Posts: 8,736
Threads: 357
Joined: Jan 2004
Reputation:
0
பரபரப்பான ஆட்டத்தில் இந்தியா வெற்றி!
கராச்சியில் இன்று நடைபெற்ற இந்தியா - பாகிஸ்தான் அணிகள் இடையிலான முதல் ஒரு நாள் போட்டியில், 5 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றது!
முன்னதாக 7 விக்கெட் இழப்பிற்கு 349 ரன்கள் எடுத்திருந்த இந்திய அணியின் எண்ணிக்கையை பாகிஸ்தான் வீரர்கள் அநாயாசமாக எட்டிப் பிடிக்க முற்பட்டனர். சற்று முன்னர் முடிவடைந்த இந்தப் போட்டியில், நெஹ்ரா வீசிய கடைசி ஓவரின் கடைசிப் பந்தில் 6 எடுத்தால் வெற்றி என்ற நிலையில் பாகிஸ்தானின் மொய்ன் கான் அடித்த பந்தினை ஜாஹீர் கான் கேட்ச் பிடித்து இந்திய ரசிகர்களை மகிழ்ச்சி வெள்ளத்தில் ஆழ்த்தினார்.
இதன்மூலம் 5 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றது.
நன்றி - வெப் உலகம்
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Posts: 8,736
Threads: 357
Joined: Jan 2004
Reputation:
0
முழு ஸ்கோர் விபரங்கள் ...
http://news.bbc.co.uk/sol/shared/bsp/hi/cr...ics/scorecards/
pakistan_v_india_one_day_international_series_pakistan_v_india/7188/html/scorecard_hi.stm
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Posts: 8,736
Threads: 357
Joined: Jan 2004
Reputation:
0
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Posts: 8,736
Threads: 357
Joined: Jan 2004
Reputation:
0
தனது கிரிக்கெட் வாழ்வில் மிகச் சிறந்த ஓவர் என்கிறார் இந்தியாவின் நெஹ்ரா
கடைசி ஓவரை அற்புதமாக வீசி இந்திய அணிக்கு 'திரில்" வெற்றியை தேடிýக் கொடுத்த நெஹ்ரா தனது கிரிக்கெட் வாழ்வின் மிகச் சிறந்த ஓவர் இது என்று கடைசி ஓவரை வர்ணித்துள்ளார்.
ஆறு பந்துகளில் ஒன்பது ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் ஆசிர்; நெஹ்ராவின் பந்து வீச்சை பாக்.அணியின் விக்கெட் காப்பாளர் மொயின்கானும், இளம் பந்து வீச்சாளர் த் உல் ஹசனும் எதிர்கொண்டனர்.
அந்த ஓவரின் முதல் ஐந்து பந்துகளை நேர்த்தியாக வீசிய நெஹ்ரா அதில் மூýன்று ரன்கள் மட்டும் கொடுத்து பாக். அணிக்கு கடும் நெருக்கடிýயை ஏற்படுத்திவிட்டார்.
அதனால் கடைசிப் பந்தில் ஆறு ரன்கள் (சிக்சர்) எடுத்தால் வெற்றி என்ற இக்கட்டான நிலையில் சிக்கியது பாக்.அணி.
அந்தப் பந்தை மொயின்கான் எதிர்கொண்டார். யோர்க்கர் பந்தாக அதுவரும் என்று பெரிதும் எதிர்பார்த்த மொயின்கானை சாதுரியமாக ஏமாற்றி 'புல்டோஸ்" ஒன்றை நெஹ்ரா வீச, அந்தப் பந்தை தூக்க முற்பட்டு கட்ச் கொடுத்தார் மொயின்கான்.
இதனால், 5 ஓட்டங்களால் இந்திய அணி வெற்றி பெற்றது.
என் கிரிக்கெட் வாழ்வில் இது மிகச்சிறந்த ஓவர் என்றே கூýற வேண்டும். சூýழ்நிலை மிகவும் பரபரப்பாக இருந்தது. ஆனாலும், நான் சிறப்பாகப் பந்து வீசினேன். என்னால் முடிýயும் என்ற நம்பிக்கை எனக்கு நூறு வீதம் இருந்தது. மிகவும் மகிழ்ச்சியாக நான் உணர்கிறேன். மொயின்கானும் சிறந்த துடுப்பாட்ட வீரர்தான். ஆனால், அந்த ஓவரின் முதல் பந்திலிருந்தே நான் ஆதிக்கம் செலுத்த ஆரம்பித்து விட்டேன் என்று நெஹ்ரா, போட்டிý முடிýவடைந்த பின் கூýறினார்.
இந்திய அணியின் கப்டன் சவுரவ் கங்குலி கூýறுகையில், முதல் 15 ஓவர்கள் வரை ஆட்டம் எங்களுடைய கட்டுப்பாட்டிýல் தான் இருந்தது. அதற்குப் பிறகு இன்சமாம் உல் ஹக் சிறப்பாக ஆடிý ஆட்டத்தின் போக்கை பாக். அணிக்கு சாதகமாக மாற்றிவிட்டார். அடுத்து வரும் போட்டிýகளில் இந்திய அணி வீரர்கள் இன்னும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவார்கள் என்று நான் நம்புகிறேன் என்று தெரிவித்தார்.
நன்றி - தினக்குரல்
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Posts: 8,736
Threads: 357
Joined: Jan 2004
Reputation:
0
உதிரிகளால் உயர்ந்த ஓட்ட எண்ணிக்கை இந்திய அணியின் வெற்றிக்கு வழிவகுத்தது
இந்திய - பாகிஸ்தான் அணிகளிடையே நேற்று முன்தினம் சனிக்கிழமை நடைபெற்ற முதலாவது ஒருநாள் போட்டிýயில் இந்திய அணி 5 ஓட்டங்களால் வெற்றிபெற்றது.
இந்தப் போட்டிý பற்றிய சில சுவையான தகவல்கள் இங்கு வழங்கப்படுகின்றன.
ழூ இரு அணிகளும் காலை 8 மணிக்கே மைதானத்துக்கு வந்துவிட்டன. ஹோட்டலில் இருந்து மைதானத்துக்கு வரும் வழியில் போக்குவரத்து தடை செய்யப்பட்டிýருந்தது.
ழூ இந்தியா-பாகிஸ்தான் ஒருநாள் தொடரின் முதல் போட்டிýயை தொடக்கி வைத்தவர் அவுஸ்திரேலிய நடுவர் சைமன்டாபெல்.
ழூ பாகிஸ்தான் தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சர் Nர்க் ரர்Pத் அகமது உட்பட அந்நாட்டைச் சேர்ந்த பல முக்கிய பிரமுகர்கள் போட்டிýயை ரசித்தனர்.
ழூ ஆட்டம் தொடங்கும் முன், பாகிஸ்தான் கப்டன் இன்சமாம் உல்ஹக், தனது வீரர்களிடம் ஆடுகளத்தில் எப்படிý நடந்துகொள்ள வேண்டும் என சின்ன ஆலோசனை வழங்கினார். பிற்பகலில் இந்திய கப்டனும் களமிறங்கும் முன் இதே ஆலோசனை வழங்கினார்.
ழூ இந்திய - பாகிஸ்தான் தொடரின் முதல் பந்தை வீசியவர் 'ராவல்பிண்டிýங் எக்ஸ்பிரஸ்" சொய்ப் அக்தர். இந்தத் தொடரில் மிக அதிகம் எதிர்பார்க்கப்பட்டவர் அக்தர். ஆனால், முதல் ஓவரிலேயே 'எக்ஸ்பிரஸ்" தடம் புரண்டது. முதல் பந்து வைட். அந்த ஓவரில் மட்டும் 2 வைட், 2 நோ-போல்களுடன் மொத்தம் 10 ரன்கள் கொடுத்தார் அக்தர். அதற்கடுத்தும் அவர் ஒன்றும் இந்திய வீரர்களை அச்சுறுத்தி விடவில்லை. ஆளாளுக்கு அடிýத்தார்கள். அக்தருக்கு (கொஞ்சம் பெரிய) ஆறுதல்... சச்சின், ராகுல் விக்கெட்டைக் கைப்பற்றியது தான்!
ழூ முதல் மூýன்று ஓவர்களில், முதல் பந்துகள் எல்லாம் உதிரிகள் தான். அக்தர் வீசிய முதல் ஓவரில் முதல் பந்து வைட். முகமது சமி வீசிய இரண்டாவது ஓவரில் முதல் பந்து நோ-போல். மூýன்றாவது ஓவரின் (அக்தர்) முதல் பந்தும் நோ-போல்.
ழூ அரங்கம் முழுவதும் ரசிகர்கள் கூýட்டம்... அதிலும் பாதிக்கு மேல் இரு நாட்டு வி.ஜ.பி., பிரமுகர்கள். மொத்தத்தில் மைதானத்தில் இருந்த வீரர்களுக்கு ரென்ர்ன், ரென்ர்ன்.... செம ரென்ர்ன்! இதன் காரணமாகவே, இரு தரப்பிலும் நிறையத் தவறுகள். அக்தர், சமி இருவரும் நோ-போல், வைட் என அள்ளி எறிய... உதிரிகளாக மட்டும் 38 ஓட்டங்கள் இந்திய அணிக்கு கிடைத்தன.
ழூ அக்தரின் முதல் ஓவர், கடைசிப் பந்தில் சுலபமான கேட்ச் கொடுத்தார் சேவக். நல்லவேளை தவறவிட்டார் மாலிக். அக்தர் வீசிய இரண்டாவது ஓவரின் முதல் பந்தில் ய10னிஸ்கானிடம், சச்சின் ஒரு கேட்ச் கொடுத்தார். நடுவர் டாபெல் அதை நோ-போல் என்று அறிவிக்க தப்பினார் சச்சின்.
ழூ ஆரம்பக் கட்டங்களில் இந்தியாவின் ஓட்ட வேகம் செம ஸ்பீட். ஆறாவது ஓவரின் மூýன்றாவது பந்தில் முதல் 50 ரன்கள் (38 பந்துகள்) வந்தன. பத்து ஓவர்களில் இந்திய அணியின் ஓட்டம் 79ஃ1. நூறு ரன்கள் 12 ஆவது ஓவரில் வந்தது. 15 ஓவர்களில் 143ஃ2, ரன்-ரேட் அப்போது 9.53. நவேத் உல் ஹசன் முதல் ஓவரில் 24 ரன்கள் கொடுத்தார். விளாசித் தள்ளிவிட்டார் சேவக். அந்த ஓவரில் மட்டும் 5 நோ-போல் போட்டார் ஹசன். 24.3 ஆவது ஓவரில் இந்தியா 200 ரன்களை எட்டிýயது.
ழூ சொய்ப் அக்தர், முஹமது சமி, ராணா நவேத் உல் ஹசன், அப்துல் ரசாக் நான்கு வேகப்பந்து வீச்சாளர்களின் முதல் ஓவர், முதற் பந்தும் "உதிரி' தான். அக்தர் வைட் போட்டார். மற்ற மூýவரும் நோ-போல்.
ழூ கப்டன் சௌரவ் கங்குலி ஒரு சுப்பர் சிக்ஸ் அடிýத்து ஓட்டக் கணக்கைத் தொடக்கினார். சிறப்பாக விளையாடிý 45 ரன்கள் அடிýத்தவர். சிக்ஸ் அடிýக்க ஆசைப்பட்டு, தூக்கி அடிýத்து வெளியேறினார். ரன் வேகம் துரிதமாக உயர்ந்து கொண்டிýருந்த நேரத்தில் ஆட்டமிழந்ததும், பெரிதும் ஏமாற்றமடைந்த கப்டன், உடனடிýயாக வெளியேறி விடவில்லை. மறுமுனையில் இருந்த துணைக் கப்டன் ராகுலிடம் சென்று ஓட்ட வேகத்தை உயர்த்தும் பொறுப்பை ஒப்படைத்த பிறகே வெளியேறினார்.
ழூ இந்திய அணியின் பந்து வீச்சைத் தொடங்கியவர் தமிழக வீரர் பாலாஜி. இவர் வீசிய முதல் பந்தும் வைட்.
ழூ கடந்த 119 போட்டிýகளில் ராகுல் டிýராவிட் சதம் ஏதும் அடிýக்கவில்லை. இந்தப் போட்டிýயில் சதம் அவரது கைக்கு எட்டிýயும் பேட்டுக்கு எட்டவில்லை.
ழூ ஒருநாள் போட்டிýகளில் சேவக் 13 ஆவது அரைச்சதத்தைப் ப10ர்த்தி செய்தார்.
ழூ வெற்றி வாய்ப்பே இல்லாத ஒரு போட்டிýயில், கடைசி வரை போராடிý வெற்றி விளிம்பிற்கே கொண்டு வந்த இன்சமாமின் ஆட்டம் அவருக்கு ஆட்ட நாயகன் விருதை பெற்றுக் கொடுத்தது.
இது இந்திய சாதனை!
ஒருநாள் போட்டிýகளில் பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியாவின் மிகப் பெரிய ஸ்கோர் இதுதான் (349ஃ7). முன்னர் அதிகபட்சம் 1997ஃ98 இல் டாக்கா போட்டிýயில் பாகிஸ்தானுக்கு எதிராக 316ஃ7. மேலும் இந்தப் போட்டிýயில் பாகிஸ்தான் எடுத்த 344 ரன்களே இந்தியாவுக்கு எதிராக அந்த அணி எடுத்த அதிகபட்ச ஓட்டம்.
நன்றி - தினக்குரல்
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Posts: 8,736
Threads: 357
Joined: Jan 2004
Reputation:
0
சச்சின் அபார சதம்! 12 ரன்களில் வென்றது பாகிஸ்தான்!!
செவ்வாய், 16 மார்ச் 2004
இன்சமாம்-உல்-ஹக் அபாரமாக ஆடி சதமடித்தும் கராச்சியில் 5 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணி தோல்வியைத் தழுவியதைப் போல, இன்று சச்சின் டெண்டுல்கர் மிகச் சிறப்பாக ஆடி 141 ரன்கள் குவித்தும் பலனின்றி இந்திய அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது!
சாம்சங் கோப்பை ஒரு நாள் போட்டித் தொடரில் ராவல்பிண்டியில் இன்று நடைபெற்ற 2வது ஒரு நாள் போட்டியில் பூவா-தலையா வென்று முதலில் களமிறங்கிய பாகிஸ்தான் அணி, 50 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 329 ரன்களைக் குவித்தது. 330 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி சிறப்பாக முன்னேறிய இந்திய அணி, கடைசி கட்டத்தில் மளமளவென்று விக்கெட்டுகளை இழந்து 48.4 ஓவர்களில் 317 ரன்களுக்கு ஆட்டமிழந்து தோல்வியைத் தழுவியது.
இந்தியாவின் இமாலய இலக்கை நோக்கி கராச்சியில் எப்படி பாகிஸ்தான் அணி திட்டமிட்டு விக்கெட்டை இழக்காமல் சிறப்பாக ஆடியதோ, அதே போல இந்திய அணியும் ஷேவக், லக்ஷ்மண் ஆகியோரின் விக்கெட்டை துவக்கத்திலேயே இழந்தாலும் மிக நிதானமாக நின்றாடி இலக்கை நோக்கி நன்றாக முன்னேறியது.
சச்சின் டெண்டுல்கர் தனது திறன் எப்படிப்பட்டது என்பதனை இன்று துல்லியமாக நிரூபித்தார். ஒரு பந்தைக் கூட தூக்கியடிக்காமல் 106 பந்துகளில் சதத்தை எட்டிய சச்சின் டெண்டுல்கர், அதன் பிறகு மேலும் 41 ரன்கள் குவித்த பின் ஆட்டமிழந்தார்.
சச்சின், திராவிடுடன் இணைந்து 4வது விக்கெட்டுக்கு குவித்த 105 ரன்கள் ஆட்டத்தின் போக்கை முற்றிலுமாக மாற்றிவிட்டது. கடைசி 10 ஓவர்கள் இருக்கும்போது இந்திய அணிக்கு சரியாக 80 ரன்கள் தேவைப்பட்டது. 6 விக்கெட்டுகள் கைவசம் இருந்தன. ஆனால், 42வது ஓவரில் ராகுல் திராவிட் ஆட்டமிழந்ததும், அவரைத் தொடர்ந்து யுவராஜ் சிங் 19 ரன்களுக்கு ஆட்டமிழந்ததும், பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் ஷோயிப் அக்தார், மொஹம்மது கய்ஃபையும், ஜாஹீர் கானையும் அடுத்தடுத்த பந்துகளில் சாய்த்ததும் இந்திய அணியின் கனவு காணாமல் போனது.
ஆனால், அதற்கு உயிர் கொடுக்க முயன்றனர் இன்று முதல் முறையாக களமிறங்கிய ரமேஷ் பவாரும், லக்ஷ்மிபதி பாலாஜியும். 15 பந்துகளில் அவர்கள் இருவரும் குவித்த 30 ரன்கள் பாகிஸ்தான் அணியினரின் வயிற்றில் புளியைக் கரைத்தது. ஆனால், அவசரப்பட்டு 1 ரன் எடுக்க முயன்று பாலாஜி ஆட்டமிழந்ததைத் தொடர்ந்து திடீரென்று எல்லாம் முடிந்துவிட்டது. 11 பந்துகளில் 18 ரன்கள் எடுத்த பவார் ஆட்டமிழக்காமல் பெவிலியன் திரும்பினார்.
தோல்வியடைந்தாலும் இந்திய அணியின் முயற்சி பாராட்டிற்குரியது. எவ்வித பதற்றமுமின்றி இலக்கை நோக்கி முன்னேறினர். ஆனால், யுவராஜ் சிங்கும், மொஹம்மது கய்ஃபும் சிறிது நேரம் இணைந்து நின்றாடியிருந்தால் நிச்சயம் இந்தியா வெற்றி பெற்றிருக்கும்.
துவக்க ஆட்டக்காரராக களமிறங்கி 58 பந்துகளில் 10 பௌண்டரிகளுடனும், 4 சிக்ஸர்களுடன் 80 ரன்களைக் குவித்து பாகிஸ்தான் அணிக்கு ஒரு அற்புதமான துவக்கத்தைத் தந்த ஷாகீத் அஃப்ரிடி, கங்குலி, யுவராஜ் சிங் ஆகியோரின் விக்கெட்டுகளைக் கைப்பற்றி திருப்புமுனையைத் தந்தார்.
பாகிஸ்தான் அணியின் வேகப்பந்து வீச்சாளர்கள் ஷோயிப் அக்தாரும், மொஹம்மது சமியும் தலா 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றி தங்களுடைய திறனை நிரூபித்தனர். அவர்களுடைய அபார பந்து வீச்சே இந்தியாவின் வெற்றித் திட்டத்தை கடைசிக் கட்டத்தில் தவிடு பொடியாக்கியது.
இன்றையப் போட்டியின் ஆட்ட நாயகனாக சச்சின் டெண்டுல்கர் தேர்வு செய்யப்பட்டார்.
நன்றி - வெப் உலகம்
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Posts: 10,547
Threads: 525
Joined: Apr 2003
Reputation:
0
ஏன் பிபிஸி நீங்கள் இலங்கைப் பிரஜையும் கிரிக்கெட் ரசிகரும் தானே... சரி இந்தியா பாகிஸ்தான் செய்தி போக.... அங்க கண்டியில ஏதேதோ நடக்குதாம் அதையும் கொஞ்சம் தாங்கோவன்...முரளி 500 ரெஸ்ட் விக்கெற்ருக்கு கிட்ட நிக்கிறதாச் செய்திகள் வருகுது....உண்மையே....!
<!--emo&  --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :twisted: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> :roll:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Posts: 8,736
Threads: 357
Joined: Jan 2004
Reputation:
0
kuruvikal Wrote:ஏன் பிபிஸி நீங்கள் இலங்கைப் பிரஜையும் கிரிக்கெட் ரசிகரும் தானே... சரி இந்தியா பாகிஸ்தான் செய்தி போக.... அங்க கண்டியில ஏதேதோ நடக்குதாம் அதையும் கொஞ்சம் தாங்கோவன்...முரளி 500 ரெஸ்ட் விக்கெற்ருக்கு கிட்ட நிக்கிறதாச் செய்திகள் வருகுது....உண்மையே....!
<!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :twisted: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> :roll:
நான் இலங்கை பிரஜைதான் இல்லை என்று சொல்லவில்லை. கிரிக்கட், உதைபந்தாட்டம் எதுவாயிருந்தாலும் விறுவிறுப்பான ஆட்டங்களை மட்டுமே பார்ப்பேன். அதனால் தான் மற்ற செய்திகளை பார்க்கவுமில்லை இங்கு போடவுமில்லை. நீங்கள் கேட்டதற்காக அதை தேடி போடுகின்றேன். கொஞ்சம் பொறுங்கள்.
முரளிக்கும் அவுஸ்ரேலிய வீரர் ஷேன் வோர்னுக்கும் யார் முதலில் 500 விக்கட்டுக்களை எடுப்பது என்ற போட்டி இருந்தது, அதில் ஷேன் வோர் வென்றுவிட்டார்.
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Posts: 8,736
Threads: 357
Joined: Jan 2004
Reputation:
0
Murali cherishes milestone
<b>Sri Lanka spinner Muttiah Muralitharan was understandably elated after taking his 500th Test wicket.</b>
Muralitharan became the third player to reach the milestone when he bowled Michael Kasprowicz in the second Test against Australia in Kandy.
"I think 500 wickets is never easy as it will naturally involve a very long career," said Muralitharan.
"To do it against the Australians is significant as I made my debut against them, so it is a very special moment."
Former West Indies paceman Courtney Walsh and Australian's Shane Warne are the only others to achieve the goal.
But Muralitharan, playing in only his 87th Test match, is by far the quickest to the 500 mark.
Walsh, who tops the list with 519 wickets, played in a total of 132 Tests before his retirement in 2001.
Leg spinner Warne, took his tally to 504 on the opening day of the second Test.
Muralitharan, however, was modest about his achievement, adding: " I must state that I am very lucky to have got to that mark.
"It is significant that I got my landmark here as I grew up in Kandy.
"I must add that I am bowling really well at the moment and have done that now for the last five to six years.
"As for the Australian team, they are a bunch of great players and I consider it to be a challenge to be bowling to them."
At 31, Murali arguably still has several years left at the top and should go on to eclipse Walsh.
"I think it is difficult to gauge as to how long I will go on,
"But the 2007 World Cup will be a target and maybe 20 to 30 (more) Test matches. Maybe by then I could make a decision."
Thanx: BBC News
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Posts: 8,736
Threads: 357
Joined: Jan 2004
Reputation:
0
<b>TOP TEST WICKET-TAKERS</b>
1. C Walsh 519 in 132 matches
2. S Warne 504 in 102
3. M Muralitharan 500 in 87
4. N Kapil Dev 434 in 131
5. R Hadlee 431 in 86
6. G McGrath 430 in 95 matches
7. Wasim Akram 414 in 104
8. C Ambrose 405 in 98
9. I Botham 383 in 102 matches
10. A Kumble 382 in 81
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Posts: 518
Threads: 20
Joined: Apr 2003
Reputation:
0
TOP TEST WICKET-TAKERS (16-03-2004)
1. C Walsh 519 in 132 matches
2. S Warne 504 in 102
3. M Muralitharan 500 in 87
4. N Kapil Dev 434 in 131
5. R Hadlee 431 in 86
6. G McGrath 430 in 95 matches
7. Wasim Akram 414 in 104
8. C Ambrose 405 in 98
9. I Botham 383 in 102 matches
10. A Kumble 382 in 81
மேலே கூறப்பட்டவர்களில் சிவப்பால் எழுதப்பட்டுள்ள முரளி மற்றும் வோர்ன் இடையேதான் சாதனைக்குரிய போட்டி நிகழும் என நினைக்கிறேன். பலர் ஓய்வு பெற்றவர்கள்....மற்றவர்கள் சும்மா <!--emo&  --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/wink.gif' border='0' valign='absmiddle' alt='wink.gif'><!--endemo--> <!--emo&  --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
முரளியின் சராசரி அதிகமாக இருப்பதால் முரளி முதலில் 600ஐத் தாண்டுவார் என எதிர்பார்க்கிறேன்
வோர்ன் சிறிது காலம் விளையாடமையால் அது அவருக்கு பாதிப்பாக அமைந்திருக்கலாம் !
Posts: 10,547
Threads: 525
Joined: Apr 2003
Reputation:
0
இலங்கை கிரிக்கெட் அணியினது தமிழ் வீரரும் உலகின் தலைசிறந்த சுழல் பந்து வீச்சாளருமான முத்தையா முரளிதரன் இன்று தனது 500 விக்கெட்டை கண்டியில் ஆஸ்திரேலிய அணியுடனான போட்டியில் பெற்று ரெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் 500 ரெஸ்ட் விக்கெற்றுக்களை வீழ்த்திய சர்வதேச கிரிக்கெட் வீரர்கள் பட்டியலில் மூன்றாவதாக இணைந்து கொண்டுள்ளார்....!
இவர் இந்தச் சாதனை இலக்கை... இதே சாதனையை நிலைநாட்டிய மற்றைய இரு வீரர்களுடன் (மேற்கிந்திய கொட்னி வோல்ஸ்...அவுஸ்திரேலிய சேன் வோர்ன்) ஒப்பிடும் போது... வெறும் 87 ரெஸ்ட்கள் போட்டிகளில் மட்டுமே விளையாடி தனது 31 வது வயதில் எட்டியுள்ளார்...!
<img src='http://newsimg.bbc.co.uk/media/images/39896000/jpg/_39896510_muralitharan203.jpg' border='0' alt='user posted image'>
500வது விக்கெட்டை கண்டி அஸ்கிரிய மைதானத்தில் உலக சம்பியன் அவுஸ்திரேலிய அணிக்கெதிரான போட்டியில் வீழ்த்திய மகிழ்ச்சியில் முரளி...இத்தனை திறமைகள் இருந்தும் இலங்கை அணியில் ஒரு பதவியும் இவருக்கு இதுவரை வழங்கப்பட்டதும் இல்லை...அப்படி இருந்தும் மனம் சோராது போராடி வென்ற கிரிகெட் வீரன் முரளி....!
முரளி தனது சாதனை இலக்கை தான் பிறந்த மண்ணில் எட்டி உள்ளார் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்க ஒரு விடயமாகும்...!
கடந்த சமாதான காலத்தில் வன்னிக்கும் யாழ்ப்பாணத்துக்கும் விஜயம் செய்து கிரிக்கெட் ரசிகர்களுக்கு உற்சாகமூட்டிய இலங்கையணியின் தமிழ் வீரர் இவர் என்பதும் குறிப்பிடத்தக்கது....!
<b>சாதனையாளன் முரளிக்கு தமிழ் கிரிக்கெட் ரசிகர்கள் எம் சார்பில் வாழ்த்துக்கள்....! இத்துடன் இன்னும் பல சாதனைகள் ஈட்ட இறைவனையும் பிரார்த்தித்து நிற்கின்றோம்...!</b>
[scroll:3b3b4cd886]<img src='http://news.bbc.co.uk/media/images/39881000/jpg/_39881168_early1995300300.jpg' border='0' alt='user posted image'><img src='http://news.bbc.co.uk/media/images/39881000/jpg/_39881178_engbestfigures98.jpg' border='0' alt='user posted image'><img src='http://news.bbc.co.uk/media/images/39893000/jpg/_39893898_murali_action.jpg' border='0' alt='user posted image'><img src='http://news.bbc.co.uk/media/images/39881000/jpg/_39881240_wickets2001.jpg' border='0' alt='user posted image'><img src='http://news.bbc.co.uk/media/images/39881000/jpg/_39881172_lehmann300.jpg' border='0' alt='user posted image'><img src='http://news.bbc.co.uk/media/images/39894000/jpg/_39894326_murali_gi300x300.jpg' border='0' alt='user posted image'><img src='http://news.bbc.co.uk/media/images/39894000/jpg/_39894324_murali_gi200x300.jpg' border='0' alt='user posted image'> www.bbc.com[/scroll:3b3b4cd886]
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Posts: 10,547
Threads: 525
Joined: Apr 2003
Reputation:
0
<img src='http://www.jaffnacentral.com/images/crest_small.gif' border='0' alt='user posted image'><img src='http://www.jaffnastjohns.com/images/o.b.a_anni_celebration_bann.gif' border='0' alt='user posted image'>
யாழ்ப்பாணத்தின் கிரிக்கெட் பெரும் போர் என்று அழைக்கப்படும் (பிக் மட்ச் - Big Match) யாழ் மத்திய கல்லூரிக்கும் யாழ் சென் பரியோவான் கல்லூரிக்கும் இடையில் 100 ஆண்டுகளுக்கும் மேலாக நடந்து வரும் கிரிக்கெட் போட்டியின் இவ்வாண்டுக்கான ஆட்டம் கடந்த 18 திகதியில் இருந்து நடைபெறு வருகிறது....!
இக்கிரிக்கெட் ஆட்டத்தின் கள நிலவரம் வருமாறு....!
முதலில் துடுப்பெடுத்தாடிய மத்திய கல்லூரி சகல விக்கெட்டுக்களையும் இழந்து 101 ஓட்டங்களைப் பெற்றது இதில் ஜசிந்தன் மட்டுமே சிறப்பாக ஆடி 37 ஓட்டங்களைப் பெற்றிருந்தார்....!
பரியோவான் கல்லூரி பந்து வீச்சாளர்கள் சார்பில் மயூரன் சிறப்பாகப் பந்து வீசி 4 விக்கெட்டுக்களைக் கைப்பற்றியிருந்தார்....!
மத்திய கல்லூரியின் முதல் இனிங்ஸைத் தொடர்ந்து பரியோவான் கல்லூரி தனது முதல் இனிங்ஸைத் தொடங்கி சகல விக்கெட்டுக்களையும் இழந்து 210 ஓட்டங்களை எடுத்தது...இதில் தினேசும் கிருஷ்ணகுமாரும் சிறப்பாக ஆடி முறையே 66 மற்றும் 44 ஓட்டங்களைத் தமது அணிக்காக பெற்றுக் கொடுத்தனர்...!
மத்திய கல்லூரி சார்பில் ரஜீவ்குமார் சிறப்பாக பந்து வீசி பரியோவான் கல்லூரியின் 6 விக்கெட்டுக்களைக் கைப்பற்றி உள்ளார்...!
தற்போது தனது இரண்டாவது இனிங்ஸைத் ஆடத்தொடங்கி உள்ள மத்திய கல்லூரி அணி இதுவரை இரண்டு விக்கெட்டுக்களை இழந்து 95 ஓட்டங்களைப் பெற்றுள்ளது இதில் ரோகான் 41 ஓட்டங்களைப் பெற்ற நிலையில் ஆட்டமிழந்து வெளியேறி உள்ளார்...!
ஆட்டத்தின் மிகுதி விபரங்கள் பின்னர் தரப்படும்....தகவல் பரியோவான் கல்லூரியின் இணையத்தளத்தில் இருந்து பெறப்பட்டது...!
இதோ கள நிலவரத்தை பரியோவான் கல்லூரியின் இணையத்தளத்திலும் பார்வையிடலாம்....!
[url=http://www.jaffnastjohns.com/score_2004bigmatch.htm][b]Big Match 2004 between Jaffna Central and St Johns Colleges..Score Card
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Posts: 8,736
Threads: 357
Joined: Jan 2004
Reputation:
0
ஹமீத், ரசாக் அபார ஆட்டம்! பாகிஸ்தான் வென்றது!
இந்திய அணியின் முதல் 3 ஆட்டக்காரர்களை துவக்கத்திலேயே ஆட்டமிழக்கச் செய்த ஷப்பீர் அகமதுவின் அபார பந்து வீச்சும், துவக்க ஆட்டக்காரர் யாசிர் ஹமீதின் அற்புத ஆட்டமும், அப்துல் ரசாக்கின் அதிரடியும் பாகிஸ்தான் அணிக்கு வெற்றி தேடித் தந்தன!
சாம்சங் கோப்பை ஒரு நாள் போட்டித் தொடரில் பெஷாவரில் இன்று நடைபெற்ற மூன்றாவது ஒரு நாள் போட்டியில் பூவா - தலையா வென்ற பாகிஸ்தான் அணி இந்திய அணியை முதலில் களமிறக்கி 244 ரன்களுக்கு மட்டுப்படுத்தி, 47.2 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 245 ரன்களை எடுத்து 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்த வெற்றியின் மூலம் 5 போட்டிகள் இந்தத் தொடரில் 2-1 என்ற வெற்றிக் கணக்கில் பாகிஸ்தான் அணி முன்னிலைக்கு வந்துள்ளது.
சீராக, சிறப்பாக ஆட்டக்களத்தின் சாதகத் தன்மையை முழுமையாக பயன்படுத்தி பாகிஸ்தான் அணி பந்து வீசியது. மாறாக, இர்ஃபான் பத்தான், லக்ஷ்மிபதி பாலாஜி ஆகிய இருவர் தவிர இந்தியாவின் மற்ற பந்து வீச்சாளர்கள் தாறுமாறாக பந்து வீசி பாகிஸ்தான் அணிக்கு வெற்றியை எளிதாக்கித் தந்தனர் என்றே கூறவேண்டும்.
எதற்காக லெக் ஸ்டம்பிற்கு வெளியே ஜாஹீர் கான் பந்து வீசுகிறார் என்று யாருக்கும் புரியவில்லை. இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர்கள் வைட் போடுவது கங்குலிக்கு இன்னமும் புரியாத புதிராகவே உள்ளது. தன்னிடம் உள்ள பந்து வீச்சாளர்களின் திறனை வைத்துக் கொண்டு பாகிஸ்தான் அணியை மட்டுப்படுத்த கங்குலி பட்ட சிரமம் உலகின் எந்த கிரிக்கெட் அணித் தலைவரும் பட்டிருக்க முடியாது.
முதலில் களமிறங்கிய இந்திய அணி அடுத்தடுத்து 3 விக்கெட்டுகளை இழந்தாலும், கங்குலி, திராவிட் இணையினால் நிலைப்பெற்று பிறகு யுவராஜ் சிங், பாலாஜி ஆகியோரின் அதிரடி ஆட்டத்தினால் மரியாதைக்குரிய எண்ணிக்கையை எட்டியது. பாகிஸ்தான் இன்னிங்ஸின் துவக்கத்தில் பாலாஜியும், பத்தானும் அருமையாக பந்து வீசி அந்த அணியை நன்றாகவே கட்டுப்படுத்தினர். ஆனால், அவர்களுடைய பந்து வீச்சு முடிந்ததும் இந்திய அணியின் பலவீனம் பட்டவர்த்தனமாக வெளிப்பட்டது.
இந்தியாவின் முன்னணி பந்து வீச்சாளர் என்று கருதப்படும் ஜாஹீர் கான் தனது 3வது ஓவரில் 14 ரன்களைக் கொடுத்தார், தனது 6வது ஓவரில் 12 ரன்களைக் கொடுத்தார். வேறு வழியில்லாமல் சச்சினின் துணையுடன் இடைப்பட்ட ஓவர்களை தானும் வீசி பாகிஸ்தான் அணியை கட்டுப்படுத்தும் முயற்சியில் கங்குலி ஈடுபட்டார். ஆனால் அது எதிர்பார்த்த அளவிற்கு விக்கெட்டை பெற்றுத் தரவில்லை.
ஆட்டத்தின் இறுதி கட்டத்தில் அப்துல் ரசாக்கும், மொய்ன் கானும் மிகத் திறமையாக ஆடி 7வது விக்கெட்டிற்கு குவித்த 74 ரன்களின் உதவியால் பாகிஸ்தான் அணி சிரமமின்றி வென்றது.
துவக்க ஆட்டக்காரராககள மிறங்கிய பாகிஸ்தான் அணியின் இளம் வீரர் யாசிர் ஹமீதின் அற்புத ஆட்டமே அந்த அணி வெற்றி பெறுவதற்கு பலமான அடித்தளத்தை அமைத்துத் தந்தது. 98 ரன்களில் ஆட்டமிழந்த ஹமீதின் ஆட்டம் மிகச் சிறப்பாக இருந்தது. ஒரு பக்கம் அனுபமிக்க மூத்த ஆட்டக்காரர்கள் தொடர்ந்து ஆட்டமிழந்து வெளியேறிக் கொண்டிருந்த போது ஹமீத் சற்றும் மனம் தளராமல் எச்சரிக்கையாக ஆடி, அடிக்க வேண்டிய பந்துகளை அடித்து ரன்களை குவித்து, அந்த அணி 173 ரன்களை எட்டிய போது 6வது ஆட்டக்காரராக ஆட்டமிழந்தார். அவரே இன்றைய ஆட்ட நாயகனாகவும் தேர்வு செய்யப்பட்டார்.
நன்றி - வெப் உலகம்
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Posts: 10,547
Threads: 525
Joined: Apr 2003
Reputation:
0
<img src='http://newsimg.bbc.co.uk/media/images/39943000/jpg/_39943605_warne_al203.jpg' border='0' alt='user posted image'>
சிறிலங்காவின் கண்டி அஸ்கிரிய மைதானத்தில் நடந்து வந்த அவுஸ்திரேலிய சிறிலங்கா கிரிக்கெட் அணிகளுக்கிடையிலான இரண்டாவது ஐந்து நாள் கிரிக்கெட் ரெஸ்ட் போட்டியில் அவுஸ்திரேலியா 27 ஓட்டங்களினால் சிறிலங்காவை தோற்கடித்துள்ளது....!
ஓட்டவிபரங்கள்....!
அவுஸ்திரேலியா
முதல் இனிங்ஸ்..120
இரண்டாம் இனிங்ஸ்..442
சிறிலங்கா
முதல் இனிங்ஸ்...211
இரண்டாம் இனிங்ஸ்...324
இவ்வெற்றியின் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட இவ் ரெஸ்ட் சுற்றுத் தொடரில் 2:0 எனும் விகிதத்தில் தொடர் வெற்றியை உறுதி செய்த நிலையில் அவுஸ்திரேலியா முன்னணி வகிக்கிறது...!
இத்தொடரில் அவுஸ்திரேலிய சேன் வோனும் சிறிலங்காவின் முத்தையா முரளிதரனும் 500 ரெஸ்ட் விக்கெட்டுக்களைப் பெற்றது குறிப்பிடத்தக்க விடயமாகும் அத்துடன் இவர்கள் இருவரும் உலக சாதனை இலக்கை நோக்கியும் முன்னேறிக் கொண்டிருக்கின்றனர்....!
Our thanks to bbc.com
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Posts: 8,736
Threads: 357
Joined: Jan 2004
Reputation:
0
<b>திராவிட், கய்ஃப் அபார ஆட்டம்! இந்தியா வென்றது!!</b>
ராகுல் திராவிட், மொஹம்மது கய்ஃப் இருவரும் இணைந்து தோல்வியை நோக்கி சரிந்து கொண்டிருந்த இந்திய அணியை தூக்கி நிறுத்தியது மட்டுமின்றி, பொறுமையாக ஆடி சற்றும் எதிர்பாராத அபார வெற்றியைப் பெற்றுத் தந்தனர்!
லாகூரில் உள்ள கடாஃபி மைதானத்தில் இன்று நடைபெற்ற 4வது ஒரு நாள் போட்டியில் பூவா-தலையா வென்று முதலில் களமிறங்கிய பாகிஸ்தான் அணி, நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 293 ரன்களை எடுத்தது.
இந்திய அணி 45 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 294 ரன்களை எடுத்து 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வாகை சூடியது. இந்த வெற்றியின் மூலம் 5 போட்டிகள் கொண்ட சாம்சங் கோப்பைத் தொடரில் இரு அணிகளும் 2 வெற்றிகளுடன் சமநிலையில் உள்ளன.
294 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி, 5வது ஓவரில் 7 ரன்கள் மட்டுமே எடுத்த சச்சினையும், 9வது ஓவரில் 20 ரன்கள் எடுத்த லக்ஷ்மணையும், 10வது ஓவரில் 26 ரன்கள் எடுத்த ஷேவக்கையும், 13வது ஓவரில் 21 ரன்கள் எடுத்த சௌரவ் கங்குலியையும் இழந்து 94 ரன்களுக்கு 4 விக்கெட்டுகள் என்கின்ற படுமோசமான நிலையில் இருந்தது.
நெருக்கடியான கட்டத்தில் திராவிடுடன் இணைந்த யுவராஜ் சிங் பதற்றம் ஏதுமின்றி சிறப்பாக ஆடி மளமளவென்று ரன்களைக் குவிக்கத் துவங்கினார். 35 பந்துகளில் 5 பௌண்டரிகளுடன் 36 ரன்கள் எடுத்த யுவராஜ் சிங், திராவிடுடன் இணைந்து குவித்த 68 ரன்களின் உதவியால் இந்திய அணி 24வது ஓவரில் 162 ரன்கள் என்கின்ற பாதுகாப்பானை நிலைக்கு உயர்ந்தது.
5 விக்கெட்டை இழந்திருந்த அந்த நிலையிலும் வெற்றிக்குத் தேவையான 132 ரன்களை எடுப்பதற்கு 26 ஓவர்கள் கைவசம் இருந்ததால், அடுத்து ஆட வந்த மொஹம்மது கய்ஃபுடன் இணைந்து மிகப் பொறுமையாக ஆடினார் ராகுல் திராவிட். இவர்கள் இருவரும் 1, 2 என்று ரன்களை எடுத்து அணியின் எண்ணிக்கையை 31வது ஓவரிலேயே 200-ஐ கடக்கச் செய்தனர். திராவிட் மேலும் ஒரு அரை சதத்தை எட்டினார். அதன் பிறகு மொஹம்மது கய்ஃபும் வேகமாக அடித்தாடி ரன்களைக் குவிக்க இந்திய அணி வெற்றி இலக்கை நோக்கி எவ்வித பதற்றமுமின்றி பாதுகாப்பாக முன்னேறியது.
40வது ஓவரில் 55 பந்துகளில் அரை சதத்தை எட்டிய மொஹம்மது கய்ஃப், அதன் பிறகு அடித்தாடி திராவிடிற்கு இணையான எண்ணிக்கையை எட்டி 45வது ஓவரிலேயே வெற்றி இலக்கை எட்ட உதவினார்.
இந்திய அணி படுதோல்வியைத் தவிர்க்குமா? என்றிருந்த நிலை மாறி, 5 ஓவருக்கு முன்னதாகவே அருமையான வெற்றியை பெற்றது. ராகுல் திராவிட் 92 பந்துகளில் 9 பௌண்டரிகளுடன் 76 ரன்களும், மொஹம்மது கய்ஃப் 77 பந்துகளில் 8 பௌண்டரிகளுடன் 71 ரன்களும் எடுத்து அணியின் வெற்றியை உறுதி செய்தனர்.
இன்சமாமின் அபார ஆட்டம்!
கராச்சியில் இந்தியா நிர்ணயித்த இமாலய எண்ணிக்கையை நோக்கி பாகிஸ்தான் முன்னேறுவதற்கு சதமடித்து வழிகோலிய இன்சமாம், இன்று 30வது ஓவரில் 131 ரன்களுடன் தத்தளித்துக் கொண்டிருந்த பாகிஸ்தான் அணியை, சதம் அடித்து 50வது ஓவரின் முடிவில் 293 ரன்களை எட்ட உதவினார்.
இந்திய அணியின் பந்து வீச்சாளர்களை எல்லா திசைகளிலும் அடித்து 121 பந்துகளில் 4 சிக்ஸர்களுடனும், 9 பௌண்டரிகளுடனும் 123 ரன்கள் எடுத்து அருமையாக பாகிஸ்தானின் எண்ணிக்கையை உயர்த்திய இன்சமாம், இலக்கை நோக்கி இந்தியா முன்னேறி வரும் வேளையில், பாகிஸ்தான் அணி பந்து வீச்சாளர்கள் சிரத்தையின்றி பந்து வீசியதைக் கொண்டு பலமுறை கோபமுற்றார்.
இரு அணிகளின் பந்து வீச்சுமே இன்று பலவீனமாகவும், சீரற்றதாகவும் இருந்தது. இந்திய அணி 30 உபரி ரன்களைக் கொடுத்தது. அதற்கு பதில் கைமாறாக பாகிஸ்தான் அணி 37 உபரி ரன்களைக் கொடுத்தது.
இன்றையப் போட்டியின் ஆட்ட நாயகனாக இன்சமாமும், வேகமாக அரை சதத்தை எட்டியதற்காக மொஹம்மது கய்ஃபிற்கும் ரொக்கப் பரிசுகள் வழங்கப்பட்டன.
நன்றி - வெப் உலகம்
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Posts: 8,736
Threads: 357
Joined: Jan 2004
Reputation:
0
<img src='http://www.webulagam.com/news/photonews/images/2004/03/22_bedi.jpg' border='0' alt='user posted image'>
இந்திய நடிகையும், பிரபல தொலைக்காட்சி வர்ணனையாளருமான மந்த்ரா பேடி, இந்தியா - பாகிஸ்தான் இடையேயான கிரிக்கெட் போட்டியின்போது, இந்திய வீரர்களை உற்சாகப்படுத்தும் காட்சி.
நன்றீ - வெப் உலகம்
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Posts: 8,736
Threads: 357
Joined: Jan 2004
Reputation:
0
இன்றைய ஆட்டத்தில் முதலில் துடுப்பெடுத்து ஆடிய இந்தியா 50 ஓவர்களில் 7 விக்கட்டுகளை இழந்து 293 ரன் எடுத்துள்ளது. தற்போது இடைவேளை.
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Posts: 8,736
Threads: 357
Joined: Jan 2004
Reputation:
0
<!--QuoteBegin-BBC+-->QUOTE(BBC)<!--QuoteEBegin-->
<img src='http://newsimg.bbc.co.uk/media/images/39960000/jpg/_39960701_murli203.jpg' border='0' alt='user posted image'>
இன்றைய ஆட்டத்தில் முதலில் துடுப்பெடுத்து ஆடிய இந்தியா 50 ஓவர்களில் 7 விக்கட்டுகளை இழந்து 293 ரன் எடுத்துள்ளது. தற்போது இடைவேளை.<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
பாகிஸ்தான் 45.5 ஓவரில் சகல விக்கட்டுக்களையும் இழந்து 253 ரன் எடுத்தது. இதனி மூலம் இந்தியா இந்த ஆட்டத்தையும் தொடரையும் வென்றுள்ளது.
நன்றி - BBC Sports
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Posts: 8,736
Threads: 357
Joined: Jan 2004
Reputation:
0
லக்ஷ்மண் சதம்! தொடரை வென்று சாதனை படைத்தது இந்தியா!!
வெங்கட் சாய் லக்ஷ்மண் அற்புதமாக ஆடி அடித்த சதமும், பாகிஸ்தானின் முன்னணி ஆட்டக்காரர்களை அடுத்தடுத்து ஆட்டமிழக்கச் செய்த இர்ஃபான் பத்தானின் பந்து வீச்சும் இந்திய அணிக்கு தொடர் வெற்றியை பெற்றுத் தந்தது!
லாகூரில் இன்று நடைபெற்ற 5-வது ஒரு நாள் போட்டியில் பூவா-தலையா வென்ற பாகிஸ்தான் அணித்தலைவர் இன்சமாம்-உல்-ஹக், இந்திய அணியை முதலில் களமிறக்கினார். இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில், 7 விக்கெட்டை இழந்து 293 ரன்களை எடுத்தது.
294 ரன்களை எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பாகிஸ்தான் அணி, 47.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 253 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இந்திய அணி 40 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
5 போட்டிகளைக் கொண்ட இத்தொடரில், கராச்சியிலும், லாகூரில் 2 போட்டிகளையும் வென்ற இந்திய அணி, 3-2 என்ற கணக்கில் வென்று பாகிஸ்தான் மண்ணில் முதன்முதலாக ஒரு தொடரை வென்ற சாதனையை படைத்தது.
லக்ஷ்மணின் அபார ஆட்டம்!
இந்திய அணிக்கு வீரேந்திர ஷேவக்கும், சச்சின் டெண்டுல்கரும் இன்றும் ஒரு நல்ல துவக்கத்தைத் தந்தனர். 20 ரன்களுக்கே ஆட்டமிழந்தாலும், அதனை மிக வேகமாக அடித்து அணியின் எண்ணிக்கையை உயர்த்த உதவினார் ஷேவக்.
சச்சின் டெண்டுல்கர் மிகச் சிறப்பாக ஆடிக் கொண்டிருந்தார். சமயோசிதமாக பந்தைத் தட்டிவிட்டு 7 பௌண்டரிகளை குவித்து 37 ரன்களை எட்டியிருந்த நிலையில், சமியின் பந்தை ஸ்லிப்பில் தட்டிவிட முயன்று ஆட்டமிழந்தார்.
அடுத்து இணை சேர்ந்த லக்ஷ்மணும், கங்குலியும் மிக எச்சரிக்கையாக ஆடி அணியின் எண்ணிக்கையை கொஞ்சம் கொஞ்சமாக உயர்த்தினர். இவர்கள் இருவரும் 18.2 ஓவர்களில் குவித்த 92 ரன்களின் உதவியால் இந்திய அணி வலிமையான நிலையை எட்டியது. வெங்கட் சாய் லக்ஷ்மண் வேகமாக அரை சதத்தை எட்டினார்.
கங்குலி 45 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஆட்டமிழந்தார். அடுத்து ஆட வந்த ராகுல் திராவிட், வந்து சிறிது நேரத்திலேயே ஆட்டமிழந்தார். யுவராஜ் சிங், லக்ஷ்மணுடன் இணைந்து அணியின் எண்ணிக்கையை 200 ரன்கள் கடக்க உதவினார்.
அதன் பிறகு ஆட வந்த பின்னணி ஆட்டக்காரர்களின் உதவியுடன் ரன் எண்ணிக்கையை தொடர்ந்து உயர்த்திய லக்ஷ்மண், ஒரு நாள் போட்டிகளில் மீண்டும் ஒரு சதம் அடித்தார்.
46-வது ஓவரில் 107 ரன்கள் எடுத்திருந்த நிலையில் லக்ஷ்மண் ஆட்டமிழந்தார். பாகிஸ்தான் மண்ணில் தொடர்ந்து 3 போட்டிகளில் தனது முத்திரையை பதிக்காத லக்ஷ்மண், முக்கிய நாளான இன்று சிறப்பாக ஆடி அடித்த சதம் இந்திய அணியை வலிமையான நிலைக்கு உயர்த்தியது. இறுதிக் கட்டத்தில் இணை சேர்ந்து ஆடிய பத்தானும், பாலாஜியும் 18 பந்துகளில் 30 ரன்களைக் குவித்தனர்.
<b>இர்ஃபான் பத்தானின் அபார பந்து வீச்சு!</b>
பேட்ஸ்மேன்களுக்கு சாதகமான ஆட்டக்களத்தில் 294 ரன்கள் என்பது பாகிஸ்தான் அணியால் சாதிக்கக் கூடியதே என்கின்ற நிலையில், இந்திய அணியின் பந்து வீச்சாளர்கள் பாலாஜியும், பத்தானும் துவக்கத்திலேயே பாகிஸ்தான் அணிக்கு அதிர்ச்சியைத் தந்தனர்.
பாலாஜி தனது முதல் ஓவரின் 4-வது பந்திலேயே ஹமீதை கிளீன்போல்டாக்கி பெவிலியனுக்கு அனுப்பி வைத்தார். அடுத்து ஆட வந்த யூசுஃப் யுஹானாவை அற்புதமான பந்து ஒன்றை வீசி எல்.பி.டபிள்யூ.வாக்கினார் இர்ஃபான் பத்தான்.
மிகச் சிறப்பாக ஆடி 18 ரன்களை எட்டியிருந்த டோஃபிக் உமர், லெக் ஸ்டம்பிற்கு பிட்ச் ஆகி நேராக வந்த பத்தானின் பந்தை கிளான்ஸ் செய்ய முயன்றார். பந்து அவருடைய மட்டையில் சிக்காமல் லெக் ஸ்டம்பைத் தாக்குகிறது. 7-வது ஓவரில் 25 ரன்கள் மட்டுமே எடுத்திருந்த நிலையில், 3-வது விக்கெட்டை இழந்த பாகிஸ்தான், அதன் பிறகு 13-வது ஓவரில் யூனிஸ் கானையும் இழந்தது.
ஆஃப் ஸ்டம்பிலிருந்து மிகவும் தள்ளி பிட்ச் செய்து அவரை நன்றாக வெளியே இழுத்து ஆடச் செய்தார் பத்தான். அவர் மட்டையின் விளிம்பில்பட்ட பந்து மேலெழும்பி வர அதனை யுவராஜ் சிங் முன்னால் பாய்ந்து பிடித்தார்.
நெருக்கடியில் விழுந்த பாகிஸ்தான் அணியை தூக்கி நிறுத்த வந்த இன்சமாம்-உல்-ஹக் மிக எச்சரிக்கையாக அடித்தாடி ரன் எண்ணிக்கையை மளமளவென்று உயர்த்தினார். அவரை லெக் ஸ்டம்பிற்கு வெளியே பிட்ச் செய்து பந்து வீசி கட்டுப்படுத்த முயன்றார் கார்த்திக். அவருடைய பந்து வீச்சை உடைக்க முயன்ற இன்சமாம், மேலேறி வந்து தூக்கியடிக்க பௌண்டரி கோட்டிற்கு அருகே இருந்த சச்சின் டெண்டுல்கர் மிக நன்றாகக் கணித்து, பௌண்டரிக் கோட்டில் தனது கால் பட்டுவிடாமல் கேட்ச்சைப் பிடித்து ஆட்டமிழக்கச் செய்தார். அதுவே இன்றையப் போட்டியின் திருப்புமுனையாக அமைந்தது என்றால், 24-வது ஓவரில் அதிரடி ஆட்டக்காரர் ரசாக்கின் விக்கெட்டை பாலாஜி வீழ்த்தியது இந்திய அணியின் வெற்றியை உறுதி செய்தது.
<b>மாலிக்-மொய்ன் அபார ஆட்டம்!</b>
ஆனால், சற்றும் எதிர்பாராத விதமாக மாலிக்கும், மொய்ன் கானும் இணைந்து 30 ஓவர்களுக்குப் பிறகு அடித்தாடி இந்திய அணியின் வயிற்றில் புளியைக் கரைத்தனர். அடிக்க வேண்டிய ரன்கள் அதிகமாக இருந்தாலும், விடா முயற்சியுடன் ஓவருக்கு ஓவர் ரன்களைக் குவித்து அவர்கள் இலக்கை நோக்கி மேற்கொண்ட அணுகுமுறை பாராட்டிற்குரியது.
25-வது ஓவரில் இணை சேர்ந்த இவ்விருவரும் அடுத்த 16 ஓவர்களில் குவித்த 99 ரன்கள் அற்புதமானவை. ஆனால், ஷேவக்கின் பந்து வீச்சை தூக்கியடிக்க முயன்று 65 ரன்களுக்கு மாலிக் ஆட்டமிழந்ததற்குப் பிறகு, இந்திய அணி வீரர்கள் உற்சாகமாக பந்து வீசினர். 47-வது ஓவரில் அடுத்தடுத்து 2 விக்கெட்டுகள் வீழ்ந்தது. கடைசியாக மொய்ன் கானை போல்ட் செய்து 3-வது வெற்றியை பெற உதவினார் பாலாஜி.
இன்றையப் போட்டியில் இர்ஃபான் பத்தான் 10 ஓவர்கள் வீசினார். 1 மெய்டனுடன் 32 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டுகளையும், பாலாஜி 9.5 ஓவர்களில் 62 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டுகளையும், கான், கார்த்திக், ஷேவக் ஆகியோர் தலா 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.
இன்றையப் போட்டியின் நாயகனாக லக்ஷ்மணும், தொடர் நாயகனாக பாகிஸ்தான் அணித்தலைவர் இன்சமாமும் தேர்வு செய்யப்பட்டனர்.
14 ஆண்டுகளுக்கு பிறகு பாகிஸ்தான் மண்ணில் அடியெடுத்து வைத்த இந்திய அணி, 3 வெற்றிகளைப் பெற்று பாகிஸ்தான் மண்ணில் ஒரு போட்டித் தொடரை முதன் முதலாக வென்று சாதனை படைத்தது.
இந்திய அணியின் வீரர்கள் இந்த வெற்றியை மிகுந்த மகிழ்ச்சியுடன் கொண்டாடினர். ஆட்டத்தைக் காண வந்த இந்திய ரசிகர்கள் மைதானத்திற்கு வெளியே சென்று வானவேடிக்கையை நடத்தி தங்களது மகிழ்ச்சியை தெரிவித்தது, ஆட்டம் நடைபெறும் இடம் பாகிஸ்தானா? இந்தியாவா? என்று சந்தேகம் கொள்ள வைத்தது. பாகிஸ்தானில் போதுமான பாதுகாப்பு இருந்தது என்பதற்கும், பாகிஸ்தான் ரசிகர்கள் இந்திய அணியின் வெற்றியை எவ்வித கசப்புணர்ச்சியும் இன்றி ஏற்றுக் கொண்டார்கள் என்பதற்கும் வானவேடிக்கைகள் அத்தாட்சியாக இருந்தது.
நன்றி - வெப் உலகம்
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
|