![]() |
|
ஒரு விடியலின் முகவரியும் நானும்.... - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: படைப்புக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=11) +--- Forum: கவிதை/பாடல் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=52) +--- Thread: ஒரு விடியலின் முகவரியும் நானும்.... (/showthread.php?tid=7261) |
ஒரு விடியலின் முகவரிய - sharish - 03-30-2004 <b><span style='font-size:25pt;line-height:100%'>ஒரு விடியலின் முகவரியும் நானும்......</b></span> எனது இரண்டாவது கவிதைத்தொகுப்பான""விடியலின் முகவரி"" என்ற கவிதை நூல் கடந்த சனிக்கிழமை 13.03.2004 அன்று பாரீசில் பிரஞ்சு பல்கலைக்கழக தமிழ் மாணவர்களால் வெளியிட்டு வைக்கப்பட்டது. 450 இற்கு மேற்றட்ட பார்வையாளர்கள் கலந்துகொண்டு சிறப்பித்த இந்த விழாவில் பல எழுத்தாளர்கள் கவிஞர்கள் இலக்கிய ஆர்வலர்கள் கலந்துகொண்டு இன் நூலை வெளியிட்டுவைத்து சிறப்பித்தார்கள். இந்த "விடியலின்முகவரி" என்னும் நு}ல் பற்றிய சில தகவல்களை உங்களுடன் பகிர்ந்து கொள்கின்றேன். ................................................................................................. பதிப்பு விபரம்: முதல் பதிப்பு பங்குனி 2004 நூல் உரிமை: பிரான்ஸ் பல்கலைக்கழக தமிழ் மாணவர்கள் விலை: 15 யுரோக்கள் அட்டைப்பட வடிவமைப்பு: ஈழமயுூரன்(யேர்மனி) தொகுப்பாளர்: ரவி மாஸ்ரர்(யேர்மனி) வெளியீடு: பிரான்ஸ் பல்கலைக்கழக தமிழ் மாணவர் சங்கம் நு}லின் அளவு: 148 x 210 மி.மீ அச்சு எழுத்து அளவு: 14 புள்ளிகள் பக்கங்கள்: 275 அச்சிட்டோர்: ராஜி பதிப்பகம் (யேர்மனி) ....................................................................................................................... <b>முகவரிக்கு ஒரு முன்னுரை.....</b> கவிதை என்பது ஒரு மொழியின் வளர்சியை மிகவும் வெகுவாக ஊக்குவிப்பதன்பாலும் எழில்பொருந்திய தற்கால நிலையில் பண்டைய மொழிகளில் ஒன்றாகவும் ஏனய கலைச்செல்வங்களையும், நற்காவியங்களையும் நன்நெறிகளையும் தன் வளத்தால் பெயர்த்து தமிழர்களின் நாகரீக மேம்பாட்டிற்கும் அறிவியல் வளர்சிக்கும் மெருகுசேர்பதோடு மட்டுமல்லாமல் ஏனய நாட்டவருடன் தன் சிறப்பியல்புகளைப் பரிமாறிக்கொள்ள தமிழ்மொழி செறிவும் வளமும் கொண்டிருந்த போதிலும் உலகியல் நவீனங்களும் அறிவியலும் வளரும்காலத்தில் தமிழ்த்தாய் சற்றே கண்ணயர்ந்து விட்டதன் காரணத்தால் தமிழ்மொழியினுள் வேற்றுமொழிசார் சொற்களின் ஊடுருவலும் தற்காலத்துறைகளின் சொற்தொடற்குறைவாலும் தமிழ்மொழி தனித்துவம்இழந்து வருவதோடு பிற மொழிகளுடன் கடன்பெறும்பொருட்டே நிறைவுபெறுகிறது. தொடர்ந்தும் தமிழரும் விடுதலையும்கூட மக்கள் பலரிடத்து பணரீதியான பரிமாற்றங்களுடன் நிறைவற்றதாய் நின்று போகின்றது. இதற்கு அடிப்படையாக புலம்பெயர் நாடுகளில் பிறந்த குழந்தைகள் சிறிய வயதில் வந்த பிள்ளைகள் போராட்டத்தின் ஆரம்பகாலத்தில் வந்த பெற்றோர்கள் பெரியோர்களின் அறியாமையும் புலம்பெயர் சமுதாயத்தில் உள்ள சில அனாகரீகமோகங்களும் காரணமாக அமைகிறது. மேற்சுட்டிய விடையங்களுக்கு நாம் தீர்வுகாண தமிழர்களாலும் தமிழ்த்தாயினாலும் ஈன்றெடுக்கப்பட்ட உணர்வாளர்கள் பலர். என்றாலும் எம் செல்வம் த.சரீஷ் அவர்கள் தமிழின் பொலிவும் இறைமையும் கொண்டு தமிழர்களுக்கும் தமிழ்மொழிக்கும் ஏற்பட்டுள்ள இன்னல்களைப்போக்க புயல்வேகத்துடனும் தெளிவுகொடுக்கத் தென்றல்போலும் பயணித்துள்ளார். ஏனெனில் இவர் கவிதைகள் இலக்கண வடுவறுத்தும் இலக்கிய நயம் படைத்தும் காணப்படுவதன் பொருட்டு தமிழ்மொழியில் தமிழர்களுக்கு துடிப்பை ஏற்படுத்துவதோடு பொருள்புரியும் வகையில் இயற்றப்பட்டதால் தமிழ்மொழியின் அறியாமையைப்போக்க வழிகோலும் என்பதில் ஜயமில்லை. ஒற்றுமை,ஒருமைப்பாடு நாம் அனைவரும் ஒருதாய்பிள்ளைகள் என்ற நிலையில் இவரது எழுத்துக்கள் தமிழர்களை விழிக்கச்செய்வதோடு ஈழவேண்டுதல் தொடர்பாக சில மக்களிடத்தில் காணப்படுகின்ற ஈழத்துநிலைப்பாட்டின் அறியாமையைப்போக்க இவரது படைப்புக்கள் படம்போட்டுக்காட்டி எம்மவரிடத்தே ஒருமைப்பாட்டை உருவாக்கி பணரீதியான பங்களிப்போடு நிற்பவரைக்கூட உளரீதியாக பங்களிப்புவரை அழைத்துச்சென்றிருக்கிறது. இன்னமுமாக இவரது கவிகள் அநீதிகளை எதிர்த்துப்போராடவும் நன்மைத்தனங்களை வாழ்த்தும் பண்பும் கொண்டவை அத்தோடு இன்னும் பல சிறப்புகள் கொண்டவை என்பது ""வெள்ளிடைமலை"". இப்பேற்றை ஈன்றெடுத்த பெற்றோர்கள் என்னதவம் செய்தனரோ என்று கேட்க்க பிள்ளைகள்வாழவேண்டும் என்பதுதான் தமிழ்மறை ஓதிய வள்ளுவனின் வாக்காக இருந்தபோதிலும் இவன் நிலை இதற்கு மேலாக உயர்ந்துள்ளது ஏனெனில் இக்கவிஞனை ஈன்றெடுத்த தமிழ் அன்னை என்னதவம் செய்தாளோ என்று கேட்கும் நிலையாகிவிட்டது. ஆகவே இந்தக் கவிக்குழந்தையை எம் சகதோழன் என்பதில் பேரானந்தம் எய்திநின்று உளமார வாழ்த்துகின்றது நமது சங்கம். பிரான்ஸ் பல்கலைக்கழக தமிழ் மாணவர் சங்கம் 02. 03. 2004 பிரான்ஸ் .................................................................................. <b>வண்ண வரிகள்....</b> த.சரீஷ் என்ற இந்தக் காண்டீபத்தில் இருந்து இப்பொழுது இன்னொரு அஸ்த்திரம் புறப்பட்டிருக்கின்றது. தனது முதலாவது கவிதைத்தொகுதியான "தென்றல் வரும் தெரு" என்னும் கவிதைத்தொகுதியின் மூலமாக எனது புருவங்களை உயர வைத்தவவர் இந்த இளம் கவிஞர். மரங்களிலேயே எளிதில் அடையாளம் காணக்கூடியது வாழைமரம் மட்டுமே! நீண்ட இலைகள், பளபளப்பான உடல், தனித்துவமான பூ, தான் மரணிக்கும் முன்னர் தனக்கென ஒரு பரம்பரையை உருவாக்கிவிட்டுச் செல்லும் தாய்மை, இப்படி வித்தியாசமான அடையாளங்களைக் கொண்டது வாழைமரம். து}ரத்துப்பார்வைக்கு இது தென்னையா? ஈச்சையா? என்றோ! இது புளியா? அகத்தியா, என்றோ சில மரங்கள் குறித்து எமக்கு சங்தேகங்கள் வரலாம்! ஆனால் வாழைமரம் குறித்தது சந்தேகம் வருவதில்லை. அதேபோலத்தான் தம்பி த.சரீஷ் அவர்களுடைய கவிதைகளும் தனித்துவமானவை. பெண்ணையும் காதலையும் மட்டுமே கவிதைகளாக எழுதி வருபவர்களுக்கு மத்தியில் தான் பிறந்த மண்ணையும் மண்ணின் மைந்தர்களையும் தனது கவிதைகளில் எழுதிவரும் தம்பி த.சரீஷ் வாழைமரம்போல வித்தியாசமாக தனித்து நிற்கின்றார். கவிஞர் என்பவன் தனது படைப்புக்கள் மூலமாக சமூகத்தின் உணர்வுகளையும் அவலங்களையும் மட்டுமல்ல தனது தேசத்தின் வாசங்களையும்கூட வரப்போகும் நமது அடுத்த சந்ததிக்காய் இன்றே பதிவு செய்து வைக்கும் காலச்சிற்பி. இந்தச்சிற்பி சமூகத்திற்கு விட்டுச்செல்வது வெறும் எழுத்துக்கள் மட்டுமல்ல! இருளுக்குள் தீக்குச்சியின் வெளிச்சத்தைப்போல வெற்றிகளையும், தோல்விகளையும், சாதனைகளையும் வேதனைகளையும், பதிவு செய்து வைக்கும் காலச்சிற்காய் வீழிப்புணர்ச்சியையும் விட்டுச்செல்கின்றான். அந்த வகையில் இந்தத் தொகுப்பில் இடம்பெற்றிருக்கும் கவிதைகள் அனைத்துமே விழிப்புணர்வுக் கவிதைகளாகவே இருக்கின்றன. ""என்ன கனவு இது"" என்னும் கவிதையில்..... ஒரு விடுதலை ஒரு சுதந்திரம் ஒரு மொழி ஒரு தேசம் ஒரு அரசு ஒரு ஆட்சி இவை அனைத்தும் கொண்ட வாழ்க்கையைத்தான் செந்தமிழ்ர்கள் கண்களில் கண்ணீர்கசிய கண்டு வரும் கனவு என்று கனவுகளும் அர்த்தத்தோடு இருக்கவேண்டும் என்ற தனது ஆதங்கத்தை வெளிப்படுத்துகின்றார். இது நாம் எல்லோரு சிந்திக்க வேண்டிய சிந்தனை வரிகள். இதேபோல 'ஏனெனில் அவன் எழுதுகின்றான்' என்ற மற்றொரு கவிதையில்... கையில் இவன் பேனா கண்களில் இவன் கண்ணீர் தொண்டைக்குள் துயரம் சட்டைப் பைக்குள் சில காகிதங்கள் இவன் நெஞ்சுக்குள் கொஞ்சம் நெருப்பு இவன் இதயக் கதவுக்குள் எங்கள் இதய நிலம்! இங்கே இவன், இவன், என்று குறிப்பிடப்பட்டவையெல்லாம் இந்த இளம் கவிஞன் த.சாPஷைக் குறிப்பதாகவே நான் கருதிக்கொள்கின்றேன். ஏனெனில் நான் முன்னரே குறிப்பிட்டது போல இந்த தோகுதியில் பதியப்பட்டிருக்கும் அனைத்துக் கவிதைகளிலும் இந்தக் கவிஞனின் இதயம்தான் கசிந்து கிடக்கின்றது. ''தர்மத்தின் பதில் எங்கே' என்றொரு கவிதை. இதில் ஒரு பகுதியில் தியாகி திலீபனின் பெயரைச் சொல்லாமல் அவர் உண்ணா நோன்பு இருந்ததுபற்றி குறிப்பிட்ப்படுகின்றது. அதில்..... புல் தின்னும் பசுவிடம் பால் கேட்பதுபோல பால் குடித்த பாம்பிடமும் பாலைக் கேட்டத எங்கள் தவறுதான்! என்று எழுதுகின்றார். என்ன அற்புதமான வரிகள்! இந்த வரிகளுக்குள் எத்தனை அர்த்தங்கள் புதைந்து கிடக்கின்றன? என்பதை சிந்தனைக்குரிய வாசகர்களிடம் கேட்டால் கவிஞர் எழுதும்போது எண்ணாத அர்த்தங்கள் பல வெளிவரலாம்!? கவியரசு வைரமுத்து அவர்கள் தனது வைரவரிகள் ஒன்றில் சொல்லுகின்றார் கவிதை என்பது மனிதகுலம் சோகப்படும்போது கண்ணீர் வடிக்கவேண்டும் தாகப்படும்போது தண்ணிராக இருக்கவேண்டும்.... என்கின்றார். இந்த "விடியலின் முகவரி" என்ற நூலில் உள்ள கவிதைகள் அனைத்தையும் படித்து முடித்தபின்னர் கண்ணீர் தண்ணிராக வடிகின்றது! வடிந்த கண்ணீரெல்லாம் தண்ணீராகவே இருக்கின்றது! இப்படி இப்படியாக விரித்து விபரித்து இந்த கவிஞனின் எழுத்துக்களை நீட்டிக்கொண்டு போகாமல் சுருங்கச் சொல்வதானால் இவனுடைய எழுத்துகள் எல்லாம்...... தண்ணீரை நெருப்பாக்கும் வரிச் சொற்கள்! கண்ணீரைத் துடைத்தெறியும் து}ரிகைகள்! விண்ணதிர நீதி சொல்லும் பிரகடனங்கள்! மண்ணையே வணங்கி நிற்கும் முத்தங்கள்! கயவர்களைக் கலங்கவைக்கும் கழுகுமரம்! பகைவர்க்கு இவன் எழுத்து து}க்குமரம்! பழமைகளை துளைக்க வரும் புதிய வில்! புதுமைகளை வரவேற்கும் பூமாலை! அதுமட்டுமல்ல பொதுமைக்காய் திறக்கப்பட்ட புதிய பாதையும்கூட.......! இத்தனையும் தனது சொத்தாகக் கொண்ட அற்புதமான த.சரீஷின் இந்த இரண்டாவது படைப்பான விடியலின் முகவரி என்னும் அஸ்த்திரம் இவரை சிகரத்திற்கு அழைத்துச் செல்லட்டும் இவரின் எழுத்தெல்லாம் மக்களிடம் செல்லட்டும். வாழ்துக்களுடன் -கவிஞர் வண்ணை தெய்வம் ................................................................................................. [b]வாழ்த்துரை புலம்பெயர்ந்து வாழும் நம்மவர்கள் கலை இலக்கியம் நாடகம் சினிமா என பல துறைகளில் கால்பதித்துள்ளமை புலம்பெயர்ந்தோர் இலக்கியம் எனும் புதுவடிவம் தோற்றம் பெறுவதற்கு வழிசமைத்ததெனலாம். தேசத்தின் சோகங்கள் முடியுமா...? தொடருமா...? என்ற கேள்விக்குறியின் மத்தியிலும் அகதிகளாய் அன்னிய மண்ணில் அலைகின்றபோதிலும் எமக்கிருக்கும் ஒரே ஒரு ஆத்மார்த்தமான விடயம் புலம்பெயர்ந்த மண்ணில் எம்மவர்களால் படைக்கப்படும் கலை இலக்கியப் படைப்புகளே. அறிதலின் எல்லைகள் பல முனைகளில் இங்கு விஸ்தரிக்கப்படுவதும் உலக அனுபவங்களையும் மேற்குலக இலக்கியங்களையும் தமக்கு நெருக்கமாக்கிக்கொண்டு சூன்யமான இந்த வாழ்விலும் விடியலைத்தேடும் உறவுகளாக எமது எதிர்கால சந்ததியினர் பலர் இப்புலத்தில் படைப்பாளிகளாக உருவாகிக்கொண்டு வருவதும் பாராட்டுதற்குரிய விடயமாகும். இந்தவகையில் இளம் கவிஞராக கவிப்பரப்பில் பல்வேறுகோணங்களில் கவிதைகளை புனைந்துவரும் த. சரீஷ் அவர்கள் பாரீஸிற்கு இளம் வயதில் காலடி எடுத்து வைத்தபோதிலும் தனது இலட்சியப்பதையாக தொலைநோக்கு பார்வையுடன் மண் பெண்விடுதலைவேண்டி படைத்திடும் கவிவரிகள் அற்புதமானவை. இவரது பெரும்பாலான கவிதைகளைபப் படித்து சுவைத்தது மட்டுமல்லாமல் எமது ஏ.பீ.சி வானொலியில் இடம்பெற்றுவரும் ''உணர்வுகளின் ஊற்றுக்கள்"" நிகழ்ச்சியிலும் பல கவிதைகளை வாசிக்கும் சந்தர்பம் கிடைத்தது. மனிதநேயம் மண்வாசனை மக்களின் சுதந்திரம் இவை அனைத்துமே த.சரீஷின் படைப்புகளில் காணக்கூடியதாக உள்ளது. வானொலியில் மட்டுமல்ல பல பத்திரிகைகளிலும் இணயத்தளங்களிலும் இவரது ஆக்கங்கள் வெளிவந்திருப்பது குறிப்பிடத்தக்கது. சொந்த முகங்களை இழந்து போலிமுகத்தோடு அகதிகளாக வாழும் பல்லாயிரக்கணக்கான சாதாரண மனிதர்களின் மன உணர்வுகளை இவரின் படைப்புகளில் நாம் காணலாம். பேனாமுனையால் வரலாறுபடைத்தவர்கள் ஏராளம் அந்தவகையில் புலம்பெயர்ந்த மண்ணிலும் உயர்ந்த இலக்கியங்கள் ஈழத்துக்கலைஞர்களால் படைக்கப்படும் என்பதில் வியப்பில்லை. அந்தவகையில் இளம் கவிஞர் த.சரீஷ் அவர்களின் இரண்டாவது கவிதைத்தொகுப்பாக வெளிவரும் ""விடியலின் முகவரி"" என்ற நூலினை அனைத்து அன்பு உறவுகளும் வேண்டிப் படிக்கவேண்டும். இவர் இன்னும் பற்பல நூல்களை வெளியிடவேண்டும் எதிர்காலத்தில் ஒரு சிறந்த ஈழத்துப்படைப்பாளியாக த.சரீஷ் அவர்கள் மிளிருவார் என்பது அவரது படைப்புகளின் அத்திவாரத்தில் உறுதியிடப்பட்டிருக்கிறது. அவர் மேன்மேலும் பல படைப்புகளை உருவாக்கி எமது எதிர்கால சந்ததியினருக்கு வழிகாட்டியாகவும் விழிப்புணர்வோடும் நாட்டுப்பற்றோடும் அவர்கள் வாழ்வதற்கு ஏற்றவகையில் இவரின் படைப்புகள் மிளிரவேண்டும் என வாழ்த்துகிறேன். ஏ.பீ.சி தமிழ் ஒலி வானொலி சார்பாக திருமதி. நவாஜோதி .................................................................................................................................................................................... [b]கவிஞனும் நானும்.... (நு}ல் ஆசிரியர் பற்றி...) காலத்தை கண்டெடுப்பதற்கு மனிதன் கண்டெடுத்த வசதியான வழிதான் கவிதை. காலம் மரணத்தை உறுதிப்படுத்துகின்றது கவிதையோ வாழ்கையை உறுதிப்படுத்துகின்றது. கவிஞர் த.சரீஷ் அவர்கள் தாயகத்தில் வடமராட்சிக்கிழக்கு உடுத்துறை என்னும் கிராமத்தை பிறப்பிடமாகக்கொண்டவர் சிறுவயதிலேயே போர்ச்சூழல் காரணமாக தாயகத்தில் பல பகுதிகளில் இடம்பெயர்ந்து பின் 1997 இல் பரீசுக்கு புலம்பெயர்ந்தார். இவருடைய முதலாவது கவிதைத்தொகுப்பு "தென்றல்வரும் தெரு" என்ற பெயரில் 2002 ஆம் ஆண்டு பாரீசில் வெளியிடப்பட்டது. இது இவருடைய இரண்டாவது கவிதைத்தொகுப்பு இது மட்டுமல்ல இவருடைய கவிதைகள் பல தமிழ் இணையத்தளங்களில் தொடர்ச்சியாக வெளியாகிவருகிறது. அத்தோடு ஏ.பீ.சி தமிழ் ஒலி வானொலியிலும் ரீ.ரீ.என் தொலைக்காட்சியிலும் ஒலிபரப்பாகுவதோடு பல வாராந்த மாதாந்த சஞ்சிகைகளிலும் வெளியாகிக்கொண்டிருக்கிறது. இதைக்கேட்டு, வாசித்த பல வாசகர்கள் நேரடியாகவும் நண்பர்களோடும் பாராட்டுகளை பரிமாறியுள்ளார்கள். அத்தோடு ""கண்மணிக்குள் ஒரு காதல்"" என்னும் தலைப்பில் கவிதைத்தொடர் ஒன்றை பாரீசில் இருந்து வெளியாகும் ஈழமுரசு பத்திரிகைக்கும் இணையத்தளங்களுக்கும் தொடர்சியாக எழுதிவருகின்றார். இவருடைய சமூகச்சீர்திருத்த சிந்தனைக் கவிதைகள் சில சச்சைகளை உருவாக்கியுள்ளது. பெரும்பாலான இவருடைய கவிதைகள் ஈழவிடுதலைப்போராட்டச்சூழலையும் போராட்டச்சிந்தனையையும் படித்தவருக்கும்,பாமரருக்கும் புரியும் வகையில் தனக்கேயுரிய நடையில் எழுதிவருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது. இத்தனை உள்ளடக்கங்கள் இருந்தபோதிலும் கவிஞனுக்கு இன்னும் தேடல் தேவையென்பது சுட்டிக்காட்டப்பட வேண்டிய விடயம். மிகச்சிறுவயதிலேயே புலம்பெயர்ந்து தொடர்ந்தும் தமிழ்மொழியில் படிப்பைத்தொடரும் வாய்பினை இழந்து புலம்பெயர் நாடுகளில் வந்து அன்னிய மொழியில் கல்விகற்றும் இன உணர்வோடும் மொழிப்பற்றோடும் எழுதிவருகின்ற இவருக்கு தட்டிக்கொடுப்புகள் மிகக்குறைவாக இருந்தாலும் அவற்றையெல்லாம் பொருட்படுத்தாது இரண்டு கவிதைத்தொகுப்புகளை வெளியிடும் அளவுக்கு வளர்ந்ததும் இன்னும் பல படைப்புகள் வெளியிட வேண்டுமென்ற எண்ணத்தோடு இருப்பதும் இவ்விடத்தில் தொட்டுக்காட்டப்படவேண்டியதே. வேலைப்பழுக்கள், பொருளாதார சிக்கல்கள், குடும்பப்பொறுப்புகள் இத்தனையும் தாங்கி வாழுகின்ற புலம்பெயர் எழுத்தாளர்களுள் இளம் கவிஞரான த.சரீஷ் அவர்கள் அத்தனை இடர்களையும் பொருட்படுத்தாது எம் இனத்திற்கு சொல்லப்படவேண்டியதை சொல்லப்பட வேண்டிய வேளையில் சொல்லியுள்ளது மட்டுமல்லாமல் சில கவிதைகள் கடந்தகாலத்தின் கண்ணாடியாக ஒவ்வொரு காலத்தின் பதிவுகளாக அமைந்திருப்பது எமது எதிர்கால சந்ததியின் சிந்தனைக்கும், தேடலுக்கும் மிகவும் உதவியாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. காலத்தின் தேவையொட்டி இவரால் எழுதப்பட்ட பல கவிதைகள் கவிஞனை தனிப்பட்டமுறையில் இனங்காணமுடியாமையினால் வாசகர்மத்தியில் வெளிவராமல் இருந்ததும் வேதனைக்குரிய விடயமே. இவரின் போராட்டக்கவிதைகள் காலத்தின் பதிவாகவும் சமூக சீர்திருத்த விடையங்கள் காலத்தின் தேவையாகவும் தனக்கே உரிய வயதிற்கான சில காதல் கவிதைகளாகவும் இவ் நூலில் இடம்பெற்றுள்ளது. ஒரு குறுகிய காலப்பகுதியில் அதாவது இவரது முதலாகது கவிதைத்தொகுப்பாகிய "தென்றல் வரும்தெரு" 2002 ஆம் ஆண்டு வெளிடப்பட்டபின் இன்றைய காலப்பகுதிக்குள் (27.02.2004) இந்த கவிதைத்தொகுப்பினை எழுதிமுடித்துள்ளார் என்பது இவரது மனதில் உள்ள தாக்கத்தை சுட்டிக்காட்டுகின்றது. இச்சிறுவயதில் இரண்டு கவிதைநூலை வெளியுட்டுள்ள கவிஞர் த.சரீஷ் அவர்களின் தமிழ்ப்பணி பாராட்டுதலுக்குரியது அது மட்டுமல்ல எழுத்துத்துறையோடு நின்றுவிடாமல் பிரான்சு பல்கலைக்கழக தமிழ்மாணவர் சங்கத்தில் இணைந்து அவர்களின் வேலைத்திட்டங்களிலும் சமூகசேவைத் திட்டங்களிலும் தன்னையும் இணைத்துள்ளார். இந்தக்கவிஞனை இனம்கண்டு பிரான்சு பல்கலைக்கழக தமிழ் மாணவர்கள் இவரது இரண்டாவது கவிதைத்தொகுப்பை வெளியிடுவது அவர்களுடைய பெருந்தன்மையான சிந்தனையையும் அதேநேரத்தில் அவருக்குக்கிடைத்த நல்ல வாய்பாகவும் எண்ணத்தோன்றுகின்றது. அத்தோடு இந்தநூலை வெளியிடுபவர் பிரான்சு அரசாங்க கல்வியமைச்சு அதிகாரிகள் என்று அறிந்ததையிட்டு பெரிமிதம் கொள்வதோடு மட்டுமல்லாமல் இன்நூல் இன்னும் ஒரு படி மேலோங்கி நிற்கிறது ஏனெனில் இந்த நூலை வெளியிடுபவர் பிரஞ்சு அரசாங்கத்தின் கல்வியமைச்சு அதிகாரியாக இருப்பதனால். அத்தோடு ஈழத்தமிழர் ஒருவரின் நூலை முதல்முதலாக பிரான்சு கல்வியமைச்சு வெளியிடுவதில் இந்தக் கவிஞனும் அனைத்துலகத் தமிழர்களும் பெருமைப்படவேண்டிய விடையம். த.சரீஷ் அவர்களின் தமிழ்ப்பணி தொடர எனது வாழ்துக்கள். இந்த இளம் கவிஞனை வளர்கும் பொறுப்புணர்வோடு இலக்கிய ஆர்வலர்கள் ஊக்கமும்,ஆக்கமும் கொடுக்கவேண்டுமென்று கேட்டுக்கொள்ளுகின்றேன். அன்புடன் -தொகுப்பாளர் ரவி மாஸ்டர் ...................................................................................................................................................... [b]எழுதியவன் பேசுகிறேன்... (என்னுரை) காலநதியை கடந்துசெல்லும் படகோட்டி நான்...! இரண்டு வேறுபட்ட வாழ்கைப்புத்தகத்தை ஒரே நேரத்தில் வாசிக்கத்தெரிந்த வாசகன்...! ஒரு கிராமத்து கலாச்சாரத்தில் இருந்து வந்து முற்றிலும் மாறுபட்ட மேல்நாட்டு கலாச்சார வாழ்கையில் வாழப்பழகியவன். மணல் அள்ளி விளையாடிப் பழக்கப்பட்ட கைகளுக்கு பனியள்ளி விளையாடவும் பழக்கப்படுத்திக்கொண்டவன். உலகம் விஞ்ஞானமயமாக்கப்பட்டு கண்டுபிடிப்புகள் சாதனைகள் என்று மனிதனை விஞ்ஞான உலகம் விழுங்கிக்கொண்டிருக்கிறது. பேச்சுக்கு பயன்படும் மொழிகள் எல்லாம் பயன்படாமல்போய் வாழ்கைக்கு மட்டும் பயன்படும் மொழிகழுக்கு மட்டும் இடமிருக்கும் இந்த சமுதாயச் சந்தையில் உலகத்தரத்திற்க்கு என் தமிழை உயர்த்திப்பிடிக்கும் ஆதங்கத்தால்... வேறுபட்ட இனங்களுக்கும், கலாச்சாரத்திற்க்கும், மொழிகளுக்கும் மத்தியிலும் தமிழை தலைநிமிர்திப் பார்க்கும் சமுத்திர முயற்சியில் மிகச்சிறிய துளிதான் இந்த ""விடியலின் முகவரி''....! எனக்கு "அகதி" என்ற பெயர் சூட்டப்பட்டபின் புலம்பெயர் நிலங்களில் கூட்டிவந்து குளிர்பனிபடர்ந்த மண்ணில் நடுவதற்காக வேரும் இல்லாமல் வேரோடு ஒட்டிவரும் மண்ணுமில்லாமல் என்னை என் தாய் மண்ணில் இருந்து பpரித்துக்கொண்டு வரும்போது நான் அங்கிருந்து காணக்கொண்டுவந்த கனவுகளில் இந்த ""விடியலின் முகவரியும்"" ஒன்று. இந்த கவிதைத்தொகுப்பின் முதல் கவிதையை தாயகத்தில் ஒரு கடற்கரை கிராமத்தில் தென்னைமரத்தடியில் என்னைமறந்து எண்ணங்களில் தொடங்கி... பாரீசில் ஒரு குளிர்காலத்து மாலைப் பொழுதினிலே தென்றல் மெதுவாக தவழ்ந்துவரும் யன்னலோரம் எழுத்துக்களாக முடித்திருக்கிறேன். தமிழீழ விடுதலைப்போராட்ட வரலாறு என்பது ஒரு நீண்ட விரிந்த மிகப்பெரிய சமுத்திரம். அந்த சமுத்திரத்தில் குதித்து என்னால் முடிந்தவற்றை பருகிவிட முயன்றிருக்கிறேன்...! இந்தப்படைப்புகள் உணர்வுகளினதும், சிந்தனையினதும் வெளிப்பாடானால்.... இதற்கு உயிர் எங்கிருந்து வருகிறது...? உண்மைதான் உயிர் யதார்த்தம்தான் உயிர் அதாவது... யதார்த்தம் இல்லாத படைப்புகள் கல்லினாலோ அல்லது மரத்தினாலோ ஆக்கப்பட்ட சிலைபோன்றது அதற்கு அழகு இருக்கக்கூடும் உயிர் இருக்காது...! வர்ணனை வார்த்தைகள்தான் கவிதையை அழகுபடுத்தும் ஆபரணங்களே தவிர அவைகளே உயிரென்று ஆகிவிட முடியாது. ஒரு உன்னதமான படைப்புக்கு யதார்தம்தான் உயிர்கொடுக்கும் என்றால்... இந்த யாதார்த்தம் என்றால் என்ன...? அது எங்கிருந்து வருகிறது..? நீ எங்கிருந்து வந்தாயோ... அங்கிருந்துதான் வருகிறது யதார்தமும் நீ எங்கு வாழ்கிறாயோ அங்கேதான் வாழ்கிறது யதார்தமும் இன்னும் சொல்லப்போனால்... அது... பார்த்து, பேசி, கேட்டு, உணர்ந்து என்று நீழும்..... இதுவரை நான் கடந்துவந்த பாதைவழி... நான் பார்த்து, பேசி, கேட்டு, உணர்ந்த சம்பவங்களை கடந்து முடிந்த காலங்களின் துண்டுகளை பொழிந்து சிதறிய மழைத்துளிகளை சிக்கனமாய் சேகரிக்கும் ஒரு ஏழை விவசாயிபோல் பொறுமையுடன் சிரமப்பட்டு பொறுக்கி அதற்க்கு கவிதை என்ற பெயர்இட்டு அழகுபடுத்தி பார்த்திருக்கிறேன்...! படைப்புகள் உணர்வுகளின் வெளிப்பாடாக இருந்தபோதிலும் மொழிவடிவில் இல்லாத மூலங்களை உணருவதும், சிந்திப்பதும் சுலபமாகத்தான் இருக்கும் ஆனால்.... அவைகளை மொழிவடிவில் செதுக்குவதென்பது பெரியதொரு பொறுப்புக்களுடன் கூடிய மிகவும் கடினமான காரியமாய் இருந்தது. தாய்நிலத்தின் விடுதலைப்போராட்ட வரலாற்றில் நடந்த பல அனியாயங்களையும் அழுகுரல்களையும் ஆபத்துக்களையும் ஆச்சரியங்களையும் எழுத்துக்களாக படைக்கும்-ஒரு அற்புதமான சந்தர்ப்பம் யாழ்மாவட்டத்தில் ஒரு கடலோர கிராமத்து ஈரமண்ணில் கால்புதைத்து விளையாடித்திரிந்த எனக்கு கிடைத்திருப்பதனால் என் புருவங்களும் பெருமையடைகின்றன. இந்த புரட்சிகரமான படைப்பின் ஒவ்வொரு எழுத்தின் உச்சரிப்பிலும் என் இதயத்தின் ஓசை ஓங்கி ஒலித்துக்கொண்டிருக்கிறது. நான் இந்த மண்ணைவிட்டு மறைந்தாலும் ஓயாது ஒலித்துக்கொண்டிருக்கும் என் கவிதைகளும் உணர்வுகளும். பெற்றெடுத்த அன்னைக்கும் பெயர்இட்ட தந்தைக்கும் கல்லாய் இருந்த என்னை சிலையாய் செதுக்கிவைத்த ஆசான்களுக்கும் பிறந்தபின்பு தவழ்துதிரிந்த தாய்நிலத்திற்கும் தங்கத்திர்க்குரிய தன்மையைக்கொண்ட தாய்மொழியாம் என் தமிழுக்கும் தலைவணங்கும் நொக்குடனும்... மலைபோல் துயர்சுமந்து நிற்கும் மக்களுக்கும் வழிநடத்தி விடியலை நோக்கி அழைத்துச்செல்லும் மன்னனுக்கும் துயரம் என நினைக்காது தோள்கொடுக்கும் வீரருக்கும் துச்சமென நினைத்து உயிர்கொடுத்த மாவீரருக்கும் விழிகளில் நீர்கசிய "விடியலின் முகவரி" என்ற சிறு மலரால் என்னால் முடிந்த மரியாதைசெய்திருக்கின்றேன். இப்போது... இருள் கொஞ்சம் விலகிக்கொண்டிருக்கிறது அதோ தெரிகிறது... நாளைய பொழுதின் விடியலின் முகவரி...! ஒரு குளிர்ந்த இரவில் நனைந்த மனதுடன்... த.சரீஷ் .................................................................................... குறிப்பு: 1. வெகுவிரைவில் யேர்மனி தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் ஆதரவுடன் யேர்மனியில் இன் நு}லின் அறிமுகவிழா நடைபெறவுள்ளது அதற்கான காலமும் இடமும் பின்னர் அறியத்தருகிறேன். 2. இந்த நு}லினைப் பெற்றுக்கொள்ள விரும்புபவர்கள் என் மின்னஞ்சல் வழியாக தொடர்புகொள்ளலாம். sharish_fr@hotmail.com நன்றியுடன்.... த.சரீஷ் 30.03.2004 (பாரீஸ்) - shanmuhi - 03-30-2004 ஒரு குளிர்ந்த இரவில் நனைந்த மனதுடன்... தங்களின் விடியலின் முகவரியின் அறிமுகம் நன்றாக இருந்தது. தங்கள் ஆக்கங்கள் மேலும் வளர வாழ்த்துக்கள்.... - Eelavan - 03-30-2004 இப்போது... இருள் கொஞ்சம் விலகிக்கொண்டிருக்கிறது அதோ தெரிகிறது... நாளைய பொழுதின் விடியலின் முகவரி...! இருட்டைப் பழித்துக் கொண்டிருப்பதை விட ஒரு மெழுகுதிரியாய் தன் கவிதையை ஏறி வைத்துள்ளர் கவிஞர் சரீஷ் விடியலின் முகவரியில் எங்கள் பெயரையும் எழுதிக் கொள்வதற்காக வரிசையில் நாங்கள்......... - Paranee - 03-30-2004 விடியலின் முகவரி தமிழிற்கான முகவரி இளங்கவியின் இதயத்து}றல் சாரலாய் மனமெங்கும் வீழ்கின்றது வாழ்த்துக்கள் நண்பா - இளைஞன் - 03-30-2004 முயற்சிக்குப் பாராட்டுகள் சரீஸ்... விடியலின் முகவரி இளங்கவி உன்வரி வளர்க |