Yarl Forum
யார் இந்த யாஸீன் ? - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3)
+--- Forum: செய்திகள்: உலகம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=14)
+--- Thread: யார் இந்த யாஸீன் ? (/showthread.php?tid=7280)



யார் இந்த யாஸீன் ? - Mathan - 03-27-2004

யார் இந்த யாஸீன் ?

பலஸ்தீனத்தில் இயங்கும் ஹமாஸ் எனும் மத தீவிரவாத இயக்கத்தின் ஆன்மீகத் தலைவர் ஷேக் அஹமத் யாஸீன் சக்கர நாற்காலியில் அமர்ந்திருக்கும் மெலிந்த தோற்றமுடைய யாஸீன் நீண்ட பழுத்த தாடியுடன் காணப்படுவார். பலஸ்தீன எழுச்சிப் போராட்டம் எனப்படும் இன்திபாதாவுடன் ஆரம்பிக்கப்பட்ட ஹமாஸ் இயக்கத்தை தோற்றுவித்த புகழுக்குரிய ஷேக் அஹமத் யாஸீன் திங்களன்று இஸ்ரேலிய ஏவுகணைத் தாக்குதலுக்குள்ளாகி உயிரிழந்தார்.

ஷேக் அஹமத் யாஸீனின் கொலையை உலக நாடுகள் கடுமையாக கண்டித்துள்ளன. ஆயிரக்கணக்கான பலஸ்தீனர்கள் அஹமத் யாஸீனின் மறைவு குறித்து கண்ணீர் வடித்து துடிதுடிக்கும் போது இஸ்ரேல் மிக லாவகமாக நிம்மதிப் பெருமூச்சு விட்டுக்கொண்டிருப்பதை உலக கமெராக்கள் மிகவும் துள்ளியமாக படம் பிடித்துக் கொண்டிருக்கும்.

அஹமத் ஆன்மீகத் தலைவராகவும் பலஸ்தீனன் ஒருவனின் மனஆதங்கத்தை, தேவையை, விசுவாசத்தை மாத்திரமல்லாது, முழு பலஸ்தீனத்தையே பிரதிநிதித்துவப்படுத்திக் கொண்டுமிருந்தார். யாஸீனின் கொலை உலக அரங்கில் பெரும் மாறுதல்களை ஏற்படுத்தும் என்பதில் ஐயமில்லை.அதேவேளை, யாஸீனின் மறைவால் மத்திய கிழக்கில் பெரும் பிரச்சினையையும் சிக்கலையும் தோற்றுவிக்கும் என்பதும் உறுதி.

<b>யார் இந்த யாஸீன் ?</b>

""கோழைக்கோ ஆயுள் முழுவதும் சாவு வீரனுக்கோ ஒரே முறையில் சாவு'' என்ற வாசகத்தை கடந்த ஆண்டு யாஸீன் பி.பி.சி.க்கு அளித்த பேட்டியொன்றின் போது தெரிவித்தார். அஹமத் யாஸீன் கடந்த 17 ஆண்டுகளாக இஸ்ரேலுக்கு எதிரான தாக்குதல்களை மேற்கொள்பவர் என்ற குற்றச்சாட்டுகளுக்குள்ளாக்கப்பட்டுள்ளார்.

இவர் பலஸ்தீனம் என்ற ஒரு தனிநாடு இருந்த காலப் பகுதியில் 1938 ஆம் ஆண்டு பிறந்தார்.

கெய்ரோவில் கல்வி கற்ற யாஸீன் சிறுவயது முதல் நல்ல திறமைசாலியாகவும், விளையாட்டு வீரராகவும் திகழ்ந்தார்.

இஸ்ரேல்பலஸ்தீனம் என்பது இரு நாடு என்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்து வந்த யாஸீன் பலஸ்தீனம் மாத்திரமே, அதில் இருவேறு கூறு இல்லை என்றும் தைரியமாக கூறிவந்தார்.

இளமைக்காலத்தில் பாரிசவாதத்தால் உடல் ஊனமான நிலையிலும் யாஸீன் இஸ்ரேலின் ஆதிக்கத்தை வெறியர் போல் எதிர்த்து வந்தார்.

1987 ஆம் ஆண்டு இஸ்ரேலுக்கு எதிராக கிளர்ந்தெழுந்த இந்திபாதா எனும் கிளர்ச்சியின் காரணகர்த்தாவாக இருந்த அஹமத் யாஸீன் 1988 ஆம் ஆண்டு பலஸ்தீனத்தின் முன்னாள் தலைவரான அபூ ஜிஹாத் என்பவரை இஸ்ரேல் படுகொலை செய்ததை அடுத்து இஸ்ரேலுக்கு எதிரான தாக்குதல்களை ஆரம்பித்தார்.பலஸ்தீனர்களை கொலை செய்வதாக குற்றஞ்சாட்டப்பட்ட யாஸீன் சிறையில் அடைத்து வைக்கப்பட்டார். ஜோர்தானின் முன்னாள் மன்னர் ஹுஸைனினால் விடுவிக்கப்பட்ட யாஸீனுக்கு தேசிய தலைவருக்கு அல்லது மிகப்பெரிய வீர நாயகனுக்கு வழங்கப்படும் மரியாதை பலஸ்தீனர்களால் வழங்கப்பட்டது.

பலஸ்தீன எழுச்சிப் போராட்டத்தோடு யாஸீன் ஹமாஸ் இயக்கத்தையும் தோற்றுவித்தார். யாஸீன் பலஸ்தீனர்களின் தலைவர் என்றே வர்ணிக்கப்பட்டார்.

<b>
ஹமாஸின் அரசியல் முக்கியத்துவம் </b>

1987 ஆம் ஆண்டு பலஸ்தீனத்தில் இடம்பெற்ற பலஸ்தீன எழுச்சிப் போராட்டத்தின் போது, ஹமாஸ் இயக்கம் தோற்றுவிக்கப்பட்டது. ஹமாஸ் பலஸ்தீன தலைவருக்கும் பலஸ்தீனர்களுக்கும் பெரும் ஆதரவினை நல்கிவரும் ஒரு இயக்கமாகும். ஆனால், தலைவர் அரபாத்தைவிட ஹமாஸ் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

இஸ்ரேல்பலஸ்தீனம் என்று இரு நாடுகளின் திட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் ஹமாஸ் அமெரிக்காவிற்கும், இஸ்ரேலுக்கும் பெரும் சவாலாகவே இருந்தது.ஆயினும், அரபாத்தின் ஊழல், மதத்தை மீறும் போக்கு, மக்களுக்கு அநியாயம் இழைத்தல், முஸ்லிம்களுக்கு துரோகமிழைத்தல் என்பவற்றுக்காக அரபாத் ஹமாஸினால் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கதாகும். அரபாத்தின் ரகசிய திட்டங்களை அம்பலப்படுத்திய ஹமாஸ் இஸ்ரேலுக்கு எதிராக இளைஞர்களை வழிநடத்தி தற்கொலைத் தாக்குதல்களையும் நடத்தி வந்தது. இந்த தற்கொலை தாக்குதல்களை முன்னின்று, நடத்தியவர் இயக்கத் தலைவராக இருந்த ஷேக் அஹமத் யாஸீன் என்பவராவார்.

அல்லற்படும் பலஸ்தீனர்களுக்கு உதவியதோடு அகதிகளும் ஆதரவு வழங்கன பலஸ்தீனத்திலுள்ள பள்ளிவாசல்களுக்கும் அங்கிருக்கும் ஏனைய ஜிஹாத் இயக்கங்களுக்கும் ஹமாஸ் ஆலோசனை வழங்கி வந்தது.

இதனிடையே அரபாத்தின் வலதுகரமாக இயங்கிய ஹமாஸ் தலைவர் யாஸீனின் படுகொலை அரபாத்தை சகலவகையிலும் பின்னடைவை ஏற்படுத்தும் என்பது உறுதி.

<b>மத்திய கிழக்கில் ஏற்படும் தாக்கம்</b>

படுகொலை செய்யப்பட்ட ஹமாஸ் இயக்கத்தின் தலைவர் ஷேக் அஹமத் யாஸீனின் கொலை யை அடுத்து இஸ்ரேலியர்களின் தலையை உருள விடுவதாக ஹமாஸ் சூளுரைத்துள் ளது. ஹமாஸ் தலைவர் யாஸீனின் மரண ஊர்வலத்தில் ஆயிரக்கணக்கான பலஸ்தீனர்கள் கலந்து கொண்டனர். மரண ஊர்வலம் நடைபெற்றுக் கொண்டிருக்கையில் தொலைக்காட்சியில் தோன்றிய இஸ்ரேலிய பிரதமர் ஏரியல் ஷெரோன் ஹமாஸ் தலைவரை கொன்றமைக்காக படையினருக்கு நன்றி கூறியுள்ளார். உலக நாடுகளால் கண்டிக்கப்பட்டுள்ள ஹமாஸ் இயக்கத்தலைவரின் படுகொலை மத்திய கிழக்கில் பெரும் பதற்றத்தைத் தோற்றுவித்துள்ளது. இதுகால வரையில் குறிப்பிட்ட சில காரணங்களுக்காகவே இடம் பெற்ற தற்கொலை குண்டுத்தாக்குதல்களின் எண்ணிக்கை இனி எல்லையற்ற விதத்தில் நடைபெறக்கூடும்.

மத்திய கிழக்கு அமைதித்திட்டம் ஹமாஸ் தலைவர் கொலையுடன் நின்றுவிட்டது என்றே கொள்ள வேண்டும். இஸ்ரேல்பலஸ்தீன பேச்சுவார்த்தைக்கே இடம் இல்லாமல் போகக்கூடியளவிற்கு இஸ்ரேலுக்கு எதிரான பலஸ்தீனர்களின் தாக்குதல்களை அதிகரிக்கவுள்ளன எனலாம்.

ஆனால், ஹமாஸ் தலைவரின் மறைவு பலஸ்தீனில் அரபாத்தின் கை ஓங்க வகை செய்யலாம். ஏனெனில் அரபாத்தின் ஒவ்வொரு நடவடிக்கைக்கும் கண்டனம் தெரிவித்த யாஸீன் மறைந்தது அரபாத்தின் அதிகாரத்தை வலுப்படுத்தும்.

யாஸீனைப் போன்ற ஒரு தலைவரை தேடுவதில் அல்லது நியமிப்பதில் ஹமாஸ் இயக்கத்தில் பிரச்சினைகள் எழலாம். அத்துடன் நீண்ட காலத்திற்கு ஹமாஸின் வலு குறைவடையவும் கூடும்.

மொத்தத்தில் மத்திய கிழக்கு நாடுகளில் ஒருவகை பதற்றத்திலுள்ள ஹமாஸ் தலைவரின் படுகொலை சதாமின் சரிவில் ஏற்பட்ட இழப்பைவிட மாபெரும் தலைமையின் இழப்பை ஏற்படுத்தும் என்பதில் எதுவித ஐயமுமில்லை.யாஸீனின் மறைவு மத்திய கிழக்கு நாடுகளுக்கு ஈடுசெய்ய முடியாத இழப்பு என்றே கொள்ள வேண்டும்.

நன்றி - வீரகேசரி