Welcome, Guest
You have to register before you can post on our site.

Username
  

Password
  





Search Forums

(Advanced Search)

Forum Statistics
» Members: 8,982
» Latest member: lucilegr4
» Forum threads: 9,058
» Forum posts: 83,244

Full Statistics

Online Users
There are currently 409 online users.
» 0 Member(s) | 406 Guest(s)
Applebot, Bing, Google

Latest Threads
±ôÀÊ ÀÈ¢ì¸Ä¡õ
Forum: நகைச்சுவை
Last Post: UsArgum
01-10-2026, 09:07 AM
» Replies: 28
» Views: 10,289
Mrs.Sirimao Bandaranayake
Forum: நகைச்சுவை
Last Post: GeraTep
11-14-2025, 10:46 AM
» Replies: 14
» Views: 3,228
Farty time
Forum: நகைச்சுவை
Last Post: ㄹㅈㄷㄹㅈ
08-26-2025, 03:48 PM
» Replies: 11
» Views: 5,603
கனவே கலைகிறதே
Forum: பொழுதுபோக்கு
Last Post: KULAKADDAN
04-30-2006, 06:37 PM
» Replies: 0
» Views: 6,288
Karuna Cadres were captur...
Forum: பிறமொழி ஆக்கங்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:17 PM
» Replies: 4
» Views: 8,620
என்ன நடந்தது யாழிற்கு?
Forum: உங்கள் கருத்துக்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:03 PM
» Replies: 42
» Views: 31,046
முடியுமானால் முயற்ச்சியுங...
Forum: போட்டிகள்
Last Post: Subiththiran
04-30-2006, 05:00 PM
» Replies: 15
» Views: 14,456
**சுடேக்கு** புதிர் விளைய...
Forum: போட்டிகள்
Last Post: kavithaa
04-30-2006, 04:30 PM
» Replies: 63
» Views: 38,471
புல்மோட்டையில் தாக்குதல்
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: Sriramanan
04-30-2006, 04:10 PM
» Replies: 2
» Views: 8,022
போதனை வேண்டாம்! பு...
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: alika
04-30-2006, 03:13 PM
» Replies: 4
» Views: 6,238

 
  தமிழ் ஆங்கில அகரதிக்கு உதவி தேவை
Posted by: theepan - 03-19-2004, 01:51 AM - Forum: தமிழும் நயமும் - Replies (1)

நான் ஒரு தமிழ் ஆங்கில அகரதியை உருவாக்கி வருகிறேன். தற்போது என்னிடம் 5000 ஆங்கில சொற்களுக்குரிய தமிழ் பொருளோ உள்ளது. சிறந்த செயற்பாட்டுக்கு இது போதாது. மேலும் சொற்களை இனைப்பதற்கு ஆர்வம் உள்ளவர்களின் உதவி தேவைப்படுகின்றது. உதவிசெய்ய விரும்புவர்கள் இந்த மின்னஞ்சல் முகவரிக்கு தோடர்புகொள்ளவும்.

rpiratheepan@yahoo.com

Print this item

  அணுவணுவாகக் கொல்லும்....
Posted by: sWEEtmICHe - 03-18-2004, 05:59 PM - Forum: கவிதை/பாடல் - Replies (8)

[size=20]அணுவணுவாகக் கொல்லும்....

<img src='http://www.geetham.net/photoshow/albums/userpics/15148/sTrisha_01%5B1%5D.jpg' border='0' alt='user posted image'>

[size=13]இது மனதுக்குள் வந்து
அணுவணுவாகக் கொல்லும்
காதலி இவள் மனதுக்குள் வராமல்
அணுவணுவாகக் கொல்பவள்
ஒரு பெண்ணே உன்னுள்ளே
ஓர் ஆயிரம் பெண் இருக்குதடி
ஓரு பார்வை பார்த்துவிட்டாய் - எனக்கு
உலகமெல்லாம் வேர்க்குதடி! நிம்மதியான
வாழ்க்கை மனிதனுக்கு என்மதியை தரும்...
துன்பமான வாழ்க்கை மனிதனுக்கு
துயரரைத் தரும்....
விண்ணைப்பார்ப்பவன் வாழ்கையில்
உயரப்பார்க்கிறான்...
மண்ணைப்பார்ப்பவன் வாழ்கையில்
மறையப்பார்க்கிறான்..
உன் இன்பமன முகத்தை பார்த்தேன் என் துன்ப
முகவரியை மறந்தேன்........
வீசும் புயலுக்கு உருவம் இல்லை
நீ பேசும் தமிழுக்கோ உறக்கம் இல்லை
பிறையே பிறையே வளரும் பிறையே
இது நல்வரவா... Cry Cry

<b>This poem is written by Author:MCgaL(sWEEtmICHe)</b>

Print this item

  கடல்நீர் என்னுடன் பேசியதே.......
Posted by: sWEEtmICHe - 03-18-2004, 05:32 PM - Forum: கவிதை/பாடல் - Replies (27)

[size=20]கடல்நீர் என்னுடன் பேசியதே

<img src='http://www.geetham.net/photoshow/albums/userpics/15148/normal_20030715_78sm_224654~0.jpg' border='0' alt='user posted image'>

[size=15]வானவில் குடையும் புடிக்குதே
புல் வெளி பாதை விரிக்குதே???
கடல்நீர் என்னுடன் பேசியதே..
பெண்ணே ஏன் இந்தக் கண்ணீரோ
காதல் கரும் பாறையே
தயவு செய்து உன் கண்ணீரை இங்கே
கடலில் கலந்துவிடதே...
கரையிலேயே உன் கண்ணீரை சிந்துவாய்
உன் கண்ணீரில் கரையில் உள்ள மண்ணில்
[size=15]மன கதவு திறக்குதே
மன பாரத்தை இறக்கி வைக்க போன பெண்ணே
மனம் அக் கடல்நீர் பேசியதை கேட்டுதா
இது ஏன் சிலருக்கு தான் மனசு இருக்குதா ..
உள்ளம் அதில் நிலைச்சு இருக்குதேகாதல்
என்ன செய்யும், கண்ணீர் என்ன செய்யும்
மிச் என்ன செய்யும் ...
உன்னை மாத்துமா
இந்த கண்ணீரே விடுகிறதோ... Cry Cry

[b]இந்த கவிதை McgaL(சுவிறிமிச்சி) எழுதியது

Print this item

  திருக்குறள்
Posted by: theepan - 03-18-2004, 04:01 PM - Forum: அறிமுகம் - Replies (12)

கற்க கசடற கற்றவை கற்றபின்
நிற்க அதற்கு தக.

Print this item

  பிரியும் காலம் வந்தால்...
Posted by: sWEEtmICHe - 03-18-2004, 03:08 PM - Forum: கவிதை/பாடல் - Replies (47)

[b]<span style='font-size:30pt;line-height:100%'>பிரியும் காலம் வந்தால்... </span>

<img src='http://www.quasimondo.com/archives/lauraboy.jpg' border='0' alt='user posted image'>

<span style='font-size:22pt;line-height:100%'>என் உயிரே உன்னிடம் நான் கேட்பது ஒன்றே தான்...
இதுவரை உன்னால் என் இமைகள் நனையவில்லை...
என்னிடம் உன்னை தருவாய் என்ற நம்பிக்கையில்...
எந்தன் மனதில் கண்ணீர் சுமையுமில்லை
என்னை விட்டு நீ பிரியும்
காலம் வந்தால்...
புதைக்கும் மண்ணில் நான் புழுதியாவேன்....
இது தான் என்னுடைய இறுதி கண்ணீர் துளி ......... Cry Cry </span>

[size=12]இந்த கவிதை MCgaL(சுவிற்மிச்சி) எழுதியது :roll:

Print this item

  மீண்டும் நம் காதல் பூப்பது எப்போ?
Posted by: sWEEtmICHe - 03-18-2004, 01:11 PM - Forum: கவிதை/பாடல் - Replies (66)

மீண்டும் நம் காதல் பூப்பது எப்போ?
<img src='http://www.geetham.net/photoshow/albums/userpics/15148/desert_wind.jpg' border='0' alt='user posted image'>

நினைப்பது கடினமா?
அல்ல நீ என்னை மறப்பது கடினமா?
நேசத்தால் ஒன்றானது பொய்யா?
இன்று என் கண்கள் கலங்கினதும் ஏனையா?
என் மீது நீ சிந்திய பாசம்தான் பொய்யா?
உயிர் பிரிந்து இன்று வாடுதே இந்த ரோஜா..
என் மனதை முள்ளால் குத்தியதும் நீயா?
அல்ல இந்த பிரிவு விதியால் அமைக்கப்பட்ட சதியா?
கனவில் கூட உன்னைப் பிரிந்திருக்க மாட்டேனே
இந்த நிஜத்தில் எப்படி நான் வாழ்வேனே....
ஊமையின் கண்ணீர் பேசியது
வாழ்வென்றால் போராடும் போர்க்களம்தானா
மீண்டும் நம் காதல் பூப்பது எப்போ? என்
செல்ல....<img src='http://www.321greetings.com/images/rose4.gif' border='0' alt='user posted image'>

[b]இந்த கவிதை MCgaL(சுவிற்மிச்சி) எழுதியது

Print this item

  சார்லி சாப்ளின்
Posted by: AJeevan - 03-18-2004, 11:50 AM - Forum: சினிமா - No Replies

<b><span style='color:brown'>''நாம் பல நேரங்களில் அழக்கூடாது என்பதற்காகவே சிரித்துத் தொலைக்கிறோம்!''
[b]- சார்லி சாப்ளின்</b>
<img src='http://www.tamil.com/cinema/images/gd1.gif' border='0' alt='user posted image'>
[size=15]யதார்த்தம் என்று சொல்லப்படுவதன் மீது எனக்கு ஆர்வமே கிடையாது. 'Make Beleive' தான் என் படங்கள். சில நேரங்களில் உண்மையின் உள்ளே ஊடுருவிப் போவது ரொம்பவும் போரடிக்கிற விஷயமாகிவிடும். எனவேதான் சிட்டி லைட்ஸ்-ல் ஓர் அழகான இளம் பெண் எப்படி ஒரு ஏழையை நேசிப்பாள் என்று யோசித்து, யதார்த்தத்திற்காக நம்பத்தகுந்த சூழ்நிலைகளை தேவையின்றி திணிக்க வேண்டியதாகிவிட்டது.

தி கவுன்டஸ் படமெடுக்கிற போது நான் கோமாளித்தனமான காட்சிகளே எழுதவில்லை. கசப்பான விஷயங்களைப் போதுமான அளவு உருவாக்கத் தெரிந்தால் அதை எல்லோரும் விரும்புகிறார்கள் போலும். எனது இந்தப் படம் அப்படிப்பட்டதுதான். ரொம்பவும் யதார்த்தபாணி படம். படப்பிடிப்பின் போதே கூட யாராவது ஏதாவது வேடிக்கை செய்தாலும் ஷ¥ட்டிங்கை கேன்சல் செய்து விடுவேன். என் சுய உற்சாகம் கூட அடைப்பட்டுப் போனது. நாம் படைக்கிற கதாபாத்திரத்தின் ஆழத்துக்குப் போனால் அது நம் சுய உற்சாகத்தையே அல்லவா கொன்று விடுகிறது! எனக்கு ஆழங்கள் வேண்டியதில்லை என்று எண்ணுகிறேன். அவை சுவாரஸ்யம் மிக்கவை என்றும் நான் நம்பவில்லை. இந்தப் படம் எனக்கு ஒரு சாகசம். இதற்கு முன் நான் பெரிய நட்சத்திரங்களைப் போட்டு படமெடுத்ததில்லை. நான்தான் என்னுடைய நட்சத்திரம். இதைச் சொல்வதில் எனக்கு ஒளிவு மறைவு ஏதுமில்லை. மார்லன் பிராண்டோவை இப்படத்தில் போட்டதற்கு காரணமே அவர் நகைச்சுவை உணர்வற்ற இறுகிய மனிதராக இருந்ததுதான். அவர் நகைச்சுவை உணர்வு உள்ளவர் என்று தோன்றியிருந்தால் நான் அவரைப் போட்டிருக்க மாட்டேன் போலும்! மிகவும் கட்டுக் கோப்புடன் யதார்த்த பாணியில் உருவாக்கப்பட்டதாலோ என்னவோ இப்படம் என் மற்ற படங்களைவிட அதிக கோமாளித்தனமானதாகத் தோன்றுகிறது.

சிந்தனை என்பது ஜடமானது. அது தேங்கிய குட்டை. அறிவு ஜீவித்தனமும் பெரிய விஷயமல்ல. தே ஆர் ஸ்டேல். வெரி ஸ்டேல். அப்புறம் - விரக்தி - இதைத்தான் நிறையப் பேர் யதார்த்தம் என்று நம்பிக் கொண்டிருக்கிறார்கள். ''இது நிஜ வாழ்வைப் பிரதிபலிக்கிறது'' என்பார்கள். ஆனால் வாழ்க்கை என்பது ஒரு கல்லறையிலிருந்து இன்னொரு கல்லறைக்கு போவதல்ல. அதைப் போலவே மனிதர்களும் வாழ்க்கையைக் கூடுமானவரை அசிங்கமாகவும், துயரமாகவும் சித்தரிப்பது, நன்மைக்காக என்று சொன்னால் கூட அதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. வாழ்க்கையை மைக்ரோஸ்கோப் கொண்டு பார்த்தால் அது அச்சுறுத்துவதாகத்தான் இருக்கும். எனவே நாம் ரொமாண்டிஸத்தை விரும்புகிறோம். சாகசமும் கற்பனையுமற்ற வாழ்க்கையை வாழ்வதைவிட சிறையில் கிடப்பதோ, பூமிக்கடியில் பிணமாக இருப்பதே மேல்.

என் ட்ராம்ப் கதாபாத்திரம் வெற்றியடைந்ததன் ரகசியமே அதுதான். எதையும் எளிதாக்கிக் கொள்ளுதல், விட்டுக் கொடுத்தல், எந்த விஷயத்தையும் ரசிக்கப் பழகுதல். இதுவே நான் மிகவும் அனுபவித்து செய்த கற்பனை. விரக்தி - இதைத்தான் நிறையப் பேர் யதார்த்தம் என்று நம்பிக் கொண்டிருக்கிறார்கள்.

1914-ல் நான் ஹாலிவுட்டுக்குப் போனேன். அப்போது என் வயது 24 ஆன போதும் 18 வயது இளைஞனைப் போல இருப்பேன். மிகவும் மெலிந்த இளைஞன் - ரொம்பவும் சீரியஸ், அடிக்கடி நெர்வஸாகி விடுவேன். முதன் முதலாக நான் நடித்தக் காட்சி ஒரு பார்ட்டியில் இடம் பெற்றது. அங்கு நான் ஒரு ஏழை. எனக்கு தெரிந்தவர்கள் யாராவது இருக்கிறார்களா என்று தேடி எல்லாவித அசட்டுத்தனங்களும் செய்வேன். பெண்களைப் பார்த்து தொப்பியை உயர்த்துவேன். எனக்கு உண்மையில் தேவை ஒரு இடம். அதைத்தேடி உட்காருவேன். ஒரு சிகரெட் எடுத்துப் பற்ற வைப்பேன். ஒரு அழகான இளம் பெண் என் காலை மிதித்து விடுவாள். அவள் 'ஸாரி' சொல்லும் முன்பு எழுந்து என் தொப்பியை எடுத்து ஸாரி என்பேன். இதுதான் அக்காட்சி. இதில் நடித்துக்கொண்டிருந்தபோது திடீரென்று எனக்குள் உயிர்ப்பு வந்தது. என் கதாபாத்திரம் எனக்குக் கிடைத்துவிட்டது. இதுதான் - இந்தக் கதாபாத்திரம்தான் எனக்கு ஏற்ற ஒன்று. இத்தனை நாள் நான் தேடிக்கொண்டிருந்தது இதைத்தான். இந்த டிராம்ப் கேரக்டர் என்னை மிகவும் கவர்ந்தது. யாரிடமும் எதுவும் வெளிக்காட்டாமல் பரபரப்பாக நடித்து முடித்தேன்.

டிராம்ப் கதாபாத்திரம் என்னையே பிரதிபலித்தது. ஒரு காமிக் மனநிலையை, இயல்பாக என்னுள் இருந்த ஒன்றை அது தட்டிவிட்டது. அதன் அசட்டுத் தனம் என்னை ஈர்த்தது. எந்த கோமாளிக் கூத்தையும் நான் செய்யலாம் அல்லவா?

மனிதர்கள் இக்கட்டான சந்தர்ப்பங்களில் தான் வேடிக்கையாக நடந்துகொள்கிறார்கள். ஒரு முறை கென்னடி ஒரு தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பேசிக் கொண்டிருந்தார். அவர் பின்னால் அமர்ந்திருந்த அவரது கட்சிக்காரர்கள் சிலர் அவருக்கு எதையோ தெரிவிக்க அவர் இன் பண்ணியிருந்த சட்டையை இழுத்து விட்டனர். கென்னடி பேச்சை நிறுத்தாமலே, திரும்பிக் கூட பார்க்காமலேயே ஒரு அனிச்சைச் செயலாய் அதைச் சரிசெய்துகொண்டார். மீண்டும் அவர்கள் அவருடைய சட்டையை இழுக்க, மீண்டும் அதை அவர் சரிப்படுத்தினார். இது மிகவும் வேடிக்கையாகவும் மனித இயல்பாகவும் இருந்தது. தன் சட்டையை அப்படியே விட்டு விடவும் அவர் தயாராக இல்லை. அதை ஒரு பெரிய பிரச்னையாக்கவுமில்லை.

மனிதம் எனும் பூமத்திய ரேகையை யாராலும் அழித்துவிட முடியாது. தன் இருப்பை வெளிப்படுத்திவிடும் அது. சக மனிதனுக்காக அனுதாபமின்றி ஒருவன் நகைச்சுவை செய்ய இயலாது. இந்த அனுதாபம், பணிவு, விட்டுக் கொடுத்தல் எல்லாவற்றையும் நான் பணமில்லாத ஒரு சராசரி மனிதனின் மீது அமைத்துக்கொண்டு என் ட்ராம்ப் கதாபாத்திரத்தை உருவாக்கிக் கொண்டேன். என் இளமைப் பருவம் துயரமானது. விரக்தி, ஏமாற்றம் இவற்றுடன் பட்டினியும் கிடந்தேன். என்னைச் சுற்றி நிறைய வெண்ணையும் ரொட்டியும் இல்லாமல் இல்லை. ஆனால் நான் பட்டினி கிடந்தேன். வறுமையின் சோர்வும் அவமானமும் மட்டுமின்றி நோயுற்ற என் தாயையும் சுமந்து வீதி வீதியாக அலைந்திருக்கிறேன். எனது இந்த ஆரம்பச் சூழல்களால் துயரத்தில் நகைச்சுவை என்பது என் இன்னொரு இயல்பாக ஆகிப் போனது. குரூரம் கூட காமெடியின் அம்சமாகி விட்டது. நாம் பல நேரங்களில் அழக்கூடாது என்பதற்காகவே சிரித்துத் தொலைக்கிறோம். ·ப்ளோர் வாக்கர் படத்தில் வயதான ஒரு கிழவன் உடல் நடுங்க தள்ளாடியபடி வருவான். நான் அவனிடத்தில் ஒரு இசைக் கருவியைத் தந்து வாசிக்கச் சொல்வேன். நடுங்கும் கரங்களால் அதை வாங்கி வாசிக்க இயலாமல் அவன் உடம்பே ஆடிக் கொண்டிருக்கும். முதுமையின் இந்த கோரத் தாண்டவம் உண்மையில் அழ வைக்கும் விஷயம். ஆனால் திரையில் இக்காட்சியைப் பார்த்த எல்லாருமே சத்தம் போட்டு சிரித்தார்கள்.

ஒரு சூழ்நிலைக்கு ஆட்படுகிறபோது ஒரு மனிதனுக்கு தனிப்பட்ட எண்ணம் ஏதும் இல்லையெனினும் இருப்பது போல காட்டிக் கொள்வான். அது பற்றி தனக்கு எதுவுமே தெரியாது என்கிற பாசாங்கு அது. என் டிராம்ப் கதாபாத்திரம் அப்படிப்பட்டதுதான். அவன் எப்போதும் இயல்பாகவும், பரபரப்பின்றியும் இருப்பான். ஒரு கடையில் ஸ்டாக்கிங் போட்ட ஒரு செயற்கைக் காலைப் பார்த்தாலும் ரொம்பவும் மென்மையாக தொட்டுப் பார்ப்பான். அவன் எண்ணம் அப்பாவித்தனமான ஒரு பாசாங்கு. அப்போது நான் மிகமிக குரூரமான செயல்களை செய்தாலும் மக்கள் கரவொலி எழுப்புவார்கள்!

பல நேரங்களில் எனது இந்தத் தொழில் துணுக்குகள் என் துயரமிக்க நாட்களின் வெளிப்பாடாய் அமைந்தது. எதுவும் நிகழாமல், எதுவும் ஒர்க் அவுட் ஆகாமல், எதை எதையோ, முயன்று தோற்று, நாளுக்கு நாள் அதிக ஏமாற்றமும் சோர்வும் மிஞ்சிய நாட்கள் அவை. எதுவும் நிகழாமல், எதுவும் ஒர்க் அவுட் ஆகாமல், எதை எதையோ, முயன்று தோற்று, நாளுக்கு நாள் அதிக ஏமாற்றமும் சோர்வும் மிஞ்சிய நாட்கள் அவை.

என் கதாபாத்திரம் இதுதான் என்று தீர்மானித்து விட்டேன். பணம் எனக்கு மிகவும் தேவைப்பட்டது. ஒரு வெற்றிதான் வறுமைச் சிறையிலிருந்து என்னை விடுதலை செய்யும் என்று உணர்ந்தேன். என் காமிக் உலகை நான் படைக்கத் தொடங்கினேன். அப்போது எதுவும் செய்ய முடியும் என்ற தைரியம் எனக்குப் பிடிப்பட்டது. ஒரு கதையை வைத்திருந்தேன். இதை நன்றாக பண்ண முடியும் என்று தோன்றியது. அதில் டிராம்ப் ஒரு போலீஸ்காரன். அவன் தன் லத்தியால் ஒரு தடியனை அடிக்கிறான். அந்தத் தடியனோ போலீசைவிட பலசாலி. அவன் என்னை திரும்பி அடிப்பான். அவன் அடிக்க, நான் அடிக்க மீண்டும் அவன் அடிக்க, நான் அடிக்க காட்சி நன்றாக வந்திருந்தது. ஆனால் கிளைமாக்ஸை எப்படி அமைப்பது? எப்படி இந்தத் தடியனை நான் அடித்து வீழ்த்தப் போகிறேன்? அப்போது தான் அந்த விளக்குக் கம்பத்தைப் பார்த்தேன். சட்டென்று ஒரு யோசனை உதித்தது. நான் அவனை அடிப்பேன். அவன் அசையாமல் நிற்பான். தன் பலத்தைக் காட்ட அவன் விளக்குக் கம்பத்தை வளைப்பான். நான் சட்டென்று அவன் முதுகின் மீது தாவி ஏறி அவன் தலையை விளக்கின் உள்ளே திணித்து கேஸை திறந்து விடுவேன். இது பிரமாதமாக அமைந்து விட்டது. சூழலிலிருந்து உருவானதால் அது நிஜமாகவே நல்ல காட்சியாகி விட்டது. ஒரு நல்ல காட்சி என்பது தன்னுடன் நிற்பதில்லை. அது மேலும் மேலும் அலையெழுப்பிச் செல்லும்.

மூடைப் பொறுத்தே ஒருவனுக்கு படைப்பாற்றல் எழுகிறது என்று நான் நினைக்கிறேன். இசை, அமைதியான கடல், ஆக்ரோஷமான கடல், ஓர் அழகான வசந்தகாலப் பகல் நேரம், இப்படி இருக்கிறபோது 'ஓ! நான் ஏதாவது செய்ய வேண்டுமே' என்ற உந்துதல் எழுகிறது. படைப்புக்குரிய இன்ஸ்பிரேஷன்களால் ஒரு படைப்பாளி எப்போதும் களைப்படைவதில்லை. திடுமென எழுந்து யாரும் எதுவும் படைத்துவிடுவதுமில்லை. நீ உன் மன நிலையால் கதவுகளைத் திறக்கும் போதுதான் படைப்பு நிகழ்கிறது. ஒரு எலும்புக்கூடு கிடைக்கும். அப்புறம் அதற்கு சதை கூட்ட ஒவ்வொரு நாளும் சிரத்தை எடுக்கலாம். உனக்குள் ஒரு மகத்தான சுய உற்சாகம் வேண்டும். தன்னிலை உணர்கிற பிரக்ஞை வேண்டும். இது எல்லாப் படைப்பாளிகளுக்கும் பிறக்கிற ஒற்றைப் பிள்ளை! திடீரென்று வாழ்க்கையைக் கண்டு பிடித்தல் - வாழ்க்கையைப் பிரதிபலித்தல்.

நான் என் டிராம்ப் கதாபாத்திரத்தை ரொம்பவும் நேசிக்கிறேன். அதை இனி எப்போதும் என்னால் மறு பரிசீலனை செய்ய இயலாது. அவன் எப்படி பேசுவான், என்று அவனுக்கே தெரியாது. அவன் குரல் எது? அவன் ஒரு வாக்கியத்தை எப்படி உச்சரிப்பான்? ஸாரி. டிராம்ப் ஓசையை விரும்புபவனல்ல. அவன் மெளனமானவன். அதற்காக அவனை நீங்கள் பின்புறம் உதைக்கலாம்.

இந்த மெளனம் என்கிற படைப்பைப் படைத்த படைப்பாளி யாரோ எனக்கு தெரியாது. ஆனால் அதைவிட அதிகம் பேசகிற வார்த்தையை நான் அறிந்ததில்லை. மெளனத்தில் அற்புதங்கள் செய்யலாம். அது நம்பும்படி இருக்கும். வெறும் அசைவு போதும். அதுவே ஒரு பறவையின் சிறகைப் போன்றது. பேசிய வார்த்தைகள் எரிச்சலூட்டுபவை. ஒலி என்பதே செயற்கையானது - வெளிப்படையானது. அது எல்லாவற்றையும் நிஜமற்ற போலித் தன்மைக்கு சுருக்கி விடுகிறது. மெளனம் கவிதையின் வெளிப்பாடு. என்னுடையது காமிக் கவிதை. பேசும் படங்களில் நான் என் சொல்வன்மையை இழந்து விடுவேன் என்று எனக்கு நன்கு தெரிகிறது. Countess படத்திலும் ஒரு காட்சி இருந்தது. மார்லன் பிராண்டோ தன் அறையில் அமர்ந்திருப்பார். அவர் மனைவி வருவாள். அவர் டிராயரில் இருக்கிற பிராவை பற்றி விசாரிப்பாள். அவர் பேச மாட்டார். தன் தலையைத் தொடங்கப்போட்டு அறையை விட்டு வெளியேறி விடுவார். அவர் முகத்தை உயர்த்தி புருவம் விரித்து ஒரு பார்வை பார்ப்பார். ஒரு பார்வையைவிட பெரிய அசைவு எது? </span>
thanks: tamil.com

Print this item

  வாழ்வது எதற்காக..?
Posted by: shanmuhi - 03-18-2004, 11:26 AM - Forum: சுமுதாயம் (வாழ்வியல்) - Replies (11)

நாம் ஏன் எதற்கு உயிர் வாழ்கிறோம்.

வாழ்க்கையின் அர்த்தம் புரிந்துதான் வாழ்கிறோமா....? ? ?

வாழ்வது எதற்காக..?

ஒரு இலட்சிய நோக்கை அடைவதற்காகவா...? ? ?

அல்லது

சாவதற்காகவா வா...? ? ?

Print this item

  தள தடங்கலுக்கு வருந்துகின்றோம்.
Posted by: yarlmohan - 03-16-2004, 11:42 AM - Forum: களம் பற்றி - Replies (19)

வணக்கம்,

சமீப நாட்களாக யாழ் இணையத்திற்கு மிகப்பெரும்தொகையானேரின் வருகையினால் சில சிக்கல்களை எதிர்நோக்கவேண்டிவந்தது. அதாவது தளத்தின் பாவனை அளவினைவிட மேலதிகமாக பாவிக்க வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது. தற்காலிகமாக சில மாற்று நடவடிக்கை ஒன்று எடுக்கப்பட்டுள்ளது.

சிலமேலதிக update செய்ய வேண்டியுள்ளதால் அடுத்து வரும் சில நாட்களில் சில தற்காலிகத்தடைகள் வரலாம் என்பதையும் முற்கூட்டியே தெரிவித்துக்கொள்கின்றோம்.

தளத்தடங்கலால் உங்களுக்கு ஏற்பட்ட சிரமங்களுக்கு எமது வருத்தத்தினைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

Print this item

  அனிமேஷன்
Posted by: Mathan - 03-15-2004, 08:50 PM - Forum: வீடியோ தொழில்நுட்பம் - Replies (9)

ஐந்து நிமிடத்தில் அனிமேஷன் கற்றுக்கொள்ளுங்கள் .. !

அனிமேட்டிங் படங்கள் உங்களின் இணையப்பக்கத்துக்கு ஒரு கவர்ச்சியை அளிக்கின்றன என்றால் அது மிகையாகாது.. அசையும் பொருட்கள், அசையாப் பொருட்களைவிட மனிதனின் கவனத்தைக் கவரும் என்று உளவியல் கூறுகிறது.. அத்தகைய அனிமேட்டிங் படங்கள் செய்வது பற்றி மிகச்சுருக்கமாகப் பார்க்கலாம் ...

1.அனிமேட்டிங் செய்ய முதலில் நமக்குத் தேவை தனித்தனிச் சட்டங்கள்(frames).. அதாவது படங்கள்.. உங்களுக்குத் தேவையான படங்களை நீங்களே தயாரித்துக்கொள்ளலாம்.. அல்லது www.google.com - ல் image search பயன்படுத்தித் தேவையான படங்களை எடுத்து அல்லது "paint" போன்ற ஏதாவது ஒரு மென்பொருளில் வரைந்து,வெட்டி, ஒட்டி...... உருவாக்கிக் கொள்ளுங்கள்... படங்கள் எந்த வரிசையில் இயங்கவேண்டும் என்று நினைக்கிறீர்களோ அந்த வரிசையில் முதலில் பெயர் கொடுத்துக்கொண்டீர்களானால் வசதியாக இருக்கும் .. எடுத்துக்காட்டாக .. 1.jpg , 2.jpg , 3.jpg .....

2.சரி.. இப்போது தனித்தனிப் படங்களைத் தயாராக வைத்துக்கொண்டுவிட்டோம்..அடுத்ததாக அந்தப் படங்கள் அனைத்தையும் ஒரே பைலாக விரும்பிய வரிசையில் தைக்க வேண்டும்.

3.பின்னர் ஒரே படமாகத் தைத்த பைலை இயங்குகின்ற gif பைலாக மாற்றவேண்டும்..
அவ்வளவுதான் இப்போது நீங்கள் இயங்கும் gif படம் செய்துவிட்டீர்கள்.....

இப்போது நம் அனைவருக்கும் வருகின்ற சந்தேகம்... பல படங்களை எப்படி ஒரே படமாகத் தைப்பது? .. அதனை எப்படி இயங்கும் gif பைலாக மாற்றுவது? என்பதுதான்... இதைப்பற்றி நாம் அவ்வளவாகக் கவலைப் படவேண்டாம்.. இந்த வேலையை செய்ய உங்களுக்கு நிறைய மென்பொருட்கள் உள்ளன.. அதில் எளிமையான ஒரு மென்பொருளை நீங்கள் இணையத்திலிருந்து இறக்கி உங்கள் கணினியில் நிறுவிக்கொள்ளலாம்... இதற்காக நிறைய மென்பொருட்கள் இலவசமாகவே கிடைக்கிறது... அவற்றில் ஒன்று "அனிமேட்டர்9" என்பது. இது இந்த இணைப்பில் இலவசமாய்க் கிடைக்கிறது..

http://www.vvcool.com/animator9/download/animator.exe

அந்தக் கோப்பை இறக்கி உங்களின் கணினியில் சேமித்துப் பின்னர் அதன்மேல் இருமுறை கிளிக் செய்தீர்களானால் எந்த இடத்தில் நிறுவ வேண்டும் என்று கேட்கும்.. இடத்தைத்தேர்வுசெய்து நிறுவிக்கொள்ளுங்கள்.. இந்த பைலின் அளவு 500 KB க்கும் குறைவுதான்...

இந்த "animator9" மென்பொருளைப் பயன்படுத்துவது மிகவும் எளிது... இதிலுள்ள "stitch" என்ற பட்டனைத் தட்டி உங்களின் படங்களைத் தேவையான வரிசையில் தேர்வு செய்து "done" என்ற பட்டனைத் தட்டி அனைத்தையும் ஒரே படமாகத் தைத்துக் கொள்ளலாம்.... பின்னர் "play" என்ற பட்டனை அழுத்தினால் படம் எவ்வாறு இயங்கும் என்று நமக்குத் தெரியும்.. படங்கள் இயங்கும் வேகத்தை "control" என்ற option - ஐ பயன்படுத்திக் கூட்டவோ அல்லது குறைக்கவோ முடியும்.. அதன் பின்னர் "make" என்ற பட்டன் அழுத்தினால் உங்களின் அழகான இயங்கும் படம் தயார்... அப்புறமென்ன .... உங்கள் படம் இயங்குவதைப் பார்த்து ரசிக்கவேண்டியதுதான்..


அனிமேட்டர்9 போன்ற எளிதான மென்பொருள்களும் பல உள்ளன.. அவற்றில் ஒன்று .. மேஜிக் மார்ப் என்பதாகும் ... அதனை இங்கேயிருந்து இறக்கிக்கொள்ளலாம் ( http://www.effectmatrix.com/ ) .. இந்த மென்பொருளைப் பயன்படுத்து பல படங்களைத் தயாரிக்கலாம் ..


என்ன .. நண்பர்களே .. ! இப்போதே நீங்களும் இயங்கும் படம் தயாரிக்க ஆரம்பித்துவிட்டீர்கள் போலிருக்கிறதே ... <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> .

நன்றி - முத்து

Print this item