| Welcome, Guest |
You have to register before you can post on our site.
|
| Forum Statistics |
» Members: 8,982
» Latest member: lucilegr4
» Forum threads: 9,058
» Forum posts: 83,244
Full Statistics
|
| Online Users |
There are currently 256 online users. » 0 Member(s) | 253 Guest(s) Applebot, Bing, Google
|
| Latest Threads |
±ôÀÊ ÀÈ¢ì¸Ä¡õ
Forum: நகைச்சுவை
Last Post: UsArgum
01-10-2026, 09:07 AM
» Replies: 28
» Views: 10,290
|
Mrs.Sirimao Bandaranayake
Forum: நகைச்சுவை
Last Post: GeraTep
11-14-2025, 10:46 AM
» Replies: 14
» Views: 3,228
|
Farty time
Forum: நகைச்சுவை
Last Post: ㄹㅈㄷㄹㅈ
08-26-2025, 03:48 PM
» Replies: 11
» Views: 5,603
|
கனவே கலைகிறதே
Forum: பொழுதுபோக்கு
Last Post: KULAKADDAN
04-30-2006, 06:37 PM
» Replies: 0
» Views: 6,288
|
Karuna Cadres were captur...
Forum: பிறமொழி ஆக்கங்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:17 PM
» Replies: 4
» Views: 8,621
|
என்ன நடந்தது யாழிற்கு?
Forum: உங்கள் கருத்துக்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:03 PM
» Replies: 42
» Views: 31,047
|
முடியுமானால் முயற்ச்சியுங...
Forum: போட்டிகள்
Last Post: Subiththiran
04-30-2006, 05:00 PM
» Replies: 15
» Views: 14,456
|
**சுடேக்கு** புதிர் விளைய...
Forum: போட்டிகள்
Last Post: kavithaa
04-30-2006, 04:30 PM
» Replies: 63
» Views: 38,471
|
புல்மோட்டையில் தாக்குதல்
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: Sriramanan
04-30-2006, 04:10 PM
» Replies: 2
» Views: 8,022
|
போதனை வேண்டாம்! பு...
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: alika
04-30-2006, 03:13 PM
» Replies: 4
» Views: 6,238
|
|
|
| விசுவின் விசுவாசம் |
|
Posted by: Paranee - 03-25-2004, 02:03 PM - Forum: புலம்
- Replies (9)
|
 |
விசுவின் விசுவாசம்
பகாPன் தீபகற்பத்தில் நாளை நடைபெறவிருக்கும் அரட்டை அரங்கத்திற்கு பேச்சாhளர்களிற்காக விண்ணப்பங்கள் கோரப்பட்டன. அதில் இலங்கையைச்சேர்ந்த விண்ணப்பதாரிகள் நிராகரிக்கப்பட்டுள்ளனர். இந்த நிகழ்விற்கு முன்னணி விளம்பதாரர்களாக சிறீலங்கா எயர்லைன்ஸ் இருக்கின்றது என்பது குறிப்பிடத்தக்கது. இலங்கை வாழ் மக்களின் பணங்கள் நன்கொடைகள் விசுபோன்ற விசமங்களிற்கு வேண்டும் இலங்கைத்தமிழர் எதிலும் பங்குபற்ற கூடாது.
|
|
|
| ஐ.நாவில் பொங்குதமிழ்...! |
|
Posted by: kuruvikal - 03-25-2004, 12:50 PM - Forum: செய்திகள் : தமிழீழம்
- Replies (5)
|
 |
<img src='http://www.tamilnaatham.com/special/pongu/pongu20040325.jpg' border='0' alt='user posted image'>
ஈழத்தமிழர்களின் தேசியம் சுயநிர்ணயம் தாயகம் என்பவற்றை வலியுறுத்தி ஐக்கிய நாடுகள் சபையை நோக்கிச் செல்லும் பொங்குதமிழ் நிகழ்வு...!
படம் தமிழ்நாதம்...!
|
|
|
| மனிதக் கூர்ப்பின் (Human evolution) மூலம்...?! |
|
Posted by: kuruvikal - 03-25-2004, 12:06 PM - Forum: விஞ்ஞானம் - தொழில்நுட்பம்
- Replies (1)
|
 |
<img src='http://www.wilderdom.com/images/Cro-Magnon.jpg' border='0' alt='user posted image'>
<img src='http://www.arts.uwaterloo.ca/~acheyne/index_files/guards.jpg' border='0' alt='user posted image'>
<img src='http://imagecache2.allposters.com/images/FOT/FFPOFP43.jpg' border='0' alt='user posted image'>
சிம்பென்சி
கிட்டத்தட்ட சுமார் 2.4 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னால் கிழக்காபிரிக்க புற்தரைகளில் வாழ்ந்த தற்கால மனிதனின் மூதாதையரில் சூழலின் தாக்கத்தின் வாயிலானது எனக் கருதத்தக்க பாரம்பரிய அலகு (gene) மாற்றம் (mutation)- (genetic mutation) ஒன்று ஏற்பட்டதே ஒப்பீட்டளவில் சிறிய, வலிமை குறைந்த தாடைகள் உருவாகவும் வலிமை குறந்த தடைகளைத் தாங்கி நிற்கும் முகத்தசைகள் உருவாகவும் பெரிய கனவளவுள்ள மண்டையோடு உருவாகவும் பெரிய மூளை தோன்றவும் பற்கள் சிறிதாகவும் வழிவகுத்ததாக அமெரிக்க பென்சில்வனிய பல்கலைக்கழக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்...! இதன் மூலமே தற்கால மனிதனை நோக்கிய மனிதப் பரிணாம வளர்ச்சி ஆரம்பித்திருக்க வேண்டும் என்றும் அவர்கள் கூறியுள்ளனர்...!
இது மனித உயிரியல் தோற்றம் பற்றிய வரலாற்று ஆய்வாளர்கள் மத்தியில் வாதப் பிரதிவாதங்களைத் தோற்றிவித்துள்ளது....!
அதன் பிரகாரம் முகத்தசை தொடர்பான ஒரு பரம்பரை அலகு (gene) மாற்றம் -mutation- மட்டும் மேற்கூறிய எல்லா மாற்றங்களுடன் முழு மனித பரிணாம வளர்ச்சியையும் சாத்தியப்படுத்தி இருக்க முடிமா என எதிர்ப்பு வாதமும் முன்வைக்கப்பட்டுள்ளது..! அப்படி தொடர்ச்சியான மாற்றங்கள் நிகழ்ந்திருப்பின் அவை நிகழ்வதற்கான சாத்தியங்கள் என்ன என்றும் வினா எழுப்பப்பட்டுள்ளது....!
இருப்பினும் சுவட்டாய்வுகள் மூலம் சும்மார் 2.5 மில்லியனின் ஆண்டுகளுக்கு முன்னாலேயே தற்கால மனிதன் ஒரு வகை மூதாதையர் எலும்பாலான கருவிகள் செய்து வாய்க்கு வெளியே உணவுகளை பறிக்கவும் சிறிதாக்கி உண்ணவும் பழகி இருக்கின்றனர் என்பதும் இங்கு சுட்டிக்காட்டப்பட்டுள்ளது...இது அவர்களுக்கு முந்திய மூதாதையரைவிட மூளை வளர்ச்சி அதிகரித்திருப்பதையும் பற்களால் உணவைப்பறிப்பதை தவிர்க்க முயன்றுள்ளதையும் காட்டுகிறதாக சில ஆய்வாளர்கள் கருதுகின்றனர்...!
வலிமை குறந்த தாடைகளை தற்கால மனிதனிலும் வலிமை கூடிய தாடைகளையும் அவற்றுடன் கூடிய பலமான தசைகளையும் பழைய உலகுக் குரங்குகளான சிம்பென்சிகளில் இன்றும் தெளிவாக நோக்க முடியும்...சிம்பென்சிக்கும் தற்கால மனிதனுக்கும் இடையே பாரிய அளவு பரம்பரை அலகு வேறுபாடுகள் கிடையாது என்பதும் குறிப்பிடத்தக்கது....!
<b>[shadow=red:1ae42f4d2c]For more details...Click here[/shadow:1ae42f4d2c]</b>
Our Thanks to yahoo Science--AP
தமிழாக்கம் குருவிகளின் வலைப்பூ
|
|
|
| உலகவல்லரசுளுக்கு எச்சரிக்கை !? |
|
Posted by: anpagam - 03-25-2004, 10:58 AM - Forum: அரசியல் / பொருளாதாரம்
- Replies (10)
|
 |
<b>எஞ்சப்போவது நரமாமிச உலகு?.</b>
மத்திய கிழக்கின் காசா நகரில் கடந்த திங்கட்கிழமை அதிகாலை பள்ளிவாசல் ஒன்றுக்கு முன்னால் பாலஸ்தீனத் தீவிரவாத இயக்கமான ஹமாஸின் ஆன்மீகத் தலைவர் Nர்ய்க் அஹமட் யாசீன் படுகொலை செய்யப்பட்டதையடுத்து பாலஸ்தீன மக்கள் கொந்தளித்த வண்ணமிருக்கின்றார்கள்.
சக்கர நாற்காலியிலேயே தனது வாழ்க்கையை ஓட்டிý வந்த பார்வைக்குறைபாடுமுடைய அந்த 67 வயதான ஆன்மீகத் தலைவர் மீது ஹெலிகொப்டர்களில் இருந்து ராக்கெட் தாக்குதலை நடத்தி இஸ்ரேலிய இராணுவம் அதன் 'படை வலிமையை" பறைசாற்றியிருக்கிறது.
இழந்த தங்கள் தாயகத்தை மீட்பதற்காக அரை நூற்றாண்டுக்கும் அதிகமான காலமாக இரத்தம் சிந்திப் போராட்டம் நடத்திவரும் பாலஸ்தீன மக்களின் பேரன்புக்கும் பெருமதிப்புக்குமுரிய Nர்ய்க் அஹமட் யாசீன் மீது இஸ்ரேலியர்கள் நடத்திய தாக்குதலின் மறுகணம் அப்பகுதிக்கு விரைந்தோடிýச் சென்றவர்களினால் காணக் கூýடிýயதாக இருந்ததெல்லாம், ஆன்மீகத் தலைவரின் இரத்தம் தோய்ந்த சக்கரநாற்காலியின் பாகங்களையே.
இக்கொலைக்கான பொறுப்பை உடனடிýயாகவே உரிமை கோரிக்கொண்ட இஸ்ரேலிய இராணுவம், பிரதமர் ஏரியல் ர்ரோனே நேரடிýயாக Nர்ய்க் அஹமட் யாசீனைக் கொலை செய்வதற்கான உத்தரவைப் பிறப்பித்ததாகவும் உலகுக்குக் கூýறியது.
மத்திய கிழக்கில் அமைதியை ஏற்படுத்துவதற்கான நடவடிýக்கைகளின் ஒரு அங்கமே ஆன்மீகத் தலைவரின் கொலை என்று இஸ்ரேலிய அமைச்சரவையின் முக்கிய உறுப்பினர் ஒருவர் வாய் கூýசாமல் பிரகடனம் செய்தார்.
இஸ்ரேலின் இந்தச் செயலை ஏறக்குறைய முழு உலகமுமே கடுமையாகக் கண்டனம் செய்து கொண்டிýருக்கின்ற அதேவேளை, சியோனிஸவாதிகளோ, பாலஸ்தீனத்தின் சகல தீவிரவாதத் தலைவர்களுமே கொலை செய்யப்படுவதற்காக குறி வைக்கப்பட்டிýருக்கிறார்கள் என்று திமிர்த்தனத்துடன் அதே உலகத்துக்குச் சொல்லிக் கொண்டிýருக்கிறார்கள்.
தங்கள் ஆன்மீகத் தலைவரின் கொலைக்கு பழிக்குப் பழி வாங்குவதற்கு பாலஸ்தீனத் தீவிரவாதிகள் கொந்தளித்துக் கொண்டிýருக்கின்ற வேளையில், உலகத்துக்கே தலைமை தாங்கும் தகுதியைத் தனக்குத்தானே பொருத்திக் கொண்ட அமெரிக்காவின் ஜனாதிபதி ஜோர்ஜ் டபிள்யூ.புர்; 'பயங்கரவாதத்தில் இருந்து தன்னைப் பாதுகாத்துக் கொள்வதற்கான உரிமை இஸ்ரேலுக்கு இருக்கிறது. அதை இஸ்ரேல் செய்து கொண்டிýருக்கிறது" என்று கூýறியிருக்கிறார்.
பாலஸ்தீன மக்களின் தாயக மீட்புப் போராட்டத்தை ஒடுக்குவதில் இஸ்ரேலிய சியோனிஸவாதிகளுக்குப் பக்கபலமாக இருந்து வரும் அமெரிக்க ஜனாதிபதியிடம் இருந்து, 2001 செப்டெம்பர் 11 நியூயோர்க்கிலும் வார்pங்டனிலும் மேற்கொள்ளப்பட்ட விமானத் தாக்குதல்களுக்குப் பிறகு 'தான் பயங்கரவாதமென்று நினைப்பதற்கு" எதிராக முழு உலகையும் அணி திரட்டுவதற்கு கங்கணம் கட்டிýக் கொண்டு செயற்பட்டு, உலக மக்களின் எந்தவொரு நியாயமான வேண்டுகோளுக்கும் செவிசாய்க்க மறுத்து அடாவடிýத்தனத்தை உலகளாவிய ரீதியில் மேற்கொண்டுவரும் அமெரிக்க ஜனாதிபதியிடம் இருந்து இதைத் தவிர வேறு எந்த வார்த்தையை எதிர்பார்க்க முடிýயும்?.
ஆனால், நியாயமானதும் சட்டபூர்வமானதுமென்று உலக சமூýகத்தினால் ஏற்றுக்கொள்ளப்பட்ட பாலஸ்தீன மக்களின் விடுதலைப் போராட்டத்தை 'மேலும் மாசுபடுத்துவதற்கு" 2001 செப்டெம்பர் 11 இன் பின்னரான நிலைமைகளை முற்று முழுதாகப் பயன்படுத்துவதற்கு இஸ்ரேலுக்கு துணிச்சலைக் கொடுக்கும் வகையில் அமெரிக்காவும் அதன் நேச சக்திகளும் கடைப்பிடிýக்கும் அணுகுமுறையை சகித்துக் கொள்வதனால் ஏற்படக் கூýடிýய விபரீதத்தை உலக நாடுகள் புரிந்து கொள்ளாமல் இருப்பது அல்லது புரிந்து கொண்டும் ஏனோதானோவென்று எதுவும் பேசாமல் இருப்பது பெரும் விசனத்தை ஏற்படுத்துகிறது.
நியாயபூர்வமானவை என்று உலக சமுதாயத்தினால் ஏற்றுக் கொள்ளப்பட்ட போராட்டங்கள் அமெரிக்காவுக்கு ஏற்பட்ட விபரீதத்தின் காரணமாக அவற்றின் நியாயத் தன்மைகளையோ அல்லது இலட்சியக் கூýறுகளையோ இழந்து விட்டதாக கருதமுடிýயாது.
அமெரிக்க நகரங்கள் மீதான தாக்குதல்களுக்குப் பின்னர் 'பயங்கரவாதத்துக்கு எதிராக" உலகளாவிய போரைத் தொடுப்பதில் அமெரிக்காவும் அதன் நேச சக்திகளும் கையாளத் தலைப்பட்ட அணுகுமுறையை அவதானித்த கியூப ஜனாதிபதி பிடல் காஸ்ட்ரோ தெரிவித்த கருத்தொன்றை இங்கு நினைவூட்டுவது பொருத்தமானதாக இருக்கும்.
'அமெரிக்காவும் மேற்குலகும் உலக வரைபடத்தில் இருந்து ஒரேயொரு வேறுபாட்டை ஒழித்து விடுவதற்கு கங்கணம் கட்டிý நிற்கின்றன. அப்பட்டமான பயங்கரவாதத்துக்கும் நியாயபூர்வமான ஆயுதப் போராட்டத்துக்கும் இடையிலான வேறுபாடே அது" என்று காஸ்ட்ரோ கூýறியிருந்தார்.
இரு தசாப்தங்களுக்கும் கூýடுதலான காலமாக உள்நாட்டுப் போரில் சிக்கி அவலப்பட்டுக் கொண்டிýருந்த இலங்கையர்களாகிய எமக்கு அந்த உள்நாட்டுப் போரை மூýளவைத்த அடிýப்படைக் காரணிகளை நிதர்சனமாகக் காணக்கூýடிýயவர்களான எமக்கு அமெரிக்காவும் மேற்குலகும் துடைத்தெறிய விரும்பும் அந்த 'வேறுபாட்டிýன்" கனதி விளங்காமல் இருக்க எந்த நியாயமும் இல்லை.
அமெரிக்காவும் அதன் பின்னால் அணிதிரண்டு நிற்கும் நேசநாடுகளும் வகுப்பது தான் உலக ஒழுங்கு என்றும் உலக நியதி என்றும் ஏற்றுக்கொண்டு வாழ்வதைத் தவிர வேறுமார்க்கமேயில்லை என்று போதிப்பதற்கு பலர் எம்மத்தியில் இன்று இருக்கிறார்கள்.
அந்த 'உலக ஒழுங்கையும் நியதியையும்" இணங்கிச் செயற்பட நிர்ப்பந்திக்கப்பட்டதன் விபரீதத்தையே இன்று சர்வதேச சமூýகம் ஈராக் விவகாரத்தில் அனுபவித்துக் கொண்டிýருக்கிறது. பேரழிவு ஆயுதங்கள் ஈராக்கில் இருப்பதாகக் கூýறி தங்களது ஆக்கிரமிப்புக்கு நியாயம் கற்பித்த ஜோர்ஜ் டபிள்யூ.புர்;ர்{க்கும் பிரிட்டிýர்; பிரதமர் ரொனி பிளயருக்கும் அவர்களது நாடுகளிலேயே எதிர்ப்பு அதிகரித்து 'பொய்யர்கள்" என்று நாமகரணம் சூýட்டப்படுகின்ற போதிலும் உலக நாடுகளின் தலைவர்கள் எனப்படுவோர் பேசாமடந்தைகளாகவே இருக்கிறார்கள்.
எனவே, மத்திய கிழக்கில் பாலஸ்தீனர்கள் மத்தியில் ஏற்பட்டிýருக்கும் கொந்தளிப்பை 'பயங்கரவாதம்" என்று கூýறி 'நியாயத்தை" மறைப்பதற்கு தொடர்ந்தும் இஸ்ரேலிய சியோனிஸ்டுகளும் அவர்களின் அமெரிக்க-மேற்குலக ஆசான்களும் மேற்கொள்ளப் போகும் முயற்சிகள் பெரும் அனர்த்தத்தையே கொண்டுவரும் என்பது நிச்சயம்.
நியாயபூர்வமான போராட்டத்தின் 'யதார்த்தபூர்வமான மெய்மைகளை" பயங்கரவாதத்திற்குள் புதைத்துவிடத் துடிýக்கும் சக்திகளுக்கு உலக சமுதாயம் துணை போகாதிருப்பது அவசியம்.
அவ்வாறு தொடர்ந்தும் துணை போனால் எந்தக் கொலையையும் எவரும் நியாயப்படுத்தி விடக்கூýடிýய நரமாமிச உலக்கு தான் மிஞ்சும்.
நன்றி : தினக்குரல்.
|
|
|
| விளையாட்டு...கிரிக்கெட்...! |
|
Posted by: kuruvikal - 03-25-2004, 10:27 AM - Forum: விளையாட்டு
- Replies (54)
|
 |
ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகள் முடிவுகளின் கீழ் ICC இன் (சர்வதேச கிரிக்கெட் வாரியத்தின்) கிரிக்கெட் அணிகள் தரப்படுத்தலின் பிரகாரம் அவுஸ்திரேலிய அணி முதலாம் இடத்திலும் குருவிகளின் சிறப்பு விருப்புக்குரிய அணியான தென்னாபிரிக்க அணி இரண்டாம் இடத்திலும் சிறிலங்கா அணி மூன்றாம் இடத்திலும் இடம்பெற்றுள்ளன...!
ஒரு நாள் போட்டிகள் தரவரிசை பட்டியல் :
1. ஆஸ்ட்ரேலியா - 135 புள்ளிகள்
2. தென்ஆப்ரிக்கா - 113 புள்ளிகள்
3. இலங்கை - 109 புள்ளிகள்
4. நியூசிலாந்து - 109 புள்ளிகள்
5. இந்தியா - 107 புள்ளிகள்
6. பாகிஸ்தான் - 106 புள்ளிகள்
7. இங்கிலாந்து - 106 புள்ளிகள்
8. மேற்கிந்திய தீவுகள் - 100 புள்ளிகள்
தகவல் மூலம் வெப்புலகம் டொட் கொம்...!
|
|
|
| மறக்கலாமோ சொல் மனமே |
|
Posted by: shanmuhi - 03-25-2004, 07:31 AM - Forum: கவிதை/பாடல்
- Replies (7)
|
 |
மறக்கலாமோ சொல் மனமே
மனம் என்றொன்று இருப்பதால்
ஞாபகங்கள் அங்கே சங்கமம்
வெள்ளையாய் உடை கண்டால்
பள்ளி சென்ற தோழிகளுடன்
அள்ளிச் சென்ற புத்தகங்களுக்குள்
சுமந்து சென்ற ஞாபகங்கள்.....
பட்டாடையுடுத்தி பட்டாம் புூச்சியாய்
வட்டமடிக்கும் திருவிழாக் காலமதில்
கடலை வாங்கி உண்ட
கடந்து போன ஞாபகங்கள்.....
மண் மணக்கும் மழைத்துளிகளினுடே
மனை நோக்கி வருகையில்
அன்னையவளின் தாளித்த சமையலில்
வாசனையாய் போன ஞாபகங்கள்.....
வயதுக்கு வந்த போது
புதுப்புது மாற்றங்களுடே.. முதன் முதலாய்
புதுச் சேலையின் தழுவலில்
அனுபவமாகிப் போன ஞாபகங்கள்....
பருவ வயதில் பருவமான போதே
உருவமாய் உள்ளத்தில் உறைந்துபோன
முதற்காதலின் ஸ்பரிசங்கள்
ரணங்களாகிப்போன ஞாபகங்கள்.....
நடுநிசியில் கடந்து போன ஞாபகங்கள்
மீண்டும் என் நினைவில்.. அவற்றை
மறக்கலாமோ சொல் மனமே….!
25.03.2004
|
|
|
| 'சர்வதேச சர்வ-நம்பிக்கை" |
|
Posted by: Kanani - 03-24-2004, 09:32 AM - Forum: அரசியல் / பொருளாதாரம்
- Replies (1)
|
 |
'சர்வதேச சர்வ-நம்பிக்கை"
<i>திரு. ச.வி. கிருபாகரன் (பொதுச் செயலாளர் தமிழர் மனித உரிமைகள் மையம் பிரான்ஸ்) 19-03-04 அன்று ஜெனிவாவில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் சபையின் 60 ஆவது மனித உரிமை ஆணைக்குழுவில்,
ஆற்றிய உரை.</i>
'அமெரிக்க ஐனாதிபதியாக இருந்த திரு. டபிள்யுூ. வில்சன் அவர்கள் முதன் முதலாக 1918ம் ஆண்டு ~சுயநிர்ணய உரிமை| என்ற சொற்பதத்தை அமெரிக்க காங்கிரசில் ஆற்றிய உரைகளில் பாவித்தார்.
திரு. வில்சன் கூறியதாவது, ~சுயநிர்ணய உரிமை| என்பது வெறும் பேச்சல்ல, இது ஓர் நடைமுறைக்கான அடிப்படைத் தத்துவம். இதை முன்னெடுத்துச் செல்லாது அலட்சியம் செய்யும் நாடுகள் ஆபத்தையே நோக்குவார்கள்.
சுயநிர்ணய உரிமை என்ற விடயம் சட்ட ரீதியாக மனித உரிமைகளுடன் நெருக்கமாக பின்னிப் பிணைந்திருந்தாலும் இன்றய காலகட்டத்தில் இது ஓர் அரசியல் பிரச்சினையாகவே நோக்கப்படுகிறது.
உலகில் சுயநிர்ணய உரிமைக்கு தகுதி வாய்ந்த மக்கள், தமது சுயநிர்ணய உரிமைப் போராட்டத்தினை நடத்தும் பொழுது அவையாவும் ஆயுத பலத்தால் கொடுரமான முறையில் நசுக்கப்படுகிறது.
சுயநிர்ணய உரிமையின் கடுமையான நியாயவாதியாக இருந்த அமெரிக்க ஐனாதிபதி அவ்வேளையில் கூறியதாவது, உலகில் ஐனநாயகம் காப்பாற்றப் படவேண்டும். ஆகையால் சமாதானம் என்பது அரசியல் சுதந்திரத்தின் அடிப்படையிலேயே காணப்படுகிறது.
சுயநிர்ணய உரிமை மிகவும் தெளிவாக ஐக்கிய நாடுகள் சபையின் சட்டங்கள், சாசனங்களில் உள்ளடக்கப்பட்டுள்ளது.
கடந்த பல ஆண்டுகளாக இலங்கைத்தீவில் தமிழ் மக்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள மனித உரிமை மீறல்களை நாம் இவ் ஆணைக்குழுவில் நீண்டகாலமாக கேட்டுவருகிறோம். இவை யாவும் தமிழ்மக்கள் தமது நியாயமான சுயநிர்ணய உரிமைக் கோரிக்கையை முன்வைத்ததிற்கு எதிராக சிறிலங்கா அரசின் கொடுரமான போக்கே காரணம்.
சர்வதேச சட்டங்களின் பிரகாரம் சுயநிர்ணய உரிமை என்பது மக்களுக்கு உரியது. தனிப்பட்ட குழுவிற்கோ அல்லது நபருக்கோ உரியதல்ல.
இலங்கைத் தீவில் வாழும் தமிழ் மக்கள் ஓர் நீண்ட சரித்திரத்தை, கலாச்சாரத்தை, தமக்கான ஒரு மொழியை, அத்துடன் நிர்ணயிக்கப்பட்ட எல்லைகளைக் கொண்ட ஓர் தாயக புூமியைக் கொண்டவர்கள். ஆனால் இலங்கை சுதந்திரம் பெற்றதிலிருந்து (1948) அரசியல் சாசனத்திலிருந்த பாதுகாப்புக்களையும் இழந்து, |தமிழர்| என்ற அடையாளத்தையும் இழக்கத் தொடங்கியுள்ளனர்.
சிறிலங்காவின் 1956ம் ஆண்டு தனிச் சிங்களச் சட்டம், சிங்கள-தமிழ் அரசியல் தலைவர்களுக்கிடையில் கைச்சாத்திடப்பட்ட இரு ஒப்பந்தங்கள் (1957, 1965) கைச்சாத்திட்ட சிங்கள பிரதமர்களாலேயே கிழித்தெறியப்பட்டன. 1972ம் ஆண்டு கல்வி தரப்படுத்தல், அத்துடன் நடைபெற்ற பல இனக்கலவரங்கள் யாவும் அவ்வேளையில் தமிழ் மக்கள் சாத்வீகமான முறையிலேயே எதிர்த்து போராடினார்கள். ஓர் புத்திஐPவியின் அறிக்கையின்படி, தமிழர்களின் தாயக புூமியில் 50 வீதமான பிரதேசங்கள் சிறிலங்கா அரசினால் திட்டமிடப்பட்டு சிங்களவர்களினால் அபகரிக்கப்பட்டுள்ளது.
தமிழர்களுடைய முப்பது வருடகால சாத்வீகப் போராட்டங்கள் சிறிலங்காவின் அரச படைகளினால் வன்முறை மூலம் நசுக்கப்பட்டது. தமிழர்களுடைய சாத்வீகப் போராட்டங்கள் எந்தவிதத்திலும் பயனற்றுப்போன வேளையில், தமிழ் மக்கள் தங்களை தாங்களே பாதுகாக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டார்கள். இது தமிழீழ விடுதலைப் புலிகளின் தோற்றத்திற்கும், ஆயுதப் போராட்டத்திற்குமான உணர்வுகளை தமிழ் மக்களுக்கு கொடுத்தன.
கடந்த இருபது வருடகாலமாக சிறு சிறு இடைநிறுத்தங்களுடன் இரத்தக்களரிகளுடன் யுத்தம் நடைபெற்றது.
கைது, சித்திரவதை, பாலியல் வல்லுறவு, கொலை, இடப்பெயர்வுகள், வெளிநாடுகளில் அரசியல் தஞ்சம் போன்றவை தமிழ்மக்களின் சோக வாழ்வாகியது.
கிருபாகரன் மேலும் கூறியதாவது, கடந்த பத்து ஆண்டுகளுக்கு மேலாக இலங்கைத்தீவின் வடக்கு-கிழக்கு மாகாணங்களில் மூன்றில் இரண்டு பகுதிகளில் தமிழீழ விடுதலைப் புலிகளின் நிர்வாகம் நடைபெறுகிறது.
நோர்வே அரசின் முன்னெடுப்புக்களினால், 2002ம் ஆண்டு பெப்ரவரியிலிருந்து தமிழீழ விடுதலைப் புலிகளிற்கும் சிறிலங்கா அரசிற்கும் இடையில் ஆறு சுற்றுப் பேச்சுவார்த்தைகள் நடைபெற்ற பொழுதும், இவற்றில் இணக்கம் கண்டவற்றை சிறிலங்கா அரசு நடைமுறைப்படுத்தத் தவறிய காரணத்தால், தமிழீழ விடுதலைப் புலிகள் தாம் தற்காலிகமாக பேச்சுவார்த்தைகளிலிருந்து இடைநிறுத்திக் கொள்வதாக அறிவித்துள்ளனர்.
கடந்த நவம்பர் முதலாம் திகதி, தமிழீழ விடுதலைப் புலிகள் வடக்கு கிழக்கிற்கான இடைக்கால நிர்வாகத் தீர்வுத் திட்டத்தை முன்வைத்தனர். இத்தீர்வுத் திட்டத்தை ஐரோப்பிய ஒன்றியம், அமெரிக்கா மற்றும் வேறு பல நாடுகளும் வரவேற்றிருந்தனர்.
ஆனால் நவம்பர் நாலாம் திகதி சிறிலங்காவின் ஐனாதிபதி, மூன்று அமைச்சுப் பொறுப்புக்களை தன்வசம் எடுத்துக் கொண்டதிலிருந்து அரசியல் சர்ச்சரவுகள் அரசுக்கும் ஐனாதிபதிக்கும் இடையில் ஏற்பட ஆரம்பித்தது. இறுதியில் பாராளுமன்றமும் கலைக்கப்பட்டது. தமிழீழ விடுதலைப் புலிகளினால் முன்வைக்கப்பட்ட தீர்வுத் திட்டம், ஆட்சியில் உள்ளவர்களினால் கவனத்தில் எடுக்கப்படவில்லை.
சிறிலங்காவில் இது ஓர் கவலைக்குரிய விடயம். ஒவ்வொரு வேளையிலும் இனப்பிரச்சினைக்கான தீர்வு கிட்டக்கூடிய சூழ்நிலை ஏற்படும்பொழுது, ஆட்சி செலுத்தும் ஐக்கிய தேசியக் கட்சியும், சிறிலங்கா சுதந்திரக்கட்சியும் முரண்பட்டு குழப்பிவிடுவார்கள்.
இதனை சர்வதேச சமூகம் அமைதியாக கவனித்துக் கொண்டிருக்கிறது.
ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் திரு. கோபி அனான், இவ் ஆணைக்குழுவின் 55 ஆவது கூட்டத்தொடரில் (1999) பேசும்பொழுது கூறியதாவது, 'இவ் ஐ.நா. சபை அரசாங்கங்களின் அங்கத்துவத்தை கொண்டபொழுதும், மக்களைப் பாதுகாப்பதை முக்கிய நோக்கமாக கொண்டுள்ளது. நான் இப்பதவியில் இருக்கும் வரை மக்களுக்கே எமது செயற்பாடுகளில் முக்கியத்துவம் கொடுப்பேன். நாட்டின் ஒருமைப்பாடு என்ற பெயரில் மக்களின் அடிப்படை சுதந்திரங்களை எந்த அரசாங்கங்களும் மீற முடியாது. ஒருவர் பெரும்பான்மையாக இருந்தால் என்ன, சிறுபான்மையாக இருந்தால் என்ன அவருடைய அடிப்படை சுதந்திரமும் மனித உரிமைகளும் என்றும் பாதுகாக்கப்படும்."
தலைவர் அவர்களே, எத்தனையோ இனப்பிரச்சனைகள் ஐக்கிய நாடுகள் சபையின் முன்னேற்பாடுகளினால் தீர்க்கப்பட்டுள்ளது. இவ் ஆணைக்குழு இவ் விடயங்களில் பெரும் பங்கும் வகித்துள்ளது.
இலங்கைத்தீவில் வாழும் தமிழ் மக்கள் தமது சுயநிர்ணய உரிமையை மீண்டும் அடைவதற்கு ஐக்கிய நாடுகள் சபையின் முன்னெடுப்புக்கள் அவசியம் எனக் கூறவிரும்புகிறேன்.
நன்றி
தமிழ்நாதம்
|
|
|
| காபன் (C) எனும் அர்ப்புத மூலகத்தின் 5 ந்தாவது நிலை....! |
|
Posted by: kuruvikal - 03-23-2004, 02:58 PM - Forum: விஞ்ஞானம் - தொழில்நுட்பம்
- No Replies
|
 |
<img src='http://www.nature.com/nsu/040322/images/magnet_180.jpg' border='0' alt='user posted image'>
காந்தத்துடன் கவர்ச்சியைக் காட்டும் காபனின் 5 ந்தாம் நிலை (வழமையாக காபன் சாதாரண காந்தத்துடன் கவர்ச்சியைக் காட்டுவதில்லை)
காபன் ©...இது ஒரு இரசாயன மூலகம்...இது தூய நிலையில் வெவ்வேறு வடிவங்களில் வெவ்வேறு பெளதீக இயல்புகளை வெளிப்படுத்தியவாறு பிறதிருப்பங்களாக இருக்கக் காணப்படுகிறது,,,எமது உடல் ஆகினும் சரி எந்த சேதன உடலாகினும் சரி எதிலும் காபன் ஒரு மிக முக்கியமான பங்காளி அது இல்லையேல் பூமியில் உயிரினங்கள் இல்லை....!
காபன் பிறதிருப்பங்களில் (Allotropic form) கிரபைட் (பென்சில் கரி- Graphite) டையமன்ட் (வைரம்-Diamond) (இவை இரண்டும் இயற்கையில் உண்டு) பக்கிபோல் (Buckyballs) நனோரியூப் (Nanotubes) ஆகிய வேறு இரு C நிலைகள் செயற்கையாக உருவாக்கப்பட்டன.
தற்போது அவுஸ்திரேலிய கன்பராவில் உள்ள அவுஸ்திரேலிய தேசிய பல்கலைக்கழகம் மிகவும் குறந்த திணிவுடைய மிக நுண் குழாய் வடிவான வலை அமைப்பைக் கொண்ட ஸ்பொண்ஜி சொலிட்-spongy solid (பஞ்சுத் திணிவு)-<b>நனோ fஓம்-Nanofoam </b>எனும் 5ந்தாவது காபன் நிலையை C அணுக்கள் மீது 10,000 Hz அதிர்வுள்ள கதிர்களைச் செலுத்தி 10,000 பாகை செல்சியசிற்கு வெப்பப்படுத்தி உருவாக்கி உள்ளது....!
இந்தக் காபன் நிலை வழமைக்கு மாறாக காந்தத்துடன் கவர்ச்சியை காண்பிக்கும் பெளதீக இயல்பை வெளிப்படுத்தி இருக்கின்றது...அத்துடன் இக்காபன் நிலையை புற்றுநோய்க்கான சிகிச்சை அளிப்பிலும் மூளை மற்றும் குருதிப் பாதைகள் தொடர்பான ஸ்கானிங்கிலும்(Scanning) குறிப்பிடத்தக்க வகையில் எதிர்காலத்தில் பாவிக்க முடியும் என்றும் தெரிவிக்கப்படுகிறது....!
<b>[shadow=red:3a4a770c36]For More Details....Click here[/shadow:3a4a770c36]</b>
Our Thanks to Nature.com
தமிழாக்கம் குருவிகளின் வலைப்பூ...!
|
|
|
|