Yarl Forum
சூரியனை கரும்புள்ளியாய் வெள்ளி கிரகம் கடக்கும் அரிய நிகழ்வு - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: அறிவியற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=5)
+--- Forum: விஞ்ஞானம் - தொழில்நுட்பம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=25)
+--- Thread: சூரியனை கரும்புள்ளியாய் வெள்ளி கிரகம் கடக்கும் அரிய நிகழ்வு (/showthread.php?tid=7350)



சூரியனை கரும்புள்ளிய - Mathan - 03-10-2004

சூரியனை கரும்புள்ளியாய் வெள்ளி கிரகம் கடக்கும் அரிய நிகழ்வு

கோல்கத்தா, மார்ச் 11: வானியல் ஆர்வலர்களுக்கு விருந்தாய் அமையக்கூடிய அரிய விண்வெளி நிகழ்வு, 122 ஆண்டுகளுக்குப் பின் வரும் ஜூன் 8-ம் தேதி பகலில் நடக்கவுள்ளது. சூரியனுக்கும் பூமிக்கும் இடையில் சூரியனின் வட்டத் தட்டை வெள்ளி கிரகம் கடந்து செல்லும் நிகழ்வுதான் அது.

பூமியில் விழும் சூரிய ஒளியை மறைத்தபடி, சூரியனுக்கும் பூமிக்கும் நடுவே சந்திரன் கடந்து செல்லும் கிரகணம் போன்றதுவே இதுவும். சந்திரன், பூமிக்கு அருகில் இருப்பதால், பெருமளவில் சூரிய ஒளியை அதனால் தடுக்க முடிகிறது.

ஆனால், வெள்ளி கிரகம் வெகு தொலைவில் இருப்பதால், அது சூரியத் தகட்டைக் கடந்து செல்லும்போது, குண்டூசித்தலை அளவுள்ள கரும்புள்ளி ஒன்று சூரியனுக்குக் குறுக்காகக் கடந்து செல்வதுபோலவே அது காட்சி அளிக்கும்.

இதற்கு முன் 1882-ம் ஆண்டுதான் இதேபோன்ற நிகழ்வு ஏற்பட்டது. எனவே, இப்போது இப் பூமியில் உயிரோடு இருக்கும் யாரும் இந்த நிகழ்வைப் பார்த்திருக்க முடியாது என்று கூறினார், கோல்கத்தா எம்.பி. பிர்லா கோளரங்கத்தின் ஆய்வுப் பிரிவு இயக்குநர் தேவிபிரசாத் தாவ்ரி.

அவர் மேலும் கூறியதாவது:

ஜூன் 8-ம் தேதி காலை 10.44-க்கு சூரியத் தகட்டைக் கரும்புள்ளியாய் வெள்ளி கிரகம் கடக்கத் தொடங்கும். அது 11.03 மணிக்கு, சூரியத் தகட்டின் மீது புள்ளியாய்த் தெளிவாக நமக்குப் புலப்படும். மாலை 4.50-க்கு இந் நிகழ்வு முடிவுக்கு வரும். அதாவது சூரியத் தகட்டை வெள்ளி கிரகம் கடந்து முடித்துவிடும். இக் காட்சியானது ஆசியாவின் பெரும் பகுதி, ஐரோப்பா, ஆப்பிரிக்காவின் பகுதிகள், வளைகுடா நாடுகளில் தெரியும். இதை வெறும் கண்ணால் பார்க்கக் கூடாது. சிறிய தொலைநோக்கி மூலமோ, சூரியப் பிம்பத்தைத் திரையில் பிரதிபலிக்கச் செய்யும் முறையிலோ பார்க்கலாம்.

தொலைநோக்கி கண்டுபிடிக்கப்பட்டபின், 1631, 1639, 1761, 1769, 1874, 1882 ஆகிய ஆண்டுகளில் ""வெள்ளியின் பயணம்'' நடைபெற்றுள்ளது. வானியலறிஞர்கள் ஜெர்மையா ஹராக்ஸ், வில்லியம் கிராப்ட்ரீ ஆகியோர் 1639-ல் இதைக் கண்டு பதிவு செய்த னர்.

நன்றி - தினமணி