| Welcome, Guest |
You have to register before you can post on our site.
|
| Forum Statistics |
» Members: 8,982
» Latest member: lucilegr4
» Forum threads: 9,058
» Forum posts: 83,244
Full Statistics
|
| Online Users |
There are currently 147 online users. » 0 Member(s) | 144 Guest(s) Applebot, Bing, Google
|
| Latest Threads |
±ôÀÊ ÀÈ¢ì¸Ä¡õ
Forum: நகைச்சுவை
Last Post: UsArgum
01-10-2026, 09:07 AM
» Replies: 28
» Views: 10,289
|
Mrs.Sirimao Bandaranayake
Forum: நகைச்சுவை
Last Post: GeraTep
11-14-2025, 10:46 AM
» Replies: 14
» Views: 3,228
|
Farty time
Forum: நகைச்சுவை
Last Post: ㄹㅈㄷㄹㅈ
08-26-2025, 03:48 PM
» Replies: 11
» Views: 5,603
|
கனவே கலைகிறதே
Forum: பொழுதுபோக்கு
Last Post: KULAKADDAN
04-30-2006, 06:37 PM
» Replies: 0
» Views: 6,288
|
Karuna Cadres were captur...
Forum: பிறமொழி ஆக்கங்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:17 PM
» Replies: 4
» Views: 8,620
|
என்ன நடந்தது யாழிற்கு?
Forum: உங்கள் கருத்துக்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:03 PM
» Replies: 42
» Views: 31,046
|
முடியுமானால் முயற்ச்சியுங...
Forum: போட்டிகள்
Last Post: Subiththiran
04-30-2006, 05:00 PM
» Replies: 15
» Views: 14,456
|
**சுடேக்கு** புதிர் விளைய...
Forum: போட்டிகள்
Last Post: kavithaa
04-30-2006, 04:30 PM
» Replies: 63
» Views: 38,471
|
புல்மோட்டையில் தாக்குதல்
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: Sriramanan
04-30-2006, 04:10 PM
» Replies: 2
» Views: 8,022
|
போதனை வேண்டாம்! பு...
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: alika
04-30-2006, 03:13 PM
» Replies: 4
» Views: 6,238
|
|
|
| விளையாட்டு |
|
Posted by: Mathan - 03-13-2004, 01:11 PM - Forum: பொழுதுபோக்கு
- Replies (43)
|
 |
பரபரப்பான ஆட்டத்தில் இந்தியா வெற்றி!
கராச்சியில் இன்று நடைபெற்ற இந்தியா - பாகிஸ்தான் அணிகள் இடையிலான முதல் ஒரு நாள் போட்டியில், 5 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றது!
முன்னதாக 7 விக்கெட் இழப்பிற்கு 349 ரன்கள் எடுத்திருந்த இந்திய அணியின் எண்ணிக்கையை பாகிஸ்தான் வீரர்கள் அநாயாசமாக எட்டிப் பிடிக்க முற்பட்டனர். சற்று முன்னர் முடிவடைந்த இந்தப் போட்டியில், நெஹ்ரா வீசிய கடைசி ஓவரின் கடைசிப் பந்தில் 6 எடுத்தால் வெற்றி என்ற நிலையில் பாகிஸ்தானின் மொய்ன் கான் அடித்த பந்தினை ஜாஹீர் கான் கேட்ச் பிடித்து இந்திய ரசிகர்களை மகிழ்ச்சி வெள்ளத்தில் ஆழ்த்தினார்.
இதன்மூலம் 5 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றது.
நன்றி - வெப் உலகம்
|
|
|
| பணம் பணமறிய அவா |
|
Posted by: Mathan - 03-13-2004, 01:12 AM - Forum: கவிதை/பாடல்
- Replies (1)
|
 |
பணம் பணமறிய அவா
அன்னை தேசத்து
அகதிகள் நாம்
எண்ணெய் தேசங்களில்
எரிந்து கொண்டிருக்கிறோம்!
அடிவயிற்றில் பதிந்த
வறுமைக் கோடுகளின்
மர்மக் கரங்கள்
அறுத்தெரிந்து வீசிய
ஜீவனுள்ள
மாமிசத் துண்டுகள் நாம்!
கண் தெரியா தேசத்தில் விழுந்து
காயங்கள் தலை சாய்த்துக்
கண்ணீர் வடிக்கிறோம்!
மொத்தக் குடும்பத்தையும்
முதுகில் சுமந்து
இன்னும் தீர்மானிக்கப்படாத்
திசைகளில் தொடர்கிறது
நம் பயணம்!
ஒவ்வொரு முறையும்
நலம் நலமறிய அவா
என்றுதான் கடிதம் எழுதுகிறோம்!
பணம் பணமறிய அவா
என்றல்லவா பதில் வருகிறது!
நமக்கு மட்டும் ஏன்
பணம்
பந்த பாசங்களின்
சமாதியாகிவிட்டது?
ஒரு டெலிபோன் கார்டிலும்
ஒரு பொட்டலம் பிரியாணியிலும்
முற்றுப்பெற்றுவிடுகிறது
நம் பெருநாட்கள் ஒவ்வொண்றும்.....
உயிரை பிழிந்து பிழிந்து
பாசத்தால் ஒத்தடம் தந்த
உறவுகளைப் பிரிந்து
இன்னும் எத்தனை நாட்கள்
இந்த ஏகாந்த வாழ்கை?
கலவரத்தில்
கைக் குழந்தையைத் தொலைத்த
தாயின் பதற்றத்தைப்போல்தான்
ஒவ்வொரு முறையும் போன் பேசிய
பின்னால் அடையும் அவஸ்தைகள்......
நம்மில் பலருக்கு
தாம்பத்திய வாழ்க்கைகூட
தவணை முறையில்தான்
தட்டுப்படுகிறது.....
தொலைபேசியிலும்
தபாலிலும்
கொஞ்சலும், சிணுங்கலுமாய்...
இன்ஸ்டால்மெண்டில்
இல்லறம் நடக்கிறது...
மனைவியின்
மூச்சுக் காற்று தந்த சுகம்கூட
இந்த ஏசி காற்று தருவதில்லை!
குடும்ப விளக்குகளை
கும்மிருட்டில் தவிக்கவிட்டு விட்டு
தீக்குச்சிகள் நாம்
தன்னந்தனியாய்
இந்தத் தீவுகளில்...
வீடுகூடும் நிஜம் தொலைத்து
ஒரு வீடு கட்டும் கனாவில்
இன்னும் எத்தனை ஆண்டுகள்
இந்த பாலைப் பிரதேசங்களில்?...
உயிரோடு இருக்கும்
பெற்ற குழந்தைக்கு
புகைப் படத்தில்தான்
கொடுக்க முடிகிறது
செல்ல முத்தங்கள்!
என்ன இருந்தாலும்
காகிதங்கள் உணருமா
பாசத்தின் ருசி
ஒவ்வொரு முறையும்
ஊர் சென்று திரும்பும்போது
மறக்காமல் எல்லாவற்றையும்
எடுத்து வர முடிகிறது
மனசைத் தவிர...!
காலத்தின்
இந்த பசை தடவல்கள்
நம்மை கட்டிப்போடாமல்
வெறும் கடிதம் போடத்தானா?
பாலைவன ஜீவன்கள் நாம்
தாகத்தோடு காத்திருக்கின்றோம்!
தண்ணீருக்காக அல்ல
தபால்களுக்காக....
வாழ்க்கையின் பாதி
விரக்தியிலும், விரகத் தீயிலும்
எரிந்துபோகும் நம் வாலிப வாழ்க்கை
கடைசியில் நரம்புகள் அறுந்துபோய்
முகாரி பாடும் வீணைகளாய்...
என்ன சொல்லி
என்ன பயன்
தண்ணீரில் மீன் அழுதால்
கண்ணீரைத்தான் யார் அறிவார்?
எழுதியவர்:
கொடுவாயூர் ஜாஃபர்
சாதிக் பாகவி
|
|
|
| முலையூட்டிகளில் வாழ்க்கைக் காலம் பூராவும் முட்டை உற்பத்தி... |
|
Posted by: kuruvikal - 03-12-2004, 11:10 PM - Forum: விஞ்ஞானம் - தொழில்நுட்பம்
- No Replies
|
 |
<img src='http://www.stemcellsclub.com/SCCC-homesite/Photos/ESCs.gif' border='0' alt='user posted image'>
மூலவுயிர்படைக் கலங்களை (stem cells) உருவாக்கும் முறை...!
<img src='http://www.mhhe.com/socscience/sex/common/ibank/ibank/0009b.jpg' border='0' alt='user posted image'>
மனிதனில் சூலகமும் (Ovary) அதன் அமைவிடமும்
(Uterus..கருப்பை)யும்...!
<img src='http://www.nature.com/nsu/040308/images/ovum_180.jpg' border='0' alt='user posted image'>
முலையீட்டி (எலி) ஒன்றின் சூலத்தில் முட்டையாக்கம்...!
முலையீட்டி விலங்குகளில் ( மனிதன் உள்ளடங்கலாக)உள்ள முட்டை (egg) உற்பத்திக்கான வரையறையை கடந்து முட்டை உற்பத்திக்கான இடமான சூலகத்தில் இருந்து வாழ்க்கைக் காலம் முழுவதும் முட்டைகளை உருவாக்க முடியும் என்று விஞ்ஞானிகள் கண்டு பிடித்துள்ளனர்...! ஆணில் வாழ்க்கைக் காலம் பூராவும் விந்து உற்பத்தி நடை பெறுவதற்கு ஒப்ப....!
இப்பரிசோதனை எலியின் சூலக மூலவுயிர்ப்படைக் கலங்களில்(mouse's ovary of stem cells) இருந்து உருவான சூலகத்தில் இருந்து உற்பத்தி செய்யப்பட்ட முட்டைகள் மூலம் வெற்றிகரமாக உறுதி செய்யப்பட்டுள்ளது...! இதன் மூலம் மனிதரில் புற்று நோய்க்கு அளிக்கப்படும் சிகிச்சைகளின் பக்கவிளைவால் நிகழும் சூலகச் சிதைவினால் அல்லது கோளாறினால் முட்டை உற்பத்தி பாதிக்கப்பட்டவர்களிலும் இயற்கையாக மாதவிடாய்ச் சக்கரம் நிகழாது நின்றுவிடும் வயதின் பின்னரும் தொடர்ந்து முட்டை உற்பத்தியை சாத்தியமாக்க முடியும் என்று விஞ்ஞானிகள் நம்பிக்கை வெளியிட்டுள்ளர்னர்...இருப்பினும் இப்பரிசோதனை இன்னும் மனித சூலக மூல உயிர்க்கலங்களைப் பயன்படுத்தியோ அல்லது பிரதியீடு செய்தோ மனிதப் பெண்ணின் சூலகத்தில் செய்யப்படவில்லை....!
இக்கண்டுபிடிப்பானது இவ்வாராச்சியின் ஆரம்பநிலையே தவிர இன்னும் கடக்க வேண்டிய பாதைகள் நிறைய இருக்கின்றன...!
[url=http://www.nature.com/nsu/040308/040308-6.html] Ovaries may lay new eggs....For more details...Click here
Our Thanks to Nature.com....தமிழாக்கம் குருவிகளின் வலைப்பூ....!
|
|
|
| விடுதலைக்காக சண்டையிடும் புலிகள்...! |
|
Posted by: kuruvikal - 03-12-2004, 06:12 PM - Forum: விஞ்ஞானம் - தொழில்நுட்பம்
- No Replies
|
 |
<img src='http://www.nature.com/nsu/040308/images/tiger_180.jpg' border='0' alt='user posted image'>
கிழக்கு ரஷ்சியப் பகுதிகளில் உள்ள பனி நிறைந்த காடுகளில் வாழ்ந்து வரும் சைப்பீரியப் புலிகள் அவற்றின் வாழ்விடத்திற்காகவும் உணவிற்காகவும் மனிதனின் வேட்டையாடலில் இருந்தும் விடுதலை வேண்டியும் போராட வேண்டிய நிலையில் இருக்கின்றன...!
இவ்வகைப் புலிகளில் 80% வீதம் மனிதனால் வேட்டையாடப்பட்டு வரும் நிலையில் வெறும் 300 புலிகளோ அப்பகுதிக் காடுகளில் மிஞ்சி உள்ளன...அவையும் காடுகள் அழிப்பு... போதிய இரை கிடைக்காமை...மனித வேட்டையாடல்களால் பெரும் ஆபத்தை எதிர் நோக்கியுள்ளன...!
இப்புலிகளுக்கு தகுந்த பாதுகாப்புக் கொடுக்கப்படவில்லை என்றால் இவை உலகில் இருந்து அழிக்கப்பட்டுவிடும் என்று அங்கு இப்புலிகள் பற்றி ஆய்வு செய்த அமெரிக்க நிறுவனம் கூறியுள்ளது...!
Nature.com
|
|
|
| அம்மானா பொய்மானா?? |
|
Posted by: yarl - 03-12-2004, 07:46 AM - Forum: செய்திகள் : தமிழீழம்
- Replies (37)
|
 |
இது போன்ற தான் தோன்றித்தனமான செய்திகளை வெளியிடுவதை தமிழ் அலை நிறுத்திக்கொள்ளவேண்டும்.
புலத்திலுள்ள அனைவருக்கும் மட்டுமல்ல உலகத்தமிழருக்கும் கடவுள்(கருணா சொன்னதுபோல) எமது தேசியத்தலைவர்தான் .
புலத்து தமிழர் கருணா அம்மானின் செயல் கண்டு இடிந்துபோயுள்ள நிலமை யாருக்கு தெரியும்?
புலம்பெயர் தமிழர்களின் நிதி என்றால் என்ன சுவீப்பில் விழுந்த பணமா? ரத்தத்தை பிழிந்து
இன்னொரு ரத்தத்தை காக்க கொடுக்கப்படும் பணம்.
அதனுடன் விளையாடாதீர்கள்.
கடவுள் எல்லாவற்றையும் பார்த்துக்கொள்வார்.
இனி தமிழ் அலை செய்தி
வன்னித் தலைமை தங்களது நிதியிலும் வளத்திலும் அரைப்பங்கை கிழக்கு மாகாண மூத்த தளபதி கேணல் கருணா அம்மானிடம் கையளிக்க வேண்டும் அல்லாது விடில் ஐரோப்பிய நாடுகளில் வாழும் தமிழ் உறவுகளால் அனுப்பப்படும் நிதி உதவி வழங்கப்படமாட்டாது என பகிரங்க வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக புலம் பெயர்ந்து வாழும் தமிழ் உறவுகள் விடுத்திருக்கும் வேண்டுகோளில் கூறப்பட்டுள்ளதாவது,
வன்னித் தலைமை தங்களது நிதியிலும் வளத்திலும் அரைப்பங்கை கருணாஅம்மானிடம் கையளிக்குமாறு ஐரோப்பாவில் வசிக்கும் தமிழர்களாகிய நாம் கோரிக்கை விடுக்கிறோம்.
வன்னித் தலைவர்கள் கிழக்கு மாகாணத் தமிழர்களை பாரபட்சம் காட்டுவது மாத்திரமல்லாமல் வெளிநாட்டில் வாழும் தமிழர்களின் அபிலாசைகளையும் கவனத்தில் எடுப்பதில்லை.
விடுதலைப்புலிகள் கருணாஅம்மானுடன் வளங்களைப் பகிர்ந்து கொள்ளாதவிடத்து நாம் எமது உதவிகளை நிறுத்திக் கொள்வோம் நாம் எமது ஆதரவை கருணாஅம்மானுக்கு அளிப்போம் இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
இதேவேளை கருணா அம்மான் நண்பர்கள் நீண்ட காலமாக மட்.அம்பாறை மக்கள் எதிர்பார்த்திருந்த நல்ல விடயத்தை செய்தீர்கள் மட்.அம்பாறை மக்கள் உங்கள் பின்னால் நிற்கிறோம் கவலைப்பட வேண்டாம் தயவு செய்து வட இராணுவத்தை எமது மண்ணில் காலடி வைக்கவிட வேண்டாம், கருணாவை இம்சைப்படுத்த வேண்டாம் எனத் தெரிவித்துள்ளனர்.
தமிழ் அலை செய்தி முடிவு
|
|
|
| அப்பா என்றொரு அற்புத ஜீவன் |
|
Posted by: Alai - 03-12-2004, 07:27 AM - Forum: கவிதை/பாடல்
- No Replies
|
 |
[b]படித்ததில் பிடித்தது
[b][size=18]அப்பா என்றொரு அற்புத ஜீவன்
தினமும் வீட்டிற்கு வரும் போதும்
குழந்தைகளிருக்கும் வீடுகளுக்கு
போக நேரும்போதும்
வெறுங்கையோடு
செல்லத் துணியாதவர்
நான் குழந்தைகளை
அழைத்துக் கொண்டு
பார்க்க வரும் போதெல்லாம்
அவர்கள் நகங்கள்
சரியாக வெட்டப்பட்டிருகிறதா என்பதை
முதலில் பரிசோதிப்பவர்
யாருக்கும் அவ்வளவு சுலபத்தில்
தந்து விட்டாத
தன் பேனாவையும்
'மொபட்' சாவியையும்
காத்திருந்து எனக்குத் தருபவர்
நான் வருவதாய்
தகவல் கிடைத்தவுடன்
பெயரர்களுக்கு தேன்வாழைப் பழமும்
எனக்கு
'காய்கறி போலத்தான்' என
ஊட்டிப்பழக்கிய
இறைச்சியும் வாங்கிவர
பையெடுத்துக் கிளம்புபவர்
அம்மா சமைக்கையில்
ருசி பார்த்திருந்து
சாப்பிடும்போது
பக்கத்தமர்ந்து
சாப்பிட வைத்து
பசியாறுபவர்
படித்த புத்தகங்களை
மேசையில் அடுக்கி வைத்திருந்து
தான் அடிக்கோடிட்டு வைத்திருப்பவைகளை
எனக்கு ஆர்வமாய் விளக்குபவர்
தோட்டத்திற்கு கூட்டிப் போய்
முளைவிட்டு பூவிட்டுக் காய்விட்ட
செடியையெல்லாம்
தன் வளர்ப்புக் குழந்தைகளாய்
அடையாளம் காட்டுபவர்
எப்போதாவது
அவர் பள்ளிக்கு
நான் செல்ல நேரும் போது
அருகில் நிறுத்தி
தலையில் கைவைத்து
தன் மகளென
தன் வகுப்பு மாணவர்க்கு
அறிமுகப்படுத்துபவர்
என் குழந்தைகளை
நான் கொஞ்சும் போது
இதே மாதிரித்தான்
தானும் என்னை கொஞ்சி வளர்த்ததாய்
நெகிழ்ச்சியோடு
சொல்லி ரசிப்பவர்
தான் எங்கோ வாழ்ந்து கொண்டிருப்பதாய்
நான் நம்பிக்கொள்ளட்டுமென்று
ஒருநாள்.....
கண்மூடி தூக்கத்தில்
செத்துப் போனவர்.................
[b]- உதயா -
நன்றி - http://womankind.weblogs.us/
|
|
|
|