Yarl Forum
கத்தோலிக்க திருச்சபையில்இரு பெண் பாதிரிமார் நியமனம் - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3)
+--- Forum: செய்திகள்: உலகம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=14)
+--- Thread: கத்தோலிக்க திருச்சபையில்இரு பெண் பாதிரிமார் நியமனம் (/showthread.php?tid=7342)



கத்தோலிக்க திருச்சபை - Mathan - 03-11-2004

கத்தோலிக்க திருச்சபையில்இரு பெண் பாதிரிமார் நியமனம்

கத்தோலிக்க திருச்சபை நிர்வாகத்தில் பெண்களுக்கு சம உரிமை கொடுப்பதை நோக்காகக் கொண்டு 2 பெண் பாதிரிமார்களை ஆலோசனை சபைக்கு பாப்பரசர் அருளப்பர் சின்னப்பர் நியமித்துள்ளார்.

கத்தோலிக்க திருச்சபை நிர்வாகத்தில், ஆண்கள் மட்டுமே ஈடுபட்டு வருகின்றனர். பாப்பரசரும் பாதிரியார்கள் திருச்சபை நிர்வாகத்தை கவனிப்பதை ஆதரித்து வந்தார். ஆனால் முற்போக்கான சில கத்தோலிக்க பெண்கள், பெண்களையும் பாதிரிமார்களாக நியமிக்க வேண்டும் என்றும், அவர்களுக்கும் நிர்வாகத்தில் பங்கு கொடுத்தால் நன்றாக இருக்கும் என்றும் வலியுறுத்தினர்.

அவர்களின் கோரிக்கையை நிறைவேற்றும் வகையிலும் நிர்வாகத்தில் பெண்களுக்குச் சம உரிமை கொடுக்கும் வகையிலும் பெண் பாதிரிமார்களை வத்திக்கன் ஆலோசனை சபைக்கு ஆலோசகர்களாக போப்பாண்டவர் நியமித்தார்.

மிகச் செல்வாக்கான சர்வதேச தியாலஜிக்கல் கமிஷன் எனப்படும் சபைக்கு ஆலோசகர்களாக 2 பெண்கள் நியமிக்கப்பட்டனர்.

சிக்காகோவில் உள்ள புனித மேரி பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த சகோதரி சாரா பட்லர், சுவிஸ் நாட்டில் உள்ள பிரிபர்க் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பார்பரா ஹாலன்ஸ்லே பென் என்ற 2 பெண் பாதிரியார்கள் நியமனம் பெற்றுள்ளனர்.

பெண்களுக்கான தடை அகன்றதாக வாடிகனில் உள்ள மூத்த நிர்வாகி ஒருவர் கூறினார். பெண் பாதிரியார் நியமனத்துக்கு சர்வதேச மகளிர் தினத்துக்கும் சம்பந்தம் கிடையாது. ஏனெனில் வத்திக்கன் நிர்வாகத்தில் பெண், ஆண் என்ற வேறுபாடு இருந்தது கிடையாது என்றும் குறிப்பிட்டார்.

நன்றி - வீரகேசரி


- kuruvikal - 03-11-2004

பெண்களுக்கான தடை

எல்லோரும் மனிதர்கள் தானே....அதற்காக பெண் ஆணிற்கு எல்லாவிதத்திலும் சமன் அல்ல....! இதைத்தானே எல்லோரும் சொல்லுறாங்க...!

இதைச்சொல்லவா 'பெண்ணியம்'....சகோதரிகளுக்கு விளங்கி இருக்கு சுத்துமாத்து...!

:twisted: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- vasisutha - 03-11-2004

ஆம் குருவி சொல்வது சரிதான் பெண் ஆணிற்கு சமன் அல்ல.
அதே போல் ஆணும் பெண்ணுக்கு சமன் அல்ல.
<!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :roll:


- sOliyAn - 03-12-2004

இது சரி. ஆணுக்கும் பெண்ணுக்கும் தேவைப்படும் உரிமைகள்தானே பிரச்சினைக்குள்ளாகின்றன?!


- kuruvikal - 03-12-2004

உண்மைதான் வசி....அதில் ஒன்றும் மாற்றுக் கருத்து இருக்கமுடியாதே....!

சோழியான் அண்ணா அநேக உரிமைகள் மனிதன் என்ற வகையிலேயே உலகில் வழங்கப்படுகின்றன...ஆண் பெண் என்று தனித்தனியே பிரித்துப் பகுக்கப்பட்டல்ல....ஆனால் பெண்கள் சில விசேட உரிமைகளை பெறுகிறார்கள்....அவை மனித சமூகத்தின் விருத்திக்கும் நலனுக்கும் செழிப்புக்கும் என்று கருதி வழங்கப்படுகின்றன....அதில் தவறில்லை....பெண்களின் பலவீனமும் பலமும் கருத்தில் கொள்ளப்பட்டு அவை வழங்கப்படுகின்றன...ஆனால் ஆணுக்கு அந்த நிலை ஏற்படுத்தப்படவில்லை....அதற்காக பெண்ணோ ஆணோ பலவீனம் அற்றவன் எப்போதும் பலமானவன் என்று உண்மைக்கு மாறாக பேசமுடியுமா....அப்படியான வாதங்களால் யதார்த்தத்திற்கு அவசியமான மாற்றங்களையும் முடிவுகளையும் பெறமுடியுமா.....????!

<!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :twisted: Idea