| Welcome, Guest |
You have to register before you can post on our site.
|
| Forum Statistics |
» Members: 8,982
» Latest member: lucilegr4
» Forum threads: 9,058
» Forum posts: 83,244
Full Statistics
|
| Online Users |
There are currently 292 online users. » 0 Member(s) | 290 Guest(s) Bing, Google
|
| Latest Threads |
±ôÀÊ ÀÈ¢ì¸Ä¡õ
Forum: நகைச்சுவை
Last Post: UsArgum
01-10-2026, 09:07 AM
» Replies: 28
» Views: 10,294
|
Mrs.Sirimao Bandaranayake
Forum: நகைச்சுவை
Last Post: GeraTep
11-14-2025, 10:46 AM
» Replies: 14
» Views: 3,229
|
Farty time
Forum: நகைச்சுவை
Last Post: ㄹㅈㄷㄹㅈ
08-26-2025, 03:48 PM
» Replies: 11
» Views: 5,603
|
கனவே கலைகிறதே
Forum: பொழுதுபோக்கு
Last Post: KULAKADDAN
04-30-2006, 06:37 PM
» Replies: 0
» Views: 6,288
|
Karuna Cadres were captur...
Forum: பிறமொழி ஆக்கங்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:17 PM
» Replies: 4
» Views: 8,621
|
என்ன நடந்தது யாழிற்கு?
Forum: உங்கள் கருத்துக்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:03 PM
» Replies: 42
» Views: 31,048
|
முடியுமானால் முயற்ச்சியுங...
Forum: போட்டிகள்
Last Post: Subiththiran
04-30-2006, 05:00 PM
» Replies: 15
» Views: 14,456
|
**சுடேக்கு** புதிர் விளைய...
Forum: போட்டிகள்
Last Post: kavithaa
04-30-2006, 04:30 PM
» Replies: 63
» Views: 38,471
|
புல்மோட்டையில் தாக்குதல்
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: Sriramanan
04-30-2006, 04:10 PM
» Replies: 2
» Views: 8,022
|
போதனை வேண்டாம்! பு...
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: alika
04-30-2006, 03:13 PM
» Replies: 4
» Views: 6,238
|
|
|
| மனித படியாக்கம் |
|
Posted by: Mathan - 03-30-2004, 01:45 AM - Forum: விஞ்ஞானம் - தொழில்நுட்பம்
- No Replies
|
 |
மனித படியாக்கம்
கடந்த 1996ஆம் ஆண்டு ஜூலையில் ஸ்கோட்லாந்தைச் சேர்ந்த விஞ்ஞானி டாக்டர் ஐயன் வில்முட், உலகின் ஒட்டு மொத்த கவனத்தை தன் பக்கம் திருப்பினார். உயிரனு விஞ்ஞானியான அவர், "டோ லி" எனும் ஒரு செம்மறி ஆட்டுக் குட்டியை படியாக்கம் மூலம் உருவாக்கி,
இப்படியும் நடக்குமா என உலக மக்களை ஆச்சரியத்தில் ஆழ்தினார்.
அவருடைய இந்த கண்டுபிடிப்புக்குப் பின், எத்தனையோ விஞ்ஞானிகள் இந்த தொழில் நுட்பத்தைக் கொண்டு மனித படியாக்கம் செய்ய விருப்பதாகவும், செய்து விட்டதாகவும் தொடர்ந்து அறிக்கை விட்டுக் கொண்டிருந்தனர்.
ஆகக் கடைசியாக அமெரிக்க விஞ்ஞானி ஒருவர் தாம் மனித படியாக்கத்தில் ஈடுபட்டிருப்பதாகவும், மிக விரைவில் படியாக்கம் செய்யப்பட்ட மனிதனை உலகுக்கு அறிமுகப்படுத்த விருப்பதாகவும் தெரிவித்திருக்கிறார்.
படியாக்கம் பற்றி கேள்வி பட்டிருந்தாலும், அது பற்றிய மேலும் தெளிவாக தெரிந்து கொள்ள வேண்டுமா? தொடர்ந்து படியுங்கள்.
<b>படியாக்க வரலாறு</b>
படியாக்கம் என்பது கடந்த 1970களிலேயே தொடங்கி விட்டது. தவலைகளையும் தலைப்பிரட்டைகளையும் அப்போதைய ஆய்வுகளில் பயன்படுத்தி வந்தனர். தாவர படியாக்கம் நல்ல பலனை தந்ததோடு அதன் தேவையின் காரணமாக உலக அளவில் நல்ல வரவேற்பும்
இருந்தது. நம் மலேசிய நாட்டிலும் கூட தாவர படியாக்கம் விரிவாக நடைபெற்று வருகிறது.
ஆனால் மனித படியாக்கம் பற்றி கடந்த 1996 வரை யாருமே யோசித்திருக்க வில்லை. "டோ லி" என்ற செம்மறி ஆடு படியாக்கம் செய்யப்பட்டதுதான் உலகின் முதல் பாலூட்டி வகைப் படியாக்கம் ஆகும். அதனைத் தொடர்ந்தே மனித படியாக்கம் பற்றி உலக விஞ்ஞானிகள்
சிந்திக்கத் தொடங்கினர்.
இதனைத் தொடர்ந்து பல விஞ்ஞானிகளும் மனித படியாக்தில் ஆதரித்தும், எதிர்த்தும் குரல் கொடுக்கத் தொடங்கினர். சிலர் படியாக்க மனிதனை உருவாக்கி விட்டதாகவே கூறியிருந்தாலும் அது பற்றி நம்பத்தகுந்த ஆதாரம் எதுவும் இதுவரையில் இல்லை.
<b>டோலி படியாக்கமும், மனித படியாக்கத்திற்கான அனுகூலமும்</b>
டோலி படியாக்தின் போது, ஒரு செம்மறி ஆட்டின் முழு வளர்ச்சியடைந்த உயிரனுவை (cell) எடுத்து அதிலிருந்து அதன் மரபனு தனியே பிரித்தெடுக்கப்பட்டது. பின்னர் அதே ஆட்டின் கருமுட்டையை எடுத்து அதிலிருக்கும் மரபனுக்கள்(DNA) தனியே பிரித்தெடுக்கப்பட்டன. அடுத்து
வளர்ந்த அனுவிலிருந்து எடுக்கப்பட்ட மரபனுக்கள் கருமுட்டையில் மரபனுவுக்கு பதிலாக உட்செலுத்தப்பட்டது. இறுதியாக அந்த கருமுட்டை ஆட்டின் வயிற்றில் செலுத்தி கரு வளரத் தொடங்கியது.
மேற்கண்ட முறை 277ஆவது தடவையாகத்தான் வெற்றியைத்தந்தது. டோ லி ஒரு ஆரோக்கியமான குட்டியாக ஜூலை 5 1996ல் பிறந்தது. டோலி படியாக்கத்திற்கு பயன்படுத்தப்பட்ட இம்முறை மனித படியாக்கத்திற்கு பொருந்தாது. காரணம் மனித படியாக்கம் என்பது அவ்வளவு சுலபமானது அல்ல. இம்முறையை உபயோகித்தால், பலவீனமான அல்லது முற்றிலும் மாறுபட்ட ஒரு மனிதன் உருவாகக் கூடும் என அறிவியலாளர்கள் அஞ்சினர். ஆரோக்கியமாக பிறந்த டோ லி ஆடு இரண்டே ஆண்டுளில் மாண்டது என்பது குறிப்பிடத்தக்கது.
<b>மனித படியாக்கத்தின் விளைவுகள்</b>
வளர்ச்சி அடைந்த உயிரனுக்கள் இருந்து எடுக்கப்படும் மரபனுக்கள் வளர்ச்சி அடையும் தன்மையை இழந்திருக்க கூடும். குறிப்பாக வளர்ந்த மனிதனின் உயரம், பருமன், உடலமைப்பு போன்ற அம்சங்கள்னொரு குறிப்பிட்ட வயதில் நின்று போவதால், சம்பந்தப்பட்ட மரபனுக்களும்
தங்கள் பணியை நிறுத்தியிருக்கக் கூடும். எனவே அந்த மரபனுக்களை மீண்டும் செயல்பட வைப்பது இயலாதது.
படியாக்க மனிதன் உருவாக்கப்பட்டாலும், படியாக்க மனிதனும், மரபனுவுக்கு சொந்தக்காரனான அசல் மனிதனும் அசல் ஒன்று போல் இருக்க மாட்டார்கள். படியாக்க மனிதன், அசல் மனிதனின் இள வயது நகல் போலத்தான் தோற்றமளிப்பான். ஒட்டிப் பிறந்த இரட்டையருக்கு
கைரேகைகள் வெவ்வேறாக இருப்பது போல் அசல் மற்றும் நகல் மனிதனுக்கும் வெவ்வேறான கைரேகைகளே இருக்கும் சாத்தியம் உண்டு.
<b>மனித படியாக்கத்தால் ஏற்படும் நன்மைகள் பற்றி கூறப்படும் கருத்துக்கள்</b>
மனித படியாக்கம் பல வகை மனித நோய்களை குறிப்பாக பரம்பரை நோய்களைப் பற்றிய ஆய்வுகளை நடத்த உதவியாக இருக்கும் எனச் சொல்லப்படுகிறது. புற்று நோய், வயோதிகத்தன்மை, மரபியல் நோயக்கள் போன்றவற்றின் ஆராய்ச்சிக்கும் இது தேவையானது என ஒரு சாரார் கருதுகின்றனர்.
<b>மனித படியாக்கத்தால் ஏற்படக் கூடும் தீய விளைவுகள்</b>
டோ லி படியாக்கதில் வெற்றி கண்ட வில்முட் இது பற்றி கூறுகையில், மனித படியாக்கம் தவறான பாதைக்கு இட்டு செல்லக் கூடும். படியாக்க குழந்தைகள் இறப்பதற்கான சாத்தியங்கள் அதிகம் உள்ளன. அதே வேளையில் மாறுபட்ட மனிதர்கள் பிறப்பதற்கான வாய்ப்புகளும் அதிகம்
இருக்கின்றன என்கிறார்.
மனித படியாக்கம் சம்பந்தமான ஆய்வுகள் அதிகரித்தால், வளர்ச்சி அடைந்த கருவின் தேவை அதிகரிக்கக் கூடும். இதனால் வளர்ச்சியடைந்த கருவைப் பெற தவறான அணுகுமுறையும் அதிகரிக்கலாம் என ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
படியாக்கம் வெற்றி பெற்றால், படியாக்கம் செய்யப்பட்ட குழந்தை வயதுக்கு மீறிய வளர்ச்சியை கொண்டிருக்கக் கூடுமென ஆய்வாளர்கள் அச்சம் தெரிவிக்கின்றனர். படியாக்கம் செய்யப்பட்ட குழந்தை வளர்ச்சியடைந்த மனிதனின் மரபனுக்களின் சேர்க்கையால் உருவாக்கப்பட்டிருந்தால்,
அக்குழந்தை வளர்ச்சியடைந்த மனிதனைப் போன்று வயதான தோற்றத்தில் இருப்பாதோடு, விரைவில் முதுமையடைந்து, முதுமை சார்ந்த நோயுக்கு ஆளாகும் வாய்ப்பும் உண்டு.
மனித படியாக்கம் என்பது மிக கவனமாக ஆராயப்பட வேண்டிய ஒன்று. மனித நெறிகளுக்கு மாறுபட்ட விளைவுகளை ஏற்படுத்தும் வாயுப்பு கொண்டிருக்கிறது. சில அனுகூலமான விஷயங்கள் அதில் இருந்தாலும், உலகலாவிய நிலையில் அதனை கட்டுபடுத்த வேண்டியது மிக
அவசியமாகிறது. மேலும் தற்போதைய அறிவியல் வளர்ச்சி மனித படியாக்கத்திற்கான போதுமான சாத்தியத்தைக் கொண்டிருக்கவில்லை என்றே சொல்லலாம். சில தவறானவர்களால் தவறான முறையில் உபயோகிக்கப்பட்டுள்ள டைனமைட், அனு சக்தி, உயிரியல் மற்றும் இராசாயன
ஆயுதங்கள் போன்று அறிய அறிவியல் பொக்கிஷங்கள் போன்று படியாக்கமுறையும் ஆகாமல் இருக்க அனைத்து தரப்பினரும் பாடுபாட வேண்டும்.
நன்றி - VM
|
|
|
| வாழைப்பழத்தின் மகிமை |
|
Posted by: Mathan - 03-30-2004, 01:26 AM - Forum: மருத்துவம்
- Replies (3)
|
 |
வாழைப்பழத்தின் மகிமை
நாள் ஒன்றுக்கு ஒரு வாழைப்பழம் பக்கவாதத்தைத் தடுக்கும். நாள் ஒன்றுக்கு ஒரு வாழைப்பழத்தைச் சாப்பிடுவது மூலம் பக்கவாதம் ஏற்படும் ஆபத்தை ஒரு சிலரால் தவிர்க்க முடியும் என்று வாழைப்பழம் பற்றி நடத்தப்பட்ட புதிய ஆய்வு ஒன்று கூறுகிறது. பொட்டாசியச் சத்து நிறைய உள்ள பழம்
வாழை. 65 வயதுக்கு மேற்பட்ட 5.600 பேரிடம் ஹாவாயித் தீவில் நடத்தப்பட்ட ஆய்வில், உடம்பில் குறைந்த அளவு பொட்டாசியம் உள்ளவர்களுக்கு பக்கவாதம் ஏற்படும் ஆபத்து அதிகம் இருப்பதாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அடிக்கடி சிறுநீர் கழிக்க மாத்திரை சாப்பிடுபவர்களுக்கும் பக்கவாதம் ஏற்படும்
ஆபத்து உள்ளது. பொட்டாசியத்தை உடல் ஜீரணிப்பதை அத்தகைய மாத்திரைகள் தடுப்பதாகக் கூறப்படுகிறது.
டையயுரிட்டிக்ஸ் எனும் மாத்திரைகள் முதியவர்களால் உட்கொள்ளப்படுகின்றன. இரத்தக் கொதிப்பைக் கட்டுப்படுத்தவும் பக்கவாதம் ஏற்படும் ஆபத்தைக் குறைக்கவும் அவை முதியவர்களுக்குக் கொடுக்கப்படுகிறது. இதய நோயுள்ளவர்களுக்கும் அந்த மாத்திரை கொடுக்கப்படுகிறது. இதயம், நுரையீரல் மீது ஏற்படும் அழுத்தத்தைக் குறைக்க அவை உதவுகின்றன. டையயுரிட்டிக்ஸ் மாத்திரை சாப்பிடுபவர்களின் இரத்தத்தில் குறைந்த அளவு பொட்டாசியச் சத்து இருந்தால் அவர்களுக்கு பக்கவாதம் ஏற்படும் ஆபத்து அதிகமாக இருக்கும். டையயுரிட்டிக்ஸ்
மாத்திரை சாப்பிடுபவர்களுக்குக் கொஞ்சம் கூடுதலாகப் பொட்டாசியம் கிடைத்தால் அவர்களுக்குப் பெரிதும்
உதவும் என்கிறார் இந்த ஆய்வை நடத்திய ஹொனாலுலு மருத்துவர் டாக்டர் டேபரா கிரீன் கூறுகிறார். வாழைப்பழம் சாப்பிடுங்க என்கிறார் வேறு ஒன்றுமில்லை.
நன்றி - பழனி
|
|
|
| கிறுக்கல் 4 - குற்றமில்லைதான்... |
|
Posted by: Eezhaven - 03-29-2004, 11:05 PM - Forum: கவிதை/பாடல்
- Replies (2)
|
 |
குற்றமில்லைதான்...
மொழி உரைத்தவளை
விழி வாசிக்கும் முன்னரே
வழி தேடிச் சென்ற என் இதயம்
குற்றமில்லைதான்...
வாய் மொழி பேசியவள்
விழி மொழி பேசியது கண்டு
என் மொழி மறந்ததும்
குற்றமில்லைதான்...
நீள் முடி கண்டதும்
நிலை தடுமாறிய என்னுள்ளம்
குற்றமில்லைதான்...
கன்னக் குழியிலும்
காலம் கடத்தலாம் என
கள்ளம் கொண்ட என் காதலும்
குற்றமில்லைதான்...
முகவரி தெரியாதவளை
மூச்சு படு துாரம் கண்டதும்
முத்தமிட உதடு முனைந்ததும்
குற்றமில்லைதான்...
ஒருவரி கேட்டபின்
பலவரிகள் தொலைத்த என் கவிதைகளும்
குற்றமில்லைதான்...
பிரிவோமெனத் தெரிந்தும்
பரிபாசை புரியும்
நம் நேசமும்...
|
|
|
| கிறுக்கல் 3 - நிலைக்குமா மனிதம்! |
|
Posted by: Eezhaven - 03-29-2004, 10:45 PM - Forum: கவிதை/பாடல்
- Replies (1)
|
 |
ஓ..
இளைஞனே வா...
இறந்து போன காலம் பற்றி
இருந்து யோசனை செய்ய
இது காலம் அல்லவே!
இந்தக்கால இளசுகள் என்ன....?
என்ற - அந்தக்கால பழசுகளின்
இழி சொல் இனி உனக்கு வேண்டாமே!
வா...
புதுசாய்ப் பிறப்போம்
பூமிக்கு புதிய வடிவம் கொடுப்போம்
வளைந்து போன
வானவில்லின் முதுகினை நிமிர்த்துவோம்
வானம் அள்ளிப் போடும் மழைத்துளிகளை
ஓர் இடம் சேர்த்து
உலகுக்கே நீர் வழங்குவோம்
என்னடா....?!
இது சாத்தியமா...?!
என்று சாய்ந்து விடாதே
சாத்தியமில்லை என்றிருந்தால்
சந்திரனில் காலடி வைத்திருக்க முடியாது
சாட்டிலைட்டுகள் வந்திருக்காது
நாளுக்கு நாள் போர்கள்
நாம் தொலைத்துப் போகும் நிம்மதி வேர்கள்
சமாதானப் புறாவினைக் கூட
சமைத்துச் சாப்பிடும்
சண்டியர்கள் காலமடா!
ஒ....
இளைஞனே!
உலகை
இப்போது நீ மாற்ற மறந்தால்
நாளை
மனிதம் என்பது
டைனசர் பற்றி நாம் படிப்பது போலாகிவிடும்...
|
|
|
| வணக்கம்... |
|
Posted by: ishwari - 03-29-2004, 03:33 PM - Forum: அறிமுகம்
- Replies (24)
|
 |
அனைவருக்கும் வணக்கம் வந்தனம். சிறிது தாமதமாக வந்துள்ளேன்.
இணையம் இணைக்கின்ற உறவுகளே
இணைகின்றேன் இன்று
|
|
|
| யாழ்ப்பாணத்து மண் வாசனை |
|
Posted by: yarl - 03-29-2004, 01:10 PM - Forum: நூற்றோட்டம்
- Replies (5)
|
 |
* யாழ்ப்பாணத்து மண் வாசனை: ஆசிரியர்: வண்ணை தெய்வம், வெளியீடு: மணிமேகலைப் பிரசுரம், தபால் பெட்டி எண்.1447, தணிகாசலம் சாலை, தி.நகர், சென்னை17. (பக்கம்: 264. விலை: ரூ.100)
யாழ்ப்பாணத்து மண்ணைப் பற்றியும், யாழ் தந்த தமிழ் அறிஞர்கள் பற்றியும் பேசும், தகவல்கள் மலிந்த நன்னுல்!
thinamani.com
|
|
|
| மருத்துவக் குறிப்புகள் |
|
Posted by: sWEEtmICHe - 03-29-2004, 07:53 AM - Forum: மருத்துவம்
- Replies (25)
|
 |
[size=22][b]மருத்துவக் குறிப்புகள்
[size=14]நெஞ்சு சளி
தேங்காய் எண்ணையில் கற்பூரம் சேர்த்து நன்கு சுடவைத்து ஆர வைத்து
நெஞ்சில் தடவ சளி குணமாகும்.
தலைவலி
ஐந்தாறு துளசி இலைகளும் ஒரு சிறு துண்டு சுக்கு, 2 லவங்கம்,
சேர்த்து நன்கு அரைத்து நெற்றியில் பற்றாகப் போட்டால் தலைவலி குணமாகும்.
தொண்டை கரகரப்பு
சுக்கு, பால் மிளகு, திப்பிலி, ஏலரிசி ஆகியவற்றை வறுத்து பொடி செய்து
தேனில் கலந்து சாப்பிட தொண்டை கரகரப்பு குணமாகும்.
தொடர் விக்கல்
நெல்லிக்காய் இடித்து சாறு பிழிந்து, தேன் சேர்த்து சாப்பிட்டால் தொடர் விக்கல் தீரும்.
வாய் நாற்றம்
சட்டியில் படிகாரம் போட்டு காய்ச்சி ஆறவைத்து அதனை ஒரு நாளைக்கு மூன்று
வேளை வாய் கொப்பளித்து வந்தால் வாய் நாற்றம் போகும்.
உதட்டு வெடிப்பு
கரும்பு சக்கையை எடுத்து எரித்து சாம்பலாக்கி, அதனுடன் வெண்ணெய் கலந்து
உதட்டில் தடவி வர உதட்டு வெடிப்பு குணமாகும்.
அஜீரணம்
ஒரு டம்ளர் தண்ணீரில் கருவேப்பிலை, இஞ்சி, சீரகம், மூன்றையும் கொதிக்க
வைத்து ஆறவைத்து வடிகட்டி குடிக்க அஜீரணம் சரியாகும்.
குடல்புண்
மஞ்சளை தணலில் இட்டு சாம்பல் ஆகும் வரை எரிக்க வேண்டும். மஞ்சள்
கரி சாம்பலை தேன் கலந்து சாப்பிட குடல் புண் ஆறும்.
வாயு தொல்லை
வேப்பம் பூவை உலர்த்தி தூளாக வெந்நீரில் உட்கொள்வதினால் வாயுதொல்லை
நீங்கும். ஆறாத வயிற்றுப்புண் நீங்கும்.
வயிற்று வலி
வெந்தயத்தை நெய்யில் வறுத்து பொடி செய்து மோரில் குடிக்க வயிற்று வலி நீங்கும்.
மலச்சிக்கல்
செம்பருத்தி இலைகளை தூள் செய்து, தினமும் இருவேளை சாப்பிட்டு வர மலச்சிக்கல் தீரும்.
சீதபேதி
மலை வாழைப்பழத்தை நல்லெண்ணையில் சேர்த்துச் சாப்பிட சீதபேதி குணமாகும்.
பித்த வெடிப்பு
கண்டங்கத்திரி இலைசாறை ஆலிவ் எண்ணையில் காய்ச்சி பூசி வந்தால் பித்த
வெடிப்பு குணமாகும்.
மூச்சுப்பிடிப்பு
சூடம், சுக்கு, சாம்பிராணி, பெருங்காயம் இவைகளை சம அளவு எடுத்து சேர்த்து வடித்த
கஞ்சியில் கலக்கி மறுபடியும் சூடுபடுத்தி மூச்சுப்பிடிப்பு உள்ள இடத்தில் மூன்று வேளை
தடவினால் குணமாகும்.
சரும நோய்
கமலா ஆரஞ்சு தோலை வெயிலில் காயவைத்து பொடி செய்து தினமும் சோப்புக்கு பதிலாக
உடம்பில் தேய்த்து குளித்து வர சரும நோய் குணமாகும்.
தேமல்
வெள்ளை பூண்டை வெற்றிலை சேர்த்து மசிய அரைத்து தினமும் தோலில் தேய்த்து குளித்து
வர தேமல் குணமாகும்.
மூலம்
கருணைக் கிழங்கை சிறுதுண்டுகளாய் நறுக்கி துவரம் பருப்புடன் சேர்த்து, சாம்பாராக செய்து ச
ாப்பிட்டு வர மூலம் குணமாகும்.
தீப்புண்
வாழைத் தண்டை சுட்டு அதன் சாம்பலை தேங்காய் எண்ணையில் கலந்து தடவி வர
தீப்புண், சீழ்வடிதல் மற்றும் காயங்கள் விரைவில் குணமாகும்.
மூக்கடைப்பு
ஒரு துண்டு சுக்கை தோல் நீக்கி அரை லிட்டர் நீரில் போட்டு சுண்டக் காய்ச்சி, பால்,
சர்க்கரை சேர்த்துக் காலை, மாலை சாப்பிட்டு வர மூக்கடைப்பு விரைவில் நீங்கும்.
வரட்டு இருமல்
எலுமிச்சம் பழசாறு, தேன் கலந்து குடிக்க வரட்டு இருமல் குணமாகும்<!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
|
|
|
| அழகுக் குறிப்புகள் |
|
Posted by: sWEEtmICHe - 03-29-2004, 07:36 AM - Forum: மருத்துவம்
- No Replies
|
 |
[size=22][b]அழகுக் குறிப்புகள்
[size=13]1) தேங்காய் எண்ணெயில் மஞ்சள்தூளை போட்டுக் குழைத்து
உடம்பிற்கு தடவி, பயத்தமாவை தேய்த்துக் குளித்தாள் தோல் பளபளப்பாகவும்,
மிருதுவாகவும் இருக்கும்.
2)ஆரஞ்சு பழத்தை இரண்டாக வெட்டி முகத்தில் தேய்த்து, பத்து நிமிடம் கழித்து
சோப்பு போட்டு கழுவ வேண்டும். தினம் இவ்வாறு செய்து வந்தால் முகம்
பளபளப்பாகவும், இளமையுடனும் இருக்கும்.
3)முகத்தில் உள்ள தேவையற்ற முடிகளை நீக்க அடிக்கடி எலுமிச்சை சாற்றை
தடவ வேண்டும். தினமும் இவ்வாறு செய்வதால் முடி வளர்ச்சி குறைந்து
முகம் அழகு பெறும்.
4)பருமனாக இருப்பவர்கள் எடையை குறைக்க தினமும் காலையில் ஒரு டம்ளர்
வெதுவெதுப்பான வெந்நீரில் ஒரு மூடி எலுமிச்சை பழச்சாற்றை பிழிந்து அதனுடன்
அரை ஸ்பூன் தேன் கலந்து சாப்பிட்டால் எடை குறையும்.
5)நகங்களை வெட்டும் முன் எண்ணெயை தடவிவிட்டு, சிறிது நேரம் கழித்து நகத்தை
வெட்டினால், விரும்பும் வடிவத்திலும், அழகாகவும் வெட்ட இயலும்.
6)கூந்தலில் எண்ணெய் பசை அதிகமாக இருந்தால், கோழி முட்டையில் கொஞ்சம்
சர்க்கரையை கலந்து தலையில் லேசாக தடவிக்கொண்டு பிறகு தலைக்கு ஊற்ற
வேண்டும். இதனால் எண்ணெய் பசை நீங்கி முடி அழகு பெறும்.
7)தேநீரில் வடிகட்டிய பின், மிஞ்சும் தேயிலைத் தூளில் எலுமிச்சை சாறை பிழிந்து,
தலையில் தேய்த்துக் குளித்தால், தலைமுடி பளபளப்பாகும்.
8)வேப்பிலை, புதினா, சிறிது மருதாணி மற்றும் குப்பைமேனி இலைகளை காயவைத்து,
தூளாக்கி வைத்துக் கொள்ளவும். இதில் சிறிது எடுத்து, பாலில் குழைத்து,
முகத்தில் பூசி, 20 நிமிடம் ஊற வைத்து குளித்தால், முகம் வோடிக்குரு வராமல்,
வெளியில் கறுத்துப் போகாமல் இருக்கும்.
9)இளம் சூடான ஒரு லிட்டர் நீரில், இரண்டு ஸ்பூன் உப்பைப் போட்டு,
கண்களை கழுவினால் கண்கள் பிரகாசமாக இருக்கும்.
10)கை, கால் முட்டிகளில் கறுப்பு நிறம் அதிகமாக இருந்தால், தொடர்ந்து அந்த
இடத்தில் எலுமிச்சம்பழ சாற்றை தேய்த்து சோப்பு போட்டு குளிக்க வேண்டும்
நாளடைவில் கறுப்பு நிறம் போய் விடும். தோல் வறண்டும், சுருக்கமும் இருந்தால்
ஆலிவ் ஆயிலைப் பூசி, சிறிது நேரம் ஊற வைத்து, சோப்பு போட்டு குளிக்க வேண்டும்.
11)இரவு படுக்கும் முன், புதினா சாறு இரண்டு தேக்கரண்டி, அரை மூடி எலுமிச்சம்பழ
சாறு ஆகியவற்றுடன் பயிற்றம்பருப்பு மாவை கலந்து முகத்தில் தடவிக் கொண்டு பத்து
நிமிடம் ஊறிய பிறகு ஐஸ் ஒத்தடம் கொடுக்க முகம் சுத்தமாகும். பருவினால் ஏற்பட்ட
தழும்பும் மறையும்.
12)ஆப்பிள் பழத்தை சின்னச் சின்ன துண்டுகளாக வெட்டி முகத்தில் தடவினால் சருமத்தில்
உள்ள எண்ணைப் பசை குறையும்.
13)முகத்தில் உள்ள முடிகளை அகற்ற, முட்டையின் வெள்ளை கரு, சர்க்கரை, சோளமாவு
அனைத்தையும் ஒன்றாகக் கலந்து பசைபோல் ஆனதும் முகத்தில் தடவவும். காய்ந்தவுடன்
மெதுவாக பிய்த்து எடுத்தால் முட்டையுடன் முடியும் எளிதில் வரும்.
14)மோரை முகத்தில் தடவி 15 நிமிடம் கழித்து முகத்தைக் கழுவினால் வறண்ட சருமம்
புதுப் பொலிவடையும்.
15)பழுத்த வாழைப் பழத்தை நன்றாகப் பிசைந்து முகத்தில் தடவி, 20 நிமிடம் கழித்து
கழுவினால், சருமம் மிகவும் மிருதுவாகும்.
16) ஆரஞ்சு பழத்தோலை வெயிலில் காயவைத்து பொடி செய்து பாலுடன் கலந்து
சருமத்தில் தடவி அரைமணி நேரம் கழித்து கழுவி வந்தால், வெயிலில் ஏற்பட்ட
கருமை மறையும்.
17)பால், கடலை மாவு, மஞ்சள், சந்தனம், அனைத்தையும் கலந்து முகத்தில்
தடவி குளித்தால் சருமம் அழகாகவும், பளபளப்பாகவும் மாறும்.
18)தேங்காய்ப் பாலுடன் ஒரு டீஸ்பூன் தேன் கலந்து முகத்தில் ஐந்து நிமிடம் மசாஜ்
செய்தால் சோர்வடைந்து சருமம் புத்துணர்ச்சி பெறும்.
19)தக்காளி பழத்தை இரண்டாக நறுக்கி முகத்தில் தடவினால் சருமத்தில் உள்ள
எண்ணைப் பசை குறையும்.
20)தோல் வறண்டும், சுருக்கமும் இருந்தால் ஆலிவ் ஆயிலைப் பூசி, சிறிது நேரம்
ஊற வைத்து, சோப்பு போட்டு குளிக்க வேண்டும். :roll: :roll:
|
|
|
|