3 weeks 4 days ago
ஒருவரை மின்னல் தாக்கப்போகிறது என்பதை முன்கூட்டியே அவர் உணர்ந்து தப்பிக்க முடியுமா...? இந்த கேள்விக்கான பதிலை தெரிந்துக்கொள்வதற்கு முன் இடி, மின்னல் பற்றி நாம் முழுமையாக தெரிந்துக் கொள்ள வேண்டும். மின்னல் பற்றி தெரிந்துக்கொள்ள நிறைய இருப்பதால் முதலில் இடி எப்படி உருவாகிறது என்பதை சுருக்கமாக பார்த்துவிடுவோம். * மேகம்+ நிலம் ஆகியவற்றின் மூலம் கண நேரத்தில் உருவாகும் மின்னல் சுமார் 30,000 டிகிரி செல்சியஸ், அதாவது சூரியனின் மேற்பரப்பு வெப்பத்தை விட 3 மடங்கு அதிகமான வெப்பத்துடன் ஒளியை உண்டாக்கும். * இந்த அதீத ஆற்றல் கொண்ட மின்னல் கீற்று மேகத்திற்கும் நிலத்திற்கும் இடையே உள்ள காற்றை படுவேகமாக கிழிக்கும். இப்படி கிழித்து பிரிக்கும்போது, காற்று அதே வேகத்துடன் பின்னோக்கி விரிவடையும். * இப்படி வேகமாக விரிவடையும்போது ஏற்படும் பயங்கரமான ஒலி தான் இடி. * சிலர் நினைப்பது போல் மேகங்கள் மோதிக்கொள்ளும் போது தான் இடி உருவாகும் என்பது தவறான கருத்து. மின்னல் காற்றை கிழித்துக் கொண்டு பயணிக்கும்போது காற்று உருவாக்கும் ஒலி தான் இடி. உதாரணமாக... * ஒரு பட்டாசில் தீ வைக்கிறோம். திரி மருந்தை அடைந்ததும் அது ஒலியுடன் வெடிக்கும். சரி தானே...? * ஆனால், ஒரு பலூனை நன்றாக ஊதிவிட்டு பின்னர் அதனை ஒரு ஊசியால் குத்தினால் அது எப்படி பலத்த ஓசையுடன் வெடிக்கிறது...? உள்ளே மருந்து என எதுவும் இல்லையே...? எப்படி ஒலி உண்டானது...? * காரணம், நாம் காற்றை நன்றாக ஊதிவிட்டு பின்னர் அதனை ஊசியால் குத்தும் போது, அடைத்து வைக்கப்பட்ட காற்று அதீத வேகத்தில் வெளிப்பட்டு வெளிக்காற்றுடன் சேர்ந்து விரிவடையும்போது தான் இந்த ஒலி உண்டாகும். * இதே பலூனை நீங்கள் நிலாவில் வெடித்தால், அங்கே ஒலி கேட்காது. ஏனெனில், அங்கு காற்று இல்லை. அது விரிவடைய முடியாது. * இதே போல் தான்... ஒரு அணுகுண்டை வெடிக்க வைக்கும்போது அந்த வெடிப்பில் உண்டாகும் ஆற்றல் காற்றை கிழித்து வேகமாக விரிவடைய செய்யும்போது தான் அந்த 'பூம்ம்ம்' ஒலி நமக்கு கேட்கும். * இதே அணுகுண்டை நிலாவில் வெடித்தால் நமக்கு ஒளி மட்டுமே தெரியும். ஒலி கேட்காது. * ஆக, மின்னல் உருவாகும்போது அது காற்றை கிழித்து பாதையை உருவாக்கும்போது காற்று வேகமாக விரிவாகும் நிலையில் கேட்கும் ஒலி தான் இடி. சரி இப்போது மின்னலை பார்ப்போம். * மழையை உருவாக்கும் குமுலோநிம்பஸ் மேகங்கள் அடர்த்தியாக திரண்ட பின்னர் அதே வேகமாக சுமார் 10-15 கிமீ வரை மலை போல் வளரும். * இந்த மேகத்திற்குள் சிறிய ஐஸ் துகள்கள்(ice crystals) மற்றும் பெரிய ஆலங்கட்டிகள்(hails) பல பில்லியன் எண்ணிக்கையில் காணப்படும். * சிறிய ஐஸ் துகள்கள் positive charge-வுடன் மேகத்தின் மேற்பரப்பிற்கு சென்று விடும். பெரிய ஆலங்கட்டிகள் negative charge-வுடன் மேகத்தின் அடிப்பாகத்தில் தங்கிவிடும். * பின்னர் இவை பலமாக மோதிக்கொள்ளும்போது ஒரு electric current உருவாகும். இந்த கரண்ட் மேகத்திலிருந்து வெளிப்பட்டு சுமார் 50 மீட்டர் வரை மட்டுமே கீழே பூமியை நோக்கி நீளும். * இதற்கு அடுத்த நிலையில், பூமியில் உள்ள மனிதர்கள் உள்பட அனைத்து பொருட்களும் இந்த மழை, புயல் நேரங்களில் ஒருவித மின்னழுத்த பாதையை வெளியிடுவார்கள். இதனை ஆங்கிலத்தில் Streamer எனக் கூறுவார்கள். * மனிதர்கள், மரங்கள், வீடுகள், கம்பங்கள் என செங்குத்தாக நிற்கும் அனைத்தும் இந்த Streamer- களை வெளியிடுவார்கள். இவை மேல்நோக்கி செல்லும். * இப்போது மேலே 50 மீட்டர் தொலைவு வரை வந்த electric current-ஐ இந்த Streamer தொட்டு இணைந்து விட்டால், கீழே எதன் மூலம் இந்த Streamer வெளியானதோ அது மீண்டும் ஒரு பலமான return stroke கொடுக்கும். இதுவும் electric current-ம் சேர்ந்து தான் ஒரு பயங்கரமான மின்னல் வெட்டை உருவாக்கும். * பலரும் நினைப்பது போல் மின்னல் மேகத்திலிருந்து தோன்றி அப்படியே பூமியில் உள்ளவைகளை நேரடியாக தாக்காது. மின்னல் என்பது கிட்டத்தட்ட பூமியில் உருவாகி மேலே செல்கிறது. உதாரணமாக.... * மின்னல், இடி அடிக்கும்போது நாம் வெளியே செல்கிறோம். நாம் எப்போதும் செங்குதாகவே நடப்போம்/நிற்போம். * அதே சமயம், நாம் இருக்கும் இடத்தில் நம்மை விட உயரமான மரம், கம்பம், வீடு என எதுவும் இல்லை. * இப்போது மேலே அந்த electric current 50 மீட்டர் தொலைவில் (மேகத்திலிருந்து) ஒரு பாதையை உருவாக்க Streamer-காக காத்துக் கொண்டு இருக்கும். * கீழே நடக்கும் நம் தலை மற்றும் உடலில் இருந்து Streamer வெளியாகி மேல் நோக்கி செல்லும். * இரண்டும் இணையும்.... return stroke ஏற்படும். இப்போது electric current-க்கு பாதை கிடைத்ததும் அந்த பாதையின் எல்லை வரை அது பயணம் செய்யும். அந்த பாதையின் எல்லை எது..? நம் தலை தான்... * இதில் கவனிக்கப்பட வேண்டிய விஷயம்... பூமியும் Streamer-களை வெளியிடும். * ஆனால், flat-ஆன பூமி வெளியிடும் Streamer மேலே செல்வதற்குள் செங்குத்தாக நிற்கும் நாம் வெளியிடும் Streamer விரைவாக மேலே சென்று இணைந்து விடும். * ஆக, எலக்ட்ரிக் கரண்டின் டார்க்கெட் நம் தலை தான். * சரி, நாம் நிற்கும் இடத்தில் நம்மை விட உயரமான மரம் உள்ளது. யாரை எலக்ட்ரிக் கரண்ட் தேர்வு செய்யும்...? * அஃப்கோர்ஸ், உயரமான மரம் தான் பிரைமரி டார்க்கெட்..ஆனால், நாமும் ஆபத்தில் தான் இருப்போம். * ஏனெனில், மரம் வெளியிடும் Streamer மேலே இணைந்தவுடன் பாதை ஏற்படும் மரத்தின் உச்சி வரை எலக்ட்ரிக் கரண்ட் வந்துவிடும். அருகில் வேறு ஏதாவது உயரமாக இருந்து அது Streamer-ஐ வெளிப்படுத்தும்போது அந்த எலக்ட்ரிக் கரண்ட் அசுர வேகத்தில் அங்கே Jump செய்துவிடும். * இதனால் தான் உயரமான மரத்திற்கு அருக நிற்க கூடாது என்கிறார்கள். * சரி, மேலே எலக்ட்ரிக் கரண்ட் தயார் நிலையில் உள்ளது... கீழே நாம் நடக்கிறோம்... நம்மை விட உயரமானது எதுவும் அருகில் இல்லை. நம்மை இன்னும் சில வினாடிகளில் மின்னல் தாக்கப்போகிறது என்பதை முன்கூட்டியே உணர முடியுமா..?முடியும். * வெளியே நீங்கள் நிற்கும்போது/நடக்கும்போது உங்கள் உடல் Streamer-களை வெளியிடும். அப்போது... * உங்கள் தலைமுடிகள் நேராக நிற்கும்.. * உங்கள் தோலை யாரோ வருடி விடுவதுபோல் தோன்றும்... * உங்களிடம் இரும்பு சாவி, செயின், மோதிரம், டூல்ஸ் என ஏதாவது இருந்தால் அவை vibrate ஆகும். * இந்த மாற்றங்களை நீங்கள் உணர்ந்தால், உடனடியாக ஒரு இருப்பிடத்திற்குள் படுவேகமாக நுழைந்து விட வேண்டும். * இருப்பிடம் இல்லையெனில், அப்படியே கீழே அமர்ந்து இரண்டு கால்களுக்கு இடையில் தலையை கீழ்புறமாக தொங்கவிட்டு இரண்டு காதுகளையும் மூடிக்கொள்ள வேண்டும். (போட்டோ பார்க்கவும்) * அதாவது, ஒரு செங்குத்தான நிலையை மேலே உள்ளவனுக்கு கொடுக்க கூடாது. * ஆக, மின்னல் என்பது தானாக, எதேச்சையாக உங்களை தாக்கவில்லை. அதாவது, அது தாக்கும் இடத்தில் நீங்கள் நிற்கவில்லை. * மாறாக, நீங்கள் அங்கே சென்று அந்த மின்னலை வா வா என அழைத்ததால்(Streamers) அது உங்களை குறிவைத்து தாக்கியது. ஒருவேளை, நீங்கள் அங்கே இல்லாமல் இருந்திருந்தால், அங்கே மின்னல் தாக்குவதும் தவிர்க்கப்பட்டிருக்கும். * ஏனெனில், மேகங்கள் நகரும்போது காத்திருக்கும் அந்த எலக்ட்ரிக் கரண்ட் வேறு ஒரு இடத்தில் உயரமான பொருள் மீது தாக்கியிருக்கும். * ஆக, இடியை மேகங்கள் உருவாக்கவில்லை. அது காற்றிலிருந்து வெளியாகிறது... மின்னல் மேகத்திலிருந்து நேராக நம்மை தாக்கவில்லை. நாம் அதனை கீழே இருந்து வரவழைக்கும் ஒரு 'இணைப்பு புள்ளியாக' இருக்கிறோம் என்பதை நாம் தெரிந்துக் கொண்டோம்! https://www.facebook.com/groups/2491490137808049/permalink/3937668153190233/?rdid=pv2TT2MBU0rdWgaO&share_url=https%3A%2F%2Fwww.facebook.com%2Fshare%2Fp%2F18gSHQJZRQ%2F#
3 weeks 4 days ago
"அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English / பகுதி Part: 34 [This detailed Tamil article is based on the unfinished historical book 'History of Sri Lanka' by my late friend, Mr. Kandiah Easwaran, a civil engineer. The English summary below is his own version. / இந்த விரிவான தமிழ் கட்டுரை, எனது மறைந்த நண்பர், பொறியியலாளர் திரு. கந்தையா ஈஸ்வரன் எழுதிய முடிக்கப்படாத "இலங்கை வரலாறு" என்ற புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டது. கீழே உள்ள ஆங்கிலச் சுருக்கம் அவரது சொந்தப் பதிப்பாகும்.] பகுதி: 34 A / முடிவுரை / 'முதன்மை இலங்கை நாளாகமம், மகாவம்சம் எப்போது ஆங்கிலத்திலும் சிங்களத்திலும் மொழிபெயர்க்கப்பட்டது?' பல்வேறு புத்த மடங்களில் [monasteries] மகாவம்சத்தின் பல பதிப்புகள் இருந்தன. ‘The Mahavansi, The Raja-Ratnacari and The Rajavali” Edited by Edward Upham, M. R. A. S., F. S. A., February 16, 1833.' என்ற தலைப்பில் ஒரு வெளியீடு இருந்தது. இந்த புத்தகம் அவரது அனுமதியுடன் அரசரின் சிறந்த மாட்சிமைக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. ஆனால், அந்த புத்தகம், மொழிபெயர்ப்பு மற்றும் அதன் விளக்கத்தில் பல பிழைகள் காணப்பட்டது. அவற்றில், முக்கியமாக, புத்தர் இலங்கையில் பிறந்தார் மற்றும் சிவனொளிபாதம் அல்லது பாவா ஆதம் மலை [Adam's Peak] சிகரத்தில் ஒரு மடாலயத்தை கட்டினார் என்று கூறியிருப்பது ஆகும். முதல் அச்சிடப்பட்ட பதிப்பு மற்றும் பரவலாக வாசிக்கப்பட்ட ஆங்கில மொழிபெயர்ப்பு, 1837 இல் 38 அத்தியாயங்களை மொழிபெயர்த்த இலங்கை நிர்வாக சேவையின் வரலாற்றாசிரியரும் அதிகாரியுமான ஜோர்ஜ் டேனர் அல்லது ஜோர்ஜ் டர்னரின் [George Turnour / (1799–1843)] புத்தகமாகும், வில்ஹெம் லுட்விக் கெய்கர் அல்லது வில்லெம் கெய்கர் (Wilhelm Ludwig Geiger) (1856-1943) மகாவம்ச மொழிபெயர்ப்பானது, துட்டைகைமுனு அல்லது துட்டகாமினியின் மகன் சாலிய அல்லது சாலிராஜகுமாரனப் [Saliya or Salirajakumara ] பற்றி சுருக்கமாகக் குறிப்பிடுகிறது. 33 - 1 முதல் 3 வரையிலான மூன்று வசனங்களில், ஒரு அசாதாரண அழகான சண்டாளர் அல்லது வெட்டியான் குடும்பத்தை சேர்ந்த பெண்ணைக் காதலித்து, அவளுக்கு முன்னுரிமை அளித்து, தனது அரச பதவியைத் துறந்தார் என்று கூறுகிறது. இருப்பினும், உபாம் [Edward Upham (1776–1834)] திருத்திய பதிப்பில், கதை 207 முதல் 216 வரை ஒன்பது பக்கங்களில் கூறப்பட்டிருக்கிறது. அதுமட்டும் அல்ல, மேலும் அவரின், திருத்திய பதிப்பில் [‘The Mahavansi, The Raja-Ratnacari and The Rajavali'], மகாவன்சியில், மன்னன் மகாசேனனுடன் நின்றுவிடவில்லை. இப்பதிப்பின்படி ,கஜபாகு மன்னன் சோழ நாட்டிற்கு தனியச் சென்று, முன்பு கைதுசெய்து கொண்டு செல்லப்பட்ட தனது மக்களை மீண்டும் அழைத்து வந்தார் என்றும், அதைவிட கூடுதலாக எவரையும் கொண்டு வந்ததாக எதுவும் சொல்லவில்லை. அது மட்டும் அல்ல, 12,000 என்ற ஒரு எண்ணிக்கை ஒன்றையும் குறிப்பிடப்படவில்லை. அவர் நினைவுச் சின்னங்களையும் புத்தரின் பிச்சை பாத்திரத்தையும் [relics and the Buddha’s begging dish] கொண்டு வந்தார் என்று கூறுகிறது. அது மட்டும் அல்ல, இந்நூலில் மகாசேனனைப் பற்றிய விளக்கம் அல்லது கதை வேறாக உள்ளது. விவசாயத்தைப் பெருக்க அவர் நிறையச் செய்திருப்பதாகத் இங்கு சொல்லப்பட்டுள்ளது. மகாவம்சத்தின் பல பதிப்புகள் இருந்தன, ஒன்று மற்றொன்றிலிருந்து சிறிது அல்லது கணிசமாக வேறுபடுகிறது என்பதை இந்த கூற்று வலியுறுத்துகிறது. சர் அலெக்சாண்டர் ஜான்ஸ்டன் [ Sir Alexander Johnston] இலங்கைத் தீவு முழுவதும் தேடலில் இருந்து அசல் அல்லது மூல கையெழுத்துப் பிரதிகளைப் பெற தன்னால் முடிந்தவரை முயற்சி செய்தார். இருப்பினும், ஜோர்ஜ் டர்னர் [George Turnour] ஒரு மடாலயத்திலிருந்து ‘காலி’ [‘Galle’] என்ற புத்தர் பிக்கு மூலம் ஒரு பிரதியைப் பெற்று அதில் பணியாற்றினார். காலனித்துவ அரசாங்கம் மேலும் சிறந்த தரமான மொழிபெயர்ப்புக்கு ஏற்பாடு செய்ய விரும்பி, அதைச் செய்யுமாறு T. W. Rhys Davids ஐக் கேட்டுக் கொண்டது. அதன் விளைவாக, டாக்டர் வில்லெம் கெய்கர் [Dr. Wilhelm Geiger] மொழிபெயர்த்தார். இலங்கை அரசாங்கம் அதை 1912 இல் வெளியிட்டது. தீபவம்சம் & மகாவம்சம் இரண்டும் முதலில் பண்டைய இந்திய மொழியான பாளி மொழியில் எழுதப்பட்டது. மகாவம்சம் ஆங்கிலேயர் காலனித்துவ காலத்தில் 1877 ஆம் ஆண்டு சிங்களத்தில் மொழிபெயர்க்கப்பட்டது, சிங்கள மொழிக்கு ஏற்றவாறு உரையில் புதுப்பிப்புகள் [Update] செய்யப்பட்டன; இந்த சிங்கள பதிப்பு பெரும்பாலும் "சூழவம்சம்" என்று குறிப்பிடப்படுகிறது. சிங்கள பௌத்த அடையாளத்தை வடிவமைப்பதில் சிங்கள மொழியாக்கம் கணிசமான பங்கைக் கொண்டிருந்தது. இந்த கதை பின்னர் 1935 மற்றும் 1978 இல் புதுப்பிக்கப்பட்டது. தமிழ் மொழிபெயர்ப்புகளைப் பொறுத்தவரை, மகாவம்சத்தை நேரடியாக தமிழில் மொழிபெயர்த்தது ஒன்றும் அறியப்படவில்லை, ஏனெனில் சிங்கள சமூகத்திற்குள் அதன் வரலாற்று முக்கியத்துவம் காரணமாக சிங்கள பதிப்பில் முதன்மைக் கவனம் செலுத்தப்பட்டது போலத் தோன்றுகிறது. மகாவம்சத்தின் மூல நூலாகக் தீபவம்சம் கருதப்படுகிறது. என்றாலும் மகாவம்சம் அதிலிருந்து மிகவும் வளர்ந்த மற்றும் விரிவான வரலாற்று நூலாக உள்ளது. Part: 34 / Conclusion / 'When prime Lanka chronicle, Mahavamsa, translated in English & Sinhala?' There were many versions of Mahavamsa in various monasteries. There was one publication in 1833 with the title ‘The Mahavansi, The Raja-Ratnacari and The Rajavali” Edited by Edward Upham, M. R. A. S., F. S. A., February 16, 1833. This book is dedicated to the King’s Excellent Majesty with his permission. but it was marked by several errors in translation and interpretation, among them suggesting that the Buddha was born in Sri Lanka and built a monastery atop Adam's Peak. The first printed edition and widely read English translation was published in 1837 by George Turnour, a historian and officer of the Ceylon Civil Service who translated 38 chapters. The Mahavamsa translation by Wilhelm Geiger briefly mentions about the son of Dutthagamani, Salirajakumara, in three verses, 33 – 1 to 3, fell in love with an extraordinary beautiful Candala woman and forsook the kingship in preference to her. However, in the version edited by Upham, the story runs into nine pages, from the page 207 to 216. Furthermore, the Mahavansi does not stop with the king Mahasena. The King Gajabahu went to the Solly country as per this edition but he went alone. He brought back his people, but does not say about the additional people. Even the number 12,000 is not mentioned. He brought the relics and the Buddha’s begging dish. The description of Mahasena is different in this book. He seemed to have done quite a lot to increase the agriculture. This is to emphasize that there were many versions of Mahavamsa, one differing from the other slightly or considerably. Sir Alexander Johnston tried his best to get the original manuscripts from an island wide search. However, George Turnour obtained a copy from one monastery through a priest called ‘Galle’ and worked on it. The colonial government found it wanting, and requested T. W. Rhys Davids to arrange for a better quality translation. Dr. Wilhelm Geiger translated it. The Ceylon Government published it in 1912. நன்றி Thanks [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] [Kandiah Thillaivinayagalingam, Athiady, Jaffna] பகுதி / Part: 34 B தொடரும் / Will follow "அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English / பகுதி Part: 34 https://www.facebook.com/groups/978753388866632/posts/31833890602926173/?
3 weeks 4 days ago

இலங்கையிலிருந்து வந்த ஃபிட்ஸ் ஏர்லைன்ஸ் விமானத்தின் சக்கர அசெம்பிளியில் நரி ஒன்று நுழைந்ததால் ஏற்படவிருந்த ஒரு பெரிய சம்பவம் மயிரிழையில் தவிர்க்கப்பட்டது என டாக்கா ட்ரிப்யூன் செய்தி சேவை செய்தி வெளியிட்டுள்ளது.
இந்த சம்பவம், ஹஸ்ரத் ஷாஜலால் சர்வதேச விமான நிலையத்தில், வெள்ளிக்கிழமை (10) அதிகாலை இடம்பெற்றது.
200க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிச் சென்ற விமானம், அதிகாலை 2 மணிக்குப் பிறகு சிறிது நேரத்தில் தரையிறங்கியது.
விமான நிலைய அதிகாரிகளின் கூற்றுப்படி, நரி திடீரென ஓடுபாதையில் ஓடி தரையிறங்கும் போது தரையிறங்கும் கியரில் சிக்கிக் கொண்டது.
விமானியின் விரைவான எதிர்வினை மற்றும் தொழில்நுட்பத் திறன் விமானம் பாதுகாப்பாக நிறுத்தப்படுவதை உறுதி செய்தது.
தரையில் இருந்த ஊழியர்கள் உடனடியாக விலங்கை அகற்றி அப்புறப்படுத்தினர்.
சம்பவத்தை விமான நிலையத்தைச் சேர்ந்த பல அதிகாரிகள் உறுதிப்படுத்தினர். பயணிகளின் பாதுகாப்பை உறுதிசெய்து ஒரு பெரிய விபத்தைத் தடுத்த ஒருங்கிணைந்த முயற்சியைப் பாராட்டினர்.
Tamilmirror Online || ஓடுபாதையில் நரி: பேரழிவை தவிர்த்த கொழும்பு விமானம்
3 weeks 4 days ago
கடலில் மீனவர்களுக்கு இடையூறு விளைவிக்கும் சிவப்பு நண்டுகள்
15 Oct, 2025 | 11:59 AM

மன்னார் மாவட்டம் தாழ்வுபாடு கிராம மீனவர்கள் தமது கடற்பரப்பில் காணப்படும் சிவப்பு நண்டு என அழைக்கபடுகின்ற ஒரு வகையான நண்டின் தாக்கம் காரணமாக குறித்த மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
மன்னார் தீவுப்பகுதி கடற்றொழில் சார் கிராமங்களை கொண்ட பகுதியாகும். இவற்றில் தாழ்வுபாடு கிராமமும் ஒன்றாகும்.
குறித்த கிராமத்தில் கடந்த பல நாட்களாக ' சிவப்பு நண்டு' என அழைக்கபடுகின்ற ஒரு வகையான நண்டினால் மீனவர்களின் வாழ்வாதாரம் முற்றாக பாதிக்கப்பட்டுள்ளன.
இந்த நண்டுகள் மீனவர்களின் வலைகளில் பாரியளவில் சிக்குவதால் மீனவர்களின் வலை தொகுதிகள் சேதமடைந்துள்ளன. குறித்த சிவப்பு நண்டை எந்த ஒரு தேவைக்கும் பயன்படுத்த முடியாது என மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.
இப் பகுதி மீனவர்கள் கடந்த 15 வருடங்களுக்கு முன் குறித்த சிவப்பு நண்டினால் ஒரு தடவை இப்பகுதியில் பாரிய சேதத்தை ஏற்படுத்தி இருந்ததாகவும் அதன் பிற்பாடு இந்த ஆண்டு இவ்வாறு வருகை தருவதாகவும் மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.
இதனால் மீனவர்களின் வலைகளில் சிக்கும் குறித்த நண்டுகளை வலையில் இருந்து பிரித்து எடுக்க முடியாத நிலை காணப்படுவதோடு, இதனால் வலைகள் பாதிக்கப்படுவதோடு, தமது வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக அப்பகுதி மீனவர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.


கடலில் மீனவர்களுக்கு இடையூறு விளைவிக்கும் சிவப்பு நண்டுகள் | Virakesari.lk
3 weeks 4 days ago
15 Oct, 2025 | 05:45 PM இலங்கையில் அதிகரித்துவரும் புற்றுநோய் தாக்கத்தினை கட்டுப்படுத்தும் வகையில் சுகாதார அமைச்சின் ஆலோசனையின் கீழ் பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. சுகாதார அமைச்சின் ஆலோசனையின் கீழ் இந்திரா புற்றுநோய் அறக்கட்டளையின் ஏற்பாட்டில் தொடுதல், கண்டறிதல் மற்றும் பரிசோதித்தல் தொணிப்பொருளுக்கு அமைய மார்பக புற்று நோய்க்கான விழிப்புணர்வு நிகழ்வு கடந்த 12 ஆம் திகதி மட்டக்களப்பு வெபர் மைதானத்தில் நடைபெற்றது. இவ் விழிப்புணர்வு நிகழ்வை முன்னெடுக்கும் முகமாக நீச்சல் சைக்கிள் ஓட்டம் மற்றும் மரதன் என முக்கோண வடிவிலான விளையாட்டு நிகழ்வு ஒழுங்கமைக்கப்பட்டு நடைபெற்றது. நிகழ்வு ஆரம்பிக்கும் முகமாக தேசிய கீதம் இசைக்கப்பட்டு பங்குபற்றுனர்கள் அனைவருக்கும் உடல் தளர்வு பயிற்சி நடைபெற்று முதல் விளையாட்டு நிகழ்வாக நீச்சல் ஆரம்பிக்கப்பட்டு அதனைத் தொடர்ந்து சைக்கிள் பவனி ஆரம்பிக்கப்பட்டு பின் விழிப்புணர்வு மரதன் ஓட்டம் நடைபெற்றது. நிகழ்வின் இறுதியில் அனைத்து விளையாட்டுகளிலும் பங்குபற்றிய அனைவருக்கும் நினைவு பதக்கம் வழங்கி வைக்கப்பட்டது. இந்திரா புற்றுநோய் அறக்கட்டளையின் தலைவர் வைத்தியர் லங்கா ஜயசூர்ய திஸாநாயக்க தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர்களான கந்தசாமி பிரபு மற்றும் இளையதம்பி ஸ்ரீநாத் ஆகியோர் கலந்து கொண்டதுடன், மட்டக்களப்பு மாநகர சபை முதல்வர் சிவம் பாக்கியநாதன், மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்கள பணிப்பாளர் முரளீஸ்வரன், சுகாதார சேவைகள் திணைக்கள கிழக்கு மாகாண பணிப்பாளர் வைத்தியர் பூர்ணிமா விமலரத்தின, கமர்சியல் வங்கியின் கிழக்கு மாகாண கிளையின் முகாமையாளர் கஜரூபன், மட்டக்களப்பு தலைமையாக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பண்டார, சமூகத் தொண்டு நிறுவனங்கள், அரச திணைக்கள ஊழியர்கள், விளையாட்டுத்துறை உத்தியோகத்தர்கள், இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர். இதன்போது மார்பக புற்றுநோய் கண்டறிதல் தொடர்பிலான மருத்துவ பரிசோதனைகளும் முன்னெடுக்கப்பட்டதுடன் மார்பக புற்றுநோய் தொடர்பிலான விழிப்புணர்வும் முன்னெடுக்கப்பட்டது. இந்திரா புற்றுநோய் அறக்கட்டளையின் ஏற்பாட்டில் மார்பக புற்றுநோய்க்கான விழிப்புணர்வு நிகழ்வு! | Virakesari.lk