் உள்ளன. கீத்திரோவில் காத்து நிற்கும்போது விமானத்தின் ஏறப்போகின்றோமா அல்லது வைத்தியரை பார்க்கப்போகின்றோமா என ஒரு பிரமை ஏற்படும். கீத்திரோ சொகுசு நிலையத்தில் காணப்பட்ட குளிக்கும் வசதியை கோவிட் பெருந்தொற்று காலத்துடன் நிறுத்திவிட்டார்கள். விமானத்திலும் உணவு கிடைக்கின்றது. ஏன் வயிற்றை இனிப்பு, கொழுப்பு பண்டங்களால் நிரப்ப வேண்டும்.
2 weeks ago
எல்லா விளையாட்டிலும் அவா அடிப்பா என நம்ப முடியாது போன வருடம் 20ஓவர் உலக கோப்பை பினலில் வந்த கையோட அவுட் ஆகி வெளிய போனவா , நியுசிலாந் சிம்பிலா தென் ஆபிரிக்காவை வென்று கோப்பையை தூக்கினவை......................