Aggregator

தன்னறம்

3 weeks ago
எமக்கு இன்னமும் இந்த நிலை வராவிட்டாலும் அடுத்து எங்கே போய் இருப்பது?யாருடன் இருப்பது? எது சாத்தியம்? இப்படி பலவற்றைப் பற்றி பேசத் தூண்டுகிறது. எமது வயதுக்காரர் காலமானாலே இப்படியான எண்ணங்கள் கூடுதலாகவே வந்து போகின்றன. சிறுகதை சிந்திக்க வைக்கிறது.

"ரஷ்ய எண்ணெய் வாங்குவதை நிறுத்துவதாக மோடி என்னிடம் உறுதி அளித்தார்!" - டிரம்ப் பரபரப்பு தகவல்

3 weeks ago
முன்னால் அவுஸ்ரேலிய பிரதமர் ஊடக பிரச்சாரங்களையும், உலக அரச தலைவர்களின் முட்டாள்தனத்தினையும் கோடிட்டு காட்டுகிறார். 2023 இல் நிகழ்ந்த இந்த நிகழ்ச்சியிலேயே இதனை குறிப்பிட்டுள்ளார், இப்படி பல தலைவர்கள் இருந்தால் தேவையற்ற பிரச்சினைகளில் மக்கள் தமது வாழ்க்கையினை தொலைக்காமல் இருப்பார்கள், உலகம் நிம்மதியாக இருக்கும்.

13 ஐ நடைமுறைப்படுத்திக் காண்பிக்குமாறு சிங்கள தலைவர்களை வல்லரசுகள் வற்புறுத்துமா?

3 weeks ago
ஒரு இனப்படுகொலை இன்று சாதாரண பேசுபொருளாகியுள்ளது. அதற்காக இலங்கை, உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் அயராது உழைத்து, பல ராஜதந்திர வேலைகளை செய்துள்ளது. ஒரு பாதிக்கப்பட்ட இனத்தின் பிரதிநிதிகள் எதை சாதித்தார்கள்? அவர்கள் கூற்றை ஆமோதித்துக்கொண்டிருந்துள்ளார்கள். இதற்காகவா மக்கள் இவர்களுக்கு வாக்களித்தார்கள்? இவர்கள் மக்களின் ஏகோபித்த பிரதிநிதிகளாம், தாங்களே சொல்லிக்கொள்கிறார்கள், அதைத்தான் சொன்னேன். உண்மை என்றும் மறைந்து போகாது. என்னை கிண்டலடிப்பதுபோல் உண்மையை ஏற்று, ஞாபகப்படுத்தியதற்கு நன்றி.

இஷாரா செவ்வந்தி மற்றும் நால்வர் அதிரடி கைது.

3 weeks ago
இலங்கையில் விடுதலைப்போர் போர் முடிந்த கையோடேயே, தமிழரின் பண்பாட்டை, நாகரிகத்தை, விடாமுயற்சியை, கல்வியை குறிவைத்து அடுத்த போர் தமிழருக்கெதிராக தொடங்கப்பட்டுவிட்டது. எதிர்காலத்தில், நடைபெறும் எல்லா சமூக விரோத செயல்களிலும் ஜவ்னாவையும் இழுத்து விட்டு, அவர்களே இவற்றிற்கு காரணம் என்று தாம் தப்பித்துக்கொள்வது என முடிவு செய்து செயற்பட்டுள்ளார்கள் சம்பந்தப்பட்டவர்கள்.

குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக். 

3 weeks ago
அப்படியெண்டா; செவ்வந்தியில் ஒரு மயக்கமுங்கோ உங்களுக்கு. ஒரு அமைச்சரே அவரின் திறமையை மெச்சியிருக்கிறார் என்றா பாத்துக்கொள்ளுங்களேன் செவ்வந்தி எப்படிப்பட்டவர் என்று. அதிலும் இருபத்தாறு வயதுதான் அவவுக்கு. எங்கள் பெண் போராளிகளை விமர்சிக்கிறார்கள், இவவையோ நினைத்து, கனவு கண்டு பாட்டுபாடுகிறார்கள். இருவேறு உலகமிது.

தன்னறம்

3 weeks ago
தன்னறம் -------------- நீங்கள் எல்லோரும் நலமா, ஒரு கடிதத்தை எப்படி ஆரம்பிப்பது, எப்படி எழுதுவது என்று எனக்கு சரியாகத் தெரியவில்லை. நான் இதற்கு முன்னர் ஏதாவது கடிதம் எழுதி இருக்கின்றேனா என்றும் ஞாபகமில்லை. கடிதங்களை அவரே தான் எழுதினார். வந்த கடிதங்களை வாசித்தது கூட அவரேதான். சில வேளைகளில் சில கடிதங்களில் இருந்த ஒன்று இரண்டு சமாச்சாரங்களை சுருக்கமாகச் சொல்லியிருக்கின்றார். அவர் என்னை எதையும் வாசிக்க விடவில்லை என்றில்லை, உண்மையில் எதையாவது வாசி வாசி என்று எனக்கு அவர் சொல்லிக் கொண்டேயிருந்தார். நான் தான் எதையும் வாசிக்கவில்லை. எனக்கு ஒரு இடத்தில் இருந்து வாசிப்பதற்கு நேரம் இருக்கவில்லை என்று தான் நான் நினைத்துக் கொண்டிருந்தேன். அது பொய், நானே உருவாக்கிய ஒரு காரணம் என்று இப்பொழுது எனக்குப் புரிகின்றது. இப்பொழுது இந்தச் சிறிய அறை தான் என்னுடைய உலகத்தின் மிகப் பெரும் பகுதி. இந்த அறையை சிறிது என்பதற்கு மேல் எப்படிச் சொல்வது என்றும் தெரியவில்லை. என்னுடைய வீட்டில், ஆமாம் அது என்னுடைய வீடு தான், ஐந்து அறைகள் இருந்தன. முதலில் நான்கு அறைகள் மட்டுமே இருந்தன, பின்னர் நாங்கள் ஒரு பெரிய அறையை வீட்டுடன் இணைத்துக் கட்டினோம். நான் சிறிய அறை, பெரிய அறை, சாமி அறை என்று இப்படித்தான் சொல்லுவேன். அவர் தான் யாரும் கேட்டால் ஒவ்வொரு அறைகளின் அளவையும் ஒரு பெருக்கல் வாய்ப்பாடு போல சொல்லுவார். இங்கு ஒவ்வொருவருக்கும் இதே போன்ற சிறிய அறைகள் கொடுக்கப்பட்டிருக்கின்றன. ஒரு கட்டில், ஒரு வசதியான கதிரை, இரண்டு சின்ன அலுமாரிகள், சின்ன மேசை மற்றும் நானும் சேர்ந்து இந்த அறையை நிரப்பிவிட்டோம். ஒரு தொலைக்காட்சிப் பெட்டியும் கொடுப்பார்கள். நான் அது வேண்டாம் என்று சொல்லிவிட்டேன். எதையாவது வாசி வாசி என்று அவர் சொன்னபடி புத்தகங்களை வாசித்துக் கொண்டிருக்கின்றேன். நீங்கள் என் அறையைத் திறந்தால், உங்கள் வலதுகைப் பக்கம் இருக்கும் அலுமாரிக்குள் இருப்பது அவ்வளவும் புத்தகங்களே. என்னுடைய சின்ன மகள் ஒவ்வொரு மாதமும் புதிது புதிதாக வாங்கி அடுக்கிவிடுகின்றார். எங்களுக்கு நான்கு பிள்ளைகள். இரண்டு ஆண் பிள்ளைகள், இரண்டு பெண்கள். ஆண், பெண், ஆண், பெண் என்று அடுத்தடுத்துப் பிறந்தார்கள். இப்பொழுது ஆறு பேரப் பிள்ளைகளும் இருக்கின்றார்கள். இங்கிருப்போர் பலருக்கும் இப்படியே பிள்ளைகளும், பேரப் பிள்ளைகளும் வெளியே அவரவர்களின் வீடுகளில் இருக்கின்றார்கள். பிள்ளைகள் மேல் கோபமோ அல்லது ஒரு மன விலக்கலோ இருந்தாலும் கூட, பேரப் பிள்ளைகளின் மேல் ஒரு இம்மியளவு கூட குறையாத பாசமே இங்கிருப்போர் எல்லோரிடமும் இருக்கின்றது. இந்த வராந்தாவில் முதல் அறையில் இருக்கும் அவர் ஒரு சரியான முசுடு. அவரின் மனைவி சில வருடங்களின் முன் போய்ச் சேர்ந்துவிட்டார். சில மாதங்களிலேயே அவரை அவரது பிள்ளைகள் இங்கு கொண்டு வந்து விட்டதாகச் சொல்கின்றார்கள். அவர் எவருடனும் முகம் கொடுத்து கதைப்பதில்லை. ஆனால் அவருடைய பேரப் பிள்ளைகள் வரும் நாட்களில் அவர் முழுதாக மாறி, மிகவும் உற்சாகமாக இருக்கின்றார். அப்படியான ஒரு நாளில் என்னைப் பார்த்து சிரித்தும் இருக்கின்றார். மீண்டும் கோவிட் வைரஸ் பரவுகின்றது என்று இப்பொழுது அறைக்குள்ளேயே இருக்கச் சொல்லிவிட்டார்கள். இந்த யன்னல் ஊடாக தெரிவது தான் நிலம், நீலம் என்றாகிப் போய்விட்டது. முன்னரும் முதலாவது கோவிட் தொற்றுக் காலத்தில் இப்படி இருந்திருக்கின்றேன். அப்பொழுது நான் இங்கு வந்து கொஞ்ச நாட்களே ஆகியிருந்தது. அந்த நாட்களில் அவருக்கு முன்னால் நான் போய்ச் சேர்ந்திருக்கலாமோ என்ற எண்ணம் சில தடவைகள் வந்தது. ஆனாலும் அவர் இவற்றை, இந்த தனிமையை தாங்கமாட்டார். எது நடக்க வேண்டுமோ, அதுவே நடந்தது போல. முதல் தொற்றுக் காலத்தில் அடிக்கடி இங்கு இழப்புகள் நடந்து கொண்டிருந்தன. அப்பொழுது எனக்கு இங்கிருக்கும் எவரையும் அவ்வளவாகத் தெரிந்திருக்கவில்லை. ஆனாலும் மனமெங்கும் ஒரு வலி இருந்து கொண்டிருந்தது. அது இல்லாமல் போய்க் கொண்டிருந்தவர்களைப் பற்றியதா, அல்லது என்னைப் பற்றியதா என்ற சந்தேகம் இன்றும் இருக்கின்றது. புத்தகங்கள் வாசித்தால் இப்படியான கேள்விகள் அதுவாகவே உள்ளுக்குள் வரும் போல. அவர் கதைக்கும் சில விடயங்கள், கேட்கும் சில கேள்விகள் அன்று எனக்கு விளங்காமல் முழித்துக் கொண்டு நின்றிருக்கின்றேன். அவர் வர வர கொஞ்சம் பைத்தியமாகிக் கொண்டிருக்கின்றாரோ என்று நான் நினைத்தாலும், நல்ல காலம், நான் அதை எவரிடமும் சொல்லவில்லை. சில சம்பவங்கள் நடந்த பின்னரே அவை நடந்து விட்டன என்ற உணர்வும், அதையொட்டிய விளைவுகளும் ஏற்படுகின்றது. அப்படியான சம்பவங்கள் உலகில் எப்போதும் நடந்து கொண்டேயிருக்கின்றன என்றோ, அவை எங்களுக்கும் நடக்கக் கூடுமோ என்ற பிரக்ஞை அற்றே மனிதர்கள் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள். அவர் இறந்தது, நான் இங்கே வந்தது மற்றும் இடையில் நடந்த சம்பவங்கள் இவை எதுவுமே புதிதல்ல. இவை ஆயிரம் ஆயிரம் தடவைகள் இப் பூமியில் இப்படியே ஏற்கனவே நடந்து இருக்கின்றன. முதுமை என்றாலே துன்பம் என்று நான் வாசித்த ஒரு புத்தகத்தில் இருந்தது. அப்படி ஒரேயடியாகச் சொல்லி விடலாம் என்று நான் நம்பவில்லை. ஆகக் குறைந்தது, அதை நான் இன்னமும் நம்பவில்லை. எல்லா மனிதர்களுக்கும் ஏதோ ஒரு கடமை எப்போதும் இருக்கின்றது தானே. முதுமையில், தனிமையில் கூட அப்படி ஒரு கடமை ஒன்று இருக்கத்தானே வேண்டும். நேற்று என்னைப் பார்க்க ஒருவர் வந்திருந்தார். அவர் வேறு ஒரு நாட்டில் இருந்து இங்கே விடுமுறைக்கு குடும்பத்துடன் வந்திருக்கின்றார். அப்படியே என்னையும் பார்க்க வந்தார். என்னை விட வயதில் மிகவும் இளையவர். உறவு முறையில் சொந்தக்காரரும் கூட. அவர்களின் வீட்டில் நாங்கள் இருவரும் இரண்டு தடவைகள் தங்கியிருக்கின்றோம். அப்பழுக்கற்ற ஒரு மனிதனாகவே அவர் தெரிந்தார். கோவிட் தொற்று என்பதால் ஒருவரையும் அனுமதிக்க முடியாது என்று சொல்லியிருக்கின்றார்கள். பின்னர் வேறு நாட்டில் இருந்து வந்தவர் என்று தெரிந்து, முகத்தை மறைத்து சில நிமிடங்கள் மட்டுமே உள்ளே அறைக்கு வர அனுமதி கொடுத்தார்கள். கதவைத் திறந்த அவர் அங்கேயே நின்று கொண்டிருந்தார். அப்படித்தான் நிற்கச் சொல்லியிருக்கின்றார்கள். நான் எதிர் மூலையில் நின்றேன். மௌனமாகவே நின்றவர் 'என்னைத் தெரிகின்றதா ............' என்று மெதுவாகக் கேட்டார். முகத்தின் பெரும்பகுதி மூடப்பட்டிருந்தாலும் அந்தக் கண்கள் எனக்கு நன்கு தெரிந்தவையே. ஆனாலும் அந்தக் கண்களை ஒரு கணத்துக்கு மேல் என்னால் பார்க்க முடியவில்லை. எனக்கு எவரின் பரிதாபமும் தேவையில்லை. 'அழும் போது ஒரு பெண் அபலையாகின்றாள்.................' என்ற ஒரு கவிதை வரியை என் கணவர் அவரது கடைசி நாட்களில் பல தடவைகள் சொல்லியிருக்கின்றார். அந்த முழுக் கவிதையையும் நான் இன்னமும் தேடி வாசிக்கவில்லை. நான்கு பிள்ளைகளும் அவர்களின் குடும்பங்களுடன் இடைக்கிடையே வந்து விட்டுப் போவார்கள். வரும் போது ஏதேதோ வாங்கி வருவார்கள். அவர்கள் வந்து போன பின், அவர்கள் வராமலே இருக்கலாம் என்றும் தோன்றுவதுண்டு. நான் சிறு வயதில் கோழிக்கு அடை வைப்பேன். ஒரு தடவை 15 முட்டைகள் வைத்து 14 குஞ்சுகள் பொரித்தன. அந்தப் 14 குஞ்சுகளையும் தாய்க் கோழி கவனமாகப் பார்த்துக் கொண்டது. ஒரு நாள் தாய்க் கோழி மட்டும் படுத்திருந்தது. ஒரு குஞ்சுகளையும் காணவில்லை. குஞ்சுகளுக்கு என்ன நடந்தது என்று பதறிப் போய் தாய்க் கோழிக்கு அருகே போனேன். மெதுவாக செட்டைக்குள்ளிருந்து ஒரு குஞ்சு எட்டிப் பார்த்தது. 14 குஞ்சுகளும் உள்ளேயே இருந்தன. எப்படி ஒரு கோழியால் இது முடிகின்றது என்று ஆச்சரியமாகவே இருந்தது. குஞ்சுகள் ஓரளவு வளர்ந்து, வீட்டு முற்றத்தில் நின்ற மாமரத்தில் அவைகளாகவே பறந்து ஏற ஆரம்பித்தவுடன், தாய்க் கோழி குஞ்சுகளை மெதுவாகக் கொத்திக் கலைக்க ஆரம்பித்தது. அதுவும் ஆச்சரியமே. நான் விரும்பியே இங்கே வந்தேன் என்று நேற்று என்னைப் பார்க்க வந்தவருக்கும் சொன்னேன். அவர் அதை நம்பவில்லை என்பதும் எனக்குத் தெரிந்தது. ஆனாலும் எனக்கென்று ஒரு கடமை இருக்கின்றதல்லவா. 'நீங்கள் இனிமேலும் கஷ்டப்படாமல் போங்கள்............. நான் இருக்கும் வரை பிள்ளைகளுக்கு குறை குற்றம் எதுவும் வராமல், என்னால் முடிந்த வரை, பார்த்துக் கொள்கின்றேன்..................' என்று அவருக்கு ஒரு வாக்கும் கொடுத்து இருக்கின்றேன்.

மகன் வாங்கிய காரில்... மருமகள் சென்றதால், காரை எரித்த மாமியார்.

3 weeks ago
இதுவே, தன் மகள் மாப்பிள்ளையின் காரில் அருகில் இருந்து பயணம் செய்திருந்தால், எப்படி மகிழ்ந்திருந்திருப்பார் இந்த மாமியார்!

கட்டுநாயக்க விமான நிலைய Check-in நேரத்தில் மாற்றம்

3 weeks ago
நான்கு மணிநேரத்தில் உள்ளே சென்று பதிவுசெய்து பொதிகளை பட்டியில் எறிந்துவிட்டு படலை பகுதிக்கு போய்விடலாம். அங்குபோய் மிச்சம் என்ன செய்வது? உண்ணும் பகுதி, கடைகளுக்கு வர திரும்ப நடக்க வேண்டும். விமானத்தில் ஏறும்வரை எத்தனை நெஸ் ரீதான் குடிப்பது.

தாமதமாக வந்த விஜய் தான் காரணம்..

3 weeks ago
அனுமதி 10 ஆயிரம் பேருக்கு. ஆனால் காவல்துறையினர் 20 ஆயிரம் பேர் வரக் கூடும் என்று தகவல் அறிந்து அதற்கேற்ப பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்ததாகவும் அதையும் மீறி சனம் கூட நெருசல் ஏற்பட விஜய் தான் காரணம் என்றும் அந்த தாமதத்தை அவர் வேண்டும் என்றே தனது செல்வாக்கை நிரூபிக்க செய்ததாகத் தான் இவர்கள் மட்டுமல்ல நீதிமன்றம் மற்றும் அனைத்து தமிழக ஊடகங்களும் சொல்கின்றன. இங்கே பல ஊர்வலங்கள் மற்றும் மாநாடுகள் மாவீரர் நாள் நிகழ்வுகளை செய்கிறோம். காவல்துறை மற்றும் அரசா பாதுகாப்பு மற்றும் ஒழுங்குகளை செய்கிறது?????

தாமதமாக வந்த விஜய் தான் காரணம்..

3 weeks ago
இதை நான் ஏற்றுக்கொள்கின்றேன் காரணம் ஏற்பாட்டாளர்கள் என்ற வகையில் காவல்துறையுடன் நெருக்கமான தொடர்புகளை பேணி அந்தக் கூட்டத்தை கட்டுப்படுத்தியிருக்க வேண்டும் ஆங்காங்கே தங்களது தொண்டர் படைகளையும் உதவிக்கு கூடுதலான ஆளணியுடன் செயற்பட வைத்திருக்க வேண்டும் தி மு க ஆட்சி இதற்கு உடன்படாது என்றாலும் சிறிய முயற்சியாவது செய்திருக்கலாம் நடந்தது முடிந்து விட்டது அடுத்த கரூர் நிகழ்வு ஒன்று இன்னொருமுறை வராமல் விஜய் தடுக்க வேண்டும் அதற்கான நடவடிக்கைகளை செய்யவேண்டும் அதுவே அவருக்கான ஒரு பலமாக அமையும். இன்னுமொரு கரூர் நிகழ்வு (தி மு க ஏற்பாடு செய்யலாம் ) அவருடைய அரசியல் வாழ்க்கையை பூச்சியமாக்கி விடும்

தமிழ் தொழிலதிபரும் மனைவியும் பலருக்கு கடன் கொடுக்காமல் நாட்டை விட்டு தலைமறைவு

3 weeks ago
கோசான் நீங்கள் குடுத்து வைத்தவர், ஒரு ஆலயத்தில் குடியிருக்கிறீர்கள், எல்லோருக்கும் இப்படி ஒரு கொடுப்பினை கிடைக்காது.🤣

தாமதமாக வந்த விஜய் தான் காரணம்..

3 weeks ago
கரூரில் விஜய் பிரச்ச்சாரம் செய்ய வருவதற்கு அவர்களுக்கு அனுமதி கிடைத்த நேரம் பிற்பகல் 3 மணியிலிருந்து இரவு 10 மணி வரை ஆனால் அவர் அங்கெ வந்தது இரவு 7 மணிக்கு இதில் எங்கே தாமதம் அவருக்கு இன்னும் 3 மணி நேரம் இருக்கின்றது. சும்மா உதார் விடாதேங்கோ

மகன் வாங்கிய காரில்... மருமகள் சென்றதால், காரை எரித்த மாமியார்.

3 weeks ago
நான் முன்பு வேலை இடைவேளையில் (காலை 4 - 5:30) 150 வீடுகளுக்கு தினசரி பத்திரிகை போடுவதுண்டு, ஒரு நாள் எனது பத்திரிகை போடும் வீதில் எழெட்டு கார்களை யாரோ கொழுத்தி விட்டார்கள்(அனைத்து நாடுகளிலும் இவ்வாறு சிலர் இருக்கிறார்கள்.), அது தெரியாமல் நான் பத்திரிகை போட்டுக்கொண்டிருந்தேன், ஒரு காவல் துறை வாகனம் என்னை அணுகி என்ன்ன செய்கிறாய் என கேட்டு விட்டு சென்று விட்டார்கள், பின்னர் சில நாள்கள் செல்ல எனது வீட்டிற்கு வந்து எனது வாக்குமூலத்தினை எடுத்து சென்றார்கள் அதன் பின்னர் எந்த சம்பவமும் அது தொடர்பில் நடக்கவில்லை.

ஓய்வூதிய முறைகளை சரிசெய்யாத நாடுகளிடமிருந்து நிதியை நிறுத்தி வைப்பது குறித்து EU பரிசீலித்து வருகிறது.

3 weeks ago
இங்கு அவுஸ்ரேலியாவில் 67 வயதில் ஓய்வூதியம், இன்னும் நீண்ட......... காலம் பொறுத்திருக்க வேண்டும். சில வருடங்களுக்கு முன்னர் ஒருவர் கேட்டார்; இரண்டு வேலைகள எல்லாம் செய்தீர்களே உங்களிடம் ஏன் காசில்லை? பதில், சும்மா வீட்டில் இருந்தால் பொழுது போகாது. தற்போது ஏன் வேலைக்கு போகிறோம் என்றுள்ளது, இந்த 67 வயதெல்லையினை எல்லை கோடு எட்டும் போது கோல் போஸ்டை தள்ளி வைப்பது போல 70 வயதாக்கி விடுவார்களோ என பயமாக இருக்கிறது.

13 ஐ நடைமுறைப்படுத்திக் காண்பிக்குமாறு சிங்கள தலைவர்களை வல்லரசுகள் வற்புறுத்துமா?

3 weeks ago
ஆரம்ப காலங்களில் தமிழ் பிரதிநிதிகள் தான் இரத்தை எடுத்து இளைஞர்களுக்கு நெற்றியில் பொட்டாக வைத்து ஊசுப்பேற்றினார்களாம் அதனால் அவர்கள் எய்தவன் 🏹 என்பதில் வருவார்கள்.

தாமதமாக வந்த விஜய் தான் காரணம்..

3 weeks ago
தாமதமாக வந்த விஜய் தான் காரணம் என்பதில் என்ன சந்தேகம் இன்று விஜய் கரூருக்கு வந்து தான் அறிவித்த உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா 20 இலட்சம் ரூபாவும் காயமடைந்தவர்களுக்கு தலா 2 இலட்சம் ரூபாவும் கொடுப்பதாக இருந்ததாம். ஆனால் பின்பு அவர் வரவில்லை. சொன்னதை கொடுத்தால் நல்லது.