| Welcome, Guest |
You have to register before you can post on our site.
|
| Forum Statistics |
» Members: 8,982
» Latest member: lucilegr4
» Forum threads: 9,058
» Forum posts: 83,244
Full Statistics
|
| Online Users |
There are currently 314 online users. » 0 Member(s) | 311 Guest(s) Applebot, Bing, Google
|
| Latest Threads |
±ôÀÊ ÀÈ¢ì¸Ä¡õ
Forum: நகைச்சுவை
Last Post: UsArgum
01-10-2026, 09:07 AM
» Replies: 28
» Views: 10,294
|
Mrs.Sirimao Bandaranayake
Forum: நகைச்சுவை
Last Post: GeraTep
11-14-2025, 10:46 AM
» Replies: 14
» Views: 3,229
|
Farty time
Forum: நகைச்சுவை
Last Post: ㄹㅈㄷㄹㅈ
08-26-2025, 03:48 PM
» Replies: 11
» Views: 5,603
|
கனவே கலைகிறதே
Forum: பொழுதுபோக்கு
Last Post: KULAKADDAN
04-30-2006, 06:37 PM
» Replies: 0
» Views: 6,288
|
Karuna Cadres were captur...
Forum: பிறமொழி ஆக்கங்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:17 PM
» Replies: 4
» Views: 8,621
|
என்ன நடந்தது யாழிற்கு?
Forum: உங்கள் கருத்துக்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:03 PM
» Replies: 42
» Views: 31,048
|
முடியுமானால் முயற்ச்சியுங...
Forum: போட்டிகள்
Last Post: Subiththiran
04-30-2006, 05:00 PM
» Replies: 15
» Views: 14,456
|
**சுடேக்கு** புதிர் விளைய...
Forum: போட்டிகள்
Last Post: kavithaa
04-30-2006, 04:30 PM
» Replies: 63
» Views: 38,471
|
புல்மோட்டையில் தாக்குதல்
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: Sriramanan
04-30-2006, 04:10 PM
» Replies: 2
» Views: 8,022
|
போதனை வேண்டாம்! பு...
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: alika
04-30-2006, 03:13 PM
» Replies: 4
» Views: 6,238
|
|
|
| தேர்தலின் பின் |
|
Posted by: Eelavan - 04-03-2004, 05:22 PM - Forum: செய்திகள் : தமிழீழம்
- Replies (3)
|
 |
தேர்தலில் தமிழ்க் கூட்டமைப்பினர் இரண்டு பெரும்பான்மை சிங்களக் கட்சிகளுக்கு அடுத்தபடியான வாக்குகளைப் பெற்றுள்ளதும் அதன் மூலம் ஸ்திரமான பாராளுமன்றம் அமைவதற்கு கூட்டமைப்பின் ஆதரவு இன்றியமையாததுமாகிவிட்டது
இந்நிலையில் தமிழ்க் கூட்டமைபின் நடவடிக்கை எவ்வாறு அமையும் அல்லது எவ்வாறு அமையவேண்டும் என எதிர்பார்க்கிறீர்கள்
1) எதாவது ஒரு கட்சியுடன் சேர்ந்து அரசு அமைக்க ஆதரவு கொடுத்தல்
2) ஒரு கட்சியுடனும் சேராமல் ஆனால் வெளியிலிருந்து ஆதரவு வழங்கல்
இவற்றுடன் ஆதரவு வழங்கலின் நிபந்தனைகள் பற்றிய உங்கள் கருத்துகளைத் தாருங்கள்
|
|
|
| Vanakkam |
|
Posted by: Kalai - 04-03-2004, 02:43 PM - Forum: அறிமுகம்
- Replies (7)
|
 |
அன்பார்ந்த உறவுகளே அனைவருக்கும் வணக்கம. என்னையும் உங்களுடைய உடன் பிறவாச் சகோதரனாக நினைத்து எனது கருத்துக்களை பகிர இடம் தருவீர்கள் என நம்புகிறேன.
கலை.
|
|
|
| பி.பி.சி தமிழ்ச்(துரோக)சேவை?!! |
|
Posted by: anpagam - 04-03-2004, 07:28 AM - Forum: புலம்
- Replies (9)
|
 |
<b>பி.பி.சி தமிழ்ச் சேவை மீது தமிழ் மக்கள் விசனம் </b>
(யாழிலிருந்து மணிமாறன் சனிக்கிழமை, 03 ஏப்பிரல் 2004, 11:39 ஈழம்)
தேர்தல் குறித்த விபரங்களையறிவதை விட மக்கள் மத்தியில் இன்று ஒரு செய்தியுூடகம் பற்றிய கவலையே மக்களைப் பெரிதாகப் பாதித்திருந்தது.
பி.பி.சி தமிழ்ச்சேவையின் செய்தியாக்கங்கள் பக்கசார்பானவையாக இருப்பதாகவும், மிகவும் சுதந்திரமான ஊடகம் என்ற பெயரையுடைய பி.பி.சிக்கு களங்கம் விளைவிக்கும் செயல்களில் அதன் தமிழ்ச்சேவை இறங்கியுள்ளதான கருத்துக்களே தமிழ் மக்களிடையேயான பேசுபொருளாக இன்று இருந்தது.
தேர்தல் முடிவுகளை அறிவதை விடவும், பி.பி.சி தமிழ்ச் சேவையின் என்ன நடக்கிறது? என்ற கேள்வியே இன்று பரவலாகக் காணப்பட்டது. குறிப்பாக யாழ் மாவட்டத்தின் முடிவுகளின் படி சுமார் 90 விழுக்காடு வாக்குக்களை தமிழ்த் தேசிய முன்னணி பெற்று, தமிழ் மக்களின் ஏகோபித்த ஆதரவை நிரூபித்துள்ளது.
ஆனால் பி.பி.சியின் தமிழ்ச் சேவையோ கடந்த பாராளுமன்றத்தில் சுமார் 8 பாராளுமன்ற உறுப்பினர்கள் வேட்பாளராக இருக்கும் தமிழ்த் தேசிய முன்னணியைப் புறந்தள்ளி ஆனந்தசங்கரியையும், டக்ளஸ் தேவானந்தாவையும் பேட்டி காண்பதும், முன்னிலைப் படுத்துவதும் மக்களின் விருப்புக்களை மதிக்காத ஒரு செயலாகவும், ஊடக சர்வாதிகாரத்தை புலப்படும் ஒரு செயலாகவும் நோக்கப்படுகின்ற நிலையை குறிப்பாக யாழ் மாவட்டத்தில் காணக்கூடியதாகவுள்ளது.
அதிலும் தனது செய்தியாளரான நிமலராஐனைக் கொலை செய்த வழக்கில் குற்றவாளிக் கூண்டில் நிறுத்தப்பட்டுள்ள ஈ.பி.டி.பி.யின் மிக முக்கிய உறுப்பினரே கரம்பனில் இடம்பெற்ற மாணவி மீதான பாலியல் வல்லுறவின் சந்தேகநபராகவும் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள நிலையில், இது பற்றி மௌனம் சாதித்து வரும் பி.பி.சி தமிழ்ச்சேவை, இதற்கு மாறாக ஈ.பி.டி.பி.யின் டக்ளஸ் தேவானந்தாவை முன்னிலைப்படுத்துவதில் ஈடுபட்டுள்ளது மக்கள் மத்தியில் பலத்த எதிர்ப்பலையைத் தோற்றுவித்துள்ளது.
குறிப்பாக தனக்கான செய்தி வழங்கிய ஒரு செய்தியாளரை காட்டுமிராண்டிதனமாக கொண்றொழித்த ஒரு தரப்பை பி.பி.சி தமிழ்ச்சேவை தூக்கிச் சீராட்டுவது குறித்து தமிழ்ச் சேவையின் மீதான வெறுப்புணர்வையே காணக்கூடியதாகவுள்ளது.
மிகவும் சுதந்திமானதும், நடுநிலையானதுமான ஊடகமான பி.பி.சியின் பெயருக்கு களங்கும் விளைவிக்கும் தமிழ்ச்சேவையின் பாராபட்சமான நிலைப்பாடு குறித்த கருத்துக்களை அதற்கு தெரிவிக்கும் முகமான செயற்பாடுகளை மக்கள் மேற்கொண்டு வருகிறார்கள்.
நீங்களும் பி.பி.சி.யின் நிகழ்ச்சிகளை கேட்பவர்களாக இருந்தால் தமிழ்ச்சேவையின் நிகழ்ச்சிகள் குறித்த உங்கள் கருத்துக்களை நேரடியாக அவர்களிற்கு தெரிவிக்கலாம்.
email : டிடிஉவயஅடை@ஒடறநடி.உழஅ
Telephone : +44 (0)20 -7557-2719
Fax : +44 (0)20-7497-0297
நன்றி: புதினம்.கொம்
இவர்களும் தேவையானவர்களினால் மாற்றப்பட்டுள்ளார்களா.... இது அவர்களது மேலிடத்துக்கு தெரியுமோ.... அல்லது எல்லோரும் சேர்ந்தோ ஆரறிவார் போக போக தெரியவரும் என நினைப்போமாக இவர்களுக்கு நாம் சரியான பாடம் புகட்டத்தான் வேண்டும்... நீங்களும் அந்தவழிகளில் இறங்கவும் நன்றி
|
|
|
| மட்டக்களப்பு நிலைமைகள் !!? |
|
Posted by: anpagam - 04-01-2004, 11:34 PM - Forum: செய்திகள் : தமிழீழம்
- Replies (7)
|
 |
<b>மட்டு நிலைமைகள் தொடர்பாக நான்கு அமைப்புக்கள் கூட்டாக அறிக்கை </b>
(ஐ.பி.சி தமிழ் வெள்ளிக்கிழமை, 02 ஏப்பிரல் 2004, 4:37 ஈழம் )
மட்டக்களப்பு நிலைமைகள் தொடர்பாக அகதிகளுக்கான ஐக்கிய நாடுகள் சபை நிறுவனம், குழந்தைகள் நலனுக்கான ஐக்கிய நாடுகள் சபை நிறுவனம், இடம்பெயர்ந்த மக்களுக்கான ஐக்கிய நாடுகள் சபை நிறுவனம், உலக உணவுத் திட்டம் ஆகிய நான்கு அமைப்புகள் இணைந்து கூட்டறிக்கை ஒன்றினை விடுத்திருக்கின்றன.
இலங்கையின் எந்தப் பிரதேசத்திலும் வாழவும், சொத்துக்களைக் கொண்டிருக்கவும் இலங்கை மக்களுக்கு உரிமையுள்ளது எனத் தெரிவித்திருக்கும் இவ்வறிக்கை, உலக மனித உரிமைப் பிரகடனம் இந்த உரிமைகளை உத்தரவாதப்படுத்துகிறது எனவும் தெரிவித்திருக்கிறது.
மக்களின்; உயிருக்கும் உடமைக்கும் அச்சமூட்டுகின்ற அல்லது பாதுகாப்பற்ற தன்மையை ஏற்படுத்தும் நடவடிக்கையை எவரும் மேற்கொள்ளமலிருக்க வேண்டுமாறு அனைத்துத் தரப்பிரையும் ஐக்கிய நாடுகள் சபையின் நான்கு அமைப்புகளும் கேட்டுக் கொண்டிருக்கின்றன.
ஏற்கனவே இடம் பெயர்ந்த 3 இலட்சத்து 56 ஆயிரம் மக்கள் மீளக் குடியமர்த்தப்படுவதற்கான திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வரும்; சூழ்நிலையில், மட்டக்களப்பில் வாழும் யாழ்ப்பான மக்கள் இடம் பெயருமாறு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டிருப்பது குறித்து இவ்வமைப்புக்கள் வருத்தம் தெரிவித்துள்ளன.
அத்துடன், சகல தரப்பினரும் மக்களின் பாதுகாப்பை உத்தரவாதப்படுத்த வேண்டும் என ஐக்கிய நாடுகள் சபையின் அறிக்கை சம்பந்தப்பட்ட சகலரையும் வலியுறுத்தியுள்ளது.
நன்றி: புதினம்.கொம்
நிலமையை பார்தீர்களா வெளிநாடுவந்து எம்மவருக்கு புத்தி சொல்லவேண்டி உள்ளது யதார்தம் தெரியாத நம்ம துரோகிகளும், எதிரிகளும் நாம என்ன சொன்னாலும் கேக்காங்கள் இப்ப....... <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
|
|
|
| வாசித்து இரசித்த வாசகங்கள்! |
|
Posted by: இளைஞன் - 04-01-2004, 08:44 PM - Forum: தத்துவம் (மெய்யியல்)
- Replies (3)
|
 |
<b>"எதிரியால் தாக்கப்படுவது நல்ல விசயமன்றி தீய விசயமல்ல" (26 மே, 1939) - மாசேதுங்</b>
எங்களைப் பொறுத்தவரையில், ஒரு தனிநபர், ஒரு அரசியல் கட்சி, ஒரு படை, அல்லது ஒரு கல்வி நிலையம் எதிரியால் தாக்கப்படாவிட்டால், அது தீயது. ஏனென்றால் அது எதிரியின் மட்டத்துக்கு நாம் தாழ்ந்து விட்டோம் என்று உண்மையில் அர்த்தமாகும் என நான் கருதுகிறேன். நாம் எதிரியால் தாக்கப்பட்டால் அது சிறந்தது. காரணம், எதிரிக்கும் நமக்கும் இடையில் நாம் ஒரு தெளிவான எல்லைக் கோட்டை வரைந்துள்ளோம் என்பதை அது நிரூபிக்குின்றது. எதிரி நம்மைப் பிசாசு போல தாக்கி, நமக்கும் இடையில் நாம் ஒரு தெளிவான எல்லைக் கோட்டை வரைந்திருக்கிறோம் என்பதை மாத்திரமல்ல, நமது வேலையில் பெரும் சாதனைகளை ஈட்டியுள்ளோம் என்பதையும் அது காட்டுகிறது.
நன்றி
மா சே துங் - மேற்கோள்கள் நூல்
|
|
|
| உலகின் முதல் தர முட்டாள்கள்...! |
|
Posted by: kuruvikal - 04-01-2004, 05:18 PM - Forum: செய்திகள்: உலகம்
- Replies (7)
|
 |
அமெரிக்காவின் "முட்டாள் நம்பர் ஒன்" மைக்கேல் ஜாக்சன்
அமெரிக்காவில் நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பில் நம்பர் ஒன் முட்டாளாக மைக்கேல் ஜாக்சன் தேர்வாகியுள்ளார்.
ஏபரல் 1, முட்டாள் தினத்தையொட்டி உலகெங்கும் முட்டாள்கள் தினம் விதவிதமாக 'கொண்டாடப்படுகிறது'.
இதையொட்டி அமெரிக்காவில் வித்தியாசமான கருத்துக் கணிப்பு நடத்தப்பட்டது. இதில் அமெரிக்காவிலேயே நம்பர் ஒன் முட்டாள் என பிரபல பாப் பாடகர் மைக்கேல் ஜாக்சனை பெரும்பாலனவர்கள் தேர்ந்தெடுத்துள்ளனர். அவருக்கு 77 சதவீத வாக்குகள் கிடைத்தன.
இரண்டாவது முறையாக முட்டாள் நம்பர் ஒன் ஆகியுள்ளார் ஜாக்சன் என்பது குறிப்பிடத்தக்கது.
இரண்டாவது இடத்தைப் பிடித்திருப்பது ஜாக்சனின் தங்கையான ஜேனட் ஜாக்சன். சமீபத்தில் மேடை நிகழ்ச்சியில் இவர் தனது மேலாடையைத் திறந்து காட்டி பரபரப்பூட்டியது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ்சுக்கும் முட்டாள்கள் பட்டியலில் இடம் கிடைத்துள்ளது. 10 வது இடத்தை இவர் தட்டிச் சென்றுள்ளார். <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
---------
thatstamil.com
|
|
|
| ஊரோடும் உறவாடும் இவர்கள் யார்? |
|
Posted by: kuruvikal - 04-01-2004, 11:52 AM - Forum: புலம்
- Replies (22)
|
 |
<b><span style='color:red'>ஊரோடும் உறவாடும் இவர்கள் யார்?
பாதைத்திறப்பு, சமாதானத்தின் வருகை, தடை செய்யப்பட்ட பொருட்களின் பாவனை என தளைகளின் முடிச்சுக்கள் பல விடுபட தாயகத்தின் உள்ளே வருகை என்பது விசாலித்து நிற்கிறது.
இப்போது ஒருவருகை எங்கள் செவிகளுக்குள் நுழைந்து நச்சு விதைகளை விதைக்கத் தொடங்கி விட்டது.
அதுதான் "ஊரோடு உறவாடும்' எனும் வானொலி ஒலிபரப்பு. இதன் வீச்சு இப்போது தாயகத்தின் எல்லையின் விசாலித்து நிற்கிறது.
யார் இவர்கள்? இன்று ஊரோடு உறவாடுபவர்கள்?
நாம் இவர்களை புரிந்துகொள்வதோடு தெரிந்து கொள்வது அவசியம்.
இந்திய இராணுவக்காலத்தில் ஈ.என்.டி.எப் எனவும், த்திரிஸ்டார் எனவும் அழைக்கப்பட்ட தேசிவிரோத கும்பலின் வானொலியே இந்த ஊரோடு உறவாடு வானொலி ஒலிபரப்பு. இன்று எங்கள் மக்களோடும், ஊரோடும் உறவாட முனைபவர்கள்.
பரந்தன்ராஜன் என்று அழைக்கப்பட்ட இந்தத் திரிஸ்டார்கும்பலின் தலைவனின்கீழ் இப்போது லண்டனிலிருந்து இந்த வானொலி ஒலிபரப்பினை மேற்கொண்டு வருகின்றனர்.
எமது மக்களால் பெருமளவு மறக்கப்பட்ட இந்த கும்பல் ரி.வி.சி.என்ற பெயரில் பெரிதும் எமது விடுதலைப் போராட்டத்திற்கு எதிரான கருத்தியலை விதைத்து வந்தனர்.
தற்போது கிழக்கில் ஏற்பட்டிருக்கும் நிலைமையைத் தமக்குக் கிடைத்த அவலாக இவர்கள் பயன்படுத்துகின்றனர்.
இவர்கள் தொடர்பாக தாயக மக்களும், புலம்பெயர்ந்த மக்களும் விழிப்பாக இருப்பது அவசியம். எமது விடுதலைப்போரை அழிப்பதற்கு படையியல் ரீதியாக போரிட்ட அதேசமயம் அதே அளவாக கருத்தியல் ரீதியாக எத்தனையோ படை எடுப்புக்களை மேற்கொண்டதை தமிழீழமக்கள் மறந்து விடமாட்டார்கள்.
லங்காபுவத், இராணுவப்பேச்சாளர், கூட்டுப்படைத் தலைமையகம், மக்கள்குரல், வானம்பாடி, என நீண்ட பட்டியல் உண்டு.
இப்போது இந்த கும்பலிற்கான வரவுகளுக்கு மக்களின் தடைகள் எல்லைகளில் இருப்பதால் வானலைகளின் ஊடே ஊரோடு உறவாட அல்ல ஊரின் உறவைக்கெடுக்க முயற்சித்து வருகின்றனர்.
இத்தகைய ஒலிபரப்புக்கள் தொடர்பாக மக்கள் மிகவும் விழிப்பாக இருப்பது அவசியம்.
ஒரு விடுதலைப் போரின் ஆணிவேரைப் பிடுங்கியெறிய இத்தகைய களைகளை எப்போதும் விடுதலையை விரும்பாத சக்திகள் பயன்படுத்த முனைவது வழமையே.
ஆனால் தாங்கள் சார்ந்த இனத்தின் விடுதலையையே இந்த சக்திகள் அடியோடு அழிக்க துணைபோவது வெட்கக்கேடானது.
[b]கருத்தியில் சுதந்திரம் என்பது எல்லோருக்கும் உண்டு. ஆனால் இந்தக்கருத்தியல் சுதந்திரம் என்ற பெயரில் உண்மைக்கு புறம்பான ஒரு பொய்மையான மாய உலகிற்குள் மக்களைத் தள்ளிவிட முயல்வது மிகப் பெரிய மக்கள் விரோத செயல் என்பதை எவரும் புரிந்து கொள்வர்.</b>
ஆகவே மக்களே இந்த புள்ளுருவிகளின் இந்த ஒலிபரப்புத் தொடர்பாக விழிப்பாக இருப்பது மிக அவசியம்.
ஒரு தெளிவுபெற்ற இனத்தைக்கூட கொஞ்சம் கொஞ்சமாக வலுவிழக்கச் செய்யும் வல்லமை பொருத்தியது இந்தக்கருத்து.
இதில் இந்த கருத்துக்களை மக்கள் மத்தில் கொண்டு செல்லும் பணியில் செயற்படும் ஊடகங்கள் எந்த இலட்சியங்களையும் இலக்குகளையும் வரையறை செய்யாது ஒரு இனத்தைக் கெடுப்பதையே குறியாகக்கொண்டு இயங்கும் இத்தகைய குழுக்களின் கைகளில் சென்றடைந்திருக்கும் நிலையில் மக்கள் விழிப்பாகவே இருக்க வேண்டும்.
இது இந்த இனத்திற்கு அதிக பாதுகாப்பைத்தரும். </span>
வேழினி ஈழநாதம்.
இக்கருத்துக்கு வெளிச்சம் தந்தது சூரியன் டொட் கொம்...!
|
|
|
| Breaking News பற்றி உங்கள் கருத்து |
|
Posted by: Mathan - 04-01-2004, 03:01 AM - Forum: உங்கள் கருத்துக்கள்
- Replies (18)
|
 |
நான் இங்கே செய்திகளை போடுவதில் பலவிதமான கருத்துக்கள் நிலவுகின்றன. எனது நோக்கம் நாம் ஒரு பக்கத்து செய்திகளை மட்டும் பார்க்காமல் அனைத்து பக்க செய்திகளையும் பார்த்து அவற்றை அலசி ஆராய்ந்து ஆரோக்கியமான முறையில் கருத்து பரிமாற்றம் செய்யவேண்டும் என்பதுதான். நாம் எதை ஆதரிப்பதாக இல்லை எதிர்பதாக இருந்தாலும் அவற்றை சரியான முறையில் கருத்தாக முன்வைக்க வேண்டும்.ஆனால் சிலர் இந்த கருத்தை மூடவேண்டும் என்றும் சிலர் வாயை பொத்தி கொண்டு இருக்கவேண்டும் சொல்கின்றார்கள். இதுதவிர மறைமுகமான சில செய்திகளும் தனிப்பட்ட தாக்குதல்களும் நடைபெறுகின்றன.
இவை அனைத்தையும் பற்றி உங்கள் கருத்தை அறிய விரும்புகின்றேன். உங்கள் கருத்தை இங்கே எழுதுங்கள். பகிரங்கமாக எழுத விரும்பாதவர்கள் தனிப்பட்ட செய்தியாகவும் அனுப்பலாம். உங்கள் கருத்துக்களை ஆவலுடன் எதிர்பார்க்கின்றேன். அதுவரை தற்காலிகமாக ஒரு நாளுக்கு கருத்து எழுதுவதையோ செய்தியை பிரசுரிப்பதையோ மனவருத்தத்துடன் நிறுத்துகின்றேன்.
|
|
|
|