![]() |
|
கனவுகள் நிஜமானால்! - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: படைப்புக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=11) +--- Forum: குறும்படங்கள் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=51) +--- Thread: கனவுகள் நிஜமானால்! (/showthread.php?tid=7284) |
கனவுகள் நிஜமானால்! - Shan - 03-26-2004 மாற்று என்ற முழு நீள வீடியோ திரைப்படத்ததை தந்த ஈழம் நண்பர்கள் கனவுகள் நிஜமானால் என்ற அடுத்த முழு நீள படமான கனவுகள் நிஜமானால் படப்பிடிப்பில் ஈடுபட்டுள்ளனர். 70வீத படப்பிடிப்பு முடிந்த நிலையில் இந்த திரைப்படம் இந்த வருட இறுதிக்குள் ஐரோப்பா எங்கும் திரையிடப்படும் என எதிர்பாரக்கப்படுகிறது. மாற்று திரைப்படத்திற்கு பிரித்தானியாவில் கிடைத்த வெற்றியை அடுத்து Access Direct நிறுவனத்தினர் கனவுகள் நிஜமானால் என்ற புதியபடத்தை தயாரிக்க முன்வந்தனர். இந்த படத்தில் தமிழ் நண்பர்களுடன், இந்திய, பாகிஸ்தான், பங்களாதேஸ் கலைஞர்களுடன் பிரித்தானிய கறுப்பு வெள்ளை இனத்தவர்களும் நடித்துள்ளனர். திரைக்கதையை கஜேந்திரன் எழுத, முலக்கதை இயக்கத்தை புதியவன் செய்துள்ளார். இந்த படத்திற்கு இசை வேந்தன். கமரா பொபி. மாற்று வீடியோ திரைப்படம் வெகுவிரைவில் தமிழ் தொலைக்காட்சியூடாக ஐரோப்பா எங்கும் காண்பிக்கப்பட உள்ளது. வெகுவிரைவில் கனவுகள் நிஜமானால் பட காட்சிகள் சில இங்கு இணைக்கப்படும். - mohamed - 05-27-2004 கனவுகள் நிஜமானால் வெகுவிரைவில்![img][/img] - Eelavan - 05-27-2004 தகவலுக்கு நன்றி மொகமட்,சிங்கப்பூரில் இருக்கும் எங்கள் பாடுதான் திண்டாட்டம் இவற்றைப் பார்க்கமுடியாது,விமர்சனங்களைக் கேட்டு திருப்திப் படவேண்டியதுதான் - AJeevan - 05-28-2004 [size=15]கனவுகள் நிஜமானால் திரைப்படக் கலைஞர்களுக்கும், திரைப்படம் வெற்றி பெறவும் வாழ்த்துகள். AJeevan - kuruvikal - 05-28-2004 படம் எதிரும் புதிரும் போல இருக்கு....நல்ல செய்திகளைத் தாங்கி வரவும் மக்கள் மனங்களை விமர்சனங்களுடன் ஆக்கிரமித்துக் கொள்ளவும் எம் வாழ்த்துக்கள்....! - Mathan - 05-28-2004 இது போன்ற ஈழத்து கலைஞ்ஞர்களின் படங்கள் மேலும் ம்லும் வெளிவர வாழ்த்துக்கள் - mohamed - 06-05-2004 உங்கள் பார்வைக்கு!!! - vasisutha - 06-05-2004 படத்தை கொஞ்சம் சின்னதாக போட்டிருக்கலாமே. ஓடி ஓடி பார்க்க வேண்டி இருக்கு. - Eelavan - 06-05-2004 கொஞ்ச நாட்களில் திரைக்குவரும் ஓடி ஓடிப் பார்க்கத்தேவையில்லை இருந்த இடத்திலிருந்தே பார்க்கலாம் <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- Mathan - 06-06-2004 இருந்த இடத்தில் இருந்து பார்க்க முடியாது. தியேட்டருக்கு போகவேண்டும். விரைவில் படத்தை எதிர்பார்க்கின்றேன். - shanmuhi - 06-06-2004 Quote:படத்தை கொஞ்சம் சின்னதாக போட்டிருக்கலாமே. ஓடி ஓடி பார்க்க வேண்டி இருக்கு. - Shan - 12-15-2004 கனவுகள் நிஜமானால் தை மாதம் 8ம் 9ம் 10ம் திகதி லண்டனில் திரையிடப்பட உள்ளது. இது தவிர ஐரோப்பாவின் அனைந்து நகரங்களிலும் கனடாவிலும் இந்த திரைப்படத்தை திரையிட உத்தேசித்துள்ளனர். வெகு விரைவில் இந்த தேதிகள் அறிவிக்கப்படும். திரைப்படத்தின் விளம்பரங்கள், ரீ.ரீ. என் தொலைக்காட்சி, தீபம் தொலைக்காட்சியில் தற்போது ஒளிபரப்பப்பட்டு வருகிறது. மாற்று திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து ஈழம் நண்பர்களின் கனவுகள் நிஜமானால் படத்தை Access Direct நிறுவனம் தயரித்து வெளியிடுகிறது. மாற்று திரைப்படம் வெகு விரைவில் தீபம் தொலைக்காட்சியில் காண்பிக்கப்பட உள்ளது. திகதிகள் வெகுவிரைவில்! தீபம் தொலைக்கட்சி எதிர் வரும் நத்தர் புதுவருட மற்றும் தைப் பொங்கல்வரை தமது சேவையை இலவசமாக ஒளிபரப்ப திட்டமிட்டுள்ளதாகவும் தெரியவருகிறது. - KULAKADDAN - 12-15-2004 DVD, VCD கிடைக்கதொ - shanmuhi - 12-15-2004 Quote:DVD, VCD கிடைக்கதொஅதற்குள் என்ன அவசரம். - KULAKADDAN - 12-15-2004 திரையிலை பாா்க்கமுடியாது.... ஆறவிட்டால் பழங்கஞ்சி பருங்கோ - Shan - 12-26-2004 மாற்று திரைப்படம் எதிர்வரும் 3ம்திகதி திங்கள் கிழமை மதியம் 1 மணிக்கு தீபம் தொலைக்காட்சியில் இலவசமாக ஒளிபரப்ப பட உள்ளது. தீபம் தொலைக்காட்சி ஜனவரி 31ம் திகதி வரை இலவசமாக ஒளிபரப்பப்பட உள்ளது. - Shan - 12-26-2004 மாற்று திரைப்படம் எதிர்வரும் 3ம்திகதி திங்கள் கிழமை மதியம் 1 மணிக்கு தீபம் தொலைக்காட்சியில் இலவசமாக ஒளிபரப்ப பட உள்ளது. தீபம் தொலைக்காட்சி ஜனவரி 31ம் திகதி வரை இலவசமாக ஒளிபரப்பப்பட உள்ளது. - AJeevan - 12-27-2004 <b>நல்ல விடயம். வாழ்த்துகள்.</b> - Shan - 12-30-2004 தாயகத்தில் நடைபெற்ற பேரழிவை அடுத்து கனவுகள் நிஜமானால் பட வெளியீடும் ஒத்திவைக்கப்பட்டடுள்ளது. Quote:Shan - Shan - 01-05-2005 தீபம் தொலைக்காட்சியில் மாற்று படம் பார்த்தவர்கள் உங்கள் கருத்துக்களை தந்தால் எதிர்கால தயாரிப்புகளுக்கு உதவியாக இருக்கும். நன்றி. |