Aggregator
மட்டக்களப்பு நகரில் 128.9 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சி
மட்டக்களப்பு நகரில் 128.9 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சி
Feb 18, 2026 - 01:55 PM
மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த 3 நாட்களாக பெய்துவரும் கடும் மழை காரணமாக பல இடங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதுடன் மழை தொடர்ந்து பெய்வதற்கதன அறிகுறிகள் காணப்படுதாக தெரிவிக்கப்படுகின்றது.
இலங்கையின் தென்கிழக்கே நிலவிய சுழற்சியானது தாழ்வுப்பகுதியாகி அதே இடத்தில் நீடிப்பதன் காரணமாக தொடர்ச்சியாக மழையினை எதிர்பார்க்கமுடியும் என வானிலை அவதான நிலையம் எதிர்வுகூறியுள்ளது.
இந்த நிலையில் கடந்த 3 நாட்களாக பெய்துவரும் அடைமழை காரணமாக பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.
மட்டக்களப்பு நகரத்தில் தாழ்வான பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கும் அபாய நிலை ஏற்பட்டுள்ளதை காணமுடிகின்றது.
அத்துடன் தொடர்ந்து மழை பெய்துவருவதன் காரணமாக மட்டக்களப்பின் சில வீதிகளும் வெள்ளத்தில் மூழ்கும் நிலைமை காணப்படுகின்றது.
இதேநேரம், தொடர்ந்து பெய்துவரும் கடும் மழை காரணமாக மட்டக்களப்பு மாவட்டத்தில் அறுவடை நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளதுடன் அறுவடைகளை முன்னெடுத்த விவசாயிகள் நெல்லை பாதுகாப்பதில் பெரும் நெருக்கடிகளை எதிர்கொண்டு வருகின்றனர்.
இதேநேரம் பெய்துவரும் மழை காரணமாக மட்டக்களப்பு மாவட்டத்தின் பிரதான குளங்களின் நீர்மட்டம் அதிகரித்துள்ளது.
இதன் காரணமாக பிரதான குளமான உன்னிச்சைகுளத்தின் 3 வான் கதவுகள், 2 அடிகள் திறக்கப்பட்டுள்ளதாக நீர்பாசன திணைக்களம் அறிவித்துள்ளது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் இன்று காலை 8.30 மணி வரையில் கடந்த 24 மணித்தியாலங்களில் மட்டக்களப்பு நகரில் 128.9 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சியும், மைலம்பாவெளியில் 104.5 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சியும், உன்னிச்சைப் பகுதியில் 111 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சியும், நவகிரிப் பகுதியில் 52 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சியும், உறுகாமமம் பகுதியில் 63.9 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சியும், தும்பங்கேணிப் பகுதியில் 70 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சியும், பாசிக்குடா பகுதியில் 80 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சியும், வாகனேரி பகுதியில் 39.8 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சியும், பதிவாகியுள்ளதாக மாவட்ட வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.
-மட்டக்களப்பு நிருபர் கிருஷ்ணகுமார்-
களைத்த மனசு களிப்புற ......!
குட்டிக் கதைகள்.
வட்டிக்காரர்களிடம் சிக்கிய முன்னாள் போராளி : கடனை அடைக்க சிறுநீரகத்தை விற்ற பரிதாபம்!
யாழ்.பல்கலையில் தொடரும் பகிடிவதை ; நேரடியாக களத்தில் இறங்கிய சி.ஐ.டி யினர்
குட்டிக் கதைகள்.
இனித்திடும் இனிய தமிழே....!
சிரிக்கவும் சிந்திக்கவும் .
ட்ரம்பின் அமைதி திட்ட அமைப்பில் இணைந்து கொள்ள போவதில்லை - வத்திக்கான் அறிவிப்பு
குட்டிக் கதைகள்.
யாழ்.பல்கலையில் தொடரும் பகிடிவதை ; நேரடியாக களத்தில் இறங்கிய சி.ஐ.டி யினர்
ட்ரம்பின் அமைதி திட்ட அமைப்பில் இணைந்து கொள்ள போவதில்லை - வத்திக்கான் அறிவிப்பு
ட்ரம்பின் அமைதி திட்ட அமைப்பில் இணைந்து கொள்ள போவதில்லை - வத்திக்கான் அறிவிப்பு
ட்ரம்பின் அமைதி திட்ட அமைப்பில் இணைந்து கொள்ள போவதில்லை - வத்திக்கான் அறிவிப்பு
Published By: Digital Desk 3
18 Feb, 2026 | 11:57 AM
![]()
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் முன்னெடுத்துள்ள 'அமைதி திட்டம்' என்ற அமைப்பில் இணைந்துக்கொள்ள போவதில்லை என வத்திக்கான் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.
சர்வதேச நெருக்கடிகளை ஐக்கிய நாடுகள் சபையே கையாள வேண்டும் என்பதை வலியுறுத்தி இந்த தீர்மானத்தை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
காசா போர் நிறுத்தத்தைக் கண்காணிக்கவும், அதன் மறுசீரமைப்புப் பணிகளை மேற்பார்வையிடவும் ஜனாதிபதி ட்ரம்ப் இந்த 'அமைதி திட்ட அமைப்பை' உருவாக்கியுள்ளார்.
இந்த அமைப்பில் இணைந்துகொள்ளுமாறு அமெரிக்காவைச் சேர்ந்த முதலாவது பாப்பரசரான 14 ஆம் லியோவுக்கு கடந்த ஜனவரி மாதம் அழைப்பு விடுக்கப்பட்டது.
இந்த அமைப்பின் முதலாவது கூட்டம் வரும் வியாழக்கிழமை வொஷிங்டனில் நடைபெறவுள்ளது. இதில் காசா மறுசீரமைப்பிற்காக 05 பில்லியன் டொலர் நிதி திரட்டுவது தொடர்பில் கலந்துரையாடப்பட உள்ளது.
வத்திக்கான் வெளிவிவகார செயலாளர் கர்தினால் பியட்ரோ பரோலின் இது குறித்துத் தெரிவிக்கையில்,
"வத்திக்கான் என்பது பிற நாடுகளைப் போன்ற ஒரு சாதாரண அரசு அல்ல, அதன் தன்மை வேறுபட்டது. சர்வதேச அளவில் நெருக்கடி நிலைகளை ஐக்கிய நாடுகள் சபையே முன்னின்று கையாள வேண்டும் என்பதில் நாங்கள் உறுதியாக உள்ளோம். எனவே, இந்த அமைப்பில் நாங்கள் பங்கேற்க மாட்டோம்."
ட்ரம்ப்பின் இந்த அமைப்பானது ஐக்கிய நாடுகள் சபையின் அதிகாரத்தைக் குறைக்கும் வகையில் அமைந்துள்ளதாகப் பல நாடுகள் கவலை தெரிவித்துள்ளன.
இத்தாலி மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் ஆகியவை இந்த அமைப்பில் உறுப்பினர்களாக இணையாமல், வெறும் 'பார்வையாளர்களாக' மட்டுமே கலந்துகொள்ள தீர்மானித்துள்ளன.
காசா விவகாரம் குறித்துப் பேசும் இந்த அமைப்பில் பாலஸ்தீனப் பிரதிநிதிகள் எவரும் சேர்க்கப்படவில்லை என்பது மனித உரிமை செயற்பாட்டாளர்களால் கடும் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது.
காசாவில் கடந்த அக்டோபர் முதல் நிலவி வரும் போர் நிறுத்தம் மிகவும் பலவீனமாக உள்ளது. இதுவரை நடந்த தாக்குதல்களில் 72,000-க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். அங்கு நிலவும் கடும் பஞ்சம் மற்றும் மனிதாபிமான நெருக்கடி தொடர்பில் பாப்பரசர் லியோ தொடர்ந்து தனது கவலையை வெளிப்படுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
யாழ்.பல்கலையில் தொடரும் பகிடிவதை ; நேரடியாக களத்தில் இறங்கிய சி.ஐ.டி யினர்
யாழ்.பல்கலையில் தொடரும் பகிடிவதை ; நேரடியாக களத்தில் இறங்கிய சி.ஐ.டி யினர்
யாழ்.பல்கலையில் தொடரும் பகிடிவதை ; நேரடியாக களத்தில் இறங்கிய சி.ஐ.டி யினர்
18 Feb, 2026 | 12:25 PM
![]()
யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தில் இடம்பெறுவதாகக் கூறப்படும் பகிடிவதைகள் தொடர்பில், குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தால் நேரடியாக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முகாமைத்துவ மற்றும் வணிக கற்கைகள் பீடத்தில் பகிடிவதைகள் இடம்பெறுகின்றன என்று குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் முறைப்பாடு வழங்கப்பட்டிருந்தது.
இந்த முறைப்பாடுகள் தொடர்பில், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மட்டத்தில் விசாரணைகளை முன்னெடுத்து அறிக்கை தருமாறு பல்கலைக்கழக நிர்வாகத்திடம் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் கோரியிருந்தது.
எனினும், பல்கலைக்கழக நிர்வாகம் பதில் எதையும் வழங்காத நிலையில், குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தால் நேரடி விசாரணை தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
பகிடிவதை எனும் பெயரில், பாலியல் அத்துமீறல்கள், துஸ்பிரயோகங்கள், சீண்டல்கள் என்பவற்றுடன் உடலியல் ரீதியான தாக்குதல்களும் இடம்பெறுவதாக குற்றச்சாட்டுக்கள் முன் வைக்கப்பட்டுள்ளன.
குறித்த பகிடிவதைகள் பல்கலைக்கழகத்திற்கு வெளியே தனியார் வீடுகள், விடுதிகளில் தங்கியுள்ள மூத்த மாணவர்கள் , தமது இடங்களுக்கு அழைத்து பகிடிவதை புரிவதனால், பல்கலைக்கழகத்திற்கு வெளியே நடக்கும் செயல்களுக்கு பல்கலைக்கழகம் பொறுப்பேற்க முடியாது எனவும், பாதிக்கப்பட்டவர்கள் வெளியே தனிப்பட்ட ரீதியில் பொலிஸ் முறைப்பாடோ அல்லது வேறு நடவடிக்கையோ எடுக்க முடியும் என பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு பல்கலைக்கழக நிர்வாகம் கூறி வருவதாகவும் குற்றச்சாட்டுகளை பாதிக்கப்பட்ட மாணவர்கள் முன் வைத்து வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
வடக்கு மாகாண நிர்வாக உத்தியோகத்தர்களுக்கு தனித்துவமான புதிய இடமாற்றக் கொள்கை
வடக்கு மாகாண நிர்வாக உத்தியோகத்தர்களுக்கு தனித்துவமான புதிய இடமாற்றக் கொள்கை
வடக்கு மாகாண நிர்வாக உத்தியோகத்தர்களுக்கு தனித்துவமான புதிய இடமாற்றக் கொள்கை
adminFebruary 17, 2026

வடக்கு மாகாணத்தில் உள்ள நிர்வாக உத்தியோகத்தர்களுக்கென (Management Service Officers) புதிய மற்றும் தனித்துவமான இடமாற்றக் கொள்கை ஒன்றை உருவாக்குவதற்கு வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் பச்சைக்கொடி காட்டியுள்ளார்.
இன்று (பெப்ரவரி 17, 2026, செவ்வாய்க்கிழமை) மாலை யாழ்ப்பாணத்தில் உள்ள ஆளுநர் செயலகத்தில் இடம்பெற்ற விசேட சந்திப்பின் போது இந்த முக்கிய முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அகில இலங்கை நிர்வாக உத்தியோகத்தர்கள் சங்கத்தின் வடபிராந்திய கிளையினருக்கும் ஆளுநருக்கும் இடையிலான இச்சந்திப்பு, மாகாண நிர்வாகக் கட்டமைப்பில் பல முக்கியமான சீர்திருத்தங்களுக்கு வழிவகுத்துள்ளது.
தற்போது முகாமைத்துவ அலுவலர்களுக்கான பொதுவான இடமாற்றக் கொள்கையே நடைமுறையில் உள்ளது. இனிவருங்காலங்களில் அதிசிறப்பு தர (Super Class) முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர்களுக்கெனப் பிரத்தியேகமான கொள்கை ஒன்று உருவாக்கப்படும். ஒவ்வொரு உத்தியோகத்தருக்குமான கடமைகள் மற்றும் பொறுப்புகள் இனி தெளிவாக வரையறுக்கப்படும். சில திணைக்களங்களில் நிர்வாக உத்தியோகத்தர்களுக்குரிய தனிப்பட்ட அலுவலக இட வசதிகள் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகளை உறுதி செய்ய ஆளுநர் உத்தரவிட்டுள்ளார்.உள்ளூராட்சி மன்றங்களின் செயலாளர்களாகப் பணியாற்றும் அதிகாரிகள் தமது விடுமுறை கொடுப்பனவுகளைப் பெற்றுக்கொள்வதில் உள்ள நடைமுறைச் சிக்கல்களைத் தீர்க்க நடவடிக்கை எடுக்கப்படும்.உத்தியோகத்தர்களின் வினைத்திறனை அதிகரிக்க அவர்களுக்கு விசேட பயிற்சிகளை வழங்கவும் ஆளுநர் இணக்கம் தெரிவித்துள்ளார்.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் ஆளுநரின் செயலாளர், பிரதிப் பிரதம செயலாளர் (நிர்வாகம்), மாகாண பொதுச் சேவை ஆணைக்குழுவின் செயலாளர் மற்றும் சங்கத்தின் பிரதிநிதிகள் எனப் பல உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.


வட்டிக்காரர்களிடம் சிக்கிய முன்னாள் போராளி:-கடனை அடைக்க சிறுநீரகத்தை விற்ற பரிதாபம்!
வட்டிக்காரர்களிடம் சிக்கிய முன்னாள் போராளி:-கடனை அடைக்க சிறுநீரகத்தை விற்ற பரிதாபம்!
வட்டிக்காரர்களிடம் சிக்கிய முன்னாள் போராளி:-கடனை அடைக்க சிறுநீரகத்தை விற்ற பரிதாபம்!
மன்னார் மூர் வீதியில் அரங்கேறும் கந்துவட்டி அராஜகம்: அதிகாரிகளின் நடவடிக்கை கோரி கதறும் குடும்பம்.
adminFebruary 18, 2026

யுத்தக் களத்தில் காயப்பட்டு, ஒரு கால் முழுவதும் பாதிக்கப்பட்டு, இன்று வாழ்வாதாரத்திற்காக போராடிக்கொண்டிருக்கும் ஒரு முன்னாள் பெண் போராளி, கந்துவட்டி கொடுமையால் தனது சிறுநீரகத்தை விற்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ள சம்பவம் மன்னாரில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மன்னார், மூர் வீதி பகுதியில் வசிக்கும் இப் பெண்மணி, தனது குடும்ப வறுமையைப் போக்கவும், சிறு தொழில் செய்யவும் ‘சீட்டு’ (Siddu) முறையில் பணம் கட்டியுள்ளார்.
ஆனால், சீட்டு ஆரம்பத்தின் கனிவாக நடந்து கொண்ட பெண் குழுக்கள் மற்றும் வட்டி கும்பல்கள்,காலம் செல்ல செல்ல தங்கள் நடவடிக்கையை தொடங்கியுள்ளனர். அவர் வாங்கிய பணத்திற்கு சட்டவிரோதமான முறையில் வட்டிக்கு மேல் வட்டி (Compound Interest) போட்டு, அவரை மீள முடியாத கடன் சுமைக்குள் தள்ளியுள்ளனர்.
மிரட்டலும் உடல் உறுப்பு விற்பனையும்
ஏழ்மை நிலையில் இருக்கும் இப் பெண், மற்றும் இவரது குடும்பம் வாடகை வீடு ஒன்றில் உணவகங்களுக்கு சிற்றுண்டிகளை தயாரித்து வழங்கி வரும் வருமானத்தில் வாழ்ந்து வருகிறார்.
மணலாற்றுப் போர்க்களத்தில் ஒரு கால் முற்றாக பாதிக்கப்பட்ட நிலையில், யாருடைய உதவியுமின்றி உழைக்க நினைத்த இவருக்கு கந்துவட்டி கும்பல் பெரிய முட்டுக்கட்டையாக மாறியுள்ளது.
தொடர் மிரட்டல்கள், அவமானங்கள் மற்றும் “பணத்தை தராவிட்டால் கொலை செய்து விடுவோம்” என்ற அச்சுறுத்தல்களுக்கு பயந்து, வேறு வழியின்றி கொழும்புக்குச் சென்று தனது ஒரு சிறுநீரகத்தை குறைந்த விலைக்கு விற்று அந்தப் பணத்தை வட்டி பணத்துக்காக வழங்கியுள்ளார்.
தீராத கடன் சுமை
சிறுநீரகத்தை விற்று பண தொகையைக் கொடுத்த பின்னரும், அந்த வட்டி கும்பல் “இன்னும் வட்டி மீதமுள்ளது” எனக் கூறி அவரைத் தொடர்ந்து துன்புறுத்தி வருகின்றது.
உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள இப்பெண்மணி, தற்போது தற்கொலை எண்ணம் தோன்றும் அளவிற்கு விரக்தியில் உள்ளதாகக் கண்ணீர் மல்க தெரிவிக்கிறார்.
சமூகத்தின் குரல்
மன்னார் மூர் வீதியில் இத்தகைய சட்ட விரோத வட்டித் தொழில் பல குழுக்களால் தங்கு தடையின்றி நடத்தப்பட்டு வருகிறது. இப் பெண்ணைப் போல இன்னும் பல ஏழைப் பெண்கள் அவர்களிடம் சிக்கி, வெளியில் சொல்ல முடியாமல் சித்ரவதைகளை அனுபவித்து வருகின்றனர்.
“என்னைப் போல இன்னும் பல பெண்கள் இங்கே பாதிக்கப்பட்டுள்ளார்கள். எங்களைக் காப்பாற்ற யாரும் இல்லையா?” என அந்தப் பெண் எழுப்பும் கேள்வி அதிகாரிகளின் காதுகளுக்கு எட்டுமா?
பாதிக்கப்பட்ட இப் பெண்ணுக்கும், அவரைப் போன்ற மற்றவர்களுக்கும் உரிய பாதுகாப்பை வழங்க வேண்டும் எனவும், இந்த சட்டவிரோத வட்டி கும்பல்கள் மீது உடனடியாக காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.