3 weeks 5 days ago
👍 இதைத் தான் நானும் எழுத நினைத்தேன்: "நாங்கள்" 2002 இல் கூட்டுத் தலைமை பாலசிங்கத்தார் மூலமாக எச்சரிக்கை கொடுத்த பின்னரும் போராடியது வீரம்! அதையே முழுமையான சுதந்திர நாடாக 30 ஆண்டுகள் வரை இருந்த உக்ரைனின் ஒரு தலைவர் செய்தால் "கோமாளித் தனம்". இதைச் சொல்வோர் ஆமி சுடாத ஷொட் கண்ணோட ஜீப்பில் திரிந்த காலத்திலேயே ஐரோப்பாவுக்குப் பறந்த ஆட்கள். இன்னும் சிலர், உயிர் காக்க ரஷ்யாவூடாக தப்பி, அமெரிக்காவில் வந்து லேண்ட் ஆன ஆட்கள்! இன்னும் என்னவெல்லாம் கேட்க வேண்டுமெண்டு எங்களுக்குச் சபிச்சிருக்குதோ தெரியேல்ல🤔!
3 weeks 5 days ago
அட பாவி இந்த முடிவை 3 வருடத்துக்கு முதலே எடுத்திருக்கலாமே? பட்டுத்தான்…. புத்தி வரவேண்டும் என்பது விதி. ஆரும் பப்பா மரத்தில் ஏற்றி விட்டால்,கண்ணை மூடிக் கொண்டு ஏறும் ஆள்தான்… செலென்ஸ்கி. இப்ப… நாரி முறிய, கீழே விழுந்து கிடக்கிறார். சுய புத்தியும் தேவை. இந்த திரியில் கண்ட வசனங்கள் இவை. 😂 இவை அத்தனையும் முகக்கண்ணீடி முன் நின்று தமிழர்கள் தம்மை தாமே கேட்டிருக்க வேண்டியவை அல்லவா! கச்சிதமாய பொருந்துது எமக்கும். 😂
3 weeks 5 days ago
இந்த 26 ஆம் புலிகேசியை ஜனாதிபதி ஆக்கியதே உக்ரைனை அழிக்கத்தானே ........ அவர் அதை செவ்வனவே செய்து முடித்துள்ளார். அந்த வகையில் பாராட்டிடலாம். கடந்த 3 வருடமாக முழு பலத்தையும் பாவித்து முக்கிய மேற்கு ஆதிக்கம் ரசியாவுடன் மோதி தனது தோல்வியை ஒப்புக்கொண்டது என்பதுதான் இதில் முக்கிய செய்தி. ரசியாவையும் சீனாவையும் ஒரு வழிக்கு கொண்டுவர ஒரு கடடத்தில் ஈரானை அழித்து வெற்றிபெறலாம் என்று எண்ணினார்கள் அதற்கும் ஈரான் இஸ்ரேலுக்கு கொடுத்த அடியுடன் மூடி கட்டிக்கொண்டு கிளம்பி விடடார்கள். ஆனால் இந்த யுத்தத்தை உருவாக்கிய மேற்கு பணக்கார வர்க்கம் தனது இலக்கை அடைந்து வெற்றியை கண்டுள்ளார்கள். அவர்கள் இலக்கு ஆயுத விற்பனை .... உலகில் உணவு பற்றாக்குறையை உண்டுபண்ணுவது, (இரண்டிலும் வெற்றிதான்) அதன் மூலம் மோன்சடோ பேயர் ( Monsanto, Bayer ) என்ற இரண்டு மகா கம்பெனிகளும் உலகம் பூராக விவசாயத்தை தங்கள் கட்டுக்குள் கொண்டுவருவது. அவர்கள் எண்ணம் அமெரிக்காவிலேயே பெரும் வெற்றியை கண்டிருக்கிறது அமெரிக்க விவசாயிகள் பெரும் கடனில் மூழ்கி இனி இவர்களிடம் சரண் அடைவது என்பதை தவிர்த்து வேறு வழியின்றி பரம்பரை விவசாயிகள் விவசாயத்தையே கைவிடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்கள். முன்புபோல் விவசாயிகளால் இனி லாபம் பார்க்க முடியாது ....... இந்த இரண்டு கொம்பனிகளின் கொத்தடிமைகளாக இருந்துகொண்டு அவர்களின் விதைகள் உரங்களை கொள்வனவு செய்து அவர்களுக்கு உழைக்கும் ஒரு துரதிர்ஷ்ட்ட நிலையில் நிற்கிறார்கள். சமகாலத்தில் சீனா தென்னமெரிக்க நாடுகளில் விவாசாயத்தை முன்னெடுத்து பெரும் வெற்றியை கண்டுள்ளது இது ஆப்ரிக்காவிட்ற்கும் விரிவாக்கம் செய்யப்படலாம் ஆனால் மேற்கின் அடிமைகளான நைஜீரியா ருவாண்டா தென் ஆப்ரிக்கா அதை முறியடிப்பார்கள். தென் அமெரிக்காவில் ஒரு கலகத்தை உண்டுபண்ணி அமெரிக்க இராணுவ தளங்களை நிறுவுவதன் மூலம் சீனவை விரட்டிடலாம் எனும் நோக்கில்தான் இப்போ வெனிசுவேலா மீது தாக்குதல் நடத்த தயாராகி வருகிறார்கள். மீடியாக்களின் உதவியுடன் இப்போ மூளைச்சலவை தொடங்கி வெற்றிகரமாக போய்க்கொண்டு இருக்கிறது. இனி வெனிசுவேலா என்ற நாடே மேற்கை குறிப்பாக அமெரிக்காவை அழிக்கத்தான் தோன்றியது போன்ற பரப்புரையை இங்கிருக்கும் ஆடுகள் நம்ப தொடங்கும்போது அது நடக்கும் என எண்ணுகிறேன் அதன் மூலம் இரண்டு இலக்குகள் எடடபடும் ஒன்று வெனிசுவேலாவின் எண்ணெய் அவர்கள் சொத்தாக ஆகும் மற்றது தென்னமெரிக்காவில் ஒரு குழப்ப நிலையை உருவாக்கி விவசாயத்தை தங்கள் கட்டுக்குள் கொண்டு வருவது.
3 weeks 5 days ago
60, 70 களில் புங்குடுதீவில் ஒரே snow அடிக்கும். அதனால்தான் அந்த ஊரவர்கள் பின்னர் பாரிஸ், இலண்டன், கனடா என வந்து காலூன்றியதை இலகுவாக்கியது. நீங்கள் வேற… விண்டர் டைம் வெய்யில் காயலாம் எண்டு இலங்கை போய்…ஊருக்கே போக முடியாமல்…வெல்லம்பிட்டியவில் வெள்ள நிவாரண அதிகாரியாக காலத்தை கடத்தி விட்டு நாடு திரும்பி உள்ளேன்😂 பலர் மாவீரர். இது யதார்த்தம் அல்ல. மையவாதம். இதைதான் இந்த திரியில் பலர் மறைமுகமாவும் கக்கி உள்ளார்கள். இந்த மையத்தை அடக்கும் வரை உய்ய வழியே இல்லை. அருச்சுனா போன்ற பொய்மான்களின் பின்னால் ஓடி கொண்டே இருக்க வேண்டியதுதான்.
3 weeks 5 days ago
மலையக தமிழ் மக்களை வடக்கு கிழக்கில் குடியேற்றுவதற்கான பிரதான காரணமாகவும், பெரு விருப்பமாகவும் நாங்கள் சொல்லும் காரணம் தமிழர் தாயகமான வடக்கு கிழக்கில் மிகவும் சரிந்து இருக்கும் சனத்தொகையையும், தமிழ் மக்களின் சனப் பரம்பலையும் அதிகரிக்கலாம் என்பதே. அதன் மூலம் எங்களின் நிலத்தையும், இருப்பையும், அரசியல் பலத்தையும் தக்கவைத்துக் கொள்ளலாம் என்பதே இதன் பின்னால் இருக்கும் நோக்கம். இவ்வாறு குடியேற்றப்படும் மலையக தமிழ் மக்களின் நிலை என்னவாகும் என்றே நான் முன்னர் குறிப்பிட்டிருந்தேன். மலையக மக்கள் இதை விரும்புகின்றார்களா என்ற இன்னொரு பிரதான கேள்வியும் இருக்கின்றது. இந்த மக்கள் குடியேற்றப்படும் அல்லது குடியேறும் இடங்களில் அங்கு ஏற்கனவே இருக்கும் சமூகங்களால் ஏற்றுக்கொள்ளப்படுவதில்லை என்பதே நிஜம். மூன்று தலைமுறைகளாக அவர்கள் புதிய ஒரு இடத்தில் இருந்தாலும், அங்கு அவர்கள் சமனான மனிதர்களாக பார்க்கப்படுவதில்லை. பறை என்னும் இசை பற்றி சமீப காலங்களில் நிறையவே உரையாடப்படுகின்றன. தமிழர்களின் ஆதி இசைகளில் இதுவும் ஒன்று என்கின்றோம். கொண்டாடப்பட வேண்டும் என்கின்றோம். பறையும், இசையும், அந்த மனிதர்கள் பற்றியும் சினிமாக்கள், கதைகள் கூட வந்து கொண்டிருக்கின்றன. ஆனால் கடந்த 50 வருடங்களாக, போராட்ட காலம் உட்பட, இந்த பறை வாசிப்பவர்கள் கோவிலுக்கு வெளியே அதே இடத்திலேயே நின்று வாசிக்கின்றார்கள் என்று நாம் சொல்லத் தவறுகின்றோம். கோவில்களில் ஒரு தவில் அல்லது நாதஸ்வரக் கலைஞக்கும், ஒரு பறையை வாசிப்பவருக்கும் கொடுக்கப்பட்டு இருக்கும் வேறுபாடுகளை நாம் காணத் தவறுகின்றோம். இந்த வேறுபாடுகளின் பின்னால் இருப்பது சமூகக் காரணிகளே. அவர்கள் அணிந்திருக்கும் ஆடைகள், நிற்கும் தோரணை, பார்க்கும் பார்வை இப்படி எல்லாமே வேறுபட்டவை. குடியேற்றப்பட்டால் இதுவே தான் மலையக தமிழ் மக்களுக்கும் ஆகும். ஆங்கிலேயர்கள் அவர்களின் தேவைக்காக இலங்கை, மலேசியா, பிஜி, கரீபியன், பர்மா என்று உலகெங்கும் தொழிலார்களாக இந்த மக்களை குடியேற்றினார்கள். பின்னர் கைவிட்டார்கள். இவர்கள் குடியேறிய எந்த தேசத்தில் வளமாக இருக்கின்றார்கள். இலங்கையில் தான் மிகவும் மோசமான ஒரு சூழ்நிலையில் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள் என்பதும் உண்மையே. பிஜியில் அரச அதிகாரம் கிடைத்தது, இந்த மக்கள் எண்ணிக்கையில் அதிகமாக இருந்த ஒரே காரணத்தால். அதுவும் பிஜியின் மற்றைய சமூகத்தால் ஒரு இராணுவப் புரட்சி மூலம் கவிழ்க்கப்பட்டது. மற்றபடி அங்கும் இந்த மக்கள் ஒரு வளமான வாழ்வை வாழவில்லை. ஆங்கிலேயர்கள் தங்களின் நோக்கத்துக்காக பெரும் சுயநலத்துடன் இந்த மக்களை குடியேற்றியது போலவே, நாங்களும் இந்த மக்களை இன்று மீண்டும் குடியேற்ற நினைக்கின்றோம் அல்லவா. மலையக மக்களுக்கு முதலில் தேவையானது அவர்கள் வாழும் இடத்திலேயே சொந்த வீடும், அதனுடன் சேர்ந்த சிறிய நிலமும். அவர்கள் வளமாவதுஅங்கிருந்தே ஆரம்பிக்கும். அடுத்ததாக உயர் கல்வி அல்லது முறையான தொழில் பயிற்சிகள். மலையக, கொழும்பு, வட கிழக்கு தமிழ் அரசியல்வாதிகள் இந்த திசையில் நகர்வது தான் மலையக மக்களுக்கு நிரந்தரமான, கௌரவமான ஒரு வாழ்வைப் பெற்றுக்கொடுக்கும். அந்த நாட்களில் ஊரில் பீட்டர் அம்மா என்று நாங்கள் கூப்பிடும் ஒருவர் ஒரு சின்னக்கடை வைத்திருந்தார். பாண் பணிஸ் போன்றன விற்பார். வல்வெட்டித்துறை - உடுப்பிட்டி வீதியில், வல்வெட்டித்துறைச் சந்திக்கு அருகாமையில், பெட்ரோல் நிரப்பும் நிலையத்திற்கு அருகில் அவரின் கடை இருந்தது. எனக்கு அவர் அடிக்கடி பணிஸ் கொடுப்பார். அது நான் அவருக்கு செய்யும் வேலைக்கு கிடைக்கும் கூலி, வேறு சில வேளைகளில் அது ஒரு பண்டமாற்று. கதையாகவே எழுதலாம். என்னையே ஒரு பணிஸை எடு என்று சொல்லிவிடுவார். எல்லா பணிஸும் ஒரே மாதிரியாகவே இருக்கும். அதைப் போலவே தான் இந்த தமிழ் அரசியல்வாதிகள், எல்லோரும் ஒன்றே. 'பணிஸ் அரசியல்வாதிகள்..........'................