| Welcome, Guest |
You have to register before you can post on our site.
|
| Forum Statistics |
» Members: 8,982
» Latest member: lucilegr4
» Forum threads: 9,058
» Forum posts: 83,244
Full Statistics
|
| Online Users |
There are currently 249 online users. » 0 Member(s) | 246 Guest(s) Applebot, Bing, Google
|
| Latest Threads |
±ôÀÊ ÀÈ¢ì¸Ä¡õ
Forum: நகைச்சுவை
Last Post: UsArgum
01-10-2026, 09:07 AM
» Replies: 28
» Views: 10,292
|
Mrs.Sirimao Bandaranayake
Forum: நகைச்சுவை
Last Post: GeraTep
11-14-2025, 10:46 AM
» Replies: 14
» Views: 3,229
|
Farty time
Forum: நகைச்சுவை
Last Post: ㄹㅈㄷㄹㅈ
08-26-2025, 03:48 PM
» Replies: 11
» Views: 5,603
|
கனவே கலைகிறதே
Forum: பொழுதுபோக்கு
Last Post: KULAKADDAN
04-30-2006, 06:37 PM
» Replies: 0
» Views: 6,288
|
Karuna Cadres were captur...
Forum: பிறமொழி ஆக்கங்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:17 PM
» Replies: 4
» Views: 8,621
|
என்ன நடந்தது யாழிற்கு?
Forum: உங்கள் கருத்துக்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:03 PM
» Replies: 42
» Views: 31,047
|
முடியுமானால் முயற்ச்சியுங...
Forum: போட்டிகள்
Last Post: Subiththiran
04-30-2006, 05:00 PM
» Replies: 15
» Views: 14,456
|
**சுடேக்கு** புதிர் விளைய...
Forum: போட்டிகள்
Last Post: kavithaa
04-30-2006, 04:30 PM
» Replies: 63
» Views: 38,471
|
புல்மோட்டையில் தாக்குதல்
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: Sriramanan
04-30-2006, 04:10 PM
» Replies: 2
» Views: 8,022
|
போதனை வேண்டாம்! பு...
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: alika
04-30-2006, 03:13 PM
» Replies: 4
» Views: 6,238
|
|
|
| கருணா என்கின்ற கண்கட்டு வித்தை |
|
Posted by: kuruvikal - 03-26-2004, 03:41 PM - Forum: செய்திகள் : தமிழீழம்
- No Replies
|
 |
<span style='color:red'>\"கருணா என்கின்ற கண்கட்டு வித்தை\"
[size=16]தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கு, கருணா என்கின்ற தமிழன் இழைத்த, இழைத்து வருகின்ற துரோகச் செயல்கள், ஒட்டுமொத்தத் தமிழீழ நெஞ்சங்களையும் பதறச் செய்துதான் விட்டது! அதிலும், குறிப்பாகப் புலம்பெயர்ந்து வாழும் தமிழீழ மக்கள் பட்ட வேதனை அளப்பரியது. பல்லாயிரக்கணக்கான மைல் தொலைவிற்கு அப்பால், தாய் மண்ணைத் தம் உடலால் மட்டும் பிரிந்து வாழுகின்ற இந்த உள்ளங்கள் உள்வாங்கிய சோகத்ததைச் சொல்லில் வடிப்பதும் எளிது அல்ல!
இந்த நெருக்கடி தோன்றியுள்ள காலகட்டத்தில், எம்மவரில் பெரும்பான்மையோரின் எண்ணத்தில் எழுகின்ற கேள்விகளும் ஒரே விடயத்தை சுற்றியே அமைவதை நாம் காணக்கூடியதாக உள்ளது. 'எப்போது இந்த நெருக்கடி நிலை தீரும்? 'இந்தத் துரோகச் செயல் எவ்வாறு முடிவுக்குக் கொண்டு வரப்படும்?" எப்போது எமது நெஞ்சங்களில் பால்வார்க்கும் செய்தி வரும்?". என்பது போன்ற கேள்விகளே கரிசனை கொண்ட நெஞ்சங்களில் எழுந்த வண்ணம் உள்ளன.
நாட்டுப்பற்றுள்ள எந்த உள்ளங்களிலும், இயல்பாக எழக்கூடிய எண்ணங்கள் தாம் இவை! ஆனால், இங்கே ஒரு முக்கியமான - மிக முக்கியமான - விடயத்தைச் சுட்டிக்காட்ட வேண்டிய கடமை எமக்குண்டு. தமிழீழ மக்களின் தார்மீகச் சிந்தனைகளை, இன்றைய தினம், இந்தப் புதிய நெருக்கடியில் மட்டுமே குவித்து வைபதற்கான முயற்சிகளைத்தான், தமிழ்த் தேசிய விரோத சக்திகள் முயன்று வருகின்றன. அதில் ஓரளவு வெற்றியும் கண்டுள்ளன என்பதும் வேதனையான உண்மைதான் இது ஒரு கண்கட்டு வித்தை!
இந்தக் கண்கட்டு வித்தை குறித்துச் சற்று விரிவாகவும் விளக்கமாகவும் தர்க்கிப்பது, இந்த வேளையில் முக்கியமானதொன்றாக நாம் கருதுகின்றோம். இந்தக் கருணா என்கின்ற முன்னை நாள் தமிழ்ப்போராளி, இன்றைய தினம் பேசுகிற விடயங்கள் குறித்தும், காட்டுகின்ற காட்சிகள் குறித்தும் சில ஊடகங்கள் ஊதிப் பெருப்பித்து உற்சாகமாக செய்தி வெளியிட்டு வருகின்றன. சிங்கள பேரினவாத ஊடகங்களும், தமிழ் தேசிய விரோத தமிழ் ஊடகங்களும் இதில் பெரும் பங்கினை வகிப்பதில் முன்னிற்கின்றன. கருணாவின் காரணமாக எழுந்துள்ள இந்தத் தற்காலிக நெருக்கடி குறித்துப் பூதாகரமான செய்திகளை வெளியிட்டு வரும் இந்தத் தமிழ் விரோத சக்கிகளின் ஆழ் மனத்து ஆசைதான் என்ன?
தன்னுடைய தனிப்பட்ட நலனுக்காகவும், தன்சுயநலத்தால் விளைந்திட்ட தவறுகளை நியாயப்படுத்துவதற்காகவும் பிரதேசவாதத்தை முன்னிறுத்தி, இன்று முன்னிற்குப் பின் முரணாகப் பேசியும், செயல்பட்டும் வருகின்ற கருணா என்கின்ற தமிழினத் துரோகி, தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கு எதிரான வலிமையான சக்தியாக எதிர்காலத்தில் உருவெடுக்கக் கூடும் என்று, இந்த விரோத - துரோக சக்திகள் நம்புகின்றனவா?
இல்லை - இல்லவே இல்லை
ஈழத் தமிழினமும், புலம்பெயர்ந்த தமிழினமும், இந்தக் கருணா என்பவரின் கீழ் அணிவகுத்து ஆதரவு நல்கும் என்று, இந்த தமிழ் விரோத - துரோக சக்திகள் எண்ணுகின்றனவா?
இல்லை - இல்லவே இல்லை!
'இராணுவப் படைப்பல ரீதியாக, கருணா என்கின்ற இந்தத் தவிர்கப்பட்ட மனிதன், தமிழீழ மக்கள் சக்திக்கு எதிராக தனித்து நிற்க முடியும், என்று இந்த தமிழ் விரோத - துரோக சக்திகள் சிந்தித்து செயல்படுகின்றனவா?
இல்லை - இல்லவே இல்லை !
இன்றைய காலகட்டத்தில், கருணாவின் செயல்களையும், பேச்சுக்களையும் பூதாகரமாக்கி காட்டுவதன் மூலம், நாளை - கருணா என்கின்ற இந்தத் தமிழன், தமிழீழத்தை இராணுவரீதியாக, பிரதேச ரீதியாக கூறுபோட்டு விடமுடியும் என்று இந்த தமிழ் விரோத - துரோக சக்திகள் மனப்பால் குடிக்கின்றனவா?
இல்லை - இல்லவே இல்லை!
இப்படிப்பட்ட விசப்பிரச்சாரம் காரணமாக, உலக நாடுகள் யாவும் திரண்டு எழுந்து, கருணா என்பவருக்கு ஆதரவாக, தமிழீழ வீடுதலைப் புலிகள் இயக்கத்திற்கு எதிராக குரல் கொடுக்கும் என்று இந்த தமிழ் விரோத - துரோக சக்திகள் நம்புகின்றனவா?
இல்லை - இல்லவே இல்லை!
எதிர்வரும் பொதுத்தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கக்கூடிய எந்த சிங்களப் பேரினவாதக் கட்சியும், தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தைப் புறந்தள்ளி, கருணாவோடு பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ளும் என்று இந்த தமிழ் விரோத சக்திகள் உண்மையாகவே எண்ணுகின்றனவா?
இல்லை - இல்லவே இல்லை!
சிந்தித்துப்பார்த்தால், - அதுவும் ஆற அமர இருந்து சிந்தித்துப்பார்த்தால், - இந்தத் தமிழ் - விரோத துரோக சக்திகளின் உண்மையான குறிக்கோள் எதுவென்று புரியக்கூடியதாக இருக்கும்!
கருணா என்கின்ற தமிழினத் துரோகியின் சுயநலத்தின் பின்னே ஒளிந்து கொண்டு, இந்தத் தமிழ் விரோத துரோக சக்திகள் எய்கின்ற அம்புகள், எதனை நோக்கிப் பாய்கின்றன என்ற உண்மையை அப்போதுதான் புரியக் கூடியதாக இருக்கும்!
இந்த அம்புகள் தமிழ்த் தேசியத்தை நோக்கிக் குறிவைக்கப்பட்டு, ஏவப்படுகின்றன. தமிழீழ மக்களின் தேசியப்பிரச்சனையை குறிவைத்து ஏவப்படுகின்றன. தமிழீழ மக்களின் அபிலாசைகளுக்கு - வேட்கைக்கு - எதிராக இந்த அம்புகள் ஏவப்படுகின்றன.
தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்கள், தன்னுடைய தன்னலமற்ற தியாகப்போராட்ட வரலாற்றில் வலியுறுத்தி, வழிகாட்டி வந்துள்ள தமிழீழத் தேசியம் குறித்து இவ் வேளையில் குறிப்பிடுவது பொருத்தமானதாகும்.
'பாரம்பரிய தாயக பூமியையும், தனித்துவமான மொழியையும், பண்பாட்டையும் கொண்டுள்ள எமது மக்கள் ஒரு தேசிய இனத்தவர்கள் ஆவார்கள். அந்தத் தேசிய இனம், தமது அரசியல் பொருளாதார வாழ்வைத் தாமே தீர்மானிக்கும் உரிமை கொண்டவர்கள். அந்த உரிமைக் கோட்பாடுதான் சுய நிர்ணய உரிமையாகும். தமிழ் மக்கள் தமது சொந்த மண்ணில், வரலாற்று ரீதியாகத் தாம் வாழ்ந்து வந்த பாரம்பரிய மண்ணில், அந்நிய சக்திகளின் தலையீடு ஆதிக்கம் இன்றிச் சுதந்திரமாக - கௌரவமாக வாழ விரும்புகிறார்கள். தமது மொழியை வளர்த்து, தமது பண்பாட்டை பேணித் தமது பொருளாதாரத்தை மேம்படுத்தி, தமது அடையாளத்தைப் பாதுகாத்து வாழ விரும்புகின்றார்கள். தமது தாயக மண்ணில் தம்மைத்தாமே ஆளும் சுயாட்சி உரிமையோடு வாழ விரும்புகின்றார்கள். இதுவே எமது மக்களின் அபிலாசை வேட்கை."
இவ்வாறு எமது தலைவர் கட்டிக்காத்து வந்துள்ள தமிழ்த் தேசியத்திற்கு எதிராக வைக்கப்படும் இந்த துரோக சிந்தனைகளுக்கு நாம் இடங்கொடுக்காத வகையில் எமது சிந்தனைகளை ஒருங்கிணைக்க வேண்டிய வேளை, இந்த வேளையாகும். இன்று கருணாவை முன்வைத்துக் கொண்டு - அவருடைய பிரதேசவாத்தின் ஊடாக, தமிழ் தேசியத்திற்கெதிரான செயற்பாடுகளை, இத்தீய சக்திகள் மேற்கொண்டு வருகின்றன. விரைவில் முடியப்போகும் இந்தக் கருணாவின் கண்கட்டுவித்தையைப் பார்த்த எம்மவர் மனம் சஞ்சலப்பட்டுக் கொண்டிருக்கையில், தமிழ் விரோத சக்திகளோ சத்தமில்லாமல் கொள்கை ஊடுருவல்களைச் செய்ய ஆரம்பித்துள்ளார்கள்.
'தமிழீழ விடுதலைப்போராட்டம் என்பது ஓர் ஆயுதப் போராட்டம் மட்டும் அல்ல" - என்பதை நாம் பலதடவைகள் வலியுறுத்திச் சொல்லியே வந்துள்ளோம். ஒரு இனவாதப் போரின் அடக்குமுறைக்கு முகங்கொடுத்து போராடி வந்துள்ள அதேவேளையில், தனது இனத்துக்குள்ளே புரையோடிப்போயிருந்த சாதிக்கொடுமைக்குச் சாவுமணி அடிக்கும் செயற்பாட்டையும் தமிழ்த் தேசியத்தலைமை வெற்றிகரமாகச் செய்து வந்துள்ளது. இன்று உலகமே மத ரீதியாகப் பிரிந்து நின்று, மதவெறி கொண்டு வன்முறையில் ஈடுபடுகையில், தமிழ்த் தேசியத்தலைமையோ மத வேறுபாடற்ற நிலைப்பாட்டின் ஊடாக, தனது போராட்டத்தை நகர்த்திச் சென்றுள்ளது.
தமிழீழத் தேசிய நலன் என்பது, பரந்துபட்ட அளவில் விரிந்து செயல்பட்டு வருகின்றது என்பதே உண்மையாகும். சாதி, மத, வர்க்க, பிரதேச வேறுபாடுகள் எதும் இன்றி, தமிழீழ தேசிய விடுதலைக்கான போராட்டத்தை கொண்டு செல்வதற்காகத் தேசியத் தலைவர் அவர்கள் எவ்வளவு சிரமப்பட்டிருப்பார்? - என்பதை இந்த வேளையில் எண்ணிப் பார்த்து வியக்கின்றோம், அதுமட்டுமா, பெண்ணின அடிமைத்தனத்தை உடைப்பதற்கு, திருமதி பார்வதி வேலுப்பிள்ளையின் மகன் மேற்கொண்ட நடவடிக்கைகளையும் மறக்கத்தான் முடியுமா? சீதனப்பிரச்சனை என்பது, பெண்களுக்கு எதிரான சமூக ஒடுக்குமுறையின் ஒரு வெளிப்பாடு என்ற காரணத்தால், மணக்கொடைத் தடைச்சட்டத்தை தலைவர் தமிழீழத்தில் அமுலாக்கியமை ஒரு முன்மாதிரியான சட்ட விதியல்லவா? ஒரு சமூகத்தின், சமூக - பொருளாதார அடிப்படைகளையும்புரிந்து கொண்டு, அதேசமயம் பெண்ணினத்திற்கு எதிராக விளங்கிய சமூக மரபுகளுக்குச் சாவுமணி அடிக்கும் வகையில் மரபுச் சட்டம் தமிழீழத்தில் திருத்தி அமைக்கப்பட்டது, சரித்திரத்தில் இடம்பெறக் கூடிய விடயமாகும்.
ஆகவே தமிழ் தேசிய விடுதலைக்கான போராட்டம் என்பது, மண் விடுதலைக்கான ஆயுதப் போராட்டம் மட்டுமல்ல! சாதி ஒடுக்குமுறை, மதவேறுபாடு, பிரதேசவாதம், வர்க்க வேறுபாடு போன்ற குறைபாடுகள் அற்ற தேசியத்தை கட்டி எழுப்புவதும் விடுதலைப் போராட்டத்திற்கு அவசியமாகின்றது.
இந்தத் தர்க்கத்தை இன்னெரு வகையாலும் சிந்தித்து பார்க்கலாம். ஈழத்தமிழன் மீது, சிறீலங்கா அரச பயங்கரவாதம் திணிக்கப்பட்டதன் காரணம் அவன் யாழ்பாணத் தமிழன், மட்டக்களப்பு தமிழன் என்பதாலோ, அல்லது அவன் மன்னார் - வன்னித்தமிழன் என்பதாலோ அல்ல ! அவன் தமிழன் என்பதால் மட்டுமே, அவன் மீது சிறீலங்கா அரச பயங்கரவாதங்கள் அவிழ்த்து கட்டவிழ்த்து விடப்பட்டன. தமிழன் தமிழனாக வாழ்வதாலும் அவன் பேசுவது தமிழ் மொழியாக இருப்பதனலாலும் அவனுக்கு மதங்களை கடந்த தனித்துவமான பண்பாடும் - நாகரீகமும் இருப்பதாலும், அவனுக்கென்று ஒரு பாரம்பரிய பூமி வாழ்விடமாக இருப்பதாலும் அவனுடைய இனம் ஒரு தேசிய இனமாக இருப்பதனாலும்.
அவனை - அந்தத் தமிழனை - அவனது மொழியை - அவனது பண்பாட்டை - அவனது நாகரீகத்தை -அவனது பாரம்பரிய மண்ணை, அவனது இனத்தை ஒழிப்பதற்காக, அழிப்பதற்காக, தமிழ் தேசிய விரோத சக்திகள் எப்போதும் முயன்றே வந்துள்ளன.
ஆகவேதான், தமிழீழத் தேசியத்தலைவர் அவர்கள் மண்மீட்புப்போரை நடாத்தி வருகின்ற அதே வேளையில், தமிழ்த் தேசியத்தை கட்டி எழுப்புகின்ற மகத்தான பணியையும் புரிந்து வந்தார். ஆக்கிரமிப்புப் போரில் அவரை வெல்ல முடியாத தமிழ் விரோத சக்திகள், இன்று தமிழ்த் தேசியத்தின் மீது குறிவைத்துள்ளன. கருணா என்கின்ற கண்கட்டு வித்தை நடைபெறுகின்ற இந்த வேளையில், தமிழ்த் தேசிய ஒருமைப்பாட்டை அசைத்துப் பார்க்கின்ற முயற்சிகள் மேற்கொள்ளப்டுகின்றன.
அன்புக்குரிய நேயர்களே! கருணாவின் கூத்து விரைவில் முடிந்து விடும். கூத்தைப் பார்க்கும் வேளையில், கூரையை பிரிக்க முனையும் திருடர்களுக்கு இடங்கொடக்கும் நேரமல்ல, இது! கருணா ஏற்படுத்திய இந்த நெருக்கடி விரைவில் தீர்க்கப்பட்டுவிடும், அல்லது தீர்ந்துவிடும். இந்த வேளையில் நாம் கரிசனை கொள்வதற்கு வேறு முக்கிய விடயங்கள் உள்ளன. எமது மக்களின் அபிலாசைகளை - வேட்கையான, தாயகம் - தேசியம் - தன்னாட்சி - சுயநிர்ணய உரிமை. என்பன அங்கீகரிக்கப்பட வேண்டியதற்கான செயல்பாடுகளில், புலம்பெயர்ந்த தமிழீழத்தவர்களாகிய நாம் இறங்க வேண்டும். தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தின்மீது தடை விதித்திருக்கும் சில நாடுகள், அத்தடையை நீக்க வேண்டியதற்கான கோரிக்கைகள் வலுவாக முன்வைக்கப்பட வேண்டும். புலம்பெயரந்த நாடுகளில் வாழுகின்ற தமிழர்களும் அவர்களை பிரதிநிதித்துவம் செய்கின்ற சங்கங்களும் கழகங்களும், கூட்டமைப்புக்களும், இந்த முக்கிய செயற்பாடுகளை தனியாகவும், கூட்டாகவும் மேற்கொள்ள வேண்டும் என்று, இவ்வேளையில், உரிமையோடு கேட்டுக்கொள்கிறோம்.
<img src='http://www.tamilnet.com/img/publish/2002/06/pongutamil_trinco_3_190202.jpg' border='0' alt='user posted image'>
இவ்வேளையில் எதிர்வரும் ஏப்பிரல் 5 ஆம் திகதியன்று சுவிஸ் நாட்டில் நடைபெற இருக்கின்ற பொங்கு தமிழ் நிகழ்வு, தமிழ் மக்களின் வேட்கைக்கு உரிய அங்கீகாரத்திற்கான ஆதரவை திரட்டுவதில் பெரு வெற்றி பெற்றிட தமிழ்க்குரல் சார்பில் நாமும் வாழ்துகிறோம்!</span>
நன்றி தமிழ்நாதம்...!
|
|
|
| தமிழில் கலைச் சொற்திட்டம் - Microsoft |
|
Posted by: Kanani - 03-26-2004, 10:22 AM - Forum: கணினி
- Replies (2)
|
 |
தமிழினக் காவலர் பில் கேட்ஸ் :wink:
தமிழில் கலைச் சொல் திட்டம் பற்றி மைக்ரோசாப்டின் சார்பில் வெளியிடப்பட்டிருக்கும் அறிவிப்பைக் கண்டேன். தமிழ் உள்ளிட்ட இந்திய மொழிகளுக்காக அந் நிறுவனத்தால் நடத்தப்படும் இணைய தளத்தில் bhashaindia.com சொல்லப்பட்டிருக்கும் தகவல்களோ அதிர்ச்சி தருகின்றன.
மைக்ரோசாப்ட் போன்ற வணிக நிறுவனங்கள் "இந்தத் திட்டம் தமிழர்கள் தங்கள் மொழியைக் காக்கவும் வளர்க்கவும் உதவுகிறது" என்றெல்லாம் பேசுவது நல்ல நகைச்சுவை. இந்தியா போன்ற நாடுகளின் ஒட்டு மொத்த பொருளாதார நிலையையும், பண வீக்கத்தையும் சற்றும் பொருட்படுத்தாமல், தம் நிறுவனம் தயாரிக்கும் மென்பொருள்களுக்கு விலையாகத் தனிநபர்களிடமிருந்து பல்லாயிரம் ரூபாய்களை வசூலித்துக் கொண்டிருக்கும் இத்தகைய பன்னாட்டு நிறுவனங்கள் ஏதோ தமிழுக்குத் தொண்டு செய்வது போலப் பேசுவதும், இத் திருத்தொண்டில் ஊதியம் பெறாத தன்னார்வலர்களாக தமிழர்கள் ஈடுபட வேண்டும் என்றெல்லாம் கேட்பது ஆபாசமானது.
தமிழ்நாட்டில் சென்னை பல்கலைக்கழகம், தஞ்சை தமிழ் பல்கலைக்கழகம் (பேராசிரியர் ராம.சுந்தரம்) போன்றவை கலைச் சொல்லாக்கத்தில் ஈடுபட்டு வருகின்றன. ஏற்கனவே பல சொற்கள் உருவாக்கப்பட்டுள்ளன. நமது பல்கலைக்கழகங்களுகே உரிய அறிவுசார் மந்தத்தன்மை (Intellectual inertia) தவிர, போதிய நிதியின்மை காரணமாகவும் அண்மைக் காலத்தில் இத்தகைய பணிகள் சரிவர நடப்பதில்லை. அமெரிக்கா போன்ற மேலை நாடுகளில் என்றால் உடனே ஒரு பல்கலைக்கழத்தைப் பிடித்து, அதற்கு மில்லியன் கணக்கில் டாலர்களை அளித்து இப் பணிகளை மேற்கொள்ளும் மைக்ரோசாப்ட், இந்திய மொழிகள் என்றால் மட்டும் ஒரு சில லட்சங்களைக் கொடுப்பது என்றால் கூட மூக்கால் அழுகின்றது. இந்த லட்சணத்தில், கடைத் தேங்காயை எடுத்து வழிப் பிள்ளையாருக்கு உடைத்த கதையாக "இந்தக் கலைச்சொற்களை, தமிழ் அறிந்தவர்கள் எங்கு வேண்டுமானாலும் பயன்படுத்திக் கொள்ளலாம்" என்று பெரிய மனது வைத்து அனுமதி வேறு கொடுக்கிறது. வெட்கக்கேடு.
இப்படிச் சொல்லப்பட்டாலும், மைக்ரோசாப்ட் இன்று துண்டைப் போட்டு தாண்டி சத்தியம் செய்தாலும் அதை நம்புவது மண் குதிரையை நம்பி ஆற்றில் இறங்கிய கதையாகவே முடியும். இப்போதைக்கு இலவசம் என்று சொன்னாலும், தன்னார்வலர்களின் உழைப்பை உறிஞ்சிய பின்னர் அறிவுசார் சொத்துரிமை எங்களுக்குத் தான் என்று மார்தட்டி, தமிழ் வார்த்தைகளை உபயோகிக்கவோ, இந்தக் கலைக் களஞ்சியத்தை சொற்கள் சரிபார்க்கும் மென்பொருளில் இணைக்கவோ, அல்லது மின் படைப்புகளில் தேடுதலுக்கு துணை நூலாகப் பயன்படுத்தவோ ராயல்டி கோரி மைக்ரோசாப்ட் மூக்கை நுழைக்கும் நாள் வெகு தொலைவில் இல்லை. ஏற்கனவே, யுனிகோட் (Unicode) விஷயத்தில் இந்திய மொழிகளுக்கு, குறிப்பாகத் தமிழுக்குப் போதுமான அளவு இட ஒதுக்கீடு செய்யப்படாமல் பட்டை நாமத்தை பரக்கச் சாத்தியதன் பின்னணியில் மைக்ரோசாப்டின் பங்களிப்பை மறுக்க முடியாது.
இது கற்பனை அல்ல. இலவசம் என்று அறிவித்த எல்லா மென்பொருள்களும் பரந்த உபயோகத்திற்கு வந்தவுடன், காசு வசூல் செய்வது மைக்ரோசாப்டின் பழகிப் போன வியாபார உத்திகளில் ஒன்று. உதாரணமாக, கணிணித் தகடுகளில் (Disks) கோப்புகளைச் சேமித்து வைக்க உருவாக்கப்பட்ட கோப்பு வடிவங்களை (File format) இதுவரை யார் வேண்டுமானாலும் பயன்படுத்திக் கொள்ள முடிந்தது. ஆனால், இப்போது திடீரென்று மைக்ரோசாப்ட் இதற்குப் பணம் கேட்கத் தொடங்கி இருக்கிறது. உதாரணமாக, டிஜிட்டல் கேமரா போன்றவற்றில் படத்தை சேமிக்கப் பயன்படும் அதிவேக நினைவுத் தகடுகள் போன்றவற்றின் கோப்பு அமைப்பின் காப்புரிமை மைக்ரோசாப்ட்டுடையதாம். அதைப் பயன்படுத்த பணம் கொடுக்க வேண்டுமாம்.
தமிழ்நாடு அரசு மற்றும் தமிழ் இணையப் பல்கலைக்கழகம் போன்றவற்றின் நிதி உதவியுடன் மக்களின் வரிப்பணத்தில் உருவாக்கப்பட்ட பொன்விழி (OCR) போன்ற மென்பொருள்களை இப்போது பல ஆயிரம் ரூபாய்கள் விலை கொடுத்துதான் வாங்க வேண்டியிருக்கிறது. இதே போல தமிழனின் கிஸ்திப் பணத்தில் உருவாக்கப்பட்ட 'லெக்ஸிகன்' போன்றவையும் இலவசமாகக் கிடைப்பதில்லை. இதைப் பற்றியும் இதுவரை எவரும் வாய் திறக்கவில்லை.
உள்ளூர் நிறுவனங்களே இப்படி என்றால் பன்னாட்டு நிறுவனமான மைக்ரோசாப்ட் பற்றி சொல்லவே வேண்டாம். இது போன்ற தன்னலமற்ற முயற்சிகள் நடைபெறுவது சாத்தியமே அல்ல. தமிழ்ப் பல்கலைக் கழகம் மற்றும் சென்னைப் பல்கலைக்கழகத்தின் முந்தைய முயற்சிகளின் தொடர்ச்சியாக இந்தக் கலைச்சொற்கள் உருவாக்கப் பணியைச் செய்வதே சிறந்தது. அதனால், தமிழ் மீது பற்றுக் கொண்டவர்களாகத் தங்களைக் கருதும் அனைவரும் மைக்ரோசாப்டின் இந்தத் தன்னார்வ குறுக்கீட்டைப் புறக்கணிக்க வேண்டும்.
தமிழில் மட்டுமல்ல, உலகில் உள்ள எந்த ஒரு மொழியிலும் மென்பொருள்கள் உருவாக்கப்படுவது (மொழிபெயர்க்கப்படுவது) பற்றி எவருக்கும் ஆட்சேபம் இருக்க முடியாது. தமிழைப் பொறுத்தவரை, தனது சந்தைப்படுத்தும் திறனைக் கொண்டு, தான் தயாரிக்கும் தமிழ் மென்பொருள்களை
பெருமளவில் தமிழக அரசின் தலையில் கட்டுவதே இந்த நிறுவனத்தின் இலக்கு. இது மைக்ரோசாப்ட்டுக்கு மட்டுமல்ல, வேறு எந்த மென்பொருள் தயாரிப்பு நிறுவனத்துக்கும் பொருந்தும். அதற்காக வணிக நிறுவனங்கள் மொழி உணர்வைத் தூண்டியும், சாமியாடியும், அதைத் தன் சுயலாபத்துக்குப் பயன்படுத்திக் கொள்ளும் தந்திரத்தைப் புரிந்துகொள்வது அவசியம்.
பன்னாட்டு நிறுவனங்களைப் பொறுத்த வரை அறிவுசார் சொத்துரிமை என்பதே ஒரு பெரும் மூலதனமாகி வருகிறது. அமெரிக்கா போன்ற மேலை நாடுகளில் ஒரு பொருளை உருவாக்கி விற்பதைவிட, பிற நாடுகளில் - குறிப்பாக மூன்றாம் உலக நாடுகளில் உற்பத்தி செய்வது எளிமையானதும், விலை குறைவானதும் ஆகும். உற்பத்தித் துறையின் மூலம் அமெரிக்கா போன்ற நாடுகளுக்குக் கிடைக்கும் வருவாய் ஏற்கனவே கணிசமான அளவுக்குக் குறைந்துவிட்டது. சீனா போன்ற நாடுகளில் உற்பத்தி செய்யப்படும் பொருட்களின் குறைந்த விலை காரணமாக அவை பெருமளவில் இறக்குமதி செய்யப்படுகின்றன.
ஆகவே, எதிர்காலத்தில் பிறருக்கு இன்றியமையாததாக இருக்கக்கூடியதாகக் கருதப்படுனவற்றின் (மென்பொருள்கள் உட்பட) காப்புரிமையைத் தன் கையில் வைத்துக் கொண்டு, அதைப் பயன்படுத்த விரும்புபவர்களிடம் ராயல்டி வசூலிப்பது மட்டுமே மைக்ரோசாப்ட் போன்ற நிறுவனங்களின் வணிக முன்வடிவாக இன்னும் சில பத்தாண்டுகளிலேயே ஆகி விடும் வாய்ப்புள்ளதாக அறிஞர்கள் கருதுகிறார்கள். இதைப் பற்றி பல அறிவியல் புனைகதைகள் கூட வெளிவந்துள்ளன. உதாரணமாக, நான்ஸி க்ரெஸ்ஸின் 'தூங்காதவர்கள்' புத்தக வரிசையைச் சொல்லாம். இதை மனதில் கொண்டே அமெரிக்க அரசாங்கம், காப்புரிமைச் சட்டங்களை ஏற்றுக் கொள்ளச் சொல்லி பிற நாடுகளை வற்புறுத்துகிறது.
இத்தகைய தன்னார்வலர்களுக்கான அறிவிப்புகளை வெளியிடும் போது இதன் ஒருங்கிணைப்பாளராகச் செயல்படுபவர்கள், இத்தகைய திட்டங்களால் தங்களுக்கு தனிப்பட்ட ஆதாயம் (ஊதியம் உட்பட) எதுவும் கிடைப்பதில்லை என்பதையும் குறிப்பிடுவது இன்றியமையாதது.
தமிழ் லினக்ஸ் விஷயத்தில் ரிடையர்ட் விஞ்ஞான எழுத்தாளர் மற்றும் குழுவினரின் அறிவுத் திருட்டை வெளிச்சம் போட்டுக் காட்டியவர்கள், மைக்ரோசாப்டின் இத்தகைய தந்திரம் பற்றி என்ன சொல்லப் போகிறார்கள் என்பதை அறியவும் ஆவலாக இருக்கிறேன்.
ஆசாரகீனன்/திண்ணை
நன்றி சூரியன்.com
|
|
|
| கனவுகள் நிஜமானால்! |
|
Posted by: Shan - 03-26-2004, 09:27 AM - Forum: குறும்படங்கள்
- Replies (80)
|
 |
மாற்று என்ற முழு நீள வீடியோ திரைப்படத்ததை தந்த ஈழம் நண்பர்கள் கனவுகள் நிஜமானால் என்ற அடுத்த முழு நீள படமான கனவுகள் நிஜமானால் படப்பிடிப்பில் ஈடுபட்டுள்ளனர். 70வீத படப்பிடிப்பு முடிந்த நிலையில் இந்த திரைப்படம் இந்த வருட இறுதிக்குள் ஐரோப்பா எங்கும் திரையிடப்படும் என எதிர்பாரக்கப்படுகிறது. மாற்று திரைப்படத்திற்கு பிரித்தானியாவில் கிடைத்த வெற்றியை அடுத்து Access Direct நிறுவனத்தினர் கனவுகள் நிஜமானால் என்ற புதியபடத்தை தயாரிக்க முன்வந்தனர். இந்த படத்தில் தமிழ் நண்பர்களுடன், இந்திய, பாகிஸ்தான், பங்களாதேஸ் கலைஞர்களுடன் பிரித்தானிய கறுப்பு வெள்ளை இனத்தவர்களும் நடித்துள்ளனர். திரைக்கதையை கஜேந்திரன் எழுத, முலக்கதை இயக்கத்தை புதியவன் செய்துள்ளார். இந்த படத்திற்கு இசை வேந்தன். கமரா பொபி. மாற்று வீடியோ திரைப்படம் வெகுவிரைவில் தமிழ் தொலைக்காட்சியூடாக ஐரோப்பா எங்கும் காண்பிக்கப்பட உள்ளது. வெகுவிரைவில் கனவுகள் நிஜமானால் பட காட்சிகள் சில இங்கு இணைக்கப்படும்.
|
|
|
| செவ்வாய் கிரக கடலில் உயிரினம் இருந்ததா? |
|
Posted by: Mathan - 03-26-2004, 12:46 AM - Forum: விஞ்ஞானம் - தொழில்நுட்பம்
- No Replies
|
 |
செவ்வாய் கிரக கடலில் உயிரினம் இருந்ததா?
""செவ்வாய் கிரகத்தில் இருந்த கடலால் அங்கு உயிரினங்களும் இருந்திருக்கக்கூடும்'' என அமெரிக்க விஞ்ஞானிகள் கருதுகின்றனர். அமெரிக்கா அனுப்பிய ரோவர் விண்கலம் செவ்வாய் கிரகத்தில் மண் மற்றும் தட்ப வெப்ப நிலைகளை ஆராய்ந்து வருகிறது.
செவ்வாய் கிரகத்தில் உப்பு படிவங்கள் நிறைய காணப்படுவதால் அங்கு ஒரு காலத்தில் கடல் இருந்திருக்க வேண்டும் என அமெரிக்காவின் நாசா விஞ்ஞானிகள் உறுதியாக நம்புகின்றனர். ""அந்த கிரகத்தில் கடல் இருந்திருப்பதற்கான தடயங்கள் கிடைத்து வருவதால் நிச்சயம் அங்கு உயிரினங்கள் இருந்திருக்க வேண்டும்'' என கார்நெல் பல்கலைக்கழக விஞ்ஞானி ஸ்டீவ்ஸ்கொயர்ஸ் தெரிவித்துள்ளார்.
""செவ்வாய் கிரகத்தில் உள்ள பாறைகள் உப்பு படிவங்களால் உருவாகியுள்ளன. அங்கு எப்போது கடல் இருந்தது? எவ்வளவு பெரியதாக இருந்தது போன்ற தகவல் தெரியவில்லை'' என நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். ரோவர் விண்கலம் இன்னும் சில வாரங்கள் செவ்வாயில் மேற்கொள்ள உள்ள ஆய்வின் மூலம் பல்வேறு அரிய தகவல்கள் கிடைக்க உள்ளன.
நன்றி - வீரகேசரி
|
|
|
| புலத்தில் துரோகக் கும்பல்கள். |
|
Posted by: Aalavanthan - 03-25-2004, 09:30 PM - Forum: செய்திகள் : தமிழீழம்
- No Replies
|
 |
சிறீலங்கா மற்றும் அயலக அரசாங்கங்களின் அனுசரணையுடன் துரோகக் கும்பல்கள் புலத்தில் ஒருங்கிணைக்கப்படுகின்றது என கொழும்பில் இருந்த இயங்கும் துரோகக்குழுவின் அங்கத்துவர் ஒருவர் தெரிவித்தார். சிறீலங்கா அரசே தனது தூதுவராலயத்தில் இவர் வேலை செய்யப்போகின்றார் என இவருக்கு விசா பெற்றுக்கொடுத்து அனுப்பி வைத்தது. தற்போதுதான் வெளிநாடுகளில் "சொரியல் சொரியலாக" இயங்கிய பலர் இவர்கள் மூலம் ஒருங்கிணைக்கப்பட்டு புலி மற்றும் தமிழ்த் தேசிய எதிர்ப்பிரச்சாரங்களில் விரைவில் ஈடுபடுவார்கள். ஒருங்கிணைப்பு வேலைகள் துரிதகதியில் நடைபெற்று முதற்கட்டமாக தனித்தனியாக புலி எதிர்ப்பு இணையங்கள் நடாத்தியவர்களுக்கு தொழில்நுட்ப உதவிகளும், செய்திகளும் வழங்கப்படுகின்றன. இத்தளங்களில் வரும் செய்திகள் என்று வானலையில் வானொலி ஒன்றும் பொய்ச்செய்திகளை ஏற்கனவே பரப்புரை செய்யத்தொடங்கியிருப்பது ஏற்கனவே பலரும் அறிந்ததே.
மிகவிரைவில் இவர்கள் பெரிய அளவில் குழப்பமான செய்திகளை பரவவிடுவார்கள் என நம்புவதால் அனைவரும் விழிப்போடு இருப்போம்.
|
|
|
| எலுமிச்சை மகிமை கருத்தடை சாதனம், எய்ட்ஸ் கிருமி ஒழிப்பு |
|
Posted by: Mathan - 03-25-2004, 04:06 PM - Forum: விஞ்ஞானம் - தொழில்நுட்பம்
- No Replies
|
 |
எலுமிச்சை மகிமை கருத்தடை சாதனம், எய்ட்ஸ் கிருமி ஒழிப்பு
ஆஸ்திரேலிய அறிவியலாளர்கள் எலுமிச்சை சாறுக்கு நல்ல உபயோகத்தைக் கண்டுபிடித்திருக்கிறார்கள். அதாவது, கருத்தடை சாதனமாகவும், எய்ட்ஸ் கிருமிக் கொல்லியாகவும்.
மெல்போர்ன் பல்கலைக்கழக மருத்துவ ஆராய்ச்சியாளர் ரோஜர் ஷார்ட், சில சொட்டு எலுமிச்சை சாறு மிக விலை மலிவான முறையில் கருத்தடை சாதனமாகவும், எய்ட்ஸ் கிருமி கொல்லியாகவும் பயன்படும் என்று கூறுகிறார்.
பாலுறவுக்கு முன்பு, சில சொட்டு எலுமிச்சை சாற்றை உறுப்புக்குள் வைத்துக்கொள்ளலாம் என்றும் அவர் கூறினார்.
பரிசோதனைச்சாலையில், எலுமிச்சை சாறு மிகவும் சக்திவாய்ந்த முறையில், மனித விந்துவையும், ஹெச்ஐவி கிருமியையும் கொல்கிறது என்று கண்டறிந்துள்ளோம் என்று அவர் ஆஸ்திரேலிய ஒளிபரப்பு நிறுவனத்துக்கு அளித்த அறிவியல் நிகழ்ச்சியில் தெரிவித்தார்.
லைம் சாற்றையும் உபயோகப்படுத்தலாம் என்றும் அவர் தெரிவித்தார்
எலுமிச்சைச் சாற்றை கருத்தடை சாதனமாக உபயோகப்படுத்துவது புதிய கண்டுபிடிப்பு அல்லவென்றும், பழங்காலம் தொட்டு உபயோகப்பட்டு வருவது என்றும், சமீபத்தில் இது அறியப்படாமல் போய்விட்டது என்றும் தெரிவித்தார்.
சுமார் 300 வருடங்களுக்கு முன்னர், மத்தியதரைக்கடல் பெண்கள், எலுமிச்சைச் சாற்றையே மிகவும் பொதுவான கருத்தடை சாதனமாகப் பயன்படுத்தி வந்தார்கள் என்பதையும் குறிப்பிட்டார்.
நன்றி - ராகி
|
|
|
| கலி முற்றிவிட்டது! - காஞ்சனா |
|
Posted by: kaattu - 03-25-2004, 02:26 PM - Forum: நகைச்சுவை
- Replies (1)
|
 |
நாகஸ்வர இசை முழங்கிக் கொண்டிருந்தது.
அந்தப் பெரிய கூடத்தின் மூலையில் உட்கார்ந்திருந்த கோமதிப் பாட்டிக்கு நெஞ்சுகொள்ளாத மகிழ்ச்சி. கழுத்தில் மாலையுடன் நின்றுகொண்டிருந்த பேத்தி மைதிலியைப் பார்க்கப் பார்க்க அவளது மனம் பூரித்துப் போனது.
தாய், தந்தையைவிட பாட்டிதான் மைதிலிக்கு அதிக நெருக்கம். தன் கல்யாணம் நெருங்கி வருகிற சமயத்தில் பாட்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட, அதிர்ந்துபோனாள். ‘‘பாட்டி, இன்னும் என் கல்யாணத்துக்கு அஞ்சு நாள் இருக்கு. அதுக்குள்ளே நீ குணமாகி வீட்டுக்கு வந்துடணும். அப்படி வரலேன்னா நான் என் கல்யாணத்தையே நிறுத்திடுவேன்!’’
கண்களில் நீர் பொங்கக் கூறிய பேத்தியைப் பாட்டி சமாதானப் படுத்தினாள்... ‘‘பைத்தியம்போலப் பேசாதே! நான் கட்டாயம் உன் கல்யாணத்துக்கு வருவேன். ஆமாம், அந்த பாஸ்கர் உன்னைவிட ரொம்ப உசரமோ?’’
‘‘அவர் அமிதாப்பச்சனும் இல்லை. நானும் குள்ளவாத்து இல்லை’’ என்றாள் மைதிலி, சற்றே கோபத்துடன்.
இப்போது மைதிலியின் அருகில் நின்றுகொண்டிருந்த பாஸ்கர் அவளுக்கு வெகு பொருத்தமான ஜோடியாகத் தெரிந்தான்.
இருந்த இடத்திலிருந்தே அவர்களை வாழ்த்திய கோமதிப் பாட்டியை, தொடர்ந்து அவசர அவசரமாக நடந்த சம்பவங்கள் ஆச்சரியத்தில் ஆழ்த்தின.
சத்திரத்தில், கல்யாணத்துக்கு வந்திருந்தவர்கள் ஒவ்வொருவராக கல்யாணத் தம்பதியை நெருங்க, மைதிலியும் பாஸ்கரும் அவர்கள் அனைவரின் கையிலும் மாறி மாறி ஒரு கவர் அல்லது பார்சல் அல்லது பாத்திரத்தைத் தர, வந்தவர்கள் அதை வாங்கிக்கொண்டு வேகமாகச் சென்று நாற்காலிகளில் உட்கார்ந்துகொண்டனர். ‘இதென்ன கூத்து!’ என்று கன்னத்தில் கையை வைத்துக்கொண்டாள் கோமதிப் பாட்டி.
சற்று நேரத்தில் நலங்கு தொடங்கியது. பாட்டி உற்சாகமானாள். ஆனால், நலங்கின் போக்கே வேடிக்கையாயிருந்தது. தேங்காயை எடுத்து மைதிலியின் கையில் திணித்தான் பாஸ்கர். சுற்றியிருந்தவர்கள் சவால் விடும் தோரணையில் உற்சாகப்படுத்த, இப்போது மைதிலியின் முறை. அவள் தேங்காயை எடுத்து பாஸ்கரின் கையில் திணித்தாள்.
‘இதென்ன! தேங்காயை எதிராளி கையிலிருந்து பிடுங்குவதற்குப் பதிலாக, இவர்களே வலியத் திணிக்கிறார்களே!’ என்று வியப்படைந்த பாட்டியை, அடுத்து நடந்தது அதிர்ச்சியின் எல்லைக்கே அழைத்துச் சென்றது.
பாஸ்கர், மைதிலியின் கழுத்திலிருந்த தாலியைக் கழற்றிக் கொண்டிருந்தான்!
‘ஐயோ, இதென்ன அநியாயம்! கலி இந்த அளவுக்கா முத்திப் போச்சு!’ என்று கத்தியபடி பாட்டி மயக்கம் போட்டு விழ, சத்தம் கேட்டு ஓடிவந்தார்கள் பாலு வும் லலிதாவும் மைதிலியும்.
Ô‘என்ன ஆச்சு அத்தைக்கு? கல்யாணத்துக்குதான் வரமுடியலே, பாவம்! அதனாலே டிஸ்சார்ஜ் ஆகி வீட்டுக்கு வந்ததும், Ôமைதிலியோட கல்யாண விடியோ காஸெட்டைப் பாருங்கம்மாÕனு போட்டுட்டுப் போனேன். திடீர்னு ஏன் கத்தினாங்க, ஏன் மயக்கமானாங்கன்னு தெரியலியே’’ என்று பதறினாள் லலிதா.
பாலு தன் அம்மாவின் முகத்தில் நீரைத் தெளிக்க, பாட்டியை லேசாக உலுக்கியபடி பதற்றத்துடன் தலைநிமிர்ந்த மைதிலி, அப்போதுதான் அதைக் கவனித்தாள் & விடியோவில் கல்யாண காஸெட் ரிவர்ஸில் ஓடிக் கொண்டிருந்தது!
- காஞ்சனா -
|
|
|
| முன்னாள் எதிரி இன்றைய நண்பன்...! |
|
Posted by: kuruvikal - 03-25-2004, 02:05 PM - Forum: செய்திகள்: உலகம்
- No Replies
|
 |
<img src='http://newsimg.bbc.co.uk/media/images/39963000/jpg/_39963753_blair_ap203.jpg' border='0' alt='user posted image'>
பிரிட்டன் பிரதமர் ரொனி பிளேயரும் லிபியத் தலைவர் கடாபியும்
லிபியா அமெரிக்காவின் சத்துருக்களில் ஒன்று....கேர்னல் கடாபி அமெரிக்காவின் முக்கிய எதிரியாகத் திகழ்ந்தவர்....அதிக நாட்கள் இல்லை நேற்று வரை...ஏன் இன்றும் அவரில் அமெரிக்காவுக்கு பலத்த சந்தேகங்கள் இருக்கிறது...இருந்தாலும் மிக அண்மையில் தனது முதல் நிலை அதிகாரி ஒருவரை லிபியாவுக்கு அனுப்பியது அமெரிக்கா...!
அமெரிக்காவின் நெருக்கிய கூட்டாளியும் 1988 லொக்கபி விமானக் குண்டு வெடிபின்(இக்குண்டு வெடிப்பில் 270 பேர் கொள்ளப்பட்டனர்...இதன் பின்னணியில் லிபியா இருந்தது என்றும் குற்றச்சாட்டப்பட்டிருந்தது) பின் கடாபியுடன் மிகத்தீவிரமான முறுகலைக் கொண்டிருந்தது பிரிட்டன்...!
தற்போது அதே பிரிட்டனின் பிரதமர் ரொனி பிளேயர் லிபியத் தலைநகர் ரிப்போலி சென்று கேர்னல் கடாபியுடன் கைகுலுக்கி அல் குவைடா பயங்கரவாதம் பற்றியும் அதன் ஒழிப்புப்பற்றியும் எதிர்காலத்தில் லிபியாவுடனான பிரிட்டனின் இராணுவ ஒத்துழைப்புகள் பற்றியும் மற்றும் வியாபாரம் முதலீடுகள் பற்றியும் இன்னும் பலதும் பேசி நட்புறவு கொண்டாடியுள்ளார்..அதுவும் கிட்டத்தட்ட 60 ஆண்டுகளுக்குப்பின்...குறிப்பாக கடாபி பதவிக்கு வந்து 35 வருடங்களின் பின்....!
சதாமைப் பார்த்து கடாபி பயந்திட்டாரோ...அல்லது.....உண்மையில் வளமான மாற்றங்களை மனதார விரும்பினாரோ...காலந்தான் பதில் சொல்ல வேண்டும்....!
தகவல் மூலம் BBC.com...!
|
|
|
|