Welcome, Guest
You have to register before you can post on our site.

Username
  

Password
  





Search Forums

(Advanced Search)

Forum Statistics
» Members: 8,982
» Latest member: lucilegr4
» Forum threads: 9,058
» Forum posts: 83,244

Full Statistics

Online Users
There are currently 172 online users.
» 0 Member(s) | 169 Guest(s)
Applebot, Bing, Google

Latest Threads
±ôÀÊ ÀÈ¢ì¸Ä¡õ
Forum: நகைச்சுவை
Last Post: UsArgum
01-10-2026, 09:07 AM
» Replies: 28
» Views: 10,287
Mrs.Sirimao Bandaranayake
Forum: நகைச்சுவை
Last Post: GeraTep
11-14-2025, 10:46 AM
» Replies: 14
» Views: 3,227
Farty time
Forum: நகைச்சுவை
Last Post: ㄹㅈㄷㄹㅈ
08-26-2025, 03:48 PM
» Replies: 11
» Views: 5,603
கனவே கலைகிறதே
Forum: பொழுதுபோக்கு
Last Post: KULAKADDAN
04-30-2006, 06:37 PM
» Replies: 0
» Views: 6,288
Karuna Cadres were captur...
Forum: பிறமொழி ஆக்கங்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:17 PM
» Replies: 4
» Views: 8,620
என்ன நடந்தது யாழிற்கு?
Forum: உங்கள் கருத்துக்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:03 PM
» Replies: 42
» Views: 31,046
முடியுமானால் முயற்ச்சியுங...
Forum: போட்டிகள்
Last Post: Subiththiran
04-30-2006, 05:00 PM
» Replies: 15
» Views: 14,456
**சுடேக்கு** புதிர் விளைய...
Forum: போட்டிகள்
Last Post: kavithaa
04-30-2006, 04:30 PM
» Replies: 63
» Views: 38,471
புல்மோட்டையில் தாக்குதல்
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: Sriramanan
04-30-2006, 04:10 PM
» Replies: 2
» Views: 8,022
போதனை வேண்டாம்! பு...
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: alika
04-30-2006, 03:13 PM
» Replies: 4
» Views: 6,238

 
  ஒலிதான் நிரந்தரம்; வரிவடிவம் மாறக்கூடியது:
Posted by: thampu - 03-06-2004, 08:56 AM - Forum: தமிழ் /தமிழர் - No Replies

ஒலிதான் நிரந்தரம்; வரிவடிவம் மாறக்கூடியது: தமிழ் எழுத்துச் சீரமைப்பு குறித்து வா.செ.கு.


சென்னை, மார்ச் 6: மொழிக்கு ஒலிதான் நிரந்தரம். வரிவடிவம் என்பது மாறக்கூடியது என கல்வியாளர் வா.செ. குழந்தைசாமி கூறினார்.

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் சென்னையில் வெள்ளிக்கிழமை நடத்திய ஆய்வரங்கத்தில் தமிழ் எழுத்துச் சீரமைப்பு குறித்து அவர் ஆற்றிய உரை:

இந்திய மாநில மொழிகளில் தமிழும் ஒன்று. அதன் இன்னொரு தகுதி அது உலகு தழுவிய அளவில் வாழும் தமிழ் மக்கள் பயன்படுத்தும் மொழி.

சீன வானொலி 43 மொழிகளில் ஒலிபரப்பாகிறது. அதில் உருது, வங்காளம் தவிர்த்து இந்திய மொழிகளில் ஹிந்தியும் தமிழும் மட்டுமே பயன்படுத்தப்படுகின்றன. லண்டனில் உள்ள பிபிசி, பல மொழிகளில் ஒலிபரப்பைச் செய்து வருகிறது. இதிலும் இந்திய மொழிகளில் தமிழிலும் ஹிந்தியிலும் மட்டுமே ஒலிபரப்பு இருக்கிறது. யுனெஸ்கோ கூரியர் இதழ் 30-க்கும் மேற்பட்ட மொழிகளில் வெளிவந்தது. இதிலும் இந்திய மொழிகளில் ஹிந்தியிலும் தமிழிலும் மட்டுமே இந்த இதழ் வெளிவந்தது. இதிலிருந்து தமிழ் மொழிப் பரவலைப் புரிந்துகொள்ள முடியும்.

உலகு தழுவிய மொழி என்ற தமிழின் தகுதியைக் காப்பாற்ற வேண்டும். அதற்கு தமிழர்கள் எங்கிருந்தாலும் தமிழைக் கற்றிருக்க வேண்டும். அனைவருக்கும் கல்வி என்ற குறிக்கோள் செயல்படுத்தப்படும் இச் சூழ்நிலையில் தமிழ் வரிவடிவத்தைக் கற்பது எல்லோருக்குமே எளிதாக இருக்க வேண்டும். இந்த அடிப்படையிலேயே தமிழ் எழுத்துச் சீர்திருத்தம் அமைகிறது.

எழுத்துச் சீரமைப்பு என்பது எழுத்துகளைக் குறைப்பது அல்ல. 247 எழுத்துகளில் எந்த எழுத்தும் குறையாது. சீரமைப்பது என்பது கற்பதை எளிதாக்குவதே.

1933-ல் தமிழ் எழுத்துச் சீர்திருத்தம் குறித்து பெரியார் வலியுறுத்தினார். 1978-ல் பெரியாரின் எழுத்துச் சீர்திருத்தத்தை அப்போதைய முதல்வர் எம்ஜிஆர், பாதியளவு நிறைவேற்றினார். மீதி இருக்கும் சீர்திருத்தத்தைத்தான் நாம் இப்போது செய்ய வேண்டியுள்ளது.

தமிழ்நாட்டில் தமிழ்மொழி மாநில அரசின் அலுவலகங்களில் மட்டுமே ஆட்சி மொழியாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இலங்கை, சிங்கப்பூர் ஆகிய இரு நாடுகளில் மட்டுமே தேசிய ஆட்சி மொழியாகத் தமிழ் இருக்கிறது. மலேசியா, மோரிஷஸ், ஃபிஜி, தென்னாப்பிரிக்கா போன்ற நாடுகளில் அங்கீகரிக்கப்பட்ட மொழியாகத் தமிழ் இருக்கிறது.

தமிழில் உள்ள 216 உயிர்மெய் எழுத்துகளின் வரிவடிவத்தில் சில சீர்திருத்தங்கள் செய்தாலே போதுமானது. இகர, ஈகாரம் மற்றும் உகர, ஊகாரத்தில் 72 தனிப்பட்ட விதமான குறியீடுகளைக் குழந்தைகள் மனப்பாடம் செய்ய வேண்டியுள்ளது. இதில் நான்கே புதிய குறியீடுகளைப் புகுத்துவதன் மூலம் 247 எழுத்துகளில் எதையும் குறைக்காமல், குறியீடுகளை மட்டுமே குறைத்து, தமிழ் கற்பதை எளிதாக்கலாம். இங்கு அந்த மாறுபட்ட குறியீடுகளைக் காண்பித்திருக்கிறேன். இதையே பயன்படுத்த வேண்டும் என்பதில்லை. இக் குறியீடுகள் எப்படி அமைய வேண்டும் என்பதை ஆராயக் குழு அமைத்து, அதன் அடிப்படையில் ஒரே மாதிரியான தரப்படுத்தப்பட்ட குறியீடுகளைப் பயன்படுத்தலாம்.

மொழிக்கு

ஒலிதான் அடிப்படை. வரிவடிவம் என்பது ஒலிக்கு நாம் கொடுக்கும் குறியீடு. ஒலி நிலையானது. வரிவடிவம் நிரந்தரமானது அல்ல. எனவே வரிவடிவத்தை மாற்றுவதில் தவறில்லை. தமிழில் எழுத்துச் சீர்திருத்தம் நம் காலத்தில் நடக்கிறதோ இல்லையோ, இந்த மாற்றம் நிச்சயம் வந்தே ஆகும்.

வழக்கறிஞர் ச. செந்தில்நாதன், "ஆராய்ச்சி' காலாண்டிதழ் ஆசிரியர் மே.து. ராசுகுமார் ஆகியோர் பங்கேற்றனர். கவிஞர் உதயை மு. வீரையன் வரவேற்றார். கவிஞர் நா. வீரபெருமாள் நன்றி கூறினார்.

நன்றி: தினமணி

Print this item

  அறிவிப்புச்சாதனைப் பெண்ணின் நாடக அரங்கேற்றமும் , தமிழ்த்தேசி
Posted by: shanthy - 03-05-2004, 07:51 AM - Forum: செய்திகள் : தமிழீழம் - Replies (33)

<span style='font-size:30pt;line-height:100%'>அறிவிப்புச்சாதனைப்பெண்ணின் நாடக அரங்கேற்றமும் , தமிழ்த்தேசியத் துரோகமும்.</span>
(புலிகளின் குரல் வானொலியில் இடம்பெற்ற செய்தி வீச்சு.)


பிரபலம்தேடிச் சாதனையெனும் பெயரில்
பிறந்த மண் விற்ற துரோகியே !
இதுவா உன் சாதனை ?
இதற்காகவா உலகத்தமிழினமே
உன்னை ஊக்கம் தந்து
உலகசாதனை வரிசையில் இருத்தியது ?

ஓ...நீங்களெல்லாம் சாதனைப்பெண்களா ?
உங்களுக்கெல்லாம் துப்பாக்கிகள் போதாது
துளித்துளியாய் கொல்லும் து}க்குக்கயிறுகள்
ஆயிரமாய்....ஆயிரமாய் தேவை....

Print this item

  ''பிரபாகரனைப் போல் இருக்கிறாய்..!''
Posted by: vasisutha - 03-05-2004, 01:17 AM - Forum: அரசியல் / பொருளாதாரம் - Replies (3)

[align=center:3266a3e5d3]<b>''பிரபாகரனைப் போல் இருக்கிறாய்..!''
</b> <i>கலகல கலிங்கப்பட்டி </i>[/align:3266a3e5d3]

பத்தொன்பது மாதச் சிறைவாசத்துக்குப் பிறகு முதன்முறையாகத் தாய்மண் கலிங்கப்பட்டிக்கு வணக்கம் சொல்ல, கடந்த 28-ம் தேதி விஜயம் செய்தார் வைகோ.

வண்ண விளக்குகள், வைகோவின் கட்அவுட்கள், ஈஃபில் டவர், ம.தி.மு.க. கொடி பறக்கும் வெள்ளை மாளிகை என்று தூள் பரத்தியிருந்தார்கள். ஒவ்வொரு வீட்டின் முன்பும் பெரிய பெரிய கோலங்கள்.. பெரிய பண்டிகை மூடுக்கு மாறியிருந்தது ஊர்!

மதுரையிலிருந்து வைகோ வரும் தேசிய நெடுஞ்சாலை முழுக்கவே மக்கள் வெள்ளம். கலிங்கப்பட்டிக்கு முன்னதாகச் சத்திரப்பட்டியில் இருந்து மேடை இருக்கும் இடம் வரை சாரட் வண்டியில் அழைத்துச்சென்று அசத்தி விட்டார்கள்!

வைகோ மற்றும் கட்சித் தலைவர்கள் மேடைக்கு வருவதற்கு முன்பு, மேடையில் குட்டித்தலைவர்களின் புயல் பேச்சுக்கள் குபீரிட்டபடியே இருந்தன. திடீரெனத் தலையில் புலிக்குட்டிப் பொம்மையோடு மேடையில் ஓடிவந்து அதிர்ச்சி வைத்தியம் கொடுத்தபடி இருந்தனர் சில தொண்டர்கள்!

இரவு எட்டரை மணியளவில் வைகோவினுடைய துணைவியார், மருமகள்கள், பேரன், பேத்திகள் என்று எல்லோரும் பத்திரிகையாளர் காலரி அருகே வந்து அமர்ந்தார்கள். அம்மா... எப்ப தாத்தா வருவார், சொல்லும்மா? என்று நச்சரித்துக் கொண்டிருந்தன வைகோ வீட்டுச் சுட்டிகள்!

8.40 மணியளவில் சாரட் வண்டியில் வந்திறங்கிய வைகோ, விறுவிறுவென மேடைக்கு அழைத்து வரப்பட.. மொத்தக் கூட்டமும் எழுந்து நின்றுவிட்டது! கலிங்கம் தந்த சிங்கமே... நாடாளுமன்ற நாயகனே... என்ற கோஷங்கள் விண்ணைப் பிளந்தன. கிட்டத்தட்ட இருபது நிமிடங்களுக்கு மேல் சிவகாசி பட்டாசுகள் வெடித்துச் சிதறின. மக்களைப் பார்த்துக் கையசைத்தவர், தன்னுடன் சிறைக்கு வந்த எட்டு பொடா தோழர்களையும் மேடையில் தமக்கு அருகில் உட்கார வைத்தார்.

தடா சுந்தரம் என்பவர் மைக் பிடித்தபோது, பிரபாகரன் மாதிரியே இருக்கிறாய் என்று வைகோவை ஒப்பிட்டுப் பேச.. கூட்டத்தில் எழுந்த கைதட்டல் அடங்க வெகுநேரம் பிடித்தது.

பதினோரு மணிக்கு தன் பேச்சை துவக்கினார் வைகோ. நான் இன்னிக்கு நிறைய பேசப்போறேன். ஏன்னா, கலிங்கப்பட்டியில் இதுதான் என் கடைசி மேடைப் பேச்சு... இனி ஒரு முறை இந்த ஊரில் நான் பேச முடியாது. என் ஊரில் அரசியல் கூட்டம் நடத்துவது எனக்குப் பிடிக்காத ஒன்று என்றவர் லேசுபாசாக அரசியலைத் தொட்டபடியே இரவு ஒரு மணிக்கு பேச்சை நிறைவு செய்தார்.

மொத்தத்தில், கலிங்கப்பட்டியில் அறிவிக்கப்படாத மாநாடு நடந்து முடிந்தது.!

வைகோ ஜெயிலிலிருந்து வெளியே வரும் போதுதான் கறுப்பு சட்டையை மாற்றுவேன்Õ என்று சபதம் எடுத்துக் கொண்டவர்கள் பலர். குமரி மாவட்டத்தைச் சேர்ந்த தங்கராஜ் என்ற தொண்டர் மேடையிலேயே வைகோவின் கையால் சட்டையைக் கழற்றி, வெள்ளை சட்டை அணிந்துகொண்டார்.

இதே மாதிரி சபதம் போட்டிருந்த ம.தி.மு.க. துணைப் பொதுச்செயலாளரான சத்யா, சட்டையை மாற்ற முடியாது என்று வைகோவிடம் சொல்லிவிட்டாராம். உங்களை அநியாயமாக ஜெயிலுக்கு அனுப்பிய ஜெயலலிதா என்று பதவியை இழக்கிறாரோ... அன்றுதான் மாற்றுவேன் என்றாராம்.

thanks to jv - vikatan.com

Print this item

  [color=#760000]world language ![/color]
Posted by: mukilan - 03-05-2004, 12:10 AM - Forum: செய்திகள்: உலகம் - No Replies

Will Urdu become the new English?

- By SUZY AUSTIN

ENGLISH is losing its dominant position in the league table of world languages, it was claimed yesterday.

By 2050, it will be overtaken by Arabic and the closely related Indian tongues of Hindi and Urdu, according to experts.

Nine years ago, about 372 million people spoke English as their first language – putting it second only to Chinese which was spoken by 1.1 billion people.

But, in 50 year’s time, the picture will change dramatically. Among 15 to 24-year-olds, the number of English speakers will fall to 65 million. Chinese will still dominate, with 166 million younger speakers.

Writing in the journal Science, researcher David Graddol said the three fastest growing languages were Bengali, Tamil and Malay.

‘The world population rose rapidly during the 20th century, but the major increase took place in less developing countries,’ he added.

‘This trend is transforming the global league table of languages.’

He said the 19th century notion that English would become a world language was ‘past its sell-by-date’. Employers in Asia were already looking beyond English.

‘In the next decade, the new must-learn language is likely to be Mandarin,’ he said, adding that of the 6,000 languages in existence, 90 percent could disappear in 100 years.

Multilingualism would become commonplace, he said. This trend could be seen in the growth of Spanish in the US, and the large number of Europeans who spoke English.

----------------------------------------------------

Friday, February 27, 2004 METRO (france)

Print this item

  ரசித்த நகைச்சுவை- பகுதி 2
Posted by: vasisutha - 03-04-2004, 11:56 PM - Forum: நகைச்சுவை - Replies (581)

கோர்ட்டில் கேட்ட சில கேள்விகளும் பதில்களும்

<b>வக்கீல் :</b> உங்கள் மனைவியின் பெயர் என்ன?

<b>ஆண் :</b> லட்சுமி

<b>வக்கீல் :</b> உங்கள் மனைவியின் முழுப் பெயர் என்ன?

<b>ஆண் :</b> எனக்கு மறந்துவிட்டது.

<b>வக்கீல் :</b> உங்கள் மனைவியுடன் பத்து ஆண்டுகள் குடும்பம் நடத்தி இருக்கிறீர்கள். அவருடைய முழுப் பெயர் என்னவென்று தெரியவில்லை என்கிறீர்களே? உங்களுக்கு அறிவு நன்றாக வேலை செய்கிறதா?

<b>ஆண் :</b> (கோர்ட்டில் அமர்ந்திருக்கும் தன் மனைவியைப் பார்த்து) அடியே விஜய லட்சுமி. உன் முழுப் பெயரை அவர் எத்தனை முறை கேட்கிறார். கொஞ்சம் சொல்லித் தொலையேன்.

<span style='color:#ff0048'>*/*/*

<b>வக்கீல் :</b> இந்த படத்தில் இருப்பது யார்?

<b>சாட்சி :</b> நான் தான்.

<b>வக்கீல் :</b> நன்றாகப் பார்த்து யோசித்து சொல்லுங்கள். இது நீங்கள் தானா?

<b>சாட்சி :</b> (சத்தமாக) இது நான் தான் நான் தான் நான் தான்.

<b>வக்கீல் :</b> அதற்கு ஏன் இப்படி கத்துகிறீர்கள். இந்த படம் எடுக்கும்போது அங்கு நீங்கள் இருந்தீர்களா?

<b>சாட்சி :</b> ஐயோ !

*/*/*

<b>வக்கீல் :</b> கொலையாளியை சுட்டது உங்களுக்கு நன்றாகத் தெரியுமா?

<b>சாட்சி :</b> தெரியும்.

<b>வக்கீல் :</b> கிணற்றுக்குப் பக்கத்தில் தானே சுட்டான் ?

<b>சாட்சி :</b> இல்லை.

<b>வக்கீல் :</b> பின் எங்கே?

<b>சாட்சி :</b> கழுத்துக்குப் பக்கத்தில் சுட்டான்.</span>

Print this item

  ரஹ்மான்-வைரமுத்துவை மீண்டும் இணைத்த மணிரத்னம்
Posted by: kuruvikal - 03-04-2004, 07:27 PM - Forum: சினிமா - No Replies

<img src='http://thatstamil.com/images20/cinema/manirathnam-290.jpg' border='0' alt='user posted image'>
<img src='http://thatstamil.com/images20/cinema/vairamuthu-320.jpg' border='0' alt='user posted image'><img src='http://thatstamil.com/images20/cinema/rahman-400.jpg' border='0' alt='user posted image'>


சில வருடங்களாகவே பிரிந்திருந்த ரஹ்மான்வைரமுத்து ஜோடியை கன்னத்தில் முத்தமிட்டால் மூலம் மீண்டும் சேர்த்தார் மணிரத்னம். இதைத் தொடர்ந்து மீண்டும் பிரிந்தனர். அவர்களை ரஜினி தனது பாபா மூலம் ஒன்றாய் சேர்த்தார்.

ஆனால், லண்டனில் உட்கார்ந்து கொண்டு டெலிபோனில் டியூன் சொல்லி பாடல் கேட்டார் ரஹ்மான். இது எனக்கு ஒத்துவராது என வைரமுத்து விலக, வாலி மட்டும் அட்ஜஸ்ட் செய்து பாட்டெழுதித் தந்தார். இதையடுத்து ரஜினி தலையிட்டு சமாதானம்பேசி டெலிபோனில் வந்த ரஹ்மானின் டியூனுக்கு வைரமுத்துவை பாட்டெழுத வைத்தார்.

இந்தப் படத்தில் ரஹ்மானும், வைரமுத்துவும் இணைந்து பாடலை வெளியிட்டாலும், இருவருக்கும் இடையிலான கசப்புணர்வு மேலும் அதிகரித்தது. இதனால் மீண்டும் இருவருமே விலகியே நின்று கொண்டனர். ரஹ்மான் தமிழில் மியூசிக் போடுவதே அரிதானது.

கே.பாலசந்தர் இயக்கிய பார்த்தாலே பரவசத்துக்கு பாட்டெழுத வைரமுத்துவை ரஹ்மான் சேர்க்கவில்லை. அதே போல ஷங்கரின் பாய்சிலும் வைரமுத்துவுக்கு நோ சொன்னார். தனது கண்களால் கைது செய் படத்தில் வைரமுத்து பாட்டெழுத வேண்டும் என்று அதன் இயக்குனர் பாரதிராஜா வைத்த வேண்டுகோளையும் ரஹ்மான் நிராகரித்தார்.

இப்படி ரஹ்மான்வைரமுத்து லடாய் தீவிரமாக இருந்த நிலையில் தான் ஆய்த எழுத்தைத் தொடங்கினார் மணி ரத்னம். இந்தப் படத்துக்கு ரஹ்மான் தான் இசை என்று முடிவு செய்த மணி, பாடல்களை வைரமுத்து தான் எழுத வேண்டும் என்பதிலும் தீர்மானமாக இருந்தார். இருவரும் அதற்கு இசைய மறுத்தாலும், மணியின் அன்புக் கட்டளைக்கு இருவருமே பணிந்துவிட்டனர்.

பொதுவாக மணிரத்னம் படம் என்றாலே ஏ.ஆர்.ரஹ்மானுக்கு தனி குஷி பிறந்து விடும். இந்தப் படத்திலும் தனது ராஜ்ஜியத்தை அவர் நிலைநாட்டியுள்ளாராம். வைரமுத்து கூட்டணியில் 5 பாடல்கள் மிகச் சிறப்பாக வந்துள்ளனவாம்.

ரஹ்மான் வீட்டுப் புல் வெளியில் நடுநிசியில் மணியுடன் உட்கார்ந்து வைரமுத்து எழுதிய ஒரு பாடல் ரொம்பவே பேசப்படும் என்கிறார்கள்.

''ஜன கண மன

ஜனங்களை நினை

கனவுகள் வெல்ல

காரியம் துணை

ஒளியே வழியாக

மலையே படியாக

பகையோ பொடியாக

இனி ஒரு 'இனி ஒரு' விதி செய்வோம்

விதியினை மாற்றும் விதி செய்வோம்

ஆயுதம் எடு

ஆணவம் சுடு

தீப்பந்தம் எடு

தீமையை சுடு

ஆயிரம் இளைஞர்கள் துணிந்து விட்டால்

ஆயுதம் எதுவும் தேவையில்லை

அச்சத்தை விடு

லட்சியம் தொடு

வேற்றுமை விடு

வெற்றியைத் தொடு.....''

இப்படிப் போகும் பாடலை ரஹ்மானே பாடியுள்ளார்.

இந்தப் படத்தில் சூர்யா, மாதவன், சித்தார்த் ஆகியோர் கதாநாயகர்களாக நடிக்க அவர்களுக்கு ஜோடியாக மீரா ஜாஸ்மின், த்ரிஷா, இஷா தியோல் நடிக்க, விறுவிறுப்பாய் ஒரு இளமை கலாட்டாவை படமாக்கிக் கொண்டிருக்கிறார் அதிகம் பேசாத மணி ரத்னம்.

'விருமாண்டி' படத்தையடுத்து இப்படத்திலும் வசனங்களை டப்பிங் இல்லாமல் நேரடியாக ஒலிப்பதிவு செய்கிறார்கள். இதற்காக ஹாலிவுட்டின் முன்னணி ஆடியோகிராபர் ராபர்ட் டெய்லரின் உதவியை நாடியுள்ளார் மணி.

<img src='http://thatstamil.com/images20/cinema/trisha-40.jpg' border='0' alt='user posted image'>
த்ரிஷா (kuruvikal's favourite actress...currently)


thatstamil.com

Print this item

  ஷங்கரின் புதுபடம் - அந்நியன்
Posted by: Mathan - 03-04-2004, 04:49 PM - Forum: சினிமா - Replies (5)

<img src='http://www.tamilcinema.com/cinenews/images/vikram12.jpg' border='0' alt='user posted image'>

ஷங்கரின் புதுபடம் - அந்நியன் பட பூஜை

பாய்ஸ் படத்தின் தோல்வியினால் திக்குமுக்காடி போயிருந்தார் அப்படத்தின் இயக்குனர் ஷங்கர். இனிமேல் அவரை நம்பி யார் படம் தருவா? என்றெல்லாம் நாக்கு மேல் பல்லை போட்டு நாக்கு கூசாமல் பேசியது, ஷங்கரை வானாளாவ புகழ்ந்த அதே பொதுஜனம்! வாய் வலிக்க பேசி வம்பளப்பவர்கள் வளர்க்கட்டும். என் கடன் படம் செய்து கிடப்பதே என்று முடிவெடுத்த ஷங்கர் வெயிட்டான தயாரிப்பாளரான ஆஸ்கார் ரவிச்சந்திரனிடம் கதை சொல்லி, விக்ரம் நடிக்க அந்நியன் என்ற படத்திற்கு பூஜை போட்டுவிட்டார். இதுவரைக்கும் ஆஸ்கார் பிலிம்ஸ் எடுத்த எந்த படத்திற்கும் பிரமாண்டமாக பூஜை போட்டதில்லை. ஆபிஸ் பூஜை என்று சொல்லி, நாலு பேரை நிற்க வைத்து ஸ்டில் எடுத்து அந்த ஸ்டில்லை பத்திரிகைகளுக்கு அனுப்பி வைப்பார்கள். இந்த முறை நடந்த கதையே வேறு. ஏ.வி.எம். ஸ்டுடியோவில் பிரமாண்டமாக பூஜை போட்டார்கள். ஏ.வி.எம் வாயிலில் இருந்தே விக்ரமின் விதவிதமான ஸ்டில்கள், கொடிகள், தோரணங்கள் என்று ஒரே ரகளையாக இருந்தது.

விழா நடந்த ஏ.சி ஹாலில் அறிஞர்கள், தத்துவ மேதைகள், கவிஞர்களின் பொன் மொழிகளை சுவற்றில் எழுதியிருந்தார்கள். வெறுங்கை என்பது மூடத்தனம்: விரல்கள் பத்தும் மூலதனம் -கவிஞர் காசி.ஆனந்தன் என்று எழுதப்பட்ட ஒரு கவிதை நம்மை ஈர்த்தது. (உண்மையில் அந்த கவிதையை எழுதியது தாராபாரதி என்ற கவிஞராயிற்றே..)

இதுவரை ஷங்கர் படங்களுக்கு ஏ.ஆர்.ரஹ்மான்தான் இசையமைத்திருக்கிறார். இந்த படத்தில் ஹாரிஸ் ஜெயராஜ். ஜெயம், வர்ணஜாலம் படங்களை அடுத்து சதாதான் இந்த படத்தின் ஹீரோயின் என்று சொல்கிறார்கள். அநேகமாக கடைசி நேரத்தில் மாற்றப்பட்டு த்ரிஷா ஒப்பந்தம் செய்யப்படலாம். அந்நியனில் விக்ரமுக்கு மூன்று வேடங்களாம். ஒரு விக்ரமுக்கே ஓ போடும் ரசிகர்கள் பொங்க பொங்க சந்தோஷப்படுங்களேன்...

நன்றி - தமிழ் சினிமா

Print this item

  இந்திய ஊடகங்களும் தமிழர் தாயக இளம் தலைமுறையும்.
Posted by: Ramanan - 03-04-2004, 06:44 AM - Forum: தமிழ் /தமிழர் - Replies (1)

முன்பை விட தற்போது தமிழர் தாயகமெங்கும் இந்திய ஊடகங்கள் குறிப்பாக சின்னத்திரை நிகழ்ச்சிகள் புகழ் பெற்று வருவது அவதானிக்க முடிகிறது. இது எவ்வகையான தாக்கத்தை எமது இளைஞர்கள் மனதில் உருவாக்குகிறது? எவ்வகையான கலாச்சாரத்திற்கு வித்திடுகிறது? அனைத்து சின்னத்திரைத் தொடர்களும் பெண்களை குறிவைத்தே இயற்றப்படுகிறது. அதில் வரும் பெண் கதாபாத்திரங்கள் முற்போக்கானவாகளாக காட்டமுற்பட்டிருப்பினும் உண்மையில் மூடநம்பிக்கைகளிலும் எப்பொழுதும் சொத்தையோ அல்லது கணவனை வேறோருவளிடமிருந்து மீட்பதிலோ மும்முரமாக இருக்கிறனர். இது முற்போக்கு சிந்தனை இல்லை. இது வேலிச்சண்டை. இது தமிழர் தாயகத்திலுள்ள பெண்களிடத்தில் எவ்வகையான தாக்கத்தை உண்டாக்குகிறது?

அதை விடவும் சின்னத்திரை எமது சிறார்களின் கல்வியில் ஏற்படுத்தும் தாக்கம் எவ்வகையானது? அவர்களின் மனஓட்டத்தில் ஏற்படுத்தும் பாதிப்பு என்னவென்ன?

இளைஞர்களை கலாச்சாரச் சீகேட்டுக்கு தள்ளுவதாக இன்னோர் குற்றச்சாட்டு. இது எமது இனத்தின் சிந்திக்கும் ஆற்றலை சிதறடிக்கிறது?
எம்மவரின் வாழ்க்கையும் இனத்தின் து}ண்களான இளைய சமுதாயமும் தொலைக்காட்சியின் முன்னால் அடக்கிக்கிடக்கப் போகிறதா?

கேள்விகள் உங்களிடம், பதில்கள் விழிப்புற வைக்கட்டும்.
மேலும் கேள்விகள் எழும்.

Print this item

  கூட்டமிப்பின் தேர்தல் விஞ்ஞாபனம்.
Posted by: Ramanan - 03-04-2004, 06:03 AM - Forum: செய்திகள் : தமிழீழம் - Replies (1)

கூட்டமிப்பின் தேர்தல் விஞ்ஞாபனம்.
தமிழ் நாதம் இணையத்தளத்தில் வெளியாகியிருந்த தேர்தல் விஞ்ஞாபன முகவரி http://www.tamilnaatham.com/election20040304.htm

Print this item

  அடடா..!
Posted by: vasisutha - 03-04-2004, 03:23 AM - Forum: சுமுதாயம் (வாழ்வியல்) - No Replies

<img src='http://www.kumudam.com/kumudam/08-03-04/17box.jpg' border='0' alt='user posted image'>

நன்றி. குமுதம் :wink:

Print this item