Aggregator
இரசித்த.... புகைப்படங்கள்.
அழகான புத்தகக்கடை
யாழ்ப்பாணம் மண்டைதீவில் ஜனாதிபதி தலைமையில் சர்வதேச கிரிக்கெட் மைதானத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு!
கருத்து படங்கள்
ஒரே மேடையில் மோதி, ஷீ ஜின்பிங், புதின் - டிரம்பின் செயல்களால் தனித்து விடப்படுகிறதா அமெரிக்கா?
நிலுவையிலுள்ள வழக்குகள் குறித்து நீதிச் சேவைகள் ஆணைக்குழுவின் உத்தரவு!
நிலுவையிலுள்ள வழக்குகள் குறித்து நீதிச் சேவைகள் ஆணைக்குழுவின் உத்தரவு!
நிலுவையிலுள்ள வழக்குகள் குறித்து நீதிச் சேவைகள் ஆணைக்குழுவின் உத்தரவு!
நீதிமன்றங்களில் நிலுவையிலுள்ள அனைத்து வழக்குகளையும் எதிர்வரும் டிசம்பர் 31ஆம் திகதிக்குள் முடிக்க
வேண்டும் என நீதிச் சேவைகள் ஆணைக்குழு (JSC) உத்தரவிட்டுள்ளது.
மாவட்ட நீதிபதிகள், நீதவான் நீதிமன்ற நீதிபதிகள், மேல்நீதிமன்ற நீதிபதிகள், அந்தந்த நீதிமன்றங்களுக்கு நிர்வாக ரீதியாக பொறுப்பாக இருப்பவர்கள் தங்கள் நீதிமன்றங்களில் நிலுவையிலுள்ள வழக்குகளை அகற்றுவதற்கு நேரடியாக பொறுப்புக்கூற வேண்டும் எனவும் ஆணைக்குழு வலியுறுத்தியுள்ளது.
உள்ளூர் ரீதியான விடயங்களை ஆணைக்குழு கண்காணிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் இவ் விடயத்தில் மாதாந்த முன்னேற்ற அறிக்கைகளை சமர்ப்பிக்க வேண்டும் என அனைத்து நீதிபதிகளுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
நிலுவையிலுள்ள வழக்குகளை விசாரிப்பதும் தீர்ப்பதும் அனைத்து நீதிமன்ற ஊழியர்களின் தனிப்பட்ட மற்றும் கூட்டு பொறுப்பாகும்.
மேலும் தங்கள் கடமைகளை நிறைவேற்றத் தவறும் எந்தவொரு ஊழியருக்கும் எதிராக ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் ஆணைக்குழு எச்சரித்துள்ளது.
அண்மைக் காலங்களில் நீதிமன்றங்களில் நிலுவையிலுள்ள வழக்குகளின் தரவுகள் சேகரிக்கப்பட்ட நிலையில், அவற்றின் தீர்வுகளை தாமதமின்றி வழங்குமாறு ஆணைக்குழு குறித்த அனைத்து நீதிமன்றங்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.
அசத்தல் படங்கள் அட்டகாசமான வரிகள்.
கொழும்பு கோட்டை ரயில் நிலையத்தை நவீன வசதியுடன் புதுப்பிக்க நடவடிக்கை!
கொழும்பு கோட்டை ரயில் நிலையத்தை நவீன வசதியுடன் புதுப்பிக்க நடவடிக்கை!
கொழும்பு கோட்டை ரயில் நிலையத்தை நவீன வசதியுடன் புதுப்பிக்க நடவடிக்கை!
ஆசிய வளர்ச்சி வங்கியின் (ADB) உதவியுடன் கொழும்பு கோட்டை ரயில் நிலையத்தை புதுப்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்த முயற்சியின் கீழ், மேம்படுத்தப்பட்ட வசதிகளுடன் கூடிய நவீன வசதியாக இந்த நிலையம் மேம்படுத்தப்பட உள்ளது என்று அமைச்சு கூறியுள்ளது.
இந்த திட்டத்திற்காக 1,395 மில்லியன் ரூபா மதிப்பிடப்பட்ட நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
இது 15 மாத காலக்கெடுவிற்குள் முடிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்காக ஏற்கனவே கேள்வி விலை மனு கோரல் அழைக்கப்பட்டுள்ளன.
இந்த ஆண்டு இறுதிக்குள் மேம்பாட்டுப் பணிகள் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அமைச்சு மேலும் கூறியது.
தமிழ்நாடுதான் இந்தியாவின் ஜெர்மனி! – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
தமிழ்நாடுதான் இந்தியாவின் ஜெர்மனி! – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
உத்தியோகபூர்வ பயணமாக ஜெர்மனிக்கு விஜயம் மேற்கொண்டுள்ள தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், “தமிழ்நாடுதான் இந்தியாவின் ஜெர்மனி” எனக் குறிப்பிட்டார்.
தொழில் முதலீடுகளை ஈர்க்கும் நோக்கில் ஜெர்மனிக்கு சென்றுள்ள அவர், TNRising ஜெர்மனி முதலீட்டு மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றினார்.
இதன்போது, தமிழ்நாடு இந்தியாவில் இரண்டாவது பெரிய பொருளாதாரம் கொண்ட மாநிலமாகவும், அதிகளவிலான தொழிற்சாலைகள், திறமையான மனிதவளங்கள் மற்றும் உயர் நகர்மயமடைந்த மாநிலமாகவும் இருப்பதை விளக்கினார்.
இந்த மாநாட்டில், 3,819 கோடிஇந்திய ரூபாய் மதிப்பிலான 23 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன.
இதன் மூலம் 9,000க்கும் மேற்பட்ட வேலை வாய்ப்புகள் உருவாகும் என தெரிவிக்கப்பட்டது. மேலும், இந்த ஜெர்மனி பயணத்தில் மொத்தம் 7,020 கோடி இந்திய ரூபாய் மதிப்பிலான 26 ஒப்பந்தங்கள், 15,000க்கும் மேற்பட்ட வேலை வாய்ப்புகளை ஏற்படுத்துவதாகவும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஸ்டாலின் தனது உரையில், ஜெர்மனியின் தொழில் நுணுக்கம், புதுப்பிப்பு திறன், கலையுணர்வு ஆகியவை தமிழ்நாட்டை ஈர்த்துள்ளது எனவும், “Made in Germany” தரச்சின்னமாக இருப்பது போலவே, “Made in Tamil Nadu” என்பதும் உலகளவில் தரத்திற்கான அடையாளமாக உருவாகிக் கொண்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
அத்துடன் BMW, Daimler, Mercedes-Benz, Siemens, Bosch உள்ளிட்ட பல்வேறு ஜெர்மன் நிறுவனங்கள் தமிழ்நாட்டில் ஏற்கெனவே வெற்றிகரமாக செயற்பட்டு வருகின்றது எனவும் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் மோட்டார் வாகனங்கள், மின்சார வாகனங்கள், மின்னணு உற்பத்தி, தோல் மற்றும் ஆடைத் தொழில், தகவல் தொழில்நுட்பம், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, உயர் மருத்துவ சேவைகள் போன்ற துறைகளில் முன்னேற்றம் கண்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
தமிழகத்தில் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கவும், வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்கவும் தமிழக அரசு தொடர்ந்து நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடுதான் இந்தியாவின் ஜெர்மனி! – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
இங்கிலாந்து ஆக்ஸ்போர்டு, கேம்பிரிட்ஜ் பல்கலை.யில் ‘திராவிடர் இயக்க’ நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் ஸ்டாலின்!
ஒரே மேடையில் மோதி, ஷீ ஜின்பிங், புதின் - டிரம்பின் செயல்களால் தனித்து விடப்படுகிறதா அமெரிக்கா?
இன்றைய மாவீரர் நினைவுகள் ..
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை 400 ஆண்டுகள் சிறையில் அடைக்க வேண்டும் - சரத் பொன்சேகா
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை 400 ஆண்டுகள் சிறையில் அடைக்க வேண்டும் - சரத் பொன்சேகா
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை 400 ஆண்டுகள் சிறையில் அடைக்க வேண்டும் - சரத் பொன்சேகா
02 Sep, 2025 | 10:12 AM
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை 400 ஆண்டுகள் சிறையில் அடைக்க வேண்டும் என பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா குற்றம் சாட்டியுள்ளார்.
2010ஆம் ஆண்டு மஹிந்த ராஜபக்சவின் ஆட்சிக் காலத்தில் நடைபெற்ற ஊழல்களை எடுத்துக்காட்டி, அவர் குற்றம் சாட்டியதாக தெரிவிக்கப்படுகிறது.
நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய அவர், அடுத்தடுத்து வந்த இலங்கைத் தலைவர்களை விமர்சித்தார்.
இதன்போது, தேசிய வளர்ச்சிக்கான தொலைநோக்கு பார்வை, இலங்கை தலைவர்களுக்கு இல்லை என இதன்போது அவர் குறிப்பிட்டுள்ளார்.
சிங்கப்பூரின் லீ குவான் யூ, மலேசியாவின் மகாதீர் முகமட் மற்றும் ருவாண்டாவின் ஜெனரல் ஜுவெனல் ஹப்யரிமனா போன்ற சர்வதேச பிரமுகர்களுடன் இலங்கை முன்னாள் தலைவர்களை ஒப்பிட்டு வேறுபடுத்தி இதன்போது அவர் உரையாற்றியுள்ளார்.
தனிநபர்களின் பெயர்களைக் குறிப்பிடாமல் கடந்த கால சம்பவத்தைக் குறிப்பிட்டு தமது கருத்துக்களை சரத் பொன்சேகா கூறியுள்ளார்.
2010 ஆம் ஆண்டு மஹிந்த ராஜபக்சவின் ஆட்சிகால பகுதியில் சீனாவிற்கு மேற்கொண்ட அரச பயணத்தையும் இதன்போது அவர் நினைவுப்படுத்தினார்.
அந்த பயணத்தின் போது 65 பேர் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானத்தில் உத்தியோகபூர்வமாக அழைத்துச் செல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது.
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் நடவடிக்கைகளை அவர் மன்னிக்கவில்லை என்றாலும், அதிகாரிகளை பொறுப்புக்கூற வைப்பதில் தற்போதைய நிர்வாகம் வகுத்த முன்னுதாரணத்தை ஆதரிப்பதாகவும் சரத் பொன்சேகா குறிப்பிட்டுள்ளார்.
அதன்படி, ரணில் விக்கிரமசிங்க செய்தது சரி என நான் கூறவில்லை. அவரது நிலையை பார்ப்பது எனக்கு கவலையாக இருக்கிறது. அவர்தான் என்னை அரசியலுக்குக் கொண்டு வந்தவர். ஆனால் இந்த வழக்கில், அரசாங்கம் அமைத்த முன்னுதாரணத்தை நான் ஏற்றுக்கொள்கிறேன் என இதன்போது சரத் பொன்சேகா கூறியுள்ளார்.
அதேநேரம், மஹிந்த ராஜபக்ஷ போன்ற ஒருவருக்கு சுமார் 400 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, நாமல் ராஜபக்ஷவின் கடந்த கால சிறைத்தண்டனை குறித்து சமீபத்தில் தெரிவித்த கருத்துகளுக்கும் சரத் பொன்சேகா பதிலளித்தார்.
இராணுவத் தலைமையகத்தில் பணியாற்றிய 35 சிரேஸ்ட இராணுவ அதிகாரிகளை ஓய்வூதியம் இல்லாமல் இராணுவ சேவையிலிருந்து வெளியேற்றியதாக மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கம் மீது சரத் பொன்சேகா நிகழ்வில் உரையாற்றும்போது குற்றம் சுமத்தியுள்ளார்
சூடானில் கிராமத்தை அழித்த நிலச்சரிவு - 1000க்கும் மேற்பட்டோர் பலி
சூடானில் கிராமத்தை அழித்த நிலச்சரிவு - 1000க்கும் மேற்பட்டோர் பலி
சூடானில் கிராமத்தை அழித்த நிலச்சரிவு - 1000க்கும் மேற்பட்டோர் பலி
02 September 2025
மேற்கு சூடானின் மர்ரா மலை பகுதியில் ஒரு கிராமத்தையே அழித்த நிலச்சரிவில், குறைந்தது 1000 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த நிலச்சரிவில் ஒருவர் மட்டுமே உயிர் பிழைத்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது.
கனமழையைத் தொடர்ந்து,கடந்த ஆகஸ்ட் 31 அன்று, இந்த நிலச்சரிவு ஏற்பட்டதாக சூடான் விடுதலை இராணுவம் தெரிவித்துள்ளது.
மேற்கு ஆப்பிரிக்க நாடான சூடானில் வரலாறு காணாத வெள்ளம் ஏற்பட்டு, இலட்சக்கணக்கான மக்கள் இடம்பெயர்ந்துள்ள நிலையிலேயே இந்த நிலச்சரிவும் ஏற்பட்டுள்ளது.
இந்தநிலையில் ஆண்கள், பெண்கள் மற்றும் சிறுவர்கள் என்ற பலியானவர்களின் உடலங்களை மீட்க உதவுமாறு ஐக்கிய நாடுகள் சபை மற்றும் சர்வதேச உதவி நிறுவனங்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளன.
நிலச்சரிவு ஏற்பட்ட கிராமம் தற்போது முழுமையாகத் தரைமட்டமாக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
https://hirunews.lk/tm/417818/landslide-destroys-village-in-sudan-over-1000-dead