Aggregator
கச்சத்தீவுக்கு விஜயம் செய்த ஜனாதிபதி
யாழ். செம்மணியில் 3 அடி ஆழத்தில் மனித எலும்புக்கூடு மீட்பு ; பாரிய புதைகுழியாக இருக்கலாமென அச்சம்
உதிக்கும் திசை நோக்கி உன்னத பயணம்... | நெடுந்தொடர்
உதிக்கும் திசை நோக்கி உன்னத பயணம்... | நெடுந்தொடர்
கச்சத்தீவுக்கு விஜயம் செய்த ஜனாதிபதி
கச்சத்தீவுக்கு விஜயம் செய்த ஜனாதிபதி
கச்சத்தீவுக்கு விஜயம் செய்த ஜனாதிபதி
கச்சத்தீவுக்கு விஜயம் செய்த ஜனாதிபதி
யாழ்ப்பாணம் மண்டைதீவில் ஜனாதிபதி தலைமையில் சர்வதேச கிரிக்கெட் மைதானத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு!
16 வயதுக்குட்பட்ட இலங்கை பாடசாலைகள் கால்பந்தாட்டக் குழாத்தில் மன்னார் வீரர்கள்
16 வயதுக்குட்பட்ட இலங்கை பாடசாலைகள் கால்பந்தாட்டக் குழாத்தில் மன்னார் வீரர்கள்
02 Sep, 2025 | 12:51 PM
சீனாவில் நடைபெறவுள்ள 16 வயதுக்குட்பட்ட டியான்யூ லியூபங் கிண்ண கால்பந்தாட்டப் போட்டியில் 16 வயதுக்குட்பட்ட இலங்கை பாடசாலைகள் கால்பந்தாட்ட அணியும் பங்குபற்றவுள்ளது.
இதனை முன்னிட்டு நடத்தப்பட்ட திறன்காண் தேர்வின்போது 16 வயதுக்குட்பட்ட பூர்வாங்க இலங்கை பாடசாலைகள் குழாத்தில் மன்னார் புனித சவேரியார் ஆண்கள் தேசிய பாடசாலையைச் சேர்ந்த என். கெஸ்ரோன், கே. ஜெனிஸ்ரன் ஆகிய இருவரும் உள்வாங்கப்பட்டுள்ளனர்.
திறன்காண் தேர்வின்போது அவர்கள் இருவரும் சிறப்பாக விளையாடி திறமையை வெளிப்படுத்தியதன் அடிப்படையில் 16 வயதுக்குட்பட்ட இலங்கை பாடசாலைகள் குழாத்தில் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளனர்.
16 வயதுக்குட்பட்ட டியான்யூ லியூபங் கிண்ண கால்பந்தாட்டப் போட்டி இம் மாதம் 20ம் திகதியிலிருந்து 28ம் திகதிவரை நடைபெறவுள்ளது.
இப் போட்டிக்கான மேலதிக பயிற்சிகள் கொழும்பில் இம் மாதம் 4ம் திகதியிலிருந்து நடைபெறவுள்ளது.
இம் மாணவர்கள் மிகவும் வறுமைக்கோட்டின் கீழ் இருந்து தமது கல்வி கற்றுவருகின்ற நிலையில் இந்த மாணவர்களுக்கு உதவி செய்ய விரும்புவோர் அதிபர் ஊடாக உதவிகளை வழங்கி அந்த மாணவர்களின் திறமைக்கான அங்கீகாரம் பெறுவதற்கு உதவுமாறு பாடசாலை சமூகம் சார்பாக கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சூடானில் கிராமத்தை அழித்த நிலச்சரிவு - 1000க்கும் மேற்பட்டோர் பலி
யாழ் செல்கிறார் அநுர – புதிய திட்டங்களை ஆரம்பித்து வைப்பார்!
ஜனாதிபதியினால் திறந்துவைக்கும் திறப்புவிழா கற்களில் நிதி தொடர்பான வெளிப்படைத்தன்மை இல்லை - வலி கிழக்கு தவிசாளர் நிரோஷ்
ஜனாதிபதியினால் திறந்துவைக்கும் திறப்புவிழா கற்களில் நிதி தொடர்பான வெளிப்படைத்தன்மை இல்லை - வலி கிழக்கு தவிசாளர் நிரோஷ்
Published By: Vishnu
02 Sep, 2025 | 03:20 AM
ஜனாதிபதியினால் யாழில் மேற்கொள்ளப்பட்ட அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கான திறப்புவிழா கற்களில் நல்லாட்சிக்கு அவசியமான வெளிப்படைத்தன்மையும் தகவல் அறிவதற்கான சுதந்திரமும் மீறப்பட்டுள்ளது. ஆகவே அக் கற்கலில் காணப்படும் தவறுகள் உரியவாறு மறுசீரமைக்கப்படுவது மக்களின் தகவல் அறிந்து கொள்வதற்கான உரிமையினை உறுதிப்படுத்தும் என்பதுடன் அரச நிதி செலவிடப்படுவதன் வெளிப்படைத் தன்மையினையும் அதிகாரிக்கும் என வலிகாமம் கிழக்கு பிரதேச சபைத் தவிசாளர் தியாகராஜா நிரோஷ் தெரிவித்தார்.
1ஆம் திகதி திங்கட்கிழமை யாழிக்கு விஜயம் செய்த ஜனாதிபதி கடவுச்சீட்டு அலுவலகம் மற்றும் விளையாட்டுத்திடல்இ துறைமுகம் என்பவற்றின் ஆரம்பப் பணிகளை மேற்கொண்டார். அவரினால் கடந்த ஆட்சியாளர்களைப் போல் ஆரம்ப நிகழ்வுகளுக்கு பெரும் பணம் செலவிடப்படாமைஇ எளிமையான முறையில் மேற்படி நிகழ்வுகள் மேற்கொள்ளப்பட்டமையை நாம் வரவேற்கின்றோம். எனினும் நல்லாட்சித்தத்துவம் மீறப்பட்டுள்ளது.
இவ்விடத்தில் திறப்பு விழாக் கற்களில் மக்களின் பணம் என்று மட்டும் குறிப்பிடப்பட்டுள்ளது. அரச நிதி என்பது மக்களின் பணம் ஆகும். அதனை தொகைகளைக் குறிப்பிடாது குறிப்பிட்டதனை நாம் அறிவார்ந்த பார்வையில் விசேடமான மாற்றம் என்று கூற முடியாது. அரச நிதியில் எவ்வளவு தொகை திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்டது என்பது கல்வெட்டுக்களில் குறிப்பிடப்படாமல் விடப்பட்டமை அரசின் நிதி தொடர்பான வெளிப்படைத்தன்மையை கேள்விக்குள்ளாக்குகின்றது.
நிதி செலவிடலில் தொகைகள் வெளியிடப்படும் போதே மக்களின் நிதி காத்திரமாகப் பயன்படுத்தப்ப்ட்டதா என பொதுமக்களால் விளங்கிக் கொள்ள முடியும். ஆகவே மக்கள் தகவல்களை பெறுவதற்கான வழிமுறையை இலகுபடுத்தவதில் அரசாங்கம் தோல்விகண்டுள்ளது கவலையளிக்கின்றது. பொது நிதி தொடர்பில் பொறுப்புச் சொல்வதற்கான அரசியல் பொருளாதார ரீதியானதும் நல்லாட்சியின் அளவு கோலுக்கான கல்விசார் அடிப்படையுமாகும்.
இலங்கை போன்ற நாடுகளில் அரசாங்கங்கள் திட்டங்களை ஆரம்பிப்பதும் பின்னர் கைவிடுவதும் சகஜமாகும். அவ்வாறான நிலைக்கு போதுமான நிதித்திட்டமிடல் இன்றி அபிவிருத்திகளை அரசியல் ரீதியில் ஆரம்பிப்பதும் ஒருகாரணமாகும். அடுத்து மேலதிக நிதியின்றியும் திட்டங்கள் தடைப்படுகின்றன. சில திட்டங்கள் சரியான ஆய்வுகள் மேற்கொள்ளப்படாமையினால் தோல்வி அடைகின்றன.
அவ்வாறான நிலையில் அப்படியாக தோல்வியடையும் கட்டுமாணங்கள் பற்றி கணக்காய்வு மேற்கொள்ளப்படும் அதேவேளை மக்களின் தீர்ப்பிற்கு அரசியல் தலைவர்கள் முகங்கொடுக்க வேண்டும் என்பது சனநாயக சம்புரதாயம். ஆகவே ஜனாதிபதின் பெயர் குறிப்பிடப்பிட்டால் திட்டத்தின் வெற்றி தோல்விகள் பற்றி மக்கள் மதிப்பிடுவது இலகுபடுத்தப்படும்.
திட்டங்களின் வெற்றி தொல்விகளின் பொறுப்புக்கூறலை வரலாற்று ரீதியில் தலைவர்கள் பெறுவர்கள் என்ற நியதியை உணர்த்தும். ஆகவே தலைவர்கள் சரியான நிபுணத்துவத்துடன் செயற்படுவதற்கு அது வழிநடத்தும். ஆகவே இவைகள் ஜனாதிபதியினால் யாழில் மேற்கொள்ளப்பட்ட அபிவிருத்தித் திட்ட கற்களில் மீறப்பட்டுள்ளன. எனவே இதுபற்றி அரசாங்கம் கவனத்தில் எடுத்து அவ் திறப்புவிழக்கற்களின் அருகில் நிதி செலவு அல்லது ஒதுக்கம் பற்றி வெளிப்படுத்தி உதவவேண்டும் என வலிகாமம் கிழக்கு பிரதேச சபைத்தவிசாளர் தியாகராஜா நிரோஷ் தெரிவித்தார்.