| Welcome, Guest |
You have to register before you can post on our site.
|
| Forum Statistics |
» Members: 8,982
» Latest member: lucilegr4
» Forum threads: 9,058
» Forum posts: 83,244
Full Statistics
|
| Online Users |
There are currently 147 online users. » 0 Member(s) | 144 Guest(s) Applebot, Bing, Google
|
| Latest Threads |
±ôÀÊ ÀÈ¢ì¸Ä¡õ
Forum: நகைச்சுவை
Last Post: UsArgum
01-10-2026, 09:07 AM
» Replies: 28
» Views: 10,289
|
Mrs.Sirimao Bandaranayake
Forum: நகைச்சுவை
Last Post: GeraTep
11-14-2025, 10:46 AM
» Replies: 14
» Views: 3,228
|
Farty time
Forum: நகைச்சுவை
Last Post: ㄹㅈㄷㄹㅈ
08-26-2025, 03:48 PM
» Replies: 11
» Views: 5,603
|
கனவே கலைகிறதே
Forum: பொழுதுபோக்கு
Last Post: KULAKADDAN
04-30-2006, 06:37 PM
» Replies: 0
» Views: 6,288
|
Karuna Cadres were captur...
Forum: பிறமொழி ஆக்கங்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:17 PM
» Replies: 4
» Views: 8,620
|
என்ன நடந்தது யாழிற்கு?
Forum: உங்கள் கருத்துக்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:03 PM
» Replies: 42
» Views: 31,046
|
முடியுமானால் முயற்ச்சியுங...
Forum: போட்டிகள்
Last Post: Subiththiran
04-30-2006, 05:00 PM
» Replies: 15
» Views: 14,456
|
**சுடேக்கு** புதிர் விளைய...
Forum: போட்டிகள்
Last Post: kavithaa
04-30-2006, 04:30 PM
» Replies: 63
» Views: 38,471
|
புல்மோட்டையில் தாக்குதல்
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: Sriramanan
04-30-2006, 04:10 PM
» Replies: 2
» Views: 8,022
|
போதனை வேண்டாம்! பு...
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: alika
04-30-2006, 03:13 PM
» Replies: 4
» Views: 6,238
|
|
|
| கத்தோலிக்க திருச்சபையில்இரு பெண் பாதிரிமார் நியமனம் |
|
Posted by: Mathan - 03-11-2004, 08:03 PM - Forum: செய்திகள்: உலகம்
- Replies (4)
|
 |
கத்தோலிக்க திருச்சபையில்இரு பெண் பாதிரிமார் நியமனம்
கத்தோலிக்க திருச்சபை நிர்வாகத்தில் பெண்களுக்கு சம உரிமை கொடுப்பதை நோக்காகக் கொண்டு 2 பெண் பாதிரிமார்களை ஆலோசனை சபைக்கு பாப்பரசர் அருளப்பர் சின்னப்பர் நியமித்துள்ளார்.
கத்தோலிக்க திருச்சபை நிர்வாகத்தில், ஆண்கள் மட்டுமே ஈடுபட்டு வருகின்றனர். பாப்பரசரும் பாதிரியார்கள் திருச்சபை நிர்வாகத்தை கவனிப்பதை ஆதரித்து வந்தார். ஆனால் முற்போக்கான சில கத்தோலிக்க பெண்கள், பெண்களையும் பாதிரிமார்களாக நியமிக்க வேண்டும் என்றும், அவர்களுக்கும் நிர்வாகத்தில் பங்கு கொடுத்தால் நன்றாக இருக்கும் என்றும் வலியுறுத்தினர்.
அவர்களின் கோரிக்கையை நிறைவேற்றும் வகையிலும் நிர்வாகத்தில் பெண்களுக்குச் சம உரிமை கொடுக்கும் வகையிலும் பெண் பாதிரிமார்களை வத்திக்கன் ஆலோசனை சபைக்கு ஆலோசகர்களாக போப்பாண்டவர் நியமித்தார்.
மிகச் செல்வாக்கான சர்வதேச தியாலஜிக்கல் கமிஷன் எனப்படும் சபைக்கு ஆலோசகர்களாக 2 பெண்கள் நியமிக்கப்பட்டனர்.
சிக்காகோவில் உள்ள புனித மேரி பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த சகோதரி சாரா பட்லர், சுவிஸ் நாட்டில் உள்ள பிரிபர்க் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பார்பரா ஹாலன்ஸ்லே பென் என்ற 2 பெண் பாதிரியார்கள் நியமனம் பெற்றுள்ளனர்.
பெண்களுக்கான தடை அகன்றதாக வாடிகனில் உள்ள மூத்த நிர்வாகி ஒருவர் கூறினார். பெண் பாதிரியார் நியமனத்துக்கு சர்வதேச மகளிர் தினத்துக்கும் சம்பந்தம் கிடையாது. ஏனெனில் வத்திக்கன் நிர்வாகத்தில் பெண், ஆண் என்ற வேறுபாடு இருந்தது கிடையாது என்றும் குறிப்பிட்டார்.
நன்றி - வீரகேசரி
|
|
|
| நேரம் கிடைத்தால் சிந்திக்க ... |
|
Posted by: Mathan - 03-11-2004, 03:21 PM - Forum: தத்துவம் (மெய்யியல்)
- Replies (54)
|
 |
Egoism
நேற்று நடந்த நிகழ்ச்சி, வாழ்க்கையில் சில கொள்கைகள் சிறந்தது என்று நாம் கடைப்பிடிப்பது எத்தனை தவறா, சரியா என்று யோசித்துக்கொண்டிருக்கிறேன். நேற்று நண்பர் ஒருவர், அவர் மனைவி மேல் விவாகரத்துக்கு அப்ளை செய்திருக்கிறார். அவளும் எனக்கு நன்கு அறிமுகமானவள். சில வருடங்களாய் அவர்களுக்குள் நிலைமை சரியில்லை என்று தெரிந்தாலும் அவனை சந்திக்கும் தருணங்களில் அவன் இதை பற்றி ஒன்றும் சொல்லவில்லை. பிறர் விஷயங்களில் நாம் மூக்கை நுழைக்கக்கூடாது என்ற கொள்கையால் நாங்களும் கேட்கவில்லை.நன்குதெரிந்தவர்களே தவிர நண்பர்கள் இல்லை.
பத்து நாட்களுக்கு முன்பு அவன் கோர்ட்டு தீர்ப்புப்படி மூன்று வருஷத்திற்கு பிறகு குழந்தையை சந்திக்கப் போக போவதாகவும், எங்கள் இருவரை வர முடியுமா என்றும் கேட்டான். நாங்கள் இருவருக்கும் தெரிந்தவர்கள் என்பதால் ஏதாவது பேசிப்பார்ப்போம் என்று சரி என்றோம். காரில் புறப்படும் போதுதான், அவன் தன் பக்கத்து ஞாயத்தை சொல்லிக்கொண்டு வந்தான். நான் அவன் மனைவியிடம் பேசி பார்க்கட்டா, சமாதானத்தில் உங்களுக்கு விருப்பமா என்றுக் கேட்டேன். அவனும் சரி என்றான். அங்குப் போனவுடன், அவளே குழந்தை( ஐந்து வயது)யுடன் வந்திருந்தாள். என்னைப் பார்த்தவுடன் குசலம் விசாரித்தவள், அவன் குழந்தையை தூக்கியவுடன், அவள் அழுகையுடன் மடமடவென்று அங்கிருந்துப் போய் விட்டாள். இரண்டரை வயதில் பார்த்த குழந்தை, ஐந்தரை வயதில் தந்தையை மறக்கவில்லை. ஆனால் அதன் முகத்தில் ஆழ்ந்தகவலை, யோசனை. கொஞ்சம் அன்ஈஸியாய் இருந்தது. ஐந்து மணி நேரம் அங்கு இருக்க வேண்டும். நாங்கள் இருவரும் அவர்களை விட்டுவிட்டு அந்த பெண் அங்கு எங்காவது இருக்கிறாளா என்று சுற்றி வந்தோம். ஆனால் இல்லை. போட்டோ மற்றும் வீடியோவில் அவர்கள் இருவரையும் படம் எடுத்துக் கொண்டு அந்த பார்க்கில் இருந்தோம். நேற்று வெள்ளிக்கிழமை, அதனால் காலை பதினொன்றரை மணிக்கு எல்லா கடைகளும் சாத்திவிடுவார்கள். குழந்தை கேட்டதற்கு பதில் அளித்துக்கொண்டு இருந்தது. ஆனால் தந்தைக் கொண்டு வந்த ஏராளமான பரிசுகள், தின்பண்டங்கள் எதையும் தொட மறுத்துவிட்டது.
இரண்டு மணி நேரம் கழித்து, அதன் முகத்தைப் பார்த்து அம்மாகூட பேச வேண்டுமா என்று கேட்டேன். அதுவும் ஆமாம் என்றது.
எங்கள் மொபலில் இருந்து பேச சொன்னேன். பிறகு நான் வாங்கி எப்படி இருக்கிறாய் என்றதும், அந்தப் பெண் விட்டேற்தியாய் பேசினாள். நான் ஏன் மடமடவென்று போய்விட்டாய், நான் உன்னுடந்தான் பேச வந்தேன் என்றேன். அதற்கு அவள் சொன்னது- இவ்வளவுநாள் எங்கே இருந்தாய்? எல்லாம் முடிந்த பிறகு இப்போது பேசி என்ன பயன் என்றாள். எவ்வளவு சரி, அவள் சொன்னது. பிறர் விஷயம் என்று ஒதுங்கியிருந்தது எவ்வளவு தப்பு என்று மன வேதனை அடைந்தேன். நீங்கள் இருவரும் ஒன்றும் சொல்லாததால், நாங்கள் கேட்கவில்லை. ஏதாவது கேட்கப்போய், இது எங்கள் சொந்த விஷயம், நீங்கள் யார் தலையிட என்று சொல்லலாம் இல்லையா என்றேன். பிறகு அவள் பக்கத்து ஞாயத்தை ஆரம்பித்தாள். ஒரு மணி நேரம் கேட்டுக்கொண்டிருந்தேன்.
அவள் சொன்னதை இவனிடம் சொல்லும்போது ஒன்று தெளிவாய் புரிந்துப்போனது. யாரும் எதுவும் செய்ய முடியாது. இருவரும் தங்கள் ஈகோவை விட்டுவிட்டு, குழந்தைக்காக ஏதாவது செய்தால்தான் உண்டு. இதில் இரண்டு பக்க பெற்றோர்களின் கைங்கரியம்தான் அதிகம். இருவருக்கும் மூட்டிவிட்டதே இந்த இரண்டு வயதான அப்பாக்கள்தான். அதை எடுத்து சொன்னால் இருவரும் ஒத்துக்கொள்ளவில்லை. அவர்களே தான் முடிவு எடுக்கவேண்டும்.நடுவில் ஒருவரால் எதுவும் செய்யவும் முடியாது என்பது மட்டும் எங்களுக்கு தெளிவாய் புரிந்தது. தன் குழந்தைதனத்தை இழந்து கவலையுடன் அந்த ஐந்து மணி நேரத்தை
கழித்த அந்த குழந்தையின் முகம் கண்ணைவிட்டு அகல மறுக்கிறது
நன்றி - இராமச்சந்திரன் உஷா
குறிப்பு - எனக்கு ஈகோவுக்கு (Ego) தமிழ் தெரியவில்லை. யாராவது தெரிந்தால் சொல்லுங்கள். நன்றி
|
|
|
| கருணாவின் துரோகம்...ஒரு நோக்கு...! |
|
Posted by: kuruvikal - 03-11-2004, 12:48 PM - Forum: செய்திகள் : தமிழீழம்
- No Replies
|
 |
இன்று தமிழ் மக்கள் மத்தியில் மட்டுமல்ல, அரசியல் நோக்கர்கள், ஆய்வாளர்கள் மத்தியில் உள்ள பிரதானமான கேள்வி கருணா ஏன் இவ்வாறு நடந்து கொண்டார் என்பதே. அதாவது யுத்த நிறுத்தம் அமுலில் உள்ள போதும் தமிழ் மக்கள் தமது தேசிய எழுச்சியை வெளிப்படுத்தும் நோக்கிலும் தேர்தல் ஒன்றை எதிர்கொண்டுள்ள வேளையில் சர்வதேச சமூகம் அதன் முடிவை எதிர்பார்த்துள்ள நிலையிலும் கருணா அவற்றிற்கு மாறாக ஏன் இவ்வாறு நடந்து கொண்டுள்ளார் என்பதேயாகும்.
கருணா குறிப்பிடுவது போன்று மட்டு-அம்பாறை மாவட்டங்கள் புறக்கணிக்கப்பட்டதனால் இத்தகையதொரு நிலைப்பாட்டை மேற்கொண்டார் என்பது ஏற்றுக்கொள்ளத்தக்க வாதமல்ல. அதுவுமல்லாது மட்டு-அம்பாறை மாவட்டங்கள் தமிழீழத் தேசியத் தலைமையினால் புறக்கணிக்கப்பட்டதாக ஒரு பேச்சுக்குத்தான் வைத்துக் கொண்டாலும் கூட கருணா தனது எதிர்ப்பை வெளிப்படுத்துவதற்கு இக்காலப் பகுதி தேர்ந்தெடுக்கப்பட்டது ஏன்?
அண்மையில் அவரால் மட்டு-அம்பாறை மாவட்டத்திற்கென ஏதாவது கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டனவா? அன்றி மட்டு-அம்பாறை மாவட்டத்திற்கு பாதகமான நடவடிக்கைகள் எதையாவது விடுதலைப் புலிகளின் தலைமை மேற்கொண்டதா? அவ்வாறு எதுவும் நிகழ்ந்ததாக இல்லை. இதேவேளை தமிழீழத் தேசியத் தலைவர் ஆயிரம் போராளிகளை அனுப்புமாறு கோரியமையே முரண்படுவதற்கும், பிரிந்து செல்வதற்குமான காரணியெனக் கருணா கூறுவது எந்தளவு பொருத்தப்பாடானது.
ஒரு புறத்தில் தற்பொழுது யுத்தமோ, யுத்தத்திற்கான தயாரிப்புகளோ எவையுமே நடைபெறுவதாக இல்லை. இந்நிலையில் போராளிகளை அனுப்புமாறு கோரினார் என்பதோ, வடக்கில் போரிட போராளிகளை அனுப்பப்போவதில்லை என்பதோ பொருத்தப்பாடானதொன்றல்ல. அவ்வாறு அனுப்புவதற்கு தான் விரும்பவில்லை என்றால் கூட அதனை உரிய முறையில் அல்லவா வெளிப்படுத்தியிருத்தல் வேண்டும்.
இதேவேளை ஒரு விடுதலை இயக்கமாயினும் சரி ஒரு நாட்டு இராணுவமாயினும் சரி போராளிகளையும் துருப்புக்களையும் ஒருங்கிணைப்பதும், போரிடுவதும், யுத்த தந்திரோபாயத்தின் பாற்பட்டதே யொழிய பிராந்திய ரீதியிலான பொறுப்பானவர்களின் விருப்பு வெறுப்பின்பாற்பட்டதல்ல.
அதுமாத்திரமல்ல எதிரிகளை எங்கோ ஒரு பகுதியில்-எமக்குச் சாதகமானதொரு களமுனையில் தோற்கடிப்பதன் மூலம் ஒட்டுமொத்தமானதொரு வெற்றியை தேடிக்கொள்வதே இராணுவ ரீதியிலான மதிநுட்பமாகும். இந்த வகையில் வடக்குப் போர் முனையென்றால் என்ன? கிழக்குப் போர் முனையென்றால் என்ன? படைகளை ஒருங்கிணைப்பதும் தாக்குதல்களை மேற்கொள்வதும் வெற்றியைத் தேடிக்கொள்வதுமே பொருத்தப்பாடான தந்திரோபாயமாக இருக்க முடியும்.
~ஐயசிக்குறு| இராணுவ நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டபோது சிறிலங்கா இராணுவத்தின் போரிடும் ஆற்றலுள்ள சகல டிவிசன் படைகளும் யுத்த முனையில் பயன்படுத்தப்பட்டன. குறிப்பாக 53,54,55,56 வது டிவிசன்களுடன் 52 வது டிவிசனும் பயன்படுத்தப்பட்டது. இந்நடவடிக்கையில் விடுதலைப் புலிகளை முறியடித்து விட்டால் விடுதலைப் போராட்டமே முடிவிற்குக் கொண்டுவந்து விடப்படும் என்பது அவர்களது தீர்மானமாகும். இதேவேளை அவரை எதிர்த்துப் போரிட்ட விடுதலைப் புலிகளும் அதை ஒத்த குறிக்கோளே இருந்தது. ஐயசிக்குறு நடவடிக்கைகளில் சிறிலங்கா இராணுவத்தை தோற்கடித்தால் அதை ஒரு போரிட முடியாத இராணுவமாக முடக்க முடியும் என்பதே புலிகளின் எதிர்பார்ப்பாகும். இந்நிலையில் விடுதலைப் புலிகளின் படையணிகளும் வடக்கு-கிழக்கு எங்குமிருந்தே திரட்டப்பட்டன.
ஒட்டுமொத்தத்தில் இந்நடவடிக்கையானது இரு தரப்பினரதும் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் ஒன்றாகவே இருந்தது. இதில் யார் வெற்றி பெறுகின்றனரோ அவர்களுக்கு இராணுவ ரீதியிலான மேன்மை கிடைப்பது தவிர்க்கப்பட முடியாத தொன்றாகவே இருந்தது. இவ்வாறே புலிகளின் இராணுவ மேலாண்மை உயர்ந்தது. இதேவேளை இவ் இராணுவ ரீதியிலான மேலாண்மை என்பது தனியாக வடக்கிற்கோ-கிழக்கிற்கோ என்பதல்ல. தமிழர் தாயகப் பகுதி; எங்குமேயாகும்.
எடுத்துக்காட்டாக இன்று கருணா தனது கட்டுப்பாட்டில் இருப்பதாகக் கூறிக்கொள்ளும் மட்டக்களப்பு-அம்பாறைப் பகுதிகள் அங்கு போரிட்டுப் பெறப்பட்ட வெற்றிகளால் கிடைக்கப் பெறவில்லை. ரிவிரெசவிற்கெனவும், ஐயசிக்குறுவிற்கெனவும் இராணுவம் தனது படைகளைத் திரட்டியபோது அங்கு ஏற்பட்ட இடைவெளிகளினால் பெறப்பட்டதாகும். ஒருவகையில் ~ஐயசிக்குறு| முறியடிப்பால் கிடைக்கப்பெற்ற பலாபலனாகும்.
ஆகையினால் போரில் வடக்கிற்காகப் போரிட்டதாகவோ, கிழக்கிற்காகப் போரிட்டதாகவோ கூறிக்கொள்ளுவதென்பது தவறு. தமிழர் தாயகத்திற்காகப் போரிட்டோம். அதில் வடக்கிலும் கிழக்கிலுமாக பெரும்நிலப்பரப்பு எமது கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் கொண்டு வரப்பட்டது என்பதே உண்மை. இதைவிடுத்து தமிழர் தாயகத்திற்காகப் போரிட்டு மடிந்த மாவீரர்களை பிரதேச வாதத்திற்குள் கருணா உட்படுத்த முற்படுவதாவது அவரின் வரட்டுத்தனமான சிந்தனையையும் குறுகிய நோக்கிலான அணுகுமுறையையுமே எடுத்துக்காட்டுவதாயுள்ளது.
அடுத்ததாக இன்று தமிழ் மக்கள் தமது தேசிய எழுச்சியை சர்வதேசத்தின் முன் நிரூபிப்பதற்காக முற்பட்டுள்ள ஒரு காலகட்டமாகும். இதற்கென தமிழ் மக்கள் அனைவரும் ஒன்றுதிரண்டு தமிழ்த் தேசிய எழுச்சியை வெளிப்படுத்துவதற்கு எதிர்வரும் ஏப்ரல் 2ம் திகதி நடைபெறவுள்ள தேர்தலை பயன்படுத்திக்கொள்ள முற்பட்டு நிற்கும் வேளையாகும். இதற்கு வடக்கு-கிழக்கிற்கு அப்பால் வாழும் மக்களையும் அணிதிரட்டுவதற்காக சிறியளவிலாயினும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதுமுண்டு.
இக்காலப் பகுதியில் தமிழ்த்தேசிய எழுச்சிக்கு ஊறுவிளைவிக்கும் நடவடிக்கைகளை யார் மேற்கொண்டாலும் அது தமிழ்; இனத்திற்கு துரோகம் இழைக்கும் நடவடிக்கையாகவே கொள்ளத்தக்கதாகும். இத்தகையதொரு சூழ்நிலையில் கருணா தமிழ்த் தேசியத்தை பாதிக்கத்தக்க வகையில் நடந்துகொண்டது ஏன்? மட்டு-அம்பாறை மக்களின் பெயரால் தமிழ்த் தேசியத்துக்கு அவர் விளைவிக்கும் குந்தகம் மட்டு-அம்பாறை தமிழ் மக்களுக்காயினும் நன்மை பயக்கத்தக்கதா?
கருணாவின் தற்போதைய நடவடிக்கைகளுக்கு அடிப்படையில் இருக்கக் கூடிய காரணிகள் இரண்டு மட்டுமே.
1. அவர் விடுதலைப் புலிகள் அமைப்பின் ஒழுங்கு விதிகளுக்கு மாறான வகையில் நடவடிக்கைகளை மேற்கொண்டிருத்தல் வேண்டும்.
2. தமிழ்த் தேசிய வாதத்திற்கெதிரான உள்நாட்டு வெளிநாட்டு சக்திகளுக்கு அவர் விலைபோயிருத்தல் வேண்டும்.
கருணாவின் செயலுக்கு இவ்விரண்டு காரணிகளில் ஏதாவது, ஒன்றாகவும் இருக்கலாம், சிலவேளை இரண்டுமே ஒருமித்த நிலையில் இணைந்ததாகவும் இருக்கலாம். கருணாவை பொறுப்பிலிருந்து நீக்குவது தொடர்பான தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைமைச் செயலக அறிக்கையானது கருணாவிற்கு பின்னால் சில தீய சக்திகள் இருப்பதாகத் தெரிவிக்கின்றது. ஆயினும் எவரையுமே, எந்த நாட்டையுமோ அது சுட்டிக்காட்டவில்லை.
ஆயினும், கருணாவின் செயலுக்கு சிறிலங்கா ஆட்சியாளர்களில் ஒரு தரப்பின் குறிப்பாக, சனாதிபதி சந்திரிகாவின் தரப்பின் ஆதரவு இருப்பதாகவே ஊகிக்க முடிகிறது. எடுத்துக்காட்டாக, சனாதிபதியின் கட்டுப்பாட்டிலுள்ள ஊடகத்துறை கருணாவிற்கு கொடுக்கும் முக்கியத்துவம் மற்றும் விடுதலைப் புலிகளுக்கும், தமிழ் மக்களுக்கும் இடையில் குழப்பத்தை ஏற்படுத்தும் வகையில் வெளியிடும் தகவல்கள் இதனையே வெளிக்காட்டுவதாய் உள்ளது.
கருணாவின் பின்னால் உள்ள தீய சக்திகள் அவை உள்நாட்டு சக்திகளாக இருப்பினும் சரி, வெளிநாட்டு சக்திகளாக இருப்பினும்சரி தற்பொழுது அவை இத்தகையதொரு நகர்விற்குச் சென்றதற்குக் காரணம் என்ன? அதாவது யுத்தம் ஓய்ந்துள்ள நிலையில் சமாதானப் பேச்சுவார்த்தைகள் நடைபெறலாம் என்ற நிலையிலும் இத்தகையதொரு குழப்பத்தை ஏற்படுத்தி வடக்கு-கிழக்கின் ஸ்திர நிலையை குழப்பியதற்கு வேண்டி தேவைதான் என்ன?
இங்குதான் ஏப்ரல் 2ம் திகதி நடைபெறவுள்ள தேர்தல் முக்கியத்துவம் பெறுகின்றது. இத்தேர்தலானது நிச்சயம் தமிழ் மக்களின் தேசிய எழுச்சியினை வெளிப்படுத்தும் ஒன்றாக அமையும் என பரவலாக எதிர்பார்க்கப்பட்டது. அதுமட்டு மல்ல, இத்தேர்தலானது சிறிலங்கா அரசாங்கத்தைத் தீர்மானிக்கும் வலுவைத் தமிழருக்குக் கொடுக்குமெனவும் அரசியல் நோக்கர்களால் எதிர்வு கூறப்பட்டது.
ஆனால் இவை எவையுமே சிறிலங்கா சிங்கள பௌத்த பேரினவாத சக்திகளுக்கோ தமிழ் மக்களின் உரிமைப் போராட்டத்திற்கு எதிரான நிலைப்பாட்டைக் கொண்ட வெளிநாட்டுச் சக்திகளுக்கோ உவப்பானதாக இருக்கவில்லை.
தமிழரின் தேசிய எழுச்சியை மழுங் கடித்துவிட அவர்கள் ஏற்கனவே மேற்கொண்ட முயற்சிகள் தோல்வியடைந்துள்ள நிலையில் புதியதொரு முயற்சியை அவர்கள் மேற்கொண்டிருக்கலாம். இதற்கு அவர்கள் கருணாவின் பலவீனங்களைப் பயன்படுத்திக்கொண்டிருக்கலாம்.
அடுத்ததாக விடுதலைப் புலிகள் தரப்பிலிருந்து கருணா புலிகள் இயக்கத்தின் ஒழுங்கு கட்டுப்பாட்டு விதிகளை மீறியுள்ளார் எனக் குற்றச்சாட்டுத் தெரிவிக்கப்பட்டுள்ளதேயொழிய எந்தவகையில் அவை மீறப்பட்டன என்ற தகவல்கள் வெளியிடப்படவில்லை. ஆனால், தம்மீதான குற்றச்சாட்டுக்கள் எத்தகையவை என்பது அவரால் அறியப்பட்டதாகவே இருக்கும். ஏனெனில் தான் இழைத்த குற்றங்கள் அவரால் அடையாளங் காணத்தக்க வகையில் விடுதலைப் புலிகள் அமைப்பை நன்கே அறிந்து கொண்டிருந்தவராவார்.
இந்நிலையில் தான் தலைமைப்பீடத்தின் அழைப்பை ஏற்று அவர் வன்னிக்குச் செல்லத் தயாராக இருக்கவில்லை. தனது கட்டுப்பாட்டை மீறிய செயல்கள், குற்றச் செயல்கள் என்பனவற்றை மூடிமறைக்கும் வகையில் உணர்ச்சிகர மானதொரு விடயத்தை கையில் எடுத்துக்கொண்டுள்ளர். ஆனால் இது எந்த வகையிலும் மட்டு-அம்பாறை மக்களுக்கு நன்மை பயக்கத்தக்கதல்ல.
கருணாவின் தற்போதைய நடவடிக்கையானது தமிழீழத் தேசியத் தலைமைக்கும், விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கும் இழைக்கப்பட்ட துரோகம் என்பது வெளிப்படையானது. அதாவது இயக்கத்தின் கட்டுப்பாடுகள், ஒழுங்கு விதிகள் என்பனவற்றை மீறியதோடு மட்டுமல்ல பல பாதிப்புக்களையும் விளைவிக்கத் தக்கதொன்றாகவே அமையத் தக்கதாகும்.
இதில் குறிப்பாக, தமிழீழத் தேசியத் தலைமையை ஏற்றுப் போராட்டத்தில் இணைந்த போராளிகளை தேசியத் தலைமைக்கு எதிரான கிளர்ச்சிக்குப் பயன்படுத்த முற்படுவதானது அப்பட்டமான துரோகத்தனம் மட்டுமல்ல மோசடியும் கூட. அதுமட்டுமல்ல தமிழீழத் தேசியத் தலைமை மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கென வழங்கிய பெருமளவிலான ஆயுதத் தளபாடங்கள் தமிழ் மக்களின் நலனுக்கு எதிராகவே பயன்படுத்த முற்படுவதானது மன்னிக்க முடியாத குற்றமாகும்.
அத்தோடு கருணாவின் நடவடிக்கையானது தனியாக விடுதலைப் புலிகளுக்கு இழைக்கப்பட்ட துரோகம் மட்டுமல்ல. தமிழ் தேசியத்திற்கும் இழைக் கப்பட்ட துரோகமாகும். அதாவது ஐக்கியப்பட்டு தமிழ்த் தேசிய எழுச்சியை மக்கள் வெளிப்படுத்த முற்பட்டுள்ள இவ்வேளையில் பிரதேச வாதத்தை கிளப்பியதன் மூலம் மக்கள் மத்தியில் பிரிவினையையும் வேறுபாட்டையும் ஏற்படுத்த மேற்கொண்டிருந்த முயற்சியாகவே கொள்ளத்தக்கது.
ஆனால் விடுதலைப் புலிகளுக்கும், தமிழ்த் தேசியத்திற்கும் இழைத்த துரோகங்கள் ஒருபுறமிருக்க மட்டு-அம்பாறை மக்களுக்கு இவர் இழைத்துள்ள துரோகமானது மிகவும் உயர்வானது. மட்டு-அம்பாறை மக்கள் தங்கள் பலமே விடுதலைப் புலிகள் தான் என நம்பிக்கொண்டிருக்கையில் விடுதலைப் புலிகளைப் பலவீனப்படுத்தும் நோக்கில் மேற்கொண்டுள்ள நடவடிக்கையானது மட்டு-அம்பாறை மக்களை பெரியளவில் பலவீனப்படுத்தும் ஒரு நடவடிக்கையாகவே உள்ளது.
அதாவது கருணா மட்டு-அம்பாறை மக்களை புறக்கணிப்பதாகக் கூறிக் கொண்டு தற்பொழுது மேற்கொண்டுள்ள நடவடிக்கையானது மட்டு-அம்பாறை மக்களை அப்பிராந்தியத்திலேயே பலவீனமானதொரு நிலைக்குத் தள்ளியுள்ளது. அரசியல் - இராணுவ ரீதியில் இப்பலவீனம் வெளிப்படுவது தவிர்க்க முடியாததாகவே இருக்கும்.
எடுத்துக்காட்டாக ஏப்ரல் 2இல் நடைபெறவுள்ள தேர்தலில் மட்டு. தேர்தல் மாவட்டத்தில் நான்கு ஆசனங்களையும் அம்பாறை மாவட்டத்தில் இரண்டு ஆசனங்களை கைப்பற்றுவதற்கு முயற்சிக்க வேண்டும் என்ற உறுதிப்பாட்டுடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு களமிறங்கியது. ஆனால் தற்பொழுது கடந்த தேர்தலில் கிடைத்த ஆதாரங்களையே (மட்டு-03, அம்பாறை-01) தக்கவைத்துக் கொள்வதற்கே பெரும்முயற்சி மேற்கொள்ள வேண்டிய நிலையைக் கருணாவின் நடவடிக்கை தோற்றுவித்துள்ளது.
இராணுவ ரீதியில் பெறப்பட்டிருந்த பலம் கருணாவின் செயலால் சிறிதளவிற்கேனும் பாதிப்பிற்கு உள்ளாகலாம் என்பது நிராகரிக்கப்பட முடியாததே. ஒருபுறத்தில் போராளிகள் மனச் சோர்வு, உற்சாகமின்மை என்பனவும், மறுபுறத்தில் போராளிகள் விடுதலைப் போராட்டத்திலிருந்து ஒதுங்குதல் அதிகரித்த போக்கிலானதாக இருப்பதற்கும் வாய்ப்புண்டு.
இந்த வகையில் கருணாவின் துரோகமானது விடுதலைப் புலிகள் அமைப்பிற்கு மட்டுமல்ல தமிழ்த் தேசியத்திற்கும், மட்டு-அம்பாறை மாவட்ட தமிழ் மக்களுக்கும் செய்த துரோகமாகவே கொள்ளத்தக்கதாகும். மாறாக சிங்களப் பேரினவாத சக்திகளுக்கும், தமிழ் மக்களின் உரிமைக்கான போராட்டத்திற்கு எதிரான சக்திகளுக்கு தமிழ் மக்களின் போராட்டத்தைக் காட்டிக் கொடுத்ததாகவுமே இருக்கும்.
நன்றி...ஈழநாதம் மற்றும் தமிழ்நாதம்...!
|
|
|
| ஸ்பெயினில் (Spain) குண்டு வெடிப்பு...! |
|
Posted by: kuruvikal - 03-11-2004, 12:26 PM - Forum: செய்திகள்: உலகம்
- Replies (1)
|
 |
<img src='http://newsimg.bbc.co.uk/media/images/39876000/gif/_39876314_south_east_madrid_416map.gif' border='0' alt='user posted image'>
குண்டு வெடிப்பு நடந்த இடங்கள்...!
<img src='http://newsimg.bbc.co.uk/media/images/39875000/jpg/_39875742_train_ap203body.jpg' border='0' alt='user posted image'><img src='http://newsimg.bbc.co.uk/media/images/39875000/jpg/_39875754_police_victim_ap203body.jpg' border='0' alt='user posted image'>
ஸ்பெயின் தலைநகரில் உள்ள முக்கியமான புகையிரத நிலையத்திலும் மற்றும் அதன் அருகிரு இன்னும் இரண்டு புகையிரத நிலையங்களிலும் மக்கள் அதிகமாக கூடும் நேரத்தில் நடந்த பயக்கரக் குண்டு வெடிப்புக்களில் நூற்றுக்கும் அதிகமான மக்கள் இறந்துள்ளதுடன் பல நூற்றுக்கணக்கானோர் காயமடைந்தும் உள்ளனர்...! இதை ஸ்பெனில் இயங்கும் ஈடா (Eta) எனும் தீவிரவாத அமைப்பே செய்திருக்க வேண்டும் என்று ஸ்பெயின் அரசு கருத்து வெளியிட்டுள்ளது...!
ஈராக் சண்டையில் அமெரிக்க சார்ப்புப் படைகளுடன் ஸ்பெயின் படைகளும் இருக்கின்றன என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது....! சில தரப்புக்கள் இது Eta வின் வேலை இல்லை என்றும் இதன் பின்னணியில் வெளிநாட்டு சக்திகள் இருக்கலாம் என்றும் கருதுகின்றன...!
Thanks BBC.com...!
|
|
|
| கவிஞர் த.சரீஷின் 'விடியலின் முகவரி'! |
|
Posted by: sOliyAn - 03-11-2004, 12:07 AM - Forum: நிகழ்வுகள்
- Replies (15)
|
 |
13.3.2004 மாலை 2.30மணிக்கு பாரிஸில் கவிஞர் த.சரீஸின் 'விடியலின் முகவரி' எனும் நூலின் வெளியீட்டு விழா இனிதே நிகழ வாழ்த்துகிறேன். மேலும், மேற்படி நூலுக்கு ஆதரவளிப்பதன் மூலம் ஒரு கவிஞனின் வளர்ச்சிக்கு உறுதுணை நிற்கவேண்டும் எனச் சகலரையும் கேட்டுக்கொள்ளுகிறேன்.
|
|
|
| கடைத்தேங்காய் |
|
Posted by: Mathan - 03-10-2004, 10:26 PM - Forum: நகைச்சுவை
- Replies (12)
|
 |
தான் அறியாச் சிங்களம்... - விஜயாலயன்
"தான் அறியாச் சிங்களம், தன் பிடரிக்குச் சேதம்". இது எங்கள் நாட்டில் வழக்கிலுள்ள ஒரு பழமொழி. தனக்குத்தெரியாத ஒரு வேலையைச் செய்ய ஆரம்பிக்கும் ஒருவரை எச்சரிக்கப் பயன்படுத்தும் ஒரு பழமொழியாகவே இதனைப் பயன்படுத்துவார்கள். இந்தப் பழமொழிக்குப் பின்னால் சுவையான (உண்மையில் சோகமான) ஒரு கதையிருக்கக்கூடும் என்று சிறுவயதில் நான் யோசித்ததுண்டு. கவுண்டமணியிடம் செந்தில் உதைபடுவதை நகைச்சுவையாக பார்த்துப்பழகியதால் யாரோ பிடரியில் அடி வாங்கியிருந்தாலும் அதுவும் நகைச்சுவை என்றே சிந்தித்திருக்கிறேன்.
ஆனால் பின்னாளில் என் பிடரிக்கே சேதம் வரக்கூடும் என்று நான் நினைத்துப் பார்த்ததேயில்லை.
சிங்களவர்களின் ஊரான களுத்துறையில் பிறந்தாலும் ஒரு வயதிலேயே யாழ்ப்பாணத்திற்கே திரும்ப வேண்டியேற்பட்டதால் வீட்டில் எனக்கு மட்டும் சிங்களத்தில் கதைக்கத் தெரியாதிருந்தது. ஆனாலும் மொழிகளைத் தெரிந்திருப்பது நல்லது என்று எனது அப்பா சிங்கள எழுத்துக்களைச் சொல்லிக்கொடுத்தார். பத்தாம் வகுப்பு முடிந்தவுடன் ஒரு சிங்கள வகுப்பிற்குப் போய் பாலர்வகுப்பு சிங்களப்புத்தகங்களை படித்தேன். பள்ளிக்கூடத்தில் எனது வகுப்பில் எனக்கு மட்டுமே மூன்று மொழிகளையும் (தமிழ், ஆங்கிலம், சிங்களம்) எழுதத் தெரியுமென்ற புளுகத்தில் கிடைத்த இடத்திலெல்லாம் மூன்று மொழிகளிலும் எழுதிக்கொள்வேன்.
காலம் மாறி கொழும்பிற்கு வந்து மொரட்டுவைப் பல்கலைக்கழகத்தில் சேர்ந்தபோது, சக தமிழ் மாணவர்களிலும் பார்க்க எனக்குக் கொஞ்சம் அதிகமாகவே சிங்களம் தெரியுன்று ஒரு அசட்டுத் தைரியம் என்னுடன் ஒட்டிக்கொண்டது. அப்பொழுது நான் கல்கிசையில் இருந்த அண்ணா வீட்டில் தங்கியிருந்தேன்.
ஒரு நாள் முடிவெட்ட வேண்டுமென்று வீட்டிலிருந்து வெளிக்கிட்டேன். சிங்களம் ஒழுங்காகக் கதைக்கக்கூடிய அப்பா அல்லது அண்ணாவுடன் போயிருக்கலாம். ஆனாலும் எனக்குத்தான் சிங்களம் அதிகம் தெரியும் என்ற நினைப்பு இருந்ததே.
நடந்துபோய் கல்கிசைச்சந்தியிலிருந்த சலூனுக்குள் புகுந்துவிட்டேன். முடிவெட்டுபவர்கள் எல்லாரும் வேலையாக இருந்தார்கள். அதுவும் நல்லதுக்குத்தான் என்று நினைத்துக்கொண்டு ஓரமாக ஒரு கதிரையில் இருந்துகொண்டேன். ஊர் ஞாபகத்தில் பத்திரிகை படிக்கலாமென்று சுற்றிப்பார்த்தால் தமிழ்ப் பத்திரிகைகள் ஒன்றையும் காணவில்லை. சரி, உட்கார்ந்திருக்கும்போது முடிவெட்டுபவருக்கு என்ன சொல்ல வேண்டுமென்று யோசிக்க ஆரம்பித்தேன். நான் படித்த பாலர்வகுப்புச் சிங்களப்புத்தகங்களில் முடிவெட்டுவது பற்றிய வசனங்கள் எதுவுமே படித்திருக்கவில்லை என்பது அப்போதுதான் ஞாபகத்திற்கு வந்து பயமுறுத்தியது. நைசாக வீட்டிற்கு திரும்பிப் போய்விடலாமோ என்று நினைத்தால், வீட்டில்தான் முடிவெட்டப்போகிறேன் என்று சொல்லிப்புறப்பட்டு விட்டு "மொழி தெரியாததால் முடிவெட்டவில்லை" என்று சொல்லித்திரும்ப தன்மானம் இடங்கொடுக்கவில்லை.
ஒருவழியாக தலைமயிருக்கு "ஹிச கெச" என்றும் வெட்டுவதற்கு "கபன்ன" என்றும் ஞாபகத்திற்கு வந்தது. கொஞ்சம் தைரியம் வந்துசேர்ந்தது. "ஹிச கெச கபன்ன ஓன" (தலைமயிர் வெட்ட வேண்டும்) என்று மனதிற்குள் உருப்போட்டுக்கொண்டேன். எனது முறை வந்ததும் "வாடிவென்ன" (உட்காருங்கள்) என்றதும் போய் உட்கார்ந்துகொண்டேன். "கொண்டய கபன்ன ஓனத" என்று கேட்டார் முடிவெட்டுபவர். இதென்ன கொண்டையில்லாத என்னைப்பார்த்து 'கொண்டையை வெட்டவா' என்று கேட்கிறாரே என்று யோசித்ததில் அவருக்கு கண்பார்வை சரியில்லையோ என்ற சந்தேகம் வந்தது. "நா, நா. ஹிச கெச கபன்ன ஓன" என்றேன் நான்.
***
கொண்டய கபன்ன ஓனத - முடி வெட்ட வேண்டுமா, பேச்சு வழக்கில் ("ஹிச கெச கபன்ன ஓன" யாரும் சொல்வதில்லை)
நா - இல்லை
***
குழப்பம் அங்கேதான் தொடங்கியது. முடிவெட்டுபவர் என்னை ஒரு மாதிரிப் பார்த்தார். இதென்னடா இவன் என்னைப்பார்த்து முழிக்கிறான், ஒரு வேளை அவரும் சிங்களம் சரியாகத் தெரியாத தமிழனோ என்று யோசித்தேன். ஆனாலும் விடக்கூடாது அவருக்கு எனது சிங்களப்புலமையை காட்டத்தான் வேண்டுமென்று முடிவெடுத்தேன்.
அந்த நபர் அடுத்ததாக ஏதோ சிங்களத்தில் கேட்டார். முடியை எப்படி வெட்டவேண்டுமென்று கேட்கிறார் என்று மட்டும் விளங்கியது. சிறுவயதிலிருந்தே தலைமுடியை கொஞ்சம் நீளமாகவே வைத்திருந்து பழகியதால் (ஒரு முறை குட்டையாக வெட்டி பரீட்சை மண்டபத்தில் மேற்பார்வையாளர் எனது அடையாள அட்டையில் இருப்பது யாரென்று குடைந்தது தனிக்கதை), கொஞ்சமாக வெட்டினால் போதும் என்று தெரிந்த சிங்களத்தில் ஏதோ சொன்னேன். முடிவெட்டுபவரில் ஏற்பட்டிருந்த வெறுப்பாலும் உண்மையில் அப்போது எனக்கு சிங்களம் அவ்வளவாகத் தெரிந்திருக்காததாலும் என்ன சொன்னேன் என்பது இப்போது ஞாபகத்திலில்லை.
துணியால் போர்த்திவிட்டு முடிவெட்டும் இயந்திரத்தைக் கையிலெடுத்தார். அவர் எந்த அடியை இயந்திரத்தில் பொருத்தினார் என்பதை நான் கவனிக்கவில்லை. எனது தலையின் இடதுபக்கத்தில் சதிசெய்ய ஆரம்பித்தார் அந்த முடிவெட்டுபவர். நான் என்ன ஏது என்று யோசிப்பதற்குள் கற்றை கற்றையாக முடி வெட்டப்பட்டுவிட்டது. இனிமேல் சொல்லி என்ன, வெட்டிய முடியை திரும்ப ஒட்டவா முடியும், என்று பேசாமலேயே இருந்துவிட்டேன். தான் அறியாச் சிங்களம், தன் பிடரிக்குச் எப்படிச் சேதமாகும் என்பது அப்போதுதான் சரியாக விளங்கியது. கொஞ்சம் வெட்டச்சொல்வதாக நினைத்து கொஞ்சத்தை விட்டுவிட்டு வெட்டச்சொல்லிவிட்டேன் என்பது அப்போதுதான் தெரிந்தது.
வீட்டிற்கு வந்தபோது என்ன இது என்று கேட்டவர்களுக்கு "கொழும்பு ஸ்டைலில வெட்டிப்பார்த்தேன்" என்று சொல்லிச் சமாளித்துக்கொண்டேன்.
ஆனாலும் சூடு கண்ட பூனையாக அந்தச் சம்பவத்தின் பின் இன்றுவரை, சிங்களம் சரளமாகப்பேசமுடிந்த பின்னரும் கூட, முடிவெட்ட சிங்கள சலூன்களுக்குப் போனதேயில்லை. பிடரியை கவனமாக வைத்திருக்க வேண்டும்தானே?
|
|
|
| சூரியனை கரும்புள்ளியாய் வெள்ளி கிரகம் கடக்கும் அரிய நிகழ்வு |
|
Posted by: Mathan - 03-10-2004, 08:51 PM - Forum: விஞ்ஞானம் - தொழில்நுட்பம்
- No Replies
|
 |
சூரியனை கரும்புள்ளியாய் வெள்ளி கிரகம் கடக்கும் அரிய நிகழ்வு
கோல்கத்தா, மார்ச் 11: வானியல் ஆர்வலர்களுக்கு விருந்தாய் அமையக்கூடிய அரிய விண்வெளி நிகழ்வு, 122 ஆண்டுகளுக்குப் பின் வரும் ஜூன் 8-ம் தேதி பகலில் நடக்கவுள்ளது. சூரியனுக்கும் பூமிக்கும் இடையில் சூரியனின் வட்டத் தட்டை வெள்ளி கிரகம் கடந்து செல்லும் நிகழ்வுதான் அது.
பூமியில் விழும் சூரிய ஒளியை மறைத்தபடி, சூரியனுக்கும் பூமிக்கும் நடுவே சந்திரன் கடந்து செல்லும் கிரகணம் போன்றதுவே இதுவும். சந்திரன், பூமிக்கு அருகில் இருப்பதால், பெருமளவில் சூரிய ஒளியை அதனால் தடுக்க முடிகிறது.
ஆனால், வெள்ளி கிரகம் வெகு தொலைவில் இருப்பதால், அது சூரியத் தகட்டைக் கடந்து செல்லும்போது, குண்டூசித்தலை அளவுள்ள கரும்புள்ளி ஒன்று சூரியனுக்குக் குறுக்காகக் கடந்து செல்வதுபோலவே அது காட்சி அளிக்கும்.
இதற்கு முன் 1882-ம் ஆண்டுதான் இதேபோன்ற நிகழ்வு ஏற்பட்டது. எனவே, இப்போது இப் பூமியில் உயிரோடு இருக்கும் யாரும் இந்த நிகழ்வைப் பார்த்திருக்க முடியாது என்று கூறினார், கோல்கத்தா எம்.பி. பிர்லா கோளரங்கத்தின் ஆய்வுப் பிரிவு இயக்குநர் தேவிபிரசாத் தாவ்ரி.
அவர் மேலும் கூறியதாவது:
ஜூன் 8-ம் தேதி காலை 10.44-க்கு சூரியத் தகட்டைக் கரும்புள்ளியாய் வெள்ளி கிரகம் கடக்கத் தொடங்கும். அது 11.03 மணிக்கு, சூரியத் தகட்டின் மீது புள்ளியாய்த் தெளிவாக நமக்குப் புலப்படும். மாலை 4.50-க்கு இந் நிகழ்வு முடிவுக்கு வரும். அதாவது சூரியத் தகட்டை வெள்ளி கிரகம் கடந்து முடித்துவிடும். இக் காட்சியானது ஆசியாவின் பெரும் பகுதி, ஐரோப்பா, ஆப்பிரிக்காவின் பகுதிகள், வளைகுடா நாடுகளில் தெரியும். இதை வெறும் கண்ணால் பார்க்கக் கூடாது. சிறிய தொலைநோக்கி மூலமோ, சூரியப் பிம்பத்தைத் திரையில் பிரதிபலிக்கச் செய்யும் முறையிலோ பார்க்கலாம்.
தொலைநோக்கி கண்டுபிடிக்கப்பட்டபின், 1631, 1639, 1761, 1769, 1874, 1882 ஆகிய ஆண்டுகளில் ""வெள்ளியின் பயணம்'' நடைபெற்றுள்ளது. வானியலறிஞர்கள் ஜெர்மையா ஹராக்ஸ், வில்லியம் கிராப்ட்ரீ ஆகியோர் 1639-ல் இதைக் கண்டு பதிவு செய்த னர்.
நன்றி - தினமணி
|
|
|
| வன்னியில் தமிழரின் புராதன சின்னங்கள் கண்டுபிடிப்பு.... |
|
Posted by: kuruvikal - 03-10-2004, 04:35 PM - Forum: தமிழ் /தமிழர்
- Replies (2)
|
 |
[scroll:dc39cbfde9]<img src='http://www.eelampage.com/images/photos/akaraajan/0012.jpg' border='0' alt='user posted image'><img src='http://www.eelampage.com/images/photos/akaraajan/0013.jpg' border='0' alt='user posted image'><img src='http://www.eelampage.com/images/photos/akaraajan/0014.jpg' border='0' alt='user posted image'><img src='http://www.eelampage.com/images/photos/akaraajan/0015.jpg' border='0' alt='user posted image'><img src='http://www.eelampage.com/images/photos/akaraajan/0016.jpg' border='0' alt='user posted image'><img src='http://www.eelampage.com/images/photos/akaraajan/0011.jpg' border='0' alt='user posted image'> நன்றி...புதினம்.கொம்[/scroll:dc39cbfde9]
[size=16]கிளிநொச்சி அக்கராயன் குள காட்டுப் பகுதியில் <b>3000</b> ஆண்டுகள் வரை தொன்மையான தமிழரின் பெருங்கற் காலத்துக்குரிய கற்குவை ஈமச்சின்னங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
அக்கராயன் குளத்தின் அலைக்கரைப் பகுதியில் உள்ள காட்டுப்பகுதியில் நிலை ஆற்றுக் கரையினில் கற்குவை ஈமச்சின்னங்கள் தொல்லியல் தேடலாளர் ந.குணரட்ணத்தினால் கண்டுபிடிக்கப்பட்டன.
தமிழரின் சடலம் புதைக்கப்பட்டு அதனைச் சூழ முட்டை வடிவில் இடைவெளியில் கற்கள் அடுக்கப்பட்ட ஈமச்சின்னங்கள் கற்குவை ஈமச்சின்னங்களாகும்.
நிலை ஆற்றுக்கரையில் 9 கற்குவை ஈமச்சின்னங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. இதுதவிர இப்பகுதியில் சிறிய தட்டைக்கற்களால் உருவாக்கப்பட்ட கற்றகடு ஈமச்சின்னங்களும் உலோக உருக்கு உலைகளும் இவரால் கண்டுபிடிக்கப்பட்டன.
இவையுடன் 'நாக", 'தட" என்ற சொற்களையுடைய தொல் பிராமி தமிழ் எழுத்துக்களைக் கொண்ட உலோக முத்திரையும் ந.குணரட்ணத்தினால் நிலை ஆற்றுக் கரையில் எடுக்கப்பட்டன.
தமிழர் தாயகப்பகுதியில் மிக அதிகளவில் தொல்பொருட்கள் இங்கே காணப்படுகின்றன. இதற்கு அண்மையாக ஐந்து மைல் தொலைவில் ஆனைவிழுந்தான் தொல்மையம் கண்டுபிடிக்கப்பட்டது. இதன் ஒருதொகுதிப் படங்கள் ஏற்கனவே இத்தளத்தில் வெளியாகின.
நன்றி...புதினம்.கொம்
|
|
|
|