Yarl Forum
கருணாவின் செயலும் அந்நிய சக்திகளின் பங்கும்...??! - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3)
+--- Forum: செய்திகள் : தமிழீழம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=12)
+--- Thread: கருணாவின் செயலும் அந்நிய சக்திகளின் பங்கும்...??! (/showthread.php?tid=7337)



கருணாவின் செயலும் அந் - kuruvikal - 03-12-2004

[b]<span style='font-size:23pt;line-height:100%'>கருணாவின் பின்னணியில் இந்தியாவும், அமெரிக்காவும் இருப்பதாக சந்தேகம் </span>


[b]தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முன்னாள் தளபதி கருணாவினால் தோற்றுவிக்கப்பட்டிருக்கும் பிரச்சனையுடன் இந்தியாவும், அமெரிக்காவும் தொடர்புபட்டிருப்பதாக விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்கள் சந்தேகம் தெரிவித்துள்ளதாக இந்தியாவிலிருந்து வெளிவரும் ஹிந்துஸ்தான் ரைம்ஸ் சஞ்சிகை செய்தி வெளியிட்டுள்ளது.

உறுதியான நிதியுதவிகளோ, கட்டமைப்பு வசதிகளோ இல்லாமல் கருணாவினால் இவ்வாறு திட்டமிட்டுச் செயற்பட்டிருக்க முடியாது என்று விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்கள் கருதுவதாகத் தெரிவித்திருக்கும் அச்சஞ்சிகை, வெளிச்சக்தி ஒன்றின் உதவியில்லாமல் கருணா இவ்வாறு செயற்பட்டிருக்க முடியாது என அவர்கள் உறுதியாக நம்புவதாகவும் குறிப்பிட்டிருக்கின்றது.

மட்டக்களப்பில் அண்மையில் ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டமை தொடர்பாக அமெரிக்கா தனது கண்டனத்தை வெளியிட்ட அதேசமயம், கருணா தனது நடவடிக்கையையும் ஆரம்பித்ததைச் சுட்டிக்காட்டும் இவர்கள், திட்டமிட்டே இந்தச் சதி முயற்சிகள் இடம்பெற்றிருப்பதாக இவர்கள் கருதுவதாகவும் ஹிந்துஸ்தான் ரைம்ஸ் தனது செய்தியில் தெரிவித்துள்ளது.

அமெரிக்காவுக்கு கிழக்கு மாகாணம் மீதான அக்கறை நீண்டகாலமாகவே இருந்து வந்தமையும், திருகோணமலை துறைமுகம் மீது அது கொண்டிருக்கும் அக்கறை மற்றும் சிறிலங்காவின் வான்தளங்களை சுதந்திரமாகப் பயன்படுத்துவதற்கு அமெரிக்கா எடுத்த முயற்சிகள் என்பவற்றையும் விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்கள் இத்தருணத்தில் இணைத்து நோக்குவதாகவும் ஹிந்துஸ்தான் ரைம்ஸ் குறிப்பிட்டுள்ளது.

விடுதலைப் புலிகள் இயக்கத்தை பிளவுபடுத்தும் இந்தச் சதிமுயற்சியில் அயல்நாடான இந்தியாவின் பங்கு தொடர்பாகவும் இவர்கள் கூடுதல் சந்தேகம் கொண்டிருப்பதாகவும் ஹிந்துஸ்தான் ரைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.


நன்றி புதினம் ...!


[b]இது குறித்து தமிழ்மக்கள் சிந்திக்கவும் அவதானத்துடன் நடந்து தகுந்த நேரத்தில் எடுக்கும் காத்திரமான முடிவுகள் மூலம் அந்நிய சக்திகளின் முயற்சிகளை முறியடிக்கவும் வேண்டும்....!

அமெரிக்க வழமையான நரித்தனக் கொள்கையின் கீழ் தான்... அமெரிக்கா... ஒரு நாட்டுக்குள் கால் பதிக்க நினைத்தால் முதலில் குறிப்பிட்ட நாட்டில் குறிப்பிட்ட பகுதியில் தனக்குச் சார்பான சக்தி ஒன்றை என்ன விலை கொடுத்தும் வாங்கிவிட்டுத்தான் உள் நுழையும்...அசைக்க முடியாதிருந்த தமிழர் தேசிய தலைமையின் கீழ் உள்ள புலிகளின் பலம் பலவீனம் அறியா முடியாது தவித்த அமெரிக்கக் கழுகுக்கு கருணா எனும் சுண்டெலி கண்ணில் பட்டிருக்கிறது....அச்சுண்டெலி கொண்டு...தமிழரின் பெக்கிசத்தை அறியவும் நாசம் பண்ணவும் தனது நலனைக் காக்கவும் இம்முயற்சிகளோ.....???!

(இதே போன்ற தந்திரத்தையே குர்திஸ் போராட்ட அமைப்புக்களை ,PKK உள்ளடங்கலாக...சிதைக்கவும் குர்திஸ்தானின் எல்லைகளை தனக்கு வேண்டியவர்களுக்கு திருப்திப்படுத்தும் வகையிலும் வேண்டாதவர்களுக்கு வெறுப்பூட்டும் வகையிலும் மாற்றி அமைக்கப் பயன்படுத்தியது...பயன்படுத்துகிறது......!

அதேவேளை முக்கியமாக குறிப்பிட்ட குர்திஸ் இயக்கங்களில் நிகழ்ந்த பிளவால் உருவான பலவீனங்களை அமெரிக்க ஏகாதபக்தியம் தனது தேவைக்காக ஈராக் ஆக்கிரமிப்பின் போதும் பயன்படுத்தி இருந்தது)


சமீபத்தில் தாத்தா குர்திஸ்தான் தொடர்பில் இங்கு பிரஸ்தாபித்திருந்தார்....எனவே தாத்தா யார்....????????! அதை ஏன் திடீர் என்று கொண்டு வந்தார்....????! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :roll: