![]() |
|
முன்னாள் எதிரி இன்றைய நண்பன்...! - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3) +--- Forum: செய்திகள்: உலகம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=14) +--- Thread: முன்னாள் எதிரி இன்றைய நண்பன்...! (/showthread.php?tid=7291) |
முன்னாள் எதிரி இன்றைய - kuruvikal - 03-25-2004 <img src='http://newsimg.bbc.co.uk/media/images/39963000/jpg/_39963753_blair_ap203.jpg' border='0' alt='user posted image'> பிரிட்டன் பிரதமர் ரொனி பிளேயரும் லிபியத் தலைவர் கடாபியும் லிபியா அமெரிக்காவின் சத்துருக்களில் ஒன்று....கேர்னல் கடாபி அமெரிக்காவின் முக்கிய எதிரியாகத் திகழ்ந்தவர்....அதிக நாட்கள் இல்லை நேற்று வரை...ஏன் இன்றும் அவரில் அமெரிக்காவுக்கு பலத்த சந்தேகங்கள் இருக்கிறது...இருந்தாலும் மிக அண்மையில் தனது முதல் நிலை அதிகாரி ஒருவரை லிபியாவுக்கு அனுப்பியது அமெரிக்கா...! அமெரிக்காவின் நெருக்கிய கூட்டாளியும் 1988 லொக்கபி விமானக் குண்டு வெடிபின்(இக்குண்டு வெடிப்பில் 270 பேர் கொள்ளப்பட்டனர்...இதன் பின்னணியில் லிபியா இருந்தது என்றும் குற்றச்சாட்டப்பட்டிருந்தது) பின் கடாபியுடன் மிகத்தீவிரமான முறுகலைக் கொண்டிருந்தது பிரிட்டன்...! தற்போது அதே பிரிட்டனின் பிரதமர் ரொனி பிளேயர் லிபியத் தலைநகர் ரிப்போலி சென்று கேர்னல் கடாபியுடன் கைகுலுக்கி அல் குவைடா பயங்கரவாதம் பற்றியும் அதன் ஒழிப்புப்பற்றியும் எதிர்காலத்தில் லிபியாவுடனான பிரிட்டனின் இராணுவ ஒத்துழைப்புகள் பற்றியும் மற்றும் வியாபாரம் முதலீடுகள் பற்றியும் இன்னும் பலதும் பேசி நட்புறவு கொண்டாடியுள்ளார்..அதுவும் கிட்டத்தட்ட 60 ஆண்டுகளுக்குப்பின்...குறிப்பாக கடாபி பதவிக்கு வந்து 35 வருடங்களின் பின்....! சதாமைப் பார்த்து கடாபி பயந்திட்டாரோ...அல்லது.....உண்மையில் வளமான மாற்றங்களை மனதார விரும்பினாரோ...காலந்தான் பதில் சொல்ல வேண்டும்....! தகவல் மூலம் BBC.com...! |