Yarl Forum
அம்மானா பொய்மானா?? - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3)
+--- Forum: செய்திகள் : தமிழீழம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=12)
+--- Thread: அம்மானா பொய்மானா?? (/showthread.php?tid=7339)

Pages: 1 2

அம்மானா பொய்மானா?? - yarl - 03-12-2004

இது போன்ற தான் தோன்றித்தனமான செய்திகளை வெளியிடுவதை தமிழ் அலை நிறுத்திக்கொள்ளவேண்டும்.

புலத்திலுள்ள அனைவருக்கும் மட்டுமல்ல உலகத்தமிழருக்கும் கடவுள்(கருணா சொன்னதுபோல) எமது தேசியத்தலைவர்தான் .

புலத்து தமிழர் கருணா அம்மானின் செயல் கண்டு இடிந்துபோயுள்ள நிலமை யாருக்கு தெரியும்?
புலம்பெயர் தமிழர்களின் நிதி என்றால் என்ன சுவீப்பில் விழுந்த பணமா? ரத்தத்தை பிழிந்து
இன்னொரு ரத்தத்தை காக்க கொடுக்கப்படும் பணம்.
அதனுடன் விளையாடாதீர்கள்.

கடவுள் எல்லாவற்றையும் பார்த்துக்கொள்வார்.

இனி தமிழ் அலை செய்தி

வன்னித் தலைமை தங்களது நிதியிலும் வளத்திலும் அரைப்பங்கை கிழக்கு மாகாண மூத்த தளபதி கேணல் கருணா அம்மானிடம் கையளிக்க வேண்டும் அல்லாது விடில் ஐரோப்பிய நாடுகளில் வாழும் தமிழ் உறவுகளால் அனுப்பப்படும் நிதி உதவி வழங்கப்படமாட்டாது என பகிரங்க வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக புலம் பெயர்ந்து வாழும் தமிழ் உறவுகள் விடுத்திருக்கும் வேண்டுகோளில் கூறப்பட்டுள்ளதாவது,

வன்னித் தலைமை தங்களது நிதியிலும் வளத்திலும் அரைப்பங்கை கருணாஅம்மானிடம் கையளிக்குமாறு ஐரோப்பாவில் வசிக்கும் தமிழர்களாகிய நாம் கோரிக்கை விடுக்கிறோம்.

வன்னித் தலைவர்கள் கிழக்கு மாகாணத் தமிழர்களை பாரபட்சம் காட்டுவது மாத்திரமல்லாமல் வெளிநாட்டில் வாழும் தமிழர்களின் அபிலாசைகளையும் கவனத்தில் எடுப்பதில்லை.

விடுதலைப்புலிகள் கருணாஅம்மானுடன் வளங்களைப் பகிர்ந்து கொள்ளாதவிடத்து நாம் எமது உதவிகளை நிறுத்திக் கொள்வோம் நாம் எமது ஆதரவை கருணாஅம்மானுக்கு அளிப்போம் இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

இதேவேளை கருணா அம்மான் நண்பர்கள் நீண்ட காலமாக மட்.அம்பாறை மக்கள் எதிர்பார்த்திருந்த நல்ல விடயத்தை செய்தீர்கள் மட்.அம்பாறை மக்கள் உங்கள் பின்னால் நிற்கிறோம் கவலைப்பட வேண்டாம் தயவு செய்து வட இராணுவத்தை எமது மண்ணில் காலடி வைக்கவிட வேண்டாம், கருணாவை இம்சைப்படுத்த வேண்டாம் எனத் தெரிவித்துள்ளனர்.

தமிழ் அலை செய்தி முடிவு

- Eelavan - 03-12-2004

முதலில் ஒரே தலைவர் தனி நிர்வாகம் என்றனர் பின்னர் வன்னித்தலைமையே எண்ணிப்பார் என்றார்கள் தங்கள் தலைவன் பிரபாகரன் என்றார்கள் அப்போது வன்னித்தலைமை வேறு பிரபாகரன் வேறா?
அடுத்த நாள் தமிழீழத்தின் நிதி,நீதி,புலனாய்வுப் பொறுப்பாளர்களை விலக்கினால் தாம் திரும்பவும் சேர்வோம் என்கிறார்கள் மூன்று பெரும் தலைவர்களின் பிரிவினால் தான் இவர்கள் திரும்பவும் சேர்வார்கள் என்றால் சேர்ந்தும் எதனைச் சாதிக்கப் போகிறார்கள்?

அடுத்த நாள் சொன்னார்கள் வன்னித்தலைமை மீது தமக்கு நம்பிக்கையில்லை என்றார்கள் தனியாகப் பிரிந்து செயற்படப் போகிறார்களாம் எப்படி தென் தமிழீழ விடுதலைப் புலிகள் என்றா கடவுள் என்று சொன்ன அதே வாயால் தலைவர் படத்தை கிழிக்கச் சொல்லியிருக்கிறார்கள் கருணா அம்மானுக்கு என்னதான் வேண்டும்?தினத்துக்கு ஒன்றாகக் கேட்டால் எதனைத் தான் கொடுப்பது

இப்போது அங்கே சுற்றி இங்கே சுற்றி கடைசியில் விடயத்துக்கு வந்துள்ளார்கள் நிதி வளத்தில் அரைப்பங்கு வேண்டுமாம் இப்போதுதானே தெரிகிறது இந்த உரிமை புறக்கணிப்பு பிரதேசவாதம் எல்லாம் எதற்கு என்று பணம். பணமென்றால் பிணமும் வாயைத்திறக்குமாம் கருணா திறந்ததில் ஆச்சரியம் இல்லை

சரியப்பா ஐந்தோ பத்தோ கொடுத்து ஆளை விட்டுவிடுங்கள் மலேசியாவுக்கோ அமெரிக்காவுக்கோ ஓடிப்போய்விடட்டும் நிலமீட்புக்காக எம்முடன் தோள்நின்ற போராளிகளை காவு கொடுக்கத் தேவையில்லை

- sOliyAn - 03-12-2004

புலம் பெயர்ந்து வாழும் தமிழுறவு என்று பங்களிப்பு செய்தவங்கள் அறிக்கைவிட்டாங்களா? அல்லது பங்குபோட காத்திருந்ததுகளின் அறிக்கையா?

- Eelavan - 03-12-2004

கள உறவுகளுக்கு ஒரு அன்பான வேண்டுகோள்.....

இன்று எமது தாய் மண்ணில் நிகழும் சம்பவங்கள் மிகுந்த மனவேதனையைத் தருகின்றன
இதுவரை காலமும் இது தலைவருக்கும் தளபதிக்கும் இடையிலான பிரச்சனை விடுதலைப் புலிகளின் உள்வீட்டுக் குழப்பம் என்றவாறு புலம்பெயர் உறவுகள் என்ற முறையில் கைகட்டி கண்ணீர் மல்கப் பார்த்திருந்தோம்

ஊர் இரண்டுபட்டால் கூத்தாடிக்குக் கொண்டாட்டம் என்றவாறு மூண்ட உள்வீட்டுப் போரில் இணையத் தளங்களும்,செய்தி நிறுவனங்களும்,வானொலிகளும் குளிர்காய்கின்றன வாய்க்கு வந்தபடி அரசியல் பார்வைகள் ஆய்வுகள் பேட்டிகள் என்று ஊடகங்கள் சூடு பறந்த வேளையிலும் நாம் கைகட்டிப் பார்த்தவண்ணம் இருந்தோம்

இணையத் தளங்களிலும் பத்திரிகைகளிலும் படங்கள் வெளிவந்தன அம்மானின் தளத்தின் ஆயுத பலத்தின் வெளிக்காட்டலாய் அவை இருந்தன சந்தோஷம் மழையிலும் குளிரிலும் கஷ்டப்பட்டு நாம் உழைத்த பணத்தின் ஒரு பகுதி இன்று எறிகணையாகவும் எறிகணை செலுத்தியாகவும் மாறியிருக்கின்றன

ஆனல் அந்தோ பரிதாபம் எந்தவொரு எதிரியிடமிருந்து எம்மண்ணைக் காபதற்கு நாம் இவற்றை கொடுத்தோமோ அவை இன்று அதே எதிரியின் சொல் கேட்பனவாய்

எந்தவொரு தலைவரை நம்பி நாம் இவற்றை ஒப்படைத்தோமோ அதே தலைவருக்கும் அவரது போராளிகளுக்கும் ஏன் எம் எல்லோருக்கும் எதிராக அவற்றின் சுடுகுழல்கள் திரும்பியிருக்கின்றன

இவற்றுக்குக் கூட எம்மால் முடிந்தது பெரு மூச்சும் ஒரு துளி கண்ணீரும்தான்

அம்மானுக்குத் தான் தெரியும் போர் முனையின் வேதனை என்றால் எமக்குத் தான் தெரியும் அந்த போர்முனையை அம்மானுக்குச் சாதகமாக மாற்றியது எமது பணம் என்றும் அதற்காக நாம் பட்ட வேதனையும்

இன்று எமது பணம் எந்தவொரு உறவுகள் வெற்றிகளைக் குவிக்கவேண்டுமென்று நாம் கொடுத்தோமோ அதே உறவுகளின் உதிரம் குடிக்கத் தயாராகவிருக்கிறது இதற்கும் நாம் வாளாவிருப்போமேயானால் அவமே போவதைத் தடுக்கமுடியாது

இப்போது நிலைமை அபாயகரமான ஒரு கட்டத்தை எட்டியுள்ளது அம்மானது சுயநலத்துக்கு அப்பாவிப் பொதுமக்களைப் பலி கொடுக்கத் துணிந்து விட்டார்கள்

எந்தவொரு மக்களுக்காக தலைவர் மௌனம் காக்கிறாரோ அதே மக்களைப் பகடைக் காயாக்கி விளையாடத் துணிந்துவிட்டனர்

ஏதுமறியா அப்பாவிப் பொதுமக்கள் சிலரை உண்ணவிரதமிருக்கவைத்து எந்தவொரு சக்தியை, ஈகத்தை, உன்னத தியாகத்தை நாம் எமதென்று இறுமாந்திருந்தோமோ அந்த வழியை அன்னை பூபதியும் அண்ணன் திலீபனும் காட்டிய வழியைக் கொச்சைப்படுத்தும் நோக்குடன் திட்டமிட்டுள்ளார்கள்

இதனைத் தடுத்து நிறுத்தவேண்டும் இவர்களது துரோகத் தனதுக்கு அப்பாவிப் பொதுமக்கள் பலியாகிவிடக் கூடாது
தென் தமிழீழ மக்களுக்காகப் போராடி அவர்கள் காலடியில் உயிர்விடுவதை தனது வாழ்வின் உன்னத நோக்கமாக அறிவித்த கருணா தனக்காக உண்ணாவிரதமிருக்க ஏதுமறியா அப்பாவிகளை அழைத்தது ஏன்?
தனது கோரிக்கை நிறைவேற்றப்படும் வரை மட்டு அம்பாறை மாவட்டங்களுக்கு தான் வேண்டும் நீதி கிடைக்கும் வரை தான் உண்ணாவிரதம் இருக்கலாமே
போராடப் பயப்படாத கருணா உயிரைத் துச்சமென மதிக்கும் கருணா உண்ணாவிரதத்துக்கு மட்டும் மக்களைப் பலிகொடுக்க முயல்வது ஏன்?

இதனையும் பார்த்துக் கொண்டிருப்போமேயனால் நாம் போராட்டத்திற்கு இதுவரை காலமும் வழங்கி வந்த தார்மீக ஆதரவு விழலுக்கு இறைத்த நீராகிவிடும்

எந்தவொரு சர்வதேச சமூகத்திற்கும் மனித உரிமை நிறுவனங்களுக்கும் தமது உரிமைகள் பறிக்கப்பட்டுவிட்டதாய் இவர்கள் நாடகமாடவிருக்கிறார்களோ அந்த மைப்புகளுக்கு நாம் நிலைமையைத் தெளிவு படுத்தவேண்டும் அதே அமைப்புகள் மூலம் அழுத்ததைப் பிரயோகித்து கட்டாயத்தின் பேரில் உண்ணாவிரதமிருக்கும் எமது உறவுகள் மீட்டெடுக்கப்படவேண்டும்

அதே போன்று பிரதேசவாதக் கருத்துக்கள் மறந்து ஒன்றுபட்ட தமிழ்த் தேசியம் என்பதையும் வலியுறுத்தவேண்டும் இதன் முதற்கட்டமாக சர்வதேச தமிழ் மாணவர் அமைப்புகள் சார்பில் குரலெழுப்புவதற்கு ஆவன செய்து வருகிறோம்.

அதே போன்று நீங்கள் சார்ந்திருக்கும் அமைப்புகள் நிறுவனங்கள் என்பவற்றினதும் ஒட்டுமொத்த ஆதரவு தமிழ்த் தேசியத்துக்கே என ஒலிக்கவேண்டும்
உங்கள் ஆதரவுடன் கிழக்கிலங்கைப் பல்கலைக்கழக மாணவர்,ஐரோப்பியத்தமிழ் மக்கள் என்ற பெயர்களில் வெளிவரும் பித்தலாட்டங்களை மூட்டை கட்டி அனுப்புவோம்
தமிழர் தாகம் தமிழீழத் தாயகமேயன்றி வடதமிழீழம் ,தென் தமிழீழம் என்ற பிரதேசவாதமல்ல

சர்வதேச தமிழ் மாணவர்களில் ஒருவனாக
ஈழவன்

- Mathivathanan - 03-12-2004

<!--QuoteBegin-Eelavan+-->QUOTE(Eelavan)<!--QuoteEBegin-->கள உறவுகளுக்கு ஒரு அன்பான வேண்டுகோள்.....

இன்று எமது தாய் மண்ணில் நிகழும் சம்பவங்கள் மிகுந்த மனவேதனையைத் தருகின்றன
இதுவரை காலமும் இது தலைவருக்கும் தளபதிக்கும் இடையிலான பிரச்சனை விடுதலைப் புலிகளின் உள்வீட்டுக் குழப்பம் என்றவாறு புலம்பெயர் உறவுகள் என்ற முறையில் கைகட்டி கண்ணீர் மல்கப் பார்த்திருந்தோம்

ஊர் இரண்டுபட்டால் கூத்தாடிக்குக் கொண்டாட்டம் என்றவாறு மூண்ட உள்வீட்டுப் போரில் இணையத் தளங்களும்,செய்தி நிறுவனங்களும்,வானொலிகளும் குளிர்காய்கின்றன வாய்க்கு வந்தபடி அரசியல் பார்வைகள் ஆய்வுகள் பேட்டிகள் என்று ஊடகங்கள் சூடு பறந்த வேளையிலும் நாம் கைகட்டிப் பார்த்தவண்ணம் இருந்தோம்

இணையத் தளங்களிலும் பத்திரிகைகளிலும் படங்கள் வெளிவந்தன அம்மானின் தளத்தின் ஆயுத பலத்தின் வெளிக்காட்டலாய் அவை இருந்தன சந்தோஷம் மழையிலும் குளிரிலும் கஷ்டப்பட்டு நாம் உழைத்த பணத்தின் ஒரு பகுதி இன்று எறிகணையாகவும் எறிகணை செலுத்தியாகவும் மாறியிருக்கின்றன  

ஆனல் அந்தோ பரிதாபம் எந்தவொரு எதிரியிடமிருந்து எம்மண்ணைக் காபதற்கு நாம் இவற்றை கொடுத்தோமோ அவை இன்று அதே எதிரியின் சொல் கேட்பனவாய்

எந்தவொரு தலைவரை நம்பி நாம் இவற்றை ஒப்படைத்தோமோ அதே தலைவருக்கும் அவரது போராளிகளுக்கும் ஏன் எம் எல்லோருக்கும் எதிராக அவற்றின் சுடுகுழல்கள் திரும்பியிருக்கின்றன  

இவற்றுக்குக் கூட எம்மால் முடிந்தது பெரு மூச்சும் ஒரு துளி கண்ணீரும்தான்

அம்மானுக்குத் தான் தெரியும் போர் முனையின் வேதனை என்றால் எமக்குத் தான் தெரியும் அந்த போர்முனையை அம்மானுக்குச் சாதகமாக மாற்றியது எமது பணம் என்றும் அதற்காக நாம் பட்ட வேதனையும்

இன்று எமது பணம் எந்தவொரு உறவுகள் வெற்றிகளைக் குவிக்கவேண்டுமென்று நாம் கொடுத்தோமோ அதே உறவுகளின் உதிரம் குடிக்கத் தயாராகவிருக்கிறது இதற்கும் நாம் வாளாவிருப்போமேயானால் அவமே போவதைத் தடுக்கமுடியாது
 
இப்போது நிலைமை அபாயகரமான ஒரு கட்டத்தை எட்டியுள்ளது அம்மானது சுயநலத்துக்கு அப்பாவிப் பொதுமக்களைப் பலி கொடுக்கத் துணிந்து விட்டார்கள்

எந்தவொரு மக்களுக்காக தலைவர் மௌனம் காக்கிறாரோ அதே மக்களைப் பகடைக் காயாக்கி விளையாடத் துணிந்துவிட்டனர்
 
ஏதுமறியா அப்பாவிப் பொதுமக்கள் சிலரை உண்ணவிரதமிருக்கவைத்து எந்தவொரு சக்தியை, ஈகத்தை, உன்னத தியாகத்தை நாம் எமதென்று இறுமாந்திருந்தோமோ அந்த வழியை அன்னை பூபதியும் அண்ணன் திலீபனும் காட்டிய வழியைக் கொச்சைப்படுத்தும் நோக்குடன் திட்டமிட்டுள்ளார்கள்

இதனைத் தடுத்து நிறுத்தவேண்டும் இவர்களது துரோகத் தனதுக்கு அப்பாவிப் பொதுமக்கள் பலியாகிவிடக் கூடாது
தென் தமிழீழ மக்களுக்காகப் போராடி அவர்கள் காலடியில் உயிர்விடுவதை தனது வாழ்வின் உன்னத நோக்கமாக அறிவித்த கருணா தனக்காக உண்ணாவிரதமிருக்க ஏதுமறியா அப்பாவிகளை அழைத்தது ஏன்? தனது கோரிக்கை நிறைவேற்றப்படும் வரை மட்டு அம்பாறை மாவட்டங்களுக்கு தான் வேண்டும் நீதி கிடைக்கும் வரை தான் உண்ணாவிரதம் இருக்கலாமே
போராடப் பயப்படாத கருணா உயிரைத் துச்சமென மதிக்கும் கருணா உண்ணாவிரதத்துக்கு மட்டும் மக்களைப் பலிகொடுக்க முயல்வது ஏன்?

இதனையும் பார்த்துக் கொண்டிருப்போமேயனால் நாம் போராட்டத்திற்கு இதுவரை காலமும் வழங்கி வந்த தார்மீக ஆதரவு விழலுக்கு இறைத்த நீராகிவிடும்

எந்தவொரு சர்வதேச சமூகத்திற்கும் மனித உரிமை நிறுவனங்களுக்கும் தமது உரிமைகள் பறிக்கப்பட்டுவிட்டதாய் இவர்கள் நாடகமாடவிருக்கிறார்களோ அந்த மைப்புகளுக்கு நாம் நிலைமையைத் தெளிவு படுத்தவேண்டும் அதே அமைப்புகள் மூலம் அழுத்ததைப் பிரயோகித்து கட்டாயத்தின் பேரில் உண்ணாவிரதமிருக்கும் எமது உறவுகள் மீட்டெடுக்கப்படவேண்டும்  

அதே போன்று பிரதேசவாதக் கருத்துக்கள்  மறந்து ஒன்றுபட்ட தமிழ்த் தேசியம் என்பதையும் வலியுறுத்தவேண்டும் இதன் முதற்கட்டமாக சர்வதேச தமிழ் மாணவர் அமைப்புகள் சார்பில் குரலெழுப்புவதற்கு ஆவன செய்து வருகிறோம்.

அதே போன்று நீங்கள் சார்ந்திருக்கும் அமைப்புகள் நிறுவனங்கள் என்பவற்றினதும் ஒட்டுமொத்த ஆதரவு தமிழ்த் தேசியத்துக்கே என ஒலிக்கவேண்டும்  
உங்கள் ஆதரவுடன் கிழக்கிலங்கைப் பல்கலைக்கழக மாணவர், ஐரோப்பியத்தமிழ் மக்கள் என்ற பெயர்களில் வெளிவரும் பித்தலாட்டங்களை மூட்டை கட்டி அனுப்புவோம்
தமிழர் தாகம் தமிழீழத் தாயகமேயன்றி வடதமிழீழம் ,தென் தமிழீழம் என்ற பிரதேசவாதமல்ல

சர்வதேச தமிழ் மாணவர்களில் ஒருவனாக  
ஈழவன்
<!--QuoteEnd--><!--QuoteEEnd-->பழையதுகளை ஞாபகமூட்டுறியள்..

- Eelavan - 03-12-2004

சரி புதிதாக என்ன பண்ணப் போகிறீர்கள்

- Mathivathanan - 03-12-2004

<!--QuoteBegin-Eelavan+-->QUOTE(Eelavan)<!--QuoteEBegin-->சரி புதிதாக என்ன பண்ணப் போகிறீர்கள்<!--QuoteEnd--><!--QuoteEEnd-->இல்லை.. முந்தி முந்தி நான் சொன்னதுதானே சொல்லுறியள் எண்டு சொன்னன்.. மற்றவனை முன்னுக்குத் தள்ளிப்போட்டு பின்னணியிலை நிக்கிறதுக்கு நான் எப்போதுமே சேர்ப்பில்லையெண்டு சொல்லவந்தன்.
கோபப்படுறியள்போலை.. <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->

- kuruvikal - 03-12-2004

உந்ததாத்தாவுக்கு பிரித்து வேறுபடுத்தி உணரத்தெரியாது....வயது போட்டால் அப்படித்தான் போல....!

<!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :twisted: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

- Mathivathanan - 03-12-2004

<!--QuoteBegin-Mathivathanan+-->QUOTE(Mathivathanan)<!--QuoteEBegin--><!--QuoteBegin-Eelavan+--><div class='quotetop'>QUOTE(Eelavan)<!--QuoteEBegin-->சரி புதிதாக என்ன பண்ணப் போகிறீர்கள்<!--QuoteEnd--><!--QuoteEEnd-->இல்லை.. முந்தி முந்தி நான் சொன்னதுதானே சொல்லுறியள் எண்டு சொன்னன்.. மற்றவனை முன்னுக்குத் தள்ளிப்போட்டு பின்னணியிலை நிக்கிறதுக்கு நான் எப்போதுமே சேர்ப்பில்லையெண்டு சொல்லவந்தன்.
கோபப்படுறியள்போலை.. <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--><!--QuoteEnd--></div><!--QuoteEEnd--><!--QuoteBegin-kuruvikal+-->QUOTE(kuruvikal)<!--QuoteEBegin-->உந்ததாத்தாவுக்கு பிரித்து வேறுபடுத்தி உணரத்தெரியாது....வயது போட்டால் அப்படித்தான் போல....!<!--QuoteEnd--><!--QuoteEEnd-->நீங்கள் பட்டமும் குடுத்து முத்திரையும்குத்தி பிரிச்சுப் பார்க்கிறதுக்கு ஒட்டில்லையெண்டு சொல்லுறன் குருவிகாள்..
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->

- Sangili - 03-12-2004

தலைவர் கருணாவிற்கு மன்னிதது மறுவாழ்வு கொடுப்பதாக தமிழ்ச்செல்வன் அனறு பேட்டியில் சொல்லியிருநதாரே..
பிறகெதற்கு உண்ணாவிரதம்?

- kuruvikal - 03-12-2004

இல்ல தலைவரை தரையிறக்கி தான் அங்க குந்த வேணுமாம்...இயக்கத்தை அமெரிக்காவுக்கும் இந்தியாவுக்கும் விக்க வேணுமாம்....!

:twisted: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :roll:

- Mathivathanan - 03-12-2004

<!--QuoteBegin-Sangili+-->QUOTE(Sangili)<!--QuoteEBegin-->தலைவர் கருணாவிற்கு  மன்னிதது மறுவாழ்வு கொடுப்பதாக தமிழ்ச்செல்வன் அனறு பேட்டியில் சொல்லியிருநதாரே..
பிறகெதற்கு உண்ணாவிரதம்?<!--QuoteEnd--><!--QuoteEEnd-->சட்டத்திருத்தம் பேமணன்ரோ தெரியேல்லை.. அது கிடக்கட்டும் விஷயத்துக்கு வருவம்..

நீங்கள் கேள்விப்படேல்லையே.. ஏதோ 5 அம்சக் கோரிக்கை நிறைவேற்றப்படவேணுமாம்..

http://www.yarl.com/forum/profile.php?mode...ewprofile&u=125

அது சரி இப்பிடி ஒரு தரவும் குடுக்காமல் எப்படி உள்ளுக்கு புகுந்தியள்.. ரகசியத்தை ஒருக்கா சொல்லுங்கோவன்..
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->

- kuruvikal - 03-12-2004

தாத்தா என்ன அமெரிக்கா பற்றி உச்சரிச்ச உடன நழுவுறியள்....!

:twisted: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> :roll:

- Mathivathanan - 03-12-2004

உதையெங்கை நான் பார்த்தன்.. என்னவெண்டாலும் உப்பிடி அமெரிக்கா.. இந்தியாவெண்டு போஸ்ரர் அடிச்சு ஒட்டியும் பிரயோசனமில்லாமல் கிடக்கே.. ஏன்..?
அவங்கடை போஸ்ரறுக்கு சாணி அடிச்சும் ஒண்டும் ஒட்டுதில்லையே.. அதுதான் எனக்கும் விளங்குதில்லை..
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->

- kuruvikal - 03-12-2004

நாங்களும் நாளைக்கு உண்ணாவிரதம் இருக்கப் போறம்....எமது ஐந்தம்சக் கோரிக்கை வருமாறு...!

1.கருணா உன் சுயநலத்துக்காய் தமிழரின் குருதியில் நீச்சல் அடிக்காதே...மலேசிய நீச்சல் தாடகம் காத்திருக்கிறது நீச்சல் அடிக்க...!

2.கருணா உடனடியாக புலிகளிடம் சரணடை...உன் சுய தேவைக்காக பிடித்து வைத்துள்ள போராளிகளை விடுதலை செய்....!

3.மக்களைக் கட்டாயப்படுத்தி உனக்கு ஆதரவென்று காட்ட அவர்களை சித்திரவதை செய்யாதே....!

4.பத்திரிகைகளை கொழுத்தாதே....தமிழ்மக்கள் ஆயுதங்கள் உனது வீட்டுச் சொத்தல்ல....! அவற்றைத் தேசிய தலைவரிடம் ஒப்படை....!

5.சொந்த மக்களையும் மண்ணையும் அந்நியருக்கு விலை பேசாதே....நீ எமக்குச் செய்த இவ்வளவும் போதும்....இதோடு நிறுத்து....!

:twisted: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

- TMR - 03-12-2004

<!--QuoteBegin-->QUOTE<!--QuoteEBegin-->
தலைவர் கருணாவிற்கு மன்னிதது மறுவாழ்வு கொடுப்பதாக தமிழ்ச்செல்வன் அனறு பேட்டியில் சொல்லியிருநதாரே..  
பிறகெதற்கு உண்ணாவிரதம்?
<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
எல்லாம் செய்தாச்சு(தாய்நாட்டுக்கு முழுத்துரோகம் (தாயை விற்றதற்க்கு சமம்) தலைமைக்கு துரோகம் சேர்ந்திருந்த போராளிகளுக்கு துரோகம் பத்திரிகைகளையும் விடவில்லை அதையும் கொழுத்தியாச்சு சேரவேண்டியங்களோடை எல்லாம் சேந்தாச்சு!!!! இனி என்ன இந்த உண்ணாவிரதம் மட்டும் தானே அதையும் கொச்சைப்படுத்வேணும் இல்லையோ !!!!அதையும் செய்தால் போச்சு(ஏனென்டால் தமிழ்மக்கள் எதையெல்லாம் மதிக்கிறமோ அதையெல்லாம் நாத்தி அடிக்கனும் தானே என்னனனனனனனன!!!! கனநாளைக்கு இல்லை நான் தப்பா சொல்லலையப்ப தன்வினை தன்னைச்சுடும்ம்ம்ம்ம்ம்ம்!!!!!!
<!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->

- Sangili - 03-12-2004

யாரோ வன்னியிலிருந்து தமிழ் வெப்றேடியோக்கு கடிதம் எழுதியிருக்கிறார்கள்.அதில் ஒரு வசனம்..நல்லவேளை துரோகிகள் எல்லோரும் தலைவர் இருக்கும்போதே தோன்றிவிட்டார்கள் என..

இருக்கும்போதே இந்த கூத்து என்றால்....

- vasisutha - 03-12-2004

<b>தனக்குத்தானே மண்ணை வாரியெறியும் கருணா ?</b>

கருணாவின் தமிழஅலை பத்திரிகையானது கருணா சொல்வதை அப்படியே பிரதிபண்ணி வெளியிடும் பத்திரிகை மட்டுமல்ல. இலங்கை ஒலிபரப்புசேவைக்கு நிகரான பொய்ப்பிரச்சாரத்திலும் ஈடுபட்டு வருவது கண்கூடு. சந்திரிகா அரசு மக்கள் மீது வன்முறையை அவிழ்த்து விட்டு இல்லையென உலகின் முன் சத்தியம் செய்வதும் , பாடசாலைகள் , தேவாலயங்கள் மீது குண்டுவீசிக்கொன்றுவிட்டு புலிகளை அழித்தேன் என மார்தட்டுவது போல கருணாவும் தனக்கு ஆதரவாக தனது பத்திரிகா தர்மத்தை நிலைநிறுத்துகிறார். இதற்குள் புலம்பெயர்ந்தோர் , தென்தமிழீழ மக்கள் அனைவரையும் தனக்கு ஆதரவாக்காட்டியிருப்பது வேடிக்கையான விந்தையாகும். இவரது துரோகத்தனத்தைப் புரிந்து கொள்ளாத சில அப்பாவிகள் இவரது புழுகுத்தனத்தை உண்மையென நம்பி தமது ஆதரவினை வழங்குகிறார்கள். அண்மையில் இவரது சிறைப்படுத்தலிலிருந்து வெளியேறித் தப்பியோடிய போராளிகள் இவரது திருகுதாளத்தைப் புரிந்து கொண்டு வெளியேறியதை இந்த அப்பாவிகள் புரிவதற்கு நியாயமில்லை.

தமிழ்அலையைத் தனக்கான பிரச்சார ஊடகமாகப்பயன்படுத்தும் கருணா தமிழ்அலை பத்திரிகைக்கு 50 மேற்பட்ட போராளிகளைக்காவலுக்கு நிறுத்தி அங்கு வேலைசெய்வோரையும் தனது கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்டு தான் சொல்வதைச் செய்ய வேண்டும் என்ற பணிப்பில் அந்தப்பணியாளர்களையெல்லாம் திறந்த சிறைக்கதவுகளுக்கு மத்தியில் வைத்திருப்பது பத்திரிகா தர்மத்துக்கு எந்த வகையில் உடன்பாடு ?

அண்மையில் பீபீசியில் பேட்டி கொடுத்த கருணா கரிகாலனின் மனைவி யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர். அதைவிட அவர் வருத்தக்காறி எனவேதான் நான் கரிகாலனை வன்னிக்கு அனுப்பியதாக சொல்லியிருந்தார். இவரது சகோதரனான றெஜி மற்றும் இன்னும்பல தளபதிகள் யாழ்ப்பாணத்தில்தான் திருமணம் செய்துள்ளார்கள். அப்படியிருக்க இவர் அப்படியொரு தகவலைச் சொன்னது நியாயமானதாக ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

றெஜி சகோதரனுக்காக கருணாவுடன் நிற்கிறார். அவரது யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த மனைவியும் 3பிள்ளைகளும் வன்னியில் இருக்கிறார்கள். றெஜி அவர்களை வன்னியில் விட்டுள்ளார். றெஜியின் நிலை உண்மையிலேயே வேதனையானது. ஏனெனில் சகோதரனுக்காக தாயகத்துக்குத் துரோகம் செய்வதா ? தனது மனைவி 3பிள்ளைகளுக்ககா வன்னி செல்வதா என்ற இக்கட்டில் இருந்தும் சகோதரனுடன் நிற்கிறார். கருணாவின் கூற்றுப்படி பார்த்தால் கருணாவின் மைத்துனியான றெஜியின் மனைவிக்கும் வருத்தம் என்பதாலா வன்னியில் இருக்கிறார் ? இதையெல்லாம் கருணாவுக்கு யார் புரியவைக்கப் போகிறார்கள் ???

கருணாவின் பிரதேசவாதத் து}ண்டலானது நாளுக்கு நாள் பல்வேறு வடிவங்களில் வெளிவந்து கொண்டிருக்கின்றதை கருணாவின் பிரச்சாரங்களும் , தகவல்களும் உலக , இலங்கை ஊடகங்களிலும் வெளியாகிக்கொண்டிருக்கும் இவ்வேளையில் எமது தமிழ் ஊடகங்களும் கருணாவை முக்கியப்படுத்தி அவரிடம் செவ்வியெடுத்து ஒலிபரப்புவது மிகுந்த வேதனை தரும் விடயமாகும். ஆயினும் இந்தப்பிரிவினைவாதத்தைத் தமக்குச் சாதகமாக இலங்கை அரச ஊடகங்கள் , ஐரோப்பியாவிலிருந்து வரும் ரீபீசி ஆகியன பயன்படுத்திக் கொள்வதை நண்பர்களின் தகவல்கள் உறுதிசெய்கின்றன.

தலைவரின் காலத்திலேயே இப்படியான துரோகம் வெளிவந்ததையிட்டு ஓரளவு ஆறுதலடைய முடிகிறது. ஏனெனில் இன்னொரு துரோகி கருணாவின் உருவாக்கத்தை நமக்கு இல்லாமல் இருக்க எங்கள் தலைவர் காப்பாற்றுவார் தைரியத்தை நமக்குத் தந்திருக்கிறது. இந்த தைரியத்தில்தான் கருணா தன்னைத்தலைவனாகக் காட்டிக்கொண்டிருக்கும் மட்டு - அம்பாறை மாவட்டத்திலிருந்த போராளிகள் , தளபதிகள் வன்னிக்குப் போனார்கள். இதைப்புரியாத கருணா தன்னையே பெருந்தலைவனாகவும் இல்லாத விடயங்களையெல்லாம் து}க்கியெடுத்து தனக்குத்தானே மண்ணை வாரியிறைப்பது எதற்காக ?

TAMILWEBRADIO.COM

- sOliyAn - 03-12-2004

ஈழவன் மிக விபரமாக அறிக்கை வெளியிட்டுள்ளார்.. அதிலுள்ள கருத்துகளுடன் நான் உடன்படுகிறேன்.

- vasisutha - 03-13-2004

இன்றைய நிலைப்பாடுகள் தொடர்பாக நேற்று ஊடகவியலாளர்களுக்கு, சு.ப.தமிழ்ச்செல்வன், கரிகாலன், விஷேட தளபதி ரமேஷ் மற்றும் தளபதிகள் வழங்கிய நேர்காணல்(12.03.04)

http://www.eelavision.com/audio/press20040312.smil

அவுஸ்திரேலிய தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்துக்கு - விடுதலைப் புலிகளின் கிழக்குப் பிராந்திய மூத்த தளபதி கரிகாலன் அவர்கள் வழங்கிய நேர்காணல்(13.03.04)
நன்றி: www.atbc.net.au

http://www.atbc.net.au/audio/Karikalan_Mar04.ram

thanks to : TAMILNAATHAM.COM