பயங்கரவாதத் தடைச் சட்டம் செப்டெம்பரில் இரத்து செய்யப்படும் – அமைச்சர் விஜித ஹேரத்
பயங்கரவாதத் தடைச் சட்டம் செப்டெம்பரில் இரத்து செய்யப்படும் – அமைச்சர் விஜித ஹேரத்.
பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் (PTA) இந்த ஆண்டு செப்டம்பர் மாதத்திற்குள் இரத்து செய்யப்படும் என்று வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
இன்று நாடாளுமன்றத்தில் உரையாற்றிய அமைச்சர் விஜித ஹேரத், இது தொடர்பான வர்த்தமானி அறிவிப்பு செப்டம்பர் மாத தொடக்கத்தில் வெளியிடப்படும் என்றும் கூறினார்.
இது குறித்து மேலும் உரையாற்றிய அவர்,
அதிகாரத்தை ஏற்றுக்கொண்ட குறுகிய காலத்திற்குள், பயங்கரவாத தடுப்புச் சட்டத்தை ஆய்வு செய்து பரிந்துரைகளை வழங்க ஒரு குழுவை நாங்கள் நியமித்தோம்.
இந்தக் குழு பலமுறை கூடி, பயங்கரவாத தடுப்புச் சட்டத்தில் பொருத்தமான திருத்தங்களைச் மேற்கொள்ளத் தொடங்கியுள்ளது.
ஆகஸ்ட் மாத இறுதிக்குள் தொடர்புடைய திருத்தங்கள் தொடர்பான பணிகள் நிறைவடையும்.
அதைத் தொடர்ந்து, பயங்கரவாதத் தடைச் சட்டத்தை ஒழிப்பது குறித்த வர்த்தமானி அறிவிப்பு செப்டம்பரில் வெளியிடப்படும்.
தேசிய பாதுகாப்பை உறுதி செய்வதற்காக, பயங்கரவாத தடைச் சட்டம் அடுத்த மாதம் இரத்து செய்யப்பட்டு, புதிய சட்டம் கொண்டு வரப்படும் என்றார்.
எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் இன்று நாடாளுமன்றத்தில் வெளியிட்ட அறிக்கைக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் இந்த அறிவிப்பை வெளியிட்டார்.