Aggregator

ஜெனீவா தீர்மானத்துக்கு எதிராக கையெழுத்து சேகரிக்கும் சரத் வீரசேகர குழு

3 weeks 2 days ago
30 Aug, 2025 | 01:48 PM (எம்.மனோசித்ரா) ஜெனீவாவில் செப்டெம்பர் 8ஆம் திகதி ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் 60ஆவது அமர்வு ஆரம்பமாகவுள்ளது. இந்த அமர்வில், ஐ.நா. மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்கர் டுர்க் இலங்கை தொடர்பான தனது புதிய அறிக்கையை வெளியிட உள்ளார். இந்நிலையில் குறித்த அறிக்கைக்கு எதிர்ப்பினை வெளியிடும் ஆவணத்தில் பொது மக்களிடம் கையெழுத்து பெறப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னாள் அமைச்சரான ரியர் அத்மிரல் சரத் வீரசேகரவின் ஏற்பாட்டில் இதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன. உயர்ஸ்தானிகர் வோல்கர் சமர்ப்பிக்கவுள்ள அறிக்கையில் இலங்கையில் காணப்படும் மனித உரிமை நிலை, சட்ட நடைமுறைகள் மற்றும் அரசின் ஒத்துழைப்புகள் குறித்த மதிப்பீடு இடம்பெறவுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கையானது இலங்கை இராணுவத்தின் மீது போர்க்குற்றச்சாட்டுக்களை முன்வைத்து அவர்களை சர்வதேசத்திடம் காட்டிக் கொடுக்கும் செயற்பாடாகும் என சரத் வீரசேகர தெரிவித்துள்ளார். அந்த வகையிலேயே இதற்கு எதிர்ப்பினை வெளியிடும் நோக்கில் பொது மக்களிடம் கையெழுத்து சேகரிக்கவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு கையெழுத்து சேகரிக்கும் நடவடிக்கைகள் நேற்றுமுன்தினம் வெள்ளிக்கிழமை கொழும்பு 8இல் அமைந்துள்ள என்.எம்.பெரேரா நிலையத்தில் ஆரம்பிக்கப்பட்டது. பௌத்த மதகுமாரர், முன்னாள் இராணுவத்தினர் உள்ளிட்டோரின் பங்கேற்புடன் இந்நிகழ்வு இடம்பெற்றிருந்தது. அத்தோடு திங்கட்கிழமை கொழும்பு – புறக்கோட்டை, கண்டி, குருணாகல், களுத்துறை, சிலாபம், கம்பஹா, அம்பாந்தோட்டை, இரத்தினபுரி உள்ளிட்ட பிரதான நகரங்களில் பொது மக்களின் கையெழுத்து சேகரிக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த ஆவணத்தை கொழும்பிலுள்ள ஐ.நா. அலுவலகத்தில் கையளிக்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இம்முறை ஐ.நா. அமர்வில் வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலை வாய்ப்புக்கள் மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத் இலங்கை சார்பில் உரையாற்றவுள்ளார். அவர் தனது உரையில் நாட்டின் தற்போதைய அரசியல், ஜனநாயக மற்றும் மனித உரிமை நிலைப்பாடுகளை சர்வதேச சமூகத்திற்கு விளக்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேவேளை பிரித்தானியா மற்றும் கனடா இணைந்து, இலங்கை தொடர்பான புதிய தீர்மானம் ஒன்றை முன்வைக்கவும் திட்டமிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/223772

ஜெனீவா தீர்மானத்துக்கு எதிராக கையெழுத்து சேகரிக்கும் சரத் வீரசேகர குழு

3 weeks 2 days ago

30 Aug, 2025 | 01:48 PM

image

(எம்.மனோசித்ரா)

ஜெனீவாவில் செப்டெம்பர் 8ஆம் திகதி ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் 60ஆவது அமர்வு ஆரம்பமாகவுள்ளது. இந்த அமர்வில், ஐ.நா. மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்கர் டுர்க் இலங்கை தொடர்பான தனது புதிய அறிக்கையை வெளியிட உள்ளார்.

இந்நிலையில் குறித்த அறிக்கைக்கு எதிர்ப்பினை வெளியிடும் ஆவணத்தில் பொது மக்களிடம் கையெழுத்து பெறப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னாள் அமைச்சரான ரியர் அத்மிரல் சரத் வீரசேகரவின் ஏற்பாட்டில் இதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன. உயர்ஸ்தானிகர் வோல்கர் சமர்ப்பிக்கவுள்ள அறிக்கையில் இலங்கையில் காணப்படும் மனித உரிமை நிலை, சட்ட நடைமுறைகள் மற்றும் அரசின் ஒத்துழைப்புகள் குறித்த மதிப்பீடு இடம்பெறவுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கையானது இலங்கை இராணுவத்தின் மீது போர்க்குற்றச்சாட்டுக்களை முன்வைத்து அவர்களை சர்வதேசத்திடம் காட்டிக் கொடுக்கும் செயற்பாடாகும் என சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.

அந்த வகையிலேயே இதற்கு எதிர்ப்பினை வெளியிடும் நோக்கில் பொது மக்களிடம் கையெழுத்து சேகரிக்கவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு கையெழுத்து சேகரிக்கும் நடவடிக்கைகள் நேற்றுமுன்தினம் வெள்ளிக்கிழமை கொழும்பு 8இல் அமைந்துள்ள என்.எம்.பெரேரா நிலையத்தில் ஆரம்பிக்கப்பட்டது. பௌத்த மதகுமாரர், முன்னாள் இராணுவத்தினர் உள்ளிட்டோரின் பங்கேற்புடன் இந்நிகழ்வு இடம்பெற்றிருந்தது.

அத்தோடு திங்கட்கிழமை கொழும்பு – புறக்கோட்டை, கண்டி, குருணாகல், களுத்துறை, சிலாபம், கம்பஹா, அம்பாந்தோட்டை, இரத்தினபுரி உள்ளிட்ட பிரதான நகரங்களில் பொது மக்களின் கையெழுத்து சேகரிக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த ஆவணத்தை கொழும்பிலுள்ள ஐ.நா. அலுவலகத்தில் கையளிக்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இம்முறை ஐ.நா. அமர்வில் வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலை வாய்ப்புக்கள் மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத் இலங்கை சார்பில் உரையாற்றவுள்ளார்.

அவர் தனது உரையில் நாட்டின் தற்போதைய அரசியல், ஜனநாயக மற்றும் மனித உரிமை நிலைப்பாடுகளை சர்வதேச சமூகத்திற்கு விளக்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேவேளை பிரித்தானியா மற்றும் கனடா இணைந்து, இலங்கை தொடர்பான புதிய தீர்மானம் ஒன்றை முன்வைக்கவும் திட்டமிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://www.virakesari.lk/article/223772

பாதாள உலகக் குழுவைச் சேர்ந்த இலங்கையர்கள் இந்தோனேசியாவில் கைது!

3 weeks 2 days ago
பெரிய மரங்களை தறிக்க வேண்டும் என்றால் முதலில் பக்க வேர்களை வெட்ட வேண்டும் . ....... அதுதான் இப்ப நடக்குது போல .......!

சுமந்திரன் ஒரு விலாங்கு மீன்; யாழில் இருந்து கிளம்பியது எதிர்ப்பு

3 weeks 2 days ago
👉 சுமந்திரனின்... பதினாறு சுத்துமாத்துக்கள். பாகம் - 1 THAMILKINGDOMவிடுதலையை விலைபேசும் சுமந்திரன் ? -பாகம்-1 (காணொளி)Tamilkingdo.com,இலங்கை,சுமந்திரன்,ஈழம்,பிரபாகரன்,செய்திகள்,

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கைது

3 weeks 2 days ago
தீவிர சிகிச்சையில் இருந்து வீட்டுக்கு சென்றவுடன் சஜித்துக்கு தொலைபேசி அழைப்பும் எடுத்துள்ளார். எதிர்கட்சிகளெல்லாம் ரணிலுக்காகவா அழுதனர்? தமக்கு நிகழ இருக்கும் சம்பவத்தை நினைத்தே அழுதிருப்பர். ரணில் தனது ஆட்சிக்காலத்தில் நீதியாக நடக்கவில்லை, நீதியை நிலைநாட்டவுமில்லை. மாறாக ஊழல்வாதிகளின் பாதுகாவலராகவே செயற்பட்டார். அதே போன்றே ரணிலுக்காக அழுவோரும், இன்று நீதிமன்றத்தை விமர்ச்சிப்பவர்கள் அன்று நீதிபதிகளையும் அவர்களது தீர்ப்புகளையும் மாற்றியமைத்தவர்களே. சிவநேசதுரை சந்திரகாந்தன் கைது செய்யப்பட்டதும் ரணில் அவரை சந்திக்க தூதனுப்பியதும் துடித்ததும் ஏன்? அப்போ, ஈஸ்ரர் குண்டுத்தாக்குதலில் இவருக்கும் தொடர்புண்டா? இப்போ, ஒவ்வொரு அரசியல்வாதிகளும் மற்றவரை போட்டுக்கொடுத்து தாம் தப்ப தூதனுப்பப்போகின்றனர்.

பாதாள உலகக் குழுவைச் சேர்ந்த இலங்கையர்கள் இந்தோனேசியாவில் கைது!

3 weeks 2 days ago
அனுர அரசின் சிறப்பு நடவடிக்கையில் இதுவும் ஒன்று. பாராட்டுகள். இந்த கேடிகளின் கைது பல முன்னாள் இந்நாள அரசியல்வாதிகளின் கைதுகளுக்கு மேலும் வாய்ப்பளிக்கலாம்.

பாதாள உலகக் குழுவைச் சேர்ந்த இலங்கையர்கள் இந்தோனேசியாவில் கைது!

3 weeks 2 days ago
கைதான குற்றவியல் கும்பல் உறுப்பினர்களை நாளை நட்டுக்கு அழைத்துவர நடவடிக்கை! இந்தோனேஷியாவில் கைது செய்யப்பட்ட கெஹல்பத்தர பத்மே உள்ளிட்ட இலங்கையின் முக்கிய குற்றக் கும்பலைச் சேர்ந்த 05 பேர் நாளை நாட்டுக்கு அழைத்து வரப்படவுள்ளனர். இலங்கையிலிருந்து ஒரு சிறப்பு பொலிஸ் குழு இன்று (30) அவர்களை நாட்டுக்கு அழைத்து வருவதற்காக இந்தோனேஷியா புறப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. நாட்டில் உள்ள சக்திவாய்ந்த ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல்களின் தலைவர்களாகக் கருதப்படும் இவர்கள், கடந்த ஆகஸ்ட் 28 அன்று இந்தோனேசியாவின் ஜகார்த்தாவில் இலங்கை பொலிஸார் மற்றும் ஜகார்த்தா பொலிஸாரின் ஒன்றிணைந்த சிறப்பு நடவடிக்கையில் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட பாதாள உலக நபர்களில் கெஹெல்பத்தர பத்மே, கமாண்டோ சாலிந்தா, பாணந்துறை நிலங்கா, தெம்பிலி லஹிரு மற்றும் பேக்கோ சமன் ஆகியோர் அடங்குவர் என்று பொலிஸார் தெரிவித்தனர். இதேவ‍ேளை, இவர்களுடன் கைது செய்யப்பட்ட பெண் மற்றும் குழந்தை நேற்று இலங்கைக்கு அழைத்து வரப்பட்டனர். இவர்கள் நாட்டை வந்தடைந்த போது பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து குற்றப் புலனாய்வுப் பிரிவினர் (CID) அவர்களை கைது செய்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1445284

குட்டிக் கதைகள்.

3 weeks 2 days ago
செத்தான்டா சேகர். 😂 🤣 ஜெயிலில் இருக்கும் புருஷனை பார்த்து விட்டு காவல்துறை அதிகாரியிடம் சென்று மனைவி : ஐயா என் புருஷன் ரெம்ப வீக்கான ஆளு . அவருக்கு இது மாதிரி கஷ்டமான வேலையை கொடுக்காதீங்க காவல்துறை அதிகாரி: என்னம்மா விளையாடுறீங்களா? உங்க புருஷன் மூணு நேரமும் சாப்புடுறது தூங்குறதை தவிர வேறு எந்த வேலையும் செய்வது இல்லையே மனைவி: மூன்று மாதமாக தினமும் இரவு அஞ்சு மணி நேரம் சுரங்கம் தோண்டுவதாக சொல்றார் காவல்துறை அதிகாரி: ???????

108 தம்பதியினருக்கு இலவச திருமணம்!

3 weeks 2 days ago
111 ஜோடிகளுக்கு திருமணம் தொண்டைமானாறு, செல்வச்சந்நிதி ஆலயத்தில் முதன்முறையாக ஓரே நேரத்தில் இன்று (28) 111 ஜோடிகளுக்கு திருமணம் செய்து வைக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாண மாவட்டத்திலுள்ள 15 பிரதேச செயலகத்திற்கும் உட்பட்ட திருமணம் செய்யாத மற்றும் பதிவுத் திருமணம் செய்து தாலி கட்டாதவர்கள் உள்ளிட்ட 111 ஜோடிகளுக்கு சிங்கப்பூரைச் சேர்ந்தவரும் யாழ்ப்பாணத்தை பூர்வீகமாக கொண்ட துரை தம்பதியினரால் திருமணம் செய்து வைக்கப்பட்டது. திருமணத்தின் போது அரைப்பவுண் தாலி, கூறை சேலை மற்றும் இதர செலவுகளையும் குறித்த சிங்கப்பூர் தம்பதிகள் வழங்கி குருமார்களின் ஆசியுடன் விசேட பூஜை ஆராதனைகள் இடம்பெற்று அனைத்து தம்பதியினரும் சுபமுகூர்த்த வேளையில் தாலி கட்டிக்கொண்டனர். திருமணத்திற்காக 111 தம்பதிகளையும் தெரிவு செய்வதற்கான ஏற்பாடுகளை யாழ்ப்பாண பிரதேச செயலர் ச.சுதர்சன், யாழ்ப்பாண வணிகர் கழக தலைவர் இ.ஜெயசேகரன் ஆகியோர் மேற்கொண்டார். சிங்கப்பூர் தம்பதிகள் தமது மகளுக்கு திருமணம் செய்ததையடுத்து இவ்வாறு ஏனையவர்களுக்கும் தமது சொந்த நிதியினூடாக திருமணம் செய்து வைக்க எண்ணிய உயரிய சிந்தனையை மணமக்கள் மனதார வாழ்த்தி நின்றனர். எமது சமூகத்தில் அதிக பணவசதி படைத்தவர்கள் வாழ்ந்துவரும் சூழலில் இவ்வாறு திருமணம் செய்ய முடியாதவர்களின் வாழ்வில் வசந்தத்தை ஏற்படுத்திய தம்பதிகளுக்கு பல்வேறு தரப்பினரிடமிருந்தும் பாராட்டுக்கள் குவிந்தவண்ணமுள்ளன. https://web.facebook.com/Deranatamil/posts/1328599389269338?ref=embed_post -யாழ். நிருபர் பிரதீபன்- https://adaderanatamil.lk/top-picture/cmev77kds002pqplpm33otrtn

பாதாள உலகக் குழுவைச் சேர்ந்த இலங்கையர்கள் இந்தோனேசியாவில் கைது!

3 weeks 2 days ago
இந்தோனேசியாவில் கைதான குற்றவாளிகள் இன்று நாட்டிற்கு இந்தோனேசியாவில் கைது செய்யப்பட்டுள்ள பாதாள உலகக் குழு தலைவர்களான கெஹெல்பத்தர பத்மே உள்ளிட்ட ஐவரும் இன்றிரவு நாட்டுக்கு அழைத்து வரப்படவுள்ளனர். அவர்களை அழைத்து வருவதற்காக விசேட பொலிஸ் குழு இன்று (30) காலை நாட்டிலிருந்து புறப்பட்டு சென்றது. இந்நிலையில், கைது செய்யபட்ட ஐவரையும், இலங்கையில் இருந்து சென்ற பொலிஸ் குழு பொறுப்பேற்ற நிலையில், அவர்கள் விமானத்தில் இலங்கை நோக்கி புறப்பட்டுள்ளதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. குறித்த விமானம் இன்றிரவு இலங்கையை வந்தடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தோனேசிய தலைவர் ஜகார்த்தாவில் வைத்து கெஹெல்பத்தர பத்மே உள்ளிட்ட ஐந்து குற்றவாளிகள் அண்மையில் அந்நாட்டு பொலிஸாரால் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது. https://adaderanatamil.lk/news/cmey32e1k0044o29n48og2bhu

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கைது

3 weeks 2 days ago
முன்னாள் ஜனாதிபதியின் விசேட உரை! முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க எதிர்வரும் 6 ஆம் திகதி விசேட உரையொன்றை நிகழ்த்தவுள்ளார். கட்சியின் மாநாடு எதிர்வரும் 6 ஆம் திகதி நடைபெறவுள்ளதுடன், அன்றைய தினம் முன்னாள் ஜனாதிபதி இந்த விசேட உரையினை நிகழ்த்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது. பொது சொத்துக்கள் சட்டத்தின் கீழ் விளக்கமறியலில் வைக்கப்பட்ட முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, கடந்த 26 ஆம் திகதி பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டார். முன்னாள் ஜனாதிபதி தொடர்பாக சமர்ப்பிக்கப்பட்ட வைத்திய அறிக்கைகளை பரிசீலித்த பின்னர், கோட்டை நீதவான் நிலுபுலி லங்காபுர இந்த உத்தரவை பிறப்பித்திருந்தார். அரச நிதியை முறைகேடாகப் பயன்படுத்திய சம்பவம் தொடர்பாக பொது சொத்துக்கள் சட்டத்தின் கீழ் குற்றச்சாட்டின் பேரில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கடந்த 22 ஆம் திகதி குற்றப் புலனாய்வு திணைக்களத்தினால் கைது செய்யப்பட்டார். அதே நாளில் கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு 26 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டார். அவரது உடல்நிலையைக் கருத்தில் கொண்டு, அவர் சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார், மறுநாள், வைத்திய பரிந்துரைகளின் பேரில் முன்னாள் ஜனாதிபதியை கொழும்பு தேசிய மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. கொழும்பு தேசிய வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நேற்று (29) வைத்தியசாலையில் இருந்து வௌியேறியிருந்தமை குறிப்பிடத்தக்கது. https://adaderanatamil.lk/news/cmey4f80t003zqplpqomqc6j3

சிறுநீரகத்துக்கு எட்டு லட்சம், கல்லீரலுக்கு நான்கரை லட்சம் ! : நாமக்கல் பெண்ணுக்கு சென்னையில் நேர்ந்த துயரம்

3 weeks 2 days ago
பெண்களே அதிகம்: நாமக்கல்லில் சிறுநீரகத்தை விற்றவர்கள் தற்போது எப்படி இருக்கிறார்கள்? பிபிசி கள ஆய்வு கட்டுரை தகவல் சேவியர் செல்வகுமார் பிபிசி தமிழ் 2 மணி நேரங்களுக்கு முன்னர் (எச்சரிக்கை: இக்கட்டுரையில் தற்கொலை குறித்த விவரணைகள் உள்ளன) ''எனக்கு 19 வயதாக இருந்த போதே என் கணவரின் கடனுக்காக, நான் கிட்னியை (சிறுநீரகம்) விற்றுவிட்டேன். அவர் குடித்தே இறந்து விட்டார். ஒரு சிறுநீரகத்தைக் கொடுத்துவிட்டதால் எனது உடலில் சக்தியே இல்லை. வேலைக்கும் போக முடியவில்லை. சத்தான உணவை சாப்பிடச் சொல்கிறார்கள். அதற்கு வசதியும் இல்லை. இந்த வேதனைக்கு இறந்துவிடலாம் என்று தோன்றி உயிரை மாய்த்துக் கொள்ள முயன்றிருக்கிறேன்!'' வார்த்தைகளை முடிக்க முடியாமல் குமுறி அழுதார் 45 வயது பெண், குமாரி (பெயர் மாற்றப்பட்டுள்ளது). அவர் தன்னுடைய சிறுநீரகத்தை ரூ.60 ஆயிரத்துக்கு விற்றதாகக் கூறுகிறார். ''எனக்கு 17 வயதில் திருமணமானது. ஓராண்டில் எனது மகன் பிறந்தான். அடுத்த வருஷமே நான் என் கிட்னியைக் கொடுத்துவிட்டேன். அப்போது எனக்கு 30 ஆயிரம் ரூபாய் கொடுத்தார்கள். அதை வாங்கி கடனை அடைத்தோம். ஒரு ரூபாய் கூட மிஞ்சவில்லை. அடுத்த ஒரு வருடத்திலேயே எனது கணவரும் கிட்னி கொடுத்தார். அவருக்கு 40 ஆயிரம் ரூபாய் கிடைத்தது. இப்போதும் நாங்கள் கடனில்தான் இருக்கிறோம். உடல் வலி தாங்காமல் உயிரைவிட முயன்றேன். எனது பேரன்தான் காப்பாற்றினான்.'' பேசப்பேச கண்ணீரை அடக்க முடியாமல் அழுதார் 55 வயது பட்டம்மாள் (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இந்த இருவர் மட்டுமல்ல; நாமக்கல் மாவட்டத்திலுள்ள பல்வேறு பகுதிகளிலும் தாங்கள் வாங்கிய கடனுக்காக பலரும் சிறுநீரகத்தை விற்பனை செய்துள்ளனர் என்பதும், கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக இது தொடர்ந்து நடந்திருப்பதும் பிபிசி தமிழ் கள ஆய்வில் தெரியவந்துள்ளது. சமீபத்தில் நடந்த சிறுநீரக விற்பனை தொடர்பாக, தமிழக அரசின் சிறப்புக்குழு ஆய்வு நடத்தி அளித்த அறிக்கையின் அடிப்படையில் அரசு சில நடவடிக்கைகளை எடுத்துள்ள நிலையில், நமது களஆய்வில் தெரியவந்த உண்மைகளை கேட்டறிந்த தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம், இதற்குத் தீர்வு காண குழுக்கள் அமைப்பது, விழிப்புணர்வு மேற்கொள்வது ஆகியவற்றுடன் குறிப்பிட்ட பகுதியிலிருந்து அடிக்கடி சிறுநீரக கொடையாளர் விண்ணப்பங்கள் வந்தால் அதைத் தீவிரமாகப் பரிசீலிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் சுற்றுவட்டாரப் பகுதிகளில், போலி ஆவணங்களைக் கொண்டு முறைகேடாக சிறுநீரகம் எடுக்கப்பட்டது தொடர்பாக சமீபத்தில் புகார்கள் எழுந்தன. சிறுநீரகத்தை விற்பனை செய்த ஒருவர், தனக்கு 10 லட்ச ரூபாய் கொடுப்பதாகக் கூறி, 5 லட்ச ரூபாய் மட்டுமே கொடுத்ததாகப் பேசிய ஆடியோவும் சமூக வலைதளங்களில் வெளியானது. இதன்பேரில், தமிழக அரசின் சுகாதாரத்திட்ட இயக்குநர் வினித் தலைமையில் சிறப்புக்குழு நியமிக்கப்பட்டு, விசாரணை நடத்தப்பட்டது. குழு அளித்த அறிக்கையின் பேரில் திருச்சி சிதார் மருத்துவமனை மற்றும் பெரம்பலுார் தனலட்சுமி சீனிவாசன் மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை ஆகியவற்றுக்கு வழங்கப்பட்டிருந்த சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கான உரிமங்களை நிரந்தரமாக ரத்து செய்து, தமிழக அரசு நடவடிக்கை எடுத்தது. இவை தவிர, வேறு சில நடவடிக்கைகள் எடுப்பதற்கும் அந்த குழு அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது. சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்ய வழங்கப்பட்ட அனுமதியை ரத்து செய்ய தமிழ்நாடு மக்கள் மற்றும் மருத்துவ நல்வாழ்வுத் துறை பரிந்துரைத்ததை எதிர்த்து தனலட்சுமி மருத்துவக்கல்லுாரி மற்றும் மருத்துவமனை சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 'கடனுக்காக சிறுநீரக விற்பனை' படக்குறிப்பு, சிறுநீரகத்தை விற்க, இவர்களுக்காக போலி ஆவணங்கள் தயார் செய்யப்பட்டதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. நீண்டகாலமாகத் தொடர்ந்து வரும் இந்த சிறுநீரகத் திருட்டு விவகாரத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கையில் எடுத்துள்ளது. இக்கட்சியின் சார்பில், கடந்த ஜூலை 24-ஆம் தேதி பள்ளிப்பாளையத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. அதன் தொடர்ச்சியாக, சிஐடியூ தொழிற்சங்கம், சென்னையைச் சேர்ந்த ஒரு தன்னார்வத் தொண்டு நிறுவனத்தின் உதவியுடன், பள்ளிப்பாளையம், குமாரபாளையம் நகராட்சிகள், ஆலாம்பாளையம் பேரூராட்சி, வெப்படை, தேவனாங்குறிச்சி கிராமப்பகுதிகளில் தொழிலாளர்களிடம் ஆய்வு நடத்தியுள்ளது. அதுபற்றி பிபிசி தமிழிடம் விளக்கிய சிஐடியூ நாமக்கல் மாவட்டச்செயலாளர் அசோகன், ''இந்த பகுதிகளில் சிறுநீரகம் கொடுத்த 90 பேரை நாங்கள் அடையாளம் கண்டறிந்தோம். சிறுநீரகம் கொடுத்தவர்கள் பட்டியலில் விசைத்தறித் தொழிலாளர்கள், குடும்பத் தலைவிகள், கட்டுமானத் தொழிலாளர்கள், சிறுவியாபாரிகள், விவசாயக்கூலிகள், பஞ்சாலைத் தொழிலாளர்கள், பாரம் துாக்குபவர், காகிதம், சர்க்கரை ஆலைத் தொழிலாளர்கள் என பல தரப்பினரும் இருந்தனர்.'' என்றார். இவர்கள் அனைவரையும் ஓரிடத்தில் திரட்டும் முயற்சியாக, கடந்த ஜூலை 31 அன்று, காவிரி ரயில் நிலைய பகுதியிலிருக்கும் சிஐடியூ அலுவலகத்தில் ஒரு கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. சிறுநீரகம் கொடுத்து பாதிக்கப்பட்ட 54 பேர் அதில் பங்கேற்றனர். அவர்கள் அனைவரும் தாங்கள் எதற்காக, எப்போது, எங்கே, எவ்வளவு தொகைக்கு சிறுநீரகத்தை விற்றனர் என்பதை வெளிப்படையாகக் கூறினர். தங்கள் குடும்பங்களில் மற்றவர்கள் சிறுநீரகம் கொடுத்த தகவலையும் பலர் அங்கு பதிவு செய்தனர். அவர்களில் பலரை பிபிசி தமிழ் நேரில் சந்தித்துப் பேசியது. நேரில் சந்திக்க தயங்கிய அல்லது சந்திக்க இயலாத 50க்கும் மேற்பட்டோரிடம் அலைபேசியில் கலந்துரையாடியது. அவர்கள் அனைவருமே தாங்கள் வாங்கிய கடனுக்காக சிறுநீரகத்தை விற்பனை செய்ததாக கூறினர். சிறுநீரகத்தை விற்க, இவர்களுக்காக போலி ஆவணங்கள் தயார் செய்யப்பட்டதும் தெரியவந்தது. "சிறுநீரக மோசடியில் சிக்கியவர்களில் பெண்களே அதிகம்" படக்குறிப்பு, ஆண்களை விட பெண்களே அதிகளவில் சிறுநீரகங்களை விற்றுள்ளனர். தமிழகத்தில் கடந்த 1987-ஆம் ஆண்டில், தமிழ்நாடு சிறுநீரகங்கள் (நோய் குணப்படுத்துதலுக்காக பயன்படுத்த அதிகாரமளித்தல்) சட்டம் கொண்டு வரப்பட்டது. இந்திய மனித உறுப்பு மாற்று சட்டம் கடந்த 1994 ஆம் ஆண்டில் நடைமுறைக்கு வந்தது. இந்த சட்டங்களின் அடிப்படையில், வெவ்வேறு காலகட்டங்களில் தமிழகத்தில் உறுப்பு மாற்று சிகிச்சைக்கு பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்காக சிறுநீரக திருட்டு நடந்ததாக எழுந்த புகார்களைத் தொடர்ந்து, கடந்த 2015- ஆம் ஆண்டுக்குப் பின், கடுமையான விதிமுறைகளை தமிழக சுகாதாரத்துறை கொண்டு வந்துள்ளது. இதன்படி, ரத்த உறவு உள்ளவர்கள் மட்டுமே சிறுநீரகம் உள்ளிட்ட உறுப்புகளை தானம் செய்ய முடியும்; அதுவும் அதற்கென உரிமம் பெற்ற மருத்துவமனைகளில் மட்டுமே இந்த மாற்று அறுவை சிகிச்சையை மேற்கொள்ள வேண்டும். இதற்கு மாநில அளவில் உள்ள குழுவிடம் ஒப்புதல் பெற வேண்டும். மருத்துவ கல்வி இயக்குநர், மருத்துவம் மற்றும் ஊரக மருத்துவத்துறை, சென்னை மருத்துவக் கல்லூரி டீன் ஆகியோர் கொண்ட குழுவுக்கு, சம்பந்தப்பட்ட மருத்துவமனை மூலமாகவே இதற்கு விண்ணப்பிக்க வேண்டும். இந்த கட்டுப்பாடுகள் வருவதற்கு முன்பும், வந்த பின்பும் பெரும்பாலும் போலி ஆவணங்களைக் கொண்டே, இவர்களிடமிருந்து சிறுநீரகங்கள் விலைக்கு வாங்கப்பட்டு, பிறருக்குப் பொருத்தப்பட்டுள்ளன என விசாரணையில் தெரியவந்துள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் ஏழைத்தொழிலாளர்களை குறிப்பாக விசைத்தறித் தொழிலாளர்களை குறிவைத்து இந்த சிறுநீரக முறைகேடு அதிகளவில் நடந்திருப்பது பிபிசி தமிழ் களஆய்வில் தெரியவந்துள்ளது. அதிலும் ஆண்களை விட பெண்களே அதிகளவில் சிறுநீரகங்களை விற்றுள்ளனர். ஆலாம்பாளையத்தைச் சேர்ந்த பட்டம்மாள் (வயது 55), விசைத்தறித் தொழிலாளி. அவருக்கு 17 வயதில் திருமணம் நடந்துள்ளது. அதற்கு அடுத்த ஆண்டில் குழந்தை பிறந்துள்ளது. அதற்கு அடுத்த வருடமே, கணவரின் கடனை அடைப்பதற்காக அவர் தனது சிறுநீரகத்தை விற்றுள்ளதாகத் தெரிவித்தார். பெங்களூரு சென்று சிறுநீரகம் கொடுத்த அவருக்கு அப்போது கிடைத்த தொகை ரூ.30 ஆயிரம் எனத் தெரிவித்தார். காவிரி ரயில் நிலைய பகுதியைச் சேர்ந்த குமாரி (வயது 45), தனது 18 வயதிலேயே சிறுநீரகத்தைக் கொடுத்துள்ளார். கோவையிலுள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் இதைக் கொடுத்ததற்கு அவருக்குக் கிடைத்த தொகை ரூ.60 ஆயிரம் என்று தெரிவித்தார். பள்ளிப்பாளையத்தைச் சேர்ந்த மீனாட்சி (பெயர் மாற்றப்பட்டுள்ளது), 26 ஆண்டுகளுக்கு முன்பு, சென்னையில் ஒரு தனியார் மருத்துவமனையில் 35 ஆயிரம் ரூபாய்க்கு தன்னுடைய சிறுநீரகத்தைக் கொடுத்ததாக தெரிவித்தார். பிபிசி தமிழிடம் பேசிய செல்வி, ''கடனை அடைக்க பெண்கள் சிறுநீரகத்தைக் கொடுத்துவிட்டால், ஆண்கள் வேலைக்குச் சென்று சம்பாதிப்பார்கள் என்ற நம்பிக்கையில்தான் நாங்கள் கொடுக்கிறோம். ஆனால் அந்த ஆண்கள் வேலைக்குச் செல்வதில் பாதிக்கும் மேல் குடித்துவிட்டு, மீதியைத்தான் வீட்டுக்குக் கொடுக்கின்றனர். அதனால் மீண்டும் கடன் அதிகமாகிறது.'' என்றார். இந்த தகவலை உறுதிப்படுத்திய சிஐடியூ மாவட்டச் செயலாளர் அசோகன், சிறுநீரகம் விற்றவர்கள் என தாங்கள் அடையாளம் கண்ட 90 பேர்களில் 65 பேர் பெண்கள் என்பதைப் பட்டியலுடன் தெரிவித்தார். சிறுநீரகம் விற்ற ஆண்களில் பலரும் வலி தாங்காமலும், கடனை அடைக்க முடியாமலும் உயிரை மாய்த்துக் கொண்டிருப்பதாக பிபிசி தமிழிடம் பலரும் தகவல்களைப் பகிர்ந்தனர். ஆலாம்பாளையத்தைச் சேர்ந்த முனியம்மாள் (பெயர் மாற்றப்பட்டுள்ளது), ''கடனை அடைக்க வழியின்றி, எனது மகன் சிறுநீரகம் கொடுத்தான். கொடுத்ததிலிருந்தே அவனுக்கு உடலுக்கு முடியவில்லை. வலி காரணமாக வேலைக்குப் போக முடியவில்லை. வேலைக்குப்போகாததால் மீண்டும் கடன் அதிகமானது. கடைசியில் விரக்தியடைந்து 37 வயதில் உயிரை விட்டுவிட்டான்!'' என்றார். ''எனது மகன் பெங்களூருக்குப் போய் தன்னுடைய கிட்னியை விற்று வந்தான். சிறுநீரகம் கொடுத்த இரண்டே ஆண்டுகளில் அவன் உயிரை மாய்த்துக் கொண்டான். எனது மகன், மகள் இருவருமே இறந்து விட்டனர். அவர்களின் குழந்தைகளை வயதான காலத்தில் நான்தான் வளர்த்துக் கொண்டிருக்கிறேன்.'' என்று கூறி கண்ணீர் விட்டார் 70 வயதான மற்றொரு பெண் தனது கணவர், 10 ஆண்டுகளுக்கு முன்பு சென்னை சென்று ரூ.2 லட்சத்து 80 ஆயிரத்துக்கு சிறுநீரகத்தை விற்றதாக வித்யா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்பவர் பிபிசி தமிழிடம் தெரிவித்தார். இவர்களைத் தவிர, பெயர் கூற விரும்பாத பலரும் சிறுநீரகத்தை விற்றதாக பிபிசி தமிழிடம் பகிர்ந்தனர். கடனை தீர்க்க தானே முகவரை அணுகி, சிறுநீரகத்தை விற்றதை பிபிசி தமிழிடம் வெளிப்படையாக ஒப்புக்கொண்டார் 55 வயதான பெயிண்டர் ஒருவர். ''நான் சிறுநீரகத்தை விற்று 25 ஆண்டுகளிருக்கும். எனக்கு கடன் நிறைய இருந்ததால், அப்போதிருந்த ஒரு புரோக்கரிடம் சென்று கேட்டு, எனது சிறுநீரகத்தை விற்றேன். கோவையிலுள்ள ஒரு தனியார் சிறுநீரக மையத்தில்தான் எனக்கு மாற்று அறுவை சிகிச்சை நடந்தது. எனக்கு படிப்பறிவு கிடையாது. எது எதிலோ கையெழுத்து வாங்கினார்கள். அந்த புரோக்கர் இப்போது எங்கிருக்கிறார் என்று தெரியாது.'' என்றார் அவர். தனியார் மருத்துவமனைகள் கூறுவது என்ன? படக்குறிப்பு, நாமக்கல் மாவட்டத்தில் சிறுநீரகத்தை விற்ற சிலர், கோவையிலுள்ள மருத்துவமனைகளில்தான் தங்களுக்கு சிறுநீரகங்கள் எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தனர். இந்தப் பகுதிகளைச் சேர்ந்த சில முகவர்கள், சிறுநீரகம் விற்பவர்களைக் கண்டறிந்து, கோவை, சென்னை, மதுரை, திருச்சி, கொச்சி, பெங்களூரு உள்ளிட்ட பல்வேறு நகரங்களிலும் உள்ள தனியார் மருத்துவமனைகளுக்கு இவர்களை அனுப்பி வைத்துள்ளனர். அங்கு பல மாதங்கள் இவர்களை தங்க வைத்து, பலகட்ட பரிசோதனைகளுக்குப் பின் சிறுநீரகங்கள் எடுக்கப்பட்டுள்ளன. சிறுநீரகம் பெறுபவரின் உறவினர்கள் பெயர்களில் உள்ள ஆவணங்களில், இவர்களின் புகைப்படங்கள் மட்டும் மாற்றப்படுவதாகவும், அங்கே கேட்கப்படும் கேள்விகளுக்கு உறவுமுறை சொல்லி பதில் கூற வைத்ததையும் பலர் தெரிவித்தனர். சில ஆதாரங்களையும் இவர்களில் சிலர் வைத்துள்ளனர். தங்களுக்கு சிறுநீரகம் எடுப்பதற்கு முன் தங்க வைக்கப்பட்டிருந்த இடத்தில், அதே காரணத்துக்காக பல பெண்கள் தங்க வைக்கப்பட்டிருந்ததாக சிறுநீரகம் கொடுத்த பெண் ஒருவர் தெரிவித்தார். ஆனால் இவர்கள் பகிரும் பல விஷயங்களை பிபிசி தமிழால் சுயாதீனமாக உறுதி செய்ய இயலவில்லை. இவர்களில் சிலர் மட்டுமே, தங்களுக்கு சிறுநீரகம் எடுக்கப்பட்ட மருத்துவமனை பெயர்களைத் தெரிவித்தனர். சிலர் தெரிவிக்க மறுத்துவிட்டனர். தங்கள் குடும்பத்தில் மற்றவர்கள் சிறுநீரகம் கொடுத்த தகவலைத் தெரிவித்த பலருக்கும், அந்த மருத்துவமனைகளின் பெயர்கள் கூட தெரியவில்லை. நாமக்கல் மாவட்டத்தில் சிறுநீரகத்தை விற்ற சிலர், கோவையிலுள்ள மருத்துவமனைகளில்தான் தங்களுக்கு சிறுநீரகங்கள் எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தனர். அவர்கள் பெயர் தெரிவித்த 3 மருத்துவமனை நிர்வாகங்களிடம் பிபிசி தமிழ் தரப்பில் விளக்கம் கேட்கப்பட்டது. ஒரு மருத்துவமனையில் 'அதற்கு வாய்ப்பேயில்லை' என்று மறுத்தனர். மற்றொரு மருத்துவமனையில், கொடையாளரிடமிருந்து சிறுநீரகத்தை எடுக்கும் முன், மருத்துவமனைக்குள் மருத்துவர்கள் அடங்கிய குழுவாலும், வெளியில் அரசு அதிகாரிகள் கொண்ட குழுவாலும் பல விஷயங்கள் பரிசீலிக்கப்படுவதால் போலி ஆவணங்கள் பயன்படுத்தப்பட வாய்ப்பில்லை என்று பதிலளிக்கப்பட்டது. சிறுநீரகக் கொடையாளர், அதைப் பெறுபவரின் உண்மையான உறவினர்தான் என்பதை மருத்துவமனை நிர்வாகங்களால் உறுதி செய்ய இயலாது என்று மற்றொரு மருத்துவமனை நிர்வாகம் தரப்பில் விளக்கமளிக்கப்பட்டது. இந்த ஆவணங்களைப் பரிசீலித்து, கொடையாளர் பெயரில் தரப்பட்ட ஆவணங்கள் அவரைச் சார்ந்தவைதான் என்பதை உறுதி செய்வது அதிகாரிகளின் பொறுப்பு என்று அவர்கள் கூறினர். சிறுநீரகத்தை விற்றவர்கள் தற்போது எப்படி இருக்கிறார்கள்? படக்குறிப்பு, சிறுநீரகம் கொடுத்த ஆண்களில் பலரும், வலி தாங்காமல் குடிக்கு அடிமையாகி விட்டதாகவும் இப்பகுதியைச் சேர்ந்த பெண்கள் பலரும் பிபிசி தமிழிடம் தெரிவித்தனர். சிறுநீரகத்தை விற்பவர்களுக்கும், மருத்துவமனை நிர்வாகங்களுக்கும் இடையில் தொடர்புகளை ஏற்படுத்தி, இந்த சிறுநீரக விற்பனை முறைகேட்டுக்கு உதவும் தரகர்களை சந்திப்பதற்காக பிபிசி தமிழ் எடுத்த முயற்சிகள் பலனளிக்கவில்லை. ஏனெனில் சிறுநீரகம் கொடுத்த யாருமே, யார் மூலமாகச் சென்று சிறுநீரகத்தை விற்றோம் என்ற தகவலைச் சொல்ல மறுத்துவிட்டனர். சிலர் தனக்கு உதவிய முகவர் இறந்து விட்டார், இப்போது எங்கேயிருக்கிறார் என்பதே தெரியவில்லை என்று பல காரணங்கள் கூறினர். பல ஆண்டுகளுக்கு முன்பு, 30 ஆயிரம், 40 ஆயிரம் என்று துவங்கிய சிறுநீரக விலை, தற்போது ரூ.5 லட்சம் வரை சென்றிருப்பதாகவும் பலரும் தகவல் தெரிவித்தனர். பள்ளிபாளையத்தைச் சேர்ந்த 28 வயது இளைஞர் ஒருவர், 7 மாதங்களுக்கு முன்பு சிறுநீரகம் கொடுத்துள்ளார். அவருடைய தந்தை, 25 ஆண்டுகளுக்கு முன்பு, கடனுக்காக ரூ.40 ஆயிரத்துக்கு சிறுநீரகத்தை விற்றுள்ளார். தந்தை இப்போதும் நன்றாக இருப்பதை கருத்தில் கொண்டு, அந்த இளைஞர் தற்போதுள்ள கடனுக்காக ரூ.5 லட்சத்துக்கு தனது சிறுநீரகத்தை விற்றுள்ளார். புரோக்கர் கமிஷன் ரூ.50 ஆயிரம் போக, நாலரை லட்ச ரூபாய் இவருக்குத் தரப்பட்டுள்ளது. அதில் 4 லட்ச ரூபாயை கடனை அடைத்து விட்டு, தனது குழந்தை பெயரில் 50 ஆயிரம் ரூபாயை டெபாஸிட் செய்திருக்கிறார். சிறுநீரகம் கொடுத்த ஆண்களில் சிலர், வலி தாங்காமல் குடிக்கு அடிமையாகி விட்டதாக இப்பகுதியைச் சேர்ந்த பெண்கள் பிபிசி தமிழிடம் தெரிவித்தனர். பிபிசி தமிழிடம் பேசிய பட்டம்மாள், ''விசைத்தறி வேலையில் எனக்கு ஒரு நாளைக்கு 400 ரூபாய்தான் சம்பளம். எனது கணவருக்கு ஒரு நாளுக்கு 600 ரூபாய் கிடைக்கும். அவர் குடித்து விட்டு, 200–250 ரூபாய்தான் கொடுப்பார். எனது மருமகனும் குடித்துவிட்டு என் மகளை துன்புறுத்தினார். அதனால் என் மகள் உயிரை மாய்த்துக் கொண்டாள். அவளின் மகனையும் நான்தான் வளர்க்கிறேன். '' என்றார். சிறுநீரகத்தை விற்ற சிலருடைய வீடுகளுக்குச் சென்றபோது, அந்த குடும்பங்களின் வறுமையை அறியமுடிந்ததுடன் அவர்களின் குடும்பங்களில் ஏராளமான இளவயது மரணங்கள் நிகழ்ந்து இருப்பதும் தெரியவந்தது. நாமக்கல் மாவட்டத்தின் பள்ளிபாளையம், குமாரபாளையம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில், 2 லட்சத்துக்கும் அதிகமான விசைத்தறிகள் இயங்குகின்றன. ஜவுளித்தொழில் முழுவீச்சில் நடந்தாலும், இவர்களுக்கு வாரம் முழுவதும் வேலை கிடைப்பதில்லை, கிடைக்கும் கூலியும் குறைவு என்கின்றனர். பல மாதங்களில் வேலை நிறுத்தத்தால் அந்த வேலையுமின்றி கடன் அதிகரிப்பதாகச் சொல்கின்றனர். இப்பகுதியில் நிலவும் அதீத கந்துவட்டிக் கொடுமையும் இவர்களை கடனில் மூழ்கடிப்பதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, லோக் ஜனசக்தி நிர்வாகிகள் பலரும் பிபிசி தமிழிடம் விளக்கினர். படக்குறிப்பு, பள்ளிபாளையத்தைச் சேர்ந்த 28 வயது இளைஞர் ஒருவர், 7 மாதங்களுக்கு முன்பு சிறுநீரகம் கொடுத்துள்ளார். தமிழக அரசின் விளக்கம் என்ன? ''நாங்கள் கடன் வாங்கியே காலத்தை ஓட்டிக் கொண்டிருக்கிறோம். விசைத்தறியில் 3 அல்லது 4 நாட்கள்தான் வேலை கிடைக்கும். அதில் கிடைக்கும் சம்பளத்தை வைத்து வாரந்தோறும் வட்டியையும், கடனையும் திருப்பிச் செலுத்த வேண்டும். அதற்குள் வேறு ஒரு தேவை வந்து மீண்டும் கடன் வாங்கவேண்டியிருக்கும்.'' என்கிறார் வித்யா. ''சிறுநீரகம் கொடுத்த அனைவருமே உடல், மனரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் கடும் பாதிப்பில் உள்ளனர். சிறுநீரகம் கொடுத்தவர்கள் எந்த வேலைக்கும் செல்ல முடியாத அளவுக்கு உடல் வேதனையை அனுபவிக்கின்றனர். இந்த சிறுநீரக விற்பனை முறைகேட்டுக்கு அரசு நிரந்தர முற்றுப்புள்ளி வைப்பதுடன் சிறுநீரகம் கொடுத்து பாதிக்கப்பட்டவர்களை மாற்றுத்திறனாளிகளாகக் கருதி, மாதந்தோறும் 5 ஆயிரம் ரூபாய் உதவித்தொகை வழங்க அரசு முன்வரவேண்டும்.'' என்றார் சிஐடியூ மாவட்டச் செயலாளர் அசோகன். களஆய்வில் கண்டறிந்தது பற்றியும், 30 ஆண்டுகளுக்கும் மேலாக நாமக்கல் மாவட்டத்தில் சிறுநீரக விற்பனை முறைகேடு நடப்பது பற்றியும் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியத்திடம் பிபிசி தமிழ் விளக்கம் கேட்டது. ''சமீபத்தில் நடந்த சிறுநீரக முறைகேடு குறித்து ஆய்வு செய்த குழு அளித்த அறிக்கையின்படி, 2 மருத்துவமனைகளின் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளது. தரகர்கள் இருவர் மீது போலீசில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.'' என்று அமைச்சர் தெரிவித்தார். இதுபற்றி செய்திக்குறிப்பில் விளக்கியதாக அவர் கூறினார். அந்த செய்திக்குறிப்பில், மனித உறுப்பு மாற்றுச்சட்டம் 1994-இன் படி உரிமம் பெற்ற மருத்துவமனைகளின் ஆவணங்களை அவ்வப்போது ஆய்வு செய்து, முறைகேடுகளில் ஈடுபடுபவர்கள் கண்டறியப்பட்டால், அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று கூறப்பட்டுள்ளது. உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்வதற்கு ஒப்புதல் வழங்குவதற்கு தற்போது மாவட்ட அளவில் உள்ள 4 அங்கீகாரக் குழுக்கள் மறுசீரமைப்பு செய்யப்படுமென்றும், மாவட்ட குழுக்களின் பணிகளை மேற்பார்வை செய்யும் அதிகாரத்துடன் புதிதாக மாநில அளவில் குழு அமைக்க ஆணை வெளியிடப்படுமென்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. படக்குறிப்பு, தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியம். நாமக்கல் மாவட்டத்தில் நீண்டகாலமாகத் தொடரும் சிறுநீரக விற்பனை குறித்து அமைச்சர் சுப்ரமணியத்திடம் கேட்டபோது, ''அதற்காகவே அந்தக் குழு வேறு சில பரிந்துரைகளையும் செய்துள்ளது. ஒரு குறிப்பிட்ட பகுதியிலிருந்து சிறுநீரகக் கொடைக்கு அடிக்கடி விண்ணப்பம் வந்தால் அதை அங்கீகரிக்கும் குழு, தனிக்கவனம் செலுத்தி, அவற்றை தீவிரமாகப் பரிசீலிக்கச் சொல்லியிருக்கிறோம். நாமக்கல் மாவட்டத்தில் இதுபற்றி விசாரிக்கவும், விழிப்புணர்வு ஏற்படுத்தவும் மாவட்ட நிர்வாகத்துக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.'' என்றார். இதற்கிடையே, சிறுநீரக விற்பனை முறைகேடு விவகாரத்தில் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக்கோரி உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனு ஆகஸ்ட் 25-ஆம் தேதி விசாரணைக்கு வந்தது. "இந்த விவகாரத்தில் தமிழக அரசின் செயல்பாடு அதிருப்தியளிக்கிறது. இந்த விவகாரம் தொடர்பாக விசாரிக்க தென்மண்டல ஐஜி பிரேம் ஆனந்த் சின்ஹா தலைமையில் விசாரணைக் குழு அமைக்கப்படுகிறது. இக்குழு முதற்கட்ட விசாரணை அறிக்கையை செப்டம்பர் 24-ஆம் தேதிக்குள் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும்" என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு பிறப்பித்தது. முக்கிய குறிப்பு மனநலம் சார்ந்த பிரச்னைகளை மருந்துகள் மற்றும் சிகிச்சை மூலம் எளிதில் குணப்படுத்தலாம். இதற்கான உதவி எண்களில் தொடர்பு கொண்டு நிவாரணம் பெறலாம். சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -24640050 (24 மணி நேரம்) மாநில தற்கொலை தடுப்பு உதவி மையம் - 104 (24 மணி நேரம்) சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்தின் ஹெல்ப்லைன் – 1800-599-0019 - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c1ejxn52qzvo

கொக்குதொடுவாயில் மனித எச்சங்கள் மீட்பு

3 weeks 2 days ago
கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழி தொடர்பான வழக்கு கொக்குத்தொடுவாய் மனிதப்புதைக்குழி தொடர்பான வழக்கு முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றத்தில் இன்று (28) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட நிலையில் வழக்கு மீண்டும் நவம்பர் மாதம் ஆறாம் திகதிக்கு தவணையிடப்பட்டுள்ளது. முல்லைத்தீவு கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழி தொடர்பான வழக்கு விசாரணைகள் இன்று முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றத்தில் நீதிபதி தர்மலிங்கம் பிரதீபன் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. இதன்போது, குறித்த புதைகுழியில் மீட்கப்பட்ட சான்று பொருட்கள் தொடர்பில் உறவினர்கள் அடையாளம் காட்டுவதற்கான விளம்பரங்கள் காணாமல் போனோர் அலுவலகத்தால் ஊடகங்களில் பிரசுரிக்கப்பட்டிருப்பதாகவும் இது தொடர்பான அறிக்கைகள் நீதிமன்றுக்கு சமர்ப்பிப்பதற்கு கால அவகாசம் தேவை என கோரப்பட்டதற்கு அமைவாக குறித்த வழக்கு நவம்பர் மாதம் 6 ஆம் திகதிக்கு தவணையிடப்பட்டுள்ளது. முல்லைத்தீவு கொக்குத்தொடுவாய் மனித புதைக்குழி அகழ்வுப்பணி நிறைவில் 52 மனித எச்சங்கள் மீட்கப்பட்டிருந்த நிலையில் அகழ்வுப்பணி நிறைவு செய்யப்பட்டிருந்தது. இதனைத் தொடர்ந்து அகழ்வுப்பணிகளில் ஈடுபட்டிருந்த பேராசிரியர் ராஜ் சோமதேவ அவர்களினால் நீதிமன்றத்திற்கு முழுமையான அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டிருந்தது. அத்தோடு சட்ட வைத்திய அதிகாரிகளால் குறித்த மனித எச்சங்கள் தொடர்பில் செய்யப்பட்ட ஆய்வுகளின் இறுதி அறிக்கையும் நீதிமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்பட்டிருந்தது. இவ்வாறான பின்னணியில் குறித்த சான்றுப் பொருட்கள் தொடர்பான தகவல்கள் தெரிந்தவர்களை தொடர்பு கொண்டு அது தொடர்பில் தகவல்கள் வழங்குமாறு 2025.08.03 அன்று காணாமல் போனோர் அலுவலகத்தினால் ஊடகங்களில் குறித்த விடயங்கள் வெளியிடப்பட்டு மக்களிடமிருந்து குறித்த விடயங்கள் தொடர்பான தகவல்கள் தெரிந்தவர்கள் தகவல் வழங்குமாறு கோரப்பட்டிருந்தது. இவ்வாறான பின்னணியில் இதனுடைய இறுதி அறிக்கைகள் நீதிமன்றத்திற்கு சமர்ப்பிப்பதற்கு கால அவகாசம் தேவை என்ற அடிப்படையில் குறித்த வழக்கு நவம்பர் மாதம் ஆறாம் திகதிக்கு தவணையிடப்பட்டுள்ளது. -முல்லைத்தீவு நிருபர் தவசீலன்- https://adaderanatamil.lk/news/cmev4v1a0002mqplpg6tkooff

சாதாரண மர சிற்பம் மூலம் அமெரிக்காவை 7 ஆண்டு உளவு பார்த்த சோவியத் - ரகசியம் வெளிப்பட்டது எப்படி?

3 weeks 2 days ago
பட மூலாதாரம், Getty Images கட்டுரை தகவல் மேட் வில்சன் 8 மணி நேரங்களுக்கு முன்னர் 1945ஆம் ஆண்டு ஒரு மர சிற்பத்தில் மறைத்து வைக்கப்பட்ட ஒரு ஒட்டு கேட்கும் கருவி, ஏழு ஆண்டுகள் அமெரிக்க பாதுகாப்பு அமைப்பால் கண்டறியப்படாமல் இருந்தது. உளவு நோக்கங்களுக்காக பயன்படுத்தப்பட்ட கலைப் படைப்பு இது ஒன்று மட்டும் அல்ல. எண்பது ஆண்டுகளுக்கு முன்பு, இரண்டாம் உலகப் போரின் இறுதி வாரங்களில், மாஸ்கோவில் உள்ள அமெரிக்க தூதரின் அதிகாரப்பூர்வ இல்லமான ஸ்பாசோ ஹவுஸில், ரஷ்ய சிறுவர் சாரணர் படையினர் (Boy Scouts) அமெரிக்க தூதருக்கு கையால் செதுக்கப்பட்ட அமெரிக்காவின் பெரிய முத்திரை பதித்த மரச் சிற்பத்தை பரிசாக அளித்தனர். இந்த பரிசு, போரின்போது ரஷ்யாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான ஒத்துழைப்பை குறிக்கும் வகையில் வழங்கப்பட்டது. தூதர் டபிள்யூ. அவெரல் ஹாரிமன் இதை 1952 வரை தனது இல்லத்தில் பெருமையுடன் காட்சிப்படுத்தினார். ஆனால், தூதருக்கும் அவரது பாதுகாப்பு குழுவினருக்கும் தெரியாமல், இந்த முத்திரையில் "தி திங்" (The Thing) என அமெரிக்க தொழில்நுட்ப பாதுகாப்பு குழுக்களால் அழைக்கப்பட்ட ஒரு ரகசிய ஒட்டு கேட்கும் கருவி இருந்தது. இது ஏழு ஆண்டுகள் கண்டறியப்படாமல் தூதரக உரையாடல்களை உளவு பார்த்தது. சாதாரணமான ஒரு கலைப்படைப்பைப் பயன்படுத்தி எதிரி அமைப்பை ஊடுருவி உத்திரீதியாக நன்மையைப் பெற்றதன் மூலம், சோவியத்துகள் 'ஓடிஸியஸின் ட்ரோஜன் குதிரைக்கு' பிறகு மிகவும் புத்திசாலித்தனமான தந்திரத்தை செய்திருந்தனர். இது ஏதோ கற்பனை உளவு கதை போல் தோன்றினாலும் இது உண்மையில் நடந்தது. 'தி திங்' எவ்வாறு செயல்பட்டது? பட மூலாதாரம், John Little படக்குறிப்பு, எதிர்-உளவு நிபுணர் ஜான் லிட்டில், 'தி திங்'-இன் நகலை உருவாக்கினார் – அவரது பணி பற்றிய ஆவணப்படம் இந்த ஆண்டு வெளியிடப்பட்டது ஜான் லிட்டில் என்ற 79 வயதான, உளவு நடவடிக்கைகளை எதிர்ப்பதற்கான நிபுணர், இந்தக் கருவியால் நீண்ட காலமாக ஈர்க்கப்பட்டு அவரே அதன் நகலையும் உருவாக்கியுள்ளார். அவரது அற்புதமான பணி பற்றிய ஒரு ஆவணப்படம் இந்த ஆண்டு வெளியிடப்பட்டது. மே மாதம் அதன் முதல் நேரடி காட்சிக்கான டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்த பின்னர், செப்டம்பர் 27 அன்று பக்கிங்ஹாம்ஷையரில் உள்ள பிளெட்ச்லி பார்க்-இல் உள்ள தேசிய கணினி அருங்காட்சியகத்தில் (National Museum of Computing) திரையிடப்பட உள்ளது. அவர் 'தி திங் -இன் தொழில்நுட்பத்தை இசை வடிவில் விவரிக்கிறார் - இது ஆர்கன் குழாய்கள் போன்ற குழல்களும், "டிரம் தோல் போல் மனித குரலுக்கு அதிரும் ஒரு புரையும் கொண்டது. ஆனால் இது ஒரு தொப்பி முள் போலத் தோன்றும் ஒரு சிறிய பொருளாக சுருக்கப்பட்டது. இதில் "மின்னணு இல்லை, பேட்டரி இல்லை, மற்றும் இது சூடாகாது" என்பதால் எதிர்-உளவு பரிசோதனைகளில் கவனிக்கப்படாமல் இருந்தது. இத்தகைய கருவியின் பொறியியல் மிகவும் துல்லியமாக இருந்தது - "ஒரு சுவிஸ் கடிகாரத்தையும் மைக்ரோமீட்டரையும் இணைத்து உருவாக்கப்பட்டது". அந்தக் காலத்தில் 'தி திங்' "ஒலி கண்காணிப்பு அறிவியலை முன்னர் சாத்தியமற்றதாகக் கருதப்பட்ட ஒரு நிலைக்கு உயர்த்தியது" என்று வரலாற்றாசிரியர் ஹெச் கீத் மெல்டன் கூறியுள்ளார். அருகிலுள்ள ஒரு கட்டடத்தில் இருந்த ஒரு தொலைநிலை டிரான்ஸ்ஸீவர் இயக்கப்பட்டபோது மட்டுமே ஸ்பாசோ ஹவுஸில் 'தி திங்' செயல்படுத்தப்பட்டது. இது ஒரு உயர்-அதிர்வெண் சமிக்ஞையை அனுப்பியது, இது கருவியின் ஆன்டெனாவிலிருந்து வரும் அனைத்து அதிர்வுகளையும் பிரதிபலித்தது. 1951ஆம் ஆண்டு மாஸ்கோவில் பணிபுரிந்த ஒரு பிரிட்டிஷ் ராணுவ வானொலி ஆபரேட்டர், 'தி திங்' பயன்படுத்திய அதே அலைவரிசையை தற்செயலாக டியூன் செய்து, தொலைவில் உள்ள ஒரு அறையிலிருந்து உரையாடல்களைக் கேட்டபோதுதான் இது கண்டறியப்பட்டது. அடுத்த ஆண்டு, அமெரிக்க தொழில்நுட்ப வல்லுநர்கள் தூதரக இல்லத்தை ஆய்வு செய்து, மூன்று நாட்கள் தேடுதலுக்குப் பிறகு, கையால் செதுக்கப்பட்ட மர சிற்பத்தில் இருந்த பெரிய முத்திரை, திரைக்குப் பின் நடந்த தூதரக மட்ட உரையாடல்களைக் கேட்கும் காதாக இருப்பதைக் கண்டறிந்தனர். உளவாக பயன்பட்ட கலை 'தி திங்கின் வெற்றியைப் பற்றி சிந்திக்கையில், அதை இயக்கிய ரஷ்ய தொழில்நுட்ப வல்லுநர்களில் ஒருவரான வடிம் கோன்சரோவ், "நீண்ட காலமாக, எங்கள் நாடு குறிப்பிட்ட மற்றும் மிகவும் முக்கியமான தகவல்களைப் பெற முடிந்தது, இது பனிப் போரின் போது எங்களுக்கு சில நன்மைகளை அளித்தது" என்று கூறினார். அந்தக் காலத்தில் மேற்கு நாடுகளை உளவு பார்க்க சோவியத் ஒன்றியம் எத்தனை 'திங்க்ஸ்' பயன்படுத்தியிருக்கலாம் என்பது சோவியத் உளவுத்துறைக்கு வெளியே யாருக்கும் இன்றுவரை தெரியாது. ஆனால் இந்த ஒட்டுக் கேட்கும் கருவியின் வெற்றி தொழில்நுட்ப புதுமையால் மட்டும் கிடைத்தது அல்ல. இது அழகிய பொருட்கள் குறித்த மக்களின் கலாசார மனப்பான்மைகளைப் பயன்படுத்தியதால் வெற்றியடைந்தது. கலைப்படைப்புகள் மற்றும் அலங்காரப் பொருட்களை நாம் பொதுவாக அந்தஸ்து, ரசனை அல்லது கலாசார ஆர்வத்தின் செயலற்ற அடையாளங்கள் என நம்புகிறோம். செதுக்கப்பட்ட மேப்பிள் மரத்தால் ஆன மர சிற்பத்தை பயன்படுத்தி ரஷ்ய உளவுத்துறை இந்த அனுமானத்தை ஆயுதமாக்கியது. வரலாற்றில் உளவு, மறைத்தல் மற்றும் ராணுவ உத்திக்காக கலை பயன்படுத்தப்பட்டதற்கு இது ஒன்று மட்டும் உதாரணம் அல்ல. மோனாலிசாவை வரைந்த லியோனார்டோ டா வின்சி, டாங்கிகள் மற்றும் முற்றுகை ஆயுதங்களையும் வடிவமைத்தார், பீட்டர் பால் ரூபென்ஸ் முப்பது ஆண்டு போரின்போது உளவாளியாக செயல்பட்டார். முதல் மற்றும் இரண்டாம் உலகப் போர்களின்போது பல்வேறு நாடுகளைச் சேர்ந்த கலைஞர்கள் மறைமுக மற்றும் ஏமாற்று நடவடிக்கைகளை வடிவமைத்தனர். பிரிட்டிஷ் கலை வரலாற்றாசிரியரான (மற்றும் ராஜ கலை சேகரிப்பின் சர்வேயரான) அந்தோனி பிளண்ட், இரண்டாம் உலகப் போர் மற்றும் பனிப்போரின் ஆரம்பத்தில் சோவியத் உளவாளியாக இருந்தார். 'தி திங்கின் விசித்திரமான வழக்கில், இசை வரலாறும் முக்கியமானது. இதன் புத்திசாலித்தனமான கண்டுபிடிப்பாளரான லெவ் செர்ஜியேவிச் டெர்மென், பொதுவாக லியோன் தெரமின் என்று அழைக்கப்படுகிறார். இவர் ரஷ்யாவில் பிறந்த கண்டுபிடிப்பாளரும் திறமையான இசைக்கலைஞருமாவார். அவர் உலகின் முதல் மின்னணு இசைக் கருவியை உருவாக்கினார் - இது அவரது பெயரால் தெரமின் என்று அழைக்கப்படுகிறது. இந்த கருவியை எதையும் தொடாமல் வாசிக்கலாம் - அதன் ஆன்டெனாக்களைச் சுற்றி கைகளின் அசைவுகள் காற்றில் நகர்ந்து நோட்களைக் கட்டுப்படுத்துகின்றன. தெரமின்-இன் தனித்துவமான ஒலி, 1950களில் அமெரிக்க அறிவியல் கதைகளை கொண்ட திரைப்பட இசைகளின் அடையாளமாக மாறியது - குறிப்பாக 1951 ஆம் ஆண்டு வெளியான தி டே தி எர்த் ஸ்டுட் ஸ்டில்( The Day the Earth Stood Still) திரைப்படம், பனிப்போர் பய உணர்வைப் பற்றிய ஒரு உவமையாக அடிக்கடி குறிப்பிடப்படுகிறது. பல ஆண்டுகள் காக்கப்பட்ட ரகசியம் பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, 'தி திங்'-ஐ கண்டுபிடித்த லியோன் தெரமின், உலகின் முதல் மின்னணு இசைக் கருவியையும் உருவாக்கினார், இது அவரது பெயரால் அழைக்கப்படுகிறது. 'தி திங்' கண்டுபிடிக்கப்பட்ட பின்னர், அது அமெரிக்க உளவுத்துறையால் மிக ரகசியமாக வைக்கப்பட்டது. ஆனால் 1960 ஆம் ஆண்டு மே மாதம், அணு ஆயுத சேகரிப்பின் உச்சத்தில், ஒரு அமெரிக்க யு-2 உளவு விமானம் ரஷ்யாவில் சுட்டு வீழ்த்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து ஏற்பட்ட பரபரப்பான தூதரக நடவடிக்கைகளில், அமெரிக்க வெளியுறவுத்துறை அதிகாரிகள், பனிப்போர் உளவு ஒருதலைப்பட்சமானது அல்ல என்பதை நிரூபிக்க, ஐநா பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் மர சிற்பத்தின் மூலம் சோவியத் தங்களை உளவு பார்த்ததை பகிரங்கமாக வெளிப்படுத்தினர். ஒரு தூதரக இல்லத்தில் நடந்த ஊடுருவல் எவ்வளவு சங்கடமான பாதுகாப்பு மீறலாக இருந்ததென்றால் தி திங்கை பொதுமக்கள் கவனத்திற்கு கொண்டுவர ஒரு உளவு விமானம் சுட்டு வீழ்த்தப்பட வேண்டியிருந்தது என ஜான் லிட்டில் நம்புகிறார். ஆனால் 'தி திங்கின்' உண்மையான தொழில்நுட்ப சிறப்பு பொதுமக்களுக்கு ஒருபோதும் வெளிப்படுத்தப்படவில்லை. மூடப்பட்ட கதவுகளுக்குப் பின் இந்தக் கருவி பிரிட்டிஷ் எதிர்-உளவுத்துறையால் SATYR என்ற குறியீட்டு பெயரில் ஆழமாக ஆய்வு செய்யப்பட்டது. முன்னாள் பாதுகாப்பு அதிகாரி பீட்டர் ரைட் 1987 இல் தனது நினைவுக் குறிப்பான ஸ்பைகேட்சரில் (Spycatcher) அனைத்தையும் வெளிப்படுத்தும் வரை, இதன் விவரங்கள் அதிகாரப்பூர்வ அரசு ரகசியமாக இருந்தன. அந்தக் காலத்திலேயே தொழில்நுட்ப ரீதியாக மிகவும் மேம்பட்டதாக இருந்தது மற்றும் பனிப்போர் உளவு விளையாட்டை வடிவமைத்த விதம் ஆகியவற்றால் 'தி திங்' வரலாற்றாசிரியர்களை ஈர்த்தது. ஆனால் இது ஓபரா அரங்குகள் மற்றும் கலைக்கூடங்களின் பாதுகாக்கப்பட்ட பிரம்மாண்டத்திற்கு வெளியே நிகழும் உயர் கலாசாரத்தின் விசித்திரமான மற்றும் இருண்ட வரலாற்றையும் வெளிப்படுத்துகிறது. அதில் பாரம்பரிய இசைக்கலைஞர்கள் ஒட்டுகேட்கும் கருவிகள் மற்றும் ராணுவ உளவுத்தகவல் சேகரிக்கும் கருவிகளாக உள்ள கையால் செதுக்கப்பட்ட கலைப்படைப்புகளை உருவாக்குகின்றனர். தி திங், செப்டம்பர் 27 அன்று பக்கிங்ஹாம்ஷையர் பிளெட்ச்லி பார்க்-இல் உள்ள உள்ள தேசிய கணினி அருங்காட்சியகத்தில் திரையிடப்பட உள்ளது. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cp89gv1vrj6o

சாதாரண மர சிற்பம் மூலம் அமெரிக்காவை 7 ஆண்டு உளவு பார்த்த சோவியத் - ரகசியம் வெளிப்பட்டது எப்படி?

3 weeks 2 days ago

அமெரிக்கா, சோவியத் யூனியன், உளவு, கலைப்படைப்பு, வரலாறு

பட மூலாதாரம், Getty Images

கட்டுரை தகவல்

  • மேட் வில்சன்

  • 8 மணி நேரங்களுக்கு முன்னர்

1945ஆம் ஆண்டு ஒரு மர சிற்பத்தில் மறைத்து வைக்கப்பட்ட ஒரு ஒட்டு கேட்கும் கருவி, ஏழு ஆண்டுகள் அமெரிக்க பாதுகாப்பு அமைப்பால் கண்டறியப்படாமல் இருந்தது. உளவு நோக்கங்களுக்காக பயன்படுத்தப்பட்ட கலைப் படைப்பு இது ஒன்று மட்டும் அல்ல.

எண்பது ஆண்டுகளுக்கு முன்பு, இரண்டாம் உலகப் போரின் இறுதி வாரங்களில், மாஸ்கோவில் உள்ள அமெரிக்க தூதரின் அதிகாரப்பூர்வ இல்லமான ஸ்பாசோ ஹவுஸில், ரஷ்ய சிறுவர் சாரணர் படையினர் (Boy Scouts) அமெரிக்க தூதருக்கு கையால் செதுக்கப்பட்ட அமெரிக்காவின் பெரிய முத்திரை பதித்த மரச் சிற்பத்தை பரிசாக அளித்தனர்.

இந்த பரிசு, போரின்போது ரஷ்யாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான ஒத்துழைப்பை குறிக்கும் வகையில் வழங்கப்பட்டது. தூதர் டபிள்யூ. அவெரல் ஹாரிமன் இதை 1952 வரை தனது இல்லத்தில் பெருமையுடன் காட்சிப்படுத்தினார்.

ஆனால், தூதருக்கும் அவரது பாதுகாப்பு குழுவினருக்கும் தெரியாமல், இந்த முத்திரையில் "தி திங்" (The Thing) என அமெரிக்க தொழில்நுட்ப பாதுகாப்பு குழுக்களால் அழைக்கப்பட்ட ஒரு ரகசிய ஒட்டு கேட்கும் கருவி இருந்தது. இது ஏழு ஆண்டுகள் கண்டறியப்படாமல் தூதரக உரையாடல்களை உளவு பார்த்தது.

சாதாரணமான ஒரு கலைப்படைப்பைப் பயன்படுத்தி எதிரி அமைப்பை ஊடுருவி உத்திரீதியாக நன்மையைப் பெற்றதன் மூலம், சோவியத்துகள் 'ஓடிஸியஸின் ட்ரோஜன் குதிரைக்கு' பிறகு மிகவும் புத்திசாலித்தனமான தந்திரத்தை செய்திருந்தனர். இது ஏதோ கற்பனை உளவு கதை போல் தோன்றினாலும் இது உண்மையில் நடந்தது.

'தி திங்' எவ்வாறு செயல்பட்டது?

அமெரிக்கா, சோவியத் யூனியன், உளவு, கலைப்படைப்பு, வரலாறு

பட மூலாதாரம், John Little

படக்குறிப்பு, எதிர்-உளவு நிபுணர் ஜான் லிட்டில், 'தி திங்'-இன் நகலை உருவாக்கினார் – அவரது பணி பற்றிய ஆவணப்படம் இந்த ஆண்டு வெளியிடப்பட்டது

ஜான் லிட்டில் என்ற 79 வயதான, உளவு நடவடிக்கைகளை எதிர்ப்பதற்கான நிபுணர், இந்தக் கருவியால் நீண்ட காலமாக ஈர்க்கப்பட்டு அவரே அதன் நகலையும் உருவாக்கியுள்ளார்.

அவரது அற்புதமான பணி பற்றிய ஒரு ஆவணப்படம் இந்த ஆண்டு வெளியிடப்பட்டது. மே மாதம் அதன் முதல் நேரடி காட்சிக்கான டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்த பின்னர், செப்டம்பர் 27 அன்று பக்கிங்ஹாம்ஷையரில் உள்ள பிளெட்ச்லி பார்க்-இல் உள்ள தேசிய கணினி அருங்காட்சியகத்தில் (National Museum of Computing) திரையிடப்பட உள்ளது.

அவர் 'தி திங் -இன் தொழில்நுட்பத்தை இசை வடிவில் விவரிக்கிறார் - இது ஆர்கன் குழாய்கள் போன்ற குழல்களும், "டிரம் தோல் போல் மனித குரலுக்கு அதிரும் ஒரு புரையும் கொண்டது. ஆனால் இது ஒரு தொப்பி முள் போலத் தோன்றும் ஒரு சிறிய பொருளாக சுருக்கப்பட்டது. இதில் "மின்னணு இல்லை, பேட்டரி இல்லை, மற்றும் இது சூடாகாது" என்பதால் எதிர்-உளவு பரிசோதனைகளில் கவனிக்கப்படாமல் இருந்தது.

இத்தகைய கருவியின் பொறியியல் மிகவும் துல்லியமாக இருந்தது - "ஒரு சுவிஸ் கடிகாரத்தையும் மைக்ரோமீட்டரையும் இணைத்து உருவாக்கப்பட்டது". அந்தக் காலத்தில் 'தி திங்' "ஒலி கண்காணிப்பு அறிவியலை முன்னர் சாத்தியமற்றதாகக் கருதப்பட்ட ஒரு நிலைக்கு உயர்த்தியது" என்று வரலாற்றாசிரியர் ஹெச் கீத் மெல்டன் கூறியுள்ளார்.

அருகிலுள்ள ஒரு கட்டடத்தில் இருந்த ஒரு தொலைநிலை டிரான்ஸ்ஸீவர் இயக்கப்பட்டபோது மட்டுமே ஸ்பாசோ ஹவுஸில் 'தி திங்' செயல்படுத்தப்பட்டது. இது ஒரு உயர்-அதிர்வெண் சமிக்ஞையை அனுப்பியது, இது கருவியின் ஆன்டெனாவிலிருந்து வரும் அனைத்து அதிர்வுகளையும் பிரதிபலித்தது.

1951ஆம் ஆண்டு மாஸ்கோவில் பணிபுரிந்த ஒரு பிரிட்டிஷ் ராணுவ வானொலி ஆபரேட்டர், 'தி திங்' பயன்படுத்திய அதே அலைவரிசையை தற்செயலாக டியூன் செய்து, தொலைவில் உள்ள ஒரு அறையிலிருந்து உரையாடல்களைக் கேட்டபோதுதான் இது கண்டறியப்பட்டது. அடுத்த ஆண்டு, அமெரிக்க தொழில்நுட்ப வல்லுநர்கள் தூதரக இல்லத்தை ஆய்வு செய்து, மூன்று நாட்கள் தேடுதலுக்குப் பிறகு, கையால் செதுக்கப்பட்ட மர சிற்பத்தில் இருந்த பெரிய முத்திரை, திரைக்குப் பின் நடந்த தூதரக மட்ட உரையாடல்களைக் கேட்கும் காதாக இருப்பதைக் கண்டறிந்தனர்.

உளவாக பயன்பட்ட கலை

'தி திங்கின் வெற்றியைப் பற்றி சிந்திக்கையில், அதை இயக்கிய ரஷ்ய தொழில்நுட்ப வல்லுநர்களில் ஒருவரான வடிம் கோன்சரோவ், "நீண்ட காலமாக, எங்கள் நாடு குறிப்பிட்ட மற்றும் மிகவும் முக்கியமான தகவல்களைப் பெற முடிந்தது, இது பனிப் போரின் போது எங்களுக்கு சில நன்மைகளை அளித்தது" என்று கூறினார்.

அந்தக் காலத்தில் மேற்கு நாடுகளை உளவு பார்க்க சோவியத் ஒன்றியம் எத்தனை 'திங்க்ஸ்' பயன்படுத்தியிருக்கலாம் என்பது சோவியத் உளவுத்துறைக்கு வெளியே யாருக்கும் இன்றுவரை தெரியாது.

ஆனால் இந்த ஒட்டுக் கேட்கும் கருவியின் வெற்றி தொழில்நுட்ப புதுமையால் மட்டும் கிடைத்தது அல்ல. இது அழகிய பொருட்கள் குறித்த மக்களின் கலாசார மனப்பான்மைகளைப் பயன்படுத்தியதால் வெற்றியடைந்தது. கலைப்படைப்புகள் மற்றும் அலங்காரப் பொருட்களை நாம் பொதுவாக அந்தஸ்து, ரசனை அல்லது கலாசார ஆர்வத்தின் செயலற்ற அடையாளங்கள் என நம்புகிறோம்.

செதுக்கப்பட்ட மேப்பிள் மரத்தால் ஆன மர சிற்பத்தை பயன்படுத்தி ரஷ்ய உளவுத்துறை இந்த அனுமானத்தை ஆயுதமாக்கியது.

வரலாற்றில் உளவு, மறைத்தல் மற்றும் ராணுவ உத்திக்காக கலை பயன்படுத்தப்பட்டதற்கு இது ஒன்று மட்டும் உதாரணம் அல்ல. மோனாலிசாவை வரைந்த லியோனார்டோ டா வின்சி, டாங்கிகள் மற்றும் முற்றுகை ஆயுதங்களையும் வடிவமைத்தார், பீட்டர் பால் ரூபென்ஸ் முப்பது ஆண்டு போரின்போது உளவாளியாக செயல்பட்டார்.

முதல் மற்றும் இரண்டாம் உலகப் போர்களின்போது பல்வேறு நாடுகளைச் சேர்ந்த கலைஞர்கள் மறைமுக மற்றும் ஏமாற்று நடவடிக்கைகளை வடிவமைத்தனர். பிரிட்டிஷ் கலை வரலாற்றாசிரியரான (மற்றும் ராஜ கலை சேகரிப்பின் சர்வேயரான) அந்தோனி பிளண்ட், இரண்டாம் உலகப் போர் மற்றும் பனிப்போரின் ஆரம்பத்தில் சோவியத் உளவாளியாக இருந்தார்.

'தி திங்கின் விசித்திரமான வழக்கில், இசை வரலாறும் முக்கியமானது. இதன் புத்திசாலித்தனமான கண்டுபிடிப்பாளரான லெவ் செர்ஜியேவிச் டெர்மென், பொதுவாக லியோன் தெரமின் என்று அழைக்கப்படுகிறார். இவர் ரஷ்யாவில் பிறந்த கண்டுபிடிப்பாளரும் திறமையான இசைக்கலைஞருமாவார். அவர் உலகின் முதல் மின்னணு இசைக் கருவியை உருவாக்கினார் - இது அவரது பெயரால் தெரமின் என்று அழைக்கப்படுகிறது.

இந்த கருவியை எதையும் தொடாமல் வாசிக்கலாம் - அதன் ஆன்டெனாக்களைச் சுற்றி கைகளின் அசைவுகள் காற்றில் நகர்ந்து நோட்களைக் கட்டுப்படுத்துகின்றன. தெரமின்-இன் தனித்துவமான ஒலி, 1950களில் அமெரிக்க அறிவியல் கதைகளை கொண்ட திரைப்பட இசைகளின் அடையாளமாக மாறியது - குறிப்பாக 1951 ஆம் ஆண்டு வெளியான தி டே தி எர்த் ஸ்டுட் ஸ்டில்( The Day the Earth Stood Still) திரைப்படம், பனிப்போர் பய உணர்வைப் பற்றிய ஒரு உவமையாக அடிக்கடி குறிப்பிடப்படுகிறது.

பல ஆண்டுகள் காக்கப்பட்ட ரகசியம்

அமெரிக்கா, சோவியத் யூனியன், உளவு, கலைப்படைப்பு, வரலாறு

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, 'தி திங்'-ஐ கண்டுபிடித்த லியோன் தெரமின், உலகின் முதல் மின்னணு இசைக் கருவியையும் உருவாக்கினார், இது அவரது பெயரால் அழைக்கப்படுகிறது.

'தி திங்' கண்டுபிடிக்கப்பட்ட பின்னர், அது அமெரிக்க உளவுத்துறையால் மிக ரகசியமாக வைக்கப்பட்டது. ஆனால் 1960 ஆம் ஆண்டு மே மாதம், அணு ஆயுத சேகரிப்பின் உச்சத்தில், ஒரு அமெரிக்க யு-2 உளவு விமானம் ரஷ்யாவில் சுட்டு வீழ்த்தப்பட்டது.

இதனைத் தொடர்ந்து ஏற்பட்ட பரபரப்பான தூதரக நடவடிக்கைகளில், அமெரிக்க வெளியுறவுத்துறை அதிகாரிகள், பனிப்போர் உளவு ஒருதலைப்பட்சமானது அல்ல என்பதை நிரூபிக்க, ஐநா பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் மர சிற்பத்தின் மூலம் சோவியத் தங்களை உளவு பார்த்ததை பகிரங்கமாக வெளிப்படுத்தினர்.

ஒரு தூதரக இல்லத்தில் நடந்த ஊடுருவல் எவ்வளவு சங்கடமான பாதுகாப்பு மீறலாக இருந்ததென்றால் தி திங்கை பொதுமக்கள் கவனத்திற்கு கொண்டுவர ஒரு உளவு விமானம் சுட்டு வீழ்த்தப்பட வேண்டியிருந்தது என ஜான் லிட்டில் நம்புகிறார்.

ஆனால் 'தி திங்கின்' உண்மையான தொழில்நுட்ப சிறப்பு பொதுமக்களுக்கு ஒருபோதும் வெளிப்படுத்தப்படவில்லை.

மூடப்பட்ட கதவுகளுக்குப் பின் இந்தக் கருவி பிரிட்டிஷ் எதிர்-உளவுத்துறையால் SATYR என்ற குறியீட்டு பெயரில் ஆழமாக ஆய்வு செய்யப்பட்டது. முன்னாள் பாதுகாப்பு அதிகாரி பீட்டர் ரைட் 1987 இல் தனது நினைவுக் குறிப்பான ஸ்பைகேட்சரில் (Spycatcher) அனைத்தையும் வெளிப்படுத்தும் வரை, இதன் விவரங்கள் அதிகாரப்பூர்வ அரசு ரகசியமாக இருந்தன.

அந்தக் காலத்திலேயே தொழில்நுட்ப ரீதியாக மிகவும் மேம்பட்டதாக இருந்தது மற்றும் பனிப்போர் உளவு விளையாட்டை வடிவமைத்த விதம் ஆகியவற்றால் 'தி திங்' வரலாற்றாசிரியர்களை ஈர்த்தது.

ஆனால் இது ஓபரா அரங்குகள் மற்றும் கலைக்கூடங்களின் பாதுகாக்கப்பட்ட பிரம்மாண்டத்திற்கு வெளியே நிகழும் உயர் கலாசாரத்தின் விசித்திரமான மற்றும் இருண்ட வரலாற்றையும் வெளிப்படுத்துகிறது. அதில் பாரம்பரிய இசைக்கலைஞர்கள் ஒட்டுகேட்கும் கருவிகள் மற்றும் ராணுவ உளவுத்தகவல் சேகரிக்கும் கருவிகளாக உள்ள கையால் செதுக்கப்பட்ட கலைப்படைப்புகளை உருவாக்குகின்றனர்.

தி திங், செப்டம்பர் 27 அன்று பக்கிங்ஹாம்ஷையர் பிளெட்ச்லி பார்க்-இல் உள்ள உள்ள தேசிய கணினி அருங்காட்சியகத்தில் திரையிடப்பட உள்ளது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/cp89gv1vrj6o

"நீதியின் ஓலம்" கையொப்பப் போராட்டம் செம்மணியில் ஆரம்பம்!

3 weeks 2 days ago
ஐ.நா செல்கின்றது 'நீதியின் ஓலம்' ஒரு இலட்சத்து 30 ஆயிரம் தமிழ் மக்களின் கையொப்பத்துடன் 'நீதியின் ஓலம்' ஐ.நா. வுக்கு செல்லவுள்ளதாக தாயகச் செயலணி அமைப்பின் வடக்கிற்கான இணைப்பாளர் ஜெயசித்திரா தெரிவித்துள்ளார். ஒன்பது கோரிக்கைகளை முன்வைத்து 'நீதியின் ஓலம்' கையொப்பப் போராட்டம் கடந்த 23 ஆம் திகதி வடக்கு கிழக்கில் ஆரம்பமானது. குறிப்பாக இப்போரட்டத்தின் பிரதான நிகழ்வு மனிதப் படுகொலையின் புதைகுழிச் சாட்சியான யாழ்ப்பாணத்தின் செம்மணியில் ஆரம்பமாகி இன்று (28) முற்பகல் 10.30 மணிக்கு அதே இடத்தில் நிறைவுற்றது. தாயகச் செயலணி அமைப்பினரால் தமிழினப் படுகொலைக்கு சர்வதேச நீதி கோரலை வலியுறுத்தி அந்த 5 நாள்களாக முன்னெடுக்கப்பட்ட 'நீதியின் ஓலம்' எனும், கையொப்பப் போராட்டம் இன்றுடன் நிறைவுக்கு வந்தது. குறித்த போராட்டத்தில் வடக்கு கிழக்கின் பல்வேறு பிரதேசங்களில் மக்களின் கையொப்பங்கள் சேகரிக்கப்படன. எழுமாறாக பெறப்பட குறித்த கையொப்ப போராட்டத்தில் சுமார் 130 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கையொப்பமிட்டிருந்தனர் என்றும் தெரிவித்தார். முன்பதாக கடந்த ஐந்து நாட்களாக தமிழர் தாயகமெங்கும் முன்னெடுக்கப்பட்ட இந்த கையொப்பப் போராட்டத்தி ஊடாக இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட செம்மணி உட்பட்ட அனைத்து மனிதப் புதைகுழிகளுக்கும் முழுமையான சர்வதேச நீதிவிசாரணை நடைபெற வேண்டும் என்பதுடன் எதிர்வரும் செப்டம்பர் மாதம் நடைபெறவுள்ள ஐ.நா. மனிதவுரிமைகள் பேரவையில் இலங்கை மீது வலுவான தீர்மானம் கொண்டு வந்து, அனைத்து நாடுகளும் தெளிவான நிலைப்பாடு எடுக்க வேண்டும் எனவும் இந்த போராட்டம் வலியுறுத்துகின்றமை குறிப்பிடத்தக்கது. https://web.facebook.com/Deranatamil/posts/1328305695965374?ref=embed_post -யாழ். நிருபர் கஜிந்தன்- https://adaderanatamil.lk/news/cmev4eiea002kqplpdp813ifx

நெல்லியடியில் வெளிநாட்டிலிருந்து வந்த நபரின் பணம் கொள்ளை ; 10 சந்தேகநபர்கள் கைது

3 weeks 2 days ago
நெல்லியடியில் பாரிய பண மோசடி - கைதானவர்களுக்கு விளக்கமறியல் சுவிஸ் நாட்டில் இருந்து தாயகம் திரும்பி நெல்லியடியில் வசித்து வந்த நபரின் பணத்தினை களவாடிய குற்றச்சாட்டில் கைதானவர்களை பருத்தித்துறை நீதவான் நீதிமன்றில் பொலிஸார் முற்படுத்தியதை அடுத்து அவர்களை விளக்கமறியலில் வைக்குமாறு மன்று உத்தரவிட்டுள்ளது. அதேவேளை குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் 03 பெண்களும் 2 ஆண்களையும் தேடி வருவதாக நெல்லியடி பொலிஸார் தெரிவித்துள்ளனர். அத்துடன் சுவிஸ் நாட்டவரிடம் திருடிய பணத்தில், 75 இலட்ச ரூபாய் பணம், 09 ஆயிரம் சுவிஸ் பிராங், அதிநவீன மோட்டார் சைக்கிள் ஒன்று, அதிநவீன கையடக்க தொலைபேசிகள் - 05 என்பவற்றை பொலிஸார் மீட்டுள்ளனர். சுவிஸ் நாட்டில் வேலையில் இருந்து ஓய்வு பெற்று, ஓய்வு கொடுப்பனவான பெருந்தொகை பணத்துடன், தாயகம் திரும்பி நெல்லியடி பகுதியில் பகுதியில் வயோதிபர் ஒருவர் வசித்து வந்துள்ளார். அவர் தனது வீட்டில் வெளிநாட்டு நாணய தாள்கள் உள்ளிட்ட சுமார் ஒரு கோடியே 40 லட்சத்திற்கும் அதிகமான பணத்தினையும் வைத்திருந்துள்ளார். இந்நிலையில் கடந்த சில தினங்களாக தனது பணம் காணாமல் போவதனை அறிந்து, அது தொடர்பில் நெல்லியடி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார், குறித்த நபரின் வீட்டுக்கு வேலைக்கு வந்து செல்லும் இருவர் தொடர்பில் சந்தேகமடைந்து இருவரையும் கைது செய்து தீவிர விசாரணைகளை முன்னெடுத்தனர். விசாரணைகளின் அடிப்படையில் அவர்கள் இருவரும், தாம் பணத்தினை வீட்டில் இருந்து சிறிது சிறிதாக திருடி வந்ததாகவும், அவற்றினை நண்பர்கள், தெரிந்தவர்கள் ஊடாக நெல்லியடி பகுதியில் உள்ள வெளிநாட்டு பணங்களை மாற்றி கொடுக்கும் நிலையத்தில் பணத்தினை மாற்றியதாகவும் கூறியுள்ளனர். அதன் அடிப்படையில் தொடர் விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார், திருட்டுக்கு உடந்தையாக செயற்பட்டமை, திருடப்பட்ட பணத்தினை உடைமையில் வைத்திருந்தமை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களில் மேலும் 06 பேரை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட நபர்களை விசாரணைகளின் பின்னர் நேற்று (27) நீதிமன்றில் முற்படுத்திய வேளை 08 பேரையும் விளக்கமறியலில் வைக்குமாறு மன்று உத்தரவிட்டுள்ளது. -யாழ். நிருபர் பிரதீபன்- https://adaderanatamil.lk/news/cmeuwi45g002no29n9j0zc2xv