![]() |
|
வாழ்வது எதற்காக..? - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: சிந்தனைக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=7) +--- Forum: சுமுதாயம் (வாழ்வியல்) (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=34) +--- Thread: வாழ்வது எதற்காக..? (/showthread.php?tid=7319) |
வாழ்வது எதற்காக..? - shanmuhi - 03-18-2004 நாம் ஏன் எதற்கு உயிர் வாழ்கிறோம். வாழ்க்கையின் அர்த்தம் புரிந்துதான் வாழ்கிறோமா....? ? ? வாழ்வது எதற்காக..? ஒரு இலட்சிய நோக்கை அடைவதற்காகவா...? ? ? அல்லது சாவதற்காகவா வா...? ? ? - phozhil - 03-19-2004 வையம் வாழ வாழினும் சாதல் இறுதி,வாழ்க்கைச்சாகாடிற்கு சாக்காடே முற்று. சாவது எளிது,நெறி பிறழாது எல்லா உயிர்க்கும் அன்பு செய்து வாழ்தல் அரிது,இனிது. Re: வாழ்வது எதற்காக..? - thampu - 03-21-2004 shanmuhi Wrote:நாம் ஏன் எதற்கு உயிர் வாழ்கிறோம். மனிதவாழ்வின் அர்த்தம் என்ன? ஷண்முஹியின் கேள்விக்குள் பதிலும் இருக்கும் அதிசயம்தான் மனிதவாழ்க்கை. அந்த அர்த்ததை தேடுவதுதான் மனித வாழ்வின் சாரம்சம். மனிதன் சிரிக்கவும் சிந்திக்கவும் பேசவும் எழுதவும் தொடங்கியது எப்போதோ அப்போதே அர்த்தம் தேடும் படலம் தொடங்கிவிட்டது. கடலாலும் காடுகளாலும் மலைகளாலும் நதிகளாலும் பலைவனங்களாலும் பனிப்பிரதேசங்களாலும் தனித் தனி தீவுகளாக இயற்கையின் சிறையில் இருந்த பல்வேறு மனித சமூகங்கள் தமது வாழ்வியல் சூழலுக்கு ஏற்ப சிந்திக்கவும் பேசவும் எழுதவும் முற்படுகையில் 'மதம்' தான் முதலில் மனிதவாழ்வின் அர்த்தம் பற்றி பேசியது. இனம் என்ற கருத்துரு தோன்றமுதல் மதம் மிகபலமாக இருந்தது. மனித வரலாற்றுக் கட்டங்களில் ஒன்றான இன்றைய உடமைசார் சமூகத்தில்தான் மனிதவாழ்வின் அர்த்தம் பல்வேறு பரிணாமங்களுக்கூடாக பார்க்கப்படுகிறது: பார்க்கக்கூடியாதாகவும் இருக்கிறது. ஆக, தனது இருப்பின் அர்த்தம் என்ன என்பதை அலசுவதே தனது வாழ்வுக்கு ஒரு அர்த்தத்தை தரும் என்பதே வாழ்வின் அர்த்தமாகிவிட்டது. மாக்ஸ் கூறியது போல் ''இந்த உலகு பற்றி வியாக்கியனம் அல்ல நம் முன் உள்ள கேள்வி இந்த உலகை எப்படி நாம் மாற்றி அமைக்க போகின்றோம் என்பதுதான்'' மனிதவாழ்வின் அர்த்தம் என்பது இன்னும் பேசாப் பொருள். - shanmuhi - 03-21-2004 தனது இருப்பின் அர்த்தம் என்ன என்பதை அலசுவதே தனது வாழ்வுக்கு ஒரு அர்த்தத்தை தரும் என்பதே வாழ்வின் அர்த்தமாகிவிட்டது. அருமையான விளக்கம். தங்கள் கருத்துக்கு நன்றிகள். Re: வாழ்வது எதற்காக..? - vallai - 03-22-2004 shanmuhi Wrote:நாம் ஏன் எதற்கு உயிர் வாழ்கிறோம். லட்சியம் என்னம்மா லட்சியம் நாட்டிலை பாதிப்பேர் லட்சங்களுக்காகத் தானே உயிர் வாழினம் Re: வாழ்வது எதற்காக..? - kuruvikal - 03-22-2004 இதென்ன கேள்வி..பிறந்திட்டம் சாவுவரைக்கும் ஏதோ ஓடித்திரியுறம்....அதுக்கு இவன் மனிதன் தனுக்குத்தானே இட்டது வாழ்க்கை அப்படி எண்டு ஒண்டு...அதுக்க போட்டி பொறாமை சண்டை அரைகுறைச்சாவு பணம் பொன்னு பொண்ணு ஆணு படிப்பு வேலை சம்பாத்திப்பு குடி குடித்தனம்....கடவுளே கடவுளே நாளை நிற்கப்போகும் நிச்சயமில்லா ஆட்டத்தில எத்தின கூத்துகள்.....! பிறப்பு ஒன்று வந்தால் இறப்பு அதை நோக்கியதுதான் வாழ்க்கை.....! அப்படி இல்லை என்று ஒருத்தர் சொல்வார் என்றால் இறப்பின் பின் அவர் வாழ்ந்த வாழ்க்கையின் பயனை அவரால் அனுபவிக்க முடியுமா....முடியும் என்றால் வாழ்க்கை இறப்புக்கானதல்ல என்பதை ஏற்றுக் கொள்ளலாம்....????! ஆனால் ஒன்று.. இறப்பு என்பது உயிரின் முடிவல்ல உயிரிற்கு பிறப்பும் இறப்பும் இல்லை...உடலுக்கும் அதன்பாலான உணர்வுக்கும் தான் ஆரம்பமும் முடிவும்.....அதுதான் மனித பாஷையில் வாழ்க்கை....திருப்திகரமான உணர்வுக்காக அலையும் அலைவே வாழ்க்கை...உணர்வு திருப்திப்படுமா....????! சிந்தித்ததில் சிக்கியது....சிந்திக்க வேண்டியது நிறைய இருக்கு....உணர்வுக்கு எட்டாமல் கூட......! :twisted: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- kaattu - 03-22-2004 சாகப் பயம். சாக விருப்பமில்லை. அதனால் வாழ்கிறோம். இதுக்குளை நான் பெரிசு நீ பெரிசு எண்டு காட்டுறதுக்கு இலட்சியம்.. மண்ணாங்கட்டி எண்டு கொண்டு......... - shanmuhi - 03-22-2004 ஓ.... அப்படி என்றால் சாவதற்கு பயந்தவரா நீங்கள் - kaattu - 03-22-2004 உங்களுக்குப் பயமில்லையா...? அப்ப செத்திடுங்க. இருந்து மட்டும் என்ன சாதிக்கப் போறிங்க..? - shanmuhi - 03-22-2004 பார்ப்போம்... எனக்குப் பயம் இல்லை. மரணம் என்று வந்தால் அதையும் அணைக்க தயாராகத்தான் இருக்கவேண்டும். ஆனால்.... ஒன்று மரணபயம் வராமல் பார்த்துக் கொண்டால் நல்லது என்று நினைக்கிறன். - kaattu - 03-22-2004 வந்தால்... நாங்கள் வேண்டாமென்றால் விடவா போகுகுது - Aalavanthan - 03-22-2004 மரணம் நிரந்தரமல்ல உன் மரணம் நிரந்தரமல்ல மண்ணின் இடைக்கால விடுதலை மறுபடியும் நீ எழுப்பப்படுவாய் மறுமை எனும் நியாயத்தீர்ப்பு நாளில் மனிதா! மரணம் உனக்கு நிரந்தரமல்ல மண்ணின் இடைக்கால விடுதலை மண்ணறையினில் கூட - நீ மகிழ்வாய் உறங்கமாட்டாய் நன்மை செய்தவர் சுகமான உறக்கத்தில் தீமை செய்தவன் தீராத மண்ணறை வேதனையில் கப்றுகள் கூட உன்னை நிராகரிக்கும் மனிதா! மரணம் உனக்கு நிரந்தரமல்ல மண்ணின் இடைக்கால விடுதலை மட்கிய உன் உடலுக்கும் உயிர் தருவான் எம்மிறைவன் உலகின் உன் செயல்களுக்காய் உடல் உறுப்புகள் பதில் சொல்லும் களவாடிய கைகளும் பொய், புறம் பேசிய நாவும் தனித்தனியே தம்மை எடுத்து வைக்கும் உன் நன்மைகள் நற்கணக்கில் பாவங்கள் தண்டைனைக்கு உரம் போடும் மனிதா! மரணம் உனக்கு நிரந்தரமல்ல மண்ணின் இடைக்கால விடுதலை சொர்க்கத்தின் சுகந்தங்களுக்காக நன்மையைத் தேடிக் கொள் - உன் பாவக்கரங்களை தவ்பாவில் மீண்டு கழுவிக் களைந்துக் கொள் மனிதா! மரணம் உனக்கு நிரந்தரமல்ல மண்ணின் இடைக்கால விடுதலை மறுமை நாளை பயந்துகொள் மரணம் வரும் முன் திருந்திக் கொள். :: எழுதியவர் பெயரைக் காணவில்லை :: சுட்டது : http://www.tamilislam.com/Kavithai/death.htm |