Yarl Forum
செவ்வாய் கிரக கடலில் உயிரினம் இருந்ததா? - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: அறிவியற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=5)
+--- Forum: விஞ்ஞானம் - தொழில்நுட்பம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=25)
+--- Thread: செவ்வாய் கிரக கடலில் உயிரினம் இருந்ததா? (/showthread.php?tid=7285)



செவ்வாய் கிரக கடலில் உ - Mathan - 03-26-2004

செவ்வாய் கிரக கடலில் உயிரினம் இருந்ததா?

""செவ்வாய் கிரகத்தில் இருந்த கடலால் அங்கு உயிரினங்களும் இருந்திருக்கக்கூடும்'' என அமெரிக்க விஞ்ஞானிகள் கருதுகின்றனர். அமெரிக்கா அனுப்பிய ரோவர் விண்கலம் செவ்வாய் கிரகத்தில் மண் மற்றும் தட்ப வெப்ப நிலைகளை ஆராய்ந்து வருகிறது.

செவ்வாய் கிரகத்தில் உப்பு படிவங்கள் நிறைய காணப்படுவதால் அங்கு ஒரு காலத்தில் கடல் இருந்திருக்க வேண்டும் என அமெரிக்காவின் நாசா விஞ்ஞானிகள் உறுதியாக நம்புகின்றனர். ""அந்த கிரகத்தில் கடல் இருந்திருப்பதற்கான தடயங்கள் கிடைத்து வருவதால் நிச்சயம் அங்கு உயிரினங்கள் இருந்திருக்க வேண்டும்'' என கார்நெல் பல்கலைக்கழக விஞ்ஞானி ஸ்டீவ்ஸ்கொயர்ஸ் தெரிவித்துள்ளார்.

""செவ்வாய் கிரகத்தில் உள்ள பாறைகள் உப்பு படிவங்களால் உருவாகியுள்ளன. அங்கு எப்போது கடல் இருந்தது? எவ்வளவு பெரியதாக இருந்தது போன்ற தகவல் தெரியவில்லை'' என நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். ரோவர் விண்கலம் இன்னும் சில வாரங்கள் செவ்வாயில் மேற்கொள்ள உள்ள ஆய்வின் மூலம் பல்வேறு அரிய தகவல்கள் கிடைக்க உள்ளன.

நன்றி - வீரகேசரி