Yarl Forum
இக்கட்டிலும் உதவி நிற்போம்...தமிழீழம் எல்லைகள் கடந்தது...! - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3)
+--- Forum: செய்திகள் : தமிழீழம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=12)
+--- Thread: இக்கட்டிலும் உதவி நிற்போம்...தமிழீழம் எல்லைகள் கடந்தது...! (/showthread.php?tid=7259)



இக்கட்டிலும் உதவி நிற - kuruvikal - 03-31-2004

<span style='color:red'>செய்தி....

கருணாவின் குழுவைச் சேர்ந்தவர்கள் யாழ் மாவட்டத்தைச் சேர்ந்தவர்களை இலங்கை நேரப்படி செவ்வாய் இரவு 12 மணிக்கு முதல் மட்டக்களப்பை விட்டு வெளியேறுமாறு அறிவித்துள்ளனர்


[size=16]ஆட்டம் ஓயும் நேரம்...துள்ளல் கூடித்தான் இருக்கும்....! எந்தச் சக்தியாலும் தமிழீழ மக்களை தமிழீழ மண்ணில் இருந்து விரட்ட முடியாது என்பதை வரலாறு கற்றுக் கொடுக்கும்....! தமிழீழத்துள் எல்லைகள் இல்லை....எனவே மக்கள் எவரும் சொந்த தேசத்தை விட்டுச் செல்வதாக உணர வேண்டாம்....!

எல்லைகள் காண்போருக்காக......

தென் தமிழீழ மக்களை இக்கட்டில் இருந்து விடுவிக்க வட தமிழீழ மக்கள் அனுபவிக்கும் இன்னல் ஒன்றும் பெரிதல்ல.. சொந்தச் சகோதரனின் இயலாமை நீங்க எம்மால் ஆனதை நிதானத்துடன் செய்வதே...நாம் இந்த இக்கட்டான தருணத்தில் அவர்களுக்குச் செய்யும் பிரதிபலனாகும்... அதை நாம் முழு மனதுடன் மகிழ்வுடன் செய்வோம்...!

1990 இல் சிங்களம் தெந்தமிழீழ மக்களை விரட்டிய போது வரும் படகுகளுக்காய் வட தமிழீழத்தில் விடிய விடியக் காத்திருந்து உதவி செய்தோம்...ஏன் நாம் தமிழீழத்தவர் என்பதால்...அந்த நிலை என்றும் காத்து நாம் எல்லைகள் கடந்த தமிழீழ தேசத்தவர் என்பதை துரோகிகளுக்கு காட்டி நிற்போம்....! எதிரியும் எம் தமிழீழ தேசியத்தை,தேசத்தை கூறு போட கனவு காணும் அனைத்துச் சக்திகளும் தோல்வியால் தலை குனிவது விரைந்து நடக்க நாம் பொறுமையுடனும் மதிநுட்பத்துடனும் நடந்து உலக வரலாற்றில் ஒரு புது அத்தியாயம் எழுதி வைப்போம்.....!

மனங்களால் இலட்சியத்தால் ஒன்றுபட்ட இலட்சிய மனிதர்களை ஆண்டவன் வந்தாலும் பிரிக்க முடியாது....மரணம் கூட அசைக்க முடியாது....!</span>

[scroll:b58754f984][size=18][b]தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்.


- anpagam - 03-31-2004

மனம் ஓரு குரங்கு என்று சும்மாவா சொன்னார்கள்.....
நம்ம சனம் நல்லாத்தான் குளம்பிற்றுகள்....
இதெல்லாம் இப்போதைக்கு அப்படித்தான் இருக்கும்...
என எல்லாருக்கும் தெரியும்... எதிரிக்கு கூட....
ஆனால் யதார்த்தம் வேறு அது அவர்களுக்கே தெரியும்...
நாமே நம்மை குளப்பாமல் அமைதியாய் இருந்தால் நாளை சரியாகிடும்...
நேற்று,இன்று,நாளை என்றும் ஒன்றல்ல யதார்த உலகில்.... Idea :wink: 8)


- Shan - 03-31-2004

பிரதேசவாதம் இன்று கண்துடைப்பே! தம் சொந்த நலன்களை காக்க மீண்டும் அப்பாவிகளை பலியாக்குகிறார்கள் கருணாவிற்கு வக்காலத்து வாங்கியவர்கள் இதற்கு என்ன விளக்கம் கொடுக்கப்போகிறார்கள். தற்போதைய நிகழ்வுகள் இரண்டு விடயத்தை சொல்கிறது. ஒன்றில் கருணா களவெடுத்திருக்கவேண்டும் அல்லது ஒரு துரோக கும்பலுடன் இணைந்திருக்க வேண்டும். கருணா தான் விலகியதற்கான காரணங்கள் அனைத்தும் இன்று காணாமல் போய் துவேசம் மட்டும் நிற்கிறது. கருணாவின் துவேசத்திற்கு துஐணபோகும் அனைவரும் தமிழ் தேசியத்pற்கு துணைபேனவர்களே.


- Shan - 03-31-2004

பிரதேசவாதம் இன்று கண்துடைப்பே! தம் சொந்த நலன்களை காக்க மீண்டும் அப்பாவிகளை பலியாக்குகிறார்கள் கருணாவிற்கு வக்காலத்து வாங்கியவர்கள் இதற்கு என்ன விளக்கம் கொடுக்கப்போகிறார்கள். தற்போதைய நிகழ்வுகள் இரண்டு விடயத்தை சொல்கிறது. ஒன்றில் கருணா களவெடுத்திருக்கவேண்டும் அல்லது ஒரு துரோக கும்பலுடன் இணைந்திருக்க வேண்டும். கருணா தான் விலகியதற்கான காரணங்கள் அனைத்தும் இன்று காணாமல் போய் துவேசம் மட்டும் நிற்கிறது. கருணாவின் துவேசத்திற்கு துஐணபோகும் அனைவரும் தமிழ் தேசியத்திற்கும் துரோகம் இளைத்தவர்களே!