Aggregator
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
உலகை அதிர வைத்த கோப்புகளை கொண்ட ஜெஃப்ரி எப்ஸ்டீன் யார்?
“தமிழ்த் தேசியவாத அரசியலில் அணுகுமுறை மாற்றங்கள் வேண்டும்”(சுமந்திரன் நேர்காணல்)
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
யாழ் சுழிபுரத்தில் கோடிகளில் பாடசாலை கட்டிக்கொடுத்த அமெரிக்க வைத்தியர் குடும்பம்
இலங்கை தமிழரசுக் கட்சியின் பாராளுமன்றக் குழுத் தலைவராக சாணக்கியன் இராசமாணிக்கம் நியமனம்
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
அரச ஊழியர்களின் சம்பளத்தை உயர்த்த நடவடிக்கை : எம்.பி களின் வரப்பிரசாதங்கள் இரத்து ; அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ
அரச ஊழியர்களின் சம்பளத்தை உயர்த்த நடவடிக்கை : எம்.பி களின் வரப்பிரசாதங்கள் இரத்து ; அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ
அரச ஊழியர்களின் சம்பளத்தை உயர்த்த நடவடிக்கை : எம்.பி களின் வரப்பிரசாதங்கள் இரத்து ; அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ
09 Feb, 2026 | 12:28 AM
![]()
(செ.சுபதர்ஷனி)
நாட்டின் அரச சேவையை வலுப்படுத்தும் நோக்கில் அரச ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிக்கவும் அவர்களுக்கான வசதிகளை மேம்படுத்தவும் அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருகிறது. அதேவேளை, அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டு வந்த தேவையற்ற வரப்பிரசாதங்களை இரத்து செய்ய ஏற்கனவே அரசாங்கத்தால் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக சுகாதார மற்றும் வெகுசன ஊடகத்துறை அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
ஹொரண மாவட்ட பொது வைத்தியசாலையில் வெள்ளிக்கிழமை (06) இடம்பெற்ற விசேட நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
அமைச்சர் இவ்விடயம் தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,
அரசாங்க ஊழியர்களின் சம்பளத்தை உயர்த்துவதற்கும் அவர்களுக்கான வசதிகளை மேம்படுத்துவதற்கும் எமது அரசாங்கம் முன்னுரிமை அளித்து வருகின்றது. அதேநேரம், அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு கடந்த காலங்களில் வழங்கப்பட்ட மேலதிக வரப்பிரசாதங்களை ஏற்கனவே நீக்கியுள்ளோம்.
குறிப்பாக, பாராளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியத்தை இரத்துச் செய்வதற்காக அமைச்சரவையினால் எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கு எதிராக சிலர் உயர்நீதிமன்றம் சென்றிருந்தனர்.
எனினும், குறித்த ஓய்வூதியத்தை இரத்துச் செய்வதற்கு நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலம் தேவையில்லை என்றும், சாதாரண பெரும்பான்மை வாக்களிப்பின் மூலமே அதனைச் செய்ய முடியும் என்றும் உயர்நீதிமன்றம் தனது தீர்ப்பை வழங்கியுள்ளது.
சபாநாயகரால் வெள்ளிக்கிழமை (6) பாராளுமன்றத்துக்க அறிவிக்கப்பட்ட இந்தத் தீர்ப்பின் பிரகாரம், எம்.பி களின் ஓய்வூதியத்தை முற்றாக இரத்துச் செய்வதற்கு அரசாங்கம் மிக விரைவில் நடவடிக்கை எடுக்கும். மக்கள் பணத்தை வீண்விரயம் செய்வதைத் தவிர்த்து அதனை மீண்டும் மக்களுக்கே சென்றடையச் செய்வதே எமது இலக்காகும்.
ஹொரண வைத்தியசாலை மாவட்ட வைத்தியசாலையாகத் தரம் உயர்த்தப்பட்ட போதிலும், அதற்கான மனித வள வெற்றிடங்கள் இதுவரை முழுமையாக பூர்த்தி செய்யப்படவில்லை. இது தொடர்பில் நிதி அமைச்சு மற்றும் முகாமைத்துவ திணைக்களத்துடன் விரிவான பேச்சுவார்த்தைகளை நடத்தினோம்.
அதற்கமைய, அத்தியாவசிய சுகாதார நிறுவனங்களுக்கான பணியாளர்களைத் பெற்றுக்கொள்வதற்கான அனுமதி கிடைத்துள்ளது. ஹொரண வைத்தியசாலைக்குத் தேவையான பணியாளர்களை நியமிப்பதற்கான உத்தியோகபூர்வ கடிதம் முகாமைத்துவ திணைக்களத்தினால் விரைவில் வெளியிடப்படும்.
அத்துடன் சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சு எதிர்வரும் பத்தாண்டுகளுக்கான மூலோபாயத் திட்டத்தைத் தயாரித்து வருகின்றது. தேசியக் கொள்கையின் அடிப்படையில் சுகாதாரத் துறையின் சவால்களைக் கண்டறிந்து, அதனை மேலும் வலுப்படுத்துவதே எமது பிரதான நோக்கமாகும். சுகாதாரப் பிரிவின் கீழ் உள்ள அனைத்து நிறுவனங்களும் இந்தத் திட்டத்தின் கீழ் இயங்க வேண்டும்.
மேலும், நீண்டகாலமாக இடைநிறுத்தப்பட்டுள்ள வைத்தியசாலையின் ஆறு மாடி கட்டடத் தொகுதியின் பணிகளை மீள ஆரம்பிக்க அமைச்சின் ஊடாக புதிய கேள்விப்பத்திரங்களைக் கோரவுள்ளோம். இதன் மூலம் எதிர்வரும் ஒக்டோபர் மாதளவில் கட்டுமானப் பணிகளை மீண்டும் தொடங்க முடியும். இதற்காக இவ்வருடம் 150 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என்றார்.
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
ஐசிசி ஆடவர் ரி20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டித் தொடர்
ஜப்பான் பொதுத்தேர்தல்: சானே தகாய்ச்சி தலைமையிலான கூட்டணி அமோக வெற்றி!
ஜப்பான் பொதுத்தேர்தல்: சானே தகாய்ச்சி தலைமையிலான கூட்டணி அமோக வெற்றி!
ஜப்பான் பொதுத்தேர்தல்: சானே தகாய்ச்சி தலைமையிலான கூட்டணி அமோக வெற்றி!
Published By: Digital Desk 3
09 Feb, 2026 | 11:31 AM
![]()
ஜப்பானில் ஞாயிற்றுக்கிழமை (09) நடைபெற்ற தேர்தலில், பிரதமர் சானே தகாய்ச்சி தலைமையிலான ஆளும் கூட்டணி மகத்தான வெற்றியைப் பெற்றுள்ளது. இதன் மூலம் ஜப்பானின் முதல் பெண் பிரதமரான தகாய்ச்சி, தனது அதிகாரத்தை மேலும் வலுப்படுத்தியுள்ளார்.
ஜப்பானிய பாராளுமன்றத்தின் சக்திவாய்ந்த கீழவையான 'டயட்'-ல் உள்ள மொத்தம் 465 இடங்களில் லிபரல் டெமோக்ரடிக் கட்சி 316 இடங்களை வென்று தனிப்பெரும் பெரும்பான்மையை பெற்றுள்ளது.
இது 1955-ஆம் ஆண்டு கட்சி ஆரம்பிக்கப்பட்டதிலிருந்து முதல் முறையாக மாபெரும் வெற்றியாக அமைந்துள்ளது.
தகாய்ச்சியின் லிபரல் டெமோக்ரடிக் கட்சி மற்றும் அதன் கூட்டணிக் கட்சியான 'ஜப்பான் இன்னோவேஷன் பார்ட்டி' (Ishin) இணைந்து மொத்தம் 352 இடங்களைக் கைப்பற்றியுள்ளன.
மூன்றில் இரண்டு பெரும்பான்மையை (Supermajority) தகாய்ச்சி பெற்றுள்ளதால், மேலவையின் அனுமதி இல்லாமலேயே முக்கிய சட்டங்களை நிறைவேற்றும் அதிகாரத்தை அவர் தற்போது பெற்றுள்ளார்.
பிரிட்டனின் 'இரும்புப் பெண்மணி' மார்கரெட் தாட்சரைத் தனது முன்மாதிரியாகக் கொண்ட சானே தகாய்ச்சி, இந்த வெற்றியின் மூலம் சில முக்கிய மாற்றங்களைக் கொண்டுவரத் திட்டமிட்டுள்ளார்:
பொருளாதாரத்தை ஊக்குவிக்க வரி குறைப்பு நடவடிக்கைகளை அவர் அறிவிக்கவுள்ளார். இது நிதிச் சந்தையில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
சீனாவிடமிருந்து வரும் அச்சுறுத்தல்களைக் கருத்தில் கொண்டு, ஜப்பானின் பாதுகாப்பு மற்றும் இராணுவச் செலவினங்களை முன்னெப்போதும் இல்லாத வகையில் அதிகரிக்க அவர் திட்டமிட்டுள்ளார்.
பெரும்பான்மை கிடைத்துள்ளதால், ஜப்பானின் நீண்டகால அரசியலமைப்பில் திருத்தங்களைக் கொண்டுவரவும் அவர் முயற்சிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தத் தேர்தலில் முக்கிய எதிர்க்கட்சியான 'சென்ட்ரிஸ்ட் ரிஃபார்ம் அலையன்ஸ்' பலத்த பின்னடைவைச் சந்தித்துள்ளது. ஆளும் கூட்டணியின் அதிரடி செல்வாக்கிற்கு முன்னால் எதிர்க்கட்சிகளால் தாக்குப்பிடிக்க முடியவில்லை என அரசியல் பிரமுகர்கள் கருதுகின்றனர்.
என்னை மயக்கிய ஜெயச்சந்திரன் பாடல்கள்
ஐசிசி ஆடவர் ரி20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டித் தொடர்
கருத்து படங்கள்
மீனவர்களுடன் பேச்சுவார்த்தைக்குத் தயார் என பிரதி அமைச்சர் ரத்னகமகே
மீனவர்களுடன் பேச்சுவார்த்தைக்குத் தயார் என பிரதி அமைச்சர் ரத்னகமகே

மீனவர்களுடன் பேச்சுவார்த்தைக்குத் தயார் என பிரதி அமைச்சர் ரத்னகமகே.
மீன்பிடி பெருவலைத் தொழிலை நவீனமயமாக்குவதற்கு எதிர்ப்பு: மீனவர்களுடன் பேச்சுவார்த்தைக்குத் தயார் என பிரதி அமைச்சர் ரத்னகமகே அறிவிப்பு
ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக மீன்பிடி பெருவலை (மாதெல்) மீனவர்கள் முன்னெடுத்து வரும் போராட்டம் மற்றும் அது தொடர்பான அமைச்சின் நிலைப்பாட்டை கடற்தொழில் பிரதி அமைச்சர் ரத்னகமகே இன்றைய தினம் கடற்தொழில் அமைச்சில் நடைபெற்ற ஊடக சந்திப்பிலேயே இவ்வாறு ஊடகங்களுக்குத் தெளிவுபடுத்தினார்.
மீன்பிடி பெருவலை என்பது இலங்கையின் பாரம்பரியம் மற்றும் கலாச்சாரத்துடன் நீண்டகாலமாகப் பிணைந்துள்ள ஒரு தொழில் என்பதைத் தான் ஏற்றுக்கொள்வதாகக் குறிப்பிட்ட அவர், அதேநேரம் கடல் வளங்களைப் பாதுகாப்பது அரசாங்கத்தின் தலையாய கடமையாகும் எனத் தெரிவித்தார்.
கடந்த 2015ஆம் ஆண்டு நல்லாட்சி அரசாங்கத்தின் மீன்பிடி அமைச்சர்கள் மற்றும் ராஜாங்க அமைச்சர்களால், மீன்பிடி பெருவலைத் தொழிலில் டிராக்டர்கள் மற்றும் வின்ச்சுகளை (Winches) பயன்படுத்துவதற்குத் தற்காலிகமாக வழங்கப்பட்ட அனுமதியே தற்போதைய அனைத்துப் பிரச்சினைகளுக்கும் அடிப்படை என்று அவர் சுட்டிக்காட்டினார்.
தற்போது அந்தத் தற்காலிக அனுமதியை நிரந்தரமாக்கக் கோரியே மீனவர்கள் போராடுவதாகக் குறிப்பிட்ட அவர், இயந்திரங்களைப் பயன்படுத்துவதால் ஏற்படும் சூழலியல் பாதிப்புகள் குறித்துக் கடும் கவலை வெளியிட்டார். குறிப்பாக, இயந்திரங்களைப் பயன்படுத்தி வலைகளை இழுக்கும்போது அது கடலின் அடிப்பகுதியைச் சுரண்டிச் செல்லும் ‘பாட்டம் ட்ராலிங்’ (Bottom Trawling) போன்ற பாதிப்புகளை உருவாக்குவதாகவும், இதனால் பவளப்பாறைகள் மற்றும் மீன்களின் இனப்பெருக்க வாழ்விடங்கள் முற்றாக அழிக்கப்படுவதாகவும் அவர் விளக்கினார்.
மேலும், கடற்கரை ஓரமாக டிராக்டர்கள் இயக்கப்படுவதால் ஆமைகள் முட்டையிடும் இடங்கள் சேதமடைவதோடு, கடற்கரையின் இயற்கை மணல் கட்டமைப்பும் பாதிக்கப்படுவதாகச் சுற்றாடல் அமைப்புகள் மற்றும் கரையோரப் பாதுகாப்புத் திணைக்களம் எச்சரித்துள்ளன. இந்த விவகாரம் தற்போது நீதிமன்றத்தின் பரிசீலனையில் இருப்பதால், வரும் 27ஆம் தேதி வரை இது குறித்து அமைச்சு எந்தவொரு இறுதி முடிவையும் தன்னிச்சையாக அறிவிக்க முடியாது என அவர் தெளிவுபடுத்தினார்.
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் கடந்த கால அமைச்சர்கள் மீனவர்களின் உணர்ச்சிகளைத் தூண்டிவிட்டு அவர்களைத் தவறாக வழிநடத்துவதாகக் குற்றஞ்சாட்டிய பிரதி அமைச்சர், அவர்கள் ஆட்சியில் இருந்தபோது எடுத்த அறிவியல் பூர்வமற்ற முடிவுகளின் விளைவுகளையே இன்று மீனவர்கள் அனுபவித்து வருவதாகவும் சாடினார்.
கடலையும் கடற்கரைச் சூழலையும் பாதுகாத்து, எதிர்கால சந்ததியினருக்காக மீன் வளத்தை உறுதிப்படுத்துவதே தமது இலக்கு என்றும், நீதிமன்றத் தீர்ப்பின் பின்னர் மீனவ அமைப்புகளுடன் கலந்துரையாடி மீனவர்களின் வாழ்வாதாரத்தைப் பாதிக்காத வகையில் ஒரு நிலையான தீர்வைக் காணத் தாம் தயாராக இருப்பதாகவும் பிரதி அமைச்சர் ரத்னகமகே மேலும் தெரிவித்தார்.