| Welcome, Guest |
You have to register before you can post on our site.
|
| Forum Statistics |
» Members: 8,982
» Latest member: lucilegr4
» Forum threads: 9,058
» Forum posts: 83,244
Full Statistics
|
| Online Users |
There are currently 292 online users. » 0 Member(s) | 290 Guest(s) Bing, Google
|
| Latest Threads |
±ôÀÊ ÀÈ¢ì¸Ä¡õ
Forum: நகைச்சுவை
Last Post: UsArgum
01-10-2026, 09:07 AM
» Replies: 28
» Views: 10,294
|
Mrs.Sirimao Bandaranayake
Forum: நகைச்சுவை
Last Post: GeraTep
11-14-2025, 10:46 AM
» Replies: 14
» Views: 3,229
|
Farty time
Forum: நகைச்சுவை
Last Post: ㄹㅈㄷㄹㅈ
08-26-2025, 03:48 PM
» Replies: 11
» Views: 5,603
|
கனவே கலைகிறதே
Forum: பொழுதுபோக்கு
Last Post: KULAKADDAN
04-30-2006, 06:37 PM
» Replies: 0
» Views: 6,288
|
Karuna Cadres were captur...
Forum: பிறமொழி ஆக்கங்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:17 PM
» Replies: 4
» Views: 8,621
|
என்ன நடந்தது யாழிற்கு?
Forum: உங்கள் கருத்துக்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:03 PM
» Replies: 42
» Views: 31,048
|
முடியுமானால் முயற்ச்சியுங...
Forum: போட்டிகள்
Last Post: Subiththiran
04-30-2006, 05:00 PM
» Replies: 15
» Views: 14,456
|
**சுடேக்கு** புதிர் விளைய...
Forum: போட்டிகள்
Last Post: kavithaa
04-30-2006, 04:30 PM
» Replies: 63
» Views: 38,471
|
புல்மோட்டையில் தாக்குதல்
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: Sriramanan
04-30-2006, 04:10 PM
» Replies: 2
» Views: 8,022
|
போதனை வேண்டாம்! பு...
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: alika
04-30-2006, 03:13 PM
» Replies: 4
» Views: 6,238
|
|
|
| Flash News |
|
Posted by: kuruvikal - 04-01-2004, 12:11 AM - Forum: செய்திகள் : தமிழீழம்
- Replies (551)
|
 |
[b]<span style='color:red'>Tamils flee east Sri Lanka
From correspondents in Chenkaladi
April 01, 2004
TAMIL residents began fleeing this eastern Sri Lankan town overnight as hundreds of troops poured in amid arson attacks and fears of a factional war between Tamil Tiger rebels, residents and police said.
A shop owned by an ethnic Tamil from the north of the island was torched overnight following the killing of local politician Rajan Sathyamoorthy on Tuesday, allegedly by Tamil rebels from the north, police said.
"Several shops have been torched here," a local police official said. "Tamils who trace their origins to the island's north have begun fleeing after Mr Sathyamoorthy was killed."
Hundreds of troops poured into the region in a show of force to discourage fighting between the rival rebel factions, officials in the capital said.
Most of the shops in Batticaloa town, just 10kms south, were closed as people feared an eruption of fighting, residents said.
"Our whole community is living in fear," said retired banker from Jaffna, S. Sabanathan, adding his friends had witnessed shops being shut by force and the keys taken away by rebels.
"My family is living in fear. We do not know what will happen (from one moment to the next)."
Leaflets distributed among residents had warned Jaffna Tamils, or those from the northern region of the island, to leave the district of Batticaloa within 24 hours.
The victim of Tuesday's shooting, Sathyamoorthy, a Tamil National Alliance (TNA) election candidate, had been a supporter of breakaway Tamil Tiger leader V. Muralitharan, better known as Karuna, who holds sway in this eastern area. Karuna broke away from the group's main northern leadership earlier this month.
The rebels have vowed they will not resort to bloodshed to sort out their unprecedented split, but police said the first shots had already been fired with Tuesday's slaying and the subsequent arson attacks.
The defence ministry said another shop owned by a Jaffna had been torched Tuesday after the renegade rebels ordered Jaffna Tamils to quit this region within 24 hours.
A spokesman for the renegade commander, V. Muralitharan, denied they were responsible for the forced eviction.
More than 1000 Sri Lankan soldiers patrolled the city in trucks and on motorbikes and policemen checked vehicles entering the tense town. </span>
|
|
|
| இந்தியாவில் கருணா..! |
|
Posted by: vasisutha - 04-01-2004, 12:10 AM - Forum: நகைச்சுவை
- Replies (9)
|
 |
கருணா தற்பொழுது இந்தியாவில் உள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இது பற்றி தெரியவருவதாவது...
நீங்கள் ஏப்ரலில் ஏமாந்து விட்டீர்கள்
|
|
|
| சிங்கள பெளத்த பேரினவாதத்தின் காவலன் கருணா...! |
|
Posted by: kuruvikal - 03-31-2004, 07:45 PM - Forum: செய்திகள் : தமிழீழம்
- Replies (5)
|
 |
[b]<span style='color:red'>சிங்கள இனவாத ஊடகங்கள், கருணாவை சிங்கள இனத்திற்கு விடிவுதந்த ஒருவராகச் சித்தரித்துள்ளன
சிறீலங்காவில், சிங்கள இனம் பல குழுக்களாகச் சிதறுண்டு, தங்களுக்குள் மோதிக்கொண்டிருந்த நிலையிலும், முஸ்லிம் இனமும் தனக்குள் சிதறுண்டிருந்த நிலையிலும், தமிழினம் விடுதலைப் புலிகள் என்ற ஒரு அமைப்பின் கீழ் ஒன்றாக இணைந்திருந்தமை சிங்கள இனத்திற்கு ஒரு சாபக்கேடாக இருந்ததென்றும், கருணா அதற்கு முடிவு கட்டி, தமிழினத்தின் ஒற்றுமையைக் குலைத்ததன் மூலம், சிங்கள இனத்திற்கு விடிவு தந்துள்ளார் என்றும் செய்திகள் வெளியிட்டுள்ளன.
அவை வழங்கியுள்ள மேலதிக தகவல்களில் தெரிவித்திருப்பதாவது:
சந்திரிகா-ரணில் பிளவு, ஜே.வி.பி.-சிங்கள உறுமய பிளவு, ஐ.ம.சு.மு.க்குள் பிரதமர் பதவிக்கான பிளவு, முஸ்லிம் கட்சிகளுக்குள் கடும் பிளவு, மலையகக் கட்சிகளுக்குள் பிளவு, பௌத்த மஹா சபைக்குள் ஆதரவாகவும் எதிராகவும் பிளவு, சிங்கள ஊடகங்களுக்குள் பிளவு, சிங்கள மக்களுக்குள் பிளவு என்று பெரும்பான்மைக்குள் கடுமையான நெருக்கடிகள் இருந்தபோது, தமிழர்கள் ஒன்றிணைந்து ஒரு குடையின் கீழ் நின்றமை, சிறீலங்காவின் பௌத்த சிங்கள இனத்திற்கு பெரும் அச்சுறுத்தலாக அமைந்திருந்தது.
இம்முறை நடைபெறவுள்ள தேர்தலில், விடுதலைப் புலிகள் மட்டுமே பலம் பொருந்தியவர்களாக வெற்றியுடன் காணப்பட்டிருப்பார்கள் என்ற நிலைமை இருந்தபோது, கருணா தன்னை விலக்கிக்கொண்டு, தனி அமைப்பை அறிவித்ததன் மூலம், சிங்கள இனத்திற்கு கருணா என்ற முரளிதரன் ஒரு விடிவெள்ளியாக உருவெடுத்துள்ளார் என்று அந்த ஊடகங்கள் சுட்டிக் காட்டியுள்ளன.
கருணா பிரிந்து நிற்கும் இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்த தற்போது ஆட்சியில் சரியான தலைமை இல்லை என்று கவலை தெரிவித்திருக்கும் சிங்கள ஊடகங்கள், தேர்தலில் வெற்றிபெற்று ஆட்சியமைக்கும் சிங்கள அரசு, கருணாவின் பிளவை சரியாகப் பயன்படுத்தி, சிறுபான்மை இனத்திற்குரிய ஆகக்குறைந்த உரிமைகளை மட்டுமே வழங்கி, இனப்பிரச்சனைக்குத் தீர்வுகாண முயற்சிக்க வேண்டுமென்று விதந்துரைத்துள்ளன.
குறிப்பாக இவ்விடயத்தில், ஜே.வி.பி. மற்றும் சிங்கள உறுமய ஆகியன முக்கிய கவனமெடுத்து, ஐனாதிபதி சந்திரிகாவுடன் கைகோர்த்து, கருணாவின் பிளவை பௌத்த சிங்கள வெற்றிக்கான ஒரு முக்கிய திருப்புமுனையாகப் பயன்படுத்த வேண்டுமென்றும், கருணாவுக்கு ஆதரவாகக் குரல்கொடுக்கும் வெளிநாட்டு உள்நாட்டு ஊடகங்களையும் இதற்கு ஏதுவாகப் பயன்படுத்த முன்வரவேண்டுமென்றும் கோரிக்கையும் விடுத்துள்ளன. </span>
நன்றி புதினம்...!
|
|
|
| வரும் தேர்தல் தொடர்பில் புலிகளின் கருத்து....! |
|
Posted by: kuruvikal - 03-31-2004, 07:00 PM - Forum: செய்திகள் : தமிழீழம்
- No Replies
|
 |
[size=16]<b>விடுதலைப் புலிகளின் அரசியற் துறை தமிழ் மக்களுக்கு விடுத்துள்ள வேண்டுகோளில் தமிழ் தேசிய கூட்டமைப்பை ஆதரிக்கும்படி கோரிக்கை </b>
<img src='http://www.sasnet.lu.se/bilder/eelamflag.gif' border='0' alt='user posted image'>
தமிழ் மக்களின் ஒன்றுபட்ட அபிலாசைகளை வெளிப்படுத்தும் முகமாக, அனைத்துத் தமிழர்களும் ஒன்றிணைந்து தங்களது வாக்குகளை தமிழ் தேசிய கூட்டமைப்பினருக்கு வழங்க வேண்டுமென்று விண்ணப்பிக்கப்பட்டுள்ளது.
அவர்கள் விடுத்துள்ள உத்தியோகபூர்வ வேண்டுகோளின் முழுவடிவம் பின்வருமாறு:
அரசியல் துறை,
தமிழீழ விடுதலைப்புலிகள்,
தமிழீழம்.
29.03.2004
தமிழ் மக்களின் ஒன்றுபட்ட அபிலாசையை வெளிப்படுத்துவோம்
இரு தசாப்தங்களைக் கடந்து பல ஆயிரக்கணக்கான மக்களினதும் போராளிகளினதும் உயரிய அர்ப்பணிப்புகளாலும் வீரம் செறிந்த போராட்டத்தாலும் தமிழ் மக்களின் தேசிய விடுதலைப் போராட்டம் இன்று பெரும் வளர்ச்சியடைந்து திருப்புமுனையானதோர் கட்டத்தை அடைந்திருக்கிறது. நாம் எமது பாரம்பரிய தாயகத்தில் நிம்மதியாகவும் கௌரவமாகவும் சுதந்திர மனிதர்களாக வாழ விரும்பினோம். ஆனால் காலங்காலமாக ஆட்சிக்குவந்த சிறீலங்கா ஆட்சியாளர்களால் எமது சுதந்திரமான கௌரவமான வாழ்வு மறுக்கப்பட்டு அடக்குமுறைக்குள்ளாக்கப்பட்ட போது ஐனநாயக ரீதியில் அகிம்சை வழியில் அதனை எமது மக்கள் எதிர்த்தனர். ஆனால் தமிழ் மக்களின் ஐனநாயக வழிகளிலான போராட்டங்கள் மதிக்கப்படாது ஆயுத பலம் கொண்டு அடக்கப்பட்டன. அன்று நாம் அடக்கி ஒடுக்கப்பட்டபோதெல்லாம் அதனை சமபலத்துடன் துணிந்து எதிர்கொள்வதற்கான உறுதியான தலைமைத்துவமோ போராட்ட சக்தியோ இன்றி நாம் பலவீனமான மக்களினமாக வாழ்ந்தோம். ஐனநாயக ரீதியிலான அகிம்சை வழிப்போராட்டங்கள் அடக்கப்பட்டு எமது வாழ்வுரிமை மறுக்கப்பட்ட போது இளம் தலைமுறை ஆயுதப்போராட்டத்துக்குத் தள்ளப்பட்டது. ஒரு சிறு துளிராக வடிவெடுத்த எமது மக்களின் தேசிய விடுதலைப் போராட்டம் இன்று பெரு விருட்சமாகி பலம்மிக்கதோர் இனமாக எம்மை மாற்றியுள்ளது.
இன்று பேச்சுவார்த்தை மேசைகளில் ஐனநாயக வழிமுறைகள் ஊடான எமது மக்களின் கருத்துகளுக்குச் சிங்கள ஆட்சியாளர்களும் சர்வதேச சமூகமும் மதிப்பளிப்பதன் காரணம் எமது போராட்ட பலமே. போராளிகளினதும் எமது மக்களினதும் குருதியாலும் தசையாலும் கண்ணீராலும் கட்டியெழுப்பப்பட்ட எமது போராட்டம் இன்று உலகின் மனச்சாட்சியைத் தொட்டுவிட்ட ஆற்றல்மிக்கதோர் போராட்டசக்தியாகப் பரிணமித்துள்ளது. இவ்வாறானதோர் வரலாற்றுப் புறநிலையிலேயே இன்று நாம் எமது அபிலாசைகளை ஒன்றுபட்டுநின்று ஐனநாயகரீதியில் வெளிப்படுத்துவதற்கான ஒரு வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இம்முறை ஐனநாயக ரீதியிலான எமது கருத்து வெளிப்பாடானது கடந்தகாலங்களைப் போலன்றி, பெரும் போராட்டசக்தியாலும் உறுதியான தமிழீழத் தேசியத் தலைமைத்துவத்ததாலும் காத்திரத் தன்மையுடையதாக அமைகிறது. இன்று எமது தேசியத் தலைவரின் தலமைத்துவத்தை ஏற்று ஒன்றுபட்ட சக்தியாகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தேர்தலில் போட்டியிடுகிறது. தமிழ் மக்களின் ஏக பிரதிநிதிகள் விடுதலைப்புலிகள் என்பதை ஏற்று தமிழ் தேசியத்தை முன்னெடுக்கும் போராட்ட முன்னெடுப்புக்களுக்கு உந்துசக்தியாகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தோற்றம் பெற்றுள்ளது.
தமிழ் மக்களின் தன்னாட்சியுரிமை, வடக்கு கிழக்கு தமிழ் மக்களின் பாரம்பரிய தாயகம், தமிழ் மக்களின் ஏக பிரதிநிதிகள் தமிழீழ விடுதலைப்புலிகள் ஆகியவற்றை முன்வைத்து ஐனநாயகப் பாதையில் மக்களாணையைப் வெளிப்படுத்துவதனூடாக தமிழ்த் தேசியத்தை முன்னெடுக்கும் தமிழ்க் கட்சிகள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கீழ் ஒன்றுபட்டுநின்று தேர்தலில் போட்டியிடுகின்றன. இவ்வாறானதோர் புறநிலையில் தமிழ் மக்கள் அனைவரும் ஒன்றுபட்டுநின்று தமிழத்; தேசியக் கூட்டமைப்பை ஆதரித்து ஒருமித்த மக்களாணையை வெளிப்படுத்தி, எமது விடுதலைப் போராட்டத்தை வலுப்படுத்தி, ஒன்றுபட்ட சக்தியாக நாம் எமது தேசியத் தலைவரின் கீழ் ஒன்றுபட்டுநின்று சுயநிர்ணய உரிமைகொண்ட கௌரவமான சுதந்திரமான மக்களினமாக வாழ விரும்புவதை இவ்வுலகுக்கு வெளிப்படுத்த வேண்டும்.
தமிழ் மக்கள் அனைவரும் ஒன்றுபட்டுநின்று ஐனநாயக ரீதியல் எமது போராட்டத்தின் நியாயத் தன்மையை அதன் உண்மைத்தன்மையை வெளிக்காட்டுவது என்பது, நாம் பலமான ஒன்றுபட்ட மக்களினமாக ஒரு தலைமைத்துவத்தின் கீழ் அணிதிரண்டு நிற்பதனை முழு உலகுக்கும் தெளிவாக எடுத்துக்காட்டும். எமது மக்களினதும் போராளிகளினதும் உயரிய அர்ப்பணிப்புகளால் வளர்த்தெடுக்கப்பட்ட தமிழ் மக்களின் தேசிய விடுதலைப் போராட்டத்தைப் புறக்கணித்து தமிழ்த் தேசியத்துக்கு எதிரான, சக்திகளுடன் கைகோர்த்துநிற்கும் சுயநல அரசியல் நோக்கங் கொண்டவர்களைத் தமிழ் மக்கள் இத்தேர்தலின் மூலம் புறக்கணித்து, தமிழ் தேசியத்துக்கு எதிரான சக்திகளுக்குச் சரியானதோர் வரலாற்றுப் படிப்பினையைப் புகட்ட வேண்டும்.
இத்தேர்தலில் தமிழ் மக்கள் அனைவரும் ஒன்றுபட்டுநின்று ஒருமித்து தமது மக்களாணையை தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு வழங்கி ஐனநாயக ரீதியில் நாம் எமது அபிலாசைகளைத் தெளிவாக இவ்வுலகுக்கு வெளிப்படுத்த வேண்டும். இதன் மூலம் ஐனநாயக ரீதியிலும் நாம் ஒன்றுபட்ட ஒரு பெரும் போராட்ட சக்தியாக வளர்ச்சியடைந்து நிற்பதனை அனைவருக்கும் தெளிவாக உணர்த்துவோம்.
-புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்-
நன்றி புதினம்...!
|
|
|
| "ஆய்த எழுத்து" sWEEtmICHe |
|
Posted by: sWEEtmICHe - 03-31-2004, 03:53 PM - Forum: சினிமா
- Replies (2)
|
 |
[size=12]
<img src='http://www.geetham.net/photoshow/albums/userpics/15148/normal_miche23~0.jpg' border='0' alt='user posted image'>
<b>"ஆய்த எழுத்து"
எ. ஆர். ரகுமானின் இசையில் வெளிவந்த "ஆய்த எழுத்து" படம
ஒரு உண்மை சொன்னால் - நேசிப்பாயா?</b>
நெஞ்சம் எல்லாம் -காதல்
தேகம் எல்லாம் - காமம்
உண்மை சொன்னால் - என்னை
நேசிப்பாயா?
காதல் கொஞ்சம் - கம்மி
காமம் கொஞ்சம் - துக்கல்
மஞ்சத்தின் மேல் - என்னை
மன்னிப்பாயா?
நேசிப்பாயா? நேசிப்பாயா? நேசிப்பாயா? நேசிப்பாயா?
உண்மை சொன்னால் நேசிப்பாயா?
மஞ்சத்தின் மேல் மன்னிப்பாயா?
உண்மை சொன்னால் நேசிப்பாயா?
மஞ்சத்தின் மேல் மன்னிப்பாயா?
உண்மை சொன்னால் நேசிப்பாயா?
மஞ்சத்தின் மேல் மன்னிப்பாயா?
பெண்கள் மீது மையல் உண்டு - ஆனால்
நான் பித்தம் கொண்டது உன்னில் மட்டும்
நீ முத்த பார்வை பார்க்கும் போது
என் முதுகு தண்டில் மின்னல் வெட்டும்
நீ தானே....... என் மழை மேகம் எனக்கு
என் கொர்மொன் நதிகளை மெல்ல பெருக்கு
ஒரு சாதல்.......... இனி நமக்கேதுக்கு
யார் கேட்க நமக்கு நாமே வாழ்வதற்கு
உண்மை சொன்னால் நேசிப்பாயா?
மஞ்சத்தின் மேல் மன்னிப்பாயா?
உண்மை சொன்னால் நேசிப்பாயா?
மஞ்சத்தின் மேல் மன்னிப்பாயா?
நெஞ்சம் எல்லாம் -காதல்
தேகம் எல்லாம் - காமம்
உண்மை சொன்னால் - என்னை
நேசிப்பாயா?
காதல் கொஞ்சம் - கம்மி
காமம் கொஞ்சம் - துக்கல்
மஞ்சத்தின் மேல் -
மன்னிப்பாயா?
காதல் என்னை வருடும் போதும் - உன்
காமம் என்னை திருடும் போதும்
என் மனசொல்லாம் மார்கழிதான்
என் கனவெல்லாம் கார்த்திகைதான்
என் வானம் என் வசத்தில் உண்டு
என் பூமி என் வசத்தில் இல்லை
உன் குறைகள் நான் அற்யவில்லை
அறிந்தால் சூரியனில் சுத்தமில்லை.
உண்மை சொன்னால் நேசிப்பாயா?
மஞ்சத்தின் மேல் மன்னிப்பாயா?
நெஞ்சம் எல்லாம் -காதல்
தேகம் எல்லாம் - காமம்
உண்மை சொன்னால் - என்னை
நேசிப்பாயா?
காதல் கொஞ்சம் - கம்மி
காமம் கொஞ்சம் - துக்கல்
மஞ்சதிதின் மேல் -
மன்னிப்பாயா?
உண்மை சொன்னால் நேசிப்பாயா?
மஞ்சத்தின் மேல் மன்னிப்பாயா?
என் மனசொல்லாம் மார்கழிதான்
என் இரவெல்லாம் கார்த்திகைதான்
உண்மை சொன்னால் நேசிப்பாயா?
மஞ்சத்தின் மேல் மன்னிப்பாயா?
என் மனசொல்லாம் மார்கழிதான்
என் இரவெல்லாம் கார்த்திகைதான்
உண்மை சொன்னால் நேசிப்பாயா?
மஞ்சத்தின் மேல் மன்னிப்பாயா?
என் மனசொல்லாம் மார்கழிதான்
என் இரவெல்லாம் கார்த்திகைதான்
உண்மை சொன்னால் நேசிப்பாயா?
மஞ்சத்தின் மேல் மன்னிப்பாயா?
என் மனசொல்லாம் மார்கழிதான்
என் இரவெல்லாம் கார்த்திகைதான்
உண்மை சொன்னால் நேசிப்பாயா?
மஞ்சத்தின் மேல் மன்னிப்பாயா?
என் மனசொல்லாம் மார்கழிதான்
என் இரவெல்லாம் கார்த்திகைதான்
உண்மை சொன்னால் நேசிப்பாயா?
மஞ்சத்தின் மேல் மன்னிப்பாயா?
என் மனசொல்லாம் மார்கழிதான்
என் இரவெல்லாம் கார்த்திகைதான்
என் மனசொல்லாம் மார்கழிதான்
என் இரவெல்லாம் கார்த்திகைதான்
|
|
|
| அம்மானிற்கு ஓர் அன்பு மடல் ! |
|
Posted by: Paranee - 03-31-2004, 06:59 AM - Forum: கவிதை/பாடல்
- Replies (1)
|
 |
கருணா !
உன் தேகச்சூட்டிற்கு தீக்கிரையாவது
எம் தேசம் கண்ட கனவா ?
சொரிந்த செங்குருதி உன் கண்ணில்
செங்கம்பளமாய் தோன்றியதோ !
மண் மீட்பிற்காய் போராடி இன்று
மண்ணே வெறுக்க ஏன் குனிகின்றாய்
அடிமை விலங்கொடிக்க
ஆர்ப்பரித்தெழுந்த அலைகளையெல்லாம்
அடக்குமுறைக்குள் ஏன் அகப்படுத்தினாய்
சுடர் விட்டெரிந்த சூரியப்புதல்வர்களை
சூனியத்தால் ஏன் வசம் செய்தாய்
ஈழத்தாயின் சோகம் களைய வந்தவன் நீ
ஈன்ற தாயையே எட்டி உதைத்து உன்
ஈனத்தனத்தை அரங்கேற்றுகின்றாய்– உன்னை
தமிழன் என்று சொல்ல தடம்புரள மறுக்கின்றது நா
ஆண்டாண்டு காலமாய் அடிமைகளாய் வாழ்ந்தும்
காட்டிக்கொடுத்து கரமறுத்தும் வாழ்ந்த கூட்டம்
இன்றும் உன்னுருவில் எம்முள்ளே
புல்லுருவிகள் நீங்கள்
முளையிலேயே முறையாக களையவேண்டும்
ஆண்டுகள் இருபத்தைந்தாய்
அடிமை விலங்கறுக்க தன்னை மறந்து
தமிழினத்திற்காய் போராடும் அண்ணன் முன்னே
நேற்று பெய்த மழைக்கு முளைத்த காளான் நீ
பிரதேசவாதம் பேசி உன்
பேடைத்தனைத்தை மறைக்க முயல்கின்றாய்
தப்புச்செய்துவிட்டாய் அம்மானே – நீ
தப்புமேலே தப்புச்செய்கின்றாய்
பாலெல்லம் விசம் கலக்க முனைகின்றாய்
நிறுத்திவிடு உன் பிரதேசவாதத்தை
செம்மறியாட்டுக்கூட்டமல்ல தமிழினம்
மீன்பாடும் தேன்நாட்டை உன்
தனிப்போராட்டாத்தால் குருதியுறையவைக்காதே
தேசத்தின் கொந்தளிப்பில் பொசுங்கி
தேகம் இழந்து வீடிழந்து உறவிழந்து
புகலிடம் வந்து தாய்மண்ணின் நினைவில் வாழ்ந்து
உழைக்கின்ற ஒன்றிரண்டில் பாகம் பிரித்து
மண்ணிற்காய் போராடும் மைந்தர்களிற்கு வழங்கி
ஓர் நாள் மலரும் ஈழத்திற்காய்
சுதந்திர காற்றை சுவாசிக்க
புலமெங்கும் புழுவாய் நெளியும் நாமெல்லாம்
உன் ஆடம்பர வாழ்விற்காகவா அனுப்பிக்கொண்டிருக்கின்றோம்
எம்மினத்தின் விடிவிற்காய் போராடி
எமக்காய் விடிவுகள் காட்டியவன் நீ - இன்று
ஏன் இந்த விசமத்தனம்
அன்னிய சக்திகளின் அழித்தொழிப்பிற்கு
நீயும் இரையானாயோ !
வரலாற்றில் உன் பெயர் கறைபடிந்ததாய்
வெற்றி கண்ட மண்ணெங்கும் உன் நாமம் சபிக்க
விதையான மாவீரர் தம் விதியை எண்ணி நோக
நீ மட்டும் எப்படி வாழ்வாய் ! - வா
வந்து சரணாகி உன்னை சாந்தமாக்கிவிடு !
|
|
|
| இக்கட்டிலும் உதவி நிற்போம்...தமிழீழம் எல்லைகள் கடந்தது...! |
|
Posted by: kuruvikal - 03-31-2004, 12:15 AM - Forum: செய்திகள் : தமிழீழம்
- Replies (3)
|
 |
<span style='color:red'>செய்தி....
கருணாவின் குழுவைச் சேர்ந்தவர்கள் யாழ் மாவட்டத்தைச் சேர்ந்தவர்களை இலங்கை நேரப்படி செவ்வாய் இரவு 12 மணிக்கு முதல் மட்டக்களப்பை விட்டு வெளியேறுமாறு அறிவித்துள்ளனர்
[size=16]ஆட்டம் ஓயும் நேரம்...துள்ளல் கூடித்தான் இருக்கும்....! எந்தச் சக்தியாலும் தமிழீழ மக்களை தமிழீழ மண்ணில் இருந்து விரட்ட முடியாது என்பதை வரலாறு கற்றுக் கொடுக்கும்....! தமிழீழத்துள் எல்லைகள் இல்லை....எனவே மக்கள் எவரும் சொந்த தேசத்தை விட்டுச் செல்வதாக உணர வேண்டாம்....!
எல்லைகள் காண்போருக்காக......
தென் தமிழீழ மக்களை இக்கட்டில் இருந்து விடுவிக்க வட தமிழீழ மக்கள் அனுபவிக்கும் இன்னல் ஒன்றும் பெரிதல்ல.. சொந்தச் சகோதரனின் இயலாமை நீங்க எம்மால் ஆனதை நிதானத்துடன் செய்வதே...நாம் இந்த இக்கட்டான தருணத்தில் அவர்களுக்குச் செய்யும் பிரதிபலனாகும்... அதை நாம் முழு மனதுடன் மகிழ்வுடன் செய்வோம்...!
1990 இல் சிங்களம் தெந்தமிழீழ மக்களை விரட்டிய போது வரும் படகுகளுக்காய் வட தமிழீழத்தில் விடிய விடியக் காத்திருந்து உதவி செய்தோம்...ஏன் நாம் தமிழீழத்தவர் என்பதால்...அந்த நிலை என்றும் காத்து நாம் எல்லைகள் கடந்த தமிழீழ தேசத்தவர் என்பதை துரோகிகளுக்கு காட்டி நிற்போம்....! எதிரியும் எம் தமிழீழ தேசியத்தை,தேசத்தை கூறு போட கனவு காணும் அனைத்துச் சக்திகளும் தோல்வியால் தலை குனிவது விரைந்து நடக்க நாம் பொறுமையுடனும் மதிநுட்பத்துடனும் நடந்து உலக வரலாற்றில் ஒரு புது அத்தியாயம் எழுதி வைப்போம்.....!
மனங்களால் இலட்சியத்தால் ஒன்றுபட்ட இலட்சிய மனிதர்களை ஆண்டவன் வந்தாலும் பிரிக்க முடியாது....மரணம் கூட அசைக்க முடியாது....!</span>
[scroll:b58754f984][size=18][b]தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்.
|
|
|
| ஜீ சி ஈ சாதாரண தரம் 2003 பரீட்சை முடிவுகள்...யாழ் மாவட்டம். |
|
Posted by: kuruvikal - 03-30-2004, 12:53 PM - Forum: தமிழ் /தமிழர்
- Replies (7)
|
 |
மிகச் சமீபத்தில் வெளியான ஜீ சி ஈ சாதாரணதர பரீட்சை முடிவுகளின் பிரகாரம் யாழ்ப்பாணம் வேம்படி மகளிர் கல்லூரி(யாழ்ப்பாணம் வேம்படி மகளிர் உயர்தர பாடசாலை) 13 - 10A's உடனும் 24- 9A's உடனும் முன்னணி வகிக்கிறது....!
யாழ் இந்துக் கல்லூரி இவ்வருடம் பின்னடைந்து விட்டது...அதன் பெறுபேற்று விபரங்கள் வருமாறு....!
Jaffna Hindu College
O/L 2003 Results Summary
10A-03
09A-18
08A-30
07A-17
06A-12
05A-15
நன்றி....யாழ் இந்துக்கல்லூரி இணையத்தளம்...!
|
|
|
| ஒரு விடியலின் முகவரியும் நானும்.... |
|
Posted by: sharish - 03-30-2004, 09:46 AM - Forum: கவிதை/பாடல்
- Replies (4)
|
 |
<b><span style='font-size:25pt;line-height:100%'>ஒரு விடியலின் முகவரியும் நானும்......</b></span>
எனது இரண்டாவது கவிதைத்தொகுப்பான""விடியலின் முகவரி""
என்ற கவிதை நூல் கடந்த சனிக்கிழமை 13.03.2004 அன்று பாரீசில்
பிரஞ்சு பல்கலைக்கழக தமிழ் மாணவர்களால் வெளியிட்டு வைக்கப்பட்டது.
450 இற்கு மேற்றட்ட பார்வையாளர்கள் கலந்துகொண்டு சிறப்பித்த இந்த விழாவில் பல எழுத்தாளர்கள் கவிஞர்கள் இலக்கிய ஆர்வலர்கள் கலந்துகொண்டு
இன் நூலை வெளியிட்டுவைத்து சிறப்பித்தார்கள்.
இந்த "விடியலின்முகவரி" என்னும் நு}ல் பற்றிய சில தகவல்களை உங்களுடன் பகிர்ந்து கொள்கின்றேன்.
.................................................................................................
பதிப்பு விபரம்: முதல் பதிப்பு பங்குனி 2004
நூல் உரிமை: பிரான்ஸ் பல்கலைக்கழக தமிழ் மாணவர்கள்
விலை: 15 யுரோக்கள்
அட்டைப்பட வடிவமைப்பு: ஈழமயுூரன்(யேர்மனி)
தொகுப்பாளர்: ரவி மாஸ்ரர்(யேர்மனி)
வெளியீடு: பிரான்ஸ் பல்கலைக்கழக தமிழ் மாணவர் சங்கம்
நு}லின் அளவு: 148 x 210 மி.மீ
அச்சு எழுத்து அளவு: 14 புள்ளிகள்
பக்கங்கள்: 275
அச்சிட்டோர்: ராஜி பதிப்பகம் (யேர்மனி)
.......................................................................................................................
<b>முகவரிக்கு ஒரு முன்னுரை.....</b>
கவிதை என்பது ஒரு மொழியின் வளர்சியை மிகவும் வெகுவாக ஊக்குவிப்பதன்பாலும்
எழில்பொருந்திய தற்கால நிலையில் பண்டைய மொழிகளில் ஒன்றாகவும்
ஏனய கலைச்செல்வங்களையும், நற்காவியங்களையும் நன்நெறிகளையும்
தன் வளத்தால் பெயர்த்து தமிழர்களின் நாகரீக மேம்பாட்டிற்கும் அறிவியல்
வளர்சிக்கும் மெருகுசேர்பதோடு மட்டுமல்லாமல் ஏனய நாட்டவருடன் தன்
சிறப்பியல்புகளைப் பரிமாறிக்கொள்ள தமிழ்மொழி செறிவும் வளமும் கொண்டிருந்த
போதிலும் உலகியல் நவீனங்களும் அறிவியலும் வளரும்காலத்தில் தமிழ்த்தாய்
சற்றே கண்ணயர்ந்து விட்டதன் காரணத்தால் தமிழ்மொழியினுள் வேற்றுமொழிசார்
சொற்களின் ஊடுருவலும் தற்காலத்துறைகளின் சொற்தொடற்குறைவாலும் தமிழ்மொழி
தனித்துவம்இழந்து வருவதோடு பிற மொழிகளுடன் கடன்பெறும்பொருட்டே
நிறைவுபெறுகிறது.
தொடர்ந்தும் தமிழரும் விடுதலையும்கூட மக்கள் பலரிடத்து பணரீதியான பரிமாற்றங்களுடன்
நிறைவற்றதாய் நின்று போகின்றது. இதற்கு அடிப்படையாக புலம்பெயர் நாடுகளில் பிறந்த
குழந்தைகள் சிறிய வயதில் வந்த பிள்ளைகள் போராட்டத்தின் ஆரம்பகாலத்தில் வந்த
பெற்றோர்கள் பெரியோர்களின் அறியாமையும் புலம்பெயர் சமுதாயத்தில் உள்ள சில
அனாகரீகமோகங்களும் காரணமாக அமைகிறது.
மேற்சுட்டிய விடையங்களுக்கு நாம் தீர்வுகாண தமிழர்களாலும் தமிழ்த்தாயினாலும்
ஈன்றெடுக்கப்பட்ட உணர்வாளர்கள் பலர். என்றாலும் எம் செல்வம் த.சரீஷ் அவர்கள்
தமிழின் பொலிவும் இறைமையும் கொண்டு தமிழர்களுக்கும் தமிழ்மொழிக்கும்
ஏற்பட்டுள்ள இன்னல்களைப்போக்க புயல்வேகத்துடனும் தெளிவுகொடுக்கத்
தென்றல்போலும் பயணித்துள்ளார்.
ஏனெனில் இவர் கவிதைகள் இலக்கண வடுவறுத்தும் இலக்கிய நயம் படைத்தும்
காணப்படுவதன் பொருட்டு தமிழ்மொழியில் தமிழர்களுக்கு துடிப்பை ஏற்படுத்துவதோடு
பொருள்புரியும் வகையில் இயற்றப்பட்டதால் தமிழ்மொழியின் அறியாமையைப்போக்க
வழிகோலும் என்பதில் ஜயமில்லை.
ஒற்றுமை,ஒருமைப்பாடு நாம் அனைவரும் ஒருதாய்பிள்ளைகள் என்ற நிலையில் இவரது
எழுத்துக்கள் தமிழர்களை விழிக்கச்செய்வதோடு ஈழவேண்டுதல் தொடர்பாக சில
மக்களிடத்தில் காணப்படுகின்ற ஈழத்துநிலைப்பாட்டின் அறியாமையைப்போக்க இவரது
படைப்புக்கள் படம்போட்டுக்காட்டி எம்மவரிடத்தே ஒருமைப்பாட்டை உருவாக்கி
பணரீதியான பங்களிப்போடு நிற்பவரைக்கூட உளரீதியாக பங்களிப்புவரை அழைத்துச்சென்றிருக்கிறது.
இன்னமுமாக இவரது கவிகள் அநீதிகளை எதிர்த்துப்போராடவும் நன்மைத்தனங்களை வாழ்த்தும்
பண்பும் கொண்டவை அத்தோடு இன்னும் பல சிறப்புகள் கொண்டவை என்பது ""வெள்ளிடைமலை"".
இப்பேற்றை ஈன்றெடுத்த பெற்றோர்கள் என்னதவம் செய்தனரோ என்று கேட்க்க
பிள்ளைகள்வாழவேண்டும் என்பதுதான் தமிழ்மறை ஓதிய வள்ளுவனின் வாக்காக இருந்தபோதிலும்
இவன் நிலை இதற்கு மேலாக உயர்ந்துள்ளது ஏனெனில் இக்கவிஞனை ஈன்றெடுத்த
தமிழ் அன்னை என்னதவம் செய்தாளோ என்று கேட்கும் நிலையாகிவிட்டது.
ஆகவே இந்தக் கவிக்குழந்தையை எம் சகதோழன் என்பதில் பேரானந்தம் எய்திநின்று
உளமார வாழ்த்துகின்றது நமது சங்கம்.
பிரான்ஸ் பல்கலைக்கழக தமிழ் மாணவர் சங்கம்
02. 03. 2004
பிரான்ஸ்
..................................................................................
<b>வண்ண வரிகள்....</b>
த.சரீஷ் என்ற இந்தக் காண்டீபத்தில் இருந்து இப்பொழுது இன்னொரு அஸ்த்திரம் புறப்பட்டிருக்கின்றது.
தனது முதலாவது கவிதைத்தொகுதியான "தென்றல் வரும் தெரு" என்னும்
கவிதைத்தொகுதியின் மூலமாக எனது புருவங்களை உயர வைத்தவவர் இந்த இளம் கவிஞர்.
மரங்களிலேயே எளிதில் அடையாளம் காணக்கூடியது வாழைமரம் மட்டுமே! நீண்ட இலைகள்,
பளபளப்பான உடல், தனித்துவமான பூ, தான் மரணிக்கும் முன்னர் தனக்கென ஒரு
பரம்பரையை உருவாக்கிவிட்டுச் செல்லும் தாய்மை, இப்படி வித்தியாசமான அடையாளங்களைக்
கொண்டது வாழைமரம்.
து}ரத்துப்பார்வைக்கு இது தென்னையா? ஈச்சையா? என்றோ! இது புளியா? அகத்தியா, என்றோ
சில மரங்கள் குறித்து எமக்கு சங்தேகங்கள் வரலாம்! ஆனால் வாழைமரம் குறித்தது சந்தேகம்
வருவதில்லை. அதேபோலத்தான் தம்பி த.சரீஷ் அவர்களுடைய கவிதைகளும் தனித்துவமானவை.
பெண்ணையும் காதலையும் மட்டுமே கவிதைகளாக எழுதி வருபவர்களுக்கு மத்தியில்
தான் பிறந்த மண்ணையும் மண்ணின் மைந்தர்களையும் தனது கவிதைகளில் எழுதிவரும்
தம்பி த.சரீஷ் வாழைமரம்போல வித்தியாசமாக தனித்து நிற்கின்றார்.
கவிஞர் என்பவன் தனது படைப்புக்கள் மூலமாக சமூகத்தின் உணர்வுகளையும்
அவலங்களையும் மட்டுமல்ல தனது தேசத்தின் வாசங்களையும்கூட வரப்போகும் நமது அடுத்த
சந்ததிக்காய் இன்றே பதிவு செய்து வைக்கும் காலச்சிற்பி.
இந்தச்சிற்பி சமூகத்திற்கு விட்டுச்செல்வது வெறும் எழுத்துக்கள் மட்டுமல்ல! இருளுக்குள்
தீக்குச்சியின் வெளிச்சத்தைப்போல வெற்றிகளையும், தோல்விகளையும், சாதனைகளையும்
வேதனைகளையும், பதிவு செய்து வைக்கும் காலச்சிற்காய் வீழிப்புணர்ச்சியையும்
விட்டுச்செல்கின்றான்.
அந்த வகையில் இந்தத் தொகுப்பில் இடம்பெற்றிருக்கும் கவிதைகள் அனைத்துமே
விழிப்புணர்வுக் கவிதைகளாகவே இருக்கின்றன.
""என்ன கனவு இது"" என்னும் கவிதையில்.....
ஒரு விடுதலை
ஒரு சுதந்திரம்
ஒரு மொழி
ஒரு தேசம்
ஒரு அரசு
ஒரு ஆட்சி
இவை
அனைத்தும் கொண்ட
வாழ்க்கையைத்தான்
செந்தமிழ்ர்கள் கண்களில்
கண்ணீர்கசிய
கண்டு வரும் கனவு
என்று கனவுகளும் அர்த்தத்தோடு இருக்கவேண்டும் என்ற தனது ஆதங்கத்தை
வெளிப்படுத்துகின்றார். இது நாம் எல்லோரு சிந்திக்க வேண்டிய சிந்தனை வரிகள்.
இதேபோல 'ஏனெனில் அவன் எழுதுகின்றான்' என்ற மற்றொரு கவிதையில்...
கையில் இவன் பேனா
கண்களில் இவன் கண்ணீர்
தொண்டைக்குள் துயரம்
சட்டைப் பைக்குள்
சில காகிதங்கள்
இவன் நெஞ்சுக்குள்
கொஞ்சம் நெருப்பு
இவன் இதயக் கதவுக்குள்
எங்கள் இதய நிலம்!
இங்கே இவன், இவன், என்று குறிப்பிடப்பட்டவையெல்லாம் இந்த இளம் கவிஞன் த.சாPஷைக்
குறிப்பதாகவே நான் கருதிக்கொள்கின்றேன். ஏனெனில் நான் முன்னரே குறிப்பிட்டது போல இந்த
தோகுதியில் பதியப்பட்டிருக்கும் அனைத்துக் கவிதைகளிலும் இந்தக் கவிஞனின் இதயம்தான்
கசிந்து கிடக்கின்றது.
''தர்மத்தின் பதில் எங்கே' என்றொரு கவிதை. இதில் ஒரு பகுதியில் தியாகி திலீபனின்
பெயரைச் சொல்லாமல் அவர் உண்ணா நோன்பு இருந்ததுபற்றி குறிப்பிட்ப்படுகின்றது.
அதில்.....
புல் தின்னும் பசுவிடம்
பால் கேட்பதுபோல
பால் குடித்த பாம்பிடமும்
பாலைக் கேட்டத
எங்கள் தவறுதான்!
என்று எழுதுகின்றார். என்ன அற்புதமான வரிகள்! இந்த வரிகளுக்குள் எத்தனை அர்த்தங்கள்
புதைந்து கிடக்கின்றன? என்பதை சிந்தனைக்குரிய வாசகர்களிடம் கேட்டால் கவிஞர்
எழுதும்போது எண்ணாத அர்த்தங்கள் பல வெளிவரலாம்!?
கவியரசு வைரமுத்து அவர்கள் தனது வைரவரிகள் ஒன்றில் சொல்லுகின்றார்
கவிதை என்பது மனிதகுலம்
சோகப்படும்போது கண்ணீர் வடிக்கவேண்டும்
தாகப்படும்போது தண்ணிராக இருக்கவேண்டும்.... என்கின்றார்.
இந்த "விடியலின் முகவரி" என்ற நூலில் உள்ள கவிதைகள் அனைத்தையும்
படித்து முடித்தபின்னர்
கண்ணீர் தண்ணிராக வடிகின்றது!
வடிந்த கண்ணீரெல்லாம் தண்ணீராகவே இருக்கின்றது!
இப்படி இப்படியாக விரித்து விபரித்து இந்த கவிஞனின் எழுத்துக்களை நீட்டிக்கொண்டு
போகாமல் சுருங்கச் சொல்வதானால் இவனுடைய எழுத்துகள் எல்லாம்......
தண்ணீரை நெருப்பாக்கும் வரிச் சொற்கள்!
கண்ணீரைத் துடைத்தெறியும் து}ரிகைகள்!
விண்ணதிர நீதி சொல்லும் பிரகடனங்கள்!
மண்ணையே வணங்கி நிற்கும் முத்தங்கள்!
கயவர்களைக் கலங்கவைக்கும் கழுகுமரம்!
பகைவர்க்கு இவன் எழுத்து து}க்குமரம்!
பழமைகளை துளைக்க வரும் புதிய வில்!
புதுமைகளை வரவேற்கும் பூமாலை! அதுமட்டுமல்ல
பொதுமைக்காய் திறக்கப்பட்ட புதிய பாதையும்கூட.......!
இத்தனையும் தனது சொத்தாகக் கொண்ட அற்புதமான த.சரீஷின் இந்த இரண்டாவது
படைப்பான விடியலின் முகவரி என்னும் அஸ்த்திரம் இவரை
சிகரத்திற்கு அழைத்துச் செல்லட்டும் இவரின் எழுத்தெல்லாம் மக்களிடம் செல்லட்டும்.
வாழ்துக்களுடன்
-கவிஞர் வண்ணை தெய்வம்
.................................................................................................
[b]வாழ்த்துரை
புலம்பெயர்ந்து வாழும் நம்மவர்கள் கலை இலக்கியம் நாடகம் சினிமா என
பல துறைகளில் கால்பதித்துள்ளமை புலம்பெயர்ந்தோர் இலக்கியம் எனும்
புதுவடிவம் தோற்றம் பெறுவதற்கு வழிசமைத்ததெனலாம்.
தேசத்தின் சோகங்கள் முடியுமா...? தொடருமா...?
என்ற கேள்விக்குறியின் மத்தியிலும் அகதிகளாய் அன்னிய மண்ணில்
அலைகின்றபோதிலும் எமக்கிருக்கும் ஒரே ஒரு ஆத்மார்த்தமான விடயம்
புலம்பெயர்ந்த மண்ணில் எம்மவர்களால் படைக்கப்படும்
கலை இலக்கியப் படைப்புகளே.
அறிதலின் எல்லைகள் பல முனைகளில் இங்கு விஸ்தரிக்கப்படுவதும்
உலக அனுபவங்களையும் மேற்குலக இலக்கியங்களையும் தமக்கு நெருக்கமாக்கிக்கொண்டு
சூன்யமான இந்த வாழ்விலும் விடியலைத்தேடும் உறவுகளாக எமது எதிர்கால
சந்ததியினர் பலர் இப்புலத்தில் படைப்பாளிகளாக உருவாகிக்கொண்டு வருவதும்
பாராட்டுதற்குரிய விடயமாகும். இந்தவகையில் இளம் கவிஞராக கவிப்பரப்பில்
பல்வேறுகோணங்களில் கவிதைகளை புனைந்துவரும் த. சரீஷ் அவர்கள்
பாரீஸிற்கு இளம் வயதில் காலடி எடுத்து வைத்தபோதிலும் தனது இலட்சியப்பதையாக
தொலைநோக்கு பார்வையுடன் மண் பெண்விடுதலைவேண்டி படைத்திடும்
கவிவரிகள் அற்புதமானவை. இவரது பெரும்பாலான கவிதைகளைபப் படித்து சுவைத்தது
மட்டுமல்லாமல் எமது ஏ.பீ.சி வானொலியில் இடம்பெற்றுவரும் ''உணர்வுகளின் ஊற்றுக்கள்""
நிகழ்ச்சியிலும் பல கவிதைகளை வாசிக்கும் சந்தர்பம் கிடைத்தது.
மனிதநேயம் மண்வாசனை மக்களின் சுதந்திரம் இவை அனைத்துமே த.சரீஷின் படைப்புகளில்
காணக்கூடியதாக உள்ளது.
வானொலியில் மட்டுமல்ல பல பத்திரிகைகளிலும் இணயத்தளங்களிலும் இவரது ஆக்கங்கள்
வெளிவந்திருப்பது குறிப்பிடத்தக்கது. சொந்த முகங்களை இழந்து போலிமுகத்தோடு
அகதிகளாக வாழும் பல்லாயிரக்கணக்கான சாதாரண மனிதர்களின் மன உணர்வுகளை
இவரின் படைப்புகளில் நாம் காணலாம்.
பேனாமுனையால் வரலாறுபடைத்தவர்கள் ஏராளம் அந்தவகையில் புலம்பெயர்ந்த மண்ணிலும்
உயர்ந்த இலக்கியங்கள் ஈழத்துக்கலைஞர்களால் படைக்கப்படும் என்பதில் வியப்பில்லை.
அந்தவகையில் இளம் கவிஞர் த.சரீஷ் அவர்களின் இரண்டாவது கவிதைத்தொகுப்பாக
வெளிவரும் ""விடியலின் முகவரி"" என்ற நூலினை அனைத்து அன்பு உறவுகளும்
வேண்டிப் படிக்கவேண்டும். இவர் இன்னும் பற்பல நூல்களை வெளியிடவேண்டும்
எதிர்காலத்தில் ஒரு சிறந்த ஈழத்துப்படைப்பாளியாக த.சரீஷ் அவர்கள் மிளிருவார் என்பது
அவரது படைப்புகளின் அத்திவாரத்தில் உறுதியிடப்பட்டிருக்கிறது.
அவர் மேன்மேலும் பல படைப்புகளை உருவாக்கி எமது எதிர்கால சந்ததியினருக்கு
வழிகாட்டியாகவும் விழிப்புணர்வோடும் நாட்டுப்பற்றோடும் அவர்கள் வாழ்வதற்கு ஏற்றவகையில்
இவரின் படைப்புகள் மிளிரவேண்டும் என வாழ்த்துகிறேன்.
ஏ.பீ.சி தமிழ் ஒலி
வானொலி சார்பாக
திருமதி. நவாஜோதி
....................................................................................................................................................................................
[b]கவிஞனும் நானும்....
(நு}ல் ஆசிரியர் பற்றி...)
காலத்தை கண்டெடுப்பதற்கு மனிதன் கண்டெடுத்த வசதியான வழிதான் கவிதை.
காலம் மரணத்தை உறுதிப்படுத்துகின்றது கவிதையோ வாழ்கையை உறுதிப்படுத்துகின்றது.
கவிஞர் த.சரீஷ் அவர்கள் தாயகத்தில் வடமராட்சிக்கிழக்கு
உடுத்துறை என்னும் கிராமத்தை பிறப்பிடமாகக்கொண்டவர்
சிறுவயதிலேயே போர்ச்சூழல் காரணமாக தாயகத்தில் பல பகுதிகளில்
இடம்பெயர்ந்து பின் 1997 இல் பரீசுக்கு புலம்பெயர்ந்தார்.
இவருடைய முதலாவது கவிதைத்தொகுப்பு "தென்றல்வரும் தெரு"
என்ற பெயரில் 2002 ஆம் ஆண்டு பாரீசில் வெளியிடப்பட்டது.
இது இவருடைய இரண்டாவது கவிதைத்தொகுப்பு
இது மட்டுமல்ல இவருடைய கவிதைகள் பல தமிழ் இணையத்தளங்களில்
தொடர்ச்சியாக வெளியாகிவருகிறது. அத்தோடு ஏ.பீ.சி தமிழ் ஒலி வானொலியிலும்
ரீ.ரீ.என் தொலைக்காட்சியிலும் ஒலிபரப்பாகுவதோடு பல வாராந்த மாதாந்த சஞ்சிகைகளிலும்
வெளியாகிக்கொண்டிருக்கிறது. இதைக்கேட்டு, வாசித்த பல வாசகர்கள்
நேரடியாகவும் நண்பர்களோடும் பாராட்டுகளை பரிமாறியுள்ளார்கள்.
அத்தோடு ""கண்மணிக்குள் ஒரு காதல்"" என்னும் தலைப்பில்
கவிதைத்தொடர் ஒன்றை பாரீசில் இருந்து வெளியாகும் ஈழமுரசு பத்திரிகைக்கும்
இணையத்தளங்களுக்கும் தொடர்சியாக எழுதிவருகின்றார்.
இவருடைய சமூகச்சீர்திருத்த சிந்தனைக் கவிதைகள் சில சச்சைகளை உருவாக்கியுள்ளது.
பெரும்பாலான இவருடைய கவிதைகள் ஈழவிடுதலைப்போராட்டச்சூழலையும்
போராட்டச்சிந்தனையையும் படித்தவருக்கும்,பாமரருக்கும் புரியும் வகையில் தனக்கேயுரிய நடையில்
எழுதிவருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது. இத்தனை உள்ளடக்கங்கள் இருந்தபோதிலும்
கவிஞனுக்கு இன்னும் தேடல் தேவையென்பது சுட்டிக்காட்டப்பட வேண்டிய விடயம்.
மிகச்சிறுவயதிலேயே புலம்பெயர்ந்து தொடர்ந்தும் தமிழ்மொழியில் படிப்பைத்தொடரும் வாய்பினை இழந்து
புலம்பெயர் நாடுகளில் வந்து அன்னிய மொழியில் கல்விகற்றும் இன உணர்வோடும் மொழிப்பற்றோடும்
எழுதிவருகின்ற இவருக்கு தட்டிக்கொடுப்புகள் மிகக்குறைவாக இருந்தாலும் அவற்றையெல்லாம்
பொருட்படுத்தாது இரண்டு கவிதைத்தொகுப்புகளை வெளியிடும் அளவுக்கு வளர்ந்ததும் இன்னும்
பல படைப்புகள் வெளியிட வேண்டுமென்ற எண்ணத்தோடு இருப்பதும் இவ்விடத்தில்
தொட்டுக்காட்டப்படவேண்டியதே.
வேலைப்பழுக்கள், பொருளாதார சிக்கல்கள், குடும்பப்பொறுப்புகள் இத்தனையும் தாங்கி வாழுகின்ற
புலம்பெயர் எழுத்தாளர்களுள் இளம் கவிஞரான த.சரீஷ் அவர்கள் அத்தனை இடர்களையும்
பொருட்படுத்தாது எம் இனத்திற்கு சொல்லப்படவேண்டியதை சொல்லப்பட வேண்டிய வேளையில்
சொல்லியுள்ளது மட்டுமல்லாமல் சில கவிதைகள் கடந்தகாலத்தின் கண்ணாடியாக
ஒவ்வொரு காலத்தின் பதிவுகளாக அமைந்திருப்பது எமது எதிர்கால சந்ததியின் சிந்தனைக்கும், தேடலுக்கும்
மிகவும் உதவியாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
காலத்தின் தேவையொட்டி இவரால் எழுதப்பட்ட பல கவிதைகள் கவிஞனை தனிப்பட்டமுறையில்
இனங்காணமுடியாமையினால் வாசகர்மத்தியில் வெளிவராமல் இருந்ததும் வேதனைக்குரிய விடயமே.
இவரின் போராட்டக்கவிதைகள் காலத்தின் பதிவாகவும் சமூக சீர்திருத்த விடையங்கள் காலத்தின் தேவையாகவும்
தனக்கே உரிய வயதிற்கான சில காதல் கவிதைகளாகவும் இவ் நூலில் இடம்பெற்றுள்ளது. ஒரு குறுகிய காலப்பகுதியில்
அதாவது இவரது முதலாகது கவிதைத்தொகுப்பாகிய "தென்றல் வரும்தெரு" 2002 ஆம் ஆண்டு வெளிடப்பட்டபின்
இன்றைய காலப்பகுதிக்குள் (27.02.2004) இந்த கவிதைத்தொகுப்பினை எழுதிமுடித்துள்ளார் என்பது
இவரது மனதில் உள்ள தாக்கத்தை சுட்டிக்காட்டுகின்றது.
இச்சிறுவயதில் இரண்டு கவிதைநூலை வெளியுட்டுள்ள கவிஞர் த.சரீஷ் அவர்களின் தமிழ்ப்பணி
பாராட்டுதலுக்குரியது அது மட்டுமல்ல எழுத்துத்துறையோடு நின்றுவிடாமல் பிரான்சு பல்கலைக்கழக
தமிழ்மாணவர் சங்கத்தில் இணைந்து அவர்களின் வேலைத்திட்டங்களிலும் சமூகசேவைத் திட்டங்களிலும்
தன்னையும் இணைத்துள்ளார்.
இந்தக்கவிஞனை இனம்கண்டு பிரான்சு பல்கலைக்கழக தமிழ் மாணவர்கள் இவரது இரண்டாவது
கவிதைத்தொகுப்பை வெளியிடுவது அவர்களுடைய பெருந்தன்மையான சிந்தனையையும் அதேநேரத்தில்
அவருக்குக்கிடைத்த நல்ல வாய்பாகவும் எண்ணத்தோன்றுகின்றது. அத்தோடு இந்தநூலை வெளியிடுபவர்
பிரான்சு அரசாங்க கல்வியமைச்சு அதிகாரிகள் என்று அறிந்ததையிட்டு பெரிமிதம் கொள்வதோடு மட்டுமல்லாமல் இன்நூல்
இன்னும் ஒரு படி மேலோங்கி நிற்கிறது ஏனெனில் இந்த நூலை வெளியிடுபவர்
பிரஞ்சு அரசாங்கத்தின் கல்வியமைச்சு அதிகாரியாக இருப்பதனால். அத்தோடு ஈழத்தமிழர் ஒருவரின் நூலை
முதல்முதலாக பிரான்சு கல்வியமைச்சு வெளியிடுவதில் இந்தக் கவிஞனும் அனைத்துலகத் தமிழர்களும்
பெருமைப்படவேண்டிய விடையம்.
த.சரீஷ் அவர்களின் தமிழ்ப்பணி தொடர எனது வாழ்துக்கள்.
இந்த இளம் கவிஞனை வளர்கும் பொறுப்புணர்வோடு இலக்கிய ஆர்வலர்கள் ஊக்கமும்,ஆக்கமும்
கொடுக்கவேண்டுமென்று கேட்டுக்கொள்ளுகின்றேன்.
அன்புடன்
-தொகுப்பாளர்
ரவி மாஸ்டர்
......................................................................................................................................................
[b]எழுதியவன் பேசுகிறேன்...
(என்னுரை)
காலநதியை கடந்துசெல்லும் படகோட்டி நான்...!
இரண்டு வேறுபட்ட வாழ்கைப்புத்தகத்தை
ஒரே நேரத்தில் வாசிக்கத்தெரிந்த வாசகன்...!
ஒரு கிராமத்து கலாச்சாரத்தில் இருந்து வந்து
முற்றிலும் மாறுபட்ட மேல்நாட்டு கலாச்சார
வாழ்கையில் வாழப்பழகியவன்.
மணல் அள்ளி விளையாடிப் பழக்கப்பட்ட கைகளுக்கு
பனியள்ளி விளையாடவும் பழக்கப்படுத்திக்கொண்டவன்.
உலகம் விஞ்ஞானமயமாக்கப்பட்டு
கண்டுபிடிப்புகள் சாதனைகள் என்று
மனிதனை விஞ்ஞான உலகம் விழுங்கிக்கொண்டிருக்கிறது.
பேச்சுக்கு பயன்படும் மொழிகள் எல்லாம் பயன்படாமல்போய்
வாழ்கைக்கு மட்டும் பயன்படும் மொழிகழுக்கு
மட்டும் இடமிருக்கும் இந்த சமுதாயச் சந்தையில்
உலகத்தரத்திற்க்கு என் தமிழை
உயர்த்திப்பிடிக்கும் ஆதங்கத்தால்...
வேறுபட்ட இனங்களுக்கும்,
கலாச்சாரத்திற்க்கும்,
மொழிகளுக்கும் மத்தியிலும்
தமிழை தலைநிமிர்திப் பார்க்கும் சமுத்திர முயற்சியில்
மிகச்சிறிய துளிதான் இந்த ""விடியலின் முகவரி''....!
எனக்கு "அகதி" என்ற பெயர் சூட்டப்பட்டபின்
புலம்பெயர் நிலங்களில் கூட்டிவந்து
குளிர்பனிபடர்ந்த மண்ணில் நடுவதற்காக
வேரும் இல்லாமல் வேரோடு ஒட்டிவரும் மண்ணுமில்லாமல்
என்னை என் தாய் மண்ணில் இருந்து
பpரித்துக்கொண்டு வரும்போது
நான் அங்கிருந்து காணக்கொண்டுவந்த கனவுகளில்
இந்த ""விடியலின் முகவரியும்"" ஒன்று.
இந்த கவிதைத்தொகுப்பின் முதல் கவிதையை
தாயகத்தில் ஒரு கடற்கரை கிராமத்தில்
தென்னைமரத்தடியில் என்னைமறந்து
எண்ணங்களில் தொடங்கி...
பாரீசில் ஒரு குளிர்காலத்து மாலைப் பொழுதினிலே
தென்றல் மெதுவாக தவழ்ந்துவரும் யன்னலோரம்
எழுத்துக்களாக முடித்திருக்கிறேன்.
தமிழீழ விடுதலைப்போராட்ட வரலாறு என்பது
ஒரு நீண்ட விரிந்த மிகப்பெரிய சமுத்திரம்.
அந்த சமுத்திரத்தில் குதித்து என்னால் முடிந்தவற்றை
பருகிவிட முயன்றிருக்கிறேன்...!
இந்தப்படைப்புகள் உணர்வுகளினதும்,
சிந்தனையினதும் வெளிப்பாடானால்....
இதற்கு உயிர் எங்கிருந்து வருகிறது...?
உண்மைதான் உயிர்
யதார்த்தம்தான் உயிர்
அதாவது...
யதார்த்தம் இல்லாத படைப்புகள்
கல்லினாலோ அல்லது மரத்தினாலோ
ஆக்கப்பட்ட சிலைபோன்றது
அதற்கு அழகு இருக்கக்கூடும் உயிர் இருக்காது...!
வர்ணனை வார்த்தைகள்தான் கவிதையை
அழகுபடுத்தும் ஆபரணங்களே தவிர
அவைகளே உயிரென்று ஆகிவிட முடியாது.
ஒரு உன்னதமான படைப்புக்கு யதார்தம்தான்
உயிர்கொடுக்கும் என்றால்...
இந்த யாதார்த்தம் என்றால் என்ன...?
அது எங்கிருந்து வருகிறது..?
நீ எங்கிருந்து வந்தாயோ...
அங்கிருந்துதான் வருகிறது யதார்தமும்
நீ எங்கு வாழ்கிறாயோ
அங்கேதான் வாழ்கிறது யதார்தமும்
இன்னும் சொல்லப்போனால்...
அது...
பார்த்து, பேசி, கேட்டு, உணர்ந்து என்று நீழும்.....
இதுவரை நான் கடந்துவந்த பாதைவழி...
நான் பார்த்து, பேசி, கேட்டு, உணர்ந்த சம்பவங்களை
கடந்து முடிந்த காலங்களின் துண்டுகளை
பொழிந்து சிதறிய மழைத்துளிகளை
சிக்கனமாய் சேகரிக்கும் ஒரு ஏழை விவசாயிபோல்
பொறுமையுடன் சிரமப்பட்டு பொறுக்கி
அதற்க்கு கவிதை என்ற பெயர்இட்டு
அழகுபடுத்தி பார்த்திருக்கிறேன்...!
படைப்புகள் உணர்வுகளின் வெளிப்பாடாக இருந்தபோதிலும்
மொழிவடிவில் இல்லாத மூலங்களை உணருவதும், சிந்திப்பதும்
சுலபமாகத்தான் இருக்கும் ஆனால்....
அவைகளை மொழிவடிவில் செதுக்குவதென்பது
பெரியதொரு பொறுப்புக்களுடன் கூடிய மிகவும்
கடினமான காரியமாய் இருந்தது.
தாய்நிலத்தின் விடுதலைப்போராட்ட வரலாற்றில் நடந்த
பல அனியாயங்களையும்
அழுகுரல்களையும்
ஆபத்துக்களையும்
ஆச்சரியங்களையும் எழுத்துக்களாக படைக்கும்-ஒரு
அற்புதமான சந்தர்ப்பம் யாழ்மாவட்டத்தில்
ஒரு கடலோர கிராமத்து ஈரமண்ணில்
கால்புதைத்து விளையாடித்திரிந்த எனக்கு கிடைத்திருப்பதனால்
என் புருவங்களும் பெருமையடைகின்றன.
இந்த புரட்சிகரமான படைப்பின் ஒவ்வொரு எழுத்தின் உச்சரிப்பிலும்
என் இதயத்தின் ஓசை ஓங்கி ஒலித்துக்கொண்டிருக்கிறது.
நான் இந்த மண்ணைவிட்டு மறைந்தாலும்
ஓயாது ஒலித்துக்கொண்டிருக்கும்
என் கவிதைகளும் உணர்வுகளும்.
பெற்றெடுத்த அன்னைக்கும்
பெயர்இட்ட தந்தைக்கும்
கல்லாய் இருந்த என்னை
சிலையாய் செதுக்கிவைத்த ஆசான்களுக்கும்
பிறந்தபின்பு தவழ்துதிரிந்த தாய்நிலத்திற்கும்
தங்கத்திர்க்குரிய தன்மையைக்கொண்ட
தாய்மொழியாம் என் தமிழுக்கும்
தலைவணங்கும் நொக்குடனும்...
மலைபோல் துயர்சுமந்து நிற்கும் மக்களுக்கும்
வழிநடத்தி விடியலை நோக்கி
அழைத்துச்செல்லும் மன்னனுக்கும்
துயரம் என நினைக்காது
தோள்கொடுக்கும் வீரருக்கும்
துச்சமென நினைத்து உயிர்கொடுத்த மாவீரருக்கும்
விழிகளில் நீர்கசிய "விடியலின் முகவரி"
என்ற சிறு மலரால்
என்னால் முடிந்த மரியாதைசெய்திருக்கின்றேன்.
இப்போது...
இருள் கொஞ்சம் விலகிக்கொண்டிருக்கிறது
அதோ தெரிகிறது...
நாளைய பொழுதின்
விடியலின் முகவரி...!
ஒரு குளிர்ந்த இரவில்
நனைந்த மனதுடன்...
த.சரீஷ்
....................................................................................
குறிப்பு:
1. வெகுவிரைவில் யேர்மனி தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் ஆதரவுடன் யேர்மனியில் இன் நு}லின் அறிமுகவிழா நடைபெறவுள்ளது அதற்கான காலமும் இடமும் பின்னர் அறியத்தருகிறேன்.
2. இந்த நு}லினைப் பெற்றுக்கொள்ள விரும்புபவர்கள் என் மின்னஞ்சல் வழியாக தொடர்புகொள்ளலாம்.
sharish_fr@hotmail.com
நன்றியுடன்....
த.சரீஷ்
30.03.2004 (பாரீஸ்)
|
|
|
|