3 weeks 5 days ago
சிறு கதை - 187 / 'இலங்கை கடற்கரை “நெடுஞ்சாலை” யில் தாத்தா, கந்தையா தில்லையுடன் பேரப்பிள்ளைகள்' பகுதி: 03 - திருகோணமலை திருகோணமலையை நாம் அண்மித்ததும், “தாத்தா! தாத்தா! நாம் இன்னும் வந்துட்டோமா?” என மூத்த பேரன் ஒரு 'சிள்வண்டு' போல துள்ளிக் குதித்தான். அவனது தம்பி, அண்ணாவின் கையை பிடித்து இழுத்து, தனது சிறிய கைகளைத் தட்டிக்கொண்டு: “அண்ணா, கடற்கரை! கடற்கரை! மீன்!” என்றான். மூத்தவள், தன் சூரிய தொப்பியை சரிசெய்து, ஒரு ராணியைப் போல, “பாய்ஸ் [Boys], அமைதியாக இருங்கள். டால்பின்கள் உங்களுக்காக அல்ல, எனக்காகக் காத்திருக்கின்றன.” என்று குறும்பாகச் சொன்னாள். எல்லோரும் வெளியே ஒன்றாக நடந்தார்கள். திருகோணமலையின் உப்புக் காற்று அவர்களை அணைத்துக் கொண்டது. கடலின் நீல நிறம், உருகிய நீலக்கல் [sapphire.] போல பிரகாசித்தது. கடற்கரையில், குழந்தைகள் ஓடினர். இசை வெள்ளை மணலில் ஒரு நண்டைத் துரத்தினான், ஆனால் கடல் அலையால் ஈரமான மணலை அணுகிய பொழுது, அங்கே வழுக்கி தண்ணீரையும் சிதறச் செய்து விழுந்தான். அனைவரும் சிரித்தனர். "பாருங்கள், பாருங்கள்!" என்று ஜெயா அடிவானத்தை சுட்டிக் காட்டினாள். டால்பின்களின் [Dolphin] ஒரு குவியல் தண்ணீரிலிருந்து குதித்தது, காலை சூரியனின் கீழ், அவை பார்ப்பதற்கு வெள்ளி வளைவுகள் [silver arcs] போல் நடனமாடின. "ஆஹா! அவை சிலிர்க்க வைக்கின்றன," என்று கலை கத்தினான். நீல வானத்தில் நிலவு ஒளிர நீண்ட கடலில் அலைகள் தோன்ற வெள்ளை மணலில் நண்டு ஓட துள்ளிக் குதிக்குது டால்பின் கூட்டம்! காற்று வெளியில் பட்டம் பறக்க காந்த மொழியில் கலை பாட சலங்கை ஒலிக்க ஜெயா ஆட சங்கு பொருக்கி இசை மகிழ்ந்தான்! "இல்லை, இல்லை ," என்று ஜெயா பதிலளித்து, "அவர்கள் என்னை வரவேற்கிறார்கள். ஏனென்றால் நான் டால்பின் இளவரசி, கடல் இராணி ." என்று கர்வமாகச் சொன்னாள். சின்னஞ்சிறு இசை, "நான் இளவரச மீன்!" என்று கத்தி என் மடியில் துள்ளிக் குதித்தான். நான் சிரித்தேன், ஆனால் எனக்குள் மற்றொரு அலை எழுந்தது. தாத்தா, "திருகோணமலை என்பது வெறும் டால்பின்களும் கோவில்களுமல்ல. எனக்கு நினைவுக்கு வருகிறது – 1960கள். அப்போது அரசாங்கங்கள் வரைந்த வரைபடங்கள் கடல்களின் வரைபடமல்ல, மக்களின் வரைபடம். “வளர்ச்சி” என்ற பெயரில், மகாவலி திட்டங்கள் போன்ற சிங்களக் குடியேற்றத் திட்டங்கள் கொண்டு வரப்பட்டன. தெற்கிலிருந்து சிங்களக் குடும்பங்கள் இங்கே குடியேற்றப் பட்டார்கள். ஆனால் அதற்காக தமிழர் விவசாயிகள் தங்கள் வயல்களை இழந்து வெளியேற்றப் பட்டார்கள். அரசாங்கம் இதை “வளர்ச்சி” என்று கூறியது. ஆனால் எங்கள் மக்களுக்கு அது உயிர்வாழ்வின் நிலம் அழிந்தது என்பதே உண்மை." இலங்கை வரலாற்றை சுருக்கமாக கூறினார். அப்பொழுது பேத்தி, தாத்தாவின் கையை இழுத்தாள்: “தாத்தா, சாலையில் துப்பாக்கிகளுடன் இவ்வளவு வீரர்கள் ஏன் இருக்கிறார்கள்? டால்பின்களுக்கு அவர்கள் பயப்படுகிறார்களா?” அவள் கண்கள் அவளுடைய வயதிற்கு மிகவும் கூர்மையாக இருந்தது. கடல் காற்று அமைதியாக வீசிக்கொண்டு இருந்தது. தாத்தா சற்று மென்மையான சத்தத்தில், “இல்லை கண்ணா. துப்பாக்கி ஏந்துவது அமைதியைப் பாதுகாக்கும் என்று சில அரச அதிகாரிகள் நினைக்கிறார்கள். ஆனால் உண்மையான அமைதி ... மக்கள் ஒருவரையொருவர் நம்பும்போது, யாரையும் தங்கள் சொந்த நிலத்தில் இருந்து வெளியேற்றாத போது வரும்.” என்றார். அவள் ஒரு கணம் யோசித்து, பின்னர் தலையசைத்தாள்.“பிறகு, நான் வளர்ந்ததும், எப்படி ஒருவரையொருவர் நம்புவது என்று அவர்களுக்குக் கற்றுக்கொடுப்பேன்.” என்று உறுதியாகக் கூறினாள். நாங்கள் கோணேஸ்வரம் கோயிலுக்கு ஏறினோம், அங்கு யாத்ரீகர்களை விட குரங்குகள் அதிகமாக இருந்தன. “அடடா! இந்தக் குரங்கு என் பிஸ்கட்டைத் திருடிவிட்டதே!” என்று சிறுவன் இசை கத்தினான். அப்பொழுது, ஜெயா, தன் கைகளை மடக்கி, “பாருங்கள் தாத்தா , குரங்குகள் கூட ஆண்களை மதிப்பதில்லை.” என்றாள் கேலியாக, தன் கையில் பிஸ்கட்டை பிடித்தபடி. தாத்தா பாறைக்குக் கீழே உள்ள புனிதக் கடலை உற்றுப் பார்த்தார். ஒருமுறை, போர்த்துகீசிய வீரர்கள், 1622 ஆண்டு கோயில் சிலைகளை கடலுக்குள் தள்ளினர். பல நூற்றாண்டுகளுக்குப் பிறகு, 1981 இல், சிங்கள அரச கும்பல்கள் யாழ்ப்பாண நூலகத்தை எரித்தனர். தீ, இழப்பு, அமைதியிமை - மீண்டும் மீண்டும் நிகழ்ந்த வரலாறு அவர் கண் முன் வந்தது. யாழ் நூலகத்தின் படியில் புத்தரின் சடலம் குருதியில் சிவில்உடை அணிந்த காவலர் நூலகத்துடன் சத்தியமும் எரித்தனர் இரவுஇருளில் அமைச்சர்கள் வந்தனர். எங்கள் பட்டியலில் இவர் இல்லையே இவரைச் சுடாமல் எரிக்க முடியாதே சத்தியம் மறந்தே மனிதம் எரித்தோம்! ஆனால் மூன்று பிஞ்சு கைகளைப் பிடித்துக் கொண்டு நின்ற தாத்தாவுக்கு, அவர்களின் கள்ளங் கபடமற்ற புன்னகை ஒரு தெம்பை, நம்பிக்கையை கொடுத்தது. நன்றி [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] பகுதி: 04 தொடரும் சிறு கதை - 187 / 'இலங்கை கடற்கரை “நெடுஞ்சாலை” யில் தாத்தா, கந்தையா தில்லையுடன் பேரப்பிள்ளைகள்' / பகுதி: 03 https://www.facebook.com/groups/978753388866632/posts/31791210493860851/?
3 weeks 5 days ago
"அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English / பகுதி Part: 32 [This detailed Tamil article is based on the unfinished historical book 'History of Sri Lanka' by my late friend, Mr. Kandiah Easwaran, a civil engineer. The English summary below is his own version. / இந்த விரிவான தமிழ் கட்டுரை, எனது மறைந்த நண்பர், பொறியியலாளர் திரு. கந்தையா ஈஸ்வரன் எழுதிய முடிக்கப்படாத "இலங்கை வரலாறு" என்ற புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டது. கீழே உள்ள ஆங்கிலச் சுருக்கம் அவரது சொந்தப் பதிப்பாகும்.] பகுதி: 32 / முடிவுரை / 'சிங்கள மொழி அதன் வரலாறு எழுத பொருத்தமற்றதா?' தத்திக முதல் கஜபாகு வரை பல தமிழ் மன்னர்களின் சாத்தியம் முன்னரே காட்டப்பட்டுள்ளது. மூத்தசிவன், சிவன், மகாசிவன், எல்லாளன் எனப் பல தமிழ் மன்னர்களும், மற்றும் தத்திகவுக்குப் பின்பும் பல தமிழ் மன்னர்களும் உள்ளனர். ‘நாக’ என்று முடிவடையும் பல மன்னர்களின் பெயர்கள் உள்ளன. அவர்கள் தமிழ் மன்னர்களாகவும் இருக்கலாம்? அதற்கான காரணம் ஏற்கனவே கூறப்பட்டுள்ளது. மற்றொரு விசித்திரமான அம்சம், இலங்கை வரலாற்றை வெளிநாட்டு மொழியில், பாளியில் எழுதியது. சிங்கள மொழி அதன் வரலாறு எழுத பொருத்தமற்றதா? அல்லது அந்தக் காலக்கட்டத்தில் - ஐந்தாம் ஆறாம் நூற்றாண்டுக்கு முதல் - சிங்கள மொழி வளர்ச்சி அடையவில்லையா? தீபவம்சம், மகாவம்சம் போல் தமிழுக்கும் தமிழருக்கும் எதிரானது அல்ல. இந்த மாற்றம் எப்படி வந்தது? சிறந்த விளக்கவுரை ஆசிரியர் புத்தகோசரின் [great commentator Buddhaghosa] வருகையாக இருக்கலாம்? மூல பாஷை [மூல் பாஷா {mul bhaSha} = அசல் மொழி] கருத்தை அறிமுகப்படுத்தி, பாளி மொழியில், முன்னைய நூல்களை மொழிபெயர்த்த பிறகு, அவற்றை - முன்னைய நூல்களை - எரித்தார் என நம்பப்படுகிறது. எனவே, மகாநாம அவரிடமிருந்து தான் இந்த உத்வேகத்தைப் பெற்றிருக்க வேண்டும் என்று தோன்றுகிறது? புத்தகோசரின் வாழ்க்கையைப் பற்றி வரையறுக்கப் பட்ட நம்பகமான தகவல்கள் மட்டுமே இருக்கின்றன. புத்தகோசர் தென்னிந்தியாவில் பிறந்தவர் என்றும் வட இந்தியாவிலிருந்த அன்றைய மகத அரசுக்குட்பட்ட புத்தகயாவிற்கு அருகில் பிறந்தவர் என்றும் ஆய்வாளர்கள் நடுவில் இருவேறு கருத்துக்கள் நிலவுகின்றன. என்றாலும் அவர் பிராமண குடும்பத்தில் பிறந்தார் என்பதில் கருத்து வேறுபாடு இல்லை. மகாவம்சத்தின் படியும், புத்தகோசர் மகத அரசுக்குட்பட்ட புத்தகயாவிற்கு [Bodh Gaya] அருகில் ஒரு பிராமண குடும்பத்தில் பிறந்தவராகவும், வேதங்களில் தேர்ச்சி பெற்றவராகவும், இந்தியா முழுவதும் தத்துவ விவாதங்களில் ஈடுபட்டவராகவும் கூறுகிறது. ரேவதா [Buddhist monk named Revata] என்ற புத்த துறவியை சந்தித்த பிறகுதான், புத்தகோசர் விவாதத்தில் சிறந்து விளங்கினார், முதலில் வேதக் கோட்பாட்டின் பொருள் குறித்த சர்ச்சையில் தோற்கடிக்கப்பட்டார். பின்னர் அபிதம்மத்திலிருந்து [Abhidhamma] ஒரு போதனையை வழங்குவதில் குழப்பமடைந்தார். அதன் பின் பௌத்தத்தில் ஈர்க்கப்பட்ட புத்தகோசர் ஒரு பிக்கு (பௌத்த துறவி) ஆனார் மற்றும் திபிடகா [Tipiṭaka / இது தேரவாத பௌத்தத்தின் கோட்பாட்டு அடித்தளத்தை உருவாக்கும் முதன்மை பாளி மொழி நூல்களின் தொகுப்பாகும்] மற்றும் அதன் விளக்கவுரைகளில் ஆய்வு செய்தார். இந்தியாவில் விளக்கவுரை தொலைந்து போன ஒரு வாசகத்தைக் கண்டுபிடித்து படிப்பதற்காக, அது இலங்கையில் பாதுகாப்பாக இருக்கும் என்ற ஒரு நம்பிக்கையில் அங்கு பயணம் செல்லத் தீர்மானித்தார். அங்கே, இலங்கையில், புத்தகோசர் அனுராதபுர மகா விகாரையின் துறவிகளால் சேகரிக்கப்பட்டு பாதுகாக்கப்பட்ட மிகப் பெரிய அளவிலான விளக்கவுரை நூல்கள் என்ன என்பதை ஆய்வு செய்யத் தொடங்கினார். புத்தகோசர் அங்கு காணப்பட்ட விளக்கவுரைகள் எல்லாவற்றையும் பாளியில் இயற்றப்பட்ட ஒரு ஒருங்கிணைக்கப்பட்ட விரிவான ஒரு விளக்கவுரையாகத் தொகுக்க, அவர்களிடம் அனுமதி கோரினார். புத்தகோசர் வட இந்தியாவில் போதகயாவிற்கு அருகில் பிறந்தார் என்று மகாவம்சம் கூறினாலும், அவரது விளக்கவுரைகளின் பின்னுரை அல்லது முடிவுரை, இந்தியாவில் குறைந்தபட்சம் தற்காலிக வசிப்பிடமாக இருக்கும் ஒரு இடத்தை மட்டுமே குறிப்பிடுகிறது: அது தென்னிந்தியாவின் காஞ்சி ஆகும். சில அறிஞர்கள் (among them Oskar von Hinüber and Polwatte Buddhadatta Thera) புத்தகோசர் உண்மையில் தென்னிந்தியாவில் பிறந்தார் என்றும், புத்தரின் பிராந்தியத்துடன் அவருக்கு நெருக்கமான உறவுகளை ஏற்படுத்துவதற்காக, பிற்கால சுயசரிதைகளில் வேண்டும் என்று இடமாற்றம் செய்யப்பட்டார் என்றும் முடிவு செய்கிறார்கள். புத்தகோசர் தனது பணி முடிந்ததும், இறுதியில், அசல் அல்லது மூல கையெழுத்துப் பிரதிகளை சேகரித்து எல்லாவற்றையும் எரித்ததாகக் நம்பப்படுகிறது. Part: 32 / Conclusion / 'Was the Sinhala language unsuitable for its history?' The possibility of many Tamil kings from Dathika to Gajabahu is shown earlier. There are many Tamil kings such as Mutasiva, Siva, Mahasiva, Elara, and many kings after Dathika. There are names of many kings ending with ‘Naga’. They could also be Tamil kings. Another strange aspect is the writing of the Lanka history in a foreign language, Pali. Was the Sinhala language unsuitable for its history? The Dipavamsa is not anti-Tamil unlike the Mahavamsa. What could have happened in between the compilations of the Dipavamsa and the Mahavamsa for this change? It could be the arrival of the great commentator Buddhaghosa! He burnt the originals after translating into Pali, introducing the Mula Bhasha [मूल भाषा {mul bhaSha} = ORIGINAL LANGUAGE] concept. Mahanama must have got the impetus from him. நன்றி Thanks [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] [Kandiah Thillaivinayagalingam, Athiady, Jaffna] பகுதி / Part: 33 தொடரும் / Will follow "அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English / பகுதி Part: 32 https://www.facebook.com/groups/978753388866632/posts/31701596006155634/? "அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English / பகுதி Part: 33 [This detailed Tamil article is based on the unfinished historical book 'History of Sri Lanka' by my late friend, Mr. Kandiah Easwaran, a civil engineer. The English summary below is his own version. / இந்த விரிவான தமிழ் கட்டுரை, எனது மறைந்த நண்பர், பொறியியலாளர் திரு. கந்தையா ஈஸ்வரன் எழுதிய முடிக்கப்படாத "இலங்கை வரலாறு" என்ற புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டது. கீழே உள்ள ஆங்கிலச் சுருக்கம் அவரது சொந்தப் பதிப்பாகும்.] பகுதி: 33 / முடிவுரை / 'மகாநாம தேரர் ஏன் சோழ வெறியர்?' & 'புத்தர் தனது கொள்கையைப் பரப்ப நம்பிக்கையான இடமாக, இலங்கையைத் தேர்ந்து எடுத்தாரா?' இலங்கைக்கு முன்னைய காலத்தில் பாண்டிய அரச நாடு இலகுவான தொடர்புடைய நாடாக இருந்தது. உதாரணமாக, வைகை நதியினூடாக வந்தால், அது மன்னாரை அடைகிறது. மன்னாரில் இருந்து அருவி ஆறு (Malwattu Oya) மூலம் பயணித்தால் அனுராதபுரம் அடையலாம். எனவே பாண்டிய நாட்டுடன் நல்ல நட்பு தொடர்பு இருந்ததிற்கு இதுவே காரணம். இதனால், பாண்டிய நாட்டின் எதிரியான சோழ நாடு அனுராதபுர அரசர்களுக்கும் எதிரியாகவே இருந்தது எனலாம். அதுவே மகாநாம தேரர் சோழருக்கு எதிரான வெறுப்பு மனப்பான்மைக்கு [to be Chola phobic] ஒரு காரணமாகுவும் இருக்கலாம் என நம்புகிறேன். மகாபாரதத்தில் விதுர நீதி என்ற ஒரு பகுதி உள்ளது. அது " நீ எப்பவும் உண்மை சொல்ல வேண்டும், ஆனால் சொல்லும் உண்மை தீங்கு விளைவிக்கும் என்றால், அதை சொல்லாதே, பொய் உதவும் என்றால், பொய்யை உண்மை போல் சொல்லிவிடு" என்கிறது. [There is a verse in Mahabharata.YOU SHOULD ALWAYS TELL THE TRUTH.IF TELLING TRUTH WOULD HARM THE PEOPLE THEN DON’T TELL THAT.IF TELLING A LIE WILL HELP PEOPLE THEN TELL THAT LIE AS A TRUTH.That is from Vidura niti of Mahabharata]. இதைத்தான் மகாவம்சத்தின் ஆசிரியர் தம் இனத்திற்கு என்றும் வரலாறு சாதகமாக இருக்க வேண்டும் என்பதால் மாற்றி சொல்லி இருப்பார் என்றும் எண்ணுகிறேன். மற்றது மகாவம்சத்தில் காணப்படும் தமிழருக்கு எதிரான இனத்துவேசத்திற்கு முக்கிய காரணியாக விளங்கியவர், கி.பி 5 ஆம் நூற்றாண்டில் தமிழகத்திலிருந்து இலங்கைக்கு வந்த பௌத்த ஞானியான, காஞ்சிபுரத்துப் பௌத்த பள்ளியைச் சேர்ந்த புத்தகோசர் [the great commentator Buddhaghosa] ஆவார். 'புத்தர் தனது கொள்கையைப் பரப்ப நம்பிக்கையான இடமாக, இலங்கையைத் தேர்ந்து எடுத்தாரா?' புத்தர் தனது நம்பிக்கைக்காக இலங்கையைத் தயார் செய்ததாக அனைத்து இலங்கை பண்டைய பாளி நூல்களும் கூறுகின்றன. புத்தர் மூன்று முறை இலங்கைக்கு விஜயம் செய்ததாக அந்த நாளாகமம்கள் [chronicles] மேலும் இதற்குச் சான்றாக கதை கூறுகிறது. இருப்பினும், இந்த வருகைகள் முந்தைய பாலி நியதியில் (திரிபிடகம் / Pāli Canon, the Tipitaka) குறிப்பிடப்படவில்லை, மேலும் இந்த நிகழ்வுகளை உறுதிப்படுத்தும் தொல்பொருள் அல்லது உரை ஆதாரங்கள் எதுவும், புத்தர் பிறந்து வாழ்ந்து இறந்த மண்ணில் - இந்தியாவில் - இல்லை இல்லை. புத்தர் இறக்க நேரிட்டபோது, பௌத்தர்கள் சென்று வழிபட வேண்டிய நான்கு இடங்களை புத்தரே அடையாளம் காட்டினார். அந்த நான்கு இடங்கள் லும்பினி, புத்தகயை [புத்த கயா], சாரநாத் மற்றும் குசி நகர் [Lumbini (birthplace of the Buddha), Bodh Gaya (the site where the Buddha attained enlightenment), Sarnath (the location of the Buddha’s first sermon), and Kushinagar (the location where the Buddha attained parinirvana)]. ஆனால், புத்தர் இலங்கையை ஒரு புனிதமான இடமாக என்றும் எங்கும் குறிப்பிடவில்லை. ஆனால் இலங்கைக்கு புத்தர் பறந்து மூன்று தரம் வந்தார் என்று, அதை ஒரு வரலாற்றாக மகாவம்சம் கூறுவது தான் விந்தையாக உள்ளது? புத்தர் இலங்கையை தேர்ந்து எடுத்து, அங்கு பயணம் செய்து இருந்தால், கட்டாயம் அதையே முதலாவதாக குறிப்பிட்டு இருப்பார் என்பதில் எந்த சாதாரண மனிதனுக்கும் ஐயம் இருக்காது, ஆனால் அவரோ அல்லது அவரை சூழ்ந்து இருந்தவர்களோ இலங்கையை அறவே கூறவில்லை என்பது உண்மையாகும்! பின்னர் அசோகரின் காலத்தில், எட்டு புனித புனித தளங்கள் தரிசிக்க மற்ற நான்கு இடங்களும் சேர்க்கப்பட்டன. அந்த நான்கு புனித ஸ்தலங்கள்: சிராவஸ்தி அல்லது சவத்தி [Sravasti or savatthi], சங்கிசா அல்லது சங்காசியா [Sankasia], ராச்கிர் ராஜகஹ, அல்லது ராஜ்கீர் [Rajagaha, also known as Rajgir] மற்றும் வெசாலி [Vaishali] ஆகும். பௌத்தர்கள் வருகை தரும் முக்கிய இடமாக இலங்கையை அசோகர் கருத்தியிருந்தால், அந்த பட்டியலில் இலங்கையையும் சேர்த்திருப்பார். அவரும் மீண்டும் இலங்கையைச் சேர்க்கவில்லை. இதுவும் வரலாற்று உண்மையாகும்! ஒன்று மட்டும் உண்மை, புத்தரும் அசோக மன்னரும் கூட, இலங்கையை அல்லது அனுராதபுரத்தையோ பார்க்க வேண்டிய புனித இடமாக கருதவும் இல்லை, அதை புத்த புனித இடமாக ஏற்கவும் இல்லை. Part: 33 / Conclusion / 'Why Mahanama to be Chola phobic?' & 'Is Buddha prepared Lanka for his faith?' The earliest connection was with the Pandya kingdom, came along the River Vaigai, and arrived at Mannar. From Mannar progressed along the Aruvi Aru (Malwattu Oya) to Anuradhapura. There must have better relationship with Pandya kings. This could be the reason for Mahanama to be Chola phobic. 'Is Buddha prepared Lanka for his faith? All the chronicles say that the Buddha prepared Lanka for his faith. The chronicles assert that the Buddha visited Lanka thrice. When the Buddha was about to die, he identified four places which the Buddhists should visit and venerate. The four places are Lumbini, Buddhagaya, Sarnath and Kusinara. The Buddha did not identify Lanka as one holy place to visit? Later during Asoka’s time, four other places are also added to make eight holy places to visit. Those four holy places are Savatthi, Sankasia, Rajagaha and Vesali. If Asoka considered Lanka an important place for the Buddhists to visit, then he would have included Lanka also in the list. He did not include Lanka. The Buddha and the king Asoka did not consider Lanka or Anuradhapura as a holy place to visit. நன்றி Thanks [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] [Kandiah Thillaivinayagalingam, Athiady, Jaffna] பகுதி / Part: 34 தொடரும் / Will follow "அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English / பகுதி Part: 33 https://www.facebook.com/groups/978753388866632/posts/31796437396671494/?
3 weeks 5 days ago
வியாபாரங்களின் பெறுமதியினை விட களஞ்சியசாலையில் தேங்கி கிடக்கும் அதன் உற்பத்தி மூலப்பொருள்கள் மற்றும் முடிவுப்பொருள்களின் பெறுமதி பல மடங்கு. வியாபாரங்களில் இந்த களஞ்சியசாலையில் தங்கியிருக்கும் பொருள்களை விரய பொருளாக பார்க்கப்படுகின்றது (பண இழப்பு). இது ஒரு பெரும் பிரச்சினையாக வர்த்தகங்களுக்கு எப்போதும் உண்டு, என்னதான் நவீன முறைமைகள், தொழில்னுட்பம் என்பவற்றை பாவித்தாலும் இதனை சரியாக அடையாளம் கண்டு தீர்க்க முடியாது. தற்போது நிகழும் மேற்கின் நடவடிக்கைகள் பல வழிததடங்களில் முட்டுக்கட்டைகள் வியாபாரங்களை மேலும் கடுமையாக பாதிக்கும், உலக பொருளாதார மேலும் மேலும் நெருக்கடியான கட்டத்துக்குள் செல்கிறது. சில நாடுகளுடனான பகையினால் அதன் மேற்கு வழித்தடங்களில் நெருக்கடி (போலந்து, மற்றும் அதன் வழங்கல் பகுதியில் பாதுகாப்பு அச்சுறுத்தல் காப்புறுதி கட்டண அதிகரிப்பு, உறுதியற்ற வழங்கல் வினியோக கால அளவுகள், மற்றும் ஐரோப்பிய நாடுகள், அமெரிக்கா என்பனவற்றின் பொருளாதார தடை வினியோக பாதைகளில் அதிக அழுத்தம்) தற்போதய உலக நாட்டாமைகளின் முறைதவறிய நடவடிக்கைகளால் களஞ்சிய சாலைகளில் மேலும் அதிக பொருள்கள் குவியும். இது அமைதிக்கும் மட்டும் சவாலான காலகட்டம் அல்ல, உலக பொருளாதாரத்திற்கும் மிக சாவாலான காலகட்டம். இதில் வேடிக்கையான விடயம் சில அதிகார வர்கத்தினர் மக்களாலேயே தேர்ந்தெடுக்கப்படுவதில்லை ஆனால் அம்மக்களின் தலைவிதியினை தீர்மானிக்கும் சக்தியாக இருக்கிறார்கள். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சில தலைவர்களும் அதே போலவே செயற்படுகிறார்கள், மக்களுக்கு உண்மைகளை மறைப்பதுனூடாக மதங்கள் போல கேள்வி இடமில்லாமல் ஏமாற்றுகிறார்கள், எங்கோ யாரோ மக்கள் பாதிப்படைகிறார்கள் எமக்கு எதுவும் இல்லை என புரியாமல் மக்களும் இருந்துவிடுகிறார்கள், ஆனால் இறுதியில் குறித்த மக்களும் பாதிப்படைவார்கள், மெதுவாக சூடாகும் தண்ணீர் கொதி நிலையினை அடைவதனை போல.