Welcome, Guest
You have to register before you can post on our site.

Username
  

Password
  





Search Forums

(Advanced Search)

Forum Statistics
» Members: 8,982
» Latest member: lucilegr4
» Forum threads: 9,058
» Forum posts: 83,244

Full Statistics

Online Users
There are currently 250 online users.
» 0 Member(s) | 247 Guest(s)
Applebot, Bing, Google

Latest Threads
±ôÀÊ ÀÈ¢ì¸Ä¡õ
Forum: நகைச்சுவை
Last Post: UsArgum
01-10-2026, 09:07 AM
» Replies: 28
» Views: 10,292
Mrs.Sirimao Bandaranayake
Forum: நகைச்சுவை
Last Post: GeraTep
11-14-2025, 10:46 AM
» Replies: 14
» Views: 3,229
Farty time
Forum: நகைச்சுவை
Last Post: ㄹㅈㄷㄹㅈ
08-26-2025, 03:48 PM
» Replies: 11
» Views: 5,603
கனவே கலைகிறதே
Forum: பொழுதுபோக்கு
Last Post: KULAKADDAN
04-30-2006, 06:37 PM
» Replies: 0
» Views: 6,288
Karuna Cadres were captur...
Forum: பிறமொழி ஆக்கங்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:17 PM
» Replies: 4
» Views: 8,621
என்ன நடந்தது யாழிற்கு?
Forum: உங்கள் கருத்துக்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:03 PM
» Replies: 42
» Views: 31,047
முடியுமானால் முயற்ச்சியுங...
Forum: போட்டிகள்
Last Post: Subiththiran
04-30-2006, 05:00 PM
» Replies: 15
» Views: 14,456
**சுடேக்கு** புதிர் விளைய...
Forum: போட்டிகள்
Last Post: kavithaa
04-30-2006, 04:30 PM
» Replies: 63
» Views: 38,471
புல்மோட்டையில் தாக்குதல்
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: Sriramanan
04-30-2006, 04:10 PM
» Replies: 2
» Views: 8,022
போதனை வேண்டாம்! பு...
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: alika
04-30-2006, 03:13 PM
» Replies: 4
» Views: 6,238

 
  காணவில்லை
Posted by: Mathan - 03-29-2004, 12:38 AM - Forum: அறிமுகம் - Replies (150)

நிறைய உறுப்பினர்களை களத்தில் இருந்து காணவில்லை. எங்கே? வரவேற்புடன் போய்விட்டார்களா? சிலர் புதிதாக இணைக்கின்றார்கள் ஆனால் வரவேற்பு பகுதிக்கு கூட வருவதில்லை. ஏன்?

Print this item

  வாகரையின் மேகங்களே !!!
Posted by: shanthy - 03-28-2004, 08:16 PM - Forum: செய்திகள் : தமிழீழம் - Replies (1)

வாகரையின் மேகங்களே !!!

தற்போதைய தாயகத்தின் காலத்தினைக் கருத்தில் கொண்ட இப்பாடலானது உங்கள் அனைவரையும் வந்தடைய வேண்டும். உங்கள் நண்பர்கள் அனைவருக்கும் இப்பாடலை அறிமுகம் செய்யுங்கள்.

வாகரையின் மேகங்களே !!! http://www.tamilwebradio.com/italy.htm

Print this item

  ஈழத்தமிழ் மக்களுக்கு என் அன்பு வணக்கங்கள்
Posted by: Jaffna_voice - 03-28-2004, 02:58 PM - Forum: சுமுதாயம் (வாழ்வியல்) - Replies (30)

யாழ் கள நண்பர்களுக்கு சிங்கப்பூரில் இருந்து செந்தூரனின் வணக்கங்கள்

Print this item

  இதன் பொருள் என்ன
Posted by: aathipan - 03-28-2004, 03:25 AM - Forum: கவிதை/பாடல் - Replies (11)

என் சுவாசக்காற்றே படத்தில் வரும் தீண்டாய் மெய் தீண்டாய் பாடலை நீங்கள் கேட்டிருப்பீர்கள். அந்தப்பாட்டல் கவிஞர் வைரமுத்து எழுதியது. அந்தப்பாடல் தொடக்கத்தில் ஐந்து வரிகள் எதோ ஒரு சங்கஇலக்கியத்தில் இருந்து எடுத்து சேர்க்கப்பட்டுள்ளது. அதில் பசலைநோயால் அல்லலுறும் தலைவியின் வேதனையை தலைவியே பாடுவதாக உள்ளது.

ராகா.கொம் தளத்தில் அதன் வரிகள் கிடைத்தன.

<b>கன்றும் உண்ணாது களத்திலும் படாது
நல்லான் தீம்பால் நிலத்து உக்கான்கு
எனக்கும் ஆகாது என் ஐக்கும் உதவாது
பசலை உனியார் வேன்டும்
திதலை அல்குல் என் மாமைக் கவினே</b>

இதில் எழுத்துப்பிழைகள் இருக்கலாம். இந்தச்செய்யுள் எந்த இலக்கியத்தைச்சேர்ந்தது. இதன் பொருள் என்ன என்பதை யாரும் தெரிந்து கூறமுடியுமா?.

நன்றி
அன்புடன் ஆதிபன்

http://www.raaga.com/channels/tamil/lyrics/182.html

Print this item

  நீதி நூல்கள் ஓளஔவையார் இயற்றிய ஆத்திசூடி
Posted by: sWEEtmICHe - 03-27-2004, 11:29 PM - Forum: கவிதை/பாடல் - Replies (18)

[size=15]
நீதி நூல்கள்
ஓளஔவையார்
இயற்றிய
ஆத்திசூடி

ஓளஔவையார் தமிழ் நாட்டில் வாழ்ந்த பெண் புலவர். வள்ளல் அதியமான்
அளித்த நெல்லிக்கனியை ஔவையார் உண்டு நீண்ட காலம் வாழ்ந்தார்
எனச் சொல்லப்படுகின்றது. அவர் இயற்றிய பிற நூல்கள்
கொன்றை வேந்தன், மூதுரை, நல்வழி, ஞானக்குறள், அசதிக்கோவை முதலியன.

கடவுள் வாழ்த்து

ஆத்தி சூடி அமர்ந்த தேவனை
ஏத்தி ஏத்தி தொழுவோம் யாமே.

நூல்

1. அறஞ் செய விரும்பு

2. ஆறுவது சினம்

3. இயல்வது கரவேல்

4. ஈவது விலக்கேல்

5. உடையது விளம்பேல்

6. ஊக்கமது கைவிடேல்

7. எண் எழுத்து இகழேல்

8. ஏற்பது இகழ்ச்சி

9. ஐயம் இட்டு உண்

10. ஒப்புரவு ஒழுகு

11. ஓதுவது ஒழியேல்

12. ஔவியம் பேசேல்

13. அஃகஞ் சுருக்கேல்

14. கண்டு ஒன்று சொல்லேல்

15. ஙப் போல்வளை

16. சனி நீராடு

17. ஞயம் பட உரை

18. இடம் பட வீடு எடேல்

19. இணககம்அறிந்து இணங்கு

20. தந்தை தாய்ப் பேண்

21. நன்றி மறவேல்

22. பருவத்தே பயிர் செய்

23. மண் பறித்து உண்ணேல்

24. இயல்பு அலாதன செயேல்

25. அரவம்ஆடேல்

26. இலவம் பஞ்சில் துயில்

27. வஞ்சகம் பேசேல்

28. அழகு அலாதன செயேல்

29. இளமையில் கல்

30. அரனை மறவேல்

31. அனந்தல் ஆடேல்

32. கடிவது மற

33. காப்பது விரதம்

34. கிழமைப் பட வாழ்

35. கீழ்மை அகற்று

36. குணமது கைவிடேல்

37. கூடிப்பிரியேல்

38. கெடுப்பது ஒழி

39. கேள்வி முயல்

40. கைவினை கரவேல்

41. கொள்ளை விரும்பேல்

42. கோதாட்டு ஒழி

43. சக்கர நெறி நில்

44. சான்றோர் இனத்திரு

45. சித்திரம் பேசேல்

46. சீர்மை மறவேல்

47. சுளிக்கச் சொல்லேல்

48. சூது விரும்பேல்

49. செய்வன திருந்தச் செய்

50. சேரிடம் அறிந்து சேர்

51. சை எனத் திரியேல்

52. சொல் சோர்வு படேல்

53. சோம்பித் திரியேல்

54. தக்கோன் எனத் திரி

55. தானமது விரும்பு

56. திருமாலுக்கு அடிமை செய்

57. தீவினை அகற்று

58. துன்பத்திற்கு இடம் கொடேல்

59. தூக்கி வினை செய்

60. தெய்வம் இகழேல்

61. தேசத்தோடு ஒத்து வாழ்

62. தையல் சொல் கேளேல்

63. தொண்மை மறவேல்

64. தோற்பன தொடரேல்

65 நன்மை கடைப்பிடி

66. நாடு ஒப்பன செய்

67. நிலையில் பிரியேல்

68. நீர் விளையாடேல்

69. நுண்மை நுகரேல்

70. நூல் பல கல்

71. நெல் பயிர் விளை

72. நேர்பட ஒழுகு

73. நைவினை நணுகேல்

74. நொய்ய உரையேல்

75. நோய்க்கு இடம் கொடேல்

76. பழிப்பன பகரேல்

77. பாம்பொடு பழகேல்

78. பிழைபடச் சொல்லேல்

79. பீடு பெற நில்

80. புகழ்ந்தாரைப் போற்றி வாழ்

81. பூமி திருத்தி உண்

82. பெரியாரைத் துணைக் கொள்

83. பேதமை அகற்று

84. பையலோடு இணங்கேல்

85. பொருள்தனைப் போற்றி வாழ்

86. போர்த் தொழில் புரியேல்

87. மனம் தடுமாறேல்

88. மாற்றானுக்கு இடம் கொடேல்

89. மிகைபடச் சொல்லேல்

90. மீதூண் விரும்பேல்

91. முனைமுகத்து நில்லேல்

92 மூர்க்கரோடு இணங்கேல்

93. மெல்லி நல்லாள் தோள் சேர்

94. மேன் மக்கள் சொல் கேள்

95. மை விழியார் மனை அகல்

96. மொழிவது அற மொழி

97. மோகத்தை முனி

98. வல்லமை பேசேல்

99. வாது முற்கூறேல்

100. வித்தை விரும்பு

101. வீடு பெற நில்

102. உத்தமனாய் இரு

103. ஊருடன் கூடி வாழ்

104. வெட்டெனப் பேசேல்

105. வேண்டி வினை செயேல்

106. வைகறைத் துயில் எழு

107. ஒன்னாரைத் தேறேல்

108. ஓரம் சொல்லேல

Print this item

  தாத்தாவின் மீது தடையை நீங்குங்கள்
Posted by: Kanthar - 03-27-2004, 07:30 PM - Forum: உங்கள் கருத்துக்கள் - Replies (23)

சரியோ பிழையோ தாத்தா தன்ர கருத்தை மற்றவை என்ன சொல்லினம் எண்டதை பாக்காமல் எழுதிவந்த சீவன். அவரையும் கொஞ்சம் விடுங்கோ...
அதாலை இங்கை குடியொண்டும் மூழ்கிப்போடாது.
யதார்த்தவாதி வெகுசன விரோதி எண்ட நிலைதான் இது. நீங்கள் சொல்லுறதை மற்றவை கேக்கவேணும். மற்றவை என்ன சொல்லினம் எண்டதை கேக்கவேண்டாம். சொல்லவாவது விடுங்கோ.
போற வழிக்கு உங்களுக்கு புண்ணியமாவது கொஞ்சம் கிடைக்கும்.

Print this item

  பிரேமானந்தா &quot;தொண்டு &quot; தொடர்கிறது...!
Posted by: kuruvikal - 03-27-2004, 10:41 AM - Forum: செய்திகள்: உலகம் - Replies (15)

[b]சிறைக்கு அருகே ரகசிய ஆசிரமம் நடத்தும் பிரேமானந்தா!!


திருச்சி செக்ஸ் சாமியார் பிரேமானந்தா, சிறையில் இருந்தபடியே மர்ம ஆசிரமத்தை நடத்துவதாக புகார் எழுந்துள்ளது.

திருச்சி புதுக்கோட்டை சாலையில் ஆசிரமம் என்ற பெயரில் இளம் பெண்கள், சிறுமிகளுடன் சல்லாபம் நடத்தி வந்த பிரேமானந்தா, சில பெண்களைக் கொலை செய்தும், கற்பழித்ததும் வெளியே தெரிய வர பிரபலமானார்.

பின்னர் அவர் கைது செய்யப்பட்டார். அவரது ஆஸ்ரமத்தில் பல புளூ பிலிம்களும் எடுக்கப்பட்ட விவரமும், அதில் சில விவிஐபிக்களின் நிர்வாண காட்சிகளும் அடக்கும் என்பதும் தெரியவந்தது. கைது செய்யப்பட்ட பிரேம்சுக்கு இரட்டை ஆயுள் தண்டனை வழங்கப்பட்டு தற்போது கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இந் நிலையில் பிரேமானந்தா குறித்து பரபரப்பான புகார் எழுந்துள்ளது. கடலூர் சிறைக்கு அருகிலேயே மர்ம ஆசிரமத்தை பிரேமானந்தா நடத்தி வருவதாக அப்பகுதி மக்கள் புகார் கூறுகிறார்கள்.

இலங்கையைச் சேர்ந்த அந்த மர்ம ஆசிரமத்தை பராமரித்து வருவதாகவும், ஆனால் பிரேமானந்தாவின் மறைமுக கண்காணிப்பில் இந்த ஆசிரமம் நடத்தப்படுவதாகவும் கூறப்படுகிறது.

வழக்கு விசாரணைக்காக சிறையிலிருந்து கொண்டு செல்லப்படும்போது, போலீசாருக்கு மாமூல் கொடுத்துவிட்டு, இந்த ஆசிரமத்திற்கு பிரேமானந்தா வருவதாகவும், அங்கு பூஜைகள் நடத்தி தன்னைக் காண வரும் பக்தர்களுக்கு ஆசி வழங்குவதாகவும் அப்பகுதியினர் கூறுகிறார்கள்.

இந்த மர்ம ஆசிரமத்திற்கு ஏராளமான தான் அதிக அளவில் வருவதாகவும், பிரேமானந்தா சம்பந்தப்பட்டிருப்பதால் முறைகேடுகள் நடக்க வாய்ப்புள்ளதாகவும், போலீஸார் சிலர் இதற்கு உடந்தையாக இருப்பதாகவும் அப் பகுதியினர் குற்றம் சாட்டுகின்றனர்.

இரட்டை ஆயுள் தண்டனை வழங்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், சிறைக்கு அருகிலேயே, போலீஸ் உதவியுடன் பிரேமானந்தா மர்ம ஆசிரமத்தை நடத்துவதாக வெளியாகியுள்ள செய்தியால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


Thatstamil.com

Print this item

  காதல் காதல் காதல்
Posted by: Mathan - 03-27-2004, 04:13 AM - Forum: சுமுதாயம் (வாழ்வியல்) - Replies (68)

காதல் காதல் காதல்

காதலித்துப் பார் உன்னை சுற்றி ஒளிவட்டம் தோன்றும் என்று வைரமுத்து எழுதியுள்ளார். ஓளிவட்டம் தோன்றுமா என்று எனக்கு தெரியாது ஆனால் காதலில் தோல்வியுற்ற ஆண்களில் முகத்தில் தாடி தோன்றுவதை நான் பார்த்திருக்கின்றேன். பெண்களும் அதைப்போல தாடி வளர்த்து வெளிக்காட்ட முடியாது என்பதும் உண்மை..

இருமனமும் ஒன்றாக சேர்ந்து காதலித்த பின்பு காதலில் ஏற்படும் தோல்விக்கு (காதல் தோல்வி அடையாது அது பிரிவு மட்டுமே என்பது வேறு விடயம்) யார் பொதுவாக காரணம்? ஆணா இல்லை பெண்ணா? எதுமாதிரியான சூழ் நிலைகள் இந்த பிரிவை ஏற்படுத்துகின்றன?

Print this item

  யார் இந்த யாஸீன் ?
Posted by: Mathan - 03-27-2004, 03:02 AM - Forum: செய்திகள்: உலகம் - No Replies

யார் இந்த யாஸீன் ?

பலஸ்தீனத்தில் இயங்கும் ஹமாஸ் எனும் மத தீவிரவாத இயக்கத்தின் ஆன்மீகத் தலைவர் ஷேக் அஹமத் யாஸீன் சக்கர நாற்காலியில் அமர்ந்திருக்கும் மெலிந்த தோற்றமுடைய யாஸீன் நீண்ட பழுத்த தாடியுடன் காணப்படுவார். பலஸ்தீன எழுச்சிப் போராட்டம் எனப்படும் இன்திபாதாவுடன் ஆரம்பிக்கப்பட்ட ஹமாஸ் இயக்கத்தை தோற்றுவித்த புகழுக்குரிய ஷேக் அஹமத் யாஸீன் திங்களன்று இஸ்ரேலிய ஏவுகணைத் தாக்குதலுக்குள்ளாகி உயிரிழந்தார்.

ஷேக் அஹமத் யாஸீனின் கொலையை உலக நாடுகள் கடுமையாக கண்டித்துள்ளன. ஆயிரக்கணக்கான பலஸ்தீனர்கள் அஹமத் யாஸீனின் மறைவு குறித்து கண்ணீர் வடித்து துடிதுடிக்கும் போது இஸ்ரேல் மிக லாவகமாக நிம்மதிப் பெருமூச்சு விட்டுக்கொண்டிருப்பதை உலக கமெராக்கள் மிகவும் துள்ளியமாக படம் பிடித்துக் கொண்டிருக்கும்.

அஹமத் ஆன்மீகத் தலைவராகவும் பலஸ்தீனன் ஒருவனின் மனஆதங்கத்தை, தேவையை, விசுவாசத்தை மாத்திரமல்லாது, முழு பலஸ்தீனத்தையே பிரதிநிதித்துவப்படுத்திக் கொண்டுமிருந்தார். யாஸீனின் கொலை உலக அரங்கில் பெரும் மாறுதல்களை ஏற்படுத்தும் என்பதில் ஐயமில்லை.அதேவேளை, யாஸீனின் மறைவால் மத்திய கிழக்கில் பெரும் பிரச்சினையையும் சிக்கலையும் தோற்றுவிக்கும் என்பதும் உறுதி.

<b>யார் இந்த யாஸீன் ?</b>

""கோழைக்கோ ஆயுள் முழுவதும் சாவு வீரனுக்கோ ஒரே முறையில் சாவு'' என்ற வாசகத்தை கடந்த ஆண்டு யாஸீன் பி.பி.சி.க்கு அளித்த பேட்டியொன்றின் போது தெரிவித்தார். அஹமத் யாஸீன் கடந்த 17 ஆண்டுகளாக இஸ்ரேலுக்கு எதிரான தாக்குதல்களை மேற்கொள்பவர் என்ற குற்றச்சாட்டுகளுக்குள்ளாக்கப்பட்டுள்ளார்.

இவர் பலஸ்தீனம் என்ற ஒரு தனிநாடு இருந்த காலப் பகுதியில் 1938 ஆம் ஆண்டு பிறந்தார்.

கெய்ரோவில் கல்வி கற்ற யாஸீன் சிறுவயது முதல் நல்ல திறமைசாலியாகவும், விளையாட்டு வீரராகவும் திகழ்ந்தார்.

இஸ்ரேல்பலஸ்தீனம் என்பது இரு நாடு என்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்து வந்த யாஸீன் பலஸ்தீனம் மாத்திரமே, அதில் இருவேறு கூறு இல்லை என்றும் தைரியமாக கூறிவந்தார்.

இளமைக்காலத்தில் பாரிசவாதத்தால் உடல் ஊனமான நிலையிலும் யாஸீன் இஸ்ரேலின் ஆதிக்கத்தை வெறியர் போல் எதிர்த்து வந்தார்.

1987 ஆம் ஆண்டு இஸ்ரேலுக்கு எதிராக கிளர்ந்தெழுந்த இந்திபாதா எனும் கிளர்ச்சியின் காரணகர்த்தாவாக இருந்த அஹமத் யாஸீன் 1988 ஆம் ஆண்டு பலஸ்தீனத்தின் முன்னாள் தலைவரான அபூ ஜிஹாத் என்பவரை இஸ்ரேல் படுகொலை செய்ததை அடுத்து இஸ்ரேலுக்கு எதிரான தாக்குதல்களை ஆரம்பித்தார்.பலஸ்தீனர்களை கொலை செய்வதாக குற்றஞ்சாட்டப்பட்ட யாஸீன் சிறையில் அடைத்து வைக்கப்பட்டார். ஜோர்தானின் முன்னாள் மன்னர் ஹுஸைனினால் விடுவிக்கப்பட்ட யாஸீனுக்கு தேசிய தலைவருக்கு அல்லது மிகப்பெரிய வீர நாயகனுக்கு வழங்கப்படும் மரியாதை பலஸ்தீனர்களால் வழங்கப்பட்டது.

பலஸ்தீன எழுச்சிப் போராட்டத்தோடு யாஸீன் ஹமாஸ் இயக்கத்தையும் தோற்றுவித்தார். யாஸீன் பலஸ்தீனர்களின் தலைவர் என்றே வர்ணிக்கப்பட்டார்.

<b>
ஹமாஸின் அரசியல் முக்கியத்துவம் </b>

1987 ஆம் ஆண்டு பலஸ்தீனத்தில் இடம்பெற்ற பலஸ்தீன எழுச்சிப் போராட்டத்தின் போது, ஹமாஸ் இயக்கம் தோற்றுவிக்கப்பட்டது. ஹமாஸ் பலஸ்தீன தலைவருக்கும் பலஸ்தீனர்களுக்கும் பெரும் ஆதரவினை நல்கிவரும் ஒரு இயக்கமாகும். ஆனால், தலைவர் அரபாத்தைவிட ஹமாஸ் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

இஸ்ரேல்பலஸ்தீனம் என்று இரு நாடுகளின் திட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் ஹமாஸ் அமெரிக்காவிற்கும், இஸ்ரேலுக்கும் பெரும் சவாலாகவே இருந்தது.ஆயினும், அரபாத்தின் ஊழல், மதத்தை மீறும் போக்கு, மக்களுக்கு அநியாயம் இழைத்தல், முஸ்லிம்களுக்கு துரோகமிழைத்தல் என்பவற்றுக்காக அரபாத் ஹமாஸினால் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கதாகும். அரபாத்தின் ரகசிய திட்டங்களை அம்பலப்படுத்திய ஹமாஸ் இஸ்ரேலுக்கு எதிராக இளைஞர்களை வழிநடத்தி தற்கொலைத் தாக்குதல்களையும் நடத்தி வந்தது. இந்த தற்கொலை தாக்குதல்களை முன்னின்று, நடத்தியவர் இயக்கத் தலைவராக இருந்த ஷேக் அஹமத் யாஸீன் என்பவராவார்.

அல்லற்படும் பலஸ்தீனர்களுக்கு உதவியதோடு அகதிகளும் ஆதரவு வழங்கன பலஸ்தீனத்திலுள்ள பள்ளிவாசல்களுக்கும் அங்கிருக்கும் ஏனைய ஜிஹாத் இயக்கங்களுக்கும் ஹமாஸ் ஆலோசனை வழங்கி வந்தது.

இதனிடையே அரபாத்தின் வலதுகரமாக இயங்கிய ஹமாஸ் தலைவர் யாஸீனின் படுகொலை அரபாத்தை சகலவகையிலும் பின்னடைவை ஏற்படுத்தும் என்பது உறுதி.

<b>மத்திய கிழக்கில் ஏற்படும் தாக்கம்</b>

படுகொலை செய்யப்பட்ட ஹமாஸ் இயக்கத்தின் தலைவர் ஷேக் அஹமத் யாஸீனின் கொலை யை அடுத்து இஸ்ரேலியர்களின் தலையை உருள விடுவதாக ஹமாஸ் சூளுரைத்துள் ளது. ஹமாஸ் தலைவர் யாஸீனின் மரண ஊர்வலத்தில் ஆயிரக்கணக்கான பலஸ்தீனர்கள் கலந்து கொண்டனர். மரண ஊர்வலம் நடைபெற்றுக் கொண்டிருக்கையில் தொலைக்காட்சியில் தோன்றிய இஸ்ரேலிய பிரதமர் ஏரியல் ஷெரோன் ஹமாஸ் தலைவரை கொன்றமைக்காக படையினருக்கு நன்றி கூறியுள்ளார். உலக நாடுகளால் கண்டிக்கப்பட்டுள்ள ஹமாஸ் இயக்கத்தலைவரின் படுகொலை மத்திய கிழக்கில் பெரும் பதற்றத்தைத் தோற்றுவித்துள்ளது. இதுகால வரையில் குறிப்பிட்ட சில காரணங்களுக்காகவே இடம் பெற்ற தற்கொலை குண்டுத்தாக்குதல்களின் எண்ணிக்கை இனி எல்லையற்ற விதத்தில் நடைபெறக்கூடும்.

மத்திய கிழக்கு அமைதித்திட்டம் ஹமாஸ் தலைவர் கொலையுடன் நின்றுவிட்டது என்றே கொள்ள வேண்டும். இஸ்ரேல்பலஸ்தீன பேச்சுவார்த்தைக்கே இடம் இல்லாமல் போகக்கூடியளவிற்கு இஸ்ரேலுக்கு எதிரான பலஸ்தீனர்களின் தாக்குதல்களை அதிகரிக்கவுள்ளன எனலாம்.

ஆனால், ஹமாஸ் தலைவரின் மறைவு பலஸ்தீனில் அரபாத்தின் கை ஓங்க வகை செய்யலாம். ஏனெனில் அரபாத்தின் ஒவ்வொரு நடவடிக்கைக்கும் கண்டனம் தெரிவித்த யாஸீன் மறைந்தது அரபாத்தின் அதிகாரத்தை வலுப்படுத்தும்.

யாஸீனைப் போன்ற ஒரு தலைவரை தேடுவதில் அல்லது நியமிப்பதில் ஹமாஸ் இயக்கத்தில் பிரச்சினைகள் எழலாம். அத்துடன் நீண்ட காலத்திற்கு ஹமாஸின் வலு குறைவடையவும் கூடும்.

மொத்தத்தில் மத்திய கிழக்கு நாடுகளில் ஒருவகை பதற்றத்திலுள்ள ஹமாஸ் தலைவரின் படுகொலை சதாமின் சரிவில் ஏற்பட்ட இழப்பைவிட மாபெரும் தலைமையின் இழப்பை ஏற்படுத்தும் என்பதில் எதுவித ஐயமுமில்லை.யாஸீனின் மறைவு மத்திய கிழக்கு நாடுகளுக்கு ஈடுசெய்ய முடியாத இழப்பு என்றே கொள்ள வேண்டும்.

நன்றி - வீரகேசரி

Print this item

  விழா எடுப்பாரா..? இல்லை தலைப்பையே மூடுவாரா..?
Posted by: Mathivathanan - 03-26-2004, 05:48 PM - Forum: செய்திகள் : தமிழீழம் - Replies (4)

Breaking News தலைப்பு 1000 கருத்துக்களை எட்ட ஒண்றிரண்டு நாட்களே இருக்கும் தருணத்தில் ஒரு பகுதியினர் அக்கருத்து மூடப்படவேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர். தற்சமயம் 916 சருத்துக்களை உள்வாங்கிய Breaking News தலைப்பு 1000 கருத்துக்களை எட்டும் என எதிர்பார்க்கப்பட்டாலும் ஒருவேளை பூட்டப்படலாம் என்ற அச்சம் சிலரது மனத்தில் இல்லாமலில்லை..
எல்லாம் திருவாளர் மோகன் கைகளில்தான் தங்கியுள்ளது..
விழா எடுப்பாரா..? இல்லை தலைப்பையே மூடுவாரா..?
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->

Print this item