Welcome, Guest
You have to register before you can post on our site.

Username
  

Password
  





Search Forums

(Advanced Search)

Forum Statistics
» Members: 8,982
» Latest member: lucilegr4
» Forum threads: 9,058
» Forum posts: 83,244

Full Statistics

Online Users
There are currently 335 online users.
» 0 Member(s) | 332 Guest(s)
Applebot, Bing, Google

Latest Threads
±ôÀÊ ÀÈ¢ì¸Ä¡õ
Forum: நகைச்சுவை
Last Post: UsArgum
01-10-2026, 09:07 AM
» Replies: 28
» Views: 10,289
Mrs.Sirimao Bandaranayake
Forum: நகைச்சுவை
Last Post: GeraTep
11-14-2025, 10:46 AM
» Replies: 14
» Views: 3,228
Farty time
Forum: நகைச்சுவை
Last Post: ㄹㅈㄷㄹㅈ
08-26-2025, 03:48 PM
» Replies: 11
» Views: 5,603
கனவே கலைகிறதே
Forum: பொழுதுபோக்கு
Last Post: KULAKADDAN
04-30-2006, 06:37 PM
» Replies: 0
» Views: 6,288
Karuna Cadres were captur...
Forum: பிறமொழி ஆக்கங்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:17 PM
» Replies: 4
» Views: 8,620
என்ன நடந்தது யாழிற்கு?
Forum: உங்கள் கருத்துக்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:03 PM
» Replies: 42
» Views: 31,046
முடியுமானால் முயற்ச்சியுங...
Forum: போட்டிகள்
Last Post: Subiththiran
04-30-2006, 05:00 PM
» Replies: 15
» Views: 14,456
**சுடேக்கு** புதிர் விளைய...
Forum: போட்டிகள்
Last Post: kavithaa
04-30-2006, 04:30 PM
» Replies: 63
» Views: 38,471
புல்மோட்டையில் தாக்குதல்
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: Sriramanan
04-30-2006, 04:10 PM
» Replies: 2
» Views: 8,022
போதனை வேண்டாம்! பு...
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: alika
04-30-2006, 03:13 PM
» Replies: 4
» Views: 6,238

 
  முத்தத்துக்குத் தடை...!
Posted by: kuruvikal - 03-08-2004, 07:54 PM - Forum: செய்திகள்: உலகம் - Replies (2)

மேற்குலகைப் போல்..... கண்டகண்ட இணையத்தளங்களைப் பார்த்து ...காலம்காலமாய் காத்து வந்த கலாசார பண்பாட்டுக் கோலங்களை வெளிப்படுத்தி வாழ்ந்து வரும் மக்களைக் கொண்ட கீழத்தேயப் பிராந்திய நாடுகளிலும் பெட்டையளும் பொடியளும் பொது இடங்களில் வாய்க்கு வாய் முத்தம் கொடுப்பது நாகரிகம் என்ற போர்வையில் அநாகரிகமாக முளைவிடத் தொடங்கியுள்ளது....!

இதன் ஆபத்தை உணர்ந்து கொண்ட இந்தோனிசிய அரசு பொது இடங்களில் நாயைவிடக் கேவலமாக வாய்க்கு வாய் முத்தமிடுதல் போன்ற கண்றாவிகளை செய்ய தடை விதித்துள்ளதுடன் சட்டத்தை மீறுவோர் மீது கடும் அபராதம் விதிக்கும் சட்டத்தையும் அமுல்படுத்தி உள்ளது....!

இதுமட்டுமல்லாமல்.... மறைத்துச் செய்யக் கூடியதும் அதனால் மற்றவர்களுக்கு தீங்கை விட நம்மை தருவதுமான பல பெட்டை பொடி விடயங்களும் பொது இடங்களில் நடத்தவும் தடை வரவுள்ளது....!
இந்தோனிசியாவில்....! <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->

ஜனநாயக பரப்புரைவாதிகள்...எதில சுதந்திரம் இல்லாட்டிலும் இதில குடுத்திடுவினம்...அப்பதானே அவையின்ர முதலுக்கு மோசம் வராது...மேற்கில போடுற கூத்து....போதுமடா சாமி....! எனிச் சமருக்குச் சொல்லவே வேணும்.....!


BBC.com....!


இப்படியே உலகம் முழுதும் கொண்டுவந்தால் உள்ள சின்னதுகள் இன்னும் கெடாமல் பாதுகாக்கலாம்...லண்டனில் குறிப்பாக பஸ் தரிப்பிடம்...நிலக்கீழ் புகையிரத நிறுத்தங்கள்...இதுகளில் நம்மாக்களும் ...... செய்யினம்.....எல்லாம் பிராந்தி.....வெள்ளைக்காரன் நினைப்பு......நாயவிடக்...கேவலம்......என்று...பெரியவங்கள் சொல்லுறாங்கள்...செய்யுறதை மறைவாச் செய்யலாம்....தானே......ஆர் கேட்கப் போகினம்....நீங்கள் கெட்டால் என்ன அழிந்தால் என்ன.....உள்ள நல்ல சமுதாய விரும்பிகள்...திருந்தி நடப்பாங்கள்...என்று.....நினைக்கினம்....!

:twisted: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> :roll:

Print this item

  படம் சொல்லும் கதை
Posted by: Mathan - 03-08-2004, 02:11 PM - Forum: பொழுதுபோக்கு - Replies (23)

ஹோலி பண்டிகை கொண்டாட்டம் 2004

<img src='http://www.indiavarta.com/gallery/HOLICELEBRATIONS2004/1.jpg' border='0' alt='user posted image'>

தில்லியில் தனது மகன் ஜெயந்த் மற்றும் மகள் பிரதிபாவுடன் ஹோலிப் பண்டிகையைக் கொண்டாடியி துணை பிரதமர் அத்வானி

<img src='http://www.indiavarta.com/gallery/HOLICELEBRATIONS2004/3.jpg' border='0' alt='user posted image'>

அமிதாப் பச்சனின் இல்லத்தில் ஹோலி கொண்டாடிய பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான். அருகில் சமாஜவாதி கட்சிப் பொதுச்செயலர் அமர்சிங். பாலிவுட் நட்சத்திரங்கள் அனைவரும் அமிதாப்பின் மும்பை இல்லமான 'பிரதிக்ஷா'வில் திரண்டு ஹோலிப் பண்டிகையைக் கொண்டாடினர்.

<img src='http://www.indiavarta.com/gallery/HOLICELEBRATIONS2004/8.jpg' border='0' alt='user posted image'>

பாலிவுட் ஸ்டார் அமிதாப்பின் இல்லத்தில் ஹோலி கொண்டாடிய நடிகை மஹிமா சௌத்ரி

<img src='http://www.indiavarta.com/gallery/HOLICELEBRATIONS2004/12.jpg' border='0' alt='user posted image'>

ஹோலிப் பண்டிகையையொட்டி காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியாவுக்கு நெற்றியில் வண்ணமிட்டு வாழ்த்து சொல்கிறார் தொண்டர் ஒருவர்

நன்றி - தினமணி

Print this item

  யாழ் இணையத்தைப்பற்றி இணையத்தில் ஒரு செய்தி
Posted by: Mathivathanan - 03-08-2004, 01:52 PM - Forum: செய்திகள் : தமிழீழம் - Replies (1)

யாழ் இணையத்தளத்தில் தமிழ் அலை நீக்கம்.

யாழ் இணையத்தளத்தில் அறிமுகப்படுத்தப்பட்டு வந்த தமிழ்அலை இணையத்தள முகவரி நீக்கப்பட்டுள்ளது. எனவே இணையத்தள வாசகர்கள் நேரடியாக [url=http://www.' target='_blank'>http://www.<span style='color:red'>*****[/url] என்ற இணையத்தள முகவரியில் அறிய முடியும். மட்டக்களப்பு நிலவரம் குறித்த செய்திகள் அதிகமாகப் பிரசுரிக்கப்படுவதால் இந்த நிலை ஏற்பட்டுள்ளது
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->

**** நீக்கப்பட்டுள்ளது - மோகன்

Print this item

  சுவாரசியமான செய்திகள்
Posted by: Mathan - 03-08-2004, 12:11 PM - Forum: செய்திகள்: உலகம் - Replies (22)

10 ஆண்டுக்குப் பின் ஒரு பலவந்த குளியல்

நைரோபி, மார்ச் 8: மேற்கு கென்யாவில் உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த 52 வயதான நபர் 10 ஆண்டுகளாக குளிக்காமல் இருந்திருக்கிறார்.

இந்நிலையில் அவரது உடலில் இருந்து வீசிய துர்நாற்றத்தைத் தாங்க முடியாமல் அவதிப்பட்டனர் அக்கம்பக்கத்தில் உள்ளோர்.

கடைசியாக ஒரு முடிவெடுத்து 4 பேர் கொண்ட ஒரு குழுவினர் அவரை கயிறு கொண்டு கட்டி வைத்து, ஆடைகளை பலவந்தமாகக் களைந்து பொதுமக்கள் முன்னிலையில் குளிப்பாட்டினர்.

10 ஆண்டு கால அழுக்கு ஆயிற்றே. சோப்பு போட்டால் போகுமா? உடல் முழுவதும் மணலைப் பூசி அழுக்கைச் சுரண்டி, தேய்த்து எடுத்தனராம்.

குளியல் முடிய 4 மணி நேரம் ஆகியதாம்.

இதைப்படிக்கும்போதே "உவ்..வே..' என்று குமட்டுகிறதே. அவரை குளிக்கவைத்த புண்ணியவான்களுக்கு எப்படி இருந்திருக்கும்?

இச்சம்பவத்துக்குப் பின் "புனிதப்பட்ட' அந்த நபருக்கு தினமும் ஒரு முறையாவது குளிக்க வேண்டும் என்ற "ஞானோதயம்' வந்துள்ளதாம். தனிமனிதராக இத்தனை காலம் வாழ்ந்துவிட்ட அவர், இப்போது தனக்கு ஒரு துணை கிடைக்கும் என்று நம்பிக்கையில் உள்ளாராம்.

இத்தகவலை, கென்யா டைம்ஸ் பத்திரிகை வெளியிட்டுள்ளது.

நன்றி - தினமணி

Print this item

  நடப்பு அரசியல்
Posted by: Mathan - 03-08-2004, 10:39 AM - Forum: செய்திகள் : தமிழீழம் - Replies (800)

தமிழ் மக்கள் குழம்பி போயிருக்கும் இந்த நிலைமை தமிழ் கூட்டமைப்பினது வெற்றி வாய்ப்பை பாதிக்குமா? இதற்கு கூட்டமைப்பு என்ன செய்யவேண்டும் என்று நினைக்கின்றீர்கள்?

Print this item

  அதிரடி அரசியல்
Posted by: Mathan - 03-08-2004, 10:00 AM - Forum: செய்திகள் : தமிழீழம் - Replies (3)

<span style='font-size:25pt;line-height:100%'>கருணாவின் இந்த நேரடிதலைமை கோரிக்கை பற்றி என்ன நினைக்கின்றீர்கள்? கிழக்கு மாகாண மக்கள் உண்மையிலேயே புறக்கணிக்கப்படுகிறார்களா? அல்லது தனது சொந்த நலனுக்காக பிரதேசவாதத்தை கிளப்புகின்றாரா?</span>

Print this item

  ஈழச் செய்திகள்
Posted by: vasisutha - 03-08-2004, 05:50 AM - Forum: செய்திகள் : தமிழீழம் - Replies (37)

மட்டக்களப்பிலுள்ள சமூகநல அமைப்பின் பிரதிநிதிகளும் பல்லின மத மற்றும் அறிவுசார் பிரமுகர்களும் அடங்கிய உயர்மட்ட சமாதான தூதுக்குழுவொன்று, மட்டக்களப்பு ஆயர் கலாநிதி அதிவண. கிங்ஸ்லி சுவாம்பிள்ளை, கிழக்குப் பல்கலைக்கழக உபவேந்தர் டாக்டர் எஸ்.ரவீந்திரநாத் ஆகியோரின் தலைமையில் இன்று திங்கட்கிழமை வன்னிக்குச் சென்று, விடுதலைப் புலிகளின் தலைவருடன் தற்போதைய நெருக்கடி குறித்து பேச்சுவார்த்தைகளை நடாத்தவுள்ளனர் என்று தமிழ்நெற் இணையத்தளம் தெரிவிக்கின்றது.

மட்டக்களப்பின் பிரதான தமிழர் தேசிய கூட்டமைப்பின் பிரதிநிதிகள், சமூகநல மற்றும் இன மத அமைப்புக்களின் முக்கிய பிரதிநிதிகள், கல்விமான்கள் இணைந்து மட்டக்களப்பில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடாத்திய உரையாடல்களின் இறுதியில், ஒரு சமாதான நல்லிணக்கக் குழுவொன்று வன்னி சென்று வன்னித் தலைமையுடன் பேசி, கருணா விடயத்தில் ஒரு சுமூகமான முடிவு காண எத்தனிப்பதென்று முடிவுசெய்யப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு மக்கள் தற்போதைய நெருக்கடி விரைவில் அமைதியாகத் தீர்ந்துவிட வேண்டுமென்றே விரும்புகின்றனர், தேசியத் தலைவர் கருணா விடயத்தில் அவரது முடிவை மீள்பரிசீலனை செய்து, சுமூகமான தீர்வொன்றைக் காண்பார் என்று நாம் நம்புகிறோம் என்று விடுதலைப் புலிகளின் மட்டக்களப்பு உறுப்பினர் ஒருவர் தமிழ்நெற்றிற்குத் தெரிவித்துள்ளார். எமது தேசியத் தலைவர், தற்போது அங்கு செல்லும் சமாதான நல்லிணக்கக் குழுவின் வருகையை சாதகமான முறையில் பயன்படுத்துவார் என்று தாம் நம்புவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

தமிழர் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு வேட்பாளர் திரு.சேனாதிராஐh nஐயானந்தமூர்த்தி கருத்துக் கூறுகையில், கருணா தனது கருத்துவேற்றுமைகளைக் களைந்து, தேசியத் தலைவருடன் ஓர் இணக்கப்பாடு காணவேண்டுமென்றே தாம் விரும்புவதாகவும், தற்போதைய நெருக்கடிகள் தேர்தலில் தமிழர்களின் வெற்றியைப் பாதித்துவிடலாம் என்று தான் கவலைப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில், தேசியத் தலைமையுடன் ஓர் இணக்கப்பாடு காணப்படுவதை கருணா விரும்புகிறார் என்று பலரும் எண்ணக்கூடிய விதத்தில், பிபிசி ஊடகத்திற்கு கருணா வழங்கியுள்ள பேட்டியில், தேசியத் தலைவருக்கு தான் என்றும் விசுவாசமாக நடந்து கொள்வதையும், அவருக்கெதிராக எப்போதுமே தான் பேசியதில்லை என்றும், அதைவிட, மட்டக்களப்பு-அம்பாறை பகுதியில் தனக்கு விசுவாசமான போராளிகளும் தானும் தமிழினத்தின் தேசியப் போராட்டத்திற்கு எந்த இழுக்கும் வந்துவிடாதிருப்பதில் தொடர்ந்தும் உறுதியாய் இருப்போம் என்றும் கருத்துக் கூறியுள்ளார்.

நன்றி: தமிழ்நெற்.கொம்

Print this item

  மகிளிர் தினம்
Posted by: Mathan - 03-07-2004, 07:37 PM - Forum: சுமுதாயம் (வாழ்வியல்) - No Replies

மகளிர் தினத்தில் இன்றைய சிந்தனை

இன்று சர்வதேசப் பெண்கள் தினம். தமது உரிமைகளுக்காகவும், சமூக மேன் மைக்காகவும் சர்வதேச பெண்கள் ஒருமித்து குரல் எழுப்பும் உன்னதமான தினம் இன்று. இலங்கைப் பெண்களின் குரலும் சர்வதேச குரலுடன் சங்கமிக்கின்றது.

மனித சமூகத்தின் வளர்ச்சியினூடே பெண்களுக்கான உரிமைகளும், மேன்மைகளும் ஆண் சமூகத்தின் அங்கீகாரத்தினை பெற்றே வருகின்றன. சட்ட ரீதியாகவும், இவ்வுரிமைகள் ஆவணப்படுத்தப்படுகின்றன. ஐக்கிய நாடுகள் சபை, பொதுநலவாய நாடுகளின் அமைப்பு மற்றும் உலகில் உருவாகியுள்ள ஓரணி நாடுகளின் அமைப்புகள் அனைத்துமே சட்டங்கள் இயற்றி, அவற்றை அங்கீகரித்து ஆவணப்படுத்துவதுடன், பிரகடனப்படுத்தி சம்பந்தப்பட்ட நாடுகள் அனைத்தும் அவற்றை தம்தம் நாடுகளில் செயல்படுத்தி வசதிபடுத்த வேண்டும் என பணித்து வருகின்றன.

இலங்கையும் பெண்களின் உரிமைகள் குறித்த சாசனம் அமைத்துள்ளதோடு பாராளுமன்றத்திலும் சட்டரீதியாக சில அம்சங்களுக்கான அங்கீகாரம் பெற்று பெண்கள் சாசனத்தை மேலும் உறுதிப்படுத்தியுள்ளது.

முன்னேற்றகரமான இத்தகைய அம்சங்கள் முன்னெடுக்கப்படுகின்ற போதும் பெண்களுக்கெதிரான வன்முறைகள், உரிமைகள் மறுப்பு என்பன இன்றும் தொடர்கதையாகவே உள்ளன.

இலங்கையின் சனத்தொகையில் 50 விகித மானவர்கள் பெண்கள். இவர்களில் பெரும்பாலானவர்கள் அடுப்பூதுபவர்களாகவே இருந்து குடும்ப விவகாரங்களை முழுமையாக தமது தலை மேல் சுமந்து வாழ்பவர்களாகவே உள்ளனர்.

பெண்களின் கல்வி நிலை அதிகரித்துள்ளது. இதன் காரணமாக மேல் கல்வியினை தொடர்பவர்களும், அலுவலகங்களில் பணிபுரிபவர்களின் தொகையும் கணிசமான அளவு அதிகரித்து வருகின்றது. ஏப்ரலில் நடைபெறும் தேர்தலிலும் பெண்களையும் அதிக அளவில் வேட்பாளர்களாக நியமிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் பெண்கள் அமைப்பிலிருந்து வெளிக்கிளம்பியதால் இத் தேர்தலில் வேட்பாளர்களாக பெண்கள் போட்டியிடும் சூழலும் எழுந்துள்ளது.

இத்தகைய முன்னேற்றங்கள் அனைத்திற்கும் அடிப்படையாக அமைந்தது, பெண்கள் அமைப்புகளின் தோற்றமும், அவர்கள் தெருவிற்கு இறங்கி நடத்திய போராட்டங்களும் தான் எனில் அதுமிகையல்ல.

பெண்கள் அமைப்புகள் குறித்தும், பலவாறான விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்ற போதும் அவர்கள் தொடர்ச்சியாக குரல் எழுப்பியதன் பெறுபேறாக ஏற்பட்ட மாற்றங்கள் உணரத்தக்கவை.

இரு தசாப்த கால யுத்த கால கட்டத்தின் போது வடகிழக்கு பிரதேச பெண்களின் துன்ப துயரங்களுக்கு எதிராகவும், இலங்கை தோட்டத்துறை பெண்கள் அனுபவித்து வரும் துன்ப துயரங்களுக்கு எதிராகவும் இவ்வமைப்புகள் குரல் கொடுத்தே வருகின்றன. இதன் காரணமாக அரசியல் மட்டத்தில் சட்டரீதியான சீர்திருத்தங்கள் உருவாவதற்கும் கல்வி, பொருளாதார உதவி, தொழில் மற்றும் பாலியல் வல்லுறவுகளுக்கான தண்டனைகள் என்பனவற்றை ஏற்படுத்துவதற்கு உந்துசக்தியாக அமைந்தன.

இலங்கையின் இனப்பிரச்சினை தீர்வுக்கான சமாதான பேச்சுவார்த்தைகள் இடம் பெற்ற போது பேச்சுவார்த்தையில் பெண்கள் கலந்து கொள்ளாதது பெரும் குறையாகவே கருதப்பட்டது. பெண்களே போர்காலங்களில் பெரிதும் இன்னலுக்கானவர்கள் என்பதை சகல மட்டத்திலும் சுட்டிக் காண்பிக்கப்பட்டது. குறிப்பாக பெண்கள் இயக்கங்கள் இதனை வலியுறுத்தியதன் விளைவாக பேச்சுவார்த்தைகளில் பங்குபற்றக் கூடியதான பெண்களில் சமாதானக் குழுவொன்றும் அமைக்கப்பட்டது.

சமூகத்தின் ஒரு பகுதியினர் இத்தகைய முன்னேற்றகரமான அம்சங்களில் ஈடுபட்டு வருகின்ற போதும், பெண்களை ஆபாசப் பண்டமாகவே உருவகப்படுத்தும் கலாசார சீரழிவு, திரைப்படம், சஞ்சிகைகள் என்பவற்றில் ஒரு தொடர் கதையாகவே உள்ளது. ஐரோப்பா, ஆபிரிக்கா, ஆசியா என சகல கண்டங்களிலும் இந்நிலையே தொடர்வது துர்அதிஷ்டமே.

ஆன்மிகம், கலாசார விழுமியம் என்பனவற்றுக்கு முதலிடம் வழங்கும் இந்தியா, இலங்கை ஆகிய நாடுகளிலும் இத்தகைய துர் அதிஷ்டமான நிலையேநிலவுகின்றது. இவற்றில் பெண்கள் ஆர்வமுடன் பங்குகொள்வது அதைவிட துர் அதிஷ்டமானது. இன்றைய மகளிர்தின நிகழ்வுகளில் இதற்கு எதிராக குரல் எழுப்புவதும் பெண்கள் அமைப்புகளின் பெரும் பணியாகும்.

நன்றி - வீரகேசரி

Print this item

  என் கண்ணீர்
Posted by: sWEEtmICHe - 03-07-2004, 03:48 PM - Forum: கவிதை/பாடல் - Replies (43)

<b>என் கண்ணீர்</b>

<img src='http://www.geetham.net/photoshow/albums/userpics/15148/sWEEtmICHe%20Crying_Face.gif' border='0' alt='user posted image'>

கவிதை எழுத வேண்டும் என்றேன்,
காதலித்து பார் என்றார்கள்,
காதலித்தேன் கவிதை வந்தது,
கூட கண்ணீரும் வந்தது
காதலித்தால் மட்டும் தான் கவிதை
வரும் என்பது வைரும் சாயம்..
பாதி சிந்தை, பாதி நெஜம் ரெண்டும்
கலந்தது தான் கவிதை!!!
என் சோகம் ,என் குலபம்
என் கவிதை வலிஜை ஒரு புது வடிவு
எடுக்கின்ட்ரத் நான் உங்களுக்கு
எதாவது உதவி செய்ய முடியும் என்றால் ....
அது என் கவிதை மட்டும்....கண்ணீர் துளி..அல்ல Cry Cry

<b>நன்றி
இது என் சொந்த கவிதை
பெண் புலி சுவிற்மிச்சி </b> :roll: :roll:

Print this item

  புதுமைப் பெண்கள்
Posted by: Chandravathanaa - 03-07-2004, 08:45 AM - Forum: சுமுதாயம் (வாழ்வியல்) - Replies (1)

[size=24][b]நசீம் பானு!

<img src='http://www.geotamil.com/pathivukal/naseembano.jpg' border='0' alt='user posted image'>
[b]பாரதம் தந்த புதுமைப் பெண்!

ஒரு தாயின் கண் முன்னாலேயே அவளது வயது வந்த 13 வயது மகள் பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கப்பட்டு உயிருடன் எரித்துப் படுகொலை செய்யப்பட்டால் எப்படியிருக்கும்? மகளது மானத்தைக் காப்பாற்ற முனைந்த அவளது அன்புக் கணவனைக் கண் முன்னாலேயே படுகொலை செய்ததோடு மட்டுமல்ல அவளது மாமா, மாமி என அவளது உறவினர்கள் 24 பேரைப் படுகொலை செய்து ஆற்றினுள் வீசினால் எப்படியிருக்கும்? உங்களில் பலருக்கு 1983இல் நடைபெற்ற இலங்கை இனக்கலவரத்தின் நினைவு உடனடியாக ஞாபகத்தில் வரும். இது போன்ற பல நிகழ்வுகள் அக்கலவரத்தில் நடைபெற்று இலங்கை அரசியல் வரலாற்றினையே அடியோடு மாற்றி வைத்து விட்டன. ஆனால் அது போன்ற பயங்கர நிகழ்வுகளை இந்தத் தாய் இரு வருடங்களுக்கு முன்னர் கோத்ராவில் முஸ்லீம் வெறியர்களால் இந்துக்கள் பயணித்த புகையிரதம் எரிக்கப்பட்டதைத் தொடர்ந்து குஜராத்தில் இந்து வெறியர்களால் அப்பாவி முஸ்லீம் மக்கள் மேல் ஏவி விடப்பட்ட இனக்கலவரத்தில் அனுபவித்திருக்கின்றாள். இன்று இவளுக்குகென்றிருக்கும் உறவுகள் இவளது 13 வயது மகனும், மைத்துனியொருத்தியுமே. இந்தப் படுகொலைகள் நடைபெற்றுக் கொண்டிருந்தபொழுது இவள் ஆஸ்பத்திரியிலிருந்ததால் உயிர் தப்பித்துக் கொண்டாள். ஆனால் ஆஸ்பத்திரியிலிருந்த இவளைப் பார்ப்பதற்காக வந்த இவளது உறவினர்களில் மைத்துனியொருத்தியைத் தவிர அனைவரும் இந்து வெறியர்களால் படுகொலை செய்யப்பட்டார்கள். அந்த அப்பாவியான மைத்துனியோ பலரால் பலர் முன்னிலையில் பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கப்பட்டு, ஆற்றில் தூக்கி வீசப்பட்டாள். இன்று அவள் பிழைத்திருந்தாலும் நடைப்பிணமாக வாழ்ந்து கொண்டிருக்கின்றாள். இவ்வளவும் நடந்து முடிந்திருக்கின்றது குஹராத்தைச் சேர்ந்த நசீம் பானுவின் வாழ்வில்.

இவ்வளவு நடந்தும் நசீம்பானு தன் துணிவினை இழந்துவிடவில்லை. இன்று அவள் நடந்து முடிந்த கொடும் செயல்களுக்காக நீதி வேண்டித் தனது போராட்டத்தைத் தொடங்கியிருக்கின்றாள். இந்தப் படுகொலைகளுக்குக் காரணமான சமூக விரோதிகளைச் சட்டம் தண்டிக்கும் வரையில் இவளது போராட்டம் ஓய்ந்து விடப்போவதில்லை. படுகொலைகளுக்குக் காரணமானவர்கள் வெளியில் சுதந்திரமாகத் திரிந்து கொண்டிருக்கும் பொழுது அரசாங்கம் வருத்தம் தெரிவிப்பதால் எந்தவிதப் பயனுமில்லை. சட்டத்தின் தண்டிப்புக்குப் பின்னால் மட்டுமே அரசின் வருத்தத்துக்கு அர்த்தமிருக்க முடியும் எனக் கூறும் நசீம் பானு இன்று பாரதத்தின் நீதிமன்றத்தில் நம்பிக்கை வைத்து நீதியினை நாடி வழக்குத் தொடர்ந்திருக்கின்றாள். இவள் தனது வழக்கினை வாபஸ் பெறாவிட்டால் இவளது மகனைக் கடத்தப் போவதாகச் சமூகவிரோதிகள் மிரட்டிக் கொண்டிருக்கின்றார்கள். ஆனால் நசீம் பானு தன் உறுதியினை இழந்து விடவில்லை. அவளால் இழப்பதற்கு இனியென்ன இருக்க முடியும்? தனக்கு நீதி கிடைக்குக் வரையில் தான் ஓய்ந்து விடப்போவதில்லை என்று வைராக்கியத்துடன் இருக்கும் நசீம் பானு கடந்த இரு வருடங்களாக பெண்களுக்காகப் பாடுபடும் அரசு சார்பற்ற , இலாப நோக்கற்று இயங்கும் ஸ்தாபனமொன்றில் இணைந்து பாதிக்கப் பட்ட பெண்களின் உரிமைக் குரலாக விளங்கி வருகின்றாள். இவளது போராட்டம் நிச்சயம் வெற்றி பெறும். ஏனெனில் தர்மத்துக்காக நடைபெறும் போராட்டங்கள் இறுதியில் என்றுமே வெற்றியினைத் தான் அடைந்து விடுகின்றன என்பதுதான் வரலாறு நமக்குக் கூறும் பாடம்! [/color]

நந்திவர்மன்
மூலம்: இந்து
nantri - Pathivukal

Print this item