Aggregator

உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு

2 weeks ago
வணக்கம் வாத்தியார் . .........! Englishதமிழ் பாடகி : மஹதி பாடகா்கள் : ஹரிஹரன், கே. பிரசன்னா இசையமைப்பாளா் : ஹரிஸ் ஜெயராஜ் ஆண் : முதல் மழை என்னை நனைத்ததே முதல் முறை ஜன்னல் திறந்ததே பெயரே தெரியாத பறவை அழைத்ததே மனமும் பறந்ததே இதயமும் ஓ இதமாய் மிதந்ததே முதல் மழை நம்மை நனைத்ததே மூடி வைத்த ஜன்னல் திறந்ததே பெயரே தெரியாத பறவை அழைத்ததே மனமும் பறந்ததே இதயமும்.. ஹம்ம் இதயமாய் மிதந்ததே…யே ஆண் : கனவோடு தானடி நீ தோன்றினாய் கண்களால் உன்னை படம் எடுத்தேன் ஆண் : என் வாசலில் நேற்று உன் வாசனை நீ நின்ற இடம் இன்று உணர்ந்தேன் பெண் : எதுவும் புரியா புது கவிதை அர்த்தம் மொத்தம் இன்று அறிந்தேன் கையை மீறும் ஒரு குடையாய் காற்றோடுதான் நானும் பறந்தேன் மழைக் காற்றோடுதான் நானும் பறந்தேன் ஆண் : முதல் முறை ஜன்னல் திறந்ததே பெண் : லாலாலாலா.. ஆண் : பெயரே தெரியாத பறவை அழைத்ததே மனமும் பறந்ததே இதயமும்.. ஓ… இதமாய் மிதந்ததே பெண் : ஓர்நாள் உன்னை நானும் காணாவிட்டால் என் வாழ்வில் அந்த நாளே இல்லை….ஓ… ஓர்நாள் உன்னை நானும் பார்த்தே விட்டால் அந்நாளின் நீளம் போதவில்லை ஆண் : இரவும் பகலும் ஒரு மயக்கம் நீங்காமலே நெஞ்சில் இருக்கும் உயிரின் உள்ளே உந்தன் நெருக்கம் இறந்தாலுமே என்றும் இருக்கும் நான் இறந்தாலுமே என்றும் இருக்கும்........! --- முதல் மழை என்னை நனைத்ததே ---

"அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English

2 weeks ago
"அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English / பகுதி Part: 36 [This detailed Tamil article is based on the unfinished historical book 'History of Sri Lanka' by my late friend, Mr. Kandiah Easwaran, a civil engineer. The English summary below is his own version. / இந்த விரிவான தமிழ் கட்டுரை, எனது மறைந்த நண்பர், பொறியியலாளர் திரு. கந்தையா ஈஸ்வரன் எழுதிய முடிக்கப்படாத "இலங்கை வரலாறு" என்ற புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டது. கீழே உள்ள ஆங்கிலச் சுருக்கம் அவரது சொந்தப் பதிப்பாகும்.] பகுதி: 36 / பின் இணைப்பு - தீபவம்சம் / தீபவம்சம் முழு தீவுக்கான விளக்கமா? தீபவம்சம் முதலில் பாளி மூலமும், பின்னர் அதன் ஆங்கில மொழி பெயர்ப்பும் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த ஆங்கில மொழிபெயர்பு பகுதி பக்கம் 117 முதல் பக்கம் 221 வரை சுமார் 105 பக்கங்களைக் கொண்டுள்ளது. இதில், முதல் எட்டு அத்தியாயங்கள் சுமார் 43 பக்கங்களை கொண்டு உள்ளது. என்றாலும் அதில், இலங்கை வரலாறோ, அல்லது இலங்கை மனித குடிமக்களையோ அல்லது இலங்கையில் நடந்த நிகழ்வுகளோ அல்லது இலங்கை மன்னர்களையோ அல்லது அவர்களின் ஆட்சிகள் பற்றியோ அல்ல என்பது குறிப்பிடத் தக்கது. மேலும் அத்தியாயம் 9, சுமார் 3 பக்கங்கள், இலங்கையில் நடைபெறாத, விஜயனின் தகுதியற்ற தீய குணங்கள் மற்றும் அவரது தீய செயல்கள் பற்றிக் கூறுகிறது. அதனால், அவரின் தந்தையால், படகில் ஏற்றி, தண்டனையாக, கடலில் எங்கேயாவது போய் தொலைந்து போக, மிதக்க விட்டதையும் மற்றும் காற்றுடன் பயணித்து முடிவில், விஜயன் தோழர்களுடன் இலங்கைக்கு வந்ததைப் பற்றியும் கூறுகிறது. அத்தியாயங்கள் 10 ம் 11 ம், பக்கம் 163 முதல் 167 வரை அடங்குகிறது. இது இலங்கையைப் பற்றியது என்றாலும் முழுமையாக அப்படி இல்லை. அத்துடன் இந்த அத்தியாயங்கள் இரண்டும் மிகவும் சிறியவை, மொத்தம் 5 பக்கங்கள் கூட இல்லை; அதில், 3 பக்கங்கள் மட்டுமே இலங்கையைப் பற்றியது. அத்தியாயம் 12 மகிந்த தேரரைப் பற்றியது, என்றாலும் இதுவும் இலங்கையில் நடந்த நம்பகமான வரலாற்று நிகழ்வுகள் பற்றி அல்ல. மகிந்த தேரர், 12- 16, இலங்கையை (பௌத்த மதத்திற்கு) மாற்றுவதற்கு சாதகமாகவோ அல்லது பாதகமாகவோ அமையுமா என்று யோசித்துக் கொண்டிருந்தார் என்றும், மகிந்த தேரர் இன்னும் இந்தியாவில் இருந்தார் என்றும், எனவே தீவு இன்னும் பௌத்தத்திற்கு மாற்றப்படவில்லை என்பது வெளிப்டையாகத் தெரிகிறது. அதாவது விஜயன் மற்றும் அவரது உதவியாளர்கள், ஊழியர்கள் வந்ததாகக் கூறப்படும் நாளில் இருந்து, சுமார் இருநூற்று முப்பத்தாறு ஆண்டுகளுக்குப் பிறகும் இன்னும் இலங்கை புத்தசமயத்துக்கு மாற்றப்படவில்லை. அது மட்டும் அல்ல, புத்தர் ஐந்நூறு தேரர்களுடன் 2-53 இல் தனது மூன்றாவது வருகையாகவும் இலங்கைக்குப் பறந்தார் எனினும் அவர் தனது மூன்று பயணங்களிலும் தனது பிரசங்கங்களை முறையாக இலங்கை வாழ் மக்களிடம் அறிமுகப்படுத்தவில்லை அல்லது சரியாகப் போதிக்கவில்லை என்றும் தெரிகிறது! மொத்தத்தில், 28 பக்கங்களைக் கொண்ட அத்தியாயம் 12 முதல் அத்தியாயம் 16 வரை, இலங்கையில் நடந்த உண்மையான மனித வரலாற்று நிகழ்வுகளைப் பற்றியது அல்ல. அத்தியாயம் 17 முதல் அத்தியாயம் 22 வரையிலான கடைசி ஆறு அத்தியாயங்கள் மட்டுமே, இலங்கைப் பற்றியது. இது 27 பக்கங்களை மட்டுமே கொண்டது ஆகும். எனவே, தீபவம்சத்தின் மூன்றில் ஒரு பகுதியே, இலங்கையில் நடந்ததாகக் கூறப்படும் மனித வரலாற்று நிகழ்வுகளைப் பற்றி பேசுகிறது எனலாம். 1-18 ;”அழகான தட்பவெப்பநிலை கொண்டும், வளமான பூமியாகவும், புதையல் சுரங்கங்களை தன்னகத்தே கொண்ட ஒரு நேர்த்தியான நாடு...” என வர்ணிப்பதில் இருந்து, நாம் இலகுவாக விளங்கிக் கொள்வது என்னவென்றால், அழகிய காலநிலை என்பது மத்திய மலை நாட்டையும், வளமான பூமி என்பது அதிக மழைப்பொழிவு பகுதியையும், மற்றும் புதையல் சுரங்கம் என்பது இரத்தினபுரியையும் கூறுவது போலத் தோன்றுகிறது. எனவே, மேற்கூறிய விளக்கங்களைக் கருத்தில் கொண்டு, கீழே உள்ள வரைபடத்தில் காட்டப்பட்டுள்ளபடி, அநுராதபுரத்திற்கு தெற்கே, தீவின் கீழ் பாதியை மட்டுமே காட்டியுள்ளது போன்று உணரலாம். எனவே, இது முழு தீவுக்கான விளக்கம் அல்ல என்று நம்புகிறேன். 17-1 : "முப்பத்திரண்டு யோஜனை நீளமும் பதினெட்டு யோஜனை அகலமும் கொண்ட சிறந்த இலங்கை தீவு என்றும், அதன் சுற்று நூறு யோஜனைகள் என்றும் ." கூறுகிறது. [1-2. The excellent island of Laṅkā is thirty-two yojanas long, eighteen yojanas broad, its circuit is one hundred yojanas; it is surrounded by the sea, and one great mine of treasures. It possesses rivers and lakes, mountains and forests.] மேலே உள்ள விளக்கம், செவ்வக வடிவ நாட்டிற்கானது மற்றும் மாம்பழ வடிவ நாட்டிற்கானது அல்ல என்பது மிகத் தெளிவு புரிகிறது. தீபவம்சத்தை எழுதியவர்களுக்கு அனுராதபுரத்திற்கு வடக்கே குறுகலான நிலப்பரப்பு ஒன்று இருப்பது பற்றிய எந்த எண்ணமும் இருந்ததாகத் தெரியவில்லை. அனுராதபுரத்திற்கு வடக்கே உள்ள நிலங்களும், மகாவலிகங்கைக்கு கிழக்கே உள்ள நிலங்களும் இந்த விளக்கத்தில் காணாமல் போய்விட்டன. அனுராதபுரத்திற்கு தெற்கே உள்ள நிலப்பகுதியை மட்டுமே இது குறிப்பிடுவது, இந்த பகுதியின் வடிவம் ஓரளவு செவ்வக வடிவம் என்று கூறுவதில் இருந்து புலப்படுகிறது. Part: 36 / Appendix – Dipavamsa / 'Is Dipavamsa the description for the entire island?' The Pali original is given first in the book, and then the English translation. The portion of the English translation runs from the page 117 to the page 221, approximately about 105 pages. The first eight chapters are about 43 pages, and are not about historical or human inhabitants or events that took place in Lanka or about the kings of Lanka or their reigns. The Chapter 9, about 3 pages, is about the unworthy evil characters of Vijaya and his evil deeds that took place not in Lanka, condemned to drift in sea, and his arrival in Ceylon with others at the end of their drift. Chapters 10 to 11, run from the page 163 to 167, are about Lanka, but not fully about Lanka, and these chapters are very short, not even 5 pages in total; only 3 pages are about Lanka. The chapter 12 is mostly about Mahinda Thera, and not about any trustworthy historical events that took place in Lanka. Mahinda Thera was considering, 12- 16, whether the time would be favourable or unfavourable for the conversion of Lanka (to the Buddhist faith). Mahinda Thera was still in India and the Island was therefore not converted yet to the Buddhism, about two hundred and thirty six years after the alleged arrival of Vijaya and his attendants and servants. The Buddha flew to Lanka on his alleged third visit, 2-53, along with five hundred Theras, but it seems that he did not introduce his sermons then! All in all, chapter 12 to chapter 16, consisting of 28 pages, are not about the true human historical events that took place in Lanka. The last six chapters, from the chapter 17 to the chapter 22, are about Lanka and consist of 27 pages. Therefore only less than one third of the Dipavamsa speaks about human historical events that allegedly took place in Lanka. 1-18 reads;”an exquisite country, endowed with beautiful climate, fertile, a mine of treasure...” Considering above descriptions such as beautiful climate (central hilly country), fertile (high rainfall area), and mine of treasure (Ratnapura), the reference is for the lower half of the island, south of Anuradhapura, as shown in the map below. It is not the description for the entire island. 17-1 reads;”The excellent island of Lanka thirty two Yojanas long and eighteen Yojanas wide, its circuit is one hundred Yojanas.” The above description is for a rectangular shape country and not for a mango shaped country. Those who wrote the Dipavamsa never had the idea of the land north of Anuradhapura with a narrowing landscape. The lands north of Anuradhapura and lands to the east of Mahaweliganga are not part of this description. The reference is only to the land south of Anuradhapura, and the shape of this area is somewhat rectangular. நன்றி Thanks [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] [Kandiah Thillaivinayagalingam, Athiady, Jaffna] பகுதி / Part: 37 தொடரும் / Will follow "அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English / பகுதி Part: 36 https://www.facebook.com/groups/978753388866632/posts/31958835430431689/?

பிரதமர் ஹரிணி நாளை இந்தியா விஜயம்

2 weeks ago
பிரதமரின் இந்திய விஜயம் வலுவான நன்மதிப்பைக் கட்டியெழுப்பியுள்ளது - அலி சப்ரி பாராட்டு 21 Oct, 2025 | 05:16 PM (நா.தனுஜா) அண்மையில் பிரதமர் ஹரிணி அமரசூரியவின் இந்திய விஜயம் பரவலாக வலுவான நன்மதிப்பைத் தோற்றுவித்திருப்பதாகச் சுட்டிக்காட்டியுள்ள முன்னாள் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி, சர்வதேச அரங்கில் எமது நாடு தெளிவுடனும் கௌரவத்துடனும் பிரதிநிதித்துவப்படுத்தப்படுவதைக் காண்பதற்கு மகிழ்ச்சியாக இருப்பதாகத் தெரிவித்துள்ளார். பிரதமர் ஹரிணி அமரசூரியவின் அண்மைய இந்திய விஜயம் வலுவான நன்மதிப்பைத் தோற்றுவித்திருக்கின்றது. தான் கல்வி பயின்ற புதுடில்லியின் தேசிய பல்கலைக்கழகத்திலும் என்.டி.ரி.வியின் உலகத்தலைவர் மாநாட்டிலும் பிரதமர் ஆற்றிய உரையானது ஆழமானதாகவும், அறிவுபூர்வமானதாகவும், இலங்கையின் மிகச்சிறந்த தலைமைத்துவத்தினை வெளிப்படுத்தும் வகையிலும் அமைந்திருந்தது. எமது நாடு அத்தகையதொரு தெளிவுடனும், கௌரவத்துடனும் பிரதிநிதித்துவப்படுத்தப்படுவதைக் காண்பதற்கு மகிழ்ச்சியாக இருக்கின்றது. அதேபோன்று தீவிர நெருக்கடியில் இருந்து இலங்கை மீள்வதற்கு உதவிய மிக்கடினமான முறையில் வென்றெடுக்கப்பட்ட பொருளாதார அடைவுகள் மற்றும் ஸ்திரமான வெளியுறவுக்கொள்கை என்பவற்றில் பரீட்சார்த்த முயற்சிகளை மேற்கொள்வதில்லை என்ற அரசாங்கத்தின் தீர்மானமும் ஊக்கமளிக்கின்றது. எம்மால் பாரம்பரியமாகப் பின்பற்றப்பட்டுவரும் சுதந்திரமானதும், எந்தவொரு தரப்பினரையும் சாராத போதிலும் நடைமுறைக்குச் சாத்தியமானதுமான வெளியுறவுக்கொள்கை தொடர்ந்து எமக்குச் சாதகமானதாக அமையும். நிதியியல் ஒழுக்கம், வருமான ஒருங்கிணைப்பு, அரசுக்குச் சொந்தமான நிறுவனங்களின் மறுசீரமைப்பு, செலவினங்களை ஈடுசெய்யக்கூடிய விலையிடல் முறைமை, இலக்கிடப்பட்ட சமூகப்பாதுகாப்பு மற்றும் ஊழலுக்கு எதிரான நடவடிக்கைகள் என்பன சர்வதேச நாணய நிதியத்தினால் அனுசரணையளிக்கப்படும் மீட்சிக்கான செயற்திட்டத்தின் அடிப்படைகளாக அமைந்துள்ளன. இவை தூரநோக்கு சிந்தனை மற்றும் நடைமுறைக்குச் சாத்தியமான தன்மை என்பவற்றின் ஊடாக அணுகப்படவேண்டுமே தவிர, மறுப்புக்கொள்கையின் அடிப்படையில் கையாளப்படக்கூடாது. அத்தோடு சட்ட மற்றும் ஒழுங்கை மீளுறுதிப்படுத்தும் அதேவேளை, ஊழல் மோசடிகளை உரியவாறு கையாள்வது இன்றியமையாததாகும். மறுபுறம் மாற்று நோக்கங்களுக்காக சட்ட அமுலாக்கம் தவறான முறையில் பயன்படுத்தப்படக்கூடாது. பெரும்பாலான இலங்கையர்களைப் பொறுத்தமட்டில் யார் நாட்டை ஆள்கின்றார்கள் என்பதை விட, நேர்மை, இலக்கு, பொறுப்புக்கூறல், ஒழுக்கம் மற்றும் சகலரையும் உள்ளடக்கிய தன்மை என்பவற்றுடன் எவ்வாறு நாட்டை ஆள்கின்றார்கள் என்பதே முக்கியமானதாக இருக்கின்றது. எனவே அதற்கேற்றவாறு கௌரவம் மற்றும் ஒற்றுமையுடன் இலங்கை முன்நோக்கிப் பயணிக்கும் என எதிர்பார்க்கின்றோம் என அப்பதிவில் குறிப்பிட்டுள்ளார். https://www.virakesari.lk/article/228310

அமெரிக்க டாலர் ஆதிக்கத்தை நிலைநிறுத்த கிரிப்டோகரன்சி வழியே டிரம்ப் புதிய திட்டம்

2 weeks ago
பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, ஒரு பிட்காயின் மத்திப்பு 80,000 டாலருக்கு (சுமார் 67 லட்சம் ரூபாய்) மேல் உயர்ந்தது. 21 அக்டோபர் 2025 அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கிரிப்டோகரன்சி உலகத்தைத் தழுவிட முடிவு செய்துள்ளார். அதற்காக கிரிப்டோகரன்சியை பொருளாதார அமைப்பின் ஒரு பகுதியாக மாற்றும் புதிய சட்டத்திற்கு அவர் ஒப்புதல் அளித்துள்ளார். டிரம்ப் குடும்ப உறுப்பினர்கள் கிரிப்டோகரன்சி அடிப்படையிலான வணிகங்களைத் தொடங்கி, கணிசமான லாபத்தைப் பெற்றுள்ளனர். ஆனால், அமெரிக்காவை கிரிப்டோ உலகில் முன்னிலைப்படுத்துவதற்கும், டாலரின் செல்வாக்கை அதிகரிப்பதற்கும் எடுக்கப்படும் இந்த காரியங்களில் ஆபத்துகளும் குறைவாக இல்லை. பிட்காயின் எவ்வாறு பிறந்தது ? பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, கிரிப்டோகரன்சியான பிட்காயின் 2008 ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. சுமார் பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு, உலகம் பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள முயற்சித்துக் கொண்டிருந்தபோது இந்தக் கதை தொடங்கியது. ஒருபுறம், அரசாங்கங்கள் தங்கள் பொருளாதாரத்தை மீண்டும் நிலைநிறுத்த முயற்சித்துக் கொண்டிருந்தன. மறுபுறம், ஒரு புதிய சிந்தனை எழுந்தது. அரசாங்கத்தின் நிதி அமைப்புக்கு ஒரு மாற்று இருக்க வேண்டும் என்று சிலர் நம்பினர். 'சைட்டேஷன் நீடட்' என்ற செய்திமடலுக்காக எழுதுபவரும் கிரிப்டோகரன்சி குறித்துத் தொடர்ந்து எழுதி வருபவருமான மாலி ஒயிட் இது பற்றிக் கூறுகிறார். அவரது கூற்றுப்படி, பணத்தின் மீதான கட்டுப்பாடு ஏன் அரசு அமைப்பிடம் மட்டுமே இருக்க வேண்டும் என்று சிலர் நினைத்தனர். "2008 நிதி நெருக்கடிக்குப் பிறகு 2009-ல் பிட்காயின்கள் உருவாகத் தொடங்கின. இது ஒரு டிஜிட்டல் சொத்து. அந்தக் காலகட்டத்தில் அரசாங்கங்கள் நிதி நெருக்கடியைக் கையாண்ட விதம் பலருக்கு அதிருப்தியை அளித்தது. ஒரு மைய வங்கியால் வெளியிடப்படாத மற்றும் எந்த அரசாங்கத்தின் கட்டுப்பாட்டிலும் இல்லாத ஒரு நாணயம் இருக்க வேண்டும் என்று அவர்கள் நினைத்ததால், அவர்கள் கிரிப்டோகரன்சியை உருவாக்கினர். இவ்வாறு முதல் கிரிப்டோகரன்சியான பிட்காயின் உருவானது. இப்போது ஆயிரக்கணக்கான வகையான கிரிப்டோகரன்சிகள் வந்துவிட்டன," என மாலி ஒயிட் கூறுகிறார். கிரிப்டோகரன்சியைப் பரிவர்த்தனைக்கு ஒரு பணமாக பயன்படுத்த, அதன் முழுப் பதிவையும் பாதுகாக்கும் ஒரு அமைப்பு தேவைப்பட்டது. அதாவது, அது எந்த மத்திய வங்கி அல்லது ஒற்றை நபரின் கட்டுப்பாட்டிலும் இருக்கக்கூடாது. இதற்கு பிளாக்செயின் எனப்படும் புதிய தொழில்நுட்பம் தேவைப்பட்டது. இது ஒரு வகையான டிஜிட்டல் பதிவேடு அல்லது பேரேடு ஆகும், இது கிரிப்டோகிராஃபி மூலம் பாதுகாக்கப்படுகிறது. மக்கள் கிரிப்டோகரன்சியை அனுப்பும் மற்றும் அதன் மூலம் செய்யப்படும் ஒவ்வொரு பரிவர்த்தனையின் பதிவும் இதில் வைக்கப்படுகிறது, இது பரவலாக்கப்பட்ட (Decentralized) அமைப்பில் உள்ளது, என மாலி ஒயிட் கூறுகிறார். இந்த பரவலாக்கல் ஏன் இவ்வளவு முக்கியமானது? இந்த பரவலாக்கமே கிரிப்டோகரன்சி மற்றும் டிஜிட்டல் பணம் ஆகியவற்றுக்கு இடையேயான முக்கிய வேறுபாடு என்று மாலி ஒயிட் கூறுகிறார். மக்கள் வங்கிகள் மூலம் ஒருவருக்கொருவர் அனுப்பும் டிஜிட்டல் பணத்தின் பதிவு வங்கிகளிடம் இருக்கும், ஆனால் கிரிப்டோகரன்சியின் பதிவு எந்த ஒற்றை இடத்திலும் வைக்கப்படுவதில்லை. இந்த தரவு எந்த ஒரு நிறுவனத்தின் அல்லது தனிநபரின் கட்டுப்பாட்டிலும் இல்லை. ஆரம்பத்தில் கிரிப்டோகரன்சியை வாங்குவது அல்லது விற்பது சிக்கலாக இருந்தது. எனவே, முதலீட்டாளர்கள் எளிதாகப் பணத்தைப் போடவும், பரிவர்த்தனை செய்யவும் கிரிப்டோகரன்சி சந்தைகள் (Exchange) உருவாக்கப்பட்டன. ஆனால், இந்த சந்தைகள் மீது எந்தக் கட்டுப்பாடும் இல்லை. ஜப்பானின் டோக்கியோவில் இருந்த எம்டி காக்ஸ்(MT Gox) அப்படிப்பட்ட ஒரு சந்தை ஆகும். இதன் மூலம் உலகின் பிட்காயின் பரிவர்த்தனையில் சுமார் 70 சதவீதம் நடந்தது. 2014-ல் இந்த எக்ஸ்சேஞ்ச் வீழ்ச்சியடைந்தது, இதனால் முதலீட்டாளர்களுக்குக் கோடிக்கணக்கான டாலர் இழப்பு ஏற்பட்டது. இதையடுத்து, 2022-ல் FTX என்ற கிரிப்டோகரன்சி சந்தையும் வீழ்ச்சியடைந்தது, இதனால் பில்லியன்கணக்கான டாலர்கள் இழப்பு ஏற்பட்டது. இதில் சாம் பேங்க்மேன் ஃப்ரைட் என்பவர் முக்கியப் பங்கு வகித்தார். மாலி ஒயிட் கூறுகையில், FTX சந்தை முதலீட்டாளர்களின் பணத்தைத் தவறாகப் பயன்படுத்தியது, இதன் காரணமாக அந்த சந்தை வீழ்ச்சியடைந்தது என்றார். இந்த மோசடி குற்றத்திற்காக சாம் பேங்க்மேன் ஃப்ரைடுக்கு நீண்ட கால சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. இந்த நிகழ்வுகள் மற்றும் நிச்சயமற்ற தன்மையால், கிரிப்டோகரன்சியில் முதலீடு செய்வது ஆபத்தானது என்ற கருத்து உருவானது. "கிரிப்டோ உலகில் எப்போதும் எந்த விதிகளோ அல்லது கட்டுப்பாடுகளோ இருந்ததில்லை. கட்டுப்படுத்தும் நிதி நிறுவனங்கள் இதில் சிறப்பு கவனம் செலுத்தவில்லை. தற்போதுள்ள கொள்கைகள் மற்றும் விதிகளில் எது கிரிப்டோகரன்சிக்குப் பொருந்தும் என்பதையும் அவர்களால் தீர்மானிக்க முடியவில்லை. இது தவிர வேறு பல காரணங்களும் உள்ளன," என மாலி ஒயிட் கூறுகிறார். இந்த பல காரணங்களில் ஒன்று பிளாக்செயின் தொழில்நுட்பம். கிரிப்டோ உலகின் ஒரு குறைபாடு என்னவென்றால், அதில் செய்யப்பட்ட பரிவர்த்தனைகளை ரத்து செய்து பணத்தைத் திரும்பப் பெற முடியாது என்று மாலி ஒயிட் கூறுகிறார். யாராவது உங்கள் கிரெடிட் கார்டு எண்ணைத் தவறாகப் பயன்படுத்தினால், அந்தப் பணத்தைத் திரும்பப் பெற வழிகள் உள்ளன. ஆனால், யாராவது உங்கள் பிட்காயின்களைத் திருடினால், அதனைத் திரும்பப் பெறுவது கடினம். இந்த ஆண்டு வரை, அமெரிக்காவில் கிரிப்டோ துறைக்குச் சிறப்பான விதிகள் எதுவும் இல்லை. அமெரிக்காவின் நிதி கட்டுப்பாட்டு அமைப்பான செக்யூரிட்டீஸ் அண்ட் எக்ஸ்சேஞ்ச் கமிஷன் (SEC) மற்ற துறைகளுக்குப் பொருந்தும் விதிகளால் கிரிப்டோ துறையைக் கட்டுப்படுத்த முயன்றது, இதனால் நிச்சயமற்ற தன்மையும் குழப்பமும் நிலவியது. இந்தக் காரணத்தால், முதலீட்டாளர்கள் அமெரிக்க கிரிப்டோ துறையில் முதலீடு செய்யத் தயங்கினர். இந்த நிச்சயமற்ற தன்மை இருந்த போதிலும், இப்போது இருபதாயிரத்துக்கும் மேற்பட்ட கிரிப்டோகரன்சிகள் உள்ளன. கடந்த ஆண்டு அவற்றின் மொத்த மதிப்பு இரண்டு மடங்காக அதிகரித்து நான்கு டிரில்லியன் டாலர்களை எட்டியது. இதற்கு காரணம், பல தொழில் அதிபர்கள் ஆவர். இப்போது அமெரிக்க அதிபரே இதில் ஈடுபட்டுள்ளார். டிரம்பின் கிரிப்டோ சாம்ராஜ்யம் பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, லாஸ் வேகாஸில் நடைபெற்ற பிட்காயின் மாநாட்டின்போது, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பிட்காயினைப் பிடித்துக்கொண்டிருக்கும் உருவப்படம் வைக்கப்பட்டிருந்தது. பல அமெரிக்க வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களைப் போலவே, தனது முதல் பதவிக் காலத்தில் அதிபர் டிரம்பும் கிரிப்டோகரன்சிக்கு எதிராக இருந்தார் என பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தின் வார்டன் ஸ்கூல் விரிவுரையாளர் ஃபிரான்சின் மெக்கென்னா நினைவுபடுத்துகிறார். ஆனால் நவம்பர் 2024-ல் இரண்டாவது பதவிக் காலத்திற்கான தேர்தல் பிரச்சாரத்தின் போது, அவரது கருத்து முற்றிலும் மாறியது. கிரிப்டோ துறையின் பல செல்வாக்கு மிக்கவர்கள் டிரம்பின் தேர்தல் பிரசாரத்திற்குப் பெருமளவு நன்கொடை அளித்தனர். அதே சமயம், கிரிப்டோகரன்சியை ஆதரிக்கும் ஜனநாயகக் கட்சித் தலைவர்களுக்கும் அவர்கள் நன்கொடை அளித்தனர். "இந்தத் தேர்தல் பிரசாரங்களுக்காகப் பெரிய அளவில் பணம் செலவழிக்கப்பட்டது. டிரம்ப் மீண்டும் அதிபரானால், அவரது அரசு கிரிப்டோ துறை மீதான பைடன் அரசின் கட்டுப்பாடுகளைத் தளர்த்தும் என்பதே இதன் பின்னணியில் உள்ள நோக்கமாக இருந்தது." அதிபர் டிரம்ப் இரண்டாவது முறையாகப் பதவியேற்பதற்கு முன்பே, கிரிப்டோ உலகின் செல்வாக்கு மிக்கவர்கள் அவரது தேர்தல் பிரசாரத்திற்கு மேலும் அதிக நிதியளித்தனர். அப்படியானால், இந்த நிதி அரசியல் ஆதரவைப் பெறுவதற்கும், கிரிப்டோ உலகிற்குச் சட்டப்பூர்வ அங்கீகாரத்தை வழங்குவதற்கும் ஈடாக வழங்கப்பட்டதா? ஃபிரான்சின் மெக்கென்னா கூறுகிறார், "இது செல்வாக்கை அதிகரிப்பதற்கான ஒரு வழிமுறை. டிரம்ப் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள், நெருங்கியவர்களுக்கு இந்தத் தொழிலில் லாபம் ஈட்டவும், அவர்களை இந்தத் துறையில் ஈடுபடுத்தவும் முடிந்தால், தங்களுக்கு அவர்களின் ஆதரவு கிடைக்கும் என கிரிப்டோ துறையைச் சேர்ந்தவர்கள் பார்த்தனர்." டிரம்ப் ஜனவரியில் பதவியேற்பதற்கு முன்பே அவரது குடும்ப உறுப்பினர்கள் இந்தத் துறையில் ஈடுபட்டிருந்தனர். பதவியேற்றவுடன், டிரம்ப் அரசு கிரிப்டோவை ஆதரிக்கும் கொள்கைகளைச் செயல்படுத்தத் தொடங்கியது. கிரிப்டோ மற்றும் டிஜிட்டல் சொத்துகள் அமெரிக்காவின் பொருளாதார எதிர்காலத்தின் ஒரு பகுதி என்று அறிவிக்கத் தொடங்கியது. டிரம்ப் கிரிப்டோ துறையிலிருந்து லாபம் ஈட்டியதை ஒப்புக்கொண்டார். ஃபோர்ப்ஸ் பத்திரிகையின் கூற்றுப்படி, டிரம்பின் கிரிப்டோ சொத்து மதிப்பு ஒரு பில்லியன் டாலருக்கும் அதிகமாகும், இது அவருக்கு சொந்தமான மார்-அ-லாகோ ரிசார்ட் மற்றும் டிரம்ப் டவர் ஆகியவற்றின் மொத்த மதிப்பை விட அதிகமாகும். இப்போது அவர் இவை அனைத்தையும் பெரிய அளவில் செய்து வருகிறார் என ஃபிரான்சின் மெக்கென்னா கூறுகிறார். அரசாங்கம் அமைக்கப்பட்ட பிறகு, அவர் கிரிப்டோ தொடர்பான நடவடிக்கைகளில் விரைவாகப் பங்கேற்கத் தொடங்கினார். புதிய வணிகங்களையும் தொடங்கினார். ஸ்டேபிள்காயின் வணிகத்தில் ஈடுபட்டுள்ள அமெரிக்கன் பிட்காயின் மைனர் (American Bitcoin Miner), வேர்ல்ட் லிபர்ட்டி (World Liberty) உள்ளிட்ட புதிய நிறுவனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. "டிரம்பின் மகன்கள் இந்த வணிகத்தில் முதலீடு செய்கிறார்கள். அவரது ஆலோசகர் ஒருவரும் இதில் ஈடுபட்டுள்ளார். இந்த அரசில் உள்ளவர்களுக்கு இப்போது இந்தச் சூழ்நிலையைப் பயன்படுத்திக் கொள்ள ஒரு பெரிய வாய்ப்பு கிடைத்துள்ளது. இந்தத் தொழில்களைக் கண்காணிக்க உருவாக்கப்பட்ட கட்டுப்பாடுகள் மிகவும் தளர்ந்துவிட்டன," என அவர் கூறுகிறார். டிரம்ப் கிரிப்டோவில் லாபம் ஈட்டும் முதல் அதிபராக இருக்கலாம், ஆனால் இந்தத் துறையால் ஈர்க்கப்பட்ட முதல் அதிபர் அவர் அல்ல. எல் சால்வடார் நாட்டின் கதை பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, எல் சால்வடோர் நாட்டின் அதிபர் நயிப் புகேலே. எல் சால்வடார் நாடு அதன் இயற்கை அழகு மற்றும் போதைப்பொருள் தொடர்பான வன்முறைகளுக்குப் பெயர் பெற்றது. ஆனால், 2019-ல் நயிப் புகேலே அதிபராகப் பதவியேற்ற பிறகு நிலைமை மாறத் தொடங்கியது. புகேலே தன்னை உலகின் "மிகவும் கூலான சர்வாதிகாரி" அல்லது "உலகின் மிகச் சரியான சர்வாதிகாரி" என்று கூறிக்கொள்கிறார். வன்முறையைக் கட்டுப்படுத்த அவர் பல கடுமையான நடவடிக்கைகளை எடுத்தார், அதன் பிறகு எல் சால்வடார் லத்தீன் அமெரிக்காவின் பாதுகாப்பான நாடுகளில் ஒன்றாக மாறியது. 2021-ல் பிட்காயினைச் சட்டப்பூர்வ நாணயமாக அங்கீகரித்த முதல் நாடு இதுவாகும். கிரிப்டோகரன்சி நாட்டின் குடிமக்கள் வங்கிக் கணக்கு இல்லாமல் நிதிச் சேவைகளைப் பெறுவதற்கு வழிவகுக்கும் என்று அதிபர் புகேலே கூறினார். வெளிநாடுகளில் பணிபுரியும் எல் சால்வடார் நாட்டவர்கள் குறைந்த செலவில் பணத்தை சொந்த நாட்டிற்கு அனுப்ப முடியும் என்று அவர் நம்பினார். பிபிசி மெக்சிகோ மற்றும் மத்திய அமெரிக்க செய்தியாளர் வில் கிராண்ட் கூற்றுப்படி, "நாட்டின் மக்கள் அனைவரும் அன்றாட பரிவர்த்தனைகள் மற்றும் கொள்முதல்களுக்கு பிட்காயினைப் பயன்படுத்த வேண்டும். இந்த நாணயம் மத்திய அமெரிக்காவின் பொது நாணயமாக மாற வேண்டும் என்பதே புகேலேயின் திட்டமாக இருந்தது." "கிரிப்டோகரன்சி ஆதரவு முதலீட்டாளர்கள் மற்றும் நிறுவனங்கள் எல் சால்வடாரை நோக்கி ஈர்க்கப்படும், இது நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்தும்" என்று அவர் நம்பினார். இந்த நேரத்தில், புகேலே "சிவோ வாலட்" என்ற டிஜிட்டல் செயலியை அறிமுகப்படுத்தினார். அதன் பயன்பாட்டை ஊக்குவிக்க, செயலியைப் பதிவிறக்கும் ஒவ்வொருவரின் வாலட்டிலும் 30 டாலர் டெபாசிட் செய்யப்படும் என்று அவர் அறிவித்தார், இதனால் மக்கள் பிட்காயினைப் பயன்படுத்தத் தூண்டப்படுவார்கள் என நம்பினார். பெரும்பாலான மக்கள் அந்தக் கணக்கிலிருந்து 30 டாலரை எடுத்துவிட்டுச் செயலியின் பயன்பாட்டை நிறுத்திவிட்டனர் - இதன் விளைவாகத் திட்டம் தோல்வியடைந்தது என்று வில் கிராண்ட் விளக்குகிறார். இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, நாட்டில் பிட்காயின் பரிவர்த்தனைகள் மொத்தப் பரிவர்த்தனைகளில் ஒரு சதவீதத்திற்கும் குறைவாகவே இருந்தன. உண்மையில், அதிபர் புகேலே எல் சால்வடமாரைக் கிரிப்டோகரன்சி உலகின் மையமாக மாற்ற விரும்பினார். பிட்காயின் மூலம் அனைத்து பரிவர்த்தனைகளும் நடைபெறும் "கிரிப்டோ சிட்டி" என்ற நகரை உருவாக்குவது அவரது கனவாக இருந்தது. "இந்த நகரத்திற்காக கோன்சாகுவா எரிமலையின் வெப்ப ஆற்றலில் இருந்து மின்சாரம் உருவாக்கப்படும் என்று திட்டமிடப்பட்டது. அங்கு வரிகளில் பெரிய தள்ளுபடி வழங்கப்படும் மற்றும் கிரிப்டோகரன்சி உற்பத்தி வசதிகள் உருவாக்கப்படும். ஆனால், மூன்று ஆண்டுகளுக்குப் பிறகும் இந்த நகரத்தின் கட்டுமானப் பணிகள் முறையாகத் தொடங்கப்படவில்லை." என்கிறார் வில் கிராண்ட். எல் சால்வடார் ஒரு ஏழை நாடு, அதன் வருவாயில் கால் பகுதி வெளிநாடுகளில் பணிபுரியும் குடிமக்களிடமிருந்து வருகிறது. பொருளாதார நிலையை மேம்படுத்த, 2025 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் அது, சர்வதேச நாணய நிதியத்துடன் (IMF) கடன் ஒப்பந்தம் செய்து கொண்டது. இந்த ஒப்பந்தத்தின் கீழ், எல் சால்வடாருக்கு 1.4 பில்லியன் டாலர் கடன் வழங்க சர்வதேச நாணய நிதியம் ஒப்புக்கொண்டது. ஆனால், பிட்காயினைச் சட்டப்பூர்வ நாணயமாக மாற்றும் கொள்கையை அதிபர் புகேலே முடிவுக்குக் கொண்டு வர வேண்டும் என்று நிபந்தனை விதித்தது என்று வில் கிராண்ட் விளக்குகிறார். இதன் விளைவாக, இந்தக் கடனுக்கு ஈடாக எல் சால்வடார் தனது கிரிப்டோ கொள்கையிலிருந்து பின்வாங்க வேண்டியிருந்தது. வில் கிராண்டின் கூற்றுப்படி, நாட்டின் சாதாரண குடிமக்கள் ஒருபோதும் பிட்காயினை முழுமையாக ஏற்றுக்கொள்ளவில்லை. மக்கள் ரொக்கப் பணம் அல்லது வங்கிக் கணக்கை மிகவும் பாதுகாப்பானதாகக் கருதுகிறார்கள் - அவர்களுக்கு பிட்காயின் மீது அத்தகைய நம்பிக்கை இல்லை. கிரிப்டோவின் எதிர்காலம் பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, தேர்தல் பிரச்சாரத்தின்போது, அமெரிக்காவை உலகின் 'கிரிப்டோ தலைநகரமாக' மாற்றுவதாக டிரம்ப் உறுதியளித்தார். கேம்பிரிட்ஜில் உள்ள கிங்ஸ் கல்லூரியின் தலைவராக ஜில்லியன் டெட் இருக்கிறார். "நிதி உலகில் ஒரு புதிய சிந்தனை அல்லது அமைப்பு வரும்போதெல்லாம், மக்கள் ஈர்க்கப்பட்டு அதை ஏற்றுக்கொள்கிறார்கள். ஆனால், பல நேரங்களில் அது நடைமுறை ரீதியில் வெற்றியடையவில்லை" என அவர் கூறுகிறார். ஆனால், பின்னர் அதே யோசனையை மேம்படுத்தி மீண்டும் முன்வைத்தால், அது வெற்றியடையும் வாய்ப்பு உள்ளது என்று அவர் கூறுகிறார். கடந்த ஐந்து முதல் பத்து ஆண்டுகளில் கிரிப்டோகரன்சி துறையில் பல புதிய விஷயங்கள் நடந்துள்ளன, அவற்றில் பெரும்பாலானவை அமெரிக்காவிற்கு வெளியே நடந்தன என்று ஜில்லியன் டெட் கூறினார். இப்போது முதல் முறையாக அது அமெரிக்காவில் செயல்படுத்தப்படுகிறது, இதுவே ஒரு பெரிய மாற்றமாகும். "இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு, அமெரிக்க டாலர் உலக வர்த்தகத்தில் முக்கிய நாணயமாக இருந்து வருகிறது, இதன் பலனை அமெரிக்கா தொடர்ந்து அனுபவித்து வருகிறது" என்று அவர் கூறுகிறார். ஆனால், இப்போது கிரிப்டோகரன்சி தொடர்பான நிச்சயமற்ற தன்மையைத் தீர்க்க, அமெரிக்கா ஸ்டேபிள்காயின்களின் (Stablecoin) பயன்பாட்டை அதிகரிக்கும் திசையில் நடவடிக்கை எடுத்துள்ளது. இந்த ஸ்டேபிள்காயின்கள் அரசின் கட்டுப்பாட்டில் இருக்காது, ஆனால் அவை அமெரிக்க டாலருடன் இணைக்கப்படும். ஜில்லியன் டெட் கூற்றுப்படி, டாலரின் ஆதிக்கத்தைத் தக்கவைத்து அதை மேலும் வலுப்படுத்த டாலருடன் இணைக்கப்பட்ட ஸ்டேபிள்காயின்களைத் தொடங்க டிரம்ப் நினைக்கலாம். ஆனால், சீனா மற்றும் பிற நாடுகள் இதில் திருப்தி அடையாது. அவர்கள் தங்கள் நாணயத்தின் செல்வாக்கை அதிகரிக்க புதிய வழிகளைக் கண்டுபிடிப்பார்கள். இந்த இழுபறி நீண்ட காலத்திற்கு நீடிக்கும் மற்றும் வரவிருக்கும் ஆண்டுகளில் போட்டியின் ஒரு புதிய சகாப்தத்தை உருவாக்கும் என்று அவர் கூறுகிறார். அமெரிக்காவை கிரிப்டோகரன்சியின் மையமாக மாற்ற இந்த ஆண்டு ஜூலை மாதம் 'ஜீனியஸ் சட்டம்' (Genius Act) நிறைவேற்றப்பட்டது. இந்தச் சட்டம் குறிப்பாக ஸ்டேபிள்காயின்கள் மற்றும் டாலருடன் இணைக்கப்பட்ட கிரிப்டோகரன்சிகளைக் கட்டுப்படுத்த உருவாக்கப்பட்டது. இந்தச் சட்டத்திற்குப் பிறகு, கிரிப்டோகரன்சி இப்போது அமெரிக்காவின் முக்கிய நீரோட்ட பொருளாதார அமைப்பின் ஒரு பகுதியாக மாறியுள்ளது. கிரிப்டோகரன்சியில் முதலீடு செய்யும் ஒரு பெரிய நிதி நிறுவனம் அல்லது முதலீட்டாளர் தோல்வியடைந்தால், அது உலகப் பொருளாதாரத்தில் பெருமளவு நிலையற்ற சூழலை ஏற்படுத்தலாம் என்று ஜில்லியன் டெட் எச்சரிக்கிறார். "எதிர்காலத்தில் உடனடியாக இது நடக்காமல் இருக்கலாம், ஆனால் ஆபத்து நிச்சயம் உள்ளது. ஸ்டேபிள்காயின்கள் அல்லது பிற கிரிப்டோகரன்சிகளை டாலருடன் இணைப்பது உலகளவில் பரிவர்த்தனைகளில் டாலரின் பயன்பாட்டை அதிகரிக்கக்கூடும். ஆனால், டாலருடன் இணைக்கப்பட்ட கிரிப்டோகரன்சி ஏதேனும் மோசடிக்கு பலியானால், அதனால் மோசமான விளைவும் ஏற்படலாம். இதனால் உலகம் ஒரே இரவில் மாறாது, எனவே அதன் பயன்பாடு குறித்து அதிக கவலைப்படுவதும் சரியல்ல" என்று அவர் கூறுகிறார். கிரிப்டோகரன்சி ஒரு புதிய விஷயம் அல்ல. பிட்காயின்கள் பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பே வந்துவிட்டன. ஆனால், கட்டுப்பாடுகள் இல்லாததால் இந்தத் துறையில் பல பெரிய மோசடிகள் நடந்ததால், நிதி நிறுவனங்கள் அவற்றை இதுவரை முழுமையாக ஏற்றுக்கொள்ளவில்லை. ஆனால், இப்போது டிஜிட்டல் சொத்துகள் உண்மையில் பயனுள்ளவையாக இருக்குமா என்று நாடுகள் புதிய வழிகளில் சிந்திக்க வேண்டிய நேரம் வந்திருக்கலாம். அப்படியானால், டிரம்ப் உண்மையில் கிரிப்டோ பொருளாதாரத்தை உருவாக்குகிறாரா என்பதுதான் கேள்வி? கடந்த ஆண்டு ஐரோப்பாவும் அமெரிக்காவும் கிரிப்டோகரன்சி தொடர்பான விதிகளைச் செயல்படுத்தின, அதன் பிறகு இந்தத் துறையில் முதலீடு அதிகரித்துள்ளது. டொனால்ட் டிரம்ப் இதைப் பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறார் என்று தெரிகிறது. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c04gn1lq9z9o

தனியார் காணியில் இராணுவத்தினரின் வைத்தியசாலை – சட்ட நடவடிக்கைக்கு தயாராகும் சுமந்திரன்

2 weeks ago
வசாவிளானில் தனியார் காணியில் அமைக்கப்படும் இராணுவ வைத்தியசாலைக்கு எதிராக சட்ட நடவடிக்கை - சுமந்திரன் Published By: Vishnu 21 Oct, 2025 | 10:15 PM வசாவிளானில் தனியார் காணியில் இராணுவ வைத்தியசாலை அமைக்கப்பட்டு வரும் நிலையில் காணி உரிமையாளரின் கோரிக்கையை அடுத்து ஜனாதிபதி சட்டத்தரணி சுமந்திரன், தமிழரசுக் கட்சியின் தலைவர் சிவிகே சிவஞானம் மற்றும் வலி வடக்கு தவிசாளர் சுகிர்தன் ஆகியோர் களத்திற்குச் சென்று காணி உரிமையாளருடன் செவ்வாய்க்கிழமை (21) மாலை 6.00 மணியளவில் கலந்துரையாடினர். தனியார் காணி உரிமையாளருடன் கலந்துரையாடிய ஜனாதிபதி சட்டத்தரணி குறித்த இராணுவ வைத்தியசாலை கட்டடத்திற்கு எதிராக சட்ட நடவடிக்கையை மிக விரைவில் மேற்கொள்ளவுள்ளதாக உறுதியளித்தார். https://www.virakesari.lk/article/228330

வன்முறையைத் தூண்டும் பிறந்த நாள் கொண்டாட்ட காணொளி பதிவேற்றம் - வீடு சுற்றிவளைப்பு

2 weeks ago
இளைஞர்களை வன்முறைக்குத் தூண்டியவரின் வீடு பொலிஸாரால் சுற்றிவளைப்பு Published By: Digital Desk 1 22 Oct, 2025 | 10:01 AM இளைஞர்களை வன்முறைக்குத் தூண்டும் வகையில் செயற்பட்ட நபர் ஒருவரின் வீடு இன்று (22) யாழ்ப்பாணத்தில் பொலிஸ் மற்றும் விசேட அதிரடிப்படையினரால் சுற்றிவளைக்கப்பட்டது. யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தில் பொலிஸார் பெற்றுக்கொள்ளப்பட்ட தேடுதல் அனுமதிக்கமைய யாழ்ப்பாணம் முளவை சந்தி அருகில் உள்ள வீடொன்றிலேயே இன்று அதிகாலை சோதனை நடத்தப்பட்டது. அண்மைக்காலத்தில் இளைஞர்களிடம் வன்முறையை தூண்டும் வகையில் தனது பிறந்த நாள் கொண்டாட்ட காணொளியை பதிவேற்றம் செய்தமை, சட்டவிரோத சொத்துக் குவிப்பு போன்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் அந்நபரின் வீட்டில் சோதனை நடத்தப்பட்டது. சோதனை நடவடிக்கையின்போது குறித்த நபர் வீட்டில் இல்லாத நிலையில், அங்கு நிறுத்திவைக்கப்பட்டிருந்த இரண்டு மோட்டார் சைக்கிள்கள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டதுடன், இரண்டு பேர் கைது செய்யப்பட்டதாகவும் அவர்கள் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். https://www.virakesari.lk/article/228345

வன்முறையைத் தூண்டும் பிறந்த நாள் கொண்டாட்ட காணொளி பதிவேற்றம் - வீடு சுற்றிவளைப்பு

2 weeks ago

இளைஞர்களை வன்முறைக்குத் தூண்டியவரின் வீடு பொலிஸாரால் சுற்றிவளைப்பு

Published By: Digital Desk 1

22 Oct, 2025 | 10:01 AM

image

இளைஞர்களை வன்முறைக்குத் தூண்டும் வகையில் செயற்பட்ட நபர் ஒருவரின் வீடு இன்று (22) யாழ்ப்பாணத்தில் பொலிஸ் மற்றும் விசேட அதிரடிப்படையினரால் சுற்றிவளைக்கப்பட்டது.

யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தில் பொலிஸார் பெற்றுக்கொள்ளப்பட்ட தேடுதல் அனுமதிக்கமைய யாழ்ப்பாணம் முளவை சந்தி அருகில் உள்ள வீடொன்றிலேயே இன்று அதிகாலை சோதனை நடத்தப்பட்டது.

அண்மைக்காலத்தில் இளைஞர்களிடம் வன்முறையை தூண்டும் வகையில் தனது பிறந்த நாள் கொண்டாட்ட காணொளியை பதிவேற்றம் செய்தமை, சட்டவிரோத சொத்துக் குவிப்பு போன்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் அந்நபரின் வீட்டில் சோதனை நடத்தப்பட்டது.

சோதனை நடவடிக்கையின்போது குறித்த நபர் வீட்டில் இல்லாத நிலையில், அங்கு நிறுத்திவைக்கப்பட்டிருந்த இரண்டு மோட்டார் சைக்கிள்கள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டதுடன், இரண்டு பேர் கைது செய்யப்பட்டதாகவும் அவர்கள் பொலிஸ் நிலையத்தில்  தடுத்து வைத்து விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

https://www.virakesari.lk/article/228345

பைசன் காளமாடன் -திரைவிமர்சனம்: அனைவரையும் உள்ளடக்கிய அரசியல் பேசும் நெகிழ்ச்சியான ஸ்போர்ட்ஸ் டிராமா!

2 weeks ago
மூன்றாவது அணி இயக்குநர் ஒவ்வொரு காலகட்டத்துக்கும் ஒரு பிரச்சினை இருக்கும் - கடந்த பத்தாண்டுகளில் அது நரேட்டிவ் செட் பண்ணுவதாக இருக்கிறது. அரசியலில் இதைத் துவங்கி வைத்தது பாஜக. பகிங்கரமான குற்றச்சாட்டுகள், கதையாடல்கள், எதிரிடைகளை உருவாக்கி மக்களிடையே வெறுப்பை விதைத்து அந்தப் பரபரப்பையும் பதற்றத்தையும் கொண்டு தம்மைப் பெரியோராகக் காட்டுவது, அதே சமயம் தம்மைப் பாதிக்கப்பட்டோராகவும் முன்னிறுத்துவது. ஊடகங்களைத் தம் வசப்படுத்தி தம்மை விமர்சிப்பவர்களை துரோகிகள், குற்றவாளிகள் என்றோ ஒடுக்குபவர்கள், கொடுமைக்காரர்கள் என்றோ, இரண்டுமேதாம் எனவோ சித்தரிப்பது, இதைக் குறித்து அஞ்சி அவர்கள் வாயை மூடும் சூழலை ஏற்படுத்துவது. இதை ஜெர்மனியில் ஹிட்லரும் ரஷ்யாவில் ஸ்டாலினும் முன்பே பண்ணியிருக்கிறார்கள் என்றாலும் நம் நாட்டில் தேசியம், கட்சிக் கட்டுப்பாடு, சித்தாந்த விசுவாசம் ஆகியவற்றை மீறி மூளைச்சலவையாக மட்டுமே இது இருக்கிறது. அவ்வாறு மூளைச்சலவை செய்து சாதி, மதம் உள்ளிட்ட எதிரிடைகளைக் கொண்டு என்னதான் பாசிசத்தை வளர்த்தாலும் ஒட்டுமொத்தமாக அதே சமூக நீதி மக்களாட்சியைத்தான் இவர்களும் செய்ய வேண்டியிருக்கிறது என்பதொரு சுவாரஸ்யம். சினிமாவில் இத்தகைய நரேட்டிவ் செட்டிங் (அதாவது பிரித்தாளும் எதிர்மைக் கதையாடல்கள்) மூன்றாவது அணித் தோற்றத்திற்கான சூழல் வலுப்பெறும்போதே தோன்றுகிறது. தலித் சினிமாவின் துவக்கத்தில் அது நரேட்டிவ் செட்டிங்காக இல்லையென்றாலும் மெல்லமெல்ல அது அந்த இடத்திற்கே செல்கிறது. மூன்றாவது அணிக் கட்சியினரே தலித் சினிமாவின் இரண்டாவது கட்டத்தில் சில படங்களுக்கு நிதியாளர்களாகவும் இருந்திருக்கக் கூடுமோ எனும் ஐயம் பின்னர் நடந்த சில குற்றச் சம்பவங்களைப் பார்க்கையில் ஏற்படுகிறது. குறிப்பாக, திராவிடக் கட்சிகளுக்கு எதிரான நரேட்டிவ்வை செட் பண்ணுவது இங்கு எடுக்கப்பட்ட சில தலித் படங்களின் நோக்கமாக மாறுகிறது. நரேட்டிவ் செட் செய்வது அடிப்படையில் பண்பாட்டுப் பணி அல்ல, அது படைப்பாளர்களின் நோக்கம் அல்ல, அது நேரடி அரசியலின் பிரச்சார இலக்கு மட்டுமே. அது முழுக்கமுழுக்க தேர்தல் அரசியலில் மட்டுமே செல்லுபடியாகிற செயல்பாடு. அதனாலே தமிழிலோ பிற மொழிகளிலோ தலித் இலக்கியம் மத்திய சாதிகளின் மனசாட்சியை நோக்கிப் பேசுகிற, தமது நிலையை முன்வைக்கிற தன்கதைகளாக மலர்ந்தன. சாதியின் நுட்பங்களை, அது சமூகத்தில் செயல்படுகிற வினோதமான வடிவங்களைச் சித்தரித்தன. தலித் இலக்கியத்தின் நோக்கம் மையப் பண்பாட்டு பெருங்கதையாடல் எதிர்ப்பின் வழியிலான சமூக மாற்றமாகவும் இருந்தது. அதாவது மக்களின் மனத்தில் அன்பின் வழியில் மாற்றத்தை உண்டு பண்ணுவது. மக்களைத் திரட்டி தேர்தல் பிரச்சாரம் வழியாக அதிகாரம் பெறுவதாக இருந்ததில்லை - அது தலித் கட்சிகளின் இலக்கு மட்டுமே. தமிழில் தலித் சினிமா ஒரு கட்டத்தில் கட்சி அரசியல் நரேட்டிவ் செட்டிங் நோக்கிப் போனது ஆச்சரியமானது. ஒருவேளை அரசியல் அதிகாரம், முலதனத்தின் ஒரு பகுதியைக் கைப்பற்றுவது, நிதியாளர்களின் தேவைகள் இதைச் சாத்தியமாக்கி இருக்கலாம். திமுக ஆட்சிக்கு வந்ததும் ரஞ்சித்தை விட்டுவிட்டு மாரி செல்வராஜை எடுத்துக்கொண்டது மேலும் சுவாரஸ்யமானது - ஆனால் மாரி வரலாற்று நிகழ்வுகளின் காலவரிசையை மாற்றுவதை ஒழித்து வேறெதையும் திமுகவுக்கோ அதிமுகவுக்கோ சார்பாகச் செய்யத் தயாராக இல்லை. அவர் செட் செய்கிற நரேட்டிவ் தலித் சமூகத்தினர் தேர்தல் அரசியலில் தனித்திரளாக வேண்டும் என்பதை இதுவரையிலான படங்களைக் கவனித்தால் தெளிவாகப் புரியும். அவருக்குப் பின்னுள்ள சாதித் திரளை பாஜக கவரும் முயற்சியை ஆரம்பித்ததாலே அவர்களை ஆற்றுப்படுத்தும் முயற்சியை திமுக தொடர்ந்து எடுத்து வருகிறது என்பதை அப்பட்டமானது. மாரி இச்சூழலை ஒரு பக்கம் பயன்படுத்திக்கொண்டு தன் படத்துக்கு பரபரப்புகாகவும் தன் மூன்றாவது அணி வெறுப்பு அரசியல் நரேட்டிவ்களை செட் செய்வதற்காகவும் அங்கங்கே மற்றமையையும் சுய-மற்றமையையும் விதைக்கும்வண்ணம் தன் படங்களின் கதையமைப்பை வைக்கிறார். அதாவது கூட்டணியில் சேரும் மூன்றாவது அணியினரைப் போலவே ரெண்டு பக்கமும் நெருப்பு அணையாதபடி பார்த்துக்கொள்கிறார். அவரது 'கர்ணன்', 'மாமன்னன்' போன்ற படங்களில் திமுக அதிமுகவைச் சாடவும் அதிமுக தாம் பாராட்டப்பட்டிருப்பதாகச் சொல்லவும் போதுமான குழப்பத்தை இடைவெளியாக அவர் விட்டுவைத்திருப்பார். இரண்டு பக்கமும் கொந்தளிக்க மாரி "டேய் நீ போய் பருத்தி மூட்டையை குடோன்ல வை" என தன் ஆதரவாலர்கள், எதிர்ப்பாளர்களிடம் சொல்லிக் கொண்டிருப்பார். அது மட்டுமல்ல, அதிமுக-திமுக எனப் பந்தை அடித்துக்கொண்டே இருக்கும் அவர் (பா. ரஞ்சித்தைப் போல) பாஜகவின் இந்துத்துவ அரசியலுக்குள் வரவே மாட்டார். அந்தக் கதவைத் திறந்தே வைத்திருப்பது தன் மதிப்பை அதிகரிக்கும் என அவருக்கு ஒரு உள்ளுணர்வு இருக்கிறது. அயோத்திதாசர், அம்பேத்கர், இங்கு அதையொட்டித் தோன்றிய தமிழ்த் தேசியம், ஆதி-திராவிடம், பூர்வ பௌத்தம் எனப் போய் இந்துத்துவாவை வைதீக ஒடுக்குமுறையாளர்களின், திருடர்களின் சித்தாந்தம் என்று சொன்னால் பின்னர் தான் அதிமுக, திமுக முகாம்களுக்குள் மாட்டிக்கொள்ளக் கூடும் என்பதால் அவர் பாஜகவை ஒரு வெற்றிடமாகவே பாவிக்கிறார். அவரது திறமையான சினிமா மொழியும் உணர்ச்சிகரமான முன்வைப்பும், தன் கதைகள் தன்னனுபவக் கதையாடல்கள் என்று எளிமைப்படுத்தும் போக்கும் இந்த அரசியல் நோக்கத்தை சுலபத்தில் யாரும் கவனிக்க முடியாதபடி பண்ணுகிறது. சினிமா நடைமுறை அரசியலுக்கு நெருக்கமாக வந்தால் நடக்கிற ஒன்றுதான் இப்போது மாரி செல்வராஜ் விசயத்தில் நடக்கிறது. அவர் தேர்தலில் போட்டியிடுவாரா என ஊடகவியலாளர்களை செட் பண்ணி கேள்வி கேட்க வைப்பது, அதற்கு இப்போ நிறைய வேலை கிடக்கு எனப் பதில் சொல்வது, மூன்று பேர்களை அனுப்பி தன் படத்துக்கு எதிராக முழங்க வைத்து அதற்கு விளக்கமும் மறுப்பும் சொல்வதற்கும், ஒரு ஆர்வத்தைத் தூண்டுவதற்கு, மறைமுகச் சேதியைக் கட்சிக்காரர்களுக்கு அனுப்ப ஊடகச் சந்திப்பை நடத்துவது என அவர் செய்வதையெல்லாம் பார்க்க ஜாலியாக இருக்கிறது. இச்சந்திப்பில் நாக்கிப் பிரகி தான் ரொம்பக் கஷ்டப்பட்டு நரேட்டிவ்வை செட் பண்ண முயன்று வருவதாகவும், அதை முப்பது பேர் இணையத்தில் அமர்ந்து விமர்சிப்பதகாவும் சொல்லி சட்டென அதைத் திருத்தி கஷ்டப்பட்டு ஏற்கனவே இருந்த நரேட்டிவை உடைக்க முயற்சி பண்ணுவதாகச் சொல்வதைப் பார்க்க இன்னும் சுவாரஸ்யமாக இருந்தது. நாக்கு குழறும்போது உண்மை முந்திக்கொண்டு விடும் என பிராயிட் சொன்னார் (அடக்கப்பட்ட காமத்தின் பொருளில்). இதற்கு முன் அடிக்கடி நாக்கு குழறுபவராக நம் அண்ணாமலைதான் இருந்தார் என்பது நினைவுக்கு வருகிறது. எனக்கு மாரியின் படங்களை விட இந்த அரசியல் குசும்பு தான் பிடித்திருக்கிறது. இப்படி ஊரையே ஏமாற்றி ஓடவிட தனித்திறமை வேண்டும். Posted by ஆர். அபிலாஷ் https://thiruttusavi.blogspot.com/2025/10/blog-post_21.html

யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025

2 weeks ago
அவாவை விட‌ சிற‌ப்பாக‌ தொட‌க்க‌ம் கொடுக்க‌ திற‌மையான‌ ம‌க‌ளிர் அவுஸ்ரேலியா அணியில் இருக்கின‌ம் உல‌க‌ கோப்பை தொட‌ங்க‌ முத‌ல் ப‌ல‌ ச‌ர்வ‌தேச‌ போட்டிக‌ளில் வ‌ந்த‌ கையோட‌ வெளிய‌ போன‌வா...............அவுஸ்ரேலியா ம‌க‌ளிர் விக்வாஸ்சில் இவா த‌ல‌மையிலான‌ அணி இதுவ‌ரை கோப்பை தூக்க‌ வில்லை................. இந்த‌ உல‌க‌ கோப்பையில் இர‌ண்டு செஞ்செரி அடிச்சா அம்ம‌ட்டும் தான்...........................

பைசன் காளமாடன் -திரைவிமர்சனம்: அனைவரையும் உள்ளடக்கிய அரசியல் பேசும் நெகிழ்ச்சியான ஸ்போர்ட்ஸ் டிராமா!

2 weeks ago
‘பைசன்’ படம் பேசுவது என்ன? மாரி செல்வராஜ் முன்வைத்த நிஜங்கள் என்ன? – இயக்குநர் வசந்த பாலன் ‘நெகிழ்வு’ பதிவு 21 Oct 2025, 2:17 PM தமிழ்ச் சமூகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கும் இயக்குநர் மாரி செல்வராஜின் ‘பைசன்’ திரைப்படம் குறித்து இயக்குநர் வசந்த பாலன் விரிவான விமர்சனத்தை தமது சமூக வலைதளப் பக்கங்களில் வெளியிட்டுள்ளார். பைசன் திரைப்படம் குறித்த இயக்குநர் வசந்த பாலனின் பார்வை: பைசன் / தெக்கத்தி மண்ணின் வாசனை வீசும் கபடி விளையாட்டை அந்த மக்களின் வாழ்வியலுடன், அந்த நிலத்தின் அரசியலுடன் சேர்த்து உணர்ச்சிக் கொந்தளிப்புடன் காளமாடனுக்கு படையல் வைப்பது போல நம்முன் படையல் வைத்திருக்கிறார் மாரி செல்வராஜ். அரசியல் ஒரு சாக்கடை என்று நீங்கள் சொல்லலாம்,,அரசியலுக்குள் நான் இல்லை,,,அரசியல் எனக்கு பிடிக்காது,,,,அரசியல் எனக்கு தெரியாது என்று நீங்கள் எந்த வார்த்தையையும் உச்சரிக்கலாம். ஆனால் உங்கள் வாழ்க்கையை அரசியல் தான் தீர்மானிக்கிறது, உங்கள் படிப்பை அரசியல் தான் தீர்மானிக்கிறது, உங்கள் தேர்வுகளை அரசியல் தான் தீர்மானிக்கிறது உங்களது புதிய இரண்டாயிரம் ரூபாய் நோட்டை அரசியல் தான் தீர்மானிக்கிறது. அப்படி தெக்கத்திய அரசியல் மற்றும் ஜாதிப்பிரச்சினைகளுக்கு (இங்கு அரசியலே ஜாதி மதங்களால் ஆனது தானே) நடுவே மாட்டிக் கொண்ட கிட்டான் என்கிற கதாபாத்திரம் எப்படி அலைக் கழிக்கப்படுகிறது என்பதை சுவாரஸ்யம் குறையாத நான் லீனியர் திரைக் கதையமைப்பில் அற்புதமாக மாரி விவரிக்கிறார். அர்ஜூனா விருது பெற்ற கபடி வீரர் மணத்தி கணேசனின் வாழ்க்கையைத் தழுவி எழுதப்பட்ட திரைக்கதை. வழக்கமாக ஸ்போர்ட்ஸ் டிராமா திரைப்படங்கள் விளையாட்டு குழுவின் அரசியல், அதற்குள் உள்ள சதிகள், விளையாட்டின் விதிமுறைகள், பயிற்சியாளர் சொல்லி தருகிற விதிகள், மாற்றுவிதிகள், குறுக்கு வழிகள்,விளையாட்டு வீரனின் குடும்பம் மற்றும் அவனின் மனக்குழப்பங்கள் தடுமாற்றங்கள் இவைகளைத் தான் நாம் பல்வேறு திரைப்படங்களில் பார்த்திருப்போம். சர்பேட்டா பரம்பரை திரைப்படத்தில் ஒருவன் வெற்றியை சுவைக்க விடாமல் அரசியல் எப்படி பாதிக்கிறது என்பதை ரஞ்சித் சென்னை நகர பின்னணியில் வரலாற்று நிகழ்வுகளுடன் சொல்லியிருந்தார். அதே போன்று தெக்கத்திய மண்ணின் ஆன்மாவோடு அங்கு நிலவும் சாதிப் பிரச்சினைகள், சண்டைகள், கொந்தளிப்புகள் எப்படி சாக்கடைக்கும் கீழே வாழ விதிக்கப்பட்டிருக்கும் ஒருவனின் வாழ்வை துண்டாடுகிறது என்பதை அத்தனை அழுத்தமாக கொந்தளிப்புடன் கண்ணீருடன் நம் முன் வைக்கிறார் மாரி. ஏன் இந்த ஊர விட்டு ஓடனும்? இனிமே என்னால ஓடமுடியாது ஏன் என்னை இந்த ஊருல இருக்கிற கபடி டீம்ல சேத்துக்கமாட்டேனு சொல்றாங்க? உன் காலத்துல உங்கப்பா காலத்துல உங்க தாத்தா காலத்துக்கு முன்னாடி இருக்கிற பிரச்சினை என்னை ஏன் விளையாட விடாமல் தடுக்கிறது? காதலிக்க விடாமல் தடுக்கிறது என்று துருவ் கேட்கும் போது ஏன்னா அதான்டா நம்ம விதி என்று பசுபதி சொல்லிவிட்டு அழும் போது சிறந்த துணை நடிகருக்கான தேசிய விருது பசுபதிக்கு இந்த திரைப் படத்திலாவது கிடைக்க வேண்டுமென மனம் அடித்து கொள்கிறது. சர்பேட்டா பரம்பரை திரைப்படத்தில் அத்தனை வித்யாகர்வத்தோடு கம்பீரமாக ஒரு வாத்தியாராக நடித்திருந்த பசுபதி இந்த திரைப்படத்தில் கையாலாகாத சம்சாரியாக கூனி குறுகி தன் கோவக்கார பையனை ஒரு கோழிக்குஞ்சு போல கைக்குள்ளே வைத்து பொத்தி பாதுகாக்கிற கதாபாத்திரத்தில் கதறுகிறார் சண்டை போடுகிறார் முதுமை காரணமாக சண்டை போட முடியாமல் விழுந்து கிடக்கிறார் அழுகிறார் கொந்தளிக்கிறார் வெறி கொண்டு சாமியாடுகிறார். ஒரு துளியில் கூட பசுபதி என்ற நடிகன் தெரிந்து விடாமல் தோற்று போன சம்சாரியாக திரையில் தெரிகிறார். இத்தனை ஆண்டுகளாக மழைக்கு காத்திருக்கும் பூமி போல அழகான கதாபாத்திரங்களுக்காக காத்திருந்து காத்திருந்து நடிக்கிறார். அது பெரிய ஆன்ம பலம். வாழ்த்துகள் பசுபதி சார். ஒரு கெடாவை பஸ்ஸில் அழைத்துப்போக முடியாத அளவிற்கு சாதி நெருக்கடிகள் தென்தமிழகத்தை ஆட்டிப்படைக்கிறது என்பதை அந்த கெடாவின் ரத்தத்தோடு அந்த காட்சி விரியும் போது பரியேறும் ருமாளில் வருகிற கருப்பி நினைவுக்கு வந்து விட்டாள். மாரியின் படங்களில் வருகிற விலங்குகள் கதையின் ஆன்மாவாகவே இருக்கின்றன. எனக்கு தெரிந்து வேறு எந்த சினிமாவிலும் விலங்குகளை அழகியல் படிமமாக அரசியல் படிமமாக வைத்து கொண்டு காத்திரமாக கதை சொன்ன வேறு இயக்குநர் எனக்கு தெரிந்து யாரும் இல்லை. பரியேறும் பெருமாளில் நாய், கர்ணனில் குதிரை, மாமன்னனில் பன்றி இப்போது காளமாடன். மூன்றே காட்சிகளில் எத்தனை அழகான கவித்துவமான காதல் கதையை நம் முன் வைக்கிறார். மஞ்சனத்தி வாசத்தை காதலில் கலந்து உதிரும் சருகுகளாக பறக்கவிடுகிறார். துருவ் படம் நெடுக பேசும் வசனம் ஒரு பக்கம் அளவு கூட இருக்காது ஆனாலும் கபடி களத்தில் அவர் கபடி விளையாடுகிற காளமாடன் உடல் மொழியும் படம் நெடுக காணும் கிராமத்து மண் சாலைகளிலும் சென்னை வீதிகளிலும் ஜப்பான் விளையாட்டு அரங்கிலும் அவர் ஓடிக்கொண்டேயிருக்கும் போது வெளிப்படுத்தும் உடல் மொழி ஆயிரம் உணர்வுகளை வெளிப்படுத்த வார்த்தையற்றவனின் உடல் மொழி. அவனை பாடச்சொன்னால் இந்த ஜனம் கேட்டு தீராத பாடலை ஆண்டுக்கணக்காக பாடித் தீர்ப்பான்.. அப்படியிருக்கிறது துருவின் உடல் மொழி. அந்த மொழி நம்முடன் பேசியவண்ணம் இருக்கிறது. வழக்கமாக தமிழ் கதாநாயகர்கள் நக்கல் நையாண்டிகளில் கலகலவென்று பேசி ரசிகர்களை கவர்வார்கள் இதில் தன் உடல் மொழியால் திரை முழுக்க நிறைந்திருக்கிறார் துருவ். நம் வீடுகளில் வளர்ந்து நிற்கிற நிஜ ஊமை மாடனாக ஒரு பையன் இருப்பான். அவனை துருவ் நினைவு படுத்துகிறார். நான் என் இளமைப்பருவத்தில் இப்படித்தான் இருந்தேன்.. என் மகனும் இப்போது அப்படி தான் இருக்கிறான்.. தன் உணர்வுகளை வார்த்தைகளால் வெளிப்படுத்தத்தெரியாத ஒரு ஊமைக்கொட்டான் என்று செல்வார்கள்.. அப்படி ஒரு பையன் தன் கனவை நோக்கி செல்லும் போது நம் வீட்டு பையன் ஜெயிக்கவேண்டுமென்ற ஆசையில் துருவ் கபடியில் வெல்லும் போது திரையில் விசில் பறக்கிறது. விளையாட்டின் இறுதி தருணங்களில் பசுபதி கண்களை பொத்திக் கொள்வதைப்போல விளையாட்டின் இறுதி தருணத்தை காணமுடியாமல் ஐய்யோ நம்ம புள்ளை ஜெயிக்கனுமே என்று நாமளும் கண்களை பொத்திக்கொள்கிறோம். துருவ் வெல்லும் போது பசுபதி போல நாமும் நம் கண்களை நனைக்கிறோம்.வெல்வது யாருக்கும் எளிதல்ல ஐநூறு மைல்களுக்கு அப்பால் உள்ள குக்கிராமத்தில் இருந்து வெளியேறி வந்து வெல்வது சாதாரண வெற்றியல்ல.. அதனாலே நகரத்தின் மாபெரும் திரையரங்கில் படம் பார்த்த அத்தனை வெற்றியாளர்களின் கண்களிலும் கண்ணீர் பூக்கிறது. பரிமேறும் பெருமாள், கர்ணன், மாமன்னன்,வாழை,பைசன் என மாரி செல்வராஜின் வலிகள் சொல்லி அடங்காமல், சொல்லில் உறையாமல்,சொல்லி ஆறாமல், அழுது ஆற்றாமல், எத்தனை ஒப்பாரிகளுக்கு பின்பும் இன்னும் இன்னும் ஆங்காரமாக, துளி கங்கு அணையாமல், சாம்பல் இந்த பெருநிலமெங்கும் கதைகளாக பாடல்களாக திரை வண்ணங்களாக பறந்து பரவிய வண்ணம் இருக்கிறது. ஒரு எழுத்தாளன் ஒரு கவிஞன் திரைக்குள் இயக்குநராக நுழைந்தால் என்ன நடக்குமோ, என்ன அதிசயங்கள் நடக்குமோ, அது இந்த ஐந்து திரைப்படங்களில் நடந்திருக்கிறது. நகரத்தின்,வெற்றியின் எந்த சொகுசும் மாரியின் ரத்தத்தில் கலக்கவில்லை என்பதற்கு இந்த படங்களே சாட்சி. எத்தனை புறக்கணிப்புகளை சந்தித்த ஆத்மாவாக இருந்தால் இடையறாது தன் ஒப்பாரிகளை சொல்லியவண்ணம் இருக்கும். இது மாரி செல்வராஜ் என்கிற தனி மனிதனின் வலியல்ல. இரண்டாயிரம் ஆண்டுகளாக சாதியின் பெயரால் புறக்கணிப்புகளை,வலிகளை அனுபவித்த தலைமுறையின் பாடல். அந்த தலைமுறைகளின் ஆற்றாத கண்ணீர் தான் மாரியின் திரைப்படங்கள். தொடர்ந்து ஐந்து படங்களாக கமர்சியல் சினிமா என்கிற பசியோடு அலைகிற சிங்கத்திடம் சிக்காமல் திரை அழகியலுடன் திரைப்படம் எடுத்து வெற்றி பெறுவது என்பது உண்மையில் சாதாரண சாகசம் அல்ல. பெரிய சாகசம்.! எதிர்மறை எண்ணங்களும் கருத்துகளும் குவியும் சமூக வலைதளங்கள் அதில் கொட்டப்படும் லட்சக்கணக்கான விமர்சனங்கள் இன்ஸ்டாவில் வாழும் gen z இளைஞர்களின் காலத்தில் ஒரு படம் வெற்றி பெறுவது என்பது அரிதிலும் அரிதான விசயம். தன் நெஞ்சை கோடாரியால் ரெண்டாகப் பிளந்து நிற்கிற உண்மையான கலைஞனாகவே மாரியை நான் பார்க்கிறேன். அவர் படங்களில் ஒப்பனைகள் இல்லை. அலங்காரங்கள் இல்லை. நிலப்பரப்பில் இருந்து பெண்கள் வரை யாரும் கவர்ச்சியாக இல்லை. அதிரடி சண்டைக்காட்சிகள் இல்லை. எதை நீங்கள் அருவறுக்கிறீர்களோ அதை அழகாக்கி உங்கள் முன் காட்சி பிம்பங்களாக படைக்கிறார். சாதிகளால் கட்டப்பட்ட அந்த ஏழாம் உலகம் நமக்கு நம் சமூகத்தின் நிஜங்களைப் புரிய வைக்கிறது. நம்மை புதுப்பிக்க மாற்றிக்கொள்ள அவரின் திரைப்படங்கள் உதவுகின்றன. வெறும் மெலோடிராமா வகை இயக்குநர் என்று என்னை சுருக்க முடியாது ஆக்சன் படங்கள் எடுக்கக்கூடிய இயக்குநரும் தான் என்பதை மாரி இந்த படத்தில் வரும் இரண்டு கொலை முயற்சிகளைப் பார்க்கும் போது நமக்கு குலை நடுங்குகிறது. வாழ்த்துகள் மாரி தெக்கத்திய மண்ணின் ஆத்மா உங்கள் ஆத்மாவோடு இரண்டற கலந்திருக்கிறது. தமிழ் சினிமாவின் பெருஞ்செல்வம் நீங்கள்! https://minnambalam.com/what-does-the-film-bison-convey-the-realities-mari-selvaraj-highlights-emotional-note-by-director-vasanthabalan/

பொறுப்புக்கூறல் விவகாரத்தில் சர்வதேச சமூகத்தின் உதவியை நாடுவதில் தமிழர்கள் சிந்திக்க வேண்டியவை  காரணிகள் — வீரகத்தி தனபாலசிங்கம் — 

2 weeks ago
பொறுப்புக்கூறல் விவகாரத்தில் சர்வதேச சமூகத்தின் உதவியை நாடுவதில் தமிழர்கள் சிந்திக்க வேண்டியவை காரணிகள் October 22, 2025 — வீரகத்தி தனபாலசிங்கம் — திருகோணமலை கடற்கரையில் 2006 ஜனவரி 2 ஆம் திகதி விசேட அதிரடிப் படையினரால் படுகொலை செய்யப்பட்ட ஐந்து தமிழ் மாணவர்களில் ஒருவரான ரஜிஹரின் தந்தையார் வைத்தியக் கலாநிதி காசிப்பிள்ளை மனோகரன் செப்டெம்பர் பிற்பகுதியில் லண்டனில் காலமானார். மகனின் கொலைக்கு நீதி கோரி தனது இறுதிமூச்சு வரை போராடிய அவரையும் இதுவரையில் நீதி மறுக்கப்பட்ட சகலரையும் நினைவுகூருவதற்கு ‘மக்கள் செயல்’ என்ற அமைப்பு அக்டோபர் 6 ஆம் திகதி ‘கானல் நீதி’ என்ற தொனிப் பொருளில் யாழ்நகரில் தந்தை செல்வா கலையரங்கில் நிகழ்வொன்றை ஏற்பாடு செய்திருந்தது. அந்த நிகழ்வில் உரையாற்றியவர்களில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் நிகழ்த்திய உரைக்கு தமிழ் ஊடகங்கள் குறிப்பாக பத்திரிகைகள் பெரும் முக்கியத்துவத்தைக் கொடுத்திருந்தன. உள்நாட்டுப் போரின் இறுதிக்கட்டத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படுகின்ற மனித உரிமை மீறல்கள், சர்வதேச மனிதாபிமானச் சட்ட மீறல்கள் மற்றும் போர்க்குற்றங்களுக்கு இலங்கை அரசை பொறுப்புக்கூற வைப்பதற்கு சர்வதேச சமூகத்தின் உதவியை நாடி தமிழர்கள் இதுகாலவரையில் முன்னெடுத்த முயற்சிகளின் இன்றைய நிலை குறித்து அவர் விளக்கிக் கூறியதே பிரதான காரணமாக இருந்தது எனலாம். பொன்னம்பலம் தனது உரையில் தமிழர்களின் நீதி தேடலின் இன்றைய இக்கட்டான நிலையை தெளிவுபடுத்தியதுடன் நீதியைப் பெறுவதற்கு தமிழர்கள் பயணிக்க வேண்டிய பாதை மற்றும் கடைப்பிடிக்க வேண்டிய அணுகுமுறைகள் தொடர்பிலான தனது நிலைப்பாட்டையும் விளக்கிக்கூறினார். பொறுப்புக்கூறல் விவகாரம் ஜெனீவா ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவைக்குள் முடக்கப்பட்டிருக்கும் வரை தமிழர்களுக்கு ஒருபோதுமே நீதி கிடைக்கப்போவதில்லை என்றும் தற்போதைய சூழ்நிலையில் எந்தவொரு வெளிநாட்டு அரசுமே இலங்கையை எந்தவொரு நீதிமன்றத்தின் முன்பாகவும் நிறுத்துவதற்கு தயாராயில்லை என்றும் கூறிய பொன்னம்பலம், மனித உரிமைகள் பேரவையில் 2012 ஆம் ஆண்டு தொடக்கம் இதுவரையில் நிறைவேற்றப்பட்டு வந்திருக்கும் தீர்மானங்கள் சகலதுமே சர்வதேச வல்லரசுகளின் புவிசார் அரசியல் நலன்களை அடைவதை நோக்கமாகக் கொண்ட கருவிகளாக இருந்தனவே தவிர, பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதியையும் பொறுப்புக்கூறலையும் உறுதிசெய்யக்கூடியவையாக இருக்கவில்லை என்ற தனது கட்சியின் நிலைப்பாட்டை மீண்டும் வலியுறுத்திக் கூறினாார். ஜெனீவா செயன்முறைகள் தமிழர்களுக்கு நடந்ததை வெறுமனே போர்க் குற்றங்கள் மற்றும் மனித குலத்துக்கு எதிரான குற்றங்களாக குறுக்குவதாக அமைந்திருப்பதாக குற்றஞ்சாட்டிய பொன்னம்பலம் இலங்கையில் இடம்பெற்றது தமிழின அழிப்பு (Genocide) என்று உறுதியான நிலைப்பாட்டைக் கொண்டிருக்கிறார். மனித உரிமைகள் பேரவையின் ஊடாக இன அழிப்புக்கு இலங்கை அரசைப் பொறுப்புக்கூற வைப்பது ஒருபோதும் சாத்தியமில்லை என்பது அவரது உறுதியான நம்பிக்கையாக இருக்கிறது. அவரின் கருத்துக்களை ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 60 கூட்டத் தொடரின்போது இலங்கையின் பொறுப்புக்கூறல் தொடர்பாக அக்டோபர் 6 ஆம் திகதி நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் பின்புலத்தில் நோக்க வேண்டியிருக்கிறது. இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகள் தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகத்தின் ஆணையை மேலும் இரு வருடங்களுக்கு புதிய தீர்மானம் நீடித்திருக்கிறது. அதன் மூலமாக மனித உரிமைகள் அலுவலகத்தில் ஏற்கெனவே நிறுவப்பட்டிருக்கும் ‘இலங்கை பொறுப்புக்கூறல் செயற்திட்டத்தினால் (Sri Lanka Accountability Project) முன்னெடுக்கப்பட்டு வருகின்ற சாட்சியங்களை சேகரிக்கும் பொறிமுறையும் இரு வருடங்களுக்கு நீடிக்கப்படுகிறது. இதை தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் திட்டவட்டமாக நிராகரித்திருக்கிறது. மனித உரிமைகள் பேரவையின் 60 வது கூட்டத்தொடர் தொடங்குவதற்கு முன்னதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியையும் வேறு சில தமிழ் அரசியல் கட்சிகள் மற்றும் சிவில் சமூக அமைப்புக்களையும் உள்ளடக்கிய தமிழ் தேசிய பேரவையும் இலங்கை தமிழரசு கட்சியும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகருக்கும் மனித உரிமைகள் பேரவையின் உறுப்பு நாடுகளுக்கும் தனித்தனியாக கடிதங்களை அனுப்பியிருந்தன. அந்தக்கடிதங்களில் மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பாக நிறைவேற்றப்படவிருந்த தீர்மானத்தில் உள்ளடக்கப்பட வேண்டியவை என்று அவர்கள் கருதும் விடயங்களை இரு தரப்பினரும் குறிப்பிட்டிருந்தனர். மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகத்தின் இலங்கை பொறுப்புக்கூறல் செயற்திட்டத்தின் ஆணை நீடிக்கப்படுவதில் தங்களுக்கு ஆட்சேபனை இல்லை என்று தெரிவித்த தமிழ் தேசிய பேரவை குறிப்பிட்ட கால அவகாசத்திற்குள் அதன் செயற்பாடுகள் நிறைவு செய்யப்பட வேண்டிய அவசியத்தை வலியுறுத்தியது. அத்துடன் இலங்கை விவகாரத்தை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு (International Criminal Court ) பாரப்படுத்த வேண்டும் என்று ஐக்கிய நாடுகள் பொதுச் செயலாளர், பொதுச்சபை மற்றும் பாதுகாப்புச்சபையை வலியுறுத்தும் முன்மொழிவு புதிய தீர்மானத்தில் இடம் பெறவேண்டும் என்றும் தமிழ் தேசிய பேரவை வேண்டுகோள் விடுத்திருந்தது. அதேவேளை, தமிழரசு கட்சி ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச்சபையில் தீர்மானம் ஒன்றை நிறைவேற்றும் செயன்முறை ஊடாக இலங்கை விவகாரத்தை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்துக்கு கொண்டுசெல்வது பெரும்பாலும் நடைமுறைச் சாத்தியற்றது என்ற போதிலும், அந்த நீதிமன்றத்தை தாபித்த றோம் சாசனத்தை (Rome Statute ) ஏற்றுக்கொள்வதற்கு இலங்கையை இணங்க வைப்பதற்கான முன்மொழிவை தீர்மானம் முன்வைக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தது. றோம் சாசனத்தை இலங்கை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று ஏற்கெனவே இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகரும் யோசனை கூறியிருந்ததையும் தமிழரசு கட்சி கடிதத்தில் சுட்டிக்காட்டியது. அந்த வேண்டுகோள்களை மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பான தீர்மானத்தைக் கொண்டு வந்த பிரிட்டன், கனடா உட்பட மையநாடுகள் கவனத்தில் எடுத்ததற்கான தடயம் எதையும் தீர்மானத்தில் காணவில்லை. முன்னைய தீர்மானங்களை விடவும் புதிய தீர்மானம் கடுமையானதாக இருக்க வேண்டும் என்று எதிர்பார்த்த தமிழ்த் தரப்புகளுக்கு பலத்த ஏமாற்றமாகப் போய் விட்டது. இலங்கை மீதான சர்வதேச சமூகத்தின் கண்காணிப்பு மேலும் இரு வருடங்களுக்கு நீடிக்கப்பட்டதை தமிழரசு கட்சி வரவேற்றது. “இலங்கையில் பொறுப்புக்கூறலையும் நல்லிணக்கத்தையும் மேம்படுத்துவதற்கான தீர்மானம் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் வாக்கெடுப்பு இல்லாமல் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. 2012 ஆம் ஆண்டில் இருந்து பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு வந்திருக்கின்ற போதிலும், 16 வருடங்களாக முன்னேற்றம் இல்லாதிருப்பது குறித்து அதிருப்தியடைந்திருந்தாலும், இலங்கை மீதான சர்வதேச கண்காணிப்பு இன்னொரு இரு வருடங்களுக்கு நீடிக்கப்பட்டிருப்பதை நாம் வரவேற்கிறோம்” என்று தமிழரசு கட்சியின் பொதுச்செயலாளர் எம்.ஏ. சுமந்திரன் ‘எக்ஸ்’ சமூக ஊடகத்தில் செய்த பதிவில் குறிப்பிட்டிருந்தார். புதிய தீர்மானத்தை தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் நிராகரித்த போதிலும், வாக்கெடுப்பை நடத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்து அதை சவாலுக்கு உட்படுத்தவில்லை. சாட்சியங்களை சேகரிக்கும் பொறிமுறை மேலும் இரு வருடங்களுக்கு நீடிக்கப்பட்டிருப்பதே அடிப்படைப் பிரச்சினை என்று அரசாங்கம் கூறியது. அரசாங்கத்தின் நிலைப்பாடு குறித்து பாராளுமன்றத்தில் விளக்கமளித்த வெளியுறவு அமைச்சர் விஜித ஹேரத் , ” போர் முடிவுக்கு வந்த உடனடியாகவே நம்பகத்தன்மை வாய்ந்த ஒரு தேசியப் பொறிமுறை அமைக்கப்பட்டிருந்தால், 16 வருடங்களாக ஜெனீவாவில் இலங்கையின் பொறுப்புக்கூறல் பிரச்சினை நீடித்திருக்காது. பிரச்சினை சர்வதேச மயப்படுத்தப்பட்டதற்கு முன்னைய தலைமைத்துவத்தின் குறுகிய அரசியல் குறிக்கோள்களும் தொலை நோக்கின்மையுமே காரணம்” என்று குற்றஞ்சாட்டினார். இலங்கையின் பொறுப்புக்கூறல், நல்லிணக்கம் மற்றும் மனித உரிமைகள் நிலைவரத்தின் முன்னேற்றம் குறித்து முதலில் ஒரு எழுத்துமுல அறிக்கையை மனித உரிமைகள் பேரவையின் 63 வது கூட்டத் தொடரிலும் விரிவான அறிக்கையை 66 வது கூட்டத்தொடரிலும் சமர்ப்பிக்க வேண்டும் என்று தீர்மானம் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகத்தை கேட்டிருக்கும் நிலையில், இரு வருடங்களுக்கு இலங்கை அரசாங்கம் பொறுப்புக்கூறல் விவகாரத்தில் எந்தளவுக்கு அக்கறை காட்டும் என்ற கேள்வி எழுகிறது. மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடர்கள் தொடங்குவதற்கு முன்னதாக மாத்திரமே அரசாங்கங்கள் சர்வதேச சமூகத்தை திருப்திப்படுத்தும் நோக்கில் சில அறிவிப்புக்களைச் செய்வதே வழமையாக இருந்து வந்தது. அந்த போக்கில் இருந்து மாறுபட்டு செயற்படுவதற்கு தேவையான அரசியல் துணிவாற்றலை தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் வெளிக்காட்டும் என்று நம்பக்கூடியதாக இனப்பிரச்சினையில் அதன் அணுகுமுறைகள் அமையவில்லை. பொறுப்புக்கூறல் விவகாரம் சர்வதேசமயப்பட்டதற்கு முன்னைய தலைமைத்துவத்தின் குறுகிய அரசியல் குறிக்கோள்களே காரணம் என்று கூறும் வெளியுறவு அமைச்சரினால் காலங்கடந்த நிலையிலாவது பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஓரளவுக்கேனும் நம்பிக்கையைத் தரக்கூடிய உள்நாட்டுப் பொறிமுறை ஒன்றை நிறுவுவதற்கு தனது அரசாங்கத்தை வழிக்குக் கொண்டு வரமுடியுமா? இந்த நிலையில், கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தனது சிந்தனையில் இலங்கை அரசாங்கம் மீது நெருக்குதல்களை பிரயோகிப்பதற்கு தமிழர்களுக்கு இருக்கக் கூடிய மார்க்கங்கள் குறித்து யாழ்நகர் உரையில் தெரிவித்த கருத்துக்களை நோக்குவோம். பொறுப்புக்கூறல் விவகாரத்தை கையாளுவதற்கு அரசியல் கட்சி வேறுபாடுகளுக்கு அப்பால் பொதுக்கட்டமைப்பு ஒன்றை உருவாக்க வேண்டும் என்று முன்வைக்கப்படுகின்ற கோரிக்கையை ஆதரிக்கும் அவர் அத்தகைய கட்டமைப்பு தொடர்பில் தீர்மானத்தை எடுக்கின்றபோது சில உண்மைகளை விளங்கிக்கொள்ள வேண்டியது அவசியம் என்று கூறுகிறார். தற்போதைய சர்வதேச கட்டமைப்புக்களில் இலங்கை தமிழர்கள் பொறுப்புக்கூறலுக்காக அணுகக்கூடியதாக இருப்பது சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் மாத்திரமே என்று கூறும் பொன்னம்பலம் அந்த நீதிமன்றத்தினால் ஒரு அரசை அல்ல, தனிநபர்களையே விசாரணை செய்ய முடியும் என்பதை ஒத்துக் கொள்கின்ற அதேவேளை, ஒரு அரசை நீதிமன்றத்தில் நிறுத்தக்கூடிய கட்டமைப்பாக விளக்கும் சர்வதேச நீதிமன்றத்தில் (International Court of Justice ) ஒரு அரசினால் மாத்திரமே வழக்குத் தொடரமுடியும் என்பதையும் சுட்டிக் காட்டுகிறார். றோம் சாசனத்தில் இலங்கை கைச்சாத்திடாவிட்டாலும் கூட சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் விசாரணைக்கு இலங்கையை உட்படுத்துவதற்கு மியன்மார் விவகாரத்தை உதாரணமாக அவர் காட்டுகிறார். சர்வதேச குற்றங்களுக்கு பொறுப்பானவர்களுக்கு எதிராக ஒரு அரசினால் இயலாமல் இருக்குமானால் அல்லது அந்த அரசுக்கு விருப்பமில்லாமல் இருக்குமானால் மாத்திரமே சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தினால் தலையீடுசெய்ய முடியும். மியன்மார் அரசு றொஹிங்கியா முஸ்லிம் மக்களுக்கு எதிராக இழைத்துவரும் கொடுமைகள் தொடர்பில் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் இருக்கும் வழக்குத்தொடுநர் அலுவலகமே முறைப்பாட்டைச் செய்து விசாரணை முன்னெடுக்கப்படுவதற்கு வழிவகுத்திருக்கிறது. மியன்மாரும் றோம் சாசனத்தில் கைச்சாத்திடவில்லை. ஆனால், மியன்மார் அரசின் கொடுமைகளில் இருந்து தப்பியோடி இலட்சக்கணக்கான றொஹிங்கியா மக்கள் தஞ்சமடைந்திருக்கும் பங்களாதேஷ் அந்த சாசனத்தில் கைச்சாத்திட்ட காரணத்தினால் அந்த மக்களுக்கு எதிரான வன்முறைகள் பங்களாதேஷிலும் இடம்பெற்றது என்ற அடிப்படையிலேயே சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் அதன் நியாயதிக்கத்தைப் பயன்படுத்துகிறது. றொஹிங்கியா மக்களுக்கு எதிராக மனிதகுலத்துக்கு எதிரான குற்றங்களைச் செய்ததற்காக மியன்மார் இராணுவத் தலைவரைக் கைதுசெய்வதற்கான பிடியாணையைப் பிறப்பிக்குமாறு சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் வழக்குத்தொடுநர் நீதிமன்றத்தை கேட்டிருக்கிறார். இது அந்த விசாரணையின் தற்போதைய நிலைவரம். இது இவ்வாறிருக்க, றொஹங்கியா மக்கள் இன அழிப்புச் செய்யப்படுவதை தடுக்கவில்லை என்றும் இன அழிப்புக்கு பொறுப்பானவர்களை தண்டிக்கவில்லை என்றும் மியன்மார் அரசுக்கு எதிராக குற்றஞ்சாட்டி சிறியதொரு ஆபிரிக்க நாடான காம்பியா 2019 ஆம் ஆண்டில் தொடுத்த வழக்கை சர்வதேச நீதிமன்றமும் தற்போது விசாரணை செய்து வருகிறது. இன அழிப்பைத் தடுப்பதற்கு நடவடிக்கைகளை எடுக்க மியன்மாரை நிர்ப்பந்திக்கும் உத்தரவை அந்த நீதிமன்றம் 2020 ஆம் ஆண்டில் பிறப்பித்தது. தனது தீர்ப்புக்களை நடைமுறைப்படுத்துவதற்கான முறைப்படியான பொறிமுறை எதுவும் சர்வதேச நீதிமன்றத்திடம் கிடையாது. இறுதியில் அவற்றின் நடைமுறைப்படுத்தலும் கூட ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச்சபையில் வீட்டோ அதிகாரத்தைக் கொண்டிருக்கும் ஐந்து நிரந்தர உறுப்பு நாடுகள் சம்பந்தப்பட்ட ஒரு அரசியல் விவகாரமாகவே மாறிவிடுகிறது. சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் தீர்ப்புக்களை றோம் சாசனத்தில் கைச்சாத்திட்ட அரசுகளே நடைமுறைப்படுத்த வேண்டும். இதுவரையில் அந்த நீதிமன்றத்தின் தீர்ப்புக்களை எத்தனை அரசுகளினால் உருப்படியாக நடைமுறைப்படுத்தக்கூடியதாக இருந்தது என்பது இன்னொரு கேள்வி. இலங்கை அரசை பொறுப்புக்கூற வைப்பதற்கு கடந்த 16 வருடங்களாக சர்வதேச சமூகத்தின் உதவியை நாடுவதற்கு தமிழர் தரப்பு முன்னெடுத்த முயற்சிகளின் அனுபவங்களின் அடிப்படையிலேயே அடுத்த நகர்வைப் பற்றி சிந்திக்க முடியும். பொறுப்புக்கூறல் விடயத்தில் தற்போதைய இலங்கை அரசாங்கத்தின் மீது நெருக்குதல்களை பிரயோகிப்பதில் சர்வதேச நாடுகளுக்கு பெரிய அக்கறை இல்லை என்பதையே அக்டோபர் 6 ஜெனீவா தீர்மானம் தெளிவாக வெளிக்காட்டியிருக்கினது. இத்தகைய சூழ்நிலையில் இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வைக் காண்பது தொடர்பிலும் போரின் இறுதிக் கட்டங்களின் குற்றங்களுக்கு பொறப்புக்கூறலை கோருவது தொடர்பிலும் இதுவரையில் கடைப்பிடித்த அணுகுமுறைகளை தமிழர்கள் மீள்பரிசீலனை செய்யவேண்டிய தருணம் வந்துவிட்டது. https://arangamnews.com/?p=12393

பொறுப்புக்கூறல் விவகாரத்தில் சர்வதேச சமூகத்தின் உதவியை நாடுவதில் தமிழர்கள் சிந்திக்க வேண்டியவை  காரணிகள் — வீரகத்தி தனபாலசிங்கம் — 

2 weeks ago

பொறுப்புக்கூறல் விவகாரத்தில் சர்வதேச சமூகத்தின் உதவியை நாடுவதில் தமிழர்கள் சிந்திக்க வேண்டியவை  காரணிகள்

October 22, 2025

— வீரகத்தி தனபாலசிங்கம் — 

திருகோணமலை கடற்கரையில் 2006 ஜனவரி 2 ஆம் திகதி  விசேட அதிரடிப் படையினரால் படுகொலை செய்யப்பட்ட ஐந்து தமிழ்  மாணவர்களில் ஒருவரான ரஜிஹரின் தந்தையார் வைத்தியக் கலாநிதி காசிப்பிள்ளை மனோகரன் செப்டெம்பர் பிற்பகுதியில்  லண்டனில் காலமானார். மகனின் கொலைக்கு நீதி கோரி தனது இறுதிமூச்சு வரை போராடிய அவரையும் இதுவரையில் நீதி மறுக்கப்பட்ட சகலரையும் நினைவுகூருவதற்கு ‘மக்கள் செயல்’ என்ற அமைப்பு அக்டோபர் 6 ஆம் திகதி   ‘கானல் நீதி’ என்ற தொனிப் பொருளில் யாழ்நகரில் தந்தை செல்வா கலையரங்கில்  நிகழ்வொன்றை ஏற்பாடு செய்திருந்தது. 

அந்த நிகழ்வில்  உரையாற்றியவர்களில்   தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம்  நிகழ்த்திய உரைக்கு தமிழ் ஊடகங்கள் குறிப்பாக பத்திரிகைகள் பெரும் முக்கியத்துவத்தைக் கொடுத்திருந்தன.  உள்நாட்டுப் போரின் இறுதிக்கட்டத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படுகின்ற மனித உரிமை மீறல்கள்,  சர்வதேச மனிதாபிமானச் சட்ட மீறல்கள் மற்றும்  போர்க்குற்றங்களுக்கு இலங்கை அரசை பொறுப்புக்கூற வைப்பதற்கு சர்வதேச சமூகத்தின் உதவியை நாடி தமிழர்கள் இதுகாலவரையில் முன்னெடுத்த முயற்சிகளின் இன்றைய நிலை குறித்து அவர் விளக்கிக் கூறியதே  பிரதான காரணமாக இருந்தது எனலாம். 

பொன்னம்பலம் தனது  உரையில்  தமிழர்களின் நீதி தேடலின் இன்றைய இக்கட்டான  நிலையை தெளிவுபடுத்தியதுடன் நீதியைப் பெறுவதற்கு தமிழர்கள் பயணிக்க வேண்டிய பாதை மற்றும் கடைப்பிடிக்க வேண்டிய அணுகுமுறைகள் தொடர்பிலான தனது நிலைப்பாட்டையும் விளக்கிக்கூறினார். 

பொறுப்புக்கூறல் விவகாரம் ஜெனீவா ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவைக்குள் முடக்கப்பட்டிருக்கும் வரை தமிழர்களுக்கு ஒருபோதுமே நீதி கிடைக்கப்போவதில்லை என்றும் தற்போதைய சூழ்நிலையில் எந்தவொரு வெளிநாட்டு அரசுமே இலங்கையை எந்தவொரு நீதிமன்றத்தின் முன்பாகவும்  நிறுத்துவதற்கு தயாராயில்லை என்றும் கூறிய பொன்னம்பலம்,   மனித உரிமைகள் பேரவையில் 2012 ஆம் ஆண்டு தொடக்கம் இதுவரையில் நிறைவேற்றப்பட்டு வந்திருக்கும் தீர்மானங்கள் சகலதுமே சர்வதேச வல்லரசுகளின் புவிசார் அரசியல் நலன்களை அடைவதை நோக்கமாகக் கொண்ட கருவிகளாக  இருந்தனவே தவிர, பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதியையும் பொறுப்புக்கூறலையும் உறுதிசெய்யக்கூடியவையாக  இருக்கவில்லை என்ற தனது கட்சியின் நிலைப்பாட்டை மீண்டும் வலியுறுத்திக் கூறினாார். 

ஜெனீவா செயன்முறைகள் தமிழர்களுக்கு நடந்ததை வெறுமனே போர்க் குற்றங்கள் மற்றும்  மனித குலத்துக்கு எதிரான குற்றங்களாக  குறுக்குவதாக  அமைந்திருப்பதாக குற்றஞ்சாட்டிய பொன்னம்பலம் இலங்கையில் இடம்பெற்றது தமிழின அழிப்பு (Genocide)  என்று  உறுதியான நிலைப்பாட்டைக் கொண்டிருக்கிறார்.  மனித உரிமைகள் பேரவையின் ஊடாக இன அழிப்புக்கு இலங்கை அரசைப் பொறுப்புக்கூற வைப்பது ஒருபோதும் சாத்தியமில்லை என்பது அவரது உறுதியான நம்பிக்கையாக இருக்கிறது. 

அவரின் கருத்துக்களை ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 60 கூட்டத் தொடரின்போது இலங்கையின் பொறுப்புக்கூறல் தொடர்பாக அக்டோபர் 6  ஆம் திகதி நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் பின்புலத்தில் நோக்க வேண்டியிருக்கிறது.

இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகள் தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகத்தின்  ஆணையை மேலும் இரு வருடங்களுக்கு புதிய  தீர்மானம்  நீடித்திருக்கிறது.  அதன்  மூலமாக  மனித உரிமைகள் அலுவலகத்தில் ஏற்கெனவே  நிறுவப்பட்டிருக்கும் ‘இலங்கை பொறுப்புக்கூறல் செயற்திட்டத்தினால் (Sri Lanka Accountability Project) முன்னெடுக்கப்பட்டு வருகின்ற சாட்சியங்களை சேகரிக்கும் பொறிமுறையும் இரு வருடங்களுக்கு நீடிக்கப்படுகிறது.  இதை தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் திட்டவட்டமாக நிராகரித்திருக்கிறது. 

மனித உரிமைகள் பேரவையின் 60 வது கூட்டத்தொடர் தொடங்குவதற்கு முன்னதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியையும்  வேறு சில தமிழ் அரசியல் கட்சிகள் மற்றும் சிவில் சமூக  அமைப்புக்களையும் உள்ளடக்கிய தமிழ் தேசிய பேரவையும் இலங்கை தமிழரசு கட்சியும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகருக்கும் மனித உரிமைகள் பேரவையின் உறுப்பு நாடுகளுக்கும் தனித்தனியாக கடிதங்களை அனுப்பியிருந்தன. அந்தக்கடிதங்களில் மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பாக நிறைவேற்றப்படவிருந்த தீர்மானத்தில் உள்ளடக்கப்பட  வேண்டியவை என்று அவர்கள் கருதும்  விடயங்களை இரு தரப்பினரும் குறிப்பிட்டிருந்தனர். 

மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகத்தின் இலங்கை பொறுப்புக்கூறல் செயற்திட்டத்தின் ஆணை நீடிக்கப்படுவதில் தங்களுக்கு ஆட்சேபனை இல்லை என்று தெரிவித்த தமிழ் தேசிய பேரவை குறிப்பிட்ட கால அவகாசத்திற்குள் அதன் செயற்பாடுகள் நிறைவு செய்யப்பட வேண்டிய அவசியத்தை வலியுறுத்தியது. அத்துடன் இலங்கை விவகாரத்தை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு (International Criminal Court ) பாரப்படுத்த வேண்டும் என்று  ஐக்கிய நாடுகள் பொதுச் செயலாளர்,  பொதுச்சபை மற்றும் பாதுகாப்புச்சபையை வலியுறுத்தும் முன்மொழிவு புதிய தீர்மானத்தில் இடம் பெறவேண்டும்  என்றும் தமிழ் தேசிய பேரவை வேண்டுகோள் விடுத்திருந்தது.

அதேவேளை, தமிழரசு கட்சி ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச்சபையில்  தீர்மானம் ஒன்றை நிறைவேற்றும் செயன்முறை  ஊடாக இலங்கை விவகாரத்தை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்துக்கு கொண்டுசெல்வது  பெரும்பாலும் நடைமுறைச் சாத்தியற்றது என்ற போதிலும், அந்த நீதிமன்றத்தை தாபித்த றோம் சாசனத்தை (Rome Statute )  ஏற்றுக்கொள்வதற்கு  இலங்கையை இணங்க வைப்பதற்கான முன்மொழிவை தீர்மானம் முன்வைக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தது. றோம் சாசனத்தை இலங்கை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று ஏற்கெனவே இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவும் ஐக்கிய நாடுகள் மனித  உரிமைகள் உயர்ஸ்தானிகரும் யோசனை கூறியிருந்ததையும் தமிழரசு கட்சி கடிதத்தில் சுட்டிக்காட்டியது.

அந்த வேண்டுகோள்களை மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பான தீர்மானத்தைக் கொண்டு வந்த பிரிட்டன், கனடா உட்பட மையநாடுகள் கவனத்தில் எடுத்ததற்கான தடயம் எதையும் தீர்மானத்தில் காணவில்லை.  முன்னைய தீர்மானங்களை விடவும் புதிய தீர்மானம் கடுமையானதாக இருக்க வேண்டும் என்று எதிர்பார்த்த தமிழ்த் தரப்புகளுக்கு பலத்த ஏமாற்றமாகப் போய் விட்டது. இலங்கை மீதான சர்வதேச சமூகத்தின் கண்காணிப்பு  மேலும்  இரு வருடங்களுக்கு நீடிக்கப்பட்டதை தமிழரசு கட்சி வரவேற்றது. 

“இலங்கையில் பொறுப்புக்கூறலையும் நல்லிணக்கத்தையும் மேம்படுத்துவதற்கான தீர்மானம் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் வாக்கெடுப்பு இல்லாமல் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. 2012 ஆம் ஆண்டில் இருந்து பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு வந்திருக்கின்ற போதிலும், 16 வருடங்களாக முன்னேற்றம் இல்லாதிருப்பது குறித்து அதிருப்தியடைந்திருந்தாலும், இலங்கை மீதான  சர்வதேச கண்காணிப்பு இன்னொரு இரு வருடங்களுக்கு நீடிக்கப்பட்டிருப்பதை நாம் வரவேற்கிறோம்”  என்று தமிழரசு கட்சியின் பொதுச்செயலாளர் எம்.ஏ. சுமந்திரன் ‘எக்ஸ்’ சமூக ஊடகத்தில் செய்த பதிவில் குறிப்பிட்டிருந்தார். 

புதிய தீர்மானத்தை தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் நிராகரித்த போதிலும்,  வாக்கெடுப்பை நடத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்து  அதை  சவாலுக்கு உட்படுத்தவில்லை. சாட்சியங்களை சேகரிக்கும் பொறிமுறை மேலும் இரு வருடங்களுக்கு நீடிக்கப்பட்டிருப்பதே அடிப்படைப் பிரச்சினை என்று அரசாங்கம் கூறியது. அரசாங்கத்தின் நிலைப்பாடு குறித்து பாராளுமன்றத்தில் விளக்கமளித்த வெளியுறவு அமைச்சர் விஜித ஹேரத் , ” போர் முடிவுக்கு வந்த உடனடியாகவே நம்பகத்தன்மை வாய்ந்த ஒரு தேசியப் பொறிமுறை அமைக்கப்பட்டிருந்தால், 16 வருடங்களாக ஜெனீவாவில் இலங்கையின் பொறுப்புக்கூறல் பிரச்சினை நீடித்திருக்காது.  பிரச்சினை  சர்வதேச மயப்படுத்தப்பட்டதற்கு முன்னைய தலைமைத்துவத்தின் குறுகிய அரசியல் குறிக்கோள்களும்  தொலை  நோக்கின்மையுமே காரணம்” என்று குற்றஞ்சாட்டினார்.

இலங்கையின் பொறுப்புக்கூறல்,  நல்லிணக்கம் மற்றும் மனித உரிமைகள் நிலைவரத்தின் முன்னேற்றம் குறித்து முதலில் ஒரு எழுத்துமுல  அறிக்கையை மனித உரிமைகள் பேரவையின் 63 வது கூட்டத் தொடரிலும் விரிவான அறிக்கையை 66 வது கூட்டத்தொடரிலும் சமர்ப்பிக்க வேண்டும் என்று தீர்மானம் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகத்தை கேட்டிருக்கும் நிலையில், இரு வருடங்களுக்கு இலங்கை அரசாங்கம் பொறுப்புக்கூறல் விவகாரத்தில் எந்தளவுக்கு அக்கறை காட்டும் என்ற கேள்வி எழுகிறது. மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடர்கள் தொடங்குவதற்கு  முன்னதாக மாத்திரமே அரசாங்கங்கள் சர்வதேச சமூகத்தை திருப்திப்படுத்தும் நோக்கில் சில அறிவிப்புக்களைச் செய்வதே  வழமையாக இருந்து வந்தது. 

அந்த போக்கில் இருந்து மாறுபட்டு செயற்படுவதற்கு தேவையான அரசியல் துணிவாற்றலை தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் வெளிக்காட்டும் என்று நம்பக்கூடியதாக இனப்பிரச்சினையில் அதன் அணுகுமுறைகள் அமையவில்லை. பொறுப்புக்கூறல் விவகாரம் சர்வதேசமயப்பட்டதற்கு முன்னைய தலைமைத்துவத்தின் குறுகிய அரசியல் குறிக்கோள்களே காரணம் என்று கூறும் வெளியுறவு அமைச்சரினால்  காலங்கடந்த நிலையிலாவது பாதிக்கப்பட்ட மக்களுக்கு  ஓரளவுக்கேனும் நம்பிக்கையைத் தரக்கூடிய  உள்நாட்டுப் பொறிமுறை ஒன்றை நிறுவுவதற்கு தனது அரசாங்கத்தை வழிக்குக் கொண்டு வரமுடியுமா?

இந்த நிலையில், கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தனது சிந்தனையில்  இலங்கை அரசாங்கம் மீது நெருக்குதல்களை பிரயோகிப்பதற்கு  தமிழர்களுக்கு இருக்கக் கூடிய மார்க்கங்கள் குறித்து யாழ்நகர் உரையில் தெரிவித்த கருத்துக்களை நோக்குவோம்.

பொறுப்புக்கூறல் விவகாரத்தை கையாளுவதற்கு அரசியல் கட்சி வேறுபாடுகளுக்கு அப்பால் பொதுக்கட்டமைப்பு ஒன்றை உருவாக்க வேண்டும் என்று முன்வைக்கப்படுகின்ற கோரிக்கையை ஆதரிக்கும் அவர் அத்தகைய கட்டமைப்பு தொடர்பில் தீர்மானத்தை எடுக்கின்றபோது சில உண்மைகளை விளங்கிக்கொள்ள வேண்டியது அவசியம் என்று கூறுகிறார். 

தற்போதைய சர்வதேச கட்டமைப்புக்களில் இலங்கை தமிழர்கள் பொறுப்புக்கூறலுக்காக அணுகக்கூடியதாக இருப்பது சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் மாத்திரமே என்று கூறும் பொன்னம்பலம் அந்த நீதிமன்றத்தினால் ஒரு அரசை அல்ல, தனிநபர்களையே விசாரணை செய்ய முடியும் என்பதை ஒத்துக் கொள்கின்ற  அதேவேளை, ஒரு அரசை நீதிமன்றத்தில் நிறுத்தக்கூடிய கட்டமைப்பாக விளக்கும் சர்வதேச நீதிமன்றத்தில் (International Court of  Justice )  ஒரு அரசினால் மாத்திரமே வழக்குத் தொடரமுடியும் என்பதையும் சுட்டிக் காட்டுகிறார். 

றோம் சாசனத்தில் இலங்கை கைச்சாத்திடாவிட்டாலும் கூட சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் விசாரணைக்கு இலங்கையை உட்படுத்துவதற்கு மியன்மார் விவகாரத்தை உதாரணமாக அவர் காட்டுகிறார்.  சர்வதேச குற்றங்களுக்கு பொறுப்பானவர்களுக்கு எதிராக ஒரு அரசினால் இயலாமல் இருக்குமானால் அல்லது அந்த அரசுக்கு விருப்பமில்லாமல் இருக்குமானால் மாத்திரமே சர்வதேச  குற்றவியல் நீதிமன்றத்தினால் தலையீடுசெய்ய முடியும்.

மியன்மார் அரசு றொஹிங்கியா முஸ்லிம் மக்களுக்கு எதிராக இழைத்துவரும் கொடுமைகள் தொடர்பில் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் இருக்கும் வழக்குத்தொடுநர் அலுவலகமே முறைப்பாட்டைச் செய்து விசாரணை முன்னெடுக்கப்படுவதற்கு வழிவகுத்திருக்கிறது. மியன்மாரும்  றோம் சாசனத்தில் கைச்சாத்திடவில்லை. ஆனால், மியன்மார் அரசின் கொடுமைகளில் இருந்து தப்பியோடி இலட்சக்கணக்கான றொஹிங்கியா மக்கள் தஞ்சமடைந்திருக்கும் பங்களாதேஷ் அந்த சாசனத்தில் கைச்சாத்திட்ட காரணத்தினால் அந்த மக்களுக்கு எதிரான வன்முறைகள் பங்களாதேஷிலும் இடம்பெற்றது என்ற  அடிப்படையிலேயே சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் அதன் நியாயதிக்கத்தைப் பயன்படுத்துகிறது. 

றொஹிங்கியா மக்களுக்கு எதிராக மனிதகுலத்துக்கு எதிரான குற்றங்களைச் செய்ததற்காக மியன்மார் இராணுவத் தலைவரைக்  கைதுசெய்வதற்கான பிடியாணையைப் பிறப்பிக்குமாறு சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் வழக்குத்தொடுநர் நீதிமன்றத்தை கேட்டிருக்கிறார். இது அந்த விசாரணையின் தற்போதைய நிலைவரம்.

இது இவ்வாறிருக்க, றொஹங்கியா மக்கள்  இன அழிப்புச் செய்யப்படுவதை தடுக்கவில்லை என்றும் இன அழிப்புக்கு பொறுப்பானவர்களை தண்டிக்கவில்லை என்றும்  மியன்மார் அரசுக்கு எதிராக குற்றஞ்சாட்டி  சிறியதொரு ஆபிரிக்க நாடான காம்பியா 2019 ஆம் ஆண்டில் தொடுத்த வழக்கை சர்வதேச நீதிமன்றமும் தற்போது விசாரணை செய்து வருகிறது.  இன அழிப்பைத் தடுப்பதற்கு நடவடிக்கைகளை எடுக்க  மியன்மாரை நிர்ப்பந்திக்கும் உத்தரவை அந்த நீதிமன்றம் 2020 ஆம் ஆண்டில் பிறப்பித்தது. 

தனது  தீர்ப்புக்களை நடைமுறைப்படுத்துவதற்கான முறைப்படியான பொறிமுறை எதுவும் சர்வதேச நீதிமன்றத்திடம் கிடையாது.  இறுதியில் அவற்றின்  நடைமுறைப்படுத்தலும் கூட ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச்சபையில் வீட்டோ அதிகாரத்தைக் கொண்டிருக்கும் ஐந்து நிரந்தர உறுப்பு நாடுகள் சம்பந்தப்பட்ட ஒரு அரசியல் விவகாரமாகவே மாறிவிடுகிறது. சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் தீர்ப்புக்களை றோம் சாசனத்தில் கைச்சாத்திட்ட அரசுகளே நடைமுறைப்படுத்த வேண்டும். இதுவரையில் அந்த நீதிமன்றத்தின் தீர்ப்புக்களை எத்தனை அரசுகளினால் உருப்படியாக நடைமுறைப்படுத்தக்கூடியதாக இருந்தது என்பது இன்னொரு கேள்வி.

இலங்கை அரசை பொறுப்புக்கூற வைப்பதற்கு கடந்த 16 வருடங்களாக சர்வதேச சமூகத்தின் உதவியை நாடுவதற்கு தமிழர் தரப்பு முன்னெடுத்த முயற்சிகளின் அனுபவங்களின் அடிப்படையிலேயே அடுத்த நகர்வைப் பற்றி சிந்திக்க முடியும்.  பொறுப்புக்கூறல் விடயத்தில் தற்போதைய இலங்கை அரசாங்கத்தின் மீது நெருக்குதல்களை பிரயோகிப்பதில் சர்வதேச நாடுகளுக்கு பெரிய அக்கறை இல்லை என்பதையே அக்டோபர்   6  ஜெனீவா தீர்மானம் தெளிவாக வெளிக்காட்டியிருக்கினது. 

இத்தகைய சூழ்நிலையில் இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வைக் காண்பது தொடர்பிலும் போரின் இறுதிக் கட்டங்களின் குற்றங்களுக்கு பொறப்புக்கூறலை கோருவது தொடர்பிலும் இதுவரையில் கடைப்பிடித்த அணுகுமுறைகளை தமிழர்கள் மீள்பரிசீலனை செய்யவேண்டிய தருணம் வந்துவிட்டது. 

https://arangamnews.com/?p=12393

NPP யின் நிகழ்ச்சி நிரலும் தமிழ்த்தேசியத் தரப்பின் எதிர்காலமும் — கருணாகரன் —

2 weeks ago
NPP யின் நிகழ்ச்சி நிரலும் தமிழ்த்தேசியத் தரப்பின் எதிர்காலமும் October 18, 2025 — கருணாகரன் — ஆட்சிக் காலத்திற்கும் அப்பால் தன்னை நிலைப்படுத்திக் கொள்வதற்கு NPP, பல விதமாக வியூகங்களை வகுத்துச் செயற்படுகிறது. பிரதேச ரீதியாக அபிவிருத்திக் குழுக்களை உருவாக்குதல், கிராம மட்டத்தில் அபிப்பிராயக் குழுக்களை அமைத்தல், மாவட்ட ரீதியாக துறைசார்ந்தோரைக் கொண்ட கட்டமைப்புகளை நிறுவுதல், தேசிய மட்டத்தில் வல்லுனர்களின் பங்கேற்புகளை அதிகரிக்கும் வகையிலான நிகழ்ச்சிகளை உருவாக்குதல் எனப் பல வகையில் இந்த வியூகங்கள் அமைகின்றன. எதிர்த்தரப்பில் உள்ள அரசியல் கட்சிகளை அரசியல் ரீதியாக எதிர்கொள்வது, முறியடிப்பது ஒருவகையான வியூகம். எதிர்த்தரப்பினர் மக்களின் செல்வாக்கைப் பெறக்கூடாது, மக்களைத் தம்வசப்படுத்தி வைத்திருப்பது என்ற அடிப்படையில் செயற்படுவது இன்னொரு வகையான வியூகம். இரண்டையும் மிகக் கச்சிதமாகச் செய்கிறது NPP. “இதில் என்ன புதுமை உண்டு?எந்த அரசியற் கட்சிகளுக்கும் உள்ள பொதுவான இயல்புதானே இது? முன்பு ஆட்சியிலிருந்தவர்களும் தங்களுக்குத் தெரிந்த வித்தைகளையெல்லாம் காட்டினார்கள். ‘நிலையான அபிவிருத்தி‘, ‘அரசியற் தீர்வுக்கான முயற்சி‘, ‘புதிய அரசமைப்பு உருவாக்கம்‘ என்றெல்லாம் எத்தனையோ படங்கள் காட்டப்பட்டது. இப்பொழுது NPP தன்னுடைய வேலையைச் செய்கிறது. அது அப்படிச் செய்யும் என்பது எதிர்பார்க்கக் கூடியதுதான். சனங்கள் எல்லாவற்றையும் புரிந்து கொள்ளக் கூடியவர்கள். அவர்கள் தீர்மானித்துக் கொள்வர்“ என்று சிலர் சொல்கிறார்கள். அவர்கள் சொல்வதில் உண்மை உண்டு. ஆனால், அதற்காக ஏனைய தரப்புகளோடு NPP யை சமப்படுத்திப் பார்க்க முடியாது. NPP வேறான ஒன்று. அதனுடைய அடித்தளமும் செயற்பாட்டு முறையும் அதற்கான நுட்பங்களும் வேறு. ஏனைய கட்சிகளிலிருந்தும் முந்திய ஆட்சித் தரப்புகளிடமிருந்தும் அவற்றின் உபாயங்களிலிருந்தும் NPP வேறுபட்டது. மட்டுமல்ல, NPP யைப் பற்றிய பொது மக்களின் அபிப்பிராயம் ஏனைய ஆட்சித் தரப்பினரைப் பற்றியதைப்போல அல்ல. அது வேறானது. ‘ஏனையவற்றை விடப் பரவாயில்லாத தரப்பு‘. ‘நம்பிக்கைக்குரிய சக்தி‘. ‘முற்போக்கானது‘. ‘ மாற்றங்களைச் செய்யக் கூடியவர்கள்‘. ‘நேர்மையானவர்கள்‘, ‘குற்றங்களோடும் ஆட்சித் தவறுகளோடும் சம்மந்தப்படாதவர்கள்‘, ‘முந்திய ஜே.வி.பியும் இன்றைய NPP யும் ஒன்றல்ல‘ என்ற அபிப்பிராயம் அல்லது அவ்வாறானதொரு பார்வை பொதுமக்களிடத்தில் NPP யைப் பற்றி உண்டு. இனப்பிரச்சினையைப் பற்றிய புரிதல், அரசியலமைப்பு உருவாக்கம், பன்மைத்துவம் குறித்த அணுகுமுறை, பல்லினத் தேசியத்தை ஏற்றுக் கொள்வதில் உள்ள தயக்கம் போன்றவற்றில் ஏனைய சக்திகளோடு பெரிய வேறுபாடுகளில்லை என்றாலும் அந்த வேறுபாட்டை உணர முடியாதவாறு NPP நடந்து கொள்கிறது. இதனை யாரும் மறுக்க முடியாது. அப்படி மறுத்தால், அவர்கள் NPP யைச் சரியாகப் புரிந்து கொள்ளவில்லை என்றே அர்த்தமாகும். என்பதால்தான் தமிழ்பேசும் மக்களிடம் NPP க்கும் அநுரகுமார திசநாயக்கவுக்குமான ஆதரவுத் தளம் ஏற்பட்டுள்ளது. பாராளுமன்றத் தேர்தலை விட உள்ளுராட்சித் தேர்தலில் NPP க்குச் சற்றுப் பின்னடைவு ஏற்பட்டுள்ளது என்று யாரும் சமாதானம் சொல்லி ஆறுதலடையக் கூடும். ஆனால், தற்போதைய நிலவரம் அப்படியில்லை. அந்த இறக்கத்தை ஏறுமுகமாக்குவதற்கு NPP தீவிரமாகச் செயற்படுகிறது. அதற்கே ஏற்கனவே சொல்லப்பட்ட கட்டமைப்புகளை உருவாக்குவதும் தொடர்பாடல்களை விரிவாக்குவதுமாகும். அதாவது NPP மிகச் சுறுசுறுப்பாகவும் மிகத் தீவிரமாகவும் வேலை செய்கிறது. இதனை எதிர்த்தரப்புகள் புரிந்து கொள்வது அவசியம். குறிப்பாகத் தமிழ்பேசும் சமூகத்தினர் இந்த விடயத்தில் எச்சரிக்கையோடு இருக்க வேண்டியது அவசியமாகும். ஏனென்றால், NPP யின் அடிச்சட்டம் JVP யே. JVP அடிமட்டத்தில், மக்களுடன் நெருக்கமான உறவைப் பேணுவதிலும் மக்களைப் பங்கேற்பாளர்களாக்குவதிலும் திறன்வாய்ந்தது. எத்தகைய தோல்விகளுக்குள்ளும் திறன் குன்றாமல் வேலை செய்யக் கூடியது. ஆயுதப் போராட்ட காலத்தில் JVP யின் முதுகெலும்பு ஒன்றுக்கு இரண்டு தடவை முறிக்கப்பட்டது. அரசியற் கட்சியாகச் செயற்பட்ட காலத்தில், அரசியல் ரீதியாக பல துண்டுகளாக உடைந்தது அல்லது ஆட்சியாளர்களால் அவ்வாறு உடைக்கப்பட்டது. ஆனாலும் அதனுடைய அடித்தளம் சிதையவில்லை. இரண்டாவது, இடதுசாரி முகத்தைக் கொண்டதாக இருந்தாலும் அதற்கு மாறாக தீவிர இனவாதத்தை வரலாறாகப் பெற்றது. மலையக மக்களை வேற்றாளர்களாகப் பார்ப்பது தொடக்கம், தமிழ், முஸ்லிம் சமூகத்தினரை இரண்டாம் நிலையில் வைத்துப் பார்க்கும் உளத்தைக் கொண்டது. தற்போது கூட அதில் பெரிய அளவில் மாற்றங்களை அவதானிக்க முடியவில்லை. இதையெல்லாம் மறைப்பதற்கே ‘அனைவரும் இலங்கையர்கள். அனைவரும் இலங்கையர்களாகவே கொள்ளப்படுவார்கள்‘ என்ற பெருங்கதையாடல்கள் NPP யினால் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளன. அனைவரும் இலங்கையர்கள்தான் என்ற அடிப்படையில் அனைத்துச் சமூகத்தினரையும் சமனிலையில் NPP நோக்கினால் அது மகிழ்ச்சியே. ஆனால், அது உத்தரவாதப்படுத்தப்பட வேண்டும். அதாவது நடைமுறையாக இருக்க வேண்டும். அப்படியென்றால், அதற்கான நடவடிக்கைகளை NPP படிப்படியாக ஆரம்பித்து நடைமுறைப்படுத்த வேண்டும். அவ்வாறான நடவடிக்கை எதுவும் இதுவரையில் ஆரம்பிக்கப்படவில்லை. ஆனால், இந்தக் கட்டுரையாளர் உட்பட பெரும்பாலான தமிழ்பேசும் மக்கள் அவ்வாறான எதிர்பார்ப்போடும் தேடல்களோடும்தான் உள்ளனர். குறிப்பாக ஜனாதிபதி அநுரகுமார திசநாயக்க, பிரதமர் ஹரிணி ஜெயசூரிய போன்ற சற்றுப் பன்முகத் தன்மையோடு விடயங்களை நோக்கக் கூடியவர்களின் மீதான நம்பிக்கையோடு உள்ளனர். அதை அவர்கள் பாதுகாக்க வேண்டும். அப்படியே அடுத்த கட்டமாக உருவாக்கப்படவுள்ளதாகச் சொல்லப்படும் அரசியலமைப்பை பல்லின சமூகங்களின் தேசம் என்ற வகையில் உருவாக்க வேண்டும். அதை உறுதிப்படுத்தப்படுவது அவசியம். அரசியமைப்பில் எந்தக் காரணம் கொண்டும் சிங்களத்துக்கும் பௌத்தத்திற்கும் முன்னுரிமை அளிக்கக் கூடாது. பௌத்தத்துக்கு முன்னுரிமை அளித்தால், அது சிங்களத்துக்கு முன்னுரிமை அளித்தலாகவே அமையும். “பௌத்தத்துக்கு முன்னுரிமை அளிக்காமல் விட்டால், சிங்களத்தரப்பின் எதிர்ப்பைச் சமாளிக்க முடியாது. ஆட்சியைக் கவிழ்ப்பதற்கே முயற்சிகள் நடக்கும்“ என்ற கதைவிடல்கள் இங்கே அவசியமற்றவை. அப்படியென்றால், அது இதற்குமுன் ஆட்சியிலிருந்த தரப்புகள் சொன்னதையே தேசிய மக்கள் சக்தியும் வெட்கமில்லாமல் சொல்கிறது என்று அர்த்தமாகும். குறிப்பாக1970 களில் இனவன்முறையைக் கட்டவிழ்த்து விட்டு, ஜே.ஆர். ஜெயவர்த்தன சொன்னதைப்போல, ‘சிங்கள மக்கள் விரும்புவதையே தன்னால் செய்ய முடியும். அவர்களுடைய விருப்பத்துக்கு மாறாகச் செய்வது அவர்களுடைய நம்பிக்கைக்கு இழைக்கப்படும் செயலாகும் என்பதைப்போலாகும். ஆக, கட்சிக்குள்ளே அடிப்படையான மாற்றங்களுக்கு எத்தகைய நடவடிக்கைகளையும் எடுக்காமல், வெளியே பெருங்கதையாடல்களைச் செய்யும் ஒரு ஆட்சித்தரப்பாகவே தேசிய மக்கள் சக்தியும் செயற்பட விளைகிறது என்றே கொள்ள வேண்டியுள்ளது. கடந்த கால ஆட்சியாளர்களின் தவறுகளைத் திருத்தம் செய்வதாகச் சொல்லப்பட்டாலும் அதில் இனப்பிரச்சினையைக் கையாண்ட தவறான அணுகுமுறை போன்ற பெரிய விடயங்கள் திட்டமிட்டு விலக்கப்படுகின்றன. அதாவது,தேர்வு செய்யப்பட்ட நிகழ்ச்சி நிரல்களே நடைமுறைப்படுத்தப்படுகின்றன. தேர்வு செய்யப்பட்டு அவசியமானவை புறக்கணிக்கப்படுகின்றன (Only selected agendas are implemented. Selected and necessary ones are ignored). ஆட்சியிலிருக்கும் தரப்பு, தொடர்ந்தும் அதிகாரத்தைப் பெறுவதற்கே விரும்பும்; முயற்சிக்கும் என்பதால் இந்த மாதிரியான விளையாட்டுகளை, தந்திரோபாயங்களாகச் செய்யும் என்று இதற்கும் யாரும் நியாயப்படுத்தல்களைச் செய்யக் கூடும். அப்படியெல்லாம் நியாயப்படுத்தி, NPP யைப் பிணையெடுக்க முற்பட்டால், அவர்கள் இந்த நாட்டையே புதைகுழிக்குள் தள்ளி விடுகிறார்கள் என்றே அர்த்தமாகும். இங்கே NPP யை வழமையான தமிழ் நோக்குநிலையில் வைத்து இந்தச் சொற்களைக் கூறவில்லை. தேசிய மக்கள் சக்தியை ஆதரவுக் கண்ணோட்டத்தில் அணுகுவதனால், அதனுடைய முக்கியத்துவத்தையும் வரலாற்றுப் பொறுப்பையும் உணர்த்துவதற்கே இவை அழுத்தமாகக் கூறப்படுகின்றன. இன்னும் சரியாகச் சொன்னால், மாற்றங்களுக்கான ஒரு சக்தி(தரப்பு) என்ற அடிப்படையில் நம்பிக்கையோடு நோக்கப்படுவதால் தேசிய மக்கள் சக்தியின் பொறுப்புகள் சுட்டிக்காட்டப்படுகின்றன. இனப்பிரச்சினையைத் தீர்க்காமல் பொருளாதாரப் பிரச்சினையைத் தீர்க்கவே முடியாது என்பதையே வரலாறு திரும்பத்திரும்ப நிரூபித்திருக்கிறது. ”இல்லை, நாங்கள் அதைப் புதிய முறையில் செய்துவெற்றியடைவோம்“ என்று NPP சொல்ல முற்பட்டால், எல்லோரும் ஏறி விழுந்த நொண்டிக் குதிரையில்தான் தேசிய மக்கள் சக்தி அரசாங்கமும் ஏறி விழப்போகிறது. மறுபடியும் காதில் துளையிட்டு ஒரு பூச்சூடல். இனவாத அடிப்படையில் விடயங்களை அரசாங்கம் நோக்க முற்பட்டால் நாடு பிளவுண்டதாகவே இருக்கும். ஒருபோதும் ஒற்றுமைப்படாது. பிளவுண்ட நிலையில் இருக்கும் நாட்டில் முன்னேற்றத்தை எட்டவே முடியாது. குறிப்பாக வடக்குக் கிழக்கில் முதலீடுகளுக்கான வாய்ப்பும் சீரான அபிவிருத்தியும் நடக்காது. மலையகத்தில் உள்ள தமிழ் மக்கள் அபிவிருத்தியில் பங்களிக்கவும் பங்குபெறவும் முடியாமல் போய் விடும். இதெல்லாம் ஏற்கனவே சொல்லப்பட்டவாறு தேர்வு செய்யப்படும் அடிப்படையில் ஏற்பும் புறக்கணிப்புமான ஒரு அரசியல் வேலைத்திட்டமாகவே மாறும். அப்படி மாறினால் அது சமூகக் கொந்தளிப்புகளையே உருவாக்கும். அதன்பிறகு எப்படி அனைவரும் இலங்கையர்களாக முடியும்? முந்திய ஆட்சியாளர்கள் மீளவும் அதிகாரத்தைப் பெற முடியாதவாறு தேர்வு செய்யப்பட்ட நடவடிக்கைகள் NPP யினால் மேற்கொள்ளப்படுகின்றன. அதன்படியேதான் ஊழல்வாதிகளின் மீதான நடவடிக்கைகள் தொடக்கம் அனைத்து அரசியல் நிகழ்ச்சி நிரல்களும் அமைகின்றன. இதையே தம்மீதான அரசியல் பழிவாங்கல் நடவடிக்கைகள் என்று எதிர்க்கட்சிகள் சொல்கின்றன. ஆனால், அப்படி அவை சொல்வதற்குரிய தகுதி அவற்றுக்கு இல்லை. அப்படிச் சொல்லித் தங்களுடைய தவறுகளை மறைத்து விடவும் முடியாது. இத்தகைய பின்னணியில் தமிழ், முஸ்லிம், மலையக அரசியல் சமூகங்கள் எப்படித் தங்களுடைய பிரச்சினைக்கான தீர்வை எதிர்கொள்ளப்போகின்றன? அந்தச் சமூகங்களைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்ற அரசியற் கட்சிகள் என்ன செய்யப்போகின்றன? என்ற கேள்விகள் எழுகின்றன. அரச எதிர்ப்பு, NPP யும் இனவாதக் கட்சிதான் என்று வழமையான எதிர்ப்பு அரசியலை மட்டும் செய்வதால் எந்த முன்னேற்றமும் ஏற்படப்போவதில்லை. அத்தகைய அணுகுமுறை நிச்சயமாக அவற்றுக்குக் கைகொடுக்கப்போவதில்லை. மக்களுக்கும்தான். ஆகவே NPP யும் புதிதாகச் சிந்திக்க வேண்டும். ஏனைய தரப்புகளும் புதியனவாகச் செயற்பட வேண்டும். நாட்டைக் கட்டியெழுப்புவதென்பது பிரச்சினைகளுக்கு நியாயமான முறையில் தீர்வுகளைக் காண்பதிலிருந்தே ஆரம்பிக்கப்படுவதாகும். https://arangamnews.com/?p=12391

NPP யின் நிகழ்ச்சி நிரலும் தமிழ்த்தேசியத் தரப்பின் எதிர்காலமும் — கருணாகரன் —

2 weeks ago

NPP யின் நிகழ்ச்சி நிரலும் தமிழ்த்தேசியத் தரப்பின் எதிர்காலமும்

October 18, 2025

NPP யின் நிகழ்ச்சி நிரலும் தமிழ்த்தேசியத் தரப்பின் எதிர்காலமும்

— கருணாகரன் —

ஆட்சிக் காலத்திற்கும் அப்பால் தன்னை நிலைப்படுத்திக் கொள்வதற்கு NPP, பல விதமாக வியூகங்களை வகுத்துச் செயற்படுகிறது. பிரதேச ரீதியாக அபிவிருத்திக் குழுக்களை உருவாக்குதல், கிராம மட்டத்தில் அபிப்பிராயக் குழுக்களை அமைத்தல், மாவட்ட ரீதியாக துறைசார்ந்தோரைக் கொண்ட கட்டமைப்புகளை நிறுவுதல், தேசிய மட்டத்தில் வல்லுனர்களின் பங்கேற்புகளை அதிகரிக்கும் வகையிலான நிகழ்ச்சிகளை உருவாக்குதல் எனப் பல வகையில் இந்த வியூகங்கள் அமைகின்றன. 

எதிர்த்தரப்பில் உள்ள அரசியல் கட்சிகளை அரசியல் ரீதியாக எதிர்கொள்வது, முறியடிப்பது ஒருவகையான வியூகம். எதிர்த்தரப்பினர் மக்களின் செல்வாக்கைப் பெறக்கூடாது, மக்களைத் தம்வசப்படுத்தி வைத்திருப்பது என்ற அடிப்படையில் செயற்படுவது இன்னொரு வகையான வியூகம். இரண்டையும் மிகக் கச்சிதமாகச் செய்கிறது NPP. 

“இதில் என்ன புதுமை உண்டு?எந்த அரசியற் கட்சிகளுக்கும் உள்ள பொதுவான இயல்புதானே இது? முன்பு ஆட்சியிலிருந்தவர்களும் தங்களுக்குத் தெரிந்த வித்தைகளையெல்லாம் காட்டினார்கள். ‘நிலையான அபிவிருத்தி‘, ‘அரசியற் தீர்வுக்கான முயற்சி‘, ‘புதிய அரசமைப்பு உருவாக்கம்‘ என்றெல்லாம் எத்தனையோ படங்கள் காட்டப்பட்டது. இப்பொழுது NPP தன்னுடைய வேலையைச் செய்கிறது. அது அப்படிச் செய்யும் என்பது எதிர்பார்க்கக் கூடியதுதான். சனங்கள் எல்லாவற்றையும் புரிந்து கொள்ளக் கூடியவர்கள். அவர்கள் தீர்மானித்துக் கொள்வர்“ என்று சிலர் சொல்கிறார்கள்.

அவர்கள் சொல்வதில் உண்மை உண்டு. ஆனால், அதற்காக ஏனைய தரப்புகளோடு NPP யை சமப்படுத்திப் பார்க்க முடியாது. NPP வேறான ஒன்று. அதனுடைய அடித்தளமும் செயற்பாட்டு முறையும் அதற்கான நுட்பங்களும் வேறு. ஏனைய கட்சிகளிலிருந்தும் முந்திய ஆட்சித் தரப்புகளிடமிருந்தும் அவற்றின் உபாயங்களிலிருந்தும் NPP வேறுபட்டது. மட்டுமல்ல, NPP யைப் பற்றிய பொது மக்களின் அபிப்பிராயம் ஏனைய ஆட்சித் தரப்பினரைப் பற்றியதைப்போல அல்ல. அது வேறானது. ‘ஏனையவற்றை விடப் பரவாயில்லாத தரப்பு‘. ‘நம்பிக்கைக்குரிய சக்தி‘. ‘முற்போக்கானது‘. ‘ மாற்றங்களைச் செய்யக் கூடியவர்கள்‘. ‘நேர்மையானவர்கள்‘, ‘குற்றங்களோடும் ஆட்சித் தவறுகளோடும் சம்மந்தப்படாதவர்கள்‘, ‘முந்திய ஜே.வி.பியும் இன்றைய NPP யும் ஒன்றல்ல‘ என்ற அபிப்பிராயம் அல்லது அவ்வாறானதொரு பார்வை பொதுமக்களிடத்தில் NPP யைப் பற்றி உண்டு. 

இனப்பிரச்சினையைப் பற்றிய புரிதல், அரசியலமைப்பு உருவாக்கம், பன்மைத்துவம் குறித்த அணுகுமுறை, பல்லினத் தேசியத்தை ஏற்றுக் கொள்வதில் உள்ள தயக்கம் போன்றவற்றில் ஏனைய சக்திகளோடு பெரிய வேறுபாடுகளில்லை என்றாலும் அந்த வேறுபாட்டை உணர முடியாதவாறு NPP நடந்து கொள்கிறது. 

இதனை யாரும் மறுக்க முடியாது. அப்படி மறுத்தால், அவர்கள் NPP யைச் சரியாகப் புரிந்து கொள்ளவில்லை என்றே அர்த்தமாகும். என்பதால்தான் தமிழ்பேசும் மக்களிடம் NPP க்கும் அநுரகுமார திசநாயக்கவுக்குமான ஆதரவுத் தளம் ஏற்பட்டுள்ளது. பாராளுமன்றத் தேர்தலை விட உள்ளுராட்சித் தேர்தலில் NPP க்குச் சற்றுப் பின்னடைவு ஏற்பட்டுள்ளது என்று யாரும் சமாதானம் சொல்லி ஆறுதலடையக் கூடும். ஆனால், தற்போதைய நிலவரம் அப்படியில்லை. அந்த இறக்கத்தை ஏறுமுகமாக்குவதற்கு NPP தீவிரமாகச் செயற்படுகிறது. அதற்கே ஏற்கனவே சொல்லப்பட்ட கட்டமைப்புகளை உருவாக்குவதும் தொடர்பாடல்களை விரிவாக்குவதுமாகும். அதாவது NPP மிகச் சுறுசுறுப்பாகவும் மிகத் தீவிரமாகவும் வேலை செய்கிறது. இதனை எதிர்த்தரப்புகள் புரிந்து கொள்வது அவசியம். குறிப்பாகத் தமிழ்பேசும் சமூகத்தினர் இந்த விடயத்தில் எச்சரிக்கையோடு இருக்க வேண்டியது அவசியமாகும். 

ஏனென்றால், NPP யின் அடிச்சட்டம் JVP யே. JVP அடிமட்டத்தில், மக்களுடன் நெருக்கமான உறவைப் பேணுவதிலும் மக்களைப் பங்கேற்பாளர்களாக்குவதிலும் திறன்வாய்ந்தது. எத்தகைய தோல்விகளுக்குள்ளும் திறன் குன்றாமல் வேலை செய்யக் கூடியது. ஆயுதப் போராட்ட காலத்தில் JVP யின் முதுகெலும்பு ஒன்றுக்கு இரண்டு தடவை முறிக்கப்பட்டது. அரசியற் கட்சியாகச் செயற்பட்ட காலத்தில்,  அரசியல் ரீதியாக பல துண்டுகளாக உடைந்தது அல்லது ஆட்சியாளர்களால் அவ்வாறு உடைக்கப்பட்டது. ஆனாலும் அதனுடைய அடித்தளம் சிதையவில்லை. 

இரண்டாவது, இடதுசாரி முகத்தைக் கொண்டதாக இருந்தாலும் அதற்கு மாறாக தீவிர இனவாதத்தை வரலாறாகப் பெற்றது. மலையக மக்களை வேற்றாளர்களாகப் பார்ப்பது தொடக்கம், தமிழ், முஸ்லிம் சமூகத்தினரை இரண்டாம் நிலையில் வைத்துப் பார்க்கும் உளத்தைக் கொண்டது. தற்போது கூட அதில் பெரிய அளவில் மாற்றங்களை அவதானிக்க முடியவில்லை.

இதையெல்லாம் மறைப்பதற்கே ‘அனைவரும் இலங்கையர்கள். அனைவரும் இலங்கையர்களாகவே கொள்ளப்படுவார்கள்‘ என்ற பெருங்கதையாடல்கள் NPP யினால் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளன. அனைவரும் இலங்கையர்கள்தான் என்ற அடிப்படையில் அனைத்துச் சமூகத்தினரையும் சமனிலையில் NPP நோக்கினால் அது மகிழ்ச்சியே. ஆனால், அது உத்தரவாதப்படுத்தப்பட வேண்டும். அதாவது நடைமுறையாக இருக்க வேண்டும். 

அப்படியென்றால், அதற்கான நடவடிக்கைகளை NPP படிப்படியாக ஆரம்பித்து நடைமுறைப்படுத்த வேண்டும். அவ்வாறான நடவடிக்கை எதுவும் இதுவரையில் ஆரம்பிக்கப்படவில்லை. ஆனால், இந்தக் கட்டுரையாளர் உட்பட பெரும்பாலான தமிழ்பேசும் மக்கள் அவ்வாறான எதிர்பார்ப்போடும் தேடல்களோடும்தான் உள்ளனர். குறிப்பாக ஜனாதிபதி அநுரகுமார திசநாயக்க, பிரதமர் ஹரிணி ஜெயசூரிய போன்ற சற்றுப் பன்முகத் தன்மையோடு  விடயங்களை நோக்கக் கூடியவர்களின் மீதான நம்பிக்கையோடு  உள்ளனர். அதை அவர்கள் பாதுகாக்க வேண்டும். அப்படியே அடுத்த கட்டமாக உருவாக்கப்படவுள்ளதாகச் சொல்லப்படும் அரசியலமைப்பை பல்லின சமூகங்களின் தேசம் என்ற வகையில் உருவாக்க வேண்டும். அதை உறுதிப்படுத்தப்படுவது அவசியம்.

அரசியமைப்பில் எந்தக் காரணம் கொண்டும் சிங்களத்துக்கும் பௌத்தத்திற்கும் முன்னுரிமை அளிக்கக் கூடாது. பௌத்தத்துக்கு முன்னுரிமை அளித்தால், அது சிங்களத்துக்கு முன்னுரிமை அளித்தலாகவே அமையும்.

“பௌத்தத்துக்கு முன்னுரிமை அளிக்காமல் விட்டால், சிங்களத்தரப்பின் எதிர்ப்பைச் சமாளிக்க முடியாது. ஆட்சியைக் கவிழ்ப்பதற்கே முயற்சிகள் நடக்கும்“ என்ற கதைவிடல்கள் இங்கே அவசியமற்றவை. அப்படியென்றால், அது இதற்குமுன் ஆட்சியிலிருந்த தரப்புகள் சொன்னதையே தேசிய மக்கள் சக்தியும் வெட்கமில்லாமல் சொல்கிறது என்று அர்த்தமாகும். 

குறிப்பாக1970 களில் இனவன்முறையைக் கட்டவிழ்த்து விட்டு, ஜே.ஆர். ஜெயவர்த்தன சொன்னதைப்போல, ‘சிங்கள மக்கள் விரும்புவதையே தன்னால் செய்ய முடியும். அவர்களுடைய விருப்பத்துக்கு மாறாகச் செய்வது அவர்களுடைய நம்பிக்கைக்கு இழைக்கப்படும் செயலாகும் என்பதைப்போலாகும். 

ஆக, கட்சிக்குள்ளே அடிப்படையான மாற்றங்களுக்கு எத்தகைய நடவடிக்கைகளையும் எடுக்காமல், வெளியே பெருங்கதையாடல்களைச் செய்யும் ஒரு ஆட்சித்தரப்பாகவே தேசிய மக்கள் சக்தியும் செயற்பட விளைகிறது என்றே கொள்ள வேண்டியுள்ளது. கடந்த கால ஆட்சியாளர்களின் தவறுகளைத் திருத்தம் செய்வதாகச் சொல்லப்பட்டாலும் அதில் இனப்பிரச்சினையைக் கையாண்ட தவறான அணுகுமுறை போன்ற பெரிய விடயங்கள் திட்டமிட்டு விலக்கப்படுகின்றன. அதாவது,தேர்வு செய்யப்பட்ட நிகழ்ச்சி நிரல்களே நடைமுறைப்படுத்தப்படுகின்றன. தேர்வு செய்யப்பட்டு அவசியமானவை புறக்கணிக்கப்படுகின்றன (Only selected agendas are implemented. Selected and necessary ones are ignored).     

ஆட்சியிலிருக்கும் தரப்பு, தொடர்ந்தும் அதிகாரத்தைப் பெறுவதற்கே விரும்பும்; முயற்சிக்கும் என்பதால் இந்த மாதிரியான விளையாட்டுகளை, தந்திரோபாயங்களாகச் செய்யும் என்று இதற்கும் யாரும் நியாயப்படுத்தல்களைச் செய்யக் கூடும். அப்படியெல்லாம் நியாயப்படுத்தி, NPP யைப் பிணையெடுக்க முற்பட்டால், அவர்கள் இந்த நாட்டையே புதைகுழிக்குள் தள்ளி விடுகிறார்கள் என்றே அர்த்தமாகும். 

இங்கே NPP யை வழமையான தமிழ் நோக்குநிலையில் வைத்து இந்தச் சொற்களைக் கூறவில்லை. தேசிய மக்கள் சக்தியை ஆதரவுக் கண்ணோட்டத்தில் அணுகுவதனால், அதனுடைய முக்கியத்துவத்தையும் வரலாற்றுப் பொறுப்பையும் உணர்த்துவதற்கே இவை அழுத்தமாகக் கூறப்படுகின்றன. இன்னும் சரியாகச் சொன்னால், மாற்றங்களுக்கான ஒரு சக்தி(தரப்பு) என்ற அடிப்படையில் நம்பிக்கையோடு நோக்கப்படுவதால் தேசிய மக்கள் சக்தியின் பொறுப்புகள் சுட்டிக்காட்டப்படுகின்றன. 

இனப்பிரச்சினையைத் தீர்க்காமல் பொருளாதாரப் பிரச்சினையைத் தீர்க்கவே முடியாது என்பதையே வரலாறு திரும்பத்திரும்ப நிரூபித்திருக்கிறது. ”இல்லை, நாங்கள் அதைப் புதிய முறையில் செய்துவெற்றியடைவோம்“         என்று NPP சொல்ல முற்பட்டால், எல்லோரும் ஏறி விழுந்த நொண்டிக் குதிரையில்தான் தேசிய மக்கள் சக்தி அரசாங்கமும் ஏறி விழப்போகிறது. மறுபடியும் காதில் துளையிட்டு ஒரு பூச்சூடல்.  

இனவாத அடிப்படையில் விடயங்களை அரசாங்கம் நோக்க முற்பட்டால் நாடு பிளவுண்டதாகவே இருக்கும். ஒருபோதும் ஒற்றுமைப்படாது. பிளவுண்ட நிலையில் இருக்கும் நாட்டில் முன்னேற்றத்தை எட்டவே முடியாது. குறிப்பாக வடக்குக் கிழக்கில் முதலீடுகளுக்கான வாய்ப்பும் சீரான அபிவிருத்தியும் நடக்காது. மலையகத்தில் உள்ள தமிழ் மக்கள் அபிவிருத்தியில் பங்களிக்கவும் பங்குபெறவும் முடியாமல் போய் விடும். இதெல்லாம் ஏற்கனவே சொல்லப்பட்டவாறு தேர்வு செய்யப்படும் அடிப்படையில் ஏற்பும் புறக்கணிப்புமான ஒரு அரசியல் வேலைத்திட்டமாகவே மாறும். அப்படி மாறினால் அது சமூகக் கொந்தளிப்புகளையே உருவாக்கும். அதன்பிறகு எப்படி அனைவரும் இலங்கையர்களாக முடியும்?

முந்திய ஆட்சியாளர்கள் மீளவும் அதிகாரத்தைப் பெற முடியாதவாறு தேர்வு செய்யப்பட்ட நடவடிக்கைகள் NPP யினால் மேற்கொள்ளப்படுகின்றன. அதன்படியேதான் ஊழல்வாதிகளின் மீதான நடவடிக்கைகள் தொடக்கம் அனைத்து அரசியல் நிகழ்ச்சி நிரல்களும் அமைகின்றன. இதையே தம்மீதான அரசியல் பழிவாங்கல் நடவடிக்கைகள் என்று எதிர்க்கட்சிகள் சொல்கின்றன. ஆனால், அப்படி அவை சொல்வதற்குரிய தகுதி அவற்றுக்கு இல்லை. அப்படிச் சொல்லித் தங்களுடைய தவறுகளை மறைத்து விடவும் முடியாது. 

இத்தகைய பின்னணியில் தமிழ், முஸ்லிம், மலையக அரசியல் சமூகங்கள் எப்படித் தங்களுடைய பிரச்சினைக்கான தீர்வை  எதிர்கொள்ளப்போகின்றன? அந்தச் சமூகங்களைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்ற அரசியற் கட்சிகள் என்ன செய்யப்போகின்றன? என்ற கேள்விகள் எழுகின்றன. அரச எதிர்ப்பு, NPP யும் இனவாதக் கட்சிதான் என்று வழமையான எதிர்ப்பு அரசியலை மட்டும் செய்வதால் எந்த முன்னேற்றமும் ஏற்படப்போவதில்லை. அத்தகைய அணுகுமுறை நிச்சயமாக அவற்றுக்குக் கைகொடுக்கப்போவதில்லை. மக்களுக்கும்தான். ஆகவே NPP யும் புதிதாகச் சிந்திக்க வேண்டும். ஏனைய தரப்புகளும் புதியனவாகச் செயற்பட வேண்டும்.  நாட்டைக் கட்டியெழுப்புவதென்பது பிரச்சினைகளுக்கு நியாயமான முறையில் தீர்வுகளைக் காண்பதிலிருந்தே ஆரம்பிக்கப்படுவதாகும். 

https://arangamnews.com/?p=12391

யாழில் போதைக்கு அடிமையான யுவதி உயிர்மாய்ப்பு!

2 weeks ago
யாழில் போதைக்கு அடிமையான யுவதி உயிர்மாய்ப்பு! சாவகச்சேரி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நாவற்குழி பகுதியைச் சேர்ந்த யுவதி ஒருவர் தவறான முடிவெடுத்து உயிர்மாய்த்துள்ளார். ஐயனார் கோவிலடி, நாவற்குழி பகுதியைச் சேர்ந்த 20 வயதான யுவதியே இவ்வாறு உயிரிழந்துள்ளார். உயிரிழந்த யுவதியும் அவரது காதலனும் போதைக்கு அடிமையானவர்கள் என தெரியவருகிறது. இவர் கடந்த 15ஆம் திகதி தனக்கு தானே தீ வைத்து தற்கொலைக்கு முயற்சித்துள்ளார். இதன்போது தீயை அணைத்த காதலன், அவரை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்ப்பித்தார். இருப்பினும் சிகிச்சை பலனின்றி குறித்த யுவதி நேற்றைய தினம் (20) உயிரிழந்துள்ளார். அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார். சாட்சிகளை சாவகச்சேரி பொலிஸார் நெறிப்படுத்தினர். https://akkinikkunchu.com/?p=345520